பகுதி -6
அமைச்சரின் உதவியாளரின் பேச்சை முழுவதுமாக உள்வாங்கிய செழியன், தனது மனதில் குறித்துக்கொண்டான்.
மேலும் அவனிடம் விசாரனையை தொடருமாறு சித்தார்திடம் ஜாடையாக கூறினான்.
" சரி அமைச்சர் ஐயாவோட மனைவி சுதீப் கிட்ட எப்படி பாசமா இருந்தாங்களா??" என்று தன் அடுத்த வினாவை தொடுத்தான்.
" அவங்க நல்ல மாதிரி தான் சுதீப் ஐயாவை தன் சொந்த மகனைபோல தான் வளர்த்தாங்க," என்று கூறினான்.
அவனது இந்த பதில் இருவரையும் வியப்படையசெய்தது, தன்னுடைய எண்ணங்களை மனதிற்குள் புதைத்துக்கொண்டு உணர்ச்சி வெளிப்படுத்தாத குரலில் செழியன்," ம்ம்.... சுதீபோட அம்மா அதாவது அமைச்சரோட முதல் சம்சாரம் அவங்க இப்ப எங்க இருக்காங்க??"
" ஐயா...சுதீப் ஐயாவோட அம்மா தான் இரண்டாவது சம்சாரம், இப்ப இருக்குறவங்க தான் முதல் சம்சாரம்," என்று தெளிவுபடுத்தினான்.
அமைச்சரின் சொந்த வாழ்வில் நிறைய பிரச்சனைகள் இருந்ததென்பதை அறிந்துகொண்ட செழியன் மேலும் அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல்," சரி நீங்க போகலாம் உங்களுக்கு எங்ககிட்ட சொல்ல ஏதாவது விஷயம் இருந்தா தயங்காம தெரியப்படுத்துங்க, உங்க பேரே வெளிய வராது, அப்பறம் வெளியூருக்கு போகாம இந்த வழக்கு முடியுற வரைக்கும் இங்கயே இருங்க ," என்று கூறினான்.
அந்த உதவியாளன் விடைபெற்றதும் சித்தார்தை நோக்கிய செழியன்," அமைச்சரை விசாரிக்கும் போது இந்த விஷயம் தெரிஞ்சமாதிரி காட்டிக்க வேண்டாம்," என்று கூறிக்கொண்டிருக்கையில் வெளியே நின்றிருந்த கான்ஸ்டெபில் உள்ளே நுழைந்து," ஐயா... உங்களை பார்க்க கைரேகை நிபுணர் காத்திருக்காரு, "என்று கூறியதும்.
" இதோ இரண்டு நிமிஷத்துல நானே அங்க வர்றேன்," என்று கூறி அனுப்பினான்.
சித்தார்தை நோக்கிய செழியன்," எல்லா இன்வெஸ்டிகேஷனும் ரெகார்ட் ஆகிட்டு தானே இருக்கு ?" என்று வினவினான்.
" ஆமா சார்,ரெகார்டிங்ல தான் இருக்கு,"
" ம்ம் குட் ஐ டோட் வான்ட் எ மைன்யூட் டீடெய்ல் டு மி மிஸ்ட்( i don't want a minute detail to be missed), நீங்களும் அவங்க பேச சந்தர்பம் குடுங்க , கேள்விகளை கம்மி பண்ணுங்க, நான் இதோ வந்தடறேன்," என்று கூறிவிட்டு தன் மிடுக்கான நடையுடன் வெளியேறினான்.
புயலடித்து ஓய்ந்தது போல இருந்தாலும் அந்த அறையில் ஒரு வெறுமை இருந்ததை உணர்ந்தான் சித்தார்த் , எதிலும் நேர்த்தியும், எல்லா கோணங்களிலும் ஆராயும் திறனும் தான் சிறு வயதில் இழந்த தமையனை சித்தார்த்திற்கு நினைவுபடுத்தியது. தன் சொந்த எண்ணங்களை ஒதுக்கி வைத்து அடுத்த விசாரனைக்கு அமைச்சரின் மனைவியை அழைத்தான்.
**************
அறையைவிட்டு வெளியேறிய செழியனை எதிர்கொண்ட கைரேகை குழு தலைவன் அஜய்," சார் நீங்க க்ரைம் சீன் க்கு வந்து சில விஷயங்களை பார்க்க வேண்டியது இருக்கு," என்று கூறினான்.
அதிகம் பேசாமல் அமைதியாக தலையை ஆட்டி ஆமோதித்த செழியன் சித்தனை வசப்பட்டவன்னம் அஜயை பின் தொடர்ந்தான்.
சுதீபின் அறையில் க்ரைம் ப்ளேஸ் என்பதை குறிப்பிடும் மஞ்சள் தடுப்பு அந்த அறையின் நுழைவாயிலில் கட்டி இருக்க உள்ளே நின்ற அனைவரும் கையில் வெள்ளை உறையும் வாயில் வெள்ளை மாஸ்க்கும் அணிந்துகொண்டு தக்களது கடமையை செய்துகொண்டிருந்தனர்.
செழியனிடம் ஒரு உறையும் மாஸ்க்கும் கொடுக்கப்பட அந்த அறையின் உள்ளே நுழைந்தவன் அந்த அறையை சுற்றி நோக்கினான்.அவனது ஆராய்தலை தடுத்த அஜய்," ,சார் இவரோட ரூம் ல எல்லா பொருட்களும் வச்சது வச்ச இடத்தில இருக்கு, எந்த பொருளும் இடம் மாற்றம் செய்யப்படலை, திறந்த நிலையில ஒரு லேப்டாப், குடிச்சிக்கிட்டு இருந்த நிலையில ஒரு கூல்டிரிங்க்ஸ், மொபைல், திறந்த நிலையில ஒரு ஃபைல் , இது மட்டும் தான் க்ரைம் சீன் ல எங்களுக்கு கிடைச்சிருக்கு, " என்று கூறி சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தவன், " நாங்க இங்க உள்ள கைரேகைகளெல்லாம் சேகரிச்சிட்டோம், இனி இந்த வீட்ல உள்ளவங்களோட கைரேகையை சேகரிக்கனும், நீங்க கேட்ட மாதிரி இந்தாங்க அவரோட லேப்டாப், மொபைல், வேற எதுவும் உங்களுக்கு வேணுமா??" என்று வினவினான்.
" இல்லை மிஸ்டர் அஜய் இப்பதைக்கு உங்ககிட்ட கேட்க எதுவும் இல்லை ஆனால் ஏதாவது தெரிஞ்சுக்கனும் னா கண்டிப்பா உங்ககிட்ட கேட்குறேன், உங்களுக்கு ஏதாவது என் பக்கமிருந்து உதவி தேவைப்படுதா??" என்று வினவினான்.
"எஸ் சார் எனக்கு இறந்து போன நபரோட கைரேகை வேணும் , " என்று கேட்டான்.
" ஓஓ கண்டிப்பா பாடியை போஸ்ட்மார்டத்திற்காக அனுப்பியிருக்கோம், அத்த வேலை முடிஞ்சதும் நீங்க அந்த ஹாஸ்பிடல் ல போயே எடுத்துக்களாம், சில காரணங்களுக்காக வீட்டுக்கு எடுத்துட்டு வரலை," என்று கூறினான்.
" மத்தபடி இந்த க்ரைம் சீன் உங்களோட கண்ணோடத்துல எப்படி தெரியுது??"
" அதிகமா கைரேகைகள் இதுல இல்லை , எல்லா இடத்திலயும் ஒன்னு இல்லை இரண்டு கைரேகைகள் தான் இருக்கு, அதுமட்டுமில்லாம அந்த கூல் டிரிங்க்ஸ் பாட்டில்...., அதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது, சோ இந்த அறைக்குள்ள வெளி ஆள் வரலை னு நினைக்கிறேன், அப்படியே வந்திருந்தாலும் கைல கிளவுஸ் போட்டிருந்திருக்கனும் , சோ கொலை பண்ற எண்ணத்தோட வந்திருக்கனும், இது ஒன்னு தற்கொலை இல்லைனா தகட்டமிட்ட கொலை இயற்கை மரணம் இல்லை னு நினைக்கறேன்," என்று கூறினான்.
"ஏன் இயற்கை மரணமா இருக்ககூடாது??" செழியன்.
" சரியா தெரியலை சார் ஏதோ இப்படி இருக்களாம் னு ஒரு கெஸ் அவ்ளோ தான்," என்று கூறினான்.
அவனது கூற்றை ஆமோதிப்பது போல தலை அசைத்துவிட்டு," ஒகே மிஸ்டர் அஜய் இந்த கேஸோட உங்க பகுதியை நீங்க முடிச்சதும் எனக்கு தெரியப்படுத்துங்க, அது என்னோட அடுத்த கட்ட விசாரனை க்கு உதவியா இருக்கும், கண்டிப்பா நம்ம இன்னொரு முறை சந்திக்க நேரலாம்," என்று கூறிக் கொண்டிருக்கையில் அவனது செல்பேசி சத்தமிட்டது அதில் மின்னிய பெயரை பார்தவன் சிறு யோசனையுடன் அதை உயிர்பித்தான், அந்த பக்கம் கூறிய செய்தியை கேட்டதும் புருவங்கள் இரண்டும் முடிச்சிட ," ஒகே நான் அங்க உடனே வர்றேன்," என்று கூறி ஆப் செய்துவிட்டு மீண்டும் அஜயை நோக்கிய செழியன்," எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு சோ உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் இன்ஸ்பெக்டர் சித்தார்த் கிட்ட கேட்டுக்களாம், நைஸ் மீட்டிங் யூ..." என்று கூறி அவனது பதிலுக்கு கூட காத்திருக்காமல் விடைபெற்றான்.
புயலென உள்ளே நுழைந்த செழியனை கண்ட சித்தார்தின் இதயம் ஒருமுறை திடுக்கிட்டு பின் இயல்பானது, அந்த அறையில் சித்தார்த் ஒரு பெண்ணை விசாரித்துக்கொண்டிருந்தான்.அந்த பெண்ணின் தோற்றமும் ஆடம்பரமான அலங்காரங்களும் அவர்தான் அமைச்சரின் மனைவி என்பதை சொல்லாமல் சொல்லியது. தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சித்தார்தை நோக்கிய செழியன்," எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு , இந்த விசாரணையை நீங்களே முடிச்சிடுங்க, கைரேகை நிபுணர் அஜய் இங்க உள்ளவங்க கைரேகை எடுக்கனும் னு சொன்னாரு, அதை தவிர வேற ஏதாவது உதவி வேணும் னாலும் செய்துடுங்க, வேற விசாரிக்க இங்க இருக்குறவங்களை தவர யாராவது இருக்காங்களா???" என்று வினவினான்.
" ஆமா சார் சுதீபோட நண்பர்கள் நாலு பேரையும் அவரோட காதலியையும் விசாரிக்கனும்," என்று கூறினான்.
" சரி அவங்களோட முகவரி தொலைபேசி எண் எல்லாதையும் வாங்கிகிட்டு ஸ்டேஷனுக்கு வரசொல்லிடுங்க, அப்பறம் மயக்கம் போட்டு விழுந்தானே அவனையும் ஸ்டேஷனுக்கு அனுப்பிடுங்க," என்று இன்னும் பல ஆனைகளை அடுக்கடுக்காக கூறிய செழியன் மின்னலென அந்த அறையை விட்டு வெளியேறினான்.
வாசலில் காத்திருந்த காவல் துறை வாகனத்தில் ஏறிய செழியன் அதன் டிரைவரை நோக்கி," அண்ணாமலை சீக்கரமா என்னை வீட்டில இறக்கி விட்ருங்க," என்று பரபரப்புடன் கூறினான்.
அவனது பரபரப்பு அவருக்கும் தொற்றிக்கொள்ள அந்த வாகனம் சாலையில் சீறிப்பாய்ந்தது.
அடுத்த பத்து நிமிடங்களில் அந்த காவலர் குடியிருப்பின் முன் அந்த வாகனம் நிற்க அதிலிருந்த இறங்கிய செழியன்," நீங்க அமைச்சரோட வீட்டுக்கே போய்டுங்க, " என்று உத்தரவிட்டு விட்டு வேகமாக தன் இல்லத்திற்குள் நுழைந்தான்.
***********
அந்த பெரிய மருந்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது .ஒருபுறம் அவசர சிகிச்சைகாக நோயாளிகள் ஆம்புலன்ஸில் வந்த வன்னமிருக்க இன்னொரு புறம் புறநோயாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் பயத்துடன் சென்று கொண்டிருந்தனர்.
அந்த பரபரப்பான மருத்துவமனை வளாக பார்க்கிங்கில் ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக் சீறி வந்து நிறுத்தப்பட்டது.அதிலிருந்து இறங்கியவன் கருப்பு நிற சட்டையும் கருநீல நிற பேன்டும் அணிந்திருக்க அவனது முகம் ஹெல்மெட்டிற்குள் சிறைபட்டிருந்தது. அந்த ஹெல்மெட்டை கலட்டாமல் உள்ளே நுழைந்தவன் நேரே ரிசப்ஷனில் சென்று ," டாக்டர் கோபால் எங்க இருப்பாரு ,"என்று வினவினான்.
ஹெல்மெட்டால் முகத்தை மூடியிருக்கும் அவனை விசித்திரமாக பார்த்த அந்த பெண் அந்ல மருத்துவரின் அறைக்கு செல்ல வழி கூறினார்.
அவர் கூறிய அறை வாசலை அடைந்த அவன் சுற்றும் முற்றும் நோக்கிவகட்டு பின்பு மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே இருந்த மருத்துவர்," யார் நீங்க?? உங்களுக்கு என்ன வேணும் ?" என்று படபடப்புடன் வினவ, அவன் தன் தலையிலிருந்த ஹெல்மெட்டை நீக்கினான்.
ஆசுவாச மூச்சுவிட்ட மருத்துவர்," வாங்க செழியன் உங்களுக்காக தான் காத்திருக்கிறேன்,ஆனால் நீங்க ஏன் ஹெல்மெட்டோட வந்தீங்க???" என்று வினவினார்.
" சொல்றேன் டாக்டர் , அதுக்கு முன்னாடி நீங்க ஏன் என்னை அவசரமா வர சொன்னீங்க??"
" நீங்க அனுப்புன போடிக்கு போஸ்ட்மார்டம் முடிஞ்சது ஆனால் அதோட முடிவு என்னை ஆச்சரியப்படுத்துது." என்று குழப்பினார்.
" அப்படீனா?? மரணம் எதனால சம்பவிச்சது னு தெரிஞ்சிருக்குமே??"
" ஆமா அந்த ஆளோட மரணத்திற்காண காரணம் (cyanide) சையனைட் "என்று கூறி நிறுத்தினார்.
" என்ன சொல்றீங்க???"
" ஆமா செழியன் அவரோட மரணம் சையனைடால ஏற்பட்டிருக்கு அதுவும் அந்த சையனைட் குளிர்பானத்தில கலந்து கொடுக்கப்பட்டிருக்கு, " என்று கூறினார்.
" ஓ..... இது தற்கொலையாவும் இருக்களாம் இல்லையா??" என்று செழியன் கேட்க ," இல்லை இது முன்பே திட்டமிடப்பட்ட கொலை ," என்று உறுதியாக கூறினார் மருத்துவர்.
" எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க??"
" தற்கொலை பண்ணணும் னு நினைப்பவன் சையனைடை அப்படியே வாய்ல வச்சிருப்பான், குளிர்பானத்துல கலந்திருக்க மாட்டான்," என்று தன் கூற்றை மேலும் உறுதிபடுத்தினார்.
மேலும் சிலவற்றை அவருடன் பகிர்ந்துகொண்டும், அவனது சில சந்தேகங்களை தெளிவுபடுத்தியும் அவருடன் உரையாடிவிட்டு குழப்பமான மனநிலையில் அவரது அறையிலிருந்து வெளியேறினான் செழியன்.
மனதில் குழப்பமான பல எண்ணங்கள் சூழ நடந்துவந்துகொண்டிருந்த செழியன் யார் மீதோ மோதிவிட, சுயநினைவு வந்தவனாக ," ஓ சாரி ஏதோ சிந்தனையில தெரியாம இடிச்சுட்டேன்," என்று நிமிர்ந்து நோக்காமலே மன்னிப்பு கேட்டான்.
அவன் மன்னிப்பிற்கு பதில் வராததால் நிமிர்ந்து பார்தவன் ஒரு முறை திகைத்து பின் கோபத்துடன் அவ்விடம் விட்டு நகர்தான்.
அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவளோ," எங்க போய்ட போறீங்க என்னை விட்டுட்டு,
உங்களை கவனிச்சுக்கறேன்," என்று கூறி சிரித்துக்கொண்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro