Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 14


ஹலோ நண்பர்களே.....

சத்தியமா இது எப்படி சாத்தியம் னு எனக்கு தெரியலை சரியா அப்டேடே போடாம இருக்கிற எனக்கு நீங்க கொடுத்த பெரிய பரிசு இது  உங்களோட இந்த ஆதரவுக்காக எப்படி நன்றி சொல்றதுனே எனக்கு தெரியலை . இந்த கதையை படித்து வோட் மற்றும் கமெண்ட் போட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.

வோட் செய்யாமல் கமெண்ட் போடாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் சைலன்ட் ரீடர்சுக்கும் என்.நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




மாலினியின் வறண்ட புன்னகையை பார்த்த செழியன் ," என்னாச்சு ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?? நான் எதுவும் தப்பா கேட்டுடேனா??," என்று வினவினான்.

" இல்லை தப்பாலாம் கேட்கலை உதய் அண்ணாதான் சுதீபோட க்ளோஸ் னு யாரு சொன்னா உங்களுக்கு??"

" சுதீப் பேசுறதுல பாதி நேரம் உதய் பேச்சு தான் இருக்கும் அப்பறம் கொஞ்ச நாளா உதய் பத்தி பேசுறத சுதீப் அவாய்ட் பண்ணிட்டான் , காரணம் கேட்டதுக்கு மலுப்பிட்டான், அதான் அப்படி  கேட்டோம்,"

" உங்களுக்கு ஆரம்பத்தில இருந்து சொன்னா தான் புரியும்.சுதீபோட அப்பா  பெரிய செல்வாக்குள்ள மந்திரியாக இருந்தாலும் சுதீப் சந்தர் மிகவும் எளிமையான ஆர்பாட்டமில்லாத வாழ்கையையே வாழ் நினைச்சாரு. தான் அமைச்சரின் பையன் அப்படீனு எங்கையுமே  தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டாரு . அவருக்கு வாழ்கையில ஏதாவது வெற்றி கிடைக்கனும் னா அது தன்னோட முயற்சியாலும் திறமையாலும் கிடைக்கனுமே தவிர அமைச்சரோட பையன் அப்படீங்கிறதுக்காக  கிடைக்ககூடாது  அப்படீங்கிறதுல ரொம்பவே உறுதியா.இருந்தாரு.

அவரோட  இந்த மறைமுக வாழ்க்கை அவருக்கு உதய் என்ற  நல்ல உயிர் நண்பனை ஈட்டிக்கொடுத்தது.பழகிய கொஞ்சம் மாசத்துக்கு அப்பறம் தான்  சுதீப் அமைச்சரின் மகன் அப்படீனே  உதய்க்கு தெரியும். இரண்டுபேருமே பத்து வயசுல இருந்தே  இணைபிரியாத நண்பர்களாக இருந்தாங்க  காலோஜ் ல  ரித்தீஷோட  அறிமுகம் கிடைக்குற வரை." என்று கூறி நிறுத்தினாள்.

" ஏன் அதுக்கப்பறம் அவங்க பிரிஞ்சுட்டாங்களா???" என்று வினவிய செழியனிடம் " அப்படி ஒரேதா சொல்லிட முடியாது கொஞ்சம் கொஞ்சமா இரண்டு பேருக்கும் நடுவுல இடைவேளி விழுக ஆரம்பிடுச்சு," என்று கூறி பெருமூச்சுவிட்டாள்.

" இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் நீங்க சுதீப சந்திக்கிறதுக்கு முன்னாடியே நடந்த விஷயங்கள் தானே இதெல்லாம்??" என்று சந்தேகத்துடன் வினவினான் செழியன்.

மாலினியின் வாக்குமூலத்தை குறித்து யோசித்துக்கொண்டிருந்த செழியனின்.சிந்தனையை தடை செய்தது அவனது செல்பேசி , அதில் மின்னிய அமைச்சரின் பெயரை பார்த்தவன் ," வணக்கம் சார் சொல்லுங்க ," என்று கூறினான்.

" வணக்கம் செழியன் என் பையனோட.கேஸ் என்னாச்சு ?? ஏதாவது தெரிஞ்சதா??" என று குரலில் கவலையுடன் வினவினார்.

" குற்றவாளியை நெருங்கிட்டோம் சார், கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம்,"

" அப்படியா ?? யாரது அப்படீனு நான் தெரிஞ்சுக்களாமா கமிஷனர் சார்??

" அது சொல்ல முடியாது சார், எல்லா எவிடன்ஸீம் கிடைச்சதும் நானே.உங்களை பார்க்க வரேன் ," என்று கூறியவன் பின் ஏதோ நினைவு வந்தவனாக ," சார் என்க்கு ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா???" என்று வினவினான்.

" சொல்லுங்க செழியன் , நான் என்ன செய்யனும் ??"

" நாளைக்கு காலையில பத்து மணிக்கு உங்க வீட்ல சுதீப் சம்மந்தட்ட எல்லாரையும் வரச்சொல்லுங்க , காரணம் கேட்டா சுதீப் பத்தி அவசரமா பேசனும் கண்டிப்பா வரனும் அப்படீனு சொல்லுங்க , " என்று கூறினான்.

" ஆனால் எதுக்கு கமிஷனர்??" என்று வினவிய அமைச்சரிடம் ," எல்லாம் காரணத்தோட தான் சார் , நான் சொல்றத செய்ங்க நாளைக்கு காலையில உங்களுக்கே காரணம் புரியும் ," என்று கூறி காலை கட் செய்தான்.

இதுவரை அவனின் செயல்களை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ராம்," டேய் யாரு குற்றவாளினு கண்டுபிடிச்சிட்டியா??" என்று.வினவினான்.

" ஒரு யூகம் இருக்கு ராம் , ஆனால் இன்னும் சில சாட்சிகள் தேவை ," என்று கூறி மீண்டும் அமைதியானான். 

"இந்த யூகம் மட்டும் போதாதே செழியா"

" ம்....ஆமா ராம் ஆனால் குற்றாவாளி கொஞ்சம் புத்திசாலி தான் எதுலயும் சந்தேகம் வர்ற மாதிரி அவன் செய்யலை ரொம்ப நிதானமா யோசிச்சு ரொம்ப நாள் கஷ்டப்பட்டு இந்த கொலையை பண்ணியிருக்கான், அவனோட புத்திசாலிதனத்தை பாராட்டியே ஆகனும்," என்று அவன் குற்றவாளியை புகழந்த வேளை சித்தார்த்திடமிருந்து கால் வர அதை இயக்கியவன்," சொல்லு சித்தார்த்,"

" சரி அவங்க மூனு பேரையும் அனுப்ப வேண்டாம், நான் ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்," என்று கூறியவன் ராமை நோக்கி ," சுதீபோட நண்பர்கள் மூனு பேருகிட்டயும் விசாரணை முடிஞ்சிடுச்சு ராம் நம்ம அங்க போய் நிலவரம் எப்படி னு பார்போம் வா," என்று கூறியவன் வேகமாக தனது வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

அமைதியாக அவனது பின்னே ராம் ஏறி அமர இருவரும் காவல் நிலையம் நோக்கி தங்களது பயணத்தை.தொடங்கினர்.

*********

காவல் துறையின் நாற்காளியில் அமர்ந்திருந்த அந்த மூவரும் ஒருவருடன் மற்றவர் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தினர். எதையோ முடிவு செய்தவனாக உமேஷ் எழுந்து ஒரு காவலரை அனுகினான் ," சார்.விசாரணைக்கு வரச்சொன்னீங்க, நாங்களும் வந்து நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியா பதில் சொல்லிட்டோம் அப்பறம் ஏன் இன்னும் உக்கார வெச்சிருக்கீங்க??" என்று ஒரு வித எரிச்சலுடன் வினவினான். 

அவனை மேலும் கீழும் அளவெடுத்து நோக்கிய அந்த காவலர் பின் அமைதியாக அந்த இடம் விட்டு சென்றார்.

அவரின் இந்த செயலில் மேலும் குழப்பமடைந்தவன் ரித்தீஷை நோக்கி," என்னதான்டா இங்க நடக்குது எனக்கு ஒன்னும் புரியலை, நீ ஏன்.அமைதியா இருக்க?? பேசாம எங்க லாயரை வரச்சொல்ல போறேன்," என்று கூறினான்.

அவனை கோபத்துடன் நோக்கிய ரித்தீஷ்," உமேஷ் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?? நம்ம சுதீப காணோம்னு அவங்க நம்மளை விசாரிக்கிறாங்க அதுக்கு நம்ம ஒத்துழைப்பு கொடுத்து தான் ஆகனும், உன்னை சந்தேகப்பட்டு கூட்டிட்டு வரலை உனக்கு தெரிஞ்ச விஷயத்துல இருந்து சுதீபை கண்டுபிடிக்கிற க்ளு எதாவது கிடைக்குமானு பாக்கதான் உங்கிட்ட விசாரணை நடத்துறாங்க புரியுதா?? சுதீப் மேல உண்மை யான அக்கரை இருந்தா கொஞ்சநேரம் அமைதியா இரு ," என்று குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிய பேசிய முடித்தான்.

அவனது இந்த கோப உரையை கேட்ட உமேஷ் கப்சிப் என்று அமைதியாக அமர்ந்துவிட்டான்.இவர்கள் மூவருக்கும் தெரியாமல் இவர்களை கண்கானித்த காவலர் சித்தார்த் இடம்சென்று இங்கே நடந்த பேச்சுவார்த்தை பற்றி கூற தாமதிக்கவில்லை.

************

கிளம்பிய பத்து நிமிடத்திற்குள் காவல்நிலையம் வந்தடைந்த செழியன்  விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்று விட்டான். அவன் செல்லும் பாதையில் அமர்ந்திருந்த அந்த மூவருக்கும் தங்களை கடந்த போன அதிகாரி யாரென்று அவர்கள் உணரும் முன்னரே மின்னலென உள்ளே சென்றான். தனது அறையில் நுழைந்தவன்  சித்தார்தை அழைத்தான்.

"சொல்லுங்க சித்தார்த்,  இவங்க மூனு பேரை விசாரிச்ச வரை என்ன தோனுது உங்களுக்கு??"

" சார் ரித்தீஷும் உமேஷும் ஒன்னா தான் வந்தாங்க அது மட்டுமில்லாம இரண்டு பேரோட பதிலும் சொல்லி வச்சாமாதிரி ஒன்னாவே இருந்துச்சு , ஆனால் உதய் மட்டும் வித்தியாசமா பதில் சொன்னான் வந்ததும் தனியா தான் வந்தான்," என்று கூறினான்.

" ஓ.....அவங்ககிட்ட விசாரிச்சதுல  வேற எதுவும் புது தகவல் கிடைச்சுதா??"

" ம்...ஆமா சார் உதயோட வாக்குமூலம் படி சுதீப் கடந்த ஒரு வாரமா சரியில்லாம இருந்திருக்கான். கல்யாணம் ஆகப்போற சந்தோஷம் முகத்துல இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒரு சோகம் அவன் மனசுல இருந்தமாறி இருந்துச்சு , ஆனால் மத்த ரெண்டுபேரும் இதை பத்தி ஒன்னும் சொல்லலை ."

" ம்....சரி உதய மட்டும் தனியா இங்க கூட்டிட்டு வாங்க,"

" ம்...சரிங்க சார்," என்று சித்தார்த் விடைபெற்றவுடன் ராமை நோக்கினான் செழியன் ," ராம் எனக்கு ஒரு உதவி செய்யனும், சுதீபோட லாப்டாப், மொபைல் இது ரெண்டுலயும் கடைசியா லாக் இன் செஞ்ச ஆப்(app) எது அந்த ஆப்(app) எவ்ளோ நேரம் வரைக்கும் ஆன் ல இருந்துச்சு இந்த விஷயத்தை நீ கண்டுபிடிக்கனும்,அப்பறம் இந்த மூனு பேரோட மொபைல் நம்பர் அந்த நேரத்தில எங்க இருந்துச்சு , அப்பறம் அவங்களோட கால் ஹிஸ்டரி இதையும் எனக்கு கொஞ்சம் கட்டுபிட்டிச்சு சொல்லனும்" என்றுரைத்தான்.

" ஓ கண்டிப்பா என் வேலையே அதுதானே , சரி நான் ஒரு அரை மணிநேரத்தில சொல்றேன்" என்று கூறியவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு யாரையோ அழைத்த வண்ணம் வெளியேறினான்.

அவன் வெளியேறிய நொடி உதயுடன் உள்ளே நுழைந்தான் சித்தார்த். உதயை செழியனிற்கு எதிராக.அமர செய்து விட்டு  செழியனின் குறிப்பறிந்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.

" சொல்லுங்க உதய் உங்களுக்கும் மாலினிக்கும் என்ன உறவு??"

" சார் மாலினி என் தங்கச்சி மாதிரி ,"

" ஏன் இவ்ளோ பதட்டம் ?? நான் என்ன உறவு னு மட்டும் தானே கேட்டேன்??" என்று நிதானமாக வினவினான்.

" இல்லை சார் எல்லாரும் எங்க உறவு தப்பா பேசுறாங்க அதான் நீங்களும் உறவபத்தி கேட்டதும் கொஞ்சம் பதட்டமாகிடுச்சு, " என்று பதிலளித்த உதயை புரியாத.பார்வை பார்த்த செழியன்," எல்லோரும் னா?? "

" " எல்லோரும் இல்லை சார் சில பேரு.மட்டும் தான்,"

" உங்க பதில் தெளிவா இல்லை மிஸ்டர் உதய் ,"

" சார் நானும் மாலினியும் பக்கத்து வீட்ல குடியிருந்தோம் சின்ன வயசுல அப்ப அண்ணண் தங்கையாதான் பழகினோம். அப்பறம் மாலினியோட அப்பா அவளை மும்பைக்கு கூட்டிட்டு போய்டாரு , ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் ஒரு ஃபேஷன் ஷோல மாடலா தான் நான் பாத்தேன், எங்க கம்பெனிக்கும் அப்ப மாடல் தேவைப்பட்டதால நான் மாலினியை சுதீப்கிட்ட சிபாரிசு பண்ணுணேன் , சுதீபுக்கும் மாலினியை பிடிச்சதால எங்க கம்பெனி மாடலா அக்ரிமெண்ட போட்டுகிட்டான். ஆனால் நானே எதிர்பாக்காத ஒரு விஷயம் மாலினியும் சுதீபும் காதலிச்சதது , இரண்டு பேரும் எனக்கு நெருக்கமானவங்க அப்படீங்கிறதால நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் இந்த விஷயம் தெரிஞ்ச நிறைய பேரு நான் தான்.அவளை சுதீபை மயக்க கூட்டிட்டு வந்ததா என் மேல பழி போட்டாங்க அது மட்டும் இல்லாம எங்க இரண்டு பேருக்கும் தப்பான.உறவு.இருக்குனு பரப்ப ஆரம்பிச்சாங்க," என்று கூறி முடித்தான்.

" இந்த விஷயம் சுதீபுக்கு தெரியாதா?"

" நல்லா தெரியும் சார் ஆனால் அவனுக்கு இந்த விஷயத்துல எங்க இரண்டுபேரு மேலயும் நம்பிக்கை இருக்கிறதால வதந்தியை அவன் நம்பலை."

" ஓ...அப்ப வேற எந்த விஷயத்துல உங்களை அவன் நம்பலை??"என்று தன் பதிலை வைத்தே தன்னை மடக்கிய செழியனை ஒருவித பயத்துடனே நோக்கினான் உதய்.













.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro