Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் 3

ஆன்மா இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். ஆனால் நாம் ஆவி, பேய், பிசாசு என்று கூறுவன எல்லாம் என்ன? அவை எல்லாம் உண்மையா? அவை எப்படி உரு பெருகின்றன?

இயற்கை மரணம் அடைந்தவர்கள்பெரும்பாலும் இப்படி ஆவிகளாய் அலைவது இல்லை. துர்மரணம் ஏற்பட்டு இறக்கும் நபரே ஆவிகளாய் வருவதாக ஒரு நம்பிக்கை. அதாவது நோய் வாய்ப்பட்டும் வயோதிகம் காரணமாக இறப்பவர்கள் பேயாக திரிவது இல்லை. ஆனால் கொலை செய்ய படுபவர்கள், தற்கொலை செய்து கொள்ளுபவர்கள், விபத்தில் இறப்பவர்கள், தீராத வன்மம் உடையவர்கள் மற்றும் ஒருவர் மேல் தீவிரமான அன்பு கொண்டவர்கள்.. இவர்களே ஆவிகளாய், பேயாய் அலைகிறார்கள்.

இதற்கு என்ன காரணம்? நாம் இதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியவில்லை எனினும் இதை அறிவியலில் ஒரு கோட்பாடு மூலம் விளக்குகிறார்கள்; பேய்களின் க்வாண்டம் கோட்பாடு ( quantum theory of ghosts). பேய்கள் இறந்தவருடைய ஆன்மாவா? இல்லை என்கிறார்கள் க்வாண்டம் இயக்கவியல் ( quantum mechanics) விஞ்ஞானிகள். உண்மையில் ஆவிகள் இறந்தவர்களால் உருவானவை அல்ல, உயிருடன் இருக்கும் நம்மால் தான் ஆவிகள் உரு பெருகின்றன. இதை புரிந்து கொள்ள க்வாண்டம் இயக்கவியலின் அடிப்படை கோட்பாடு புரியவேண்டும். அதாவது நாம் பார்க்கும் ஒரு பொருளின் தன்மையானது நம் பார்வை கொண்டே மாறும்(observation changes the subject being observed).  ஒரு துகளை( particle) நாம் நோக்கும் பொழுதோ இல்லை அளக்கும் பொழுதோஅது ஒரு  ஆற்றல் நிலைக்கு தள்ளப்படுகிறது. யாரும் இல்லாத பொழுது இந்த துகள் அதற்கு கிடைக்கும் எந்த ஒரு ஆற்றலாகவும் மாறலாம். ஆனால் ஒரு உணர்சியுள்ள நோக்காளர்(observer) இருக்கும் பொழுது அதன் வடிவம் அந்த நோக்காளரை சார்ந்தே இருக்கும்.

இவ்வாறு ஒரு பார்வையாளரின் உணர்சிகள் பிரபஞ்சத்தின் க்வாண்டம் திரையில் ஒரு அரை நிரந்தர அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கருகிய பொருளின் வாடையானது எப்படி ஒரு இடத்தில் சிறிது நேரம் நாம் அடுப்பை அணைத்த பின்னும் இருக்குமோ அதைபோல் பேயானது எப்பொழுதோ விட்டு சென்ற உணர்வுகளின் பதிவு ஆகும்.  நம் உணர்வுகளை பொருத்தும் க்வாண்டம் நிலையின் ஊடுருவும் தன்மை பொருத்தும் பல விதமான பேய்களை உருவாக்க முடியும்.

மிகவும் எதிர்மறையான உணர்வுகளே இந்த விளைவுகளை ஏற்படுத்தும். வெறுப்பு, குற்ற உணர்வு, ஆழ்ந்த துக்கம் இவையே பெரும்பாலும் பேய் உருவாக காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக தான் பேய் என்பது இறந்தவரின் ஆன்மாவாக தொன்றுதொட்ட நம்பிக்கையாக உள்ளது.  உதாரணமாக நமக்கு நெருக்கமான ஒருவர் இறக்கும் போது அழுத்தமான எதிர்மறை உணர்வுகள் பல இடங்களில் இருந்து வரலாம்.  அவறை பற்றிய நியாபகங்கள் பல இடங்களில் இருந்து சுற்றி வந்து சேரும் போது அது இறந்த அந்த நபரின் ஆவியாக மாறலாம். இருப்பினும் பேய் உருவாகுவது அரிதே. அதற்கு மிகவும் ஆழ்ந்த எதிர்மறை உணர்வுகளுக்கு மேல் தேவை. பேயை உருவாக்கும் நபர் அல்லது நபர்களை சுற்றி அதற்கான க்வாண்டம் நிலையானது சாதகமாக அமைய வேண்டும்.

பேய்களை அதன் உருவம், இருக்கும் இடங்கள் மற்றும் தோன்றும் நேரம் கொண்டு வகை படுத்தியுள்ளனர்.

வகை A : சிறிய ஒளி பந்துகள்(orbs). இவை பெரும்பாலும்  கேமராக்களில் மட்டுமே  கைப்பற்றப்படகூடியவை.  திரும்ப திரும்ப வரும் தன்மை கொண்டது.

வகை F : மாய தோற்றம்; பாதி மனித வடிவம் கொண்டவை .  கேட்கும் திறன் இருக்கலாம்.  திரும்ப திரும்ப வரும் தன்மை கொண்டது. சுயாதீனம் அற்றது(non-independent).

வகை N: ஆவிகள்; மனித வடிவம் கொண்டவை, முழு உணர்வு உள்ளவை,  பாதி சுயாதீனம் உடையவை.

வகை R: ஏவல் (poltergeist); உருமாற்ற திறன் கொண்டவை , வரையறுக்கப்பட்ட சுயாதீனம் உடையவை.

வகை X: வஸ்துகள்; முழு சுயாதீனம் உள்ளவை, பரவலான க்வாண்டம் சார்ந்த திறன் கொண்டது. அரக்கர்கள், பேய்கள்;  மனிதர்களை க்வாண்டம்  சீரமைப்பு மூலம் தன் வசப்படுத்தக்கூடியது.

X வகை பேய்கள் மிகவும் அரிது. பல ஆண்டுககளாக பெரிய க்வாண்டம் தொந்தரவுகளில் இருந்து உருவாவது.

அறிவியல் தந்த விளக்கத்தை பார்த்தோம். இதற்கு உதாரணம் மற்றும் சில நிகழ்வுகளோடு அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro