மாயம்
கண்களிலில் மேலும் கண்ணீர் சுரக்க வழி இல்லாது வரண்டிருக்கும் போதும் கூட... விடாமல் கண்ணீரை சுரந்தது அப்பேதையவளின் காந்த விழிகள்.... பலர் அவ்விழியை இரசிக்க வரிசையாய் வந்து நின்றாலும் அவ்விழி இரசிக்க வேண்டியவனோ.... அவ்விழியை இரசிக்க வேண்டியவனோ தொலை தூரத்தில்..... அளவில்லா தூரம்.... கடல் மலை பாலைவனம் காடு என அனைத்திற்கும் பின் அவன்.... அவனும் அவர்களும்.... மறைந்தவனுக்காய் கண்ணீர் சிந்துவதா... தன்னுடனே தனிமையில் வாடும் இருவருக்காகவும்... குடும்பத்திற்காகவும் கண்ணீர் சிந்துவதா என்ற குழப்பமேதும் இல்லாமல் நில்லாமல் வலிந்தோடியது கண்ணீர்.... அசைந்தாடும் கேசத்திற்கு கூட அவள் வலி அறியுமோ என்னவோ... அவளை தொந்தரவு செய்யாமல் மெதுவாய் அசைந்தாடிக் கொண்டிருந்தது.... பெண்ணவளின் அறை கதவு மெல்ல திறக்கப்பட.... இருள் சூழ்ந்திருந்த அவ்வறையில் வெளிச்சம் வர.... கண்களை மெல்ல திறந்தவளுக்கு உள்ளே ஒரு ஆடவன் வருவது புரிய.... மீண்டும் கண்களை இருக்கி மூடிக் கொண்டாள்.... வந்தவன் அவள் அருகில் அமர்ந்து அவள் கேசத்தை தொடப்போக.....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
தர்மன் ஐயா : இது நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லையே... நான் என் செய்வேன்... நான்கு வம்சத்தினருக்கும் அழிவில்லை என்றல்லவா அக்குடும்பத்தினரிடம் விவரித்து வந்தோம்... ஆனால் இப்போது அக்குடும்பத்தில் மரணம் விழப்போகிறதே... மரணிக்க போவது யாரென தெரியவில்லையே... இறைவா... இது உனக்கே அடுக்குமா... கோவன்களும் சஹாத்தியவம்ச சூரர்களும் தங்களுக்கு என்ன செய்தனர்... அவர்கள் தங்களுக்கு செய்தவை எல்லாம் இவ்வுலகை காக்கத்தானே... தற்போது அவர்களை போய் காவு வாங்க பார்க்கிறாயே... கோவன்களுக்கு நிச்சயம் அழிவு வரப்போவதில்லை... அப்படி இருப்பின்... சஹாத்திவம்ச சூரர்களுக்கு தான் உன் குறியா... அவர்களில் ஒருவரா... அல்ல இருவரா... அல்ல அனைவருமா... ஏதேனும் பதில் கூறு இறைவா... குரு தந்திராவும் உயிருடன் இல்லையே.. நான் என் செய்வேன்... இறைவா.. தயவு கூர்ந்து அவர்களை கொன்றுவிடாதே... அது இவ்வுலகிற்கே பெரும் பேராபத்தை விழைவித்திடும்... மூன்று பிறவியிலும் அவர்களை மரணிக்க வைத்த நீ... இப்பிறவியிலாவது வாழ விடமாட்டாயா.... இந்த திடீர் திருப்பம் எதனால் நேர்ந்ததோ... இறைவா.... என கதறினார்....
" இவை அனைத்திற்கும் ஒரு வழி உண்டு தர்மா.... இரட்சகன்கள் பிறப்பெடுக்க வேண்டும்... ஆனால் அவர்கள் பிறப்பெடுக்க துளியும் வாய்ப்பில்லை... இரட்சகன்கள் என்றோ அழிந்துவிட்டனர்.... அவர்கள் பிறப்பெடுப்பதற்கு வாப்ப்பே இல்லை... எங்களுக்கு அழிவே இல்லை ஹாஹாஹா... " என்ற ஒரு அசிரீரி குரல் அங்கு திடீரென கோரமாய் வெடிக்க....
தர்மன்ஐயா : இரட்சகன்களா... அதற்கு வாய்ப்பே இல்லையே.... கோவன்கள் நாகனிகள் சஹாத்தாயவம்ச சூரர்கள் மற்றும் யாளி வம்சத்து வீராங்கனைகள் மரணமடைந்தால் தானே இரட்சகன்கள் பிறப்பெடுப்பர்....
" ஹாஹாஹா... யான் தான் கூறினேனே... அவர்கள் பிறப்பெடுக்க போவதில்லை... இப்புவி மீண்டும் எங்கள் வசம் வரப்போகிறது..."
" வீண் கணா காணாதே... இப்புவி உங்களின் வசம் என்றும் வராது.... இரட்சகன்கள் பிறப்பெடுப்பர்.... இல்லையெனில் கோவன்கள் உங்களை அழிப்பர்.... எதுவாயினும் இப்புவி தங்கள் வசம் வராது.... " என்று திடீரென யாரோ அலர.. திரும்பிய தர்மன் ஐயா அங்கு குரு தந்திரா ஒளியின் நடுவில் சினத்துடன் இருப்பதை கண்டு அதிர்ந்தார்....
தர்மன்ஐயா : குருவே....
குரு தந்திரா : தர்மா.. விதியை நம்மால் மாற்ற இயலாது.... நிகழ்வது நிகழட்டும்... இப்புவியில் தீயசக்தியின் ஆதிக்கம் இல்லாமல் இருப்பதற்கு காரணமாய் இருந்தவர்களே இவர்களின் அழிவிற்கு முக்கிய காரணமாய் இருப்பர்.....
" அதற்குள் கோவன்கள் அழித்த தீயசக்தியை நாங்கள் உயிர்த்தெழ வைத்தால்.... " என்று நக்கலாய் வர...
குரு தந்திரா : அது இப்பிறவியில் என்றுமே நிகழாது... அதற்கு என்றும் கோவன்கள் அனுமதிக்கவும் மாட்டர்... தங்களால் கோவன்களை தொட கூட இயலாது...
" உண்மை தான்... கோவன்கள் எங்களை விட மிக மிக மிக அபார சக்தி படைத்தவர்கள்... ஏன் இப்புவியிலே மிகப்பெரிய அபார சக்தி படைத்தவர்கள்... ஆனால் அவர்கள் தீயக்தியை தான் அழிப்பர்... நாங்கள் தீயசக்தி அல்லவே... இறைவனை போற்றி வளர்ந்தவர்களே... "
குரு தந்திரா : எதுவாயினும் தாங்கள் புவியை அழிக்க தொடங்கியதுமே இறை சக்தியை மறந்தவர்கள்... ஆதலால் தாங்கள் தீயசக்திகளே....
" இறந்தும் உமக்கு திமிர் அடங்கவில்லையோ.. உம் கோவன்களையே அழித்து காண்பிக்கிறோம் பார்..." என்று நடக்காததை வைத்து சவால் விட...
குரு தந்திரா : ஹ்ம்.... பைத்தியத்தின் புலம்பலை நான் செவி மடுப்பதில்லை... கோவன்களுக்கு என்றும் அழிவில்லை... அவர்கள் மரணமடைந்தாலும் மீண்டும் பிறப்பெடுப்பர்....
" பார்க்கலாம் " என அலரியவாறே அமைதி நிலவியது..
தர்மன் ஐயா : குருவே என்ன நிகழ்கிறது இங்கு...
குரு தந்திரா : அனைத்தும் விதி தர்மா... நம்மால் ஏதும் செய்ய இயலாது... இவர்களை அழிக்க பஞ்சலோகத்தினவரால் மட்டுமே இயலும்... ஆனால் அவர்களும் பிறப்பெடுக்க போவதில்லை... இரட்சகன்களின் பிறப்பு இப்புவியின் அடிமட்டத்தில் நிகழுமென்பது தான் விதி... ஆனால் அப்படி ஓர் இடமும் இல்லை... அவர்கள் பிறப்பெடுக்க போவதும் இல்லை.... என்றதுடன் மறைந்தார்....
இரண்டு வருடம் முன் நிகழ்ந்ததை நினைத்து வெறுமையான உணர்வுடன் கண்களை திறந்தார் தர்மன் ஐயா....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
மௌனம் ஆட்சி செய்த அப்பேரவையில் எங்கும் அகோரமாய் ஒளித்தது ஒரு பயங்கர சிரிப்பொலி.... அதனை தொடர்ந்து வந்தது இன்னும் சில சிரிப்பொலிகள்.... அங்கு திடீரென ஒளியூட்டப்பட.... பலாயிரக்கணக்கான மனிதர்கள் கூடியிருந்த மிகப்பெரிய அவை அது.... அனைத்திற்கும் மையத்தில்.... மூன்று பெரிய கன்னாடி சவப்பெட்டிகள்..... அதற்குள் இருப்பது அனைத்தும் வெளியில் வெறும் மாயம் தான்.... எவராலும் காண இயலாது..... அந்த பெரிய அவையில் மிக நுனுக்கமாய் அமைக்கப்பட்ட பெரும் மேடையில்.... பனிரெண்டு சிம்மாசனங்கள்.... அதில் நடுவில் மூன்று மிகப்பெரிய சிம்மாசனங்கள்... அங்கு கூடிடயருந்த மனிதர்களனைவரின் வதனத்திலும் ஒரு வித ஏக்கம்... பயம்... பரிதவிப்பு... பதட்டம்... என மகிழ்ச்சி என்ற உணர்வு இருப்பதையே மறந்தவர்கள் போலிருந்தனர்.... அம்மூன்று சவப்பெட்டிகளிலும் ஒரு ஒரு அச்சு இருந்தது.... அதை விழுங்க துடிக்கும் மாபெரும் சர்ப்பம்.... வாணுயரத்திற்கு இருந்த ஓர் மாபெரும் உருவம் அம்மைதானத்தை மேலிருந்து பார்ப்பதை போல் சிலை அமைக்கப்பட்டிருந்தது... ஒரு ஆலுயர வாளை ஏந்திய ஓர் கரும்போர்வை போர்த்திய உருவம்... அச்சவபெட்டிகளை நெருங்கியது... ஆலுயர வாள் வாளா அல்ல கோடாரியா என்று சந்தேகத்தை எழுப்பம் அளவிற்கு இருந்தது... அதனை ஏந்திவாறு வந்த அவ்வுருவம் அச்சவபெட்டிகளை நோக்கி அதிவேகமாய் ஓங்கியது....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
" இது எந்த இடம்... நாம எப்டி இங்க வந்தோம்... " என்று அருண் வினவ....
" தெரியல மச்சி " ராகவ் பதிலளிக்க...
" அப்பாவ பாக்கத்தான டா போனோம்... அப்ரம் என்ன ஆச்சு.. எப்டி இங்க வந்தோம்..." வருண் மீண்டும் வினா எழுப்ப..
" டேய் அதல்லம் விடுங்க டா... இவ்ளோ பெரிய அரண்மனைய நாம இந்த ஊர்ல பாத்ததே இல்லையே டா... " என அஷ்வித் வினா எழுப்ப...
" ஐ தின்க் மச்சான்... நா மதன்கௌரி அண்ணா விடீயோ ஒன்னுல பாத்துர்க்கேன் டா.... நம்ம தமிழ்நட்ல ஒரு மிகப்பழமையான அரண்மனை இருக்காம்.. ஒரு வேலை இது அதுவா இருக்குமோ... " என்று அதி தீவிரமாய் மிதுன் விவரிக்க...
" அடேய் அது பாண்டில இருக்குடா... இது என்ன பாண்டியா? ?" என இவனே பதில் கொடுத்து வேறொரு வினாவும் எழுப்பினான் ராம்....
" வாஸ்த்தவம் தான் " என ஒத்துக்கொண்டான் ஆதவ்...
" சரி உள்ள போய் பாப்போமா " என ஆதவ் வினவ... அனைவரும் அமோதித்து உள் நுழைய போக.... திடீரென ஏதோ அதிபயங்கர ஒலியுடன் வெடித்தது...
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
முகில் : இவனுன்க இறந்து இன்னையோட பத்து வர்ஷமாகுது... என்றான் பெருமூச்சுடன்...
மற்ற நாயகர்கள் : ம்ம் ஆமா...
வர்ஷி : ஆனா எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அத்தான்...
நிரு : அவனுங்க உயிரோட தான் இருப்பானுங்க...
மது : நிச்சயமா எங்கையாவது இருப்பாங்க.. என்று வலிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினாள்...
அஷ்வன்த் : பத்து வருஷமா இருக்க நம்பிக்கை இன்னைக்கு மட்டும் எங்களுக்கு போகவா போகுது... ஆமா மத்தவனுங்க எங்க....
தான்யா : எல்லாரும் ஒன்னா வெளிய போய்ர்க்காங்க அத்தான்....
சரண் : நிச்சயமா எங்க மச்சானுங்க எங்கையாவது இருப்பானுங்க.... நாம கவலப்பட வேண்டாம்...
துருவன் : ஆனா எங்க சித்தா... எங்க இருப்பாங்க... இவனின் வினாவிற்கு அங்கு எவரிடமும் பதிளில்லை.... ஏனெனில் அவர்களின் வினாவும் அதுவே....
" இங்க இருப்பாங்க " என்ற குரல் கேட்டு அனைவரும் பின் திரும்பி பார்க்க.... அங்கிருந்தவர்களை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைய.... இதை கூறியது எவரென அறிந்ததும் பேரதிர்ச்சியடைந்து அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் நின்றனர்.....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
கார்த்திக் : மச்சான்ஸ்... உங்க அக்கா எங்க...
அருண் : எதுக்கு...
கார்த்திக் : நான் என் லவ்வர கேக்குறேன் உனக்கு என்ன டா...
மிதுன் : கேப்ப கேப்ப... அதோ அங்க தான் அத்த கூட இருக்கா...
கார்த்திக் : அத்தையா... எந்த அத்தை
ராம் : மாயமோகினிம்மா கூட...
கார்த்திக் : ஓஹோ... சரி தங்கச்சிங்க எங்க....
ராகவ் : வேற எங்க... எல்லாம் போர்வைய போத்திட்டு தூங்கிகிட்டு இருக்காளுங்க....
அஷ்வித் : டயர்ட்ல தூங்குராலுங்க விடுங்க டா...
மதி : ம்ம்ம் சரி துரு எங்க...
ஆதவ் : அதான நானும் வந்ததுல இருந்து துருவ பாக்கலையே...
வருண் : மாமா சித்தாவ கூட காணுமே...
நாயகன்கள் : தெரியலயே டா....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
க்ரிஷ் : இந்த கேஸ் ரொம்ப ஸஸ்பீஷியஸா இருக்கு டா... மண்டைய பிச்சுக்க வேண்டியதா இருக்கு...
ரித்விக் : அட என்ன டா நீயே இப்டி சொல்லிட்ட... உன் மூளை இப்டிலாம் சொல்ல விடாதே...
சத்தீஷ் : அட போடா... இந்த கேஸ் எங்க ஆரம்பிக்கிதுன்னே தெரியல டா... எங்கெங்கையோ போய் கண்டம் தாண்டி முடியுது...
இந்திரன் : பின்னாடி இருக்குரது எந்த கேனையன்னு தெரியல... தடையத்த விட்டுட்டு போரவன் கொஞ்சொமாவது இந்த கேஸுக்கு ஒர்த்தா விட்டுட்டு போக மாட்டான்.... லூசு மாறி இதல்லாம் விட்டுட்டு போய்ர்க்கான் டா....
முகில் : பஞ்சு முட்டாய்.. குச்சி முட்டாய்... ஒடஞ்ச கலர் கன்னாடி... பிஞ்ச செருப்பு.. வீணாப்போன பருப்பு... னு இதெல்லாம் வச்சிட்டு என்னடா கண்டுப்புடிக்கிறது...
திவ்யா : எனக்கென்னமோ எவனோ ஒருத்தன் உங்கள வச்சி செய்ரான்னு நெனக்கிறேன் டா... என சிரித்தவாறே உள்ளே வந்து அனைவருக்கும் அருந்த பாலை கொடுத்தாள்...
க்ரிஷ் : அப்டி இருக்குமோன்னும் எனக்கு டௌட்டா இருக்கு ....
நாயகன்கள் : இருக்கும் இருக்கும்....
இவர்கள் இப்படி உரையாடியவாறு இருக்க.... சட்டென கண்களை திறந்தாள் அவள்.... ப்ரியா....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
இரம்மியமான அக்காளை வேலையை இரசிக்க இயலாமல் ஜன்னல் வழியே விண்ணை வெரித்தவாறு இருந்தான் சித்ரன்... சித்து.. அவன் கண்களை கருப்பு கன்னாடி மறைத்திருந்தது... உள்ளே கண்மணிகள் அசையாதிருந்தது... அப்போது திடீரென கதவு திறக்கப்பட... மெல்ல திரும்பியவன்... அருகிலிருந்த ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு தரையில் வைத்து பார்த்து கதவருகில் சென்று வெளியே வந்தான்.... அங்கே இவன் உயரத்தை ஒத்த இருவர் திரும்பி நின்று ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர்... அவர்களின் ஓசையை வைத்து யாரென உணர்ந்துக் கொண்டவன்... உடனே உள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.... கதவு அடைக்கப்படும் ஒலி கேட்டு திரும்பிய அவ்விருவர் வதனத்தை மறைத்து கைக்குட்டையை அணிந்திருந்தனர்.... சத்தம் வந்த கவருகில் நெருங்கிய இருவரும் அக்கதவை திறக்க.... உள் தாப்பாளிடப்பட்டிருக்க... தீவிரமடைந்த இருவரும் மீண்டும் அக்கதவை திறக்க முயற்சிக்க... சட்டென திறந்துக் கொண்டது அக்கதவு.... உள்ளே நுழைந்தவர்களின் கண்களுக்கு அகப்பட்டதோ அவ்வறை மட்டும் தான்... அங்கு யாரும் இல்லை...
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
ஆளை மயக்கும் மை விழி கண்ணீர் சிந்தி யாருக்கோ காத்திருக்க.... அவளவனின் வருகையோ நீண்டுக் கொண்டே இருக்க... இன்னும் அவன் வந்தபாடில்லை... எவருக்கோ காத்திருப்பவளை தோல் தொட்டு நிலை கொண்டுவந்த மற்றையவள்... தன் காத்திருப்பும் விணானதாய் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருக்கு இட்ட அணையை திறந்து உணர்த்தினாள்..... அவ்விருவரையும்... வெறுமையான உணர்வுடன் வந்தணைத்துக் கொண்டாள் மற்றயவள்... " நம் காத்திருப்பை அறிந்தால் நிச்சயம் நம்மை தேடி வருவர்... காத்திருப்போம்... நம் விதி முடிவுபெரும் வரை காத்திருப்போம்... வெல்வது விதியா.. அல்ல நம் காதலா என்று பார்த்துவிடுவோம்..." என்று கூற....
வெகு தொலைவில் நிலவை வெரித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தமர்ந்த இருவரின் விழிகளும் எவரையோ தேடி தேடி அலைந்து சோர்ந்திருந்தது... அவர்கள் வந்ததை திரும்பாமலே அறிந்தவன்... " நாம் தேட வேண்டிய இடத்தை இன்னும் அடையவில்லை போலும்... நமக்கான காலம் நம்மை நெருங்கியதன்றோ... நம் பாதை நேர் வழியில் திரும்பிடும்... அதுவரை காத்திருப்போம்... நமக்கான பாதையை நிச்சயம் அவர்களே வகுத்திருப்பர்... அதை கண்டறிவோம் " என்றதடுன் மூவரின் விழுகளும் தெளிவடைந்தது....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
அடர்ந்த காரிருள் மேகங்களின் இடையே எட்டு வாள்கள் கீழிறங்க.... அதன் அனைத்திற்கும் மேலாக மூன்று பலபலக்கும் வாள்கள் மிக கம்பீரமாய் விவேகத்துடன் வீசி எறியப்பட.... வீசி எறியப்பட்ட வாள்கள் பேய் மழையிலும் எவரையோ நோக்கி விரைந்தோட... அபார இடி ஒன்று உலகமக்கள் அனைவரையும் நொடி பொழுதில் நிலைகுழைய செய்திட... நொடி தாமதிக்காது மூன்று நிழல்களை நோக்கி விரைந்த வாள்கள் திடீரென எதிலோ குத்துப்பட போக.... அதன் கூர் முணை எதையோ கிழிக்க ஆர்வமாய் காத்திருக்க..... நொடி பொழுதில் அங்கு ஏதோ நிகழ்ந்திருக்க..... அதி பயங்கர மின்னல் ஒன்று இருள் சூழ்ந்து அம்முழு உலகை நொடி பொழுதில் ஒளிமயமாக்க.... சுற்றி எங்கிலும் குறுதி வெள்ளம் ஓட... பலர் வீழ்ந்திருக்க.... சிலர் உயிரை பிடித்துக் கொண்டு காத்திருக்க..... பல உயிரற்ற உடல்கள்.... சில காயம்பட்ட வீரர்கள்... பலாயிரம் உயிர்களை காவு வாங்க காத்துக் கொண்டிருந்த சில கோர கண்களின் முன்...... அனைத்திற்கும் நடுவில்..... உடல் விரைத்து.... விழிகள் இருகி மூடப்பட்டு.... வதனம் இருகி.... கரங்கள் வாள்களை இருக்கி.... உடல் முழுவதும் மழையில் நனைந்து.... பாதி உடலில் குறுதி வலிந்தோட..... அபார காயங்களுடன்.... சிம்மையாளிகள் ஆறு அவர்களுக்கு தலைவணங்கி அமர்ந்திருக்க.... அவர்களை கண்ட பலர் மரியாதையாய் வாள்களை உள் வைத்து கால்களை மடக்கி முட்டியிட்டு தலை குனிந்திட..... தமக்கென்று உரிதான கம்பீரத்துடன்.... அந்த மொத்த உலகமே அதிர்ச்சியில் வதனம் வெளிரி போய் அவர்களை காணும் அளவிற்கு நின்றனர் அம்மூவர்.....
அப்போது அவ்விடமே அரண்டு காணும் நோக்குடன் மிக பயங்கர ஓலத்துடன்.... உலகையே அதிர வைத்தது ஓர் ஒலி... அங்கோ..... வாணை எட்டிய ஒரு மிகப்பெரிய சர்ப்பம் சீரிக் கொண்டு வர..... மின்னலொன்று மிக கோரமாய் உலகை தாக்கிட...... மூவரின் கடுங்கோபமுற்ற அலரல் அனைவரின் காதுகளையும் கிழிக்க..... அனைவருக்கும் சப்த்தநாடியும் ஒடுங்கி பொனது.....
சர்ரப்லோகத்தின் மாய காதல்...
இதயங்களே... ஸர்ப்ரைஸ் பிடிச்சிருக்கும் னு நம்புறேன்... யா இது தான் நம்ம மீண்டும் தொடரும் காதல் பார்ட் 2 பட் வேற ஒரு சின்ன அதிர்ச்சியான செய்தியும் இருக்கு... அஸ் யு ஆல் நோ... என்னோட நாழாவது கதை ஒரு காதல் கதை... நா ஆடரா முடிச்சிட்டு தா அடுத்தடுத்த கதைக்கு போவேன்.... சோ... என் நாழாவது கதைக்கும் இந்த கதைக்கும் இடையில ஒரு கதை இருக்கு இதயங்களே... அதயும் முடிச்சிட்டு தா இதுக்கு வருவேன்... எப்போ னு தெரியல.... ஒரு வேளை மே மாச விடுமுறைல நாழாவது கதைய தொடங்கி முடிக்க வாய்ப்பிருக்கு.. பாக்கலாம்... நீங்க எனக்காக காத்திருப்பீங்கங்குர மலையளவு நம்பிக்கைல தான் இந்த இரகசியத்தை வெளியிற்றுக்கேன்.... கதை பேரு புடிச்சிர்க்குல்ல.... ரொம்ப கொழப்புதோ.... கவலை வேண்டாம்... கொஞ்சம் காத்திருங்க தானா எல்லாம் புரிஞ்சிடும்...😜
அப்ரம் ஒரு முக்கியமான விஷயம்... ஹீரோஸோட பசங்க ஒரு இடத்துல நின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க... அதுல அஷ்வித் & மிதுன் ன்னு இரெண்டு நேம் இருக்கும்... கொழப்பிக்காதீங்க....
ரித்விக் மற்றும் மதுவின் மகன் அஷ்வித் கரண் ( ரஞ்சித் கரண் மாற்றப்பட்டிருச்சு)
சரண் மற்றும் வர்ஷியின் மகன் தேவமிதுன் (தேவப்ரகன் மாற்றப்பட்டிருச்சு)
மறக்காம மொத்த கதையோட ஓவரால் கமென்ட்ஸ் குடுங்க ப்லீஸ்.... ப்லீஸ்... உங்க தீராக்காக. பா....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro