தேடல் 7
ஆன்மாக்கள் ஏன் மனிதர்களை போன்று உடை அணிந்து உள்ளது? ஆவிகள் உண்மையாகவே இருந்தால், தன் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் என்றால் ஏன் இன்னும் பல முடிக்கப்படாத வழக்குகள் உள்ளன? ஏன் சிலருடைய கண்களுக்கு மட்டும் தெரிகிறது? என் தேடலில் கிடைத்த சில விடைகள் இதோ.....
என்னதான் நாம் ஆவிகள் இருப்பதற்கு சான்று தேடினாலும் அவை என்ன என்று நம்மால் அருதியிட்டு கூற இயலாது. சில யூகங்கங்கள் மட்டுமே செய்ய இயலும். பல இடங்களில் ஆவிகளை பார்ததாக சிலர் சொல்கின்றனர், அப்படி இவர்கள் பார்ததாக கூறப்படும் ஆன்மாக்கள் பெரும்பாலும் மனித ரூபத்தில் ஆடையுடன் காட்சித்தருகின்றன. அது நீண்ட ஆடையோ, புடவையோ, பேண்ட் சட்டையோ அல்லது சீருடையோ, ஏதோ ஒன்றுடன் தான் ஆவிகள் நம் முன் தோன்றுகின்றன. நாம் கிண்டல் செய்வதும் உண்டு பேய் என்றாலே நம் ஊரில் வெள்ளை ஆடையுடன் நீண்ட கூந்தலுடன் அதுவும் பெண் ஆன்மாக்கள் தான் உலா வருமா என்று.. நம் சினிமாக்களிலும் அப்படியே தான் பேயை சித்தரிகின்றனர்.
நாம் முன்பு பார்தது போல இறந்தவர்கள் விட்டுச்சென்ற அவர்கள் உணர்வுகள் ஆன்மாவாக உருப்பெரும் சமயத்தில் அவர்கள் நினைவில் அவர்கள் தன் தோற்றத்தை பற்றி என்ன கடைசியாக பதிந்ததோஅதுவாகவே அவர்கள் நம் முன் தோன்றுகின்றனர் என்று கூறுகின்றனர். சில ஆன்மா தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள தங்களுக்கு பிடித்தவர் கண்டு அடையாளம் காண கூடிய உடையில் வருவதாகவும் நம்பப்படுகிறது.
உதாரணமாக ஒருவர் தன் இறந்த தந்தயை சவபெட்டியில் கோட்டு சூட்டுடன் அடக்கம் செய்துள்ளார், அவருடைய சின்ன பெண் அவரிடம் தன் தாத்தா கனவில் பேசியதாக சொல்கிறாள். ஆனால் அவர் ஏதோ விளையாட்டு என்று பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின் அந்த பெண் தாத்தா " அந்த கோட்டு சூட் நன்றாக உள்ளதா, நான் இதை அணிவேன் என்று எதிர்பார்க்கவில்லை" என்று சிரிப்புடன் கூறியதாக சொல்கிறாள். இப்பொழுது அந்த நபர் ஆச்சரியப்பட்டு போகிறார் ஏனெனில் வயதான விவசாயி எப்பொழுதும் சாதாரண உடைகள் தான் அணிவார், இதுவரை அவர் அது போன்ற உடைகள் அணிந்தது இல்லை. அதே போன்று அந்த சிறு பெண் தன் தாத்தாவை அடக்கம் செய்யப்பட்ட போது அங்கு இல்லை. பின் எப்படி அவள்அந்த ஆடையின் நிறம் முதல் அவள் தாத்தா எப்படி இருந்தார் என்று விளக்க முடியும்? இந்த உதாரணம் எதற்கென்றால் இறந்தவர் தங்களை அடையாளம் காட்டி கொள்ளவும், தாங்கள் நன்றாக உள்ளோம் என்று சொல்லவும் இப்படி தோன்றுகின்றனர்.
கேமிராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் ஆன்மாக்களை ஒளி பிம்பங்களாகவோ அல்லது பனிப்போன்றோ தான் காட்டியுள்ளன. உண்மையில் ஆன்மாக்கள் ஒரு ஆற்றலாக மட்டுமே இருக்கலாம். அதற்கு உருவம் கொடுப்பது நம் உணர்ச்சி மற்றும் எண்ணங்களே ஆகும். ஆன்மாக்கள் ஒருவரின் எண்ண அலைகளை தனக்கு ஏற்றார் போல மாற்றி அமைக்கக்கூடும். அந்த ஆன்மா எப்படி நாம் அதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறதோ அவ்வாறே நாமும் அதை காணுகிறோம். பல ஆன்மாக்கள் கொடூரமான தோன்றத்துடன் காண இதுவே காரணம், தங்கள் தோற்றத்தை அவை அப்படி கற்பனை செய்து கொள்கின்றன.
நம் ஊரில் பெண் ஆவிகள் நிறைய காணப்பட காரணம் நம் நாட்டில் அதிகம் பெண்களுக்கு ஏற்படும் கொலை, கற்பழிப்பு போன்ற கொடுமைகள் தான் என்று சொல்லலாம். ஆண்களை விட பெண்களே அதிகம் உணர்ச்சி பூர்வமாக, உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதன் தாக்கத்தால் மிகுந்த எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் இறந்த பின் ஆன்மாக்களாக உலவலாம். வெள்ளைஆடையில் வருவதாக கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகளே ஆகும்.
சரி இப்படி ஆன்மாக்கள் இருந்தால் ஏன் இன்னும் பல வழக்குகளில் தீர்ப்பு வரவில்லை ? கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் பெருமளவில் உள்ளன. இறந்த அனைவரும் ஆவிகளாக இருக்கும் பட்சத்தில் , தங்கள் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடும் எனில் ஏன் இன்னும் பல வழக்குகளில் தீர்ப்பு கிடைக்கவில்லை? ஏன் நிறைய ஆவிகள் இல்லை?
நிறைய இதுபோன்ற அமானுஷ்ய அனுபவங்கள் பலருக்கும் நடப்பது உண்டு ஆனால் வெளியில் சொல்ல தயங்கிக்கொண்டு நிறையப்பேர் சொல்வதே இல்லை. அதேப்போன்று ஆன்மாக்கள் தங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமலும் இருக்கக்கூடும். பல ஆன்மாக்களுக்கு எப்படி தங்களை காட்டிக்கொள்வது என்று தெரியாமல் இருக்கலாம். ஆன்மாக்களுடைய காலம் அதாவது ஆற்றல் காலப்போக்கில் கரைந்து போக கூடும். ஆன்மாக்கள் வாழ அவைகளுக்கு ஆற்றல் தேவை.
அதை இயற்கை சுற்றச்சூழலில் இருந்தோ இல்லை மனிதர்களிடம் இருந்தோ பெற முடியும்.... எப்படி என்று அடுத்த பதிவில் காணலாம்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro