பகுதி 4
தன்னுடைய உரையை முடித்ததும் வேகமாக உள்ளே சென்று மறைந்த அமைச்சரை பார்த்த செழியனின் கண்களில் சந்தேகம் தெரிந்தது.
அவரையும் அவரின் உரையையும் மனதிற்குள் ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் சித்தார்தின் குரல் அவனின் சிந்தையை தடை செய்தது," சார் ஆம்புலன்ஸ் டிரைவர வர சொன்னீங்க, உங்களுக்காக அவரு காத்திருக்காரு,"என்ற முறையிடுதலுடன்.
" ஆமா சித்தார்த், எங்க அவரு?, கூப்பிடுங்க,"
" இதோ சார்," என்று கைகளை காட்டினான் சித்தார்த், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கைகளை கட்டி பவ்யமாக செழியன் முன் வந்தார்.
" நீங்க எந்த ஆஸ்பத்திரி க்கு கொண்டுபோவீங்க??"
" ஐயா, நாங்க ஜவஹர் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் ங்க அங்கதான் போவனும்," என்று கூறினார்.ஒரு நிமிட யோசனைக்கு பிறகு," சரி அங்க டாக்டர் கோபால் உங்களுக்காக காத்திக்கிட்டு இருப்பாரு, அவர் கிட்ட ஒப்படிச்சுடனும், இது பெரிய இடத்து விஷயம் , வெளிய தெரியக்கூடாது, புரிஞ்சதா??"என்ற செழியனின் தோரனையில் அந்த முதியவர் சத்தமில்லாமல் விடைபெற்றார்.
தன் மொபைலை எடுத்த செழியன் யாரையோ அழைத்தான், அந்த பக்கம் அழைப்பு ஏற்க்கப்பட்டதும்," ஹலோ டாக்டர் கோபால்?? நான் செழியன் பேசறேன், " என்று உரையாடலை தொடங்கிய செழியன் தான் கூற வேண்டிய விஷயத்தை சுருக்கமாக கூறிவிட்டு," சரி அப்ப உங்களோட கன்ஃபர்மேஷன் காலுக்காக ( confirmation call) நான் காத்திருக்கிறேன்", என்று கூறி கால் ஐ கட் செய்தான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த சித்தார்தை நோக்கியவன் ," இந்த வீட்ல மொத்தம் எத்தனை பேர் வேலை செய்றாங்க?" என்று வினவினான்.
அதுவரை செழியனின் மர்மமான செயல்களை பற்றி யோசித்துக்கொண்டிருந்தவன் தன்னிலை அடைந்து," தோட்ட வேலைக்கு மூனு பேரு, வீட்டை சுத்தப்படுத்த மூனு பேரு, சமையல் வேலைக்கு இரண்டு பெண்கள் அப்பறம் வண்டியோட்ட மூனு பேரு, வாசல் காவலுக்கு நாலு பேரு , மொத்தம் 15 பேரு இருக்காங்க சார், இதுல சமையலுக்கு2 பெண்கள், வீட்டு பராமரிப்புக்கு 1 பெண் ஆக மூனு பெண்கள்,இந்த பதினைஞ்சு பேருக்கும் ஒரு மேனேஜர் அவரு பேரு மனோஜ்" என்று கூறி முடித்தான்.
" ம்ம்ம்ம்ம்...... சரி இப்ப எல்லாரும் எங்க??"
" ஹால்ல உங்களுக்காக காத்திருக்காங்க, "
" சரி வாங்க அவங்களை முதல்ல பாத்துடலாம்," என்று தன் வேக நடையுடன் வீட்டு வரவேற்பறையை அடைந்தான்.
வீட்டுனுள்ளே சென்றவன் கேள்வியுடன் சித்தார்தை நோக்கி," எல்லாரும் இங்க இருக்காங்களா??" என்று வினவினான்.
" இல்லை சார் வாசல் காவலுக்கு இரண்டுபேரு வெளிய நிக்குறாங்க, இன்னும் இரண்டு பேரு சாயந்தரம் ஆறு மணிக்கு தான் வேலைக்கு வருவாங்க, அது போக வீட்டு பராமரிக்குற ஒரு பெண் இன்னைக்கு வரலை, 15 பேருக்கு பதில் ஒன்பது பேருதான் இருக்காங்க," என்று கூறினான்.
" ம்ம்ம்...... மேனேஜர் எங்கே??"என்ற செழியனின் கேள்விக்கு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்
அவன் முன் வந்து நின்று," நான் தான் மானேஜர், என் பேரு மனோஜ்," என்று கூறினான்.
" ஓ.... சரி நீங்க இங்க எத்தனை வருஷமா வேலை செய்றீங்க??"
" நான் 5வருஷமா வேலை செய்றேன் சார்,"
" சரி இவங்க எல்லாரும் இங்க எத்தனை வருஷமா வேலை செய்றாங்க??"
" நாங்க எல்லாருமே 5 வருஷமா இங்க இருக்கோம், ஒன்னாதான் எல்லாரையும் வேலையில எடுத்தாங்க, இங்க வேலை பார்க்குறது பிடிச்சிருக்குறதால யாரும் இங்க இருந்து வெளிய போக நினைக்கலை," என்று கூறினார்.
" சரி இன்னைக்கு வராத பொண்ணு யாரு , ஏன் வரலை இப்படி எதாவது தெரியுமா??"
" பொதுவா லீவ் வேணும்னா ஒரு நாளைக்கு முன்னாடியே சொல்லிடனும், இல்லை அவசர வேலை னா காலையிலயாவது சொல்லனும்,இதுவரைக்கும் எல்லோரும் இதுல இருந்து தவறுனது இல்லை, ஆனால் இன்னைக்கு அந்த பொண்ணு வரலை, போன் பண்ணியும் காரணம் சொல்லலை," என்று கூறி அனைவரையும் சிந்திக்க வைத்தார்.
" சரி அந்த பொண்ண பத்தின விஷயங்கள், போன் நம்பர், புகைப்படம் எல்லாம் வெளிய இருக்குற கான்ஸ்டெபில் கிட்ட குடுத்துடுங்க," என்று கட்டளையிட்டு மற்றவர்களை நோக்கினார், அனைவரும் ஒரு வித பயத்துடனும், பதட்டத்துடனுமே காணப்பட்டனர்.
தன் தொண்டையை ஒரு முறை செறுமிவிட்டு ," நீங்க பயப்பட்ற மாதிரி நான் உங்களை ஒன்னும் செய்ய மாட்டேன், எனக்கு தேவை சில பதில்கள் அவ்ளோ தான், பதட்டப்படாம நான் சொல்றதை கவனிங்க, " என்று கூறி ஒரு சிறு இடைவேளை விட்டு பின் மீண்டும் தொடர்ந்தான்,"இன்னைக்கு இந்த வீட்ல என்ன விஷேஷம் நடக்க இருந்துச்சு னு உங்களுக்கு தெரியுமா??என்று கேட்டு அனைவரையும் பார்த்தான்.
யாரும் தங்களது பதிலை கூற முன்வரவில்லை,அவர்களின் அமைதியை கண்ட செழியன்," மனோஜ் கமான்....," என்று கூற அந்த மனோஜோ," இன்னைக்கு எங்க சுதீப் ஐயா க்கு கல்யாணம் ," எனாறு கூறினார்.
" சரி அது இன்னைக்கு நடக்கலையா??
" தெரியலைங்க ஐயா ,காலையில இருந்து வீடே பரபரப்பா இருக்கு என்ன நடக்குது னு ஒன்னும் புரியலை,"என்று அங்கிருந்த வயதானவர் கூறினார்.
தன்னை கேள்வியுடன் நோக்கிய செழியனை பார்த்த மனோஜ்," இவரு வீட்டு தோட்டத்தை சுத்தப்படுத்துரவரு," என்று அறிமுகம் செய்தான்.
" சரி ஏன் வீடே பரபரப்பா இருந்துச்சு, அப்படி என்னதான் நடந்துச்சு?" என்ற செழியனின் கேள்விக்கு பதில் இல்லை.
பின்பு ஒரு நிமிட அமைதிக்குப்பின்," சார் என் பேரு கமலம் , சமைச்சு வைச்சதை பரிமாறுரதும் அப்பறம் சில சமயம் அவங்களோட அறைக்கே போய் கொடுக்குறதும் என்னோட வேலை, காலையில நான் சுதீப் ஐயா வை எப்பவும் போல எழுப்பி காபி குடுக்க போனேன், ஆனால் ஐயாவோட ரூம் திறக்கவேயில்லை உடனே மேனேஜர் ஐயாகிட்ட சொல்லிடேன், இவ்ளோதான் எனக்கு தெரியும்," என்று அந்த 30 வயது பெண் கூறினாள்.
" ஆமா சார் நானும் போய் பார்த்தேன் ஐயாவோட ரூம் கதவு திறக்கவேயில்லை அப்பறம் உடனே பெரிய ஐயா கிட்ட போய் சொல்லிட்டேன்," என்று மனோஜும் கூறினான்.
" அதுக்கு உங்க ஐயா என்ன சொன்னாரு??" செழியன்
" நல்லா தூங்கிருப்பான் சரி நீ போய் உன் வேலைய பாரு நான் அவனை எழுப்பிக்கறேன் னு சொன்னாரு, அதுக்கப்பறம் கொஞ்ச நேரத்துல ஆசாரி வந்தாரு கதவை உடைக்குற சத்தம் கேட்டுச்சு, ஐயா ரொம்ப பதட்டமா இருந்தாரு, என்னை கூப்பிட்டு எல்லா வேலைக்காரங்களையும் பின்னாடி இருக்குற தோட்ட வீட்ல போய் இருக்கச்சொல்லு நான் சொல்ள வரை யாரும் வெளியே வரக்கூடாது, நீ மட்டும் முன்னாடி இருக்குற என்னோட ஆபிஸ் ரூம் ல காத்திரு னு சொல்லிட்டு யாருக்கோ போன் பண்ணி பேசுனாரு,
" என்று கூறினான்.
அவன் கூறிய அனைத்தையும் கவனத்துடன் கேட்ட செழியன் ," சரி நீங்க ஆபிஸ் ரூம் ல இருக்கும்போது வெளிய நடக்குறது தெரியுமா?" என்று வினவினான்.
" ம்ஹும் தெரியாது சார், சார் வந்து கூப்டதுக்கப்பறப் தான் நான் வெளிய வந்து, இவங்களையும் கூட்டிட்டு வந்தேன்," என்று கூறினான்.
" நேத்து ராத்திரி என்னாச்சு ??வழக்கத்துக்கு மாறா ஏதும் நடந்துச்சா??"என்று செழியன் அங்கு நின்ற ஒரு பையனை நோக்கி கேட்டான்.
" ஐயா..எனக்கு ஒன்னும் தெரியாது, நான் ஒன்னும் பண்ணலை....என்னை விட்ருங்க," என்று அவன் அழுகையுடன் கூற,அங்கிருந்தவர்கள் அனைவரும் மிரட்சியுடன் அவனை பார்த்தனர்.
செழியன் அவனை நோக்கி செல்ல அவன் ஒரு அடி பின்னோக்கி சென்றான், பயத்தில் அவன் முகம் வெளிர அப்படியே மயங்கி சரிந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro