Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 1

சென்னையின் அந்த பிரம்மாண்ட திருமண மண்டபம் முழுவதும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் நிரம்பியிருக்க எங்கும் எதிலும் ஆடம்பரமும் அலட்சியமுமே ஆட்சி செய்தது கொண்டிருந்தது.

சுதீப் சந்தர் வெட்ஸ் மாலினி என்ற பொன்னிற எழுத்துக்கள் அலங்காரமாய் மின்ன , பார்போரை பொறாமைப்படுத்தும் அழகுடன் சுதீப் மற்றும் மாலினியின் ஒய்யார புகைப்படமும் அதன் அருகே வைக்கப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர் ராஜவேலுவின் மகனது நிச்சியதார்த்த விழா என்றால் சும்மாவா என்று எண்ணும் வகையில் மிகவும் பிரம்மாண்ட விழாவாக காட்சி அளித்தது.

நிச்சையத்திற்கே இவ்வளவு செலவு செய்தால் திருமணத்திற்கு கேட்கவா வேண்டும் என்று சிலரின் மனதில் பொறாமை எட்டிப்பார்கத்தான் செய்தது.அதையெல்லாம் பெரிதுபடுத்தாத ராஜவேலு தன் ஆசைக்குரிய தலைமகனின் திருமணத்தை எண்ணி மகிழ்ந்திருந்தார்.

ஒரு பக்கம் வகை வகையான பல நாட்டு உணவுகள் உண்ண ஆள் இல்லாமல் ஏங்கிக் கிடக்க மறுபக்கமோ பணத்தை மட்டுமே நினைக்கும் கூட்டம் நாலாபக்கமும் தங்களின் விலைஉயர்ந்த உடைமைகளை குறித்து பெருமைபட்டுக்கொண்டிருந்தன.

இவை எதையும் உணரும் நிலையில் இல்லாத இரு உள்ளங்கள் தங்களின் வருங்கால வாழ்க்கையை கண்களால் பேச அவர்களை சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் அவர்களின் காதலை கேளி செய்தும் கிண்டல் செய்தும் அவர்களை சங்கப்படுத்தினர்.

நிச்சியத்தித்தை உறுதி செய்யும் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அன்றிலிருந்து சரியாக ஏழாம் சுபமுஹூர்த்த தினத்தில் சுதீப் மாலினியின் திருமணம் பெரியோர்களால்நிச்சயிக்கப்பட்டது.
நடக்கப்போகும் நல்ல காரியத்தை குறித்து அனைவரும் மகிழ்திருக்க ஒரு நெஞ்சம் மட்டும் உள்ளுக்குள் இன்னதென்று கூற முடியாத நிலையில் கொதித்துக்கொண்டிருந்தது.

அதே நேரம் சென்னை கமிஷனர் அலுவலகம்

அது ஒரு திங்கட்கிழமை என்பதால் சென்னை கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் இருந்தது.வலக்கத்தை விட கூடுதல் பரபரப்பிற்கு காரணம் அந்த அலுவலகத்தின் க்ரைம் பிரான்ச் புதிய கமிஷனரை எதிர் நோக்கி காத்திருந்தது.

அந்த அலுவலக காவலரிடம் அங்கிருந்த விசாரனை கைதி ," என்னங்க சார், எப்போதும் ஆமை மாதிரி வேலை செய்வீங்க இன்னைக்கு என்னடானா ஜெட் வேகத்துல பரபரப்பா வேலையெல்லாம் நடக்குது?" என்று நக்கலடித்தான்.

அதற்கு அந்த காவலர்," திமிருடா உனக்கு எங்கிட்டயே இவ்வளவு எகத்தாளமா பேசற நீ வாய்லயே மிதிக்கப்போறேன் பாரு, இன்னைக்கு புதுசா கமிஷனர் வராரு அதான் இவ்வளவு பரபரப்பா இருக்கு, " என்று கூறினார்.

" புது கமிஷனரா? யாரு சார் அது, கொஞ்சம் சமாளிக்களாமா ." என்று ரகசியமாய் கேட்டான்.

" தெரியலை பா புது கமிஷனரு வராரு னு தான் செய்தி வந்ததுச்சு மத்தபடி அவரை பத்தி எதுவுமே தெரியாது, அதான் கொஞ்சம் படபடப்பு அதிகமா இருக்கு," என்று தனது பயத்தை கூறி முடிக்கவும் அங்கிருந்த துணை கமிஷனர் அறை திறக்கவும் சரியாக இருந்தது.

அந்த அறையிலிருந்து வெளியே வந்த துணை கமிஷனர் சரவணபெருமாளிற்கு வயது 40 க்கு மேல் இருக்கும் நடையில் ஒரு தளர்வு தெரிய பார்வையில் ஒரு அலட்சித்துடன் அங்கு காவலுக்கு நின்றிருந்த கான்ஸ்டெபிளை பார்த்து," யோவ் வேலு நம்ம கமிஷனர வரவேற்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா?" என்று எரிச்சலுடன் வினவினார்.

" ஆ.. எல்லாமே ரெடியா இருக்குங்கய்யா நம்ம சித்தார்தன் ஐயா தான் கூட்டிட்டு வர போயிருக்காரு , இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க, என்று கூறினார்." அந்த வயதான காவலர்.

"ஓஓஓஓ சித்தார்தனா?? கூட்டிட்டு வரட்டும் கூட்டிட்டு வரட்டும், " என்று கேட்க அவர் குரலில் ஏளனம் மிகுந்திருந்தது.

அவரின் குரலில் இருந்த ஏளனம் எதர்கென்று தெரியாத அந்த காவலர் தன் காவலை தொடர்ந்தார் ஏனென்றால் அந்த சித்தார்தன் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர், துடிப்பும் வேகமும் நிறைந்த இளம் 24 வயது இளைஞன்.தன்னுடைய சிறு வயதிலிருந்தே காவல் துறையின் மேல் அதிக ஆர்வம் வளர்த்துக்கொண்டு கடும்முயற்சி செய்து காவல் துறையில் சேர்ந்தவன்.அப்படிபட்டவனை பார்த்து ஏளனமாக சிரிக்க காரணம் அவனின் நேர்மை மட்டுமே.

வாசலில் சத்தம் கேட்டு வேகமாக தன் தொப்பியை சரிசெய்து கொண்டு புதிய கமிஷனரை வரவேற்க மற்ற காவலர்களுடன் சென்றார் சரவணபெருமாள்.

அங்கே வேகமாக வந்து நின்ற பொலீரோ வண்டியிலிருந்து இறங்கிய மனிதரை பார்த்து அந்த அலுவலகமே திகைத்து நின்றது.

அவர்கள் அனைவரும் கமிஷனர் என்றால் குறைந்தது 50 வயதிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க ஆனால் வந்ததோ

ஆறடி உயரத்தில் மாநிறத்தில், ஆண்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் வசீகர முகத்தையுடைய கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட முப்பது வயது இளைஞன்.

அவனின் இறுகிய உடற்கட்டு தினமும் உடற்பயிற்சி செய்வதை எடுத்துக்காட்ட, சிரிக்க மறந்த உதடுகளுக்கு மேலே ஆண்மையின் அடையாளமாய் மீசை சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க, கூரிய விழி வீச்சு ஏதிரில் இருப்பவரை சல்லடையாய் துளைக்க இரும்பு போன்ற கைகளில் சில கோப்புகளுடன் தன் நீண்ட கால்களில் வேக எட்டுகள் வைத்து அலுவலகத்தில் நுழைந்தார்.

அவரை பார்த்து சிலையென நின்ற அனைத்து காவலர்களையும் சிங்கத்தின் கர்ஜனை போன்ற குரல் நினைவுலகத்திற்கு கொண்டு வந்தது.

"இது என்ன போலீஸ் ஸ்டேஷனா இல்லை கல்யாண மண்டபமா , தோரனையும் அலங்காரமூம் பண்ண, முதல் வேலையா இதையெல்லாம் சுத்தம் பண்ணிட்டு எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாருங்க, சித்தார்த்....... நீங்க உடனே என்னுடைய அறைக்கு வாங்க." ,என்று கத்திவிட்டு உள்ளே தன் அறைக்குள் சென்று கதைவை அடைத்தார் , அவர் அடைத்த கதவில் இளஞ்செழியன் ஐ.பி.எஸ். என்ற பொன்னிற எழுத்துக்கள் மற்றவரை நோக்கி மின்னியது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro