முதிர்ந்த மலர்கள்.
தட்டுத் தடுமாறி தடி ஊன்றி நடந்தாலும்,
உன் மொட்டு முகம் காண மட்டும் ஓடி வருவேன்...
உற்றுப்பார்த்து உனை கண்டு கொண்டாலும்,
உன் கையை தொட்டுப்பார்த்து ஆறுதல் கொள்வேன்...
வருடத்தில் சில நாள் விடுமுறை!
வாடிக்கையாய் வாழ்க்கை கடப்பவர்க்கு!
வருடமெல்லாம் எனக்கு விடுநாள்,
உன் வசந்த முகம் காண்பதற்கு!
கடலிலும் குதித்து நீச்சல் அடிப்பேன்,
நீ கை தூக்கி விட தயார் என்றால்?
உயரம் தாண்டும் போட்டியில் கூட,
நான் தான் இன்று முதலிடம்!
உற்றுப்பார் இதோ புகைப்படம்..
உன் முகம் மட்டும் ஓர் தனி அழகு!
எனை கேலி செய்து சிரிக்கும் போது!
என் வேகத்தை குறைத்து விட்டேன்!
விளையாடலாம் எழுந்து வா!
என் நடை இப்பொழுதும் வேகம்தான்,
உன் நினைவுகளால் மெதுவாகிறது.
உன் அருகிலேயே இருந்து விடட்டுமா?
பொய் சொல்ல மட்டும் ஓர் நோய் சொல்லு?
நடிப்பதில் நான் என்றுமே ராஜா!
அதுவும் இந்த ராணிக்காக மட்டும்!
பொதுவாக நான் துணிச்சல்காரன்!
இருந்தாலும் ஒரு மன உளைச்சல்?
உனை தூங்கச்சொல்ல ஆர்வமில்லை,
எனை நீங்கிவிட்டு சோகம் கொடுப்பாயோ?
தாங்கிக்கொள்ள மனபலமில்லை,
வேண்டினேன் நீ போதும் என்று,
உன் சுகநலன் வேண்டும் என்றும்
நான் சுயநலவாதி தான்....
அன்புடன்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro