காதல்-69
அங்கு அனைவரும் கோவன்களின் வெறி அடங்கா வதனத்தை கண்டு மௌனத்தில் மூழ்கி இருக்க.... சிம்மயாளிகளின் திடீர் உருமலில் அனைவரும் நிலையடைய.... சுற்றியிருந்த பல உயிரற்ற ஜடங்கள் காற்றோடு காற்றாய் மறைந்திருக்க... குள்ளமானிடர்கள் சாதாரண நரிகளாய் உருவெடுத்து... அவர்களின் சாபம் நீங்கியதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் கோவன்களிடம் நன்றியை தெரிவித்து விட்டு காட்டிற்குள் புகுர.... அங்கே ஒருங்கே ஒலித்தது யாளிகளின் வெற்றி முழக்கம்....
கோவன்கள் மூவரும் திரும்ப... ஓடோடி வந்த நம் மற்ற நாயகர்கள்.... " நாம ஜெயிச்சாட்டோம் " என கத்திக் கொண்டே அணைத்துக் கொண்டனர்.... அங்கே சூழ்ந்திருந்த கருமேகங்கள் மறைந்து நகர.... நீல வாணம் தெளிவாக.... நிலவும் மலையடியில் மறைய... சூரிய கதிர்கள் அமிர்தமாய் நிலத்தில் சரிய... தங்கள் பகலவனை கண்ட மலர்கள் புன்னகை சூடி மொட்டுகளை விரித்தாட... தேனீக்கல் சுதந்திரம் கிடைத்து விட்டதாய் மகிழ்ச்சியுடன் அம்மலர்களின் கசந்த மணத்தை நுகர வேண்டி சுற்றி சுற்றி வர.... அப்போது.... பறபறவென்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி நோக்க.... விண்ணில் பல வகையான பறவைகளும்... நிலத்தில் வெகு தொலைவில் வித விதமான பெரிய விலங்குகளிலிருந்து சிறு பூச்சி வரை அனைத்தும் அங்கு ஒரு நொடியில் குழுமியிருக்க.... அவையை கண்டு அனைவரும் பிரம்பிப்படைய.... கோவன்களுக்கு தலைவணங்கிய அவ்வனைத்து உயிரினங்களும் நன்றியை தெரிவிக்க.... அவர்களின் மென்புன்னகையை கண்டதும்... அங்கிருந்து அமைதியாய் நகர்ந்தது....
இப்போது கோவன்களின் பார்வை அவர்களையே பார்த்து நின்ற மாயா மற்றும் மோகினியின் மீது விழ.... அவ்விருவரையும் கண்டு அவர்களின் அருகில் நெருங்கிய மூவரும்... தமக்கைகளே.. என்ற தழுதழுக்கும் குரலுடன் அவர்களின் கரங்களை பிடிக்க... வெடித்து அழுதனர் இருவரும்... அதிலும் மோகினியின் கதறல் முன்பை விட அதிகரித்திருந்தது...
மோகினி : இளவல்களே... என்னை மன்னித்து விடுங்கள்.. என்று நான் செய்த அனைத்திற்கும் வினவ இயலாது தான்... ஆனால் அதை தவிர்த்து எம்மிடம் வினவ வேறேதும் இல்லை... தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள்...
இந்திரன் : தமக்கையே... பிள்ளையை தாய் தண்டித்ததும் அத்தாய் பிள்ளையிடம் மன்னிப்பு வேண்டுவதில்லை... அக்குழந்தையும் அதை எதிர்பார்ப்பதில்லை... அதை போல் தான்.. உங்கள் பிள்ளைகளான நாங்கள் அதை எதிர்பார்த்ததே இல்லை....
சத்தீஷ் : எங்களை மீண்டும் உங்கள் இளவல்களாய் ஏற்றாலே போதும்....
மோகினி : தாங்கள் தான் கண்ணா எம்மை உங்களின் தமக்கையாய் ஏற்க வேண்டும்... என்றும் தாங்கள் என் இளவல்கள் தான்...
க்ரிஷ் : தாங்கள் என்றுமே எங்கள் தமக்கை தான்... என்று அணைத்துக் கொண்டனர்....
மோகினி : என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள்... நினைவில்லாமல் பலியிட முயன்றேன்... காதலை பிரிக்க முயன்றேன்... உயிரை பிரிக்க முயன்றேன்... மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்...
ஒவீ : தாங்கள் மன்னிப்பு வேண்ட அவசியம் இல்லை தமக்கையே.. தாங்கள் செய்தவை அனைத்தும் அத்தீயசக்தியினால் தானென நாங்கள் அறிவோம்...
நிரு : ஆதலால் மன்னிப்பிற்கு இங்கு அவசியம் இல்லை...
ரக்ஷா : நாங்கள் தான் முன்பு உங்களை புரிந்துக்கொள்ளாமல் பேசிய அனைத்திற்கும் மன்னிப்பு கோர வேண்டும்...
மோகினியின் கண்களில் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுத்தது...
மாயா : நான் முன்பே கூறினேனல்லவா... நம் உறவுகள் என்றும் நம்மை ஏற்றுக்கொள்வர் என்று...
ரவி : சரியாய் கூறியுள்ளீர் தமக்கையே... ஆனால் தாங்கள் இருவரும் புரிந்துக் கொள்ள தான் பல காலம் கடந்து விட்டது...
மோகினி : என்ன செய்வது சகோதரா... அனைத்தும் தங்களால் தான்....
வீர் : எங்களாலா... நாங்கள் என்ன செய்தோம் தமைக்கையே...
மோகினி : தாங்கள் நாழாயிரம் வருடம் கழித்து பிறப்பெடுத்ததிற்கு முன்பே பிறப்பெடுத்திருந்தால் இவையெல்லாம் நிகழ்ந்திருக்குமா....
சரண் : என்ன செய்வது அண்ணியாரே... விதியின் விளையாட்டு...
மோகினி : சாக்கு சொல்லக்கூடாது .... உண்மை காரணத்தை கூறு...
ரித்விக் : சகோதரியே... அது இறைவனின் செயல் தானே... அவரிடமே வினவிடுங்கள்....
மோகினி : இறைவனிடம் வினவ இயன்றிருந்தால் நான் ஏன் சகோதரா உம்மிடம் வினவ போகிறேன்...
ப்ரியா : அதுவும் சரி தான் அண்ணியாரே... ஆனால் நாங்கள் வெகு காலம் கழித்து பிறந்ததற்கு தாங்களும் ஒரு காரணம் தான்....
மாயா : அவள் என்ன டி செய்தாள்...
மோகினி : அதானே... நான் என்ன டி செய்தேன்...
வீனா : தமக்கையே.. தாங்கள் உயிர் பலி கொடுத்ததற்கு நாங்கள் விரைவாக பிறக்க வேண்டுமென ஏதேனும் யாகம் நடத்தியிருக்கலாம் அல்லவா....
மோகினி : அதெல்லம் இயலாது தங்கையே...
தான்யா : ஏன் அண்ணியாரே இயலாது... தாங்கள் நினைத்ததில் அந்த தீயசக்தியே விடுப்பெற்றது நாங்கள் பிறந்திருக்க மாட்டோமா....
மோகினி : மாட்டீர்களே....
நாயகிகள் : ஏன்??? என ஒரு சேர வினவ...
மோகினி : ஏனெனில் மதிநட்ச்சத்திரம் வரும் காலத்தில் தானே தாங்கள் அனைவரும் பிறப்பெடுப்பீர்கள்....
மது : ஹாஹா... இப்போது உண்மையை நீங்களே கூறிவிட்டீர்கள் பார்த்தீர்களா....
மோகினி : வாலுங்களா... என்னிடடிமிருந்தே உண்மையை வாங்கி விட்டிர்களா.... என பொய்யாய் கோபித்துக்கொள்ள...
பவி : தங்களிடம் விளையாடாமல் வேறு யாரிடம் தமக்கையே விளையாட போகிறோம்...
மாயா : விளையாடுங்கள் விளையாடுங்கள்.... என சிரித்துக் கொண்டே கூற....
அங்கு சில நிமிடங்களிளே அனைவருக்கும் மாயமோகினியுடன் ஒரு புது நட்புணர்வு பிறப்பெடுத்திருந்தது... அப்போது திடீரென தங்களின் உடலில் ஏதோ ஒளி எழுவதை கண்டுக் கொண்ட மாயா மற்றும் மோகினி முளிக்க.... அனைவரும் அதை அதிர்ச்சியுடன் நோக்க... திடீரென மாயாவும் மோகினியும் அலர தொடங்கினர்... அதை கண்டு அனைவரும் தமக்கைகளே.... அண்ணியார்களே... என கத்த.... அதுவோ அங்கு ம்யூட்டில் தான் போடப்பட்டது...
அவர்களை சூழ்ந்துக் கொண்ட ஒரு பெரும் ஒளியில் இருவரும் மறைந்து போய் விட.... இவர்களோ அதிர்ச்சியில் கத்திக் கொண்டே இருக்க.... இறுதியில் வந்த மிகபெரிய ஒளியுடன் அவளின் மாபெரும் அலரலும் காதை கிழிக்கும் ஒலியுடன் வெளியேற..... அவ்வொளியில் அனைவரும் கண்களை மூடி திறக்க.... அங்கோ அதே அமைதியான வதனத்தில் சிறு புன்னகையுடனும் முகத்தில் பிரம்மிப்புடன் நின்றாள் மாயமோகினி.... ஒரே மாயமோகினி.... அவள் அவளையே சுற்றி சுற்றி பார்க்க.... அவளுள் இருந்த தீசக்தி அடியோடு அழிந்ததற்கு அடையாளமாய் அவளின் கருமை படைத்த கண்கள் பழைய படி மாறியது.... இவையை கண்டு அனைவரும் அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள.... முழு மனிதபிறவியானாள் அவள்.... அப்போது சட்டென கேட்ட அலரலில் அனைவரும் திரும்பி நோக்க..... அங்கோ ஒரு பத்து வயது சிறுவன்.... அடர்ந்த அழகான புருவம்... அடர்த்திதான கேசம்... மூன்றடி உயரம்... சிவந்த நிறம்... மாயமோகினியின் சாயலுடன் மஞ்சள் நிற கண்களுடன்... கண்களை இருக்கி மூடி கத்திக் கொண்டிருந்தான்.... அவன் அருகில் யோக்யா அமைதியாய் நிற்க.... யோக்யாவின் இறெக்கையை கட்டிப்பிடித்தவாறே பழைய நிலைக்கு திரும்பிய கயல் சற்றே காயாமல் நனைந்திருந்த உடையுடன் தூங்கிக் கொண்டிருந்தாள்....
அச்சிறுவன் மெல்ல கண்களை திறக்க.... கோவன்கள் மூவரும் " துரு " என கத்த..... அதில் அவர்களை நோக்கி திரும்பியவன்... அவர்கள் தன்னை கண்டு ஆனந்த கண்ணீர் சிந்துவதை உணர்ந்து தன்னையே ஒரு முறை சுற்றி பார்த்தவன் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போனான்.... அடுத்த நொடி ஓடிச் சென்று அவன் மாமன்களை கட்டி அணைத்து அழ தொடங்கினான்.... முன்பு அவன் ஓட்டத்தில் தடுமாற்றம் இருக்கும்... ஆனால் இப்போது அவன் கால்கள் அப்படியில்லை... கரங்கள் அவன் காலை கூட தொடாது.. ஆனால் இப்போது மற்றவரின் தலையை தொடுமளவு உயர்ந்திருந்தது... கருப்பாய் இருந்தவன் இப்போது பளிச்சென இருந்தான்...
க்ரிஷ் : டேய் ஏன் டா அழர....
துருவன் : மாமா என்ன பாறேன்.. நா அப்டியே மாறீட்டேன் பாரேன்... என சுற்றி சுற்றி அவனையே காட்ட... அப்போது மற்றொன்றும் அவனுக்கு புரிந்தது... அவன் மொழி... பேச்சு வழக்கும் மாறு பட்டிருந்தது...
" உன்னோட சாபம் நீங்கீடுச்சு துருவா " என்ற குரலை கேட்டு துருவன் ஆவலாய் திரும்ப... அங்கு அவன் எதிர்பார்த்ததை போலே மென்புன்னகையுடன் அவனை பத்து மாதம் சுமந்து பெற்றடுக்கையில் உயிரையும் பிரித்துக் கொண்ட அவன் தாய் மாயமோகினி நின்றாள்.... அவளருகில் ஓடினான்.... முட்டிப்போட்டு கீழே அமர்ந்த மாயமோகினி அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்....
மாயமோகினி : நாம இனி இப்டியே இருக்கலாம்... இதே மாரி.... இங்கையே...என கூற.....
துருவன் : நன்றி மா...
மாயமோகினி : சரி... நீங்கள் அனைவரும் உடனே மருந்திடுங்கள்... காயத்தில்... என கூற...
பெருமூச்சை இழுத்து விட்ட நாயகர்கள் அவரவர் காயத்தை கண்டு மெல்ல புன்னகைத்தவாறு மாயமோகினியையும் துருவனையும் ராஜ்ஜிய மர்வதன மண்டபத்தில் பத்திரமாய் விட்டு விட்டு.... யோக்யாவை கயலை யாரும் அறியாமல் வீட்டில் விட கூறிவிட்டு மருத்துவமனை சென்று மருந்திடட்டனர்.... அதன் பின் நேரம் போனதை உணர்ந்தவர்கள் வீட்டிற்குள் பூனை நடையிட்டு நுழைய.... அங்கோ நம் பெரியவர்கள் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருக்க.... " மாட்டிக்கிட்டோமே... " என்ற மைன்ட் வாய்ஸ் ஓட்டியவாறு உள்ளே நுழைந்தவர்களை அம்மாமார்கள் வருத்தெடுக்க.... அனைத்தையும் பூம்பூம் மாடு தலையாட்டுவதை போல் தலையாட்டி வாங்கி விட்டு விட்டால் போதுமென மாடிக்கு ஓடிவிட்டனர்.... அதனை கண்டு சிரித்த பெரியவர்கள் ஓர் அறையில் நுழைய... அங்கு புன்னகையுடன் வீற்றிருந்தனர் குரு தந்திரா மற்றும் தர்மன் ஐயா...
வேலு தாத்தா : ரொம்ப நன்றி ஐயா...
குரு தந்திரா : உலக உயிர்கள் அனைத்தும் கோவன்களுக்கு நன்றி செழுத்தும் சமயம் நீர் எங்களிடம் நன்றி செழுத்திகிரீரே...
தர்மன் ஐயா : நன்றி செழுத்த வேண்டியது நாங்கள் தான்... மாபெரும் ஆபத்தில் தங்கள் பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதை உணர்ந்தும்... மற்ற சிலரை போல் அஞ்சாமல் அவர்களை அழைக்காமல் விட்டீர்கள்...
மாதவன் : எங்க பசங்க மேல எப்டி ஐயா எங்களுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கும்...
முரளி : அவங்க எங்க பிள்ளைங்க மட்டும் இல்லை ஐயா.. இந்த உலகத்துக்காக பிறந்த பிள்ளைங்க... அவங்கள போய் நாங்க தடுத்து வைப்போமா....
குரு தந்திரா : நன்று... என்றும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் நிறம்பி இருக்கும்.... ஒரு முக்கியமான விஷயம் கூட.... இந்த யுத்ரபோர் இவர்களின் இந்த பிறவிவில் கோவன்களுக்கும் சஹாத்திய வம்ச சூரர்களுக்கு 25 அல்லது 26 வயதில் தான் நிகழுமெனவும்... நாகனிகளுக்கும் யாளி வம்சத்து வீராங்கனைகளுக்கும் 21 அல்லது 22 வயதில் தான் நிகழும் என முன்பே கனிக்கப்பட்டு விட்டது...
இலக்கியா : அதனால என்ன ஐயா....
தர்மன் ஐயா : இதை நீங்கள் சிக்கலென எடுத்துக் கொள்வீர்களா... அல்ல... பெரிய விடயமாய் எடுக்காமல் விடுவீர்களா என்று தெரியவில்லை... என்று யோசனையோடு கூற....
வனித்தா : எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க ஐயா....
குரு தந்திரா : சரி.... இப்புவியில் முழுதாய் நான்கு வம்சங்கள் உள்ளது... மகா வவ்சம், நாகதாரிணி வம்சம், சஹாத்திய வம்சம், யாளி வம்சம்.... மகா வம்சத்தில் பிறப்பவர்கள் தான் கோவன்கள்... நாகதாராணி வம்சத்தில் பிறப்பவர்கள் தான் நாகனிகள்... சஹாத்திய வம்சத்தில் பிறப்பவர்கள் தான் சஹாத்திய வம்ச சூரர்கள்... யாளி வம்சத்தில் பிறப்பவர்கள் தான் யாளிவம்ச வீராங்கனைகள்.... இந்நான்கு வம்சத்தை சேர்ந்தவர்கள் இவ்வுலகின் அதிசயபிறவிகள்... இந்நான்கு வமச்த்தை போல இன்னும் சில வம்சமும் இருக்கிறது.. அதில் எவரும் இப்போது பிறப்பெடுக்கவில்லை... மற்ற மனிதர்கள் அனைவருமே சாதாரண மனித பிரிவை சார்ந்தவர்கள்..
காவியா : அதுனால என்ன ஐயா....
தர்மன் ஐயா : இவ்வம்சத்தில் பிறந்த தங்களின் பிள்ளைகள் கடந்த இரண்டு பிறவியிலும் பெரும் பாலும் 30 வயதிற்கு மேல் உயிர் வாழவில்லை... ஆதலால்... என இழுக்க....
பெரியவர்கள் :அதனால ... என உடல் பயத்தில் நடுங்க வினவ....
காதல் தொடரும்.....
அதனால் என்னவாக இருக்கும்... அடுத்த அத்யாயத்தில் காண்போம்...???
ஹிஹி... ஹாய் இதயங்களே... லாஸ்ட் அப்டேட்க்கும் முன்னாடி அப்டேட் ல அதான்... லைட் ட்விஸ்ட் வச்சிர்க்கேன்.. அடுத்த யூடி தான் நம்ம MTK ஓட கடைசி அத்யாயம்... ரொம்ப பெருசு... ஐ தின்க் ஒரு 4000 எழுதுக்கள் கிட்ட வரும் னு நெனக்கிறேன்.... நேத்த போற்றுப்பேன் பா... கடைசி நேரத்துல என்னால எழுதி முடிக்க முடியல.. ரொம்ப லேட்டானதால போட முடியல... எழுதவும் முடியல... ( ரொம்ப லேட் னா மிட் நைட்டைடுலாம் நெனச்சிரதீங்க... 10:30 தான்..) அது போகட்டும் விடுங்க... எபிலாக் லாம் இல்ல இதயங்களே... மொத்தமும் கதைலையே முடிச்சிடுவேன்... சோ அந்த அப்டேட்ட நைட் குள்ள குடுத்துர்ரேன் இதயங்களே... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro