பகுதி -7
கமிஷனர் அலுவலகம் தன் வழக்கமான சுறுசுறுப்புடன். இயங்கிக்கொண்டிருக்க அதன் உள்ளே மூவர் மிகவும் குழப்பத்துடனும் பயத்துடனும் நுழைந்தனர்.
அவர்களை தடுத்த ஒரு காவலர்," யாரு நீங்க ???யார பார்கனும்??" என்று மிரட்டும் தொனியில் வினவினார்.
அந்த மூவரில் ஒருவன்," நாங்க சித்தார்த் சாரை பார்க வந்திருக்கோம்," என்றான் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
அவன் அவ்வாறு கூறவும் சித்தார்த் அங்கே வரவும் சரியாக இருந்தது அவர்கள் மூவரையும் கேள்வியாக பார்த்தவன்," நீங்க.....??"என்றவன் தன் வினாவை பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.
அவனது கேள்வியை புரிந்தவர்கள்," நாங்க சுதீபோட ப்ரெண்ட்ஸ்..,எங்க சுதீப் க்கு என்ன ஆச்சு??"என்று உண்மையான அக்கறை முகத்தில் தெறிய வினவினான்.
" ஓ...... நீங்க இங்கயே காத்திருங்க , கமிஷனர் சார் உங்ககிட்ட எல்லாம் விவரமா சொல்லுவாறு , " என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
முதன்முறையாக காவல்துறை வந்ததாலும் தங்களின் நண்பனை காணாததாலும் அந்த மூவரும் சிறிது கலக்கத்துடனே காணப்பட்டனர்.
அவர்களின் நடவடிக்கைகளை அவர்கள் அறியா வண்ணம் நோட்டமிட ஒரு கான்ஸ்டெபிளுக்கு உத்தரவிட்ட சித்தார்த் தன் அறை நோக்கி செல்கையில் அவனை தடுத்த துணை கமிஷனர்," பார்க்க பெரிய இடத்து பசங்க மாதிரி இருக்காங்க..யாரு இவங்க ?இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க? எங்கிட்ட அனுப்பு, நான் கவனிச்சுக்கிறேன்," என்று உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவை கேட்டு முதலில் திடுக்கிட்டவன் பின்," அது முடியாது சார்," என்றான் பவ்யமாக, வார்த்தையில் இருந்த அடக்கம் குரலில் இல்லாமல்.
" என்ன??? முடியாதா??"
"ஆமா சார், அவங்க கமிஷனரோட உத்தரவுபடி இங்க வந்திருக்காங்க, நீங்க எதுவா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கோங்க..."என்று மிடுக்காக கூறி தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
அவனது இந்த செயல் தன்னை அவமதித்ததாக நினைத்த துணை கமிஷனர் மனதிற்குள் அவனை எப்படியும் பழி தீர்க்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டான்.
தன் அறைக்குள் நுழைந்த சித்தார்த் யாரையோ மொபைலில் அழைத்தான்.
**********
டாக்டர் கோபாலின் அறையை விட்டு வெளியே வந்த செழியனின் மனதில் நிறைய பதில் தெரியாத கேள்விகள் இருந்தது.தான் நினைத்தது போல சுதீபின் மரணம் குறித்த உண்மைகள் கண்டுபிடிக்க அவ்வளவு சுலபமில்லை என்று உணர்ந்தான் அவன்.
எண்ணங்கள் மனதில் அணி வகுத்ததால் மிதமான வேகத்திலேயே தனது அலுவலத்தை அடைந்தான்.
அவனது கண்கள் நாலாபுறமும் தன் பார்வையை செலுத்த உதடுகளோ ," சித்தார்த கிட்ட என்ன பார்க்க வர சொல்லுங்க ," என்று உத்தரவிட கால்களோ நிற்காமல் அவனது அறைக்குள் அவனை அழைத்து சென்றது.
அறைக்கதவை தட்டி உள்ளே நுழைய அனுமதி கேட்ட சித்தார்தை உள்ளே வரசொன்ன செழியன்," உட்காருங்க சித்தார்த் , சொல்லுங்க உங்க விசாரனை முடிஞ்சதா??உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா??" என்று வினவினான்.
" வீட்ல இருந்த எல்லார்கிட்டயும் விசாரிச்சுட்டேன் சார். எனக்கு தெரிஞ்ச வரை சந்தேகப்பட்ற மாதிரி ஒன்னும் இல்லை," என்று விளக்கினான்.
" ம்.... பார்களாம், சரி சுதீபோட நண்பர்கள் இங்க வந்து எவ்வளவு நேரம் ஆகுது, அவுங்களுக்கு எந்த அளவு விஷயம் தெரியும்."
" இப்பதான் சார் ஒரு.பத்து நிமிஷம் ஆகுது, நான்தான் ஃபோன் பண்ணி வரசொன்னேன், நீங்க வந்து எல்லாதையும் விரிவா சொல்லுவீங்க னு சொல்லிருக்கேன்."
" ஓ..... அவங்க சுதீபோட வீட்டுக்கு வரலையா?"
" இல்லை சார் கல்யாணம் நின்னு போனது கூட அவ்ஙகளுக்கு தெரியுமானு தெரியலை."
" strangee......, சரி சுதீபோட குடும்பம் பத்தி நீங்க விசாரிச்ச வரை சொல்லுங்க," என்று கேட்டான் செழியன்.
தான் அறிந்த உண்மைகளை கூறத்துவங்கினான் சித்தார்த்," சார் அமைச்சருக்கு கல்யாணம் முடிஞ்சு ரொம்ப வருஷமா குழந்தை இல்லை அதனால தன் மனைவியின் தங்கச்சிய இரண்டாவதாக திருமணம் செஞ்சுகிட்டாரு .
அந்த கல்யாணம் நடந்து ஒரு வருஷத்துல சுதீப் பிறந்துட்டான். அதனால அமைச்சர் ரொம்ப சந்தோஷமாவும் நிறைவாவும் உணர்ந்திருக்காரு. சுதீபோட இரண்டாவது வயசுல அவங்க அம்மா ஒரு விபத்துல இறந்து போயிட்டாங்க அதுக்கப்பறம் சுதீப் அவனோட பெரியம்மாவோட வளர்ப்புல தான் வளர்ந்திருக்கான்.ஆனால் அமைச்சர் அவரோட முதல் மனைவிய நம்புறது இல்லை அதனால சுதீப எப்பவும் தன் கூடவே வச்சுக்குவாரு,"
அவனை இடைமறித்த செழியன்," எதனால அப்படி ஒரு எண்ணம் தன் மனைவி மேல,இந்த விஷயத்தை உங்கள் ட்ட யாரு சொன்னா??" என்று வினவினான்.
"சுதீப எப்பவும் தன் கூட வச்சுக்கறதா அமைச்சர் சொன்னாரு, அமைச்சர் தன்னை நம்புறதில்லை னு அவரோட மனைவி சொன்னாங்க, நான் காரணம் கேட்டேன் அதுக்கு அமைச்சர் என்ன சொன்னாரு னா, என் பையன் மேல ஒரு தனி பாசம் இருக்கும் அவனை யாரும் தவறி வளர்த்திடுவாங்க னு நான் பயந்தேன் அதுனால யார்கிட்டயும் அவனை ஒட்ட விடுறது இல்லை னு சொன்னாரு," என்று கூறினான்.
" அமைச்சர் மனைவி ஏன் அப்படி சொன்னாங்க?"
" அதுக்கும் காரணம் இருக்கு, ஒரு தடவை சுதீப இவங்க தோட்டத்துல விளையாட அனுமதிச்சுருக்காங்க அப்ப அந்த தோட்டக்காரன் சரியா தோட்டத்தை பராமரிக்காத னால பாம்பு ஒன்று சுதீப கடிக்க வந்திருக்கு, அதை முன்னாடியே கவனிச்ச தோட்டக்காரன் சுதீப காப்பாத்திட்டான். ஆனால் பழி அமைச்சரோட மனைவி மேல விழுந்திருச்சு, அதுல இருந்து அவங்களை சுதீப் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்துலயும் தலையிட விட்றதில்லை , அப்படீனு வருந்தப்பட்டாங்க சார்," என்று கூறினான்.
" ஓ... சரி அப்ப சுதீபோட தம்பி, ??"
" சுதீபோட ஐஞ்சாவது வயசுல அமைச்சரோட முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை சார். அவன் சரியான பொறுக்கி, அவ்வளவு கெட்ட பழக்கங்களையும் கத்து வச்சிருக்கிறான். சுதீப் கூட எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்பான், " என்று கூறினான்.
" ம்.... சரி சுதீபோட தொழில்??"
" சுதீப் தன்னோட நண்பனோட பார்னர்ஷிப் சேர்ந்து ஒரு விளம்பர கம்பனிய நடத்திட்டு இருந்தான் அந்த கம்பனியோட மாடலா வந்தவங்க தான் மாலினி, அவங்கதான் சுதீப் கல்யாணம் பண்ண இருந்த பொண்ணு."
"ஓ.... சரி அந்த பொண்ணு பத்தின டீடெய்ல்ஸ் எதாவது தெரிஞ்சுதா??"
" யெஸ் சார் கல்யாணம் நின்னுபோச்சுனு தெரிஞ்சதும் மயங்கி விழுந்தவ இன்னும் எந்திரிக்கலை, இப்ப ஐ. சி.யூ ல இருக்காங்க," என்று கூறினான்.
" ஓ... அதுனால தான்.மேற்கொண்டு ஒன்னும் பண்ணாம இருக்காங்களா அவ்ங்க வீட்ல?? சரி இப்ப அந்த பார்ட்னர் யாரு அவனும் இங்க இருக்கானா??" என்ற கேள்விக்கு சித்தார்த்," ஆமா சார் அவங்களை வெளிலதான் உட்கார வச்சிருக்கேன். உள்ள கூப்பிடவா??"
" அந்த மூனு பேரை பத்தியும் எதாவது தெரியுமா உங்களுக்கு??"
" ஆமா சார் ரித்தீஷ், உமேஷ், உதய், இவங்கதான் அவனோட நண்பர்கள், எல்லாரும் காலேஜ் ல ஒன்னா படிச்சு அதுக்கப்பறமும் நட்போட இருக்காங்க, இதுல உதய் தான் பிசினஸ் பார்ட்னர்," என்று கூறினான்.
" மத்த இரண்டு பேரும் எப்படி??"
" ரித்தீஷ் ஒரு பெரிய தொழிலதிபரோட பையன், சுதீபும் இவனும் தனித்தனியா போனதை விட ஒன்னா போனது தான் அதிகம் காலேஜ் ல இவங்களுக்கு twins னு பட்டப்பேரு கூட இருக்கு."
"ஓ..... அப்ப மத்த ரெண்டு பேரும்?"
" உதய் தான் பிசினஸ் பார்ட்னர். உமேஷ் ஒரு நடுத்தர வர்கத்து இளைஞன்.பணத்துகாக மட்டும் சுதீப் கூட சுத்துறவன், இது மத்தவங்க கிட்ட விசாரிச்சது சார், அவங்களை இன்னும் நேரடியா எந்த விசாரனையும் பண்ணலை," என்று.கூறி நிறுத்தினான்.
ஒரு நிமிட யோசனைக்கு பிறகு ," சரி.மூனு பேரையும் உள்ள வரசொல்லுங்க நான் பேசிக்கறேன்," என்று கூறினான்.
அந்த மூவரும் உள்ளே நுழைந்ததும் அவர்களில் ஒருவன் ," சார்......சுதீப் க்கு என்ன ஆச்சு?? எங்க அவன் ?? எங்களை ஏன் இங்க வரசொன்னீங்க ??" என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான்.
அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவன்," அதே தான் நான்.கேட்குறேன்....சுதீப் எங்க ??? அவனை என்ன செஞ்சீங்க நீங்க???" குரலில் கோபம் வெளிப்படாமல் அவன் கேட்ட தொனியில் நடுங்கியவன்.
" சார்...... என்ன நீங்க....ப.ப...ப...பழி...ய...எங்க மேல போ...போ...போடறீங்க....நாங்க யாரும் அங்க இல்லை....அங்....க .....என்......ன....நடந்தது...னு .....கூட......எங்களுக்கு.....தெரியாது........," என்று திக்கித்திணறி கூறினான்.
" முதல்ல உன் பேரு என்ன சொல்லு?"என்றான் குரலை சற்று உயர்த்தி.
" என் பேரு ரித்தீஷ்..,"கெத்தாக கூறினான் அவன்.
" ம்ம்....சரி மிஸ்டர்...ரித்தீ.....ஷ், உங்க நண்பனோட கல்யாணம் காலை ஆறு மணிக்கு ஆனால் உடன்பிறவா நண்பனாகிய நீங்க முதல் நாளே நண்பன் கூட தங்காம இருந்தது மட்டுமில்லாம அவனோட கல்யாணம் நின்னுபோனது தெரிஞ்சுங்கூட எந்த வித தொடர்புமில்லாம அமைதியா இருந்ததுக்கு காரணம் என்ன னு கொஞ்சம் சொல்றீங்களா......????"என்று கேட்டுவிட்டு அவனை ஊடுருவும் பார்வை பார்த்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro