Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 3

தன் மகனின் உயிரற்ற உடலை செழியனிடம் காட்டிய அமைச்சர் சிறு குழந்தை போல் தேம்பி அழ துவங்கினார்.அவரை தேற்ற வழி தெரியாமல் அமைதி காத்த செழியன், அவரை விட்டு விலகி வந்து அந்த அறையை ஆராயத்துவங்கினான்.

பின்பு தன் வழக்கமான மிடுக்குடன் காவல் நிலையத்திலிருக்கும் சித்தார்தை அழைத்து உடனே அமைச்சரின் வீட்டிற்கு வருமாரு ஆணையிட்டு விட்டு மீண்டும் அமைச்சரை அனுகினான்," சார் நீங்க தைரியமா இருக்க வேண்டிய நேரத்தில உடைஞ்சு போகலாமா?? உங்க பையனோட மரணத்துக்கு உங்களுக்கு ஞாயம் கிடைக்கனும் அப்படீனு நீங்க நினைச்சா?? நம்ம உணர்ச்சிகளை அடக்கனும், அப்பறம் முக்கியமா இந்த மரணத்தை பத்தி யாருக்கும் எதுவும் இப்ப சொல்ல வேண்டாம், " என்று கூறி சிறு இடைவேளை விட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த அமைச்சர் ," கமிஷனர் சார் நீங்க சொல்றது சரிதான் ஆனால் என்னால என்னை கட்டுபடுத்த முடியலையே??" என்று மீண்டும் உடைந்தார்.

இம்முறை செழியன் கலங்கவில்லை மாறாக அவரின்.அருகில் அமர்ந்து அவரின் கைகளை பிடித்துக்கொண்டான்," சார் என்னோட பத்து வயசுல இழந்த என் தந்தைகாக இன்னும் நான் ஒரு சொட்டு கண்ணீர் விடலை, அதுக்காக அவர் மேல பாசம் இல்லாம இருக்கேன் னு அர்த்தம் இல்லை, என்னோட உணர்ச்சிகளை நான் வெளிக்காட்ட விரும்பலை, அதே மாதிரி தான் இப்ப உங்க நிலையும் , உங்க மகனோட இறப்பை பத்தி நீங்க அதிகமா வெளிப்படுத்துறது நல்லது இல்லை, அது மட்டும் இல்லை இப்ப நான் என்ன செய்ய சொல்றேனோ அதுமாதிரியே நீங்க கீழே போய் உங்க உறவினர்கள் கிட்ட பேசனும், நல்லா நியாபகம் வச்சிக்கோங்க உங்க உணர்ச்சிகளை இந்த அறையிலயே புதைச்சுடனும்," இவ்வாறு கூறியவன் தன் ஆறடி உயரத்தில் நிமிர்ந்து நின்றான்.

அந்த அறையிலிருந்து வெளியேறிய செழியனை எதிர்கொண்ட சித்தார்த் மரியாதை நிமிர்த்தமாக சலியூட் அடித்தான்.

" வாங்க சித்தார்த்,அமைச்சர் என் கிட்ட தனிப்பட்ட முறையில கொடுத்த புகாரை  விசாரிக்க எனக்கு உதவி செய்ய நீங்க தயாரா?", என்ற கேள்வியில் சித்தார்தை பேச்சிழக்கச்செய்தான் செழியன்.

" என்ன சார் இப்படி கேக்குறீங்க காத்திருக்கேன் சார் அதுக்காக," என்று நெகிழ்ச்சியுடன் கூறினான் சித்தார்த்.

" ம்ம் , சரி அதுக்கு இப்ப நம்ம பேசபோற விஷயங்கள் நம்மை விட்டு வெளி போகக்கூடாது, எப்பவும் இதுல மனசுல வச்சிக்கோங்க, முதலில்  நீங்க ஆம்புலன்ஸ் க்கு கால் பண்ணி இங்க வரவைங்க, அப்பறம் வெளியே காத்திக்கிட்டு இருக்குரவங்கலை முக்கியமான ஆளுங்களை மட்டும் தோட்டத்துக்குள்ள காக்க வைங்க மத்தவங்களை திருப்பி அனுப்பிடுங்க, வீட்டுல வேலை செய்றவங்க அத்தனை பேரையும் , வீட்டு உறுப்பினர்களையும் ஹால்ல வரசொல்லிருங்க, நம்ம டிபாண்மென்டோட கைரேகை குழுவ உடனடியா இங்க வரவைங்க, கமான் மேக் இட் ஃபாஸ்ட், " என்று மூச்சுவிடாமல் உத்தரவு பிறப்பித்துவிட்டு திரும்ப யத்தனித்த செழியனை நிறுத்தியது சித்தார்தின் அழைப்பு," சார் , டிபார்ட்மெண்ட ல என்னைவிட அனுபவமுள்ளவங்க இருக்கும்போது, என்னை ஏன்??" , அதற்கு மேல் கேட்க அவனுக்கு தைரியம் இல்லை.

நிதானமாக அவனை கூர்பார்வை பார்த்த செழியன்," மிஸ்டர் சித்தார்த், எனக்கு தேவை அனுபவம் இல்லை நம்பிக்கை, அது உங்க கிட்ட கிடைக்கும் னு நம்பறேன்," என்று கூறி வேகமாக அவ்விடம் விட்டு அமைச்சரை நோக்கி  சென்ற செழியனை புதிய மனிதராய் பார்த்தான் சித்தார்த்.

செழியனின் கட்டளைப்படி அனைத்தும் முடித்துவிட்டு செழியனினிருந்த அறைக்கு சென்றான் சித்தார்த், அங்கே செழியன் அமைதியாக அறையை அளவிட்டுக்கொண்டிருப்பதை பார்த்து அவனருகில் சென்று ," சார் தோட்டத்துல எல்லாரும் அமைச்சருக்காக காத்திருக்காங்க, ஆம்புலன்ஸ் வந்துகிட்டு இருக்கு, ஹால்ல உங்களுக்காக எல்லோரும் காத்திருக்காங்க," என்று கூறனான்.

அவனை திரும்பி நோக்கிய செழியன்," சித்தார்த் உங்களுக்கு இது என்ன கேஸ் னு தெரியுமா? என்று வினவினான்.

இந்த கேள்வியை எதிர்பாராதவன் போல ஒரு நிமிட அமைதிக்கு பின்," தெரியாது சார் நீங்க கூப்டீங்க நான் வந்துட்டேன்," என்று மரியாதையுடன் கூறினான்.

அவனின் பதிலில் ஒரு நிமிடம் திகைத்தவன் அவனிடம்," இது தப்பு சித்தார்த், இந்த தடவை சரி ஆனால் இதை திரும்ப செய்யாதீங்க ,"என்று எச்சரித்துவிட்டு மேலும் தொடர்ந்தான்,"அமைச்சரோட பையனுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆனால் அவன் இன்னைக்கு காலையில இறந்த நிலையில இருந்திருக்கான், இந்த மரணத்தில மர்மம் இருக்குறதா அமைச்சர் நினைக்கிறார். அதுனால இந்த இறப்பை பற்றி வதந்திகளை தவிர்க்கவும் உண்மையை கண்டுபிடிக்கவும் என்னை நியமிச்சிருக்காரு, " என்று கூறி முடித்தான்.

செழியனின் பேச்சிலிருந்து இந்த கேஸ் தனக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று யூகித்த சித்தார்த்," சரிங்க சார் உங்களோட நம்பிக்கை எப்பவும் வீண்போகாம நான் நடந்துக்குவேன்," என்று கூறினான்.

அவர்களின் இருவரும் மாடி பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்,ஆனால் செழியனின் கூர் விழிகள் சுற்றுபுறத்தை ஆராய தவறவில்லை, சித்தார்த் கூறியது போல வாசலில் நிறைந்திருந்த கார்கள் ஒழுங்குடன் பார்க் செய்யப்படிருக்க , தோட்டத்தில் இருபது பேர்கள் கொண்ட கூட்டம் காத்துக்கொண்டிருந்தது, அப்பொழுது உள்ளே நுழைந்த ஆம்புலன்ஸை பார்த்த செழியன் சித்தார்தை அழைத்துக்கொண்டு சுதீபின் அறை நோக்கி சென்றான்.

அங்கே உள்ள நிலையை ஆராய்ந்துவிட்டு சித்தார்திடம் ," இந்த அறையை நல்லா பாரு உனக்கு என்ன தெரியுதோ அதை குறிச்சு வச்சுக்கோ , இங்க நடக்குற ஒவ்வொரு வித்தியாசமான விஷயத்தையையும் கவனிக்க தவறாத," என்று கூறி அமைதியாக நடப்பவைகளை நோட்டமிடலானான்.

ஒரு வெள்ளை துணிபோர்த்தி ஸ்டெச்சரில் இருவர் தூக்கி செல்ல அமைதியாக தன் இல்லம்விட்டு  சென்றான் சுதீப், திருமணம் முடிந்து தன் துணையுடன் செல்ல வேண்டிய தருணத்தில் தனியாக உயிரற்று செல்லும் அவனை கண்ட சித்தார்த்திற்கு அவனையும் மீறி கண்கள் கலங்கியது.

தோட்டத்தில் அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த அனைவரும் இக்காட்சியை கண்ட போதும் இறந்தது யார் என்ற குழப்பத்தில் இருந்தனர்.அவர்களின் குழப்பத்திற்கு மேலும் குழப்பம் சேர்க்க அமைச்சர் தன் வழக்கமான கம்பீர நடையுடனும் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடனும் தன் பாதுகாவலர்கள் பின்தொடர அங்கே வந்து சேர்ந்தார்.

" இங்கு  என் மகனின் திருமணத்திற்காக வருகைதந்திருக்கும்  அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், " என்று தன் சிம்ம கர்ஜனையில் உரையை துவங்கிய அவர், ஒரு சிறு இடைவேளை விட்டு ," தவிர்க்க முடியாத சந்தர்பங்களினால் என் மகனது திருமணம் தடைபற்றது என்பதனையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், இதை பற்றி மேலும் விவரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும், எங்களால் ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு  வருந்துகிறோம்," என்று தன் உரையை முடித்துக்கொண்டு மின்னலென உள்ளே சென்றுவிட்டார்.

அவரிடம் அதற்கு மேல் கேட்க தைரியமில்லாததால் அனைவரும் தத்தமது இல்லம் நோக்கி சென்றனர்.

அமைச்சரோ  செழியனின் மனதில் தனக்கெதிரான வாக்குமூலத்தை தன் உரையின் மூலம் நிகழ்ந்ததை அறியாதவராய் செழியனின் வரவிற்காக ஹாலில் மற்றவர்களுடன் காத்திருந்தார்.

  

















Bạn đang đọc truyện trên: Truyen247.Pro