தேடல் 2
நாம் மரணிக்கும் பொழுது என்ன நடக்கிறது என்று யாராலும் சொல்ல இயலாது, ஒருவர் இறந்தால் மட்டுமே மரணத்தின் ரகசியத்தை கண்டறிய முடியும், ஆனால் இறந்த ஒருவரை எப்படி கேட்பது? இதற்கு விடையாக சாவின் விலிம்பிற்கு சென்று வந்த சிலர் கூறும் நிகழ்வுகளை காணலாம். இந்த நிகழ்வை உடலை தாண்டிய அனுபவம் ( out of the body experience) என்று கூறுகின்றனர். சென்ற பதிவில் clinical death மற்றும் biological death பற்றி பார்த்தோம், இந்த உடலை தாண்டிய அனுபவம் clinical death அடைந்தவர்களுக்கு ஏற்படுகிறது அதாவது clinical டெத்திற்கும் biological டெத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தான் இது நடக்கிறது. கோமாவில் உள்ளவர்கள் கூட இந்த அனுபவத்தை பெறுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் செயற்கை முறையில் ஒருவரை உயிர்ப்பிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் தான் இது பரவலாக நடைபெறுகிறது.
இவர்கள் சொல்லும் நிகழ்வுகளை 3 வயையாக பிரிக்கலாம். சிலருக்கு சுயநினைவே இருப்பதில்லை, எப்பொழுதும் தூங்குவது போலவே இருந்ததாக கூறுகிறார்கள்/சிலர் ஒரு பிரகாசமான ஒளியை அல்லது தனக்கு தெரிந்தவரை பார்த்ததாக கூறுகின்றனர்/சிலர் தாங்கள் தங்கள் உடலை அருகில் இருந்து பார்த்ததாக கூறுகிறார்கள்.
அவர்கள் கூறுவது:
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் ஒருவர் கூறியது- என்னுடைய அறுவை சிகிச்சையின் பொழுது திடீரென அலாரம் ஒலி எழுப்பியது, நான் என் சுய நினைவை இழந்து கொண்டு இருந்தேன். பின் நினைவு தப்பியது ஆனால் அது ஒரு அமைதியான சுகமான உணர்வு, இதுவரை நான் அப்படி உணர்ந்ததே இல்லை.
இரண்டு நாட்கள் கோமாவில் இருந்தவர் கூறியது- 2014 பிப்ரவரி ஒரு தொழில் கூட்டத்தின் பொழுது மயங்கி விழுந்தேன், ஐந்து நிமிடங்களுக்கு இதய துடிப்பு இல்லை. ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை, இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்து தான் நினைவில் உள்ளது.
விபத்தில் சிக்கிய ஒருவர் கூறுவது- நான் அம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டேன், அது ஒரு வித்தியாசமான உணர்வு என் உடலை நான் அருகில் இருந்து பார்த்தேன். என்னுடன் அந்த ஆம்புலன்ஸில் இருந்தவர் இளம்பச்சை நிறத்தில் சிகை வைத்திருந்தார் ( நினைவு தப்பு முன் நான் அவரை பார்க்கவில்லை) , அவர் பெயர் எனக்கு நினைவில் இல்லை. மூன்று நாட்கள் கழித்து கண் முழிக்கும் பொழுது தான் நான் அவரை பற்றி விசாரித்தேன்.
இன்னும் சிலர் தங்கள் உறவினர்களை பார்த்ததாக கூறுகிறார்கள், பெரும்பாலானோர் இறக்கும் அனுபவம் மிகவும் அமைதியான ஒரு சுகானுபவம் என்றே சொல்கிறார்கள். அதிலிருந்து தாங்கள் வர விரும்பவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இந்த நிகழ்வுகளை உண்மை என்று ஏற்று கொள்வதில்லை. இறக்கும் தருவாயில் நம் மூளை கற்பனை செய்து கொள்ளுவதே இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்கின்றனர். ஆனாலும் சில அறிய நிகழ்வுகள் இதை பொய்யாகுவதாக உள்ளது.
மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு கிம்பர்லி கிளார்க் என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள்.
அதன் பின்னர் கிம்பர்லி கிளார்க்கிடம் மரியா சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "டாக்டர்களும் நர்ஸ்களும் என் உடலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் உயர நாலாவது மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் மானிட்டரிலிருந்து வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் ஷூவைக் கண்டதாகவும் அதன் முடிச்சு ஷூவின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது. இறப்பின் பின்னும் ஆன்மா அழியாமல் இருக்கிறது என்பதை நம்புபவர்கள் இதைத் தகுந்த சான்றாகக் காட்டுகிறார்கள்.
அறிவியலில் ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும் என்கிறார் ஒரு பிரபல விஞ்ஞானி. மனிதனின் பிரக்ஞை (conscious) அவன் மறையும் போது அழிவதில்லை; அது பிரபஞ்ச பிரக்ஞையில் சேர்கிறது; உடல் எடுக்கும்போது அது வந்து இணைகிறது” என்று க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ் என்ற புதிய அறிவியல் கொள்கையைக் கண்டுள்ள உலகின் பிரபல விஞ்ஞானி ஸ்டூவர்ட் ஹாமராஃப்.
பிரக்ஞை நம் உடலில் எங்கு உள்ளது? மூளையிலா அல்லது வேறு எங்கேனும் உள்ளதா? இதற்கு ஸ்டுவர்ட் பிரக்ஞை அதாவது ஆன்மா நம் மூளையில் உள்ள மைக்ரோடியூபல்லில் ( micro tubule) உள்ளது என்கிறார். ஸ்டூவர்ட் ஹாமராஃப் அரிசோனா பல்கலைக்கழகத்தில் அனஸ்தீசியாலஜியிலும் உளவியலிலும் பேராசிரியராக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் அங்கேயே சிறப்புப் பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். 1996 ஆம் ஆண்டிலிருந்து அரிசோனா பல்கலைக்கழகத்தின் பிரக்ஞை பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கிறார். பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை என்ற புதிய கொள்கையை அவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்
மூளை செல்களுக்குள் மைக்ரோட்யூபூல் என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது இந்த மைக்ரோட்யூபில்லிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது.
உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்த பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் வந்து இணைகிறது. அழியாத ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும். மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப். ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கிறது. இந்த நியூரான்கள் அனைத்து தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.இதனுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.
இந்த ஆன்மா உடல் நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார். இதயம் துடிப்பதை நிறுத்தட்டும்; ரத்தம் ஓடுவதை நிறுத்தட்டும்; அப்போது மைக்ரோட்யூபூல் தனது க்வாண்டம் தன்மையை இழக்கிறது. ஆனால் மைக்ரோட்யூபூலின் உள்ளுக்குள் இருக்கும் க்வாண்டம் தகவலானது அழிவதில்லை” என்று அவர் தனது கொள்கையை அமெரிக்க ஸயின்ஸ் சேனலில் த்ரூ தி வோர்ம்ஹோல் (Through the wormhole) என்ற டாகுமெண்டரி மூலமாக விளக்கி உள்ளார்.
ஆத்மா எப்படி ஆவியாக உருவாகிறது என்று அடுத்த பதிவில் காணலாம்.
---------------------------------------------------------
Hi friends,
Hope you all enjoying this article. Let me know what you are thinking about this, so that I can add or improve more things.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro