பகுதி -11
சித்தார்தை தொடர்ந்து சென்ற செழியன் அங்கே கண்டது வாயில் நுரை தப்பி கை கால்களை இழுத்துக்கொண்டிருந்த முருகனை.
" இப்படி பாத்துக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் சீக்கிரமா ஆம்புலன்ஸூக்கு சொல்லுங்க , யாராவது அவன் கையில எதாவது இரும்பு கொடுங்க..,சித்தார்த் இரண்டு கான்ஸ்டபிள அவனோட காவலுக்கு அனுப்புங்க,"என்று வேகமாக கட்டளைகளை பிறப்பித்தான்.
சிறிது நேரத்தில் அந்த அலுவலகம் தன் பரபரப்பை இழந்து பழைய நிலை அடைந்திருந்தது.காவலர்கள் அனைவரும் வரிசையில் பயத்துடன் நின்றிருக்க அவர்களின் முன் அனல் கக்கும் பார்வையுடன் செழியன் நின்றுகொண்டிருந்தான்.
" இத்தனை போலீஸ்காரங்க இருக்குற கமிஷனர் ஆபிஸுக்குள்ள ஒருத்தன் தைரியமா வந்து நம்மலோட பாதுகாப்புல இருக்குற ஒரு விசாரனை கைதிக்கு விஷம் கொடுத்திருக்காங்க , ஆனால் நீங்க யாரும் அதை பார்கலை??இதை நான் நம்புனும் னு நினைக்கிறீங்களா?? இல்லை நம்பாம உங்களுக்கு நம்ம ட்ரீட்மென்ட் நானே கொடுக்கனும் னு நினைக்கிறீங்களா??என்று கோபத்துடன் வினவினான்.
அங்கிருந்த ஒரு கான்ஸ்டெபிள்," சார்...
நேத்து நைட்.நீங்களும் சித்தார்த் சாரும் விசாரிச்சிட்டு.போனதுக்கு அப்பறம் செந்தில் சாரோட கண்கானிப்புல தான் அவன் இருந்தான், அவருக்கு நைட்டியூட்டி வேற அதனால அவரு.அவனை கவனிச்சிக்கிட்டுதான் இருந்தாரு," என்று கூறினான்.
" செந்தில் ....இங்க வாங்க," என்று அழைத்தான் சித்தார்த்.
" சொல்லுங்க செந்தில் ஒரு விசாரனை கைதி கொலை செய்யப்டுறது நமக்கு தான் அசிங்கம் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க ,அவனை பார்க்க.யாரும் வந்தாங்களா??சந்தேகப்படுற மாதிரி அவனுடைய நடவடிக்கை இருந்துச்சா??"என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினான் செழியன் அவனுடைய முகத்தில் இயலாமை நன்றாக வெளிப்பட்டது.
அவனுடைய சரமாரி கேள்விகளை உள்வாங்கிய அந்த கான்ஸ்டபிள் செந்தில்," சார் சித்தார்த் ஐயா சொன்ன மாதிரி நான் அவனை கவனமா கண்கானிச்சேன், அவனோட நடவடிக்கையில எந்த சந்தேகமும் எனக்கு வரலை , ராத்திரி சாப்பாடு வாங்கி கொடுத்தேன், காலையில ஒன்னும் சாப்பிட கொடுக்கலை அவனா தான் டீ வேணும் னு கேட்டான் , அதான் வாங்கி கொடுத்தேன்," என றவரை இடைமறித்த செழியன்," கம் அகெயன்...டீ வேணும் னு அவன் கேட்டானா...??" என்று மீண்டும் வினவினான்.
" ஆமா சார்....நாங்களாம் காலையில டீ சாப்பிடுவோம் அப்ப அவனும் கேட்டான்," என்றவரை இடைமறித்தவன்," உங்களுக்கு வாங்குன டீயை அவனுக்கு கொடுத்தீங்களா??" என்று கேட்டான்.
" இல்லை சார் ...வழக்கமா ழர பையன் தான் டீ கொண்டு வந்தான் அவன் கிட்ட இவனுக்கு ஒரு டீ வேணும் கொண்டு வா னு சொன்னேன், அவனும் போய் ஒரு.ஐஞ்சு நிமிஷத்துல டீ எடுத்துட்டு வந்தான்," என்று கூறினார்.
"அந்த டீ கொண்டு வந்த பையனை இங்க வரச்சொல்லுங்க ," என்று செழியன்.கூறியதும் ஒரு.காவலாளி விரைந்து வெளியே சென்று அவனை அழைத்து வந்தான்.
" உன் பேரு என்னபா??"என்று தன்மையாக.செழியன் கேட்டான்.
" மாரிங்க சார்..."
" ம்..மாரி இங்க எத்தனை நாளா வேலை செய்யுற??உங்க.வீடு எங்க இருக்கு?" என்று கேட்டான்.
" வண்ணாரப்பேட்டையில கீதுங்க சார், நான் நாலு வர்ஷமா வேலை செய்யறேன் சார்," என்று கூறினான்.
" இப்ப கடைசியா.டீ கொண்டு வந்தது நீ தானா??" என்று வினவினான் செழியன்.
" ஆமா சார் அந்த முருகனுக்கு டீ வேணும் னு ஏட்டையா கேட்டாரு அதுனால நான் தான் கொண்டு வந்து கொடுத்தேன்," என்று வெகுளியாக அவன் கூற அதிலிருந்தே அவன் குற்ற மற்றவன் என்று உணர்ந்து கொண்ட செழியன் மீண்டும் குழப்பத்துடன் சித்தார்தை பார்த்து," கமிஷனர் ஆபிஸ் க்கு வெளிய இருக்குற , உள்ள இருக்குற எல்லா சிசிடிவி ஃபுட்டேஜும் கொண்டு வாங்க ," என்ற உத்தரவை பிறப்பித்துவிட்டு தன் அறை நோக்கி சென்றான்.
********
ஆம்புலன்ஸூக்காக காத்திருக்கும் வேளையிலே முருகன் இறந்துவிட செழியனை வருந்தச்செய்தது, தன்னுடைய கவனக்குறைவால் நேர்ந்த விபத்தாகவே அவன் கருதினான்.
கமிஷனர் அலுவலகத்தின் அனைத்து சிசிடிவி புட்ஏஜுகளையும் பார்த்த செழியனிற்கு சந்தேகப்படும் படியாக எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
செய்வதறியாமல் அமர்ந்திருந்த நேரத்தில் சித்தார்த் உள்ளே வர அனுமதி வேண்டினான்.
" கம் இன் சித்தார்த்.."
" சார் உங்களை பார்க்க சைபர் க்ரைம் ஆபிஸர் ராம் வந்திருக்காரு.."
" ஓ...இங்கயே வந்துட்டாரா?? சரி வர சொல்லு,"
" ஹலோ கமிஷனர் சார் எப்படி இருக்கீங்க எங்களையெல்லாம் ஞாபகத்தில இருக்கா??" என்றபடி ஆர்பாட்டமாக உள்ளே நுழைந்தவனை கண்ட செழியனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.வேகமாக சென்று அவனை அணைத்துக்கொண்டவன்," மச்சான்....நீயா...எப்படி இருக்கிற??உன்னை இங்க பார்பேனு நான் நினைச்சுக்கூட பார்கலை ," உண்மையான சந்தோஷத்தில் செழியனின் முகம் மலர்ந்திருந்தது.
" எங்க ...நமக்கு இருக்கிறது ஒரே ஒரு நண்பனாச்சே அவனுக்கு அப்ப அப்ப கால் பண்ணி பேசுவோம் எந்த ஊருல இருக்கோம் னு சொல்லுவோம் இதெல்லாம் கிடையாது ," என்று உண்மையான வருத்தத்துடன் கூறினான்.
" இல்லைடா சென்னைக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது கொஞ்சம் செட்டிலாகிட்டு உனக்கு பேசனும் னு இருந்தேன், அதுக்குள்ள வழக்கம் போல உன்கிட்ட மாட்டிகிட்டேன், சரி நீ என்ன இவ்ளோ தூரம் வந்திருக்க எதாவது முக்கியமான விஷயமா??"
" என் அஸிஸ்டன்ட் கிட்டதான் ரிப்போர்ட் கொடுத்துவிடளாம் னு நினைச்சேன் , கமிஷனர் பேரு இளஞ்செழியனு சொன்னாங்களா சரி அந்த பரதேசியா தான் இருக்கும் நம்மளே கொண்டு போய் கொடுத்துட்டு பார்த்துட்டு வரலாம் னு வந்தேன் ."
அவனது முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்த செழியன்," நான் பரதேசியா டா??" என்று வினவினான்.
" அப்பறம் இல்லையா ??ஒரு ஊருல ஆறு மாசத்துக்கு மேல வேலை செய்யுறது இல்லை னா அப்ப நீ பரதேசி தானடா..."
இவர்கள் இருவரின் சம்பாஷனைகளை கேட்ட சித்தார்த் முதன்முதலில் செழியனின் முகத்தில் புன்னகையும் கிண்டலும் போட்டிபோடுவதை கண்டவன் அகம் மகிழ அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அகன்றான்.
அவர்களின் கிண்டல்களுக்கு இடையில் நலம் விசாரிப்புகளும் முடிந்திருக்க இருவரும் தங்களின் கடமைகளை கவனிக்களானர்.
" சொல்லு ராம்...சைபர் க்ரைம் ரிப்போர்ட் என்ன??"
" செழியா...அதுக்கு முன்னாடி எனக்கு கேஸ் பத்தி சொல்லு,"
" ம்...ஹைலி .கான்ஃபிடன்ஷியல் ," என்று கூறிவிட்டு சுதீபின் மரணம் முதல் முருகனின் மரணம் வரை கூறி முடித்தான் செழியன்.
" ம்...நீ கொடுத்த லாப்டாப் அப்பறம் மொபைல் இரண்டுலயும் சில தகவல்கள் கிடைச்சிருக்கு , சுதீபோட தற்கொலை கடிதம் சுதீபோட லாப்டாப் ல இருந்து தான் அவங்க அப்பாவுக்கு போயிருக்கு , போஸ்ட் மார்டம் படி சுதீபோட மரண நேரம் 12.30 ஆனால் அவங்க அப்பாவுக்கு மெயில் 12.15 க்கு அனுப்பப்பட்டிருக்கு, அது மட்டும் இல்லாம சுதீபோட லாப்டாப் ஆஃப் செய்யப்படலை பேட்டரி காலியாகி தானே ஆஃப் ஆகியிருக்கு," என்று கூறினான்.
" அப்போ சுதீப் மரணத்தை அவனோட பக்கத்தில இருந்தே பார்த்துட்டு அவன் இறந்துட்டான் னு உறுதி ஆனதுக்கு அப்பறம் தான் கொலையாளி போயிருக்கிறான் இல்லையா ராம்,"
" நீ ஏன் கொலைனு நினைக்கிற? தற்கொலையா கூட இருக்களாமே??அவனோட தற்கொலை கடிதம் அவன் தனிப்பட்ட மெயிலயிருந்து அவங்க அப்பாவுக்கு அவனோட லாப்டாப் ல இருந்து போயிருக்கு, முக்கியமான விஷயம் அவன் உயிரோட இருக்கிறப்பவே போயிருக்கு, சோ நீ ஏன் இது கொலையா பார்க்கிற இது ஏன் தற்கொலையா இருக்கக்கூடாது செழியா....," என்று வினவிய ராமை குழப்பத்துடன் நோக்கினான் இளஞ்செழியன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro