மனித இனம்
அது ஒரு அழகான காலைவேளை... சூரியதேவன் தன் கதிர்களை மனிதர்கள் மீது அன்பாய் தூவிக் கொண்டிருக்க.... சூரியனை கண்ட மலர்கள் மலர்ந்து சிரிக்க.... அதை கண்ட வண்டுகள் மலர்களை சுற்றி வந்து ரிங்காரமிட... பலர் அந்த பார்க்கில் ஒட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தனர்... முதியவர்கள் யோகாசனத்தில் அமர்ந்திருக்க.... இளைஞர்கள் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்த நேரம் அந்த பூங்காவை தாண்டி பின்க் நிற சுடியில்... தன் கைப்பையை சரியாய் மாட்டிக் கொண்டு அவசர அவசரமாக பேருந்தில் ஏறினாள் அவள்... நந்தித்தா...
ஒரு சீட்டில் அமர்ந்தவள் பயணச்சீட்டை வாங்கிவிட்டு... தன் கைப்பையில் அனைத்தும் இருக்கிறதா என சரி பார்த்தாள்... அனைத்தும் இருக்கிறதென நிம்மதி அடைந்தவளுக்கு மாரடைப்பு வரும் விதமாய் அவளுக்கு தேவையான ஒன்று அங்கு காணாமல் போயிருந்தது... அதை கண்டு அதிர்ந்தவள் கை பையை பொரட்ட தொடங்கினாள்.... அவள் இறங்கும் நிருத்தமும் வந்து விட... இறுதி வரை அவள் தேடியது கிடைக்கவில்லை... சரியென அவளின் கல்லூரிக்கு நடையை கட்டினாள்... கல்லூரிக்குள் நுழைந்தவளுக்கு உள்ளூர உதறல் எடுத்துக் கொண்டே இருக்க... மனதுள்ளே புலம்ப தொடங்கினாள்...
" எப்படி மறந்தேன்... அது இல்லாம விவரிக்க முடியாதே... சும்மா சொன்னா யாரு ஏத்துப்பாங்க... ஆதாரம் காட்டனுமே... இந்த தலைப்ப இந்த மொத்த கல்லூரிலையுமே நா மட்டும் தான் எடுத்துர்க்கேன்... அது எனக்கே நல்லா தெரியும்... இப்போ நா என்ன பன்னுவேன்... " என பரிதவித்து கொண்டிருந்தவளுள் ஒரு குரல் ஒலித்தது...
" நந்து... நாம வாழ்கைல பார்த்திராத கஷ்டம் இல்ல... நா உன்ன வளத்ததால நீ கேட்டிராத வார்த்தை இல்ல... எத்தனையோ தடைகள் இருந்தும் அத தகர்த்தெரிஞ்சு நீ இப்போ இவ்ளோ பெரிய இடத்துல படிக்கிர... அங்கையும் நீ ஏச்சு பேச்சு வாங்கிகிட்டு தா இருக்க... ஆனா அத நீ எடுத்துக்குட்டதில்ல.... இந்த தலைப்ப நீ விவரிக்கிறதுக்கு ஆதாரம் தேவை இல்லை... ஏனா... அதுக்கு ஆதாரமே நீ தான்... உன் வளர்ச்சி தான்... உனக்கு யார் யார் இந்த நிலமைல இருந்தும் முன்னேரி வந்துர்க்காங்கன்னு நல்லாவே தெரியும்... அவங்கள சக மனுஷகளா பாக்காம... ஒரு உயிரினமா கூட மதிக்காம இருக்க இந்த உலகத்துக்கு... உன் வார்த்தைகள் புத்திய தூசி தட்டி எடுக்கட்டும்... தைரியமா போ... " என நம்பிக்கையூட்ட....
உள்ளம் தெளிந்து எழுந்தவள் கல்லூரியின் தோட்டத்திலிருந்து முக்கிய அவைக்கு நகர்ந்தாள்.... அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் பல பத்திரிக்கையாளர்களும் கல்லூரி நிர்வாகிகளும்... தமிழ்நாட்டிலுள்ள பெரிய பெரிய கல்லூரிகளின் நிர்வாகிகளும் போட்டியாளர்களும் நிறைந்திருந்தனர்.... தைரியமாய் சென்று போட்டியாளர்களின் இடத்தில் அமர்ந்தாள்.... நிகழ்ச்சியும் தொடங்கியது....
மேடை ஏறிய ஒரு பெண்.... அனைவரையும் வரவேற்த்து நடக்கவிருக்கும் போட்டியையும் விவரித்து கீழிறங்கினாள்... வந்த கல்லூரி நிர்வாகிகள் அனைவருக்கும் மரியாதை செழுத்தப்பட்டது... பல பத்திரிக்கைகளின் மூலமாக இங்கு நடப்பவை அனைத்தும் முழு தமிழ்நாட்டு மக்களின் வீட்டிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது... அத்துனை பெரிய நிகழ்ச்சி.. போட்டி என்னவென்றால்.... உலகில் இருக்கும் சாதனை... சாதனையாளர்கள்.... சுதந்திரத்திற்கு காரணமாய் இருந்தவர்கள் என உலகே மதிக்கும் பதவியில் இருப்பவர்களை பற்றி பேச வேண்டும்..... அக்கல்லூரியின் பல மாணவர்கள் இப்போட்டியில் கலந்துள்ளனர்... அதில் நந்தித்தாவும் ஒருவளே....
போட்டியும் தொடங்கியது... பல மாணவர்கள் தைரியமாய் பேசி தங்களின் கருத்துக்களையும் வெளியிட்டனர்.... நந்தித்தாவின் மனம் அடித்துக் கொண்டே இருந்தது... அவளின் முறையும் வர.... கண்களை இருக்கி மூடி மூச்சை இழுத்து விட்டவள் மேடை ஏறினாள்.... மேடை ஏரிய பலருக்கும் கிடைத்த கைத்தட்டல்களோ கரகோஷங்களோ இவளுக்கு கிடைக்கவில்லை.... அவ்விடமே அமைதியில் மூழ்கி கிடந்தது...
நந்தித்தா " இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் இனிய வணக்கம்.... " என கூற.... அங்கு கூடியிருந்தவர்களில் பலர் இவளை நகைத்து சிரித்தனர்... அதை கண்டுக்கொள்ளாமல் தன் உரையை தொடங்கினாள்...
" இன்னைக்கு எத்தனையோ பேர் எங்கெங்கையோ இருக்க சாதனையாளர்கள பத்தி பேசுறாங்க... நா நம்ம கூடவே இந்த சமூகத்துலையே இருக்க சாதனையாளர்கள பத்தி பேச போறேன்... அந்த தலைப்பு.. திருநங்கை" என கூறி முடிக்க.... அவள் காதுபடவே... கீழே அமர்ந்திருந்த ஒரு நிறுவர்... " ம்ச்... இதெல்லாம் கேக்கனுமா... அந்த பொண்ணும் அது ட்ரெஸ்ஸும்... போக சொல்லுங்க ... முக்கியமான தலைப்பு பேசுறவங்கலாம் இன்னும் எவ்ளோ பேர் இருக்காங்க.. ஆங்கிலத்த அடையாளமா கொண்டுருக்குர இங்க தமிழ் பேசிக்கிட்டு இருக்கு... இங்லிஷ் தெரியாத லோ க்லாஸல்லாம் ஏன் இங்க அட்மிஷின் கொடுத்தீங்க.... " என்று கூற.... தலைக்கு மேல் ஏறிய கோபத்துடன் கத்த தொடங்கினாள் நந்தித்தா...
" Who ever talk to you will not think about what you wear... like that so... dont ever look at which language I use... English is my profession Tamil is my Passion.. its my wish to talk in any language which was already mentioned in my application which I had applied for participate... talking in Tamil is not to prove that im not educated... it is to prove that I respect my mother tongue than other languages... understand??? "
(உங்களிடம் உரையாடும் எவரும் நீங்கள் அனியும் உடைகளை பார்ப்பதில்லை... அதை போல்... நான் பேசும் மொழியை நீங்கள் என்றும் பார்க்க அவசியமில்லை... ஆங்கிலம் என் தொழில்... தமிழ் என் உணர்வு.. எம்மொழியில் பேசுவதென்பது என் முடிவு என்று முன்பே இப்போட்டியில் பங்கேற்க நான் அனுப்பிய விண்ணப்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது... தமிழில் பேசுவதற்கு நான் கல்வியறிவற்றவள் என்று அர்த்தமல்ல... மற்ற மொழிகளை விடுத்தும் நான் என் தாய்மொழியை மதிக்கிறேன் என்று நிரூபிப்பது தான் இதன் அர்த்தம்.. புரிந்ததா??? )
அங்கு கூடியிருந்த அனைவரும் நொடியில் அதிர்ந்து அவளை நோக்கினர்.... பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அவளை உற்று நோக்க வைத்தனர் உலகத்தை... அனைவரின் கண்களும் ஆச்சர்யத்துடன் அவள் மீது பதிந்தது... அதை கண்டும் காணாமல் தன் உரையை தொடங்கினாள் நந்தித்தா...
இந்த உலகத்துல பல திருநங்கைகள் இருக்காங்க... அவங்கள ஒரு சக மனிதரா யாருமே இங்க பாக்குரதில்லை.. இருந்தும் அவங்க இந்த உலகத்துல நிலைத்து நிற்கிறாங்கன்னா... அதுக்கு காரணம் அவங்க விடாமுயற்சி... ஒவ்வொரு மனிதரும் அவரோட நம்பிக்கையால தான் முன்னேர்ராங்க... அத போல தான் திருநங்கைகளும்.... திடீரென குறிக்கிட்டார் ஒருவர்... " திருநங்கைகள் என்னமா சாதிச்சாங்க... நீ அத போய் பெருசா பேசுர... அவங்க எதுல முன்னேருனாங்க... ரோட்டுல திரியிரது தான அவங்க வேலை... " என நக்கலாய் வினவ...
நந்திதா " நல்ல கேள்வி கேட்க பழகீர்க்கீங்க போல... ஆனா அத சரியா கேக்க பழகிக்கோங்க " என்று நிமிர்வாய் கூற... ஒரு நொடியில் அவரின் மூக்கு அங்கு அனைவரின் முன்னும் உடைக்கப்பட்து...
நிறுவர் " என்ன மா... திமிரா பேசுர.. "
நந்திதா " அது எப்டி ஸர்.. நா சொல்ல வர்ரதெல்லாம் உங்களுக்கு திமிரா தெரியிது "
நிறுவர் " பின்ன சாதனையாளர்களுக்கு எழுத்து கூட தெரியாதவங்கள சாதனையாளர்கள் னு சொல்ற... அது இல்லன்னு சொன்னா... உன் கருத்து தான் உண்மைன்னு ஒரே பிடியில நிக்கிரியே "
நந்திதா " எப்டி ஸர் அவங்களுக்கு எழுத்து தெரியும்... அவங்க தெரிஞ்சிச்காததுக்கு காரணமே உங்கள மாரி உள்ள கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகள் தான.... "
நிர்வாகிகள் " என்ன நாங்களா "
நந்திதா " பின்ன நானா... மனுஷங்கள மனுஷங்களா பாக்காம இண வேறுபடு பாக்குர இந்த உலத்துல அவங்கள மனித இணமாவே பாக்காத நீங்க இருக்குரப்ப.. அவங்களுக்கு எப்டிங்க கல்வி கிடைக்கும்... அதுக்குன்னு எல்லா நிர்வாகத்தையும் தப்பு சொல்லிட முடியாது.. ஏன்னா.... சில இடங்கள்ள அவங்கள மதிக்கிராங்களான்னு தெரியல.. ஆனா அவங்களுக்கு கல்வி வளங்குராங்க... யாருங்க சொன்னது உங்களுக்கு திருநங்கைகள் சாதிக்கலன்னு... நம்ம இந்தியாலையே எட்டு திருநங்கைகள் அவங்கவங்க துறைல உயர்ந்து இருக்காங்க...
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஷாஷ்த்ரி ஷர்மிலா
இந்தியாவின் முதல் திருநங்கை காவலாளி ப்ரித்திக்கா யாஷினி
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மண்டோல்
இந்தியாவின் முதல் திருநங்கை வீரர் ஷபி
இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ துணையாளர் ஜியா தாஸ்
இந்தியாவின் முதல் திருநங்கை எம் எல் எ ஷபனம் மாவ்சி
இந்தியாவின் முதல் திருநங்கை தேர்தல் பங்கேற்பாளர் மும்தாஸ்
இந்தியாவின் முதல் கல்லூரி மேலாளர் மனோபி பந்தோபதியாய்"
என இறுதியாய் கூறியதை அங்கிருந்த மேலார்களை பார்த்துக் கொண்டே கூறினாள்... அவளின் பார்வை " நீங்கள் இவ்விடத்தை பிடித்தது தங்களின் பெருமை என நினைத்துள்ளீர்கள்... யாரை தரைகுரைவாய் எண்ணினீர்களோ அவர்கள் கூட இப்பதவியை அடைந்துள்ளனர் " என்று தெள்ளத்தெளிவாய் கூறியது...
நந்தித்தா " ஒரு விஷயத்த பத்தின நாலெட்ஜ் இல்லாம பேசுரத மொதல்ல நிறுத்துங்க... பெரிய கல்லூரியோட மேலாளர்களாய்ட்டா உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடுமா... திருநங்கைகள் ஒவ்வொரு இடத்துலையும் ஏச்சு பேச்சுகள் வாங்குராங்க.. அப்டி பேசுறதுனால உங்களுக்கு என்ன லாபம்... எந்த தகுதிய வச்சிட்டு அவங்கள தப்பா பேசுறீங்க... அவங்க ஆண் இல்ல பெண் இல்லன்னா... முதல்ல இந்த உலகத்துல ஒவ்வொருத்தரையும் மதிக்கிறது அவங்க மனிதர் அப்டீங்குரதனால மட்டுமே ஒழிய.. இண வேறுபாடு இல்ல... அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல... குறையோட பிறக்குரவங்கள பெத்தவங்களே ஒதுக்கி வக்கிறாங்க... அந்த இணத்துல பிறந்தது அவங்க தப்பா?? இல்ல...
அத பத்து மாசம் சுமக்குற அந்த குடும்பம் கூட யோசிக்கிறது இல்ல... அந்த இடத்துல தானிருந்தா என்ன செய்வோம்ங்குர ஒரு சுய சிந்தனை இல்லையா யாருக்கும்... இறைவன் இண வேறுபாட்டோட யாரையும் படைக்கிறதில்ல... மனிதர் என்ற ஒரே இணத்துல தா படைக்கிறார்.. அதை நாமே தப்பா எடுத்துக்குறோம்.. ஒவ்வொருத்தராலையும் சாதிக்க முடியும்... அது ஆண் பெண்ணால மட்டும் தான் முடியும்னு இல்ல... எல்லா மனிதர்களாலையும் முடியும்... அதுல திருநங்கைகளும் அடக்கம் தான்... அவங்கள புகழ்ந்து பேசுங்கன்னு நா சொல்ல வரல... தாழ்த்தி பேசாதீங்கன்னு தா சொல்றேன்... இன்னும் தெளிவா சொல்லனும் னா... நம்மளால மட்டும் தான் சாதிக்க முடியும்னு நெனக்கிற சுயநலவாதிகளே... உங்க எல்லாருக்குமே தெரியும்... நா இந்த கல்லூரியோட தங்கபதக்கவாளர் (Gold medalist) நா மெரிட்ல பாஸ் பன்னி இந்த கல்லூரி ல இடம் பிடிச்சவ... இந்த கல்லூரில வேற எவரும் இது வர மெரிட் ல பாஸ் பன்னி உள்ள வரல... நா இது வர வருடா வருடம் வேற வேற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டேன்... அதுக்கு காரணம் என் டிஸ்ஒபீடியன்ஸ் இல்ல... என் கேள்வி.. என் ஸ்டேட்டஸ்... ஒன்னும் புரியலல்ல.... இந்த கல்லூரில நா கோல்ட் மெடலிஸ்ட்டா இருந்தும் சிலரோட சுடு வார்த்தைகளால அவதி பட்ரது நா அனாதைங்குரதுனால... யாருங்க சொன்னா நா அனாதைன்னு... எனக்கு அம்மா இருக்காங்க... என்ன நா பொறந்த பத்து மணி நேரத்துல இருந்து அவங்க தான் பாத்துக்குராங்க.... இவ்ளோவும் பேச உனக்கு தகுதி இருக்கான்னு நீங்க கேக்கலாம்... இருக்கு.. இருக்கு... எனக்கு மட்டும் தான் இங்க தகுதி இருக்கு.... என்ன வளர்த்த என் அம்மா ஒரு திருநங்கை... அவங்க என்ன வளர்க்க பட்ட கஷ்டங்கள் எல்லாத்தையும் கூட நின்னு பாத்தவ நான்... நா திருநங்கையால வளர்க்க பட்ரேங்குர ஒரே காரணத்தால என்ன எல்லா பள்ளிகல்ல இருந்தும் மாத்துனாங்க... நா ஏன் மாத்துரீகன்னு கேட்டதுக்கு எனக்கு நேருக்கு நேரா சொன்னாங்க... அப்போ முடிவெடுத்தேன்... என் அம்மாவ இந்த உலகுக்கு திருநங்கையாவே காட்டனும் னு... நா முன்னேறுனது என் பின்னாடி இருந்த திருநங்கையால தான்னு காட்டனும் னு முடிவெடுத்தேன்... அதுக்காக நா எடுத்த என் ப்ரூஃப் எங்கையோ தொலஞ்சு போச்சு... அது இல்லன்னாலும் நா இல்லன்னு ஆய்டாது... திருநங்கைகள் முன்னேறுவாங்கங்குர பல ஆதாரம் இருக்கு.. ஆனா அத நீங்க நம்பமாட்டீங்க... அதனால என் கூடவே இருக்க என் அம்மாவ ஆதராமா மாத்துனேன்... அது தான் தொலஞ்சு போச்சு " என கூற....
அப்போது பலரும் தொலைகாட்சியில் இவளின் உரையை கண்டு தங்களின் தவறை நினைத்து பார்த்தனர்... இத்துனை நாட்களும் சாலையோரத்தில் பல இடங்களில்... சில வீட்டு வாயில்களில் என கண்ட இடத்திலெல்லாம் திருநங்கைகளை அவமானப்படுத்திய பலரும் இவளின் உரையில் வெம்பி தலை குனிந்தனர்.... அந்த பேரவையே மௌனத்தை பிடித்து அமர்ந்திருக்க.... அப்போது மெல்லமாய் கேட்டது ஓர் சினுங்கும் ஒலி... அதனுடனே " நந்து கண்ணு " என்ற அழைப்பை கேட்டு அனைவரும் வாயிலின் புறம் திரும்ப... அங்கே கண்ட அனைவரின் கண்களும் அதிர்ந்ததா... அல்ல பிரம்மிப்பில் விரிந்ததா என்று அவர்களுக்கே வெளிச்சம்....
வெளுத்த தோல்... பின்னலிட்ட முடி... பெரிய பொட்டு... கழுத்தில் ஒரு கயிறு... ஊதா நிற காட்டன் புடவையில்.... சற்றே உயரமான ஒரு பெண்மணி நந்தித்தாவை நோக்கி ஓடி வந்தார்... அவரை கண்ட நந்தித்தாவின் கண்களில் இவ்வளவு நேரம் இழுத்து பிடித்திருந்த அழுகை ஊற்றெடுத்தது... அவளருகில் வந்தவரை அம்மா என்னும் கூவலுடன் அணைத்துக் கொண்டாள் நந்தித்தா.... குழம்பிய அவளின் அம்மா மங்கை...
மங்கை " நந்து கண்ணு ஏன் டா அழர... யாராவது திட்டுனாங்களா... அதை எல்லாம் காதுல போட்டுக்காத கண்ணு... இந்தா நீ வீட்டில வச்சிட்ட வந்துட்ட... அத குடுக்க தா வந்தேன்... இனிமே யாரும் என் பொண்ண எதுவும் சொல்ல மாட்டாங்க... இந்தா மா... நா கெளம்புறேன்.." என ஒரு பெண்ட்ரைவை அவளிடம் கொடுத்து விட்டு கிளம்ப எத்தனிக்க...
நந்தித்தா " ஒரு நிமிஷம் மா... " என அவரை தடுத்தவள்... அந்த பெண்ட்ரைவை அவளின் மணிக்கணினியில் செழுத்தி எதையோ அங்கிருந்த பெரிய ஸ்க்ரீனில் ஒளிபரப்ப வைத்தாள்... அவளின் கூற்றாலும் இங்கு நடந்த நிகழ்வாலும் பெயரில்லா ஓர் உணர்வில் மூழ்கி கிடந்தவர்கள் அப்படத்தை கண்டதும் பேரதிர்ச்சியடைந்தனர்... அதில் மங்கை அம்மா... சிரித்தவாறு ஒரு வயது நந்திதாவை தூக்கி வைத்திருக்கும் படம் அது....
நந்திதா " இதோ ஆதாரம்... நா பொறந்த பத்து மணி நேரத்துல இருந்து இந்த நிமிஷம் வரை என்ன வளக்குரது என் அம்மா மங்கை தான்... அவங்க எவ்ளோ தடைய தாண்டி வந்தாலும் என்ன படிக்க வச்சு இந்த நிலைமைக்கு கொண்டு வந்துர்க்காங்க... இத விட அவங்க எதுலங்க சாதிக்கனும்... அவங்கள மதிக்காத இந்த உலகத்துல என்ன வளர்த்தது மட்டுமில்லாம என்ன இந்த உயரத்துல நிக்க வச்சிர்க்காங்கன்னா... அத என்னங்க சொல்லுவீங்க... ஒவ்வொரு மனிதரும் பிறப்பில் மனிதரா தான் இருக்காங்க... அதுக்கு அப்ரம் தான் அவங்க எந்த இணம் னு முடிவு எடுக்க படுது.... இந்த உலகத்துல சம உரிமை ஆண் பெண்ணுக்கு மட்டும் இல்லைங்க.... திருநங்கைகளுக்கும் கிடைக்கனும்.... அதுக்காக என்னைக்குமே நா பொராடுவேன்.... எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.... இவ்வுலகம் அனைவரையும் மதிப்பது ஆண் பெண் என்ற இரு இனத்தினால் அல்ல.... மனிதர் என்னும் ஒரே இனத்தினால் மட்டும் தான்... " என உரக்க கூறிவிட்டு குழப்பத்துடனே நின்ற மங்கை அம்மாவை அழைத்துக் கொண்டு திரும்பியும் பாராது அங்கிருந்து புறப்பட்டாள் நந்தித்தா....
மறுநாள் காலை அவள் கதவை திறந்து வெளியே வரும் போதே அங்கு பல பத்திரிக்கையாளர்களின் நிறுவனங்கள் கூடியிருந்தது... அதை கண்டு அதிர்ந்த நந்தித்தா குழப்பத்துடன் நிற்கும் முன்னே.. அவளின் பேச்சு திறனுக்கு பலவகையான பாராட்டல் குவிந்தது.... அவளுக்கும் அவளின் அம்மாவிற்கும் மிகுந்த மரியாதை குவிந்தது... மங்கை அம்மாவின் கண்கள் கலங்கிவிட்டது... இத்துனை நாட்கள் குப்பையை போல் தன்னை பார்த்த பலரும் இன்று தங்கத்தை பார்ப்பதை போல் நோக்குவது அவருக்கு அசுவாமாய் இருந்தலும் குப்பையை போல் தெரிந்த தோற்றம் தன் மகளால் மாறிவிட்டதென்ற நிம்மதி பிறந்தது.... அங்கு கூடியிருந்த பத்திரிக்கை நிறுவனங்களிளே மிக பெரிய பத்திரிக்கை குடும்பம் நந்தித்தாவின் பேச்சு திறனுக்காகவே வேலை கொடுத்து அவளின் வரவிற்காக என்றும் காத்திருப்தாகவும் கூறி நகர்ந்தது.... நந்தித்தாவின் கல்லூரியிலும் அவளின் பெயர் எங்கும் ஒலிக்க தொடங்கியது... நந்தித்தாவின் புரட்சி அங்கு முடியவில்லை அங்கிருந்து தொடங்கியது... திருநங்கைகளின் மீதான தீயஎண்ணங்களை அழிப்பேன் என்னும் முடிவுடன் தன் வாழ்கையில் அவளின் அம்மா மங்கையின் துணையுடன் மேலும் முன்னேறினாள் நந்தித்தா.....
இவ்வுலகில் அனைவரும் மதிப்பு பெரிவது இரு இனத்தால் என்பதை மறந்து... ஒரே இனம் மனிதஇனம் என்பதை நினைவு கொள்வோம்... திருநங்கைகளும் மனிதர்களே... நம்மை விட சிறந்தவர்களை போற்ற கூட வேண்டாம்.... கீழ் தரமாய் எண்ணாமல் இருத்தலே வேண்டும்.... அதற்கு என்றும் சான்றாய் நந்தித்தா வாழ்வாள்....
முற்றும்....
தீராதீ
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro