Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-66

திடீரென கேட்ட உருமலில் அனைவரும் திடுக்கிட்டு திரும்பிட.... அனைவரின் பின்.... தங்கள் விழிகள் இரண்டும் கருமை தத்தெடுத்திட..... கால்களை நிலத்தில் உரசி.... கோர பற்களை தீட்டி.... சுயநினைவை இழந்து அசுர வேகத்தில் இரையை தேடி வெறிகொண்டு வேதபுரத்தை நோக்கி ஓடியது சிம்மயாளிகள்....

முதலில் புரியாது அதிர்ச்சியில் விழித்த நாயகர்களுக்கு விரைவில் இது கோராவின் வேலை என புரிய.... வேதபுரத்தில் அது நுழைய கூடாதென அதை தடுக்க விரைந்தனர்....

ஏனெனில் சிம்மயாளிகள் கிராமத்திற்குள் இவ்வெரியுடன் நுழைந்தால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.... அது மட்டுமல்லாம் இத்துனை பெரிய விலங்கு உலகில் வாழ்வது தெரிந்தால் அது பணத்திற்காக பொருளாய் மாற்றப்படும் என்பதற்காகவே... மற்ற நாயகன்கள் அவர்களின் யானையாளியை கொண்டு அதை தடுக்க விரைய.... திடீரென எங்கிருந்தோ வந்த கருப்பு உருவங்கள் யானையாளிகளை தடுக்க.... யானையாளிகளோ அவைகளை மிதித்து விட்டு அவசரத்தில் விரைந்தோட... மீண்டும் அவ்வுருவங்கள் யானையாளிகளை தடுக்க..... ஆத்திரமடைந்த அஷ்வன்த் மற்றும் முகில் மற்றவர்களை முன்னேற கூறிவிட்டு... அவர்கள் மாத்திரம் அவ்வுருவங்களை அவர்களின் யாளிகள் கொண்டு அழிக்க முயன்றனர்..... அதி வேகமாய் சென்ற யானையாளிகள் சிம்மயாளிகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல்.... நாகனிகளின் மாயையில் சிம்மயாளிகளின் முன் சட்டென நிறுத்தப்பட.... ஓடோடி வந்த சிம்மயாளிகள் யானையாளிகளின் தந்தத்தில் மோதி நகர இயலாமல்.... இருக்க.... ஒவ்வொரு சிம்மயாளியையும்... இரு இரு யானையாளிகள் தடுத்து பிடித்திருக்க..... மெல்ல மெல்ல.... சிம்மயாளிகள் தங்களின் தலையை தந்தத்தில் மோதி.... தள்ளிக் கொண்டு முன்னேற முயல..... மேல் அமர்ந்திருந்த நாயகன்கள் வேகமெடுத்தனர்... ஓரிரு நொடிகள் தாக்கு பிடித்த யானைனாளிகளை.... சிம்மயாளிகள் மூன்றும்..... சட்டென இடித்து.... தூர வீசியது.... இதை எதிர்பார்க்காத அனைவரும் பயங்கரமாய் அலர.... நாயகன்கள் யானையாளிகளிலிருந்து கீழ் குதிக்க.... யானையாளிகள் கீழே விழும் முன்னே.... அதை கடினப்பட்டு தங்களின் மாயையில் தாங்கி பத்திரமாய் கீழ் இறக்கினர் நாகனிகள்.....

மீண்டும் சிம்மயாளிகள் ஓட்டத்தை தொடர.... மற்ற நாயகர்கள் சிம்மயாளிகளை நோக்கி ஓடினர்... அவர்களுடுன் அஷ்வன்த்தும் முகிலும் இணைந்துக் கொள்ள.... அவர்களை தடுக்க விரைந்த உருவங்களை யானையாளிகள் பதம் பார்த்தது....

விரைந்தோடிய நாயகன்கள் திடீரென ப்ரேக் போட்டு நின்றனர்... வெகு தொலைவில்.... சிம்மயாளிகள் மூன்றும் ஓர் குறிப்பிட்ட இடத்தை தாண்ட இயலாமல் தினறிக் கொண்டிருந்ததை கண்டு... முட்டி மோதிய மூன்றும் அவ்விடத்திலிருந்து அசைய கூட இயலாமல் மோதிக் கொண்டு நிற்க..... அதன் பெரிய உருவத்தில் முன்னிருப்து எதென அறியாமல் அனைவரும் முன் ஓடிச் சென்று நோக்க..... அங்கோ சிறிதே காயங்களுடன்..... கோராவை வீழ்த்திய கோவன்கள் மூவரும்.... அவரவர் சிம்மயாளிகளை தங்கள் இரு கரங்களில் மோத விட்டு.... வலக்காலை பிடிக்காய் பின் அழுத்தி... அதுகளை நகர விடாமல் பிடித்திருந்தனர்.... அக்காட்சியை கண்ட அனைவருக்குமே உடல் சிலிர்த்து அடங்கியது.... மெல்ல மெல்ல.....

க்ரிஷ்ஷின் கண்களிலிருந்து பாய்ந்த சிகப்பு மின்னல் யுகியின் கண்களில் பாய.....

இந்திரனின் கண்களிலிருந்து பாய்ந்த நீல நிற மின்னல் அகியின் கண்களுளள் பாய..

சத்தீஷின் கண்களிலிருந்து பாய்ந்த வெள்ளை நிற மின்னல் விகியின் கண்களுள் பாய.....

நிமிடம் கடந்ததுமே.... சிம்மயாளிகள் மூன்றின் கண்களும் பழைய நிலையை அடைய..... மூன்றின் உடலிலிருந்தும் வெளியேறிய மூன்று ஏவல்களும் தூர போய் விழ.... அடுத்த நொடியே.... காற்றோடு காற்றாய் அலரலுடன் கரைந்து போனது....

கோவன்கள் மூவரும் மூச்சை இழுத்து இழுத்து வாங்க.... சிம்மயாளிகளோ தாங்கள் செய்ய இருந்த தவறிர்க்காய் மூவரின் முன்னும் மன்னிப்பை வேண்டி நின்றது.... அதை ஏற்றுக் கொண்ட கோவன்கள் நிமிர.... அதே நேரம் மூவரின் பின்னிருந்தும் திடீரென பாய்ந்தது ஓர் கூர்மையான வாள்.... அதில் அதிர்ந்த மூவரும் திரும்ப.... தன் கரத்தை கிழித்த கூர் வாள் நகரும் முன்னே பிடித்த க்ரிஷ்.... அதை எரிந்தவன் மீதே தூக்கி எரிய... அவன் கரத்தில் இரத்தம் விடாமல் வலிய தொடங்க..... அவர்கள் முன் குரூர புன்னகையுடன் நின்ற விகாஷ் ஆகாஷ் நகாஷ்ஷை தன் கரங்களை சுழற்றி.... தன் வழி பாய்ந்த சூராவளி காற்றை கொண்டு நகர விடாமல் திமிர வைத்தான் சத்தீஷ்....

இந்திரனின் நீர் சக்தி... க்ரிஷ்ஷின் காயத்தில் மருந்தாய் மாரிட.... அதை கண்ட சத்தீஷ் சட்டென தன் மாயையை நிறுத்திட.... சகோதரன்கள் மூவரும் ஒரே நேரத்தில் எதிரிகளின் மீது புலியாய் பாய்ந்தனர்....

அங்கே ஒருங்கே ஒலித்தது மாயா மற்றும் மோகினியின் அலரல்.... அதை கேட்டு கோவன்கள் கவனத்தை சிதறவிடாமலே யுத்தத்தில் இருந்தனர்.... ஏனெனில் சகோதரிகளை காட்டி மிரட்டுவர் என்று அறியாதவர்களா அவர்கள்....

விகாஷ் இவர்கள் கவனத்தை திருப்பாமல் இருப்பதை கண்டு முகம் சுழித்தான்...

மாயா மற்றும் மோகினியை தன் மாயக்கட்டிற்குள் வைத்திருந்த யோகனா.... எமாற்றத்தை முகத்தில் காட்ட.... அதை கண்டு அனைவரும் சிரிக்க.....

மாயா: முன்பே கூறினேனல்லவா.... தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான அளவு எம் இளவல்களின் கவனமிருக்குமென...

யோகனா ஏளனமாய் புன்னகைக்க.... அதே நொடி... யுத்தத்தின் போதே.... திரும்பிய கோவன்கள் மூவரும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் ஒரு கரத்தில் அவர்கள் எதிரிகள் புறமும்..... மறு கரத்தில் இவர்கள் புறமும்.... மாயையை செழுத்த... அதை கண்டு யோகனா அச்த்தில் அதிர..... அப்புறம் விகாஷ் ஆகாஷ் நகாஷ் தாக்கப்பட்டு கீழ் விழ... இப்புறம் மூன்று ஒளிகளும் யோகனாவின் மாயக்கட்டை இடித்து வெடிக்க வைத்தது.... யோகனா அதிர்ந்து நோக்க..... இருவரும் சிரித்தனர்....

மோகினி : முட்டாள்.... ஏழனமாய் சிரித்தாய் அல்லவா.... இப்போது வெளிரி அமர்ந்திருக்கிறாயா.... என சிரிக்க....

அவளின் கோவம் அதிகரித்து எள்ளும் கொள்ளும் வெடிக்க எழுந்தவள் மோகினியை தாக்க போக.... குறுக்கே வந்து தடுத்த அனுவின் மாயையில் தடுமாறி நின்றாள் யோகனா....

அனு : உன் கலைகளை என்னிடம் காட்டடி... என் அண்ணியிடம் நெருங்க வேண்டுமானால் நீ எம்மை தாண்ட வேண்டும்....

யோகனா : பார்த்திடலாம்.... என கிழே கிடந்த ஒரு கட்டையை அவள் புறம் வீசினாள்... தன் நெற்றியை உரசிய அக்கட்டையை அதே வேகத்தில் பிடித்த அனு... மூன்றாய் உடைத்து அவளின் சகோதரிகளுடன் பிரித்து கொண்டாள்.... திவ்யா மதுசூதனாவுடனும்... ப்ரியா மேகலாயாவுடனும் எப்போதோ களத்தில் இறங்கியிருந்தனர்...

கூட்டம் கூட்டமாய் ஓடி வந்த உயிரற்ற ஐடம் மற்றும் குள்ளநரி படையினரை கண்ட நம் மற்ற நாயர்கள்.... " இவனுங்க போனாலும்... இதுங்க சாவாதுங்க போலருக்கே " என சலித்துக் கொண்டே சென்றாலும்.... அவர்களின் யுத்தத்தில் சலிப்பு இல்லை.... மாறாக வேட்டை இருந்தது....

விகாஷ் க்ரிஷ்ஷின் தீயில் எரிந்தும் எரியாமலும் தவித்துக் கொண்டிருந்தான்... ஆகாஷ் இந்திரனின் நீரில் மூழ்கி மூழ்கி எழ.... நகாஷ்ஷின் நிலை தான் கவலை கிடம்.... சத்தீஷின் சூறாவளியில் மூச்சு விட இயலாமல் தினரிக் கொண்டிருந்தான்...

ஒரு வேகத்தில் அனுவை தூக்கிய யோகனா ஒரே வீச்சில் மேலே தூக்கி வீச..... அந்தரத்தில் மிதந்த அனு கீழே விழும் முன்னே அவளை யோகனா தன் கருப்பு மாயை கொண்டு தாத்கி இன்னும் உயரத்திற்கு தள்ள.... திடீரென அவளின் மாயை எதிலோ மோதி தடைப்பட.... அத்துனை உயரத்திற்கு கண்களை கூர்மையாக்கினாள் யோகனா.... சிகப்பு நிற மாபெரும் இறெக்கைகள்.... அதை கண்டு அதிர்ந்தவள் உடனே போர்களத்தை ஆராய.... அனைவரும் அவரவர் எதிரியுடன் போரிட... விகாஷ் மட்டும் ஓரிடத்தில் அசையாது தீயில் தினறிக் கொண்டிருந்தான்..... மேலே யோகனாவின் மாயையால் தூக்கி எறியப்பட்ட அனுவை சரியாக பிடித்த க்ரிஷ்.... தன் கைகளால் அவளை தன்னுடன் இருக்கி அணைத்திட.... தன்னவனின் அருகாமையை உணர்ந்த அனு அவனுள்ளே புதைய... அவளை அந்த உயரத்தில் கரம் கொண்டு மட்டும் பிடிக்க இயலாதவன்.... இறெக்கைகளை விரிக்காமல் அவளை சுற்றி அரணாய் வைத்திட.... பறக்க இயலாமல் இருவரும் நிலத்தில் விழுந்தனர்... தான் விழுகிறோம் என்பதை உணர்ந்தும்... தன்னவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் அனு கண்களை மூடி அமைதியாய் இருக்க.... அனைவரும் அதை கண்டு அதிர.... அவர்களால் ஒன்றும் செய்ய இயலா நிலை.... அவரவர் எதிரிகள் அவர்களை எதுவும் செய்ய விடாமல் தடுத்தனர்.... விழுபவர்கள் விழுந்தே சாகட்டும் என்று... ஆனால் தன்னவளை கொண்டு நிலம் நோக்கி விழுவது இப்புவியின் அனல் கோவன் க்ரிஷ்ஷல்லவா.... அவன் மாத்திரம் விழுந்தாலே அவனை காக்க தெரிந்தவனுக்கு அவன் உயிரே அவனுடன் இருக்கையில் காக்க அறியாதவனா என்ன.... இருவரும் நிலத்தை தொட்டுவிடும் வேகத்தில் அதிவிரைவாய் கீழ் விழுந்திட.... நிலத்தை தொட ஒரு அடி உயரம் இருக்கும் சிறிய இடைவேளையில் தன் இறெக்கைகளை சட்டென விரித்து மேலே பறந்தான் க்ரிஷ்.... இதை எதிர்பார்த்திராத தீயவர்கள் அதிர்ச்சிடைய.... மற்ற நாயகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்களை இவ்வளவு நேரம் தடுத்து வைத்த எதிரிகளை தாக்க தொடங்கினர்..... அனுவை பத்திரமாய் கீழிறக்கிவிட்டவன் அவளின் நெற்றியில் மெல்லிய இதழ் முத்திரையை பதித்து விட்டு விகாஷ்ஷை நோக்கி விரைந்தான்.... அனு திரும்பிய அடுத்த நொடி கீழிருந்த மண்ணை அனுவின் கண்களில் வீசிய யோகனா... அந்த இடைவேளையில் தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டாள்.... அனுவோ கண்களை திறக்க இயலாமல் அதை தேய்த்துக் கொண்டிருந்தாள்... அப்போது யோகனாவின் பின் மேகலாயாவை தாக்கி கொண்டே வந்த திவ்யா... யோகனாவை கவனிக்காமல் வர.... திரும்பிய யோகனா... மேகலாயாவிற்க்கு கண் காட்ட... அதை புரிந்தவளும்.... மெதுவாய் தலையசைக்க.... அதை கவனிக்காத திவ்யா திடீரென பின்னிருந்து தாக்கப்பட்ட யோகனாவின் கருப்பு நிற வலையால் தடுமாறி கீழ் விழுந்தாள்..... விழுந்த திவ்யா ஆ என அலர.... அதனை செவி சாய்த்த அனு மற்றும் ப்ரியா பட்டென அவள் புறம் திரும்ப.... அனுவின் கண்கள் இப்போது தெளிவடைந்திருக்க....

யோகனா அதே நேரம் திவ்யாவின் கழுத்தில் வாளை இறக்க போக.... திவ்யாவோ நகர இயலாமல் முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள்.... அனு மற்றும் ப்ரியா உடனே அவளை நெருங்கி வர... அதனை கண்ட மேகலாயா மற்றும் மதுசூதனா அவர்கள் இருவரையும் தடுத்து தாக்கினர்... திவ்யா அவளின் சக்திகளை யோகனாவை நோக்கி செழுத்த முயற்சிக்க.... அதுவும் வீணாக.... மற்ற நாயகிகளாலும் அவர்களை நெருங்க இயலாமல் உயிரற்ற ஜடப்படையினர் சுற்றி வளைக்க..... இந்திரனின் பார்வையில் இன்னும் திவ்யா எழுவாள் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது...

அனுவும் ப்ரியாவும் நேரம் போவதை உணர்ந்து... ஒரே நேரத்தில் எம்பி.... மேகலாயா மதுசூதனொ இருவரையும் கீழ் தள்ளிவிட்டு ஓட.... அவர்கள் இருவரும் எழும் முன்னே..... அவர்கள் முன் வந்து நின்றனர் மாயா மற்றும் மோகினி...

மோகினி : என்ன தங்கைகளே... ஆட்டத்திற்கு தயாரா....

மாயா : அவர்களிடம் என்ன வினா.... நாம் தொடங்கிவிடுவோம்... மோகினி....

மோகினி : அப்படியே ஆகட்டும்.... இதுவரை இவர்களை களத்தில் எதிர்பார்த்திராத மேகலாயா மற்றும் மதுசூதனா முளிக்க..... மாயா மோகினியின் தாக்குதலில் அவர்கள் மூச்சு விடக்கூட அவகாசம் இல்லாமல் போனது.....

ஓடிச்சென்ற அனு மற்றும் ப்ரியா.... ஒரே நேரத்தில் கால்களை தரையில் தேய்த்துக் கொண்டே கீழ் விழ.... அவர்கள் தேய்த்ததில் கீழிருந்து மண் அதிர்வில் மேல் எழுந்து யோகனா மீது சரியாய் தெரிக்க....அதை எதிர்பார்க்காதவள் வாளை தவற விட..... ஒரே நேரத்தில் நாகனிகள் மூவரும் கரங்களை பிடித்து எழுந்துக் கொள்ள.... காலம் தாமதிக்க கூடாதென யோகனா உடனே மூவரை நோக்கியும் கருப்பு பந்தை தாக்க.... மூவரும் லாவகமாய் தப்பித்து திருப்பி தாக்க.... இதில்.... அவர்களை சுற்றி நின்றிருந்த படையினர் யாளி வம்சத்து வீராங்கனைகளின் சூரையாடலில் மடிந்திருக்க..... நாகனிகளின் வலு ஏறியிருப்பதை கண்டு கொண்ட யோகனா தப்பிக்க வழி அறியாது... மூவரையும் மாற்றி மாற்றி தாக்கி கொண்டிருந்தாள்.... திடீரென அந்நேரம் பார்த்து அங்கே வந்த பவியை இழுத்து பிடித்த யோகனா அவளின் கழுத்தை நெரித்து மேலே தூக்கினாள்.... அதை எவரும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் நாகனிகள் உறைய....

யோகனா : இவளை கொல்ல வேண்டுமென்பது என் ஜென்மவெரி.... இன்று அதை நிறைவேற போகிறது...

ப்ரியா : ஏ முட்டாள்... நீ சாத்தான்... அவள் உயிருள்ள மனிதபிறவி... அவள் வாழ வேண்டும்....

யோகனா : அவள் வாழ்ந்தால் என் மாரனுடன் தானே வாழ்வாள்....

பவி : ஏய்.... அவன் என் மாரன்.... என இடையில் கத்த...

யோகனா : நீ ஏன டி அவனுடன் வாழ வேண்டும்... நீ என் கரத்தாலே மரணத்தை தழுவு... என கத்திக் கொண்டே அவள் கழுத்தை பிடித்து மேலே தூக்க...

அனு : பவி.... அட்டக்... என கத்த....

அடுத்த நொடி.... தன் காலால் யோகனாவின் கரத்தில் இடித்த பவி... அதே வேகத்தில் அவளின் வாளை யோகனாவின் கழுத்தில் வைத்து திருப்பி அவளை முன் கொண்டு வந்தாள்.... இதை எதிர்பார்க்காத யோகனா.... பேயறைந்த முளியை வெளி காட்ட.... சகோதரிகள் மூவரும் அவரவர் கரத்தை இணைத்து.... ஒரே போல் எதையோ தங்களின் மனதில் கூற..... அவர்களை சூழ்ந்த ஓர் மாபெரும் ஒளி அதிவேகமாய் யோகனாவை தாக்க...... அடுத்த நொடியே.... சுழலும் ஒலியில் அனைவரும் அவ்வொளியில் கூர்ந்து நோக்க.... பலபலப்பாக மின்னும் நாகனிகளின் அர்ப்புத வாள்கள் அவ்வொளியில் அழகாய் மிளிர.... அனைவரின் கண்களும் ஒரு நொடி அம்மாபெரும் ஒளியின் தாக்கத்தில் கூசி எடுக்க.... அடுத்த நொடி வாள்களுடன் நாகனிகள் ஒவ்வொரு திசையில் பாய ... மாயா மற்றும் மோகினி கண நேரத்தில் அவ்விடத்திலிருந்து மறைய..... சட்டென மறைந்ததும் புரியாமல் முளித்த மேகலாயாவும் மதுசூதனாவும் தங்கள் மரணம் திவ்யா மற்றும் ப்ரியாவின் உருவில் பாய்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியில் இதயம் நின்று துடித்திட..... யோகனா மீது அனு கொலைவெரியுடன் பாய.... அவளோ அக்களமே அரண்டுவிடும் அளவு பெருங்குரலெடுத்து அலர..... ஒரே நேரத்தில்.... ஒரே நொடியில்.... நொடி மாறாது.... அனு யோகனாவின் இதயத்திலும்.... திவ்யா மேகலாயாவின் இதயத்திலும் ப்ரியா மதுசூதனாவின் இதயத்திலும் வாளை அதிவேகமாய் வீச.... மூவரின் இதயத்தை துளைத்துக் கொண்டு சென்றது நாகனிகளின் வாள்கள்... அடுத்த நொடியே.... யோகனா மேகலாயா மதுசூதனா மூவரும் அலரிய அலரலில்
அனைவரும் திடுக்கிட்டு நோக்க.... பெரும் ஒளி அவர்களை சூழ்ந்து வெடித்து சிதற..... சுற்றியிருந்த அனைவரும் பத்தடி தூரம் சென்று விழுந்தனர்.....

நாகனிகள் மூவரும் இன்னும் வெறி அடங்காமல்.... முகத்தில் தெரித்திருந்த இரத்தக்கரையுடன் அசல் காளியாய் காட்சி அளித்தனர்.....

காதல் தொடரும்....

தங்களின் கருத்தை மறவாமல் தெறிவிக்க வேண்டும்... நம் மீண்டும் தொடரும் காதல் நாளை முடிவடைய உள்ளது...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro