காதல்-63
அக்காட்சியை காண காண தீயவர்களின் காதிலெல்லாம் புகை வர.... அவர்களின் அருகில் கண்டவர்களின் கண்கள் அகிலத்தையும் தாண்டி அகன்றது... மூவரின் அருகிலும்.... சிகப்பு நீலம் வெள்ளை நிறங்களில்.... நாமம் தெரியா ஓர் விலங்கு.... நீண்ட கூர்மையான பற்கல்.... கூர் கண்கள்.... செதுக்கப்பட்ட கால்கள்... பலமான உடல்.... நாயகன்களை விட உயரமாய்.... உலகில் பல வருடங்கள் முன்னே பேராபத்தில் அழிந்து.... பல வருடமாய் வேந்தன்யபுரத்தில் வளர்ந்து... எந்த ஒரு மாவீரனக்கும் அடங்காதது... இன்று கம்பீரமாய் கோவன்களின் அருகில் மரியாதையுடன் நடந்து வந்தது மூன்று சிம்மயாளிகள்.....
அனைவரின் இதழ்களும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் சிம்மயாளிகள் என முனுமுனுத்தது....
க்ரிஷ்ஷின் அருகில் சிகப்பு நிற சிம்மயாளி யுகியும்...
இந்திரனின் அருகில் நீல நிற சிம்மயாளி அகியும்...
விஷ்னுவின் அருகில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கலந்த சிம்மயாளி விகியும் வந்தது...
கோவன்களும் சிம்மயாளிகளும் ஒன்றாய் நடந்து வரும் கண்கொள்ளா காட்சியை கண் குளிர கண்டு மகிழ்ந்தனர் மற்றைய நாயகர்கள்....
நகாஷ் : இன்னுமா.... சிம்மயா....ளிகள் இவ்வுல...லகில் வாழ்கிற...து... என அதிர்ச்சியில் திக்கி திக்கி பேசினான்...
ஆகாஷ் : அதை தான் நாங்களும் அறியவில்லை...
" என்ன முப்பெரும் அரசர்களே.... கோவன்களென்றாலே... தலை மிஞ்சுமா என்று... சந்தேகம் தான்... இதில் சிம்மயாளிகள் வேறு.... எலும்பு கூட மிஞ்சாதென்று சிந்தனையோ " என்ற வினாவில்.... நம் மைன்ட் வாய்ஸை கேட்ச் பன்னியது யார் என இம்மூவரும் திரும்பி நோக்க.... அங்கோ மருத்துவதளபதிகளும்... படைதளபதிகளும் அவரவர் யானையாளியில் அவர்ளின் வாளை ஏந்தியவாறு அமர்ந்திருந்தனர்....
முகில் அர்ஜுன் : அதிர்ச்சியா... எப்படி இருக்கிறது எங்களின் பதிலடி....
அஷ்வன்த் வீர் : அவை உண்மையாகவே சிம்மயாளிகள் தான் முட்டாள்களே....
ரவி ரனீஷ் : உலகில் எந்த மாவீரனுக்கும் அடங்காத மாபெரும் சக்தி படைத்த சிம்மயாளிகள்....
சரண் ரித்விக் : எங்கள் மகாவம்ச கோவன்களுக்கு அடங்குமடா.... என கத்தினர்.....
ஆகாஷ் : வீண் பேச்சை விட்டுவிட்டு களத்தில் இறங்குவோமா...
ரனீஷ் : ஏன் கேலி செய்வோம் என்று ஐயமோ...
விகாஷ் : ஏய்... யுவக்ரிஷ்ணா... உன் தோழன்களுக்கு கத்தியில் புத்தியை காட்டும் பழக்கமே இல்லையா...
சத்தீஷ் : ஏன் உமக்கு அவன் நாமம் மாத்திரம் தான் தெரியுமா... எதற்கெடுத்தாளும் அவனையே கத்திக் கொண்டிருக்கிறாய்....
விகாஷ் : யான் கத்தினால் உமக்கென்ன வந்தது....
இந்திரன் : அதை போல்... எங்கள் தோழன்கள் கத்தியை விடாது உன் புத்தியை கிளரினால் உமக்கென்ன வந்தது... என்று நாசூக்காய் அவன் மூக்கை உடைக்க....
யோகனா : ஏய்.. கோவனே.... உரையாடியே காலத்தை ஓட்டி எங்களிடமிருந்து தப்பித்துவிடலாம் என திட்டம் தீட்டுகிறீர்கலா....
" தப்பிக்க திட்டம் தீட்டுவதெல்லாம் ஆதிகோவன்களின் பணியல்ல.... உம்மை போன்ற கோழைகளின் பணி தான் யோகனா....." என்ற குரலை கேட்டு அனைவரும் மேல் நோக்க.... கோவன்களின் மேல்.... யோகனாவிற்கு எதிரே... வெண்ணிற சிறகுகள் தங்களை சூழ்ந்திருக்க.... கரங்களில் கருநீலம் நீலம் மற்றும் வெண்மை நிற மாய பந்துகள் சுழல... காற்றில் மிதந்து கொண்டிருந்தனர் நாகனிகள்....
நாகனிகளுக்கு பறக்கும் சக்தியா... என வாய் விரித்து அவர்கள் நோக்க.... விரைவிலே.... சிம்மயாளிகளில் இருந்து பாய்ந்துக் கொண்டிருந்த மூன்று ஒளிகள்.... ஒவ்வொரு நாயகிகளையும் தாங்கியிருப்பது தெள்ள தெளிவாய் தெரிய... சிம்மயாளிகளின் மந்திரமே அவர்களை ஆகாயத்தில் மிதக்க வைப்பது புரிந்தது.....
மேகலாயா : விலங்கின் மாயையில் பறந்துக் கொண்டு திமிறாய் பேசுகிறீர்களா...
தீரா : ஏ ச்செய்.... வல வலன்னு பேசி டைம் வேஸ்ட் பன்னிக்கிட்டு ..... சீக்கிரமா முட்டிக்கிட்டு மேல போங்க ....
மதுசூனா : அதை அவர்களிடம் கூறு... பரலோகம் செல்ல போவது அவர்கள் தான்....
தீரா : நா உனக்கு சொன்னேன்னு யாரு சொன்னா ... போ அந்த பக்கம்....
அதே இடம் எகிர.... அங்கே ஒருங்கே ஒலித்தது.... சஹாத்திய வம்ச சூரர்களின் முழக்கம்....
தளபதிகள் : போர் முரசு கொட்டட்டும்.....
சத்தீஷ் : டேய்... படையே இல்ல... முரசு கொட்ட சொல்றீங்களே டா....
முகில் : ஹிஹி... பழகீடுச்சு என்ன டா செய்ய சொல்ற....
அஷ்வன்த் : டேய்... நாங்களே உங்களுக்கு படை தான் டா...
அவர்கள் பேசும் நேரமே.... ஆகாஷ்ஷின் சத்தமில்லா கட்டளையால்.... குள்ளநரி கூட்டம் யானையாளிகளின் கால்களை பதம் பார்க்க.... அதிவேவமாய் சத்தமில்லாமல் ஓடி வர.... இன்னும் நாயகர்கள் மாற்றி மாற்றி உரையாடிக் கொண்டிருக்க..... நாயகன்களின் உத்தரவில்லாமல் யாளிகள் அசையாது நிற்க.... சரியாய் ஒரு பத்து குள்ளநரிகள் யானையாளிகளை நெருங்கும் முன்னே.... துண்டு துண்டாய் வெட்டி சாய்க்கப்பைட்டது.... இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பின் வந்த குள்நரிகள் திடீர் ப்ரேக் போட்டு நிற்க..... ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்த நாயகிகளின் இதழ்கள் நக்கலாய் வளைய.... மூவரும் ஒரே நேரத்தில் சொடக்கிட.... அடுத்த நொடி.... யானையாளிகள் ஒவ்வொன்றின் முன்னும்... தங்கள் அர்ப்புத வாளில் சிறிது இரத்தக்கரையுடன்.... கம்பீரமாய் நின்றனர் யாளி வம்சத்து வீராங்கனைகள்....
இவர்களை எப்படி மறந்தோம் என்பதை போல் மேகலாயா மற்றும் மதுசூதனா ஆகாஷ்ஷை நோக்க.... அவனோ வாளை மண்ணில் குத்தி தன் சினத்தை அடக்கினான்....
இப்போது அதே புன்னகையுடன் இவர்களின் புறம் திரும்பிய நாயகன்கள்... ஒரு சேர....
நாயகன்கள் : இப்போது தொடங்குவோமா.... என வினவி... அடுத்த நொடி... வேங்கையாய் அவர்களின் எதிரிகளை நோக்கி விரைந்தனர்.... குள்ளநரிகளும் உயிரற்ற ஜடங்களும்... வெறி பிடித்து ஓடி வர.... துளியும் ஐயம் இல்லாது அதை எதிர்த்து நின்றனர் யாளி வம்சத்து விராங்கனைகள்... அவர்களுக்கு பக்கபலமாய்.... துணையாய் அவர்களின் முன் மற்றுமோர் அரணாய் போரிட்டனர் சஹாத்திய வம்ச சூரர்கள்...
கோவன்களின் அதிசக்திளும்... முப்பெரும் தேவன்களின் சக்திகளும் நேருக்கு நேராய் போரிட்டு... பேர் விழைவை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.... அவர்களை சுற்றி.... அனு யோகனா... திவ்யா மேகலாயா மற்றும் ப்ரியா மதுசூதனா என காலமில்லாமல் யுத்தத்தின் பிடியில் இருந்தனர்...
யோகனாவின் கண்களில் இருந்து பாய்ந்த கருப்பு நிற மின்னல்.... அனுவின் தோளை உராசி விட்டு சென்றது.... சென்றது... நேரே ப்ரியாவை நோக்கி செல்ல... பின் இருந்தே அம்மின்னலை விட்டு அகன்ற ப்ரியா.... காலம் தாழ்த்தாமல் அதே வேகத்துடன் மதுசூதனாவுடன் போரிட்டாள்...
திவ்யாவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் லாவகமாய் தப்பித்து சென்றுக் கொண்டிருந்தாள் மேகலாயா... அவளால் அவளை காக்க மட்டும் இயன்றதே தவிற... திவ்யாவை தாக்க இயலவில்லை..... திவ்யாவின் ஒவ்வொரு தாக்குதலும் அப்படியிருக்க.... தப்பிக்க வழி தேடவே முளி பிதுங்கியது மேகலாயாவிற்க்கு....
சோர்வடையாமல் முழு மூச்சாய் யுத்தத்தில் இருந்தனர் நாயகிகள்.... யாளி வம்சத்து வீராங்கனைகள் உயிரற்ற ஜடங்களை அழிக்க அழிக்க முளைத்துக் கொண்டே இருந்தனர்.... இவர்கள் எத்துனை ஜடத்தை தான் அழித்தும் அப்படையில் தொகை குறையாமல் அதிகரித்துக் கொண்டே தான் போனது... கோவன்களுக்கும் நாகனிகளுக்கும் சக்திகளை பயன்படுத்தி யுத்தமிட கடினமாய் இருந்ததோ இல்லையோ... யாளி வம்சத்து வீராங்கனைகளும்... சஹாத்திய வம்ச சூரர்களும்.... வெட்ட வெட்ட முளைத்து வந்துக் கொண்டே இருந்த குள்ளநரி படைகளையும்.... உயிரற்ற ஜட படைகளையும் அடக்க மிகவும் கடினப்பட்டனர்....
ஒவீ மற்றும் வீனா... ஒரே இடத்தில் இருந்து.... ஓர் நேர் கோட்டில் நின்று... அவர்களை சுற்றி வளைத்து வெறி அடங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஜடங்களை ஆராய்ந்து விட்டு... சகோதரிகள் இருவரும் பார்வையை மாற்றிக் கொள்ள..... இருவரின் வாள்களும் அவர்களின் சுழற்றலில் காற்றிலே சுற்ற தொடங்க.... உயிரற்ற ஜடங்கள் வாளின் திடீர் திடீர் தாக்குதலில் முளி பிதுங்கி அலர.... பத்து நிமிடத்திலே அவர்ளின் புத்தி கலையில்... வெட்டி சாய்ந்திருந்தனர் சுற்றி வளைத்திருந்த ஜடங்கள்....
மது மற்றும் வர்ஷி.... முகில் மற்றும் அர்ஜுனின் யாளிகளின் மின் நின்று.... யாளிகளின் பாதங்களிள் நசுங்கும் குள்ளநரிகள் மீண்டும் எழாதவாறு அதுகளின் கழுத்தை அறுத்தி வெட்டி வீசினர்....
அஷ்வன்த் மற்றும் வீரின் வாளுக்கு இரையாகிய பல ஜடங்கள் எழுந்து வந்துக் கொண்டே இருக்க... அவர்களின் மதியை இழக்க முயன்று மீண்டும் மீண்டும் எழுந்து வர.... சிறிது நேரம் அதை கண்டு குழம்பிய இருவரும்... சில நொடிகளிளே.... ஓர் திட்டத்தை வகுத்து... அவர்கள் மட்டுமல்லாது.... மற்ற நாயகன்களுக்கும் நொடி தவரிடாமல் பகிர்ந்து.... அவர்களின் கழுத்தை குறி வைத்து தாக்க முடிவெடுத்தனர்.... மருத்துவ மூளை கூறியது போலவே.... கழுத்து வெட்டப்பட்டதும்.... கீழே விழுந்து இரண்டு நொடி துடித்த ஜடம்... தானாய் அடங்கியது....
இது போதும் ... என சூரையாடத் தொடங்கினர் அனைவரும்... நம் இரகசியம் தெரிந்துவிட்டதே என்பதை போல்... சில கூட்டம் பயந்தும் ஓடியது... சில கூட்டம் எதிர்த்தும் போரிட்டது.... பல குள்ளரிகள் கால் அறுப்பட்டு கீழ் விழுந்தது.... சில குள்ளநரிகள் வாள்களின் தாக்குதலில் காற்றோடு காற்றாய் மறைந்து அழிந்தது....
கோவன்கள் மூவரின் சக்திகளின் தாக்கத்தில் விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரும் சற்றே தடுமாறித்தான் போயினர்.... சென்ற பிறவிக்கும் இந்த பிறவிக்கும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்க... மூவருக்கும் கோவன்கள் மூவரின் சக்திகளை தாங்க வலுவும் குறைய தொடங்கியது...
தீரா : இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... முன்னாடியே ஒரு தடவ சண்ட போட்டு பாத்துக்கோங்க டா... டச்சு விட்டு போய்ர்க்க போகுதுன்னு... நீங்க கேட்டீங்களா... அவனுங்க எதா இருந்தாலும் கப்புன்னு புடிச்சிப்பாங்க டா... நீங்க அப்புடியா...
மூவருக்கும் பயிற்சி எடுத்திருக்கலாமோ என்றும் யோசனை வந்து சென்றது....
நகாஷ்ஷின் கழுத்தை வளைத்து பிடித்த இந்திரன்.... அவன் சுதாரிக்கும் முன்... பணிய வைத்து முதுகில் முழங்கையால் குத்த.... தாங்க முடியாமல் கீழே விழுந்தான் அவன்...
சத்தீஷ்ஷின் புயல் ஆகாஷ்ஷை பின் தொடர... அவனோ விடாமல் அதை தாக்கி தாக்கியே பின் நகர வைத்துக் கொண்டிருந்தான்...
இதில்... க்ரிஷ் மற்றும் விகாஷ்ஷிற்கு இடையில் தான் வெகு தீவாரமாய் யுத்தம் ஈடேறிக் கொண்டிருந்தது... ஓர் முறை விகாஷ் தாக்கினால்.. அதற்கு பதிலடியாய் க்ரிஷ் தாக்கினான்... இருவரையுமே தவறாய் இடை போட முடியாது.. அந்தளவுக்கு பலசாலிகள்....
க்ரிஷ்ஷின் கண்களிலிருந்து பாய்ந்த தீயிலிருந்து பல்டி அடித்து தப்பித்தான் விகாஷ்... அவன் பல்டி அடித்து தப்பித்ததும் நொடி தாமதிக்காமல் அவன் எழும் முன்னே.... ஒரு காலால் அவன் கழுத்தில் மிதித்து... மறுகாலால் அவனை எட்டி உதைத்தான்.... விகாஷ் சுதாரித்து கழுத்தை பிடித்துக் கொண்டு எழ.... பட்டென அவனை சூழ்ந்து... கொழுந்து விட்டு எறிந்தது தீ.... அதில் மூச்சுவிட திமிறியவனுக்கு தீயின் நடுவில் ருத்ரமூர்த்தியாய் நடந்து வந்த க்ரிஷ்ஷை கண்டு இதயம் நின்று துடித்தது....
சிம்யாளிகள் மூன்றுமே பல குள்ளநரிகளை கடித்து குதரிக் கொண்டிருந்தது... கோவன்கள் மூவரின் பலத்திற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் தினறினர் விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரும்....
நாகனிகள் மூவரின் கண்களிலும் ரௌத்திரம் பொங்கி... யோகனா மேகலாயா மதுசூதனாவை பந்தாடிக் கொண்டிருந்தனர்....
யோகனாவின் கரத்திலிருந்து பாய்ந்த ஓர் கருப்பு மின்னல் அவளை தாக்க வந்த அனுவின் காலில் பட்டு... அவளை கீழே தள்ளியது.... கீழே விழுந்த அனுவின் கால் அசைய மறுத்து லிட்டர் லிட்டராய் இரத்தத்தை வெளியேற்றியது... அதை தாங்க இயலாமல் அலரிய அனு.... காலின் வலியை அவளின் சக்தியில் காட்டி யோகனாவை தாக்கினாள்.... யோகனாவோ மூச்சு தினறி... அவளின் சக்தியிலிருந்து விடு பட பாடுபட்டாள்.... எழுந்து நிற்க இயலாமல் முனகிக் கொண்டே எழுந்தவளை.. அவ்விடத்திற்கு வந்த வர்ஷி சரியாய் தாங்கி கொண்டாள்...
அனு : வர்ஷி... என் கால முருக்கு....
வர்ஷி : ஹே என்ன டி சொல்ற...
அனு : அ... முருக்கு டி... வலி தாங்க முடியல...
வர்ஷி : நா அந்த யோகனா வந்தா அவக்கூட சண்ட போடுவேணா... இல்ல உன் கால பாப்பேனா..
அனு : அவ வரமாட்டா டி... அவ கண்ணுல தா தாக்கீர்க்கேன்... நீ என் கால முருக்கு... என்றாள் பல்லை கடித்துக் கொண்டு...
வர்ஷி : எரும... வலிக்கும் டி...
அனு : இது என்ன நா பாக்காத வலியா... நீ கால முருக்கு... என கத்த....
அவள் சொல்வதை தட்ட இயலாமல் கீழே அமர்ந்து அவளின் காலை பிடித்தாள்.... தன் வலக்கையை வர்ஷியின் தோளில் வைத்துக் கொண்டு நின்ற அனு... கண்களை இருக்கி மூடி... பல்லை கடித்துக் கொண்டாள்.... வர்ஷி.... மெல்ல அவளின் காலை திருப்பி.... இரத்தம் வந்த இடத்தில் அழுத்தி... முருக்கினாள்.... தன் கையை மிக பலமாய் தாக்கி கொண்ட அனு.... வலியில் ஒரு நொடி அலரி... அடுத்த நொடி....
அனு : கூல்.. கூல்... இதெல்லாம் ஒன்னுமே இல்ல... கூல் என கூறிக் கொண்டாள்....
வர்ஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வலிய..
அனு : ஏ செய்.. எந்திரி டி.. லூசு... என அவளின் அடிப்ட்ட காலை உதறினாள்... வர்ஷி அவளை அதிர்ச்சியுடன் பார்க்க.... கண்ணடித்து விட்டு யோகனாவை நோக்கி ஓடினாள்... வர்ஷியும் புன்னகைத்து விட்டு குள்ளநரிகளை சூரையாட தொடங்கினாள்...
திடீரென தள்ளாடிய சரண்.... பார்வை தெளிவில்லாமல் முன் வரும் ஜடங்களை தவற விட்டான்.... இதையே சாதகமாய் உபயோகித்து குள்ளநரிகளும் சில உயிரற்ற ஜடங்களும் அவன் சுதாரித்திடாமல் இருக்க... சத்தமில்லாமல் அவனை நெருங்கியது.... கண்களை விடாமல் தேய்த்த சரணால் மேலும் காண முடியாமல் போனது... என்னவானதென்றே தெரியாமல் கண்களை அழுத்தி அழுத்தி தேய்த்துக் கொண்டே இருந்தான்.... ஓர் கட்டத்தில் சரசரவென ஓடி வந்த குள்ளநரி ஒன்று அவன் மீது... கத்திக் கொண்டே பாய... எப்பக்கத்திலிருந்து வருகிறதென அறியாமல் அதை கண்டுக்கொள்ளமல் கண்ணை துடைக்கும் வேலையில் இருந்தான் சரண்.... பாய்ந்த குள்ளநரி நேரே சென்று அவன் கழுத்தில் கடிக்க வெரி கொண்டு பாய்ந்தது....
காதல் தொடரும்...
சரணின் கண்ணிற்கு என்னவானது....????
குள்ளைநரி சரணை கொல்லுமா??? அல்ல... பதம் பார்க்குமா....???
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro