Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 15

"சொல்லுங்க மிஸ்டர் உதய் வேற எந்த விஷயத்தில உங்களை உங்களோட நெருங்கிய நண்பர் நம்பலை??" என்று தனது கேள்வியை மீண்டும் அழுத்தமாக கேட்டான் செழியன்.

" சார் அதெல்லாம் ரொம்ப பழைய பிரச்சனை இப்ப இந்த நேரத்தில அது எதுக்கு??" என்று தயங்கி கூறிய உதயை தன் கூர் விழிகளால் அளவெடுத்த செழியன் ," கேட்ட கேள்விக் பதில்," என்று கேட்டான் செழியன் கேட்டான் என்பதைவிட உறுமினான் என்ற சொல்லே சரியா இருக்கும்.

அப்பொழுதும் அமைதியாக இருந்த உதய், பின் மெதுவாக ," சார் நானும் சுதீபும் ரொம்ப க்ளோஸ் இரண்டுபேருக்கு நடுவுலயும் எந்த வித ஒளிவு மறைவேமே  கிடையாது. ஆனால் இடையில என்ன ஆச்சுனே தெரியலை சுதீப் என்னை விட்டு விலகி போறமாதிரி ஒரு உணர்வு , நானா போய் பேசுனாலும் சந்தேகம் வராதமாதிரி பேசிட்டு போயிடுவான். இதுக்கு என்ன காரணம் யாரு காரணம்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை," என்று குரலில் உண்மையான வருத்தம் தெரிய கூறினான்.

" ம்... அவன் உங்களை நம்பலை னா அப்பறம் ஏன் உங்ககூட சேர்ந்து கம்பெனி தொடங்கனும்?? "

" சார் இந்த கம்பெனி எங்க சின்ன வயசு கனவு அப்பவே நாங்க இந்த கம்பெனி பத்தி நிறைய பேசுவோம் பேரு கூட அப்பவே வச்சுட்டோம் அதனால அதுல இருந்து அவன் விலக நினைக்கலை னு நான் நினைக்கிறேன்."

" சரி ஆனால் உங்க மத்த இரண்டு நண்பர்களையும் ஏன் அதுல பார்னரா சேர்கலை??"

" உமேஷ்க்கு இதுல விருப்பம் இல்லை ரித்தீஷ்க்கு அவங்க அப்பாவோட தொழில பார்த்துக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கும்."

" சோ உங்ககூட தான் சுதீப் அதிக நேரம் இருந்திருக்காரு ?? இல்லையா??"

" ம்...அப்படியும் சொல்லலாம் சார்."

" சுதீப்க்கு தொழில்முறைல எதுவும் விரோதிகள் அப்பறம் சொந்தவாழ்க்கையில எதிரிகள் அந்த மாதிரி யாரும்.இருக்காங்களா??"

" இல்லை சார் எனக்கு தெரிஞ்சவரை அவன் விரோதிகளை சம்பாதிச்சுக்கமாட்டான்." என்று கூறிய உதயிடம் பொய்மை இருப்பது போல தெரியவில்லை, அதனால் சித்தார்தை அழைத்த செழியன்," சித்தார்த் உதய் யை ரூம் நம்பர் 7 ல உக்கார வைச்சுட்டு ரித்தீஷை வரச்சொல்லுங்க,"என்று கட்டளையிட்டான்.

அவன் கூறியபடி ரித்தீஷை அவன் முன்  அமரவைத்த சித்தார்த் அவ்விடம் விட்டு சென்றான்.தான் தனியாக விசாரிக்க விரும்புவதை உணர்ந்த கொண்ட சித்தார்தின் புத்திசாலி தனத்தை  செழியனின் மனம் பாராட்டியது.பின் மெதுவாக தன் முன் அமர்ந்திருக்கும் ரித்தீஷை அளவெடுத்தன அவனது விழிகள்.

முகத்திலும் உடையிலும் பணத்தின் ஆளுமை தெரிந்தது. உட்கார்ந்திருக்கும் தோரணையில் ஒரு.அலட்சியம் தெரிய அவனது கண்களை கூலர்ஸ்.மறைத்திருந்தது.

" ஒரு கமிஷனர் முன்னாடி இப்படிதான்.உட்காருவாங்களா மிஸ்டர் ரித்தீஷ்??"

" ஏன் சார் நான் நல்லா தானே உட்கார்ந்து இருக்கேன் இந்த பழைய சேர்ல இதுக்குமேல கால் மேல கால் போட்டா உட்கார முடியும்?" என்று நக்கலாக வினவியவனை கோபத்துடம் நோக்கிய செழியன், " மைன்ட் யுவர் டங் அன்ட் சிட்.ப்ராபர்லி வித் ரெஸ்பெக்ட்," என்று அடக்கப்பட்ட கோபம் குரலில் தெரிய சிங்கமென கர்ஜித்தான்.

தான்.அணிந்திருந்த கூலர்ஸை அதே அலட்சியத்துடன் கழட்டிய ரித்தீஷ்  அதை தன்.கைகளில் வைத்துக்கொண்டான்.அவனது செய்கை செழியனிற்கு ஒரு.புறம்.வியப்பளித்தாலும் மறுபுறம் சந்தேகம் கொள்ள செய்தது.அதை ஒதுக்கி.தள்ளியவன் அவனிடம் தன் விசாரனையை தொடங்கினான்.

அவனிடமிருந்து எந்த வித புதிய தகவலும் கிடைக்காத நிலையில் அவனையும் உதயுடன் அமரசெய்துவிட்டு கடைசியாக உமேஷை வரவழைத்தான்.ரித்தீஷிற்கு நேர் எதிராக உமேஷ் மிகுந்த பயத்துடனும் படபடபபுடனுமே காணப்பட்டான்.

" சொல்லுங்க உமேஷ்."என்று கூறிய செழியனை புரியாத.பார்வை பார்த்த உமேஷ்," என்ன சார் சொல்லனும்?" என்று வினவினான்.

" அதான் நீங்க ஏதோ எங்கிட்ட சொல்ல.விரும்பிறீங்களாமே அதை சொல்லுங்க,"

" இல்லை சார் அப்படி நான் யாருகிட்டயும்.சொல்லலையே உங்ககிட்ட யாரு.சொன்னா??"

" உங்க ப்ரெண்ட்ஸ் தான் சொன்னாங்க , எல்லா கேள்விக்கும் பதில் உமேஷ்க்கு.தான் தெரியும் அப்படீனு," என்று கூறி அவன் முகத்தை ஆராய்ந்தான்.

அவனது முகத்தில் பயரேகை தெரிய பதட்டத்துடன்," சார் எனக்கு எதுவும் தெரியாது, நான் சுதீப் கூட க்ளோஸ் கூட இல்லை  ரித்தீஷ் தான் எங்கிட்ட சொன்னான்," என்று கூறி நாக்கை கடித்துக்கொண்டான்.

அவன் என்ன சொன்னான் என்பதை.பற்றி கேட்காத செழியன் குரலில் வருத்தத்துடன்  " ஓ...அப்ப ரித்தீஷ் பார்த்த வேலையா இது?? ஆனால் ஏன் உன் பேரை சொல்லனும்?? அவன் உன் க்ளோஸ்.ப்ரென்ட்.இல்லையா ??" என்று வினவினான்.

" என் க்ளோஸ் ப்ரென்ட் தான் சார் அதனால தான் நீங்க என்ன கேட்டாலும் நாம்ம ரெண்டுபேரும்.ஒரே மாதிரியே சொல்லுவோம் அப்பதான் சந்தேகம் வராது னு சொன்னான்."

" ஓ....ஆனால் நாங்க தான் சந்தேகப்படவே இல்லையே??"

" அப்பறம் எதுக்கு சார் இந்த விசாரணை??"

" இது சும்மா சுதீப் பத்தி தெரிஞ்சுக்கதான்," என்று.கூறியவன் ," சுதீப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க என்று கூறினான்.

" சுதீப் ரொம்ப நல்லவனா எல்லாருகிட்டயும்.காட்டிப்பான்.ஆனாலீ ரொம்ப நல்லவன்லாம் இல்லைசார்.அவனுக்கு சில கெட்ட பழக்கங்களும் இருக்கு," என்று.கூறி நிறுத்தினான்.

" கெட்ட பழக்கமா??எந்த மாதிரி??"

" ம்...யாரும் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது , ,அவங்களுக்கு இடையில சண்டை மூட்டி விட்டுவான்,"

"ஓ.....ஆனால் இதுவரை யாரும் இப்படி சொன்னது இல்லையே...."

" அதான் சார் சுதீப் யாருக்கும் அவனைபத்தி முழுசா தெரியாது,"என்று பெருமையடித்துக்கொண்டான் உமேஷ்.

" சரி உமேஷ் நைஸ் டு மீட் யு ," என்று கூறிவிட்டு அவனையும் உதய், ரித்தீஷின் அறையில் அமரவைக்குமாரு சித்தார்திடம் கட்டளையிட்டான்.

மூவரையும் அறை எண் ஏழில் அமரவைத்துவிட்டு செழியனின் அறைக்குள் நுழைந்த சித்தார்த் அங்கே ஆழ்ந்த சிந்தனை யில் அமர்ந்திருந்த செழியனிடம்," சார் நீங்க சொன்ன.மாதிரி அவங்கஸமூனு பேரையும்.உள்ள உட்காய வைச்சுட்டேன்.அவங்க மொமைலை ராம் சார்.கிட்ட கொடுத்துட்டேன்," என்று கூறினான்.

தன் சிந்தனையிலிருந்து வெளியேவந்த செழியன்," இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் னு ராம் சொன்னான்??"

" அது தெரியலை சார்."

" ஓ...சரி நான் கேட்டுக்கிறேன் , அவங்க மூனுபேரும் மொபைலை கொடுக்க தயங்கலையா??"

" இல்லை சார் மெடல் உள்ளை கொண்டு போகக்கூடாது னு சொன்னதால கொடுத்துட்டாங்க," என்று கூறினான்.

" சரி நீங்க அந்த ரூம் போங்க நான் வந்திடறேன்," என்று கூறிய செழியன் ராமிற்கு அழைத்தான்.

" ராம் அந்த மூனு மொபைல் வேலை முடிய இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்??"

".............."

" சரி எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் முடி." என்று கூறி மொபைலை வைத்தவன் நேரே ரூம் நம்பர் 8 என்று இருந்த அறைக்குள் நுழைந்தான். அவனை பார்தத்தும் அங்கிருந்த காவலர் அவனுக்கு சலூட் செய்ய அதை ஒரு.தலை அசைப்புடன் பெற்றுக்கொண்டவன் ," என்ன ஏதாவது பேசுனாங்களா?? " என்று அங்கிருந்த மூவரையும் பார்த்து கேட்டான்.காரணம் அது ஒரு விசாரணை அறை அந்த பக்கம் பேசுவதை கேட்க அந்த அறையினுள் ஸ்பீக்கர்.பொருத்தப்பட்டிருக்கும் அவர்களது செயலை கவனிக்க ஒரு இருவழி கண்ணாடி பொறுத்தப்பட்டிருந்தது.உள்ளே இருப்பவர்களுக்கு நாம் கண்கானிக்கப்படுகிறோம் என்பது தெரியாது.

" உள்ள வந்ததும் உதய் என்னை ஏன்.இங்க உட்கார சொன்னீங்கனு கேட்டாரு அதுக்கு நான் இங்கதான் ஏசி இருக்கு னு சொன்னேன். அப்பறம் வந்த இரண்டுபேரும் அதையே தான் கேட்டாங்க எல்லாருக்கும் ஒரே பதில் தான் சொன்னேன்.வேற எதுவுமே கேட்கலை ," என்று தனக்கு அறிந்தவற்றை கூறி முடித்தான் சித்தார்த்.     

" உள்ளை வந்ததுக்கு அப்பறமா எதுவும் பேசுனாங்களா?? விவாதிச்சாங்களா?? எர்று வினவிய செழியன் அவர்கள் மூவரையும் நோட்டமிட்டது. அந்த மூவரும் அமைதியாக தங்களது இருக்கையிலீ அமர்ந்திருந்தனர். நொடிக்கு ஒரு.முறை அந்த அறையை ஆராய்ச்சி பார்வை பார்க்க தவறவில்லை.

செழியனின் கேள்விக்கு ," சார் அந்த ஊதா ஷர்ட்.போட்டவரு சிவப்பு சட்டை போட்டவருகிட்ட ஏதோ பேச வந்தாரு சார் ஆனால் அதுக்கு அந்த சிவப்பு சட்டை காரரு கண்ணால வேண்டாம்னு சொன்னதும் அமைதி ஆகிட்டாரு, அப்பறம் கடைசியா.வந்தவரு வந்தவுடனே என்னமோ பெருசா பேசுனாரு ஆனால் அவரு.என்ன பேசுனாரு.னு எனக்கு புரியலை .ரெகார்ட் ஆகியிருக்கு நீங்க வேணா கேட்டு பாருங்க," என்று கூறி முடிக்கையில் அந்த அறையினுள் நுழைந்த ராம்," கமிஷனர் சார் அந்த மூனு பேரோட மொபைலையும் பார்த்துட்டேன் உங்க காவலர்.கிட்ட கொடுத்துட்டேன், வெரி இன்டரெஸ்டிங் அன்ட் ஷாக்கிங் நியூஸ் கிடச்சிருக்கு.   அவ்ஙகளை அனுப்பிட்டு வாங்க .நம்ம உடனே பேசனும்," என்று படபடப்புடன் கூற அந்த படபடப்பு அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. அம்மூவரையும் வெளியே.அனுப்பிவி்ட சித்தார்த்திடம் கூறிய செழியன் ராமை அழைத்துக்கொண்டு தன் அறை நோக்கி சென்றான்.    

************

அடுத்த நாள் காலை சூரியன் தன் வழக்கமான பளிச்சிடும் ஒளியில் இந்த பூமியின் இருளை தன் கதிர்களால் விரட்டிக்கொண்டிருக்க காவல் நிலையத்திற்கு செல்ல பலரும் ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தனர்.

அந்த காவல் நிலையத்தின் கான்ஃபிரன்ஸ் அறையில்  அமைச்சர் குடும்பம், மாலினியின் குடும்பம், சுதீபின் நண்பர்கள் மூவர், சுதீப் வீட்டில் வேலை செய்பவர்கள், சுதீபின் உடலை பரிசோதித்த மருத்துவர், சித்தார்த், ராம் என்று அனைவரும் செழினின்.வரவிற்காக காத்துக்கொண்டிருந்தனர். பலரும் பல மனநிலையில் இருக்க அங்கே.அமைதி மட்டுமே ஆட்சி.செய்தது.

புயலென கையில் கோப்புடன் உள்ளே நுழைந்த செழியன் ," ஹாய் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம் , உங்களை யெல்லாம் ரொம்ப நேரம் காக்க வைச்சதுக்கு சாரி அன்ட் ஃபைனலி இன்னைக்கு உங்ககிட்ட எல்லா உண்மையும் சொல்ற.நேரமும் வந்துடுச்சு," என்று உற்சாகமாக  கூறிய.செழியனை அனைவரும் ஒரு.வித பதட்டத்துடனும் பயத்துடனுமே பார்த்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro