தேடல் 4
ஆவிகள் எப்படி உரு பெருகின்றன என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை பார்த்தோம். அவைகளை பற்றி விரிவாக காண்போம்.
ஆன்மா உரு பெறுவதே அரிதான ஒன்று. நாம் தேடல் 2 இல் ஒருவரது ப்ரக்ஞை எப்பொழுதும் அழிவதில்லை, அது இந்த பிரபஞ்ச ப்ரக்ஞையோடு கலந்து விடுகிறது என்ற அறிவியல் கூற்றை பார்த்தோம். அப்படி ஒருவர் இறந்த பின் அவர் ப்ரக்ஞையானது இங்கு தேங்கி நிற்கும்.. அது முதலில் மின்மினி பூச்சி போன்று ஒரு சிறு ஒளியாகவே தோன்றும். பின் பல ஒளி பந்துகளாக மாறுகின்றது. இதற்கு சுற்றுசூழலோ இல்லை மனிதர்களோ தேவைபடுகிறது. அதற்கு தேவையான ஆற்றலை அது இயற்கையிலிருந்தோ இல்லை மனிதர்களிடம் இருந்தோ பெருகிறது.
மனிதர்கள் இருக்கும் பொழுது தான் ஆன்மா வடிவம் கொள்கிறது. முதலில் சிறு ஒளியாக உருப்பெற்று பின் ஒரு நேர் கோடாகவோ இல்லையென்றால் கலங்களான உருவமாகவோ மாறுகிறது. இதைத்தான் நாம் வெள்ளை நிறத்தில் இருக்கும் பேய் என்று சொல்கிறோம். இந்த கலங்களான உருவம் பின் மனித உடலை ஒத்த வடிவம் பெருகிறது. ஆனால் அது திட வடிவு அல்ல, ஒளி புகும் தன்மை கொண்டது ( transparent). இதற்கு பின் தான் திட வடிவம் கொள்கிறது.
பெரும்பாலும் ஆவிகள் ஆபத்தானவை அல்ல, தான் இறந்து விட்டோம் என்பதே பல ஆன்மாக்களுக்கு தெரிவதில்லை. இறக்கும் முன் என்ன செய்து கொண்டு இருந்தனவோஅதையே இறந்த பிறகும் சில ஆன்மாக்கள் செய்கின்றன. போர்களத்தில் உயிர் விடும் ஆன்மாக்கள் இந்த வகை (ஜாக்சன் துறை படம் போல 😉) அதே போன்று திடீரென இறக்கும் நபரின் ஆத்மாவும் இவ்வகை ஆகும். தான் இறந்து விட்டோம் என்று தெரியாமல் இவை குழப்ப நிலையில் இருக்கும். ஏன் யாரும் என்னிடம் பேசுவதில்லை; ஏன் நான் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை என்று குழம்பும்.
மற்ற மனிதர்களோடு அது பேச முயற்சிக்கும். தான் அங்கு தான் உள்ளோம் என்று காட்டிகொள்ள பார்க்கும். கதவு, ஐன்னல் திடீரென அடைத்து கொள்வது போன்ற காரியங்களை செய்யும். கேடு விளைவிக்கும் ஆத்மாக்கள் அரிதே, மிகந்த வேதனையில் இறக்கும் போது ஆன்மாவும் அதே குரோதத்துடன் இருக்கும். தான் இறந்த இடத்திலேயே பினைக்க பட்டு இருக்கும். அதேபோன்று ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஆன்மா அடிக்கடி தோன்ற கூடும். உதாரணமாக சாலை விபத்தில் இறந்த ஒருவர் தினமும் அவர் இறந்த அதே நேரத்தில் தோன்றி மறைய கூடும்.
அழிவை ஏற்படுத்தும் ஆவிகள் உருவாக மிக பெரிய அளவில் ஆற்றல் தேவை. பெரும்பாலும்
தற்கொலை செய்து கொள்ளும் இடங்கள், மருத்துவமனைகள், சுடுகாடு போன்ற இடங்களில் எதிர்மறை ஆற்றல் மிகுந்து இருக்கும். இந்த இடங்களில் இப்படி பட்ட பேய்கள் உருவாக நிறைய வாய்ப்புக்கள் உண்டு. சுற்று சூழலும் ஆத்மாக்களுக்கு வடிவம் ஏற்பட காரணமாக இருக்கிறது. மனிதன் இல்லாவிட்டாலும் இயற்கையால் கூட ஆன்மா வடிவம் பெரும். மழை நேரத்தில் இடி மின்னல் போன்றவற்றால் காற்றில் மின் ஆற்றல் மிகுந்து காணப்படும். இதை பயன்படுத்தி கூட ஆன்மா உருவம் பெருகிறது.
ஆவிக்கும் பேய்களுக்கும் வித்தியாசம் உண்டு. அவை என்ன? ஆவிகள் நம் அருகில் இருந்தால் நாம் அதை எவ்வாறு உறுதி செய்யலாம்? அடுத்த பதிவில் பார்ப்போம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro