தேடல் 5
நாம் மர்மமாக உள்ள அனைத்தையும் பேய், பிசாசு, ஆவி என்கிறோம். ஆனால் இவைகளுக்கு வித்தியாசம் உண்டு என்கின்றனர் இதை ஆராயும் நிபுணர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோன்றும் ஆன்மாக்களை தான் பேய்கள் என்கின்றனர். அதாவது விபத்து, கொலை போன்றவற்றால் இறப்பவர்கள் குறிப்பிட்ட இடத்துடனோ அல்லது பொருளுடனோ பிணைக்கப்பட்டு இருப்பர். இவைகளால் வேறு இடங்களுக்கு செல்ல இயலாது.
ஆவிகள் அப்படி இல்லை, அவைகளால் எங்கு வேண்டுமானாலும் செல்ல இயலும். ஒருவரை தொடர்பு கொள்ள ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். பெரும்பாலும் தான் இறந்தது தெரியாத ஆவிகளும், ஒருவர் மீது அதீத அன்பு உள்ள ஆன்மாக்களும் இவ்வகை.
உதாரணமாக ஒரு நடுத்தர வயது உடைய பெண் தன் தாயாருடன் காரில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருக்கிறார். அவருடைய கணவன் மற்றும் குழந்தைகள் தனக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள் என்று வேகமாக காரை ஓட்டி கொண்டு செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழகின்றனர். அந்த குடும்பத்தில் உள்ளவர்கள சிறிது நாட்களுக்கு பிறகு அவர்களை சுற்றி ஏதோ மர்மமாக இருப்பதை உணர்கின்றனர். சமையல் அறையில் உள்ள அலமாரிகள் தானாக திறந்து மூடுவது, படுக்கை அறை சுத்தமாக இருப்பது, போர்வைகள் மடித்து இருப்பது, இரவில் தூங்கும் போது ஜன்னல்கள் சாத்தப்படுவது என்று பல விசித்திரமான நிகழ்வுகளை கண்டுள்ளனர். பின் தான் தெரிய வந்துள்ளது அங்கு இறந்த அந்த பெண்ணின் ஆவி தான்இதற்கு காரணம் என்று. அந்த பெண்ணிற்கு தான் இறந்ததே தெரியவில்லை என்று கூறுகின்றனர். இப்படி பல ஆவிகள் சுய சிந்தனை இல்லாமல் இருக்கும்.
ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எஞ்சிய ஆற்றலுடைய ஆன்மாக்களே( residual energy) ஆகும். அதாவது முன்பு குறிப்பிட்டது போல ஒருவர் இறந்த பின்னும் அவருடைய ப்ரக்ஞை இங்கு இருக்கும். அது உணர்வோ, சுயமாக சிந்திக்கும் திறனோ அற்றது. குறிப்பிட்ட நேரத்தில் இவை குறிப்பிட்ட இடத்தில் திரும்ப திரும்ப தோன்ற கூடும். அவைகள் வெறும் நினைவுகள் மட்டுமே. ஆனால் அவற்றை நம்மால் உணர முடியும்; காலடி சத்தம், அல்லது ஏதோ ஒரு ஓசை கேட்க கூடும். அவற்றால் மனிதர்களுடன் தொடர்புகொள்ள முடியாது.
ஆவியோ பேயோ நம்மை சுற்றி இருக்கின்றன என்று எதை வைத்து தெரிந்து கொள்ளுவது? சில அறிகுறிகள் வைத்து அவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆவிகள் வெறும் ஆற்றலால் உருவானவை, நம் இரத்தம் வெப்பமான ஒன்று. ஆவிகள் நம் ஆற்றலை பயன்படுத்தியே உருவாவதால் அவை நம்மை சுற்றி இருக்கும் பொழுது அந்த இடம் குளிர்ந்து காணப்படும். நம் உடலில் உள்ள சக்தி குறைவதை போன்று தோன்றும். விவரிக்க முடியாத ஒலிகள் நம்மை சுற்றி கேட்கும்; காலடி ஓசை, அடைத்து சாத்தும் ஒலி, கை தட்டும் ஓசை, கீறல் ஒலி, பொருள் உடையும் ஓசை. இப்படி பல ஓசைகள் லேசாக ஆரம்பித்து பின் அதிகமாக கேட்க கூடும்.
நம்மை சுற்றி உள்ள கதவு, ஜன்னல்கள் மற்றும் அலமாரிகள் யாரும் இல்லாத போது தானாக திறந்து மூடுவது. பின் மின்சார சாதனங்கள் தானாக செயல்படுவது, டிவி, ரேடியோ போன்றவை தானாக இயங்கும். இவை மின் இணைப்பு பழுதாக கூட இருக்கலாம். ஆனால் மின்னாளரை வைத்து ஆராயும் போது தொழில்நுட்ப ரீதியாக எந்த ஒரு பழுதும் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் வேறு ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது என்று அறியலாம்.
பின் உங்களை யாரோ கூப்பிடுவது போல் இருக்கும். அழு குரலோ இல்லை லேசாக முணுமுணுப்போ கேட்க கூடும். சில நேரங்களில் பாடல்கள் தானாக இசைப்பது, உங்களுக்கு முக்கியமானவருக்கு பிடித்த பாடலாக இருக்கலாம். உங்களுக்கு மட்டும் இப்படி ஓசை கேட்காமல் உங்களுடன் இருக்கும் நபர்களுக்கும் இப்படி ஓசைகள் கேட்குமாயின் அங்கு ஆன்மா இருப்பதை அறியலாம்.
இன்னொரு முக்கியமான ஒன்று, உங்கள் அருகில் யாரோ இருப்பது போல் உணர முடியும். குறிப்பிட்ட இடத்தில் அல்லது நேரத்தில் உங்களுக்கு அசௌகரியமாக உணர்ந்தால்.. உங்களை யாரோ கண்காணிப்பது போல் இருந்தால். அதே போல் உடல் நலம் திடீரென எந்த ஒரு காரணம் இன்றி பாதிக்கப்பட்டால்.
ஆன்மா இருக்கும் வீட்டிற்கு குடிபெயர்பவர்களுக்கு சோர்வு, தூக்கமின்மை மற்றும் கெட்ட கனவுகள் ஏற்பட கூடும். வேறு வீட்டிற்கு மாறியபின் அவர்களுக்கு இவையெல்லாம் சரியாகலாம். துர்நாற்றமோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர் உபயோகிக்கும் வாசனை திறவியத்தின் மணமோ அடிக்கடி உங்களால் நுகர முடிந்தால் அங்கு ஆன்மா இருப்பதை உணரலாம்.
நீங்கள் ஒரு இடத்தில் வைக்கும் பொருள் அடிக்கடி காணாமல் போகும் பின் வேறு ஏதோ ஒரு இடத்தில் அவை கிடைக்கும் . பொருட்கள் தானாக உடைவது போன்ற நிகழ்வுகள் நடக்க கூடும்.
உங்கள் வீட்டு நாற்காலிகள் தானாக அசைவது, பொருட்கள் தானாக பறந்து வந்து உடைவது. நிழல் போன்று உருவம் அடிக்கடி தெரிவது. உங்களை யாரோ தொடுவது போன்ற உணர்வு .. முக்கியமாக உங்கள் செல்ல பிராணிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, உங்கள் வீட்டு பூனை எதையோ உற்று நோக்கி பின் பயந்து கொண்டு ஓடினால்.. இவைகள் யாவும் ஏற்படுமாயின் நிச்சயமாக அங்கு ஏதோ ஒன்று உள்ளது என்று கூறிவிடலாம்.
இவை அனைத்துக்கும் அறிவியல் பூர்வமாக விளக்கம் உண்டு. ஆனால் அறிவியல் ரீதியாக நீங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்னும் மேற்கூறிய ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடந்தால் அப்போழுது நீங்கள் உறுதிப்படுத்திகொள்ளலாம் அங்கு ஏதோ அமானுஷ்யம் உள்ளது என்று.
மெதுவாக திரும்பி பாருங்கள்.. யாரது உங்கள் பின்னால்?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro