பகுதி -2
கமிஷனராக இளஞ்செழியன் பதிவியேற்று இன்றுடன் ஒருவாரம் முடிவடைந்த நிலையில் அவனின் செயல்பாடுகள் அங்குள்ள அனைவரையும் மிரள செய்தது.
அந்த க்ரைம் பிரிவில் வேலை செய்யும் அனைவரின் குடும்பம் முதல் அவர்களின் நடத்தை வரை அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான்.அவனின் கண்பார்வையிலிருந்து தப்பிப்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இல்லாமல் இருந்தது.
அவனை யாரும் நெருங்க முடியாத அளவு நெருப்பாக அவன் இருந்தான். அவனின் செயல்களில் நேர்த்தியும் யாருக்கும் அடங்காத நேர்மையின் நிமிர்வும் ஒளிர்ந்தது.
சென்னையில் நடந்த கலவரங்களையும் களவுகளையும் ஒரே வாரத்தில் அடக்கி வைக்க அவன் திரையுலக நாயகன் அல்லவே. கொஞ்சம் கொஞ்சமாக அவனது பிரிவை அவனது கட்டுக்குள் அடக்கி வைத்துக்கொண்டிருந்தான். அதன் பலனாக க்ரைம் பிரிவில்.வேலை செய்பவர்கள்.அன்பளிப்பு வாங்குவது சுத்தமாக நின்று போனது. இதனால் சிலர் அவன் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்த தக்க சமயம் நோக்கி காத்திருந்தனர்.
அன்றும் வழக்கம்போல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அங்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அந்த வழக்கத்தை மாற்றி எல்லோரிடமும் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.
**********
அந்த பெரிய வீட்டின் முன் " மத்திய அமைச்சர் ராஜவேலு " என்ற எழுத்துக்கள் மின்னியது. வீட்டின் வாயிலை அடைத்துக்கொண்டு பெரிய இரும்பு கேட் பூட்டியிருக்க அதன் முன்னே தங்களின் பெரிய மீசைகளை நீவியபடி இரண்டு செக்யூரிடிகள் நின்றுக்கொண்டிருந்தனர்.
அந்த கேட்டை அடைத்துக்கொண்டு பல விதமான கார்கள் நின்றுகொண்டிருந்தது. அதன் உள்ளே பலரும் அமர்ந்த வண்ணம் படபடப்புடன் காணப்பட்டனர், அதன் டிரைவர்கள் மட்டும் வாசலில் நின்றுகொண்டிருந்த செக்யூரிட்டிகளிடம் வாதம் செய்து கொண்டிருக்க அந்த விசுவாசிகளோ தங்கள் முதலாளியின் கட்டளையை மீற தயாராக இல்லை.
அப்பொழுது வாசலில் சைரன் வைத்த ஜீப் ஒன்று வந்து நிற்க அதிலிருந்த துணை கமிஷனர் சரவணபெருமாள் கேட்டை திறக்குமாறு உத்தரவிட்டார் , அவரை நெருங்கி வந்த அந்த செக்யூரிட்டி," சார் நீங்க யாரு? யாருக்குமே கதவை திறக்க கூடாது னு ஐயா வோட உத்தரவு ," என்று பணிவுடன் விளக்கினான்.
அதை கேட்ட சரவணபெருமாள்," நான் அஸிஸ்டன்ட் கமிஷனர் சரவணபெருமாள் உங்க ஐயா தான் எங்களை வரசொன்னாரு எங்களை உள்ள விடு விஷயம் ரொம்ப பெரிசு," என்று அதிகார குரலில் பேசினார்.
அதற்கு சற்றும் சலைக்காத அந்த செக்யூரிட்டி, " சார் கமிஷனர் வந்தா மட்டும்தான் உள்ள விடனும் அப்படீங்கிறது தான் எங்க ஐயாவோட கட்டளை எனானால அதை மீற முடியாது," என்று குரலில் இப்பொழுது உறுதியுடன் தெரிவித்தான்.
அவனிடம் பேசி எந்த பலனும் இல்லை என்று தெளிவாக புரிய சரவணபெருமாள் அமைச்சரின் வீட்டு எண்ணிற்கு அழைத்தார், அமைச்சரின் காரியதரசியிடன் தன் வருகையை தெரிவிக்க அவரோ கமிஷனரை மட்டுமே உள்ளே வர அமைச்சர் அனுமதித்ததாக கூறினார் , அவரை இடைமறித்த சரவணபெருமாள்," சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க கமிஷனர் சென்னைக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது, அவருகிட்ட நெருங்க கூட முடியாது , கெடுபுடி அதிகம் ," என்று தன் நிலையை எடுத்து கூறினார்.
அவரின் பேச்சை கவனமாக கேட்ட அந்த காரியதரசி ," சார் விஷயம் ரொம்ப பெரிசு , நீங்க கமிஷனர வர வைக்கிறவழிய பாருங்க ," என்று கூறி முடித்தார்.
வேறு வழியில்லாமல் கமிஷனரை நேரில் பார்க்க சென்றார் சரவணபெருமாள்.அவரின் கை கால்கள் உதறல் எடுக்க மனதை திடப்படுத்திக்கொண்டு அவர் முன்னே சென்றார்.
அவரின் வருகையை உணர்ந்த செழியன்," என்ன சரவணபெருமாள்?? ஏதோ சொல்ல வந்தீங்க போல ,"என்று சாதாரண குரலில் கேட்கவும் சிறு தைரியம் கொண்டவராக ," சார் நம்ம மத்திய அமைச்சர் ராஜவேலு வோட வீட்ல ஒரு சம்பவம் நடந்திருச்சு, அதை கேட்டதும் நாங்க நேர்ல போனோம், ஆனால் கமிஷனரை மட்டும் தான் உள்ள விடனும் அமைச்சரோட கட்டளையாம், அதனால எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை," என்று தான் கூற வந்ததை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
தன் கூற்றை கேட்ட செழியன் கோபப்படுவான் என்று எதிர்பார்த்த சரவணபெருமாளிற்கு ஏமாற்றமே மிஞ்சியது, "அப்படியா வாங்க போலாம்," என்று கூறிய செழியன் தன் வேக நடையுடன் வாகனத்தை அடைந்தான்.
நிமிடத்திற்குள் அவன் வாகனம் அமைச்சரின் வீட்டினுள்ளே நுழைந்நது.
அங்கே நிலவிய மயான அமைதியினால் செழியனின் பார்வை இன்னும் கூர்மையாக அமைச்சர் முன் சென்று நின்றான்.
அவன் அருகே வரவும் அவனை நிமிர்ந்து பார்த்த அமைச்சரின் கண்கள் கலங்கி இருந்தது.மெதுவாக எழுந்து அவனின் எதிரில் நின்று பேசதுவங்கினார் அமைச்சர்," வணக்கம் கமிஷனர் சார், உங்களை இங்க வரவைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க ஆனால் எனக்கு வேற வழி தெரியவில்லை , " என்று கூறி நிலைமையை விவரிக்க துவங்கினார்.
" என்னோட மூத்த பையன் சுதீப் க்கு போன வாரம் நிச்சையதார்த்தம் நடந்திச்சு இன்னைக்கு கல்யாணம் பண்ணலாம் னு தீர்மானிச்சிருந்தோம், பெண் வீடு வட இந்தியர்கள் , என் பையன் ஆசைபட்டதால அவங்க முறைப்படியே திருமணம் செய்யலாம் னு முடிவு செஞ்சோம், அதன்படி இத்த ஒரு வாரம் முழுசும் தினமும் விசேஷம் நடந்துக்கிட்டுதான் இருக்கு, இன்னைக்கு காலையில 8 மணிக்கு முஹூர்த்தம் அதனால 5 மணிக்கு செய்ய வேண்டிய பூஜைக்கு அவனை எழுப்ப போன வேலைகாரன் கதவை ரொம்ப நேரம் தட்டியும் சுதீப் கதவை திறக்கலை னு என்கிட்ட வந்து சொன்னான்."அவர் கூற கூற அவர் கண் முன் காலையில் அவர் கண்ட காட்சி விரிந்தது.
வேலைகாரனின் கூற்றில் கலவரமடைந்த அமைச்சர் வேகமாக தன் மகனின் அறையை அடைந்து பலம்கொண்டு தாக்கினார், அதுவும் பலனளிக்காத நிலையில் கதவை உடைக்க ஏற்பாடுகள் செய்து 10 நிமிடத்தில் கதவை உடைத்து அவர் மட்டும் உள்ளே சென்றார்.
அவரின் மகனின் அறையிலோ சுதீப் கட்டிலில் எந்த சலனமும் இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு நிம்மதி மூச்சுவிட்ட அமைச்சர் அவனின் அருகே சென்று அவன் கைகளை தொட அது சில்லிட்டிருந்தது.வேகமாக மருத்துவரை அழைத்து பரிசோதித்த பின் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக செய்வதறியாமல் சிலையானார் .
அவர் கூறி முடித்ததும் அவரை பார்த்த செழியன் , " என்னை எதுக்காக வரச்சொன்னீங்க சார், ஏற்கனவே எங்க டிபாட்மென்ட் ஆளுங்க உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க , இதை நீங்க அவங்க கிட்டயே சொல்லிருக்களாமே " என்று கூறினான்.
அவனை விரகத்தியுடன் நோக்கிய அமைச்சர்," யாரையும் என்னால நம்ப முடியலை சார், எல்லோரும் பணத்திற்கு விலை போறவங்க, என்னோட வீட்ல வேலை பார்குறவங்கல்ல இருந்து நான் தாலி கட்டிய மனைவி வரை யாரையும் நம்பல, உங்களை பத்தியும் உங்க நேர்மையை பத்தியும் எனக்கு நிறைய தெரியும் அதனால என் பையனேட கேஸை நீங்க உங்க தலைமையில விசாரிப்பீங்களா......?" என்று உடைந்த குரலில் வினவினார்.
அவர் செழியனிடம் கட்டளை தொனியில் பேசியிருந்தாலோ , பாசமாக கேட்டிருந்தாலோ அவனது பதில் வேறாக இருந்திருக்களாம் , ஆனால் அவரின் இறைஞ்சுதல் செழியனிற்கு அவனின் தந்தையை நினைவு கூற அமைதியாக தலையை மட்டும் ஆட்டி சம்மதம் தெரிவித்து விட்டு , ஆறுதலாக அமைச்சரின் கரங்களை பற்றினான். மேலும் தன் உணர்ங்சிகளை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு நிமிடத்தில் பழைய நிலைக்கு திரும்பி இருந்தான்.
தன் கம்பீரத்தை மீட்டெடுத்த செழியன்," சரிங்க சார் உங்க உணர்வுகளுக்கு நான் மதிப்பு கொடுக்குறேன். இந்த விஷயத்தை என்னோட நேரடி கண்கானிப்புலயே வச்சிக்கறேன், ஆனால் என்னோட விசாரனையில எந்த வித குறுக்கீடும் இருக்க கூடாது , என்று கூறினான்.
" கண்டிப்பா இருக்காது, அதற்கு நான் உத்தரவாதம்," என்று உறுதியளித்தார்.
அவரை கேள்வியுடன் நோக்கிய செழியன்," நான் இப்ப என் கடமையை துவங்களாம் இல்லையா? எனக்கு உங்க பையனோட.அறையை காட்டுங்க," என்று கட்டளையிட்டான்.
அதைபற்றி அதுவரை நினைப்பில்லாதவர் அமைதியாக அவனை பின்தொடர சொல்லி தன் மகனின் அறை நோக்கி முன்னேறினார்.
அங்கே அறையில் அவர்களை வரவேற்றது சுதீப் சந்தரின் உயிரற்ற உடல்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro