😘தோழன்😘
அன்பு என்ற சொல்லின் அர்த்தம் கண்டேன் உன்னிடத்தில்...
மலைபோல் உள்ள கோபங்களும்
பனிபோல் கரைந்திடுமே
சூரியனாய் வரும் உன் சொற்களில்...
இம்சைகள் பலக்கொடுத்தும்
இன்சொற்கள் பேசுபவன் நீயடா!..
என்ன தான் குழம்பிப்போயிருந்தாலும்
உன்னிடத்தில் பேசுகையில் அவை தெளிந்துவிடுவதன் மாயம் என்னவோ??..!
பலமுறைகள் உன்னை கயப்படுத்தினாலும் ஒன்றும் நடக்காததுபோல் அடுத்த நொடியே
புன்னகையுடன் பேசும் உன்னைகண்டு வியந்த நாட்கள் பல..!
உன்னை காயப்படுத்தியதற்காக
என்னை நானே நொந்துக்கொள்ளும் சமையம் ஒன்றும் நடக்காததுபோல் பேசும் உன்னைபோல் ஒருவனை பார்த்ததும் இல்லை...
இனி
பார்க்கப்போவதும் இல்லை...
என் ஆசைகள் அனைத்தையுமே உன் ஆசைகளாய் எண்ணி அதற்க்காக என்னை ஊக்குவிப்பவன்
நீயடா...!
நான் கேட்டு பெற்ற வரங்களினிடையில் கேட்காமல் பெற்ற வரமாய்...!
அன்னை, தந்தை, காதல் யாவும் மூன்று எழுத்து தான்...
ஆனால் இவை மூன்றையும்
'நட்பு'
என்ற ஒற்றை மூன்ரெழுத்து சொல்லில் உணர்ந்தேன் உன்னிடத்தில்....!
உன் அன்பு வேண்டுமடா...
என் கடைசி சுவாசம் வரை...!
இப்படிக்கு
😘😘😘
___________________________________________
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro