😑அன்றும்! இன்றும்!😑
சேவல் கூவி பொழுது விடிந்தது
அன்று!
செல்போன் கூவி பொழுது விடிகிறது
இன்று!
சாணம் தெலித்து கோலம் போட்டனர்
அன்று!
டைய்ல்ஸ் தரையில் ஸ்டிக்கரையாய் காச்சியளிக்கிறது
இன்று!
உணவே மருந்து என்று வாழ்ந்தனர்
அன்று!
மருந்தே உணவு என்றாகி போனது
இன்று!
கண் எட்டும் தூரமனைத்தும் வயலாய் காட்சியளித்தது
அன்று!
வின்னை தொடும் கட்டிடமாய் மாறிப்போனது
இன்று!
மும்மாறி பொழிந்தது
அன்று!
தூறல் விழுந்தாலே முக்கிய செய்தியானது
இன்று!
ஆறு குளங்களில் தண்ணீர் ஓடியது
அன்று!
தண்ணீர் ஓடிய இடங்களில் விவசாயிகளின் கண்ணீர் ஓடுகிறது
இன்று!
நம் முன்னோர்கள்
வானத்தை பார்த்து வானிலையையும்,
மாட்டின் மடியைப்பார்த்து அது கன்று
ஈனும் நேரத்தையும்,
உழுதல் முதல் அறுவடை வரை அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளையும் எந்த பல்கலைகழகத்தில் படித்தார்கள்
அன்று!
ஆனால் இவை அனைத்தையும் ஐந்து ஆண்டுகள் படித்தால் தான் செய்யமுடியும்
இன்று!
நேரில் பேசி மகிழ்ந்தனர்
அன்று!
குறுஞ்செய்தி ஆகிப்போனது
இன்று!
முன்னோர் வழியை பின்பற்றி செழிப்பாய் வாழ்ந்தனர்
அன்று!
முற்றும் மாறிப்போனது
இன்று!
அன்றும் இன்றும் என்றும் மாறிப்போகாதது சூரிய உதய அஸ்தமனம் மட்டுமே!...
யார்கண்டால்?! அதுவும் மாறிப்போனாலும்! போகலாம்!...
இப்படிக்கு
😑😑😑
_______________________________________
Hope u ol ensoyyy dis!!!
Chrryy 4 mstks...!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro