பகுதி - 5
மயங்கிய சரியத் தொடங்கியவனை தாங்கிப்பிடிக்க சென்ற மேனேஜரை கண்டித்த செழியனின் பார்வை சித்தார்தை நோக்கியது, அவனது ஆணையை புரிந்து கொண்டது போல வேகமாக வெளியே சென்று ஒரு கான்ஸ்டெபிலை அழைத்து வந்தான் சித்தார்த்.
" இந்த பையன அந்த ரூம் ல கொண்டு போய் குடிக்க எதாவது குடுங்க, நான் வர்ர வரைக்கும் அவனுக்கு துணையா இருங்க ," என்று அந்த கான்ஸ்டெபிலுக்கு கட்டளையிட்டு விட்டு மற்றவர்களை நோக்கி திரும்பியவன்," இதோ பாருங்க ஒரு வீட்ல வேலை செய்றவங்களுக்கு அந்த குடும்பத்தை பத்துன நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கும், உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை தயங்காம எங்களுக்கு தெரியப்படுத்துங்க, உங்க பேரு வெளிய தெரியாது அதுக்கு நான் பொறுப்பு," என்று கூறிவிட்டு திரும்புகையில் மேனேஜரின் குரல் அவனை தடுத்தது.
" சார்.... ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா??"
" ம்ம்.... சொல்லுங்க மனோஜ் ",என்று செழியனின் பதிலிற்கு ஒரு முழு நிமிடம் மௌனம் காத்த அவர் பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டது போல ," ஏதோ நடக்கக்கூடாதது நடந்திடுச்சு னு புரியுது, ஆனால் என்ன நடந்துச்சு னு நாங்க தெரிஞ்சுக்கிடலாமா?" என்று வினவினார்.
மேனேஜரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்காத செழியன் அங்கிருந்த அனைவரையும் நோக்கினான், அந்த பெரிய வரவேற்பறையில் அந்த இல்லத்தின் எட்டு உதவியாளர்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்க அனைவரும் அவனை கேள்வியுடன் நோக்கினர்.
மேனேஜரின் கேள்விக்கு பதிலலிக்காத செழியன் சித்தார்தை நோக்கி," அமைச்சரோட குடும்ப உறுப்பினர்களெல்லாம் எங்கே ? " என்று வினவினான்.
" அவங்க எல்லாம் பக்கத்து வரவேற்பறையில இருக்காங்க, கூப்பிடவா சார்,"
" இந்த வீட்ல இந்த நிமிஷம் யாரெல்லாம் இருக்காங்களோ அவ்வளவு பேரும் இப்ப இங்க வந்தாகனும்," என்று உறுதியான குரலில் கூறினான் செழியன்.
அந்த பெரிய வரவேற்பறை அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆட்களால் நிறைந்தது. அனைவரையும் ஒரு முறை நோட்டம் விட்ட செழியன் தன் வழக்கமான கர்ஜனை குரலில்," அமைச்சர் வீட்ல இன்னைக்கு நடக்க இருந்த கல்யாணம் நடக்கலை அது ஏன் னு உங்கள்ள யாருக்காவது தெரியுமா??" என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டான்.
நீண்ட அமைதி மட்டுமே அங்கு நிலவ ஒருவரும் பதில் கூற தயாராக இல்லை என்று உணர்ந்த செழியன் தொடர்ந்தான்," சரி உங்க யாருக்கும் தெரியாது னு நினைச்சு நானே சொல்லிடறேன் , .................. கல்யாண மாப்பிள்ளை, அதாவது அமைச்சரோட தலை மகன் சுதீப் சந்தர் ஐ அவரோட அறையில ," என்று கூறி நிறுத்தினான் பின் அமைதியாக அங்கிருந்தவர்களை நோட்டமிட்டான்.
பலரும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் பாவனையுடன் இருக்க இருவர் மட்டும் தெரிந்த விஷயத்தை மீண்டும் கேட்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை கண்களால் துளாவிய செழியன்," அவரோட அறையில காணோம்," என்று முடித்தான்.
அவன் அவ்வாறு கூறியதும் அங்கிருந்த அனைவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க அந்த இருவரும் மட்டும் யாரும் அறியாவண்ணம் ஒருவரையொருவர் ஓர பார்வையில் பார்த்துக்கொண்டனர்.அவர்களின் பார்வையில் ஒரு வித பயம் கலந்திருந்தது.
இதை மனதில் குறித்துக்கொண்ட செழியன் மேலும் தொடர்ந்தான்," ஆமா... அவரை காணோம் ஆனால் அவரோட அறையில வேற ஒருத்தர் இறந்த நிலையில இருந்தார் அவரு யாரு னு இன்னும் நாங்க அடையாளம்.கண்டுபிடிக்கலை," என்று கூறிக் கொண்டிருக்கையில் வாசலின் காவலாளி வேகமாக உள்ளே நுழைந்தான்.
அனைவரது கவனமும் அவனிடம் திரும்பியது, அவனை கேள்வியுடன் நோக்கிய செழியனிடம் அவன்," யாரோ கைரேகை காறவங்களாம் உள்ள வர அனுமதி கேக்குறாங்க," என்று கூறினான்.
" ஓஓஓ அவங்களை உள்ளே வரச்சொல்லு, இதை நீ இண்டர்காம் மூலமாவே கேட்டு இருக்களாமே??"எனறு தன் சந்தேகத்தை கேட்டான் செழியன்.
" இல்லை சார் நேத்து இருந்து இண்டர்காம் வேலை செய்யலை அதனால தான் கேட்கலை, "
"அப்படியா?? இதை நீ வீட்ல யார்கிட்டயும் சொல்லலையா?"
" மேனேஜர் கிட்ட சொல்லிட்டேங்க ஐயா, அவரு தான் ஒரு வாரம் ஆகும் னு சொல்லிட்டாரு," என்று காவலாளி பதில் கூறியதும் மேனேஜரை கேள்வியுடன் நோக்கினான் செழியன்.
" ஆமாங்க ஐயா நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன், அவங்க தான் இப்ப கொஞ்சம் வேலை அதிகமா இருக்குறதால ஒரு வாரம் ஆகும் னு சொல்லிட்டாங்க," என்று கூறி முடித்தான்.
அத்துடன் அதன் விசாரனையை முடித்த செழியன் சித்தார்திடம் திரும்பி," அந்த கைரேகை குழு வ நான் பாத்துக்கறேன், இங்க இருக்குறவங்க எல்லாரையும் தனித்தனியா தான் விசாரிக்கனும், அதனால அதுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுங்க" என்று கட்டளையிட்டுவிட்டு அந்த குழுவினரை நோக்கி சென்றான்.
அந்த குழுவின் தலைவர் போல தோற்றமளித்தவன் செழியனிடம் வந்து," சார் ஐ அம் அஜய், " என்று தன்னை அறிமுகப் படுத்துக்கொண்டான்.
அவனை ஆராய்ந்த செழியன்," மிஸ்டர் அஜய் மாடி ல இருக்குற அறைல தான் க்ரைம் நடந்திருக்கு, அங்க உள்ள எல்லாவிதமான கைரேகைகளும் எனக்கு கண்டிப்பா வேணும், சுதீபோட லேப்டாப், மொபைல் இரண்டும் உடனடியா செக் பண்ணிட்டு என் கிட்ட ஒப்படைக்கனும் , மேக் இட் ஃபாஸ்ட்," என்று கட்டளையிட்டுவிட்டு சுதீபின் அறையை அவர்களுக்கு காட்டினான்.
அவன் கீழே வருவதற்க்உ முன்பாக எல்லாவித ஏற்பாடுகளையும் முடித்துவிட்ட சித்தார்தை மெச்சுதல் பார்வை பார்த்த செழியன்," குட், ஐ அப்ரிஷியேட் யுஆர் சின்சியாரிட்டி(good , i appreciate ur sincerity)," என்று பாராட்டினான்.
செழியனிடம் பாராட்டை பெற்ற உற்சாகத்தில் சித்தார்த் மேலும் வேகமாக செயல்பட துவங்கினான்.
***************
அந்த அறை மிகவும் அமைதியாக காணப்பட்டது, அந்த அறையின் மத்தியில் இரு நாற்காலிகள் போடப்பட்டிருக்க நடுவில் ஒரு மேஜை இருந்தது, அந்த இல்லத்தில் இருக்கும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைய அனைவரையும் தன் கேள்விகளால் துழைத்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.
செழியனோ அந்த விசாரனையில் கலந்து கொள்ளாமல் நடப்பவைகளை ஆராய்ந்துக்கொண்டிருந்தான்.
வேலை செய்பவர்கள் அனைவரையும் விசாரித்துவிட்டு செழியனிடம் திரும்பிய சித்தார்த்," சார் இப்ப குடும்ப உறுப்பினர்களையும் விசாரிச்சுடலாமா??" என்று வினவினான்.
" ம்ம்ம் ....அமைச்சர் வீட்ல யாரெல்லாம் இருக்காங்க??"
" அமைச்சரோட மனைவி கலா தேவி, அவரோட இரண்டாவது பையன் சந்தீப் சந்தர் இவங்கதான் அவரோட குடும்பம், இவங்களை தவிர அமைச்சர், அமைச்சரோட பிஏ(PA), அவரோட சட்ட ஆலோசகர் அப்பறம் குடும்ப மருந்துவர்," என்று கூறினான்.
" ஓஓ சட்ட ஆலோசகர் ஏன் இங்க இருக்காரு??" என்று சந்தேகமாக வினவினான் செழியன்.
" காலையில இருந்தே அவர் இங்கதான் இருக்காரு , இனிமே விசாரிச்சா தான் தெரியும் சார்," என்று விடையளித்தான்.
" சரி நீங்க விசாரனையை தொடங்குங்க , முதல்ல அமைச்சரோட pa வை கூப்பிடுங்க," என்று கூறினான்.
ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க மனிதர் உள்ளே நுழைந்தார் தன் பெயர் அஷோக் என்றும் தான் அமைச்சரின் அந்தரங்க காரியதரசி என்றும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.
" சொல்லுக்க மிஸ்டர் அஷோக் நீங்க எத்தனை வருஷமா அமைச்சர் கிட்ட வேலை பார்க்குறீங்க??"சித்தார்த்.
" நான் மூனு வருஷமா இங்க வேலை பார்க்குறேன் சார்." என்று அஷோக் கூறினான்.
" உங்களோட வேலை என்ன?"
" அமைச்சரோட மெயில் செக் பண்றது, அவரோட தொழிற்சாலை சம்பந்தமா எடுக்க வேண்டிய முடிவுகள் நினைவு படுத்துறது அப்பறம் அவரோட சந்திப்புகளை ஒழுங்குபடுத்துறது, இதுதான் முக்கியமான வேலை இதை தவிர அமைச்சர் சொல்ற எல்லா வேலைகளும் செய்வேன்." என்று கூறினான்.
" ஓஓ...சுதீப் பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா?? "
" நல்லாவே தெரியும் சார் சுதீப் சார் ரொம்ப நல்லவரு, அவங்க அப்பா ஒரு அமைச்சரா இருந்தாலும் எந்த வித பந்தாவும் காட்டமாட்டாரு அதே மாதிரி வெளியிடங்கள்ள அமைச்சரோட பையன் னு சொல்லி சலுகைகளும் எடுத்துக்க மாட்டாரு,வேலைகாரவங்க கிட்ட கூட அன்பா தான் பேசுவாரு,அவருக்கு கல்யாணம் னு சந்தோஷமா வந்தோம் இப்படி கல்யாணம் தடைபட்டது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு," என்று உண்மையாக வருந்தினான்.
" ம்... சரி அவரு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு யாரு, இப்ப எங்க இருக்காங்க??"என்று கேட்டான்.
மற்ற கேள்விகளுக்கு தயங்காமல் பதிலலித்த அஷோக் ஒரு நிமிட அமைதிக்கு பின்பு," சார் சுதீப் சார் ஒரு விளம்பர கம்பெனி நடத்துனாரு அதுல மாடலா நடிக்க வந்தவங்க தான் அவங்க, வந்த இடத்துல இரண்டு பேருக்கும் மனசு ஒத்துப்போய் கல்யாணம் வரைக்கும் வந்துட்டாங்க, அவங்களோட சொந்த ஊரு மும்பை இப்ப சென்னை ல தான் தங்கிருக்காங்க, ஆனால்.....," என்று கூறி நிறுத்தினான்.
" ம் ஆனால் என்னாச்சு?? ஏதாவது பிரச்சனை யா??"
" பிரச்சனைலாம் இல்லை இன்னைக்கு அவங்களுக்கு கல்யாணம் எங்க ஐயாவை காணோம் , ஞாயமா பார்த்தா அவங்கதான் அலறி அடிச்சுகிட்டு முதல் ஆளா இங்க ஓடி வந்திருக்கனும் , ...." மீண்டும் அமைதியானான்.
"உங்க மனசுல பட்டதை தைரியமா சொல்லுங்க உங்க பேரு வெளிய வராம நாங்க பார்த்துக்கிறோம்," என்று அதுவரை அமைதியாக இருந்த செழியன் உறுதியளிக்க மேலும் தொடர்ந்தான் அஷோக்," காலையில அமைச்சர் ஐயா க்கு ஒரு தடவை கால் பண்ணாங்க , ஐயா அவங்ககிட்ட என்ன சொன்னாங்க னு தெரியலை ஆனால் அதுக்கப்புறம் அவங்க வீட்ல இருந்து எந்த விதமான தொடர்பும் இல்லை, வருத்தப்பட்டோ கோபமா திட்டியோ கூட யாரும் கால் பண்ணலை அது தான் எனக்கு இப்ப சந்தேகத்தை குடுக்குது." என்று அவனது மனதில் உதித்த எண்ணத்தை கூறினான்.
அவனது கூற்றை கேட்ட மற்ற இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro