காதல்-62
வெகு விரைவிலே ஓர் வேற்று மைதானத்தை அடைந்த யானையாளிகள் அங்கே தரையிறங்க.... அது கீழே பணிந்ததும் அனைவரும் கீழிறங்கினர்.... நாயகிகள் கண்களில் சட்டென ஊற்றெடுத்த கண்ணீருடன் அவ்விடத்தை சுற்றி நோட்டமிட்டனர்.... அனைவருக்கும் சில பல நிழற்படங்கள் வந்து மறைந்தது.... அவர்களின் கவலையை போக்கவே அங்கே சூராவளியாய் வீச தொடங்கியது நிறங்கள் கலந்த புகை.... அதை கண்டு இவர்கள் திகைக்கும் போதே... அதன் நிறத்தை வைத்து கோவன்கள் தான் என கண்டு கொண்டு மகிழ்ச்சியில் இதழை விரிக்க..... காற்றோடு காற்றாய் மறைந்த புகையின் பின்.... மூவரும் சிரித்த வதனத்துடன் நிற்க.... அனு திவ்யா ப்ரியா ஓடி சென்று அவரவர் துணையை அணைத்துக் கொண்டனர்.... அவர்களும் பதிலுக்கு அணைத்து தங்களின் கை அணைப்பிலே வைத்து... மற்றவர்களுடன் அவிடத்தை சூற்றி நோக்கினர்....
க்ரிஷ் : அதே இடம்....
அனு : நான்காயிரய் வருடம் முன் நம் மரணத்தை ஈட்டிய அதே இடம்...
இந்திரன் : தோழ்வியை வென்ற இடம்...
திவ்யா : வெற்றிக்காய் உயிரை நீத்த இடம்..
சத்தீஷ் : இரனகளம் இரத்தகளமாய் இருந்த அதே இடம்....
ப்ரியா : அன்பர்களுக்காய் துளி உதிரத்தை பற்றி கவலை படாது சிந்திய அதே இடம்....
மற்ற நாயகன்கள் : இன்று வெற்றியை நம் வசமாக்கப்போகும் நம் இடம்....
மற்ற நாயகிகள் : தீய சக்தியினை ஒன்று திரட்டி அவ்வாதிக்கத்தை இப்புவியிலிருந்து ஒட்டு மொத்தமாய் நீக்க போகும் நமக்கான இடம்....
அனைவரும் : வெற்றி நமதே.....
கோவன்கள் : நிச்சயம் நமதே....
யானையாளிகள் பலமாய் பிளரலை வெளியிட.... அதைநோக்கி திரும்பிய கோவன்கள் மென் புன்னகையுடன் அவை அருகில் நெருங்கினர்....
க்ரிஷ் : நண்பர்களே நலமா....
அதற்கு எட்டு யானையாளிகளும் ஒரே நேரத்தில் தங்கள் தும்பிகளை உயர்த்தி சத்தமிட்டது....
சத்தீஷ் : அரண்மனைக்கு போனீங்களா டா....
மற்ற நாயகன்கள் பதிலளிக்கும் முன்னே....
பவி : ஆமா டா அண்ண... எவ்ளோ பெரிய அரண்மனை தெரியுமா....
ரக்ஷா : அதுவும் நட்ட நடு காட்டுக்குள்ள... செம்மையா இருந்துச்சு....
வர்ஷி : எங்களுக்கு அதிர்ச்சியில பேச்சே வரல...
வீனா : அத சுத்தி சூப்பர் சூப்பரா செடி வாம் இருந்துச்சு....
தான்யா : நம்ம வீடு கூட அவ்ளோ உயரத்துக்கு வராது போல.... அப்டி இருந்துச்சு...
நிரு : யானைங்க ஓடி வந்துச்சு பாரு... அந்த அதிர்வுல நாங்க ஆடுனாலும்... கோட்டை ஆடவே இல்லை....
மது : அவ்ளோ ஸ்ட்ராங்... இவ்ளோ பெரிய பெரிய யானையாளி எப்டி அங்க வளருதோ.....
ஒவீ : ஹெ ஆர்ட் அன் ஆர்க்கிடெக்ச்சர் அவ்ளோ அழகா இருந்துச்சு....
ப்ரியா : அவ்ளோ பெரிய அரண்மன எப்டி நட்ட நடு காட்ல இருக்கோ... எப்பா எவ்ளோ பெருசு....
திவ்யா : யாரவது பாத்துர்ந்தா அத வாங்காம இருக்கமாட்டாங்க....
அனு : அத வாங்குனதுக்கு அப்ரம் தான் மறுவேலை பாப்பாங்க.... எவ்ளோ கோடி குடுத்தாச்சும் வாங்கனும் னு பாப்பாங்க.... அவ்ளோ அழகான அரண்மனை.... என நாயகிகள் அனைவரும் அவ்வரண்மனையை பற்றி புராணமே பாட... நாயகன்கள் பேந்த பேந்த முளித்துக் கொண்டிருந்தனர்....
சத்தீஷ் : மா மா மா... நிறுத்துங்க மா... நா ஒரு கேள்வி தான கேட்டேன்... அதுக்கு எதுக்கு டி... கட்டுரை மாரி இத்தன பதிலு???
தான்யா : எக்ஸைட்மென்ட் டா அண்ணா....
ரவி : நல்ல எக்ஸைட்மென்ட்டு...
இந்திரன் : நல்லா வளர்ந்துருக்காங்க....
முகில் : இன்னும் நல்லா வளருவாங்க டா....
மது : என்னது இன்னுமா... இப்பவே இவ்ளோ பெருசு இருக்கே டா....
க்ரிஷ் : இறைவனோட அருள் தான் மது மா.... எவ்ளோ போகும் னு நம்மளால சொல்ல முடியாது...
அனைவரும் : ம்ம்ம்ம்ம்
காலை மெல்ல மெல்ல விடிய தொடங்கியது.... காலை பனி அவ்விடத்தை சூழ்ந்து புலுதியாய் இருந்தது.... வெகு தொலைவில்..... விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரும் ஆலுயர வாளுடன் முகத்தில் குரோதம் கொப்பளிக்க.... தங்கள் அருகில் மேகலாயா மதுசூதனா மற்றும் யோகனா வர.... அவர்களை பின் தொடர்ந்தவாறு பாம்பு போல் நீண்டு கொண்டே போன பெரும் குள்ளமானிடர்கள் மற்றும் உயிரற்ற ஜடப் படையினருடன் வந்தனர்.... அவர்கள் முன்னேற முன்னேற எதையோ கண்டதும் அவர்களின் நடை தானாய் தடைப்பட்டது....
வெகு தொலைவில்..... தன் உடல் முழுவதும் தீ பற்றி எறிய.... தீசுழல் ஒன்று பின் தொடர்ந்து வர...... விரைத்த உடலுடன்.... இருகிய வதனத்துடன்.... சிகப்பு நிற விழிகளில் எரிமலை வெடிக்க.... அழிவை பரிசளிக்கவே கம்பீர நடையுடன் நிமிர்ந்த நேர் பார்வையுடன் முன் இருந்தவர்களை எரிக்கப்போகும் நோக்குடன் நடந்து வந்தான் இப்புவியின் ஆதி அனல்க்கோவன் யுவக்ரிஷ்ணன்....
அதே தொலை தூரத்தில்.... இடது புறத்தில்..... உடலை நீல நிற ஒளி சூழ்ந்திருக்க..... நீர்சுழல் ஒன்று பின் தொடர்ந்து வர.... விரைத்த உடலுடன்... என்றும் புன்னகைக்கும் இதழ் இருகியிருக்க.... முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.... நீல நிற விழியில் ஆழிகடல் ஆர்பரித்திருக்க.... கம்பீர நடையுடன் நிமிர்ந்த நேர் பார்வையுடன் துளியும் ஐயமில்லாமல் நடந்து வந்தான் இப்புவியின் ஆதி திரவக்கோவன் இந்திரஜித்.....
வலது புறத்தில்..... உடல் முழுவதும் வெண்ணிற ஒளி சூழ்ந்திருக்க.... சூராவளி ஒன்று பின் தொடர்ந்து வர.... விரைத்த உடலுடன்.... ஏளனப் புன்னகையை இதழ் சூடியிருக்க.... வெற்றி நிச்சயம் என்னும் பெரும் நம்பிக்கை அவன் முகத்தில் பிரதிபலிக்க.... வெள்ளை நிற விழியில் சூராவளி கயவர்களின் உயிர் குடிக்க காத்திருக்க..... கம்பீர நடையுடன் நிமிர்ந்த நேர் பார்வையுடன் அழிவை தர நடந்து வந்தான் இப்புவியின் ஆதி காற்க்கோவன் சத்தீஷ்வரன்....
அவர்களருகில் கண்டவர்களின் கண்கள் அகல விரிந்து இருதயநோயே தேவலாம் என்னும் எண்ணத்தை வரவழைத்தது
காதல் தொடரும்...
என்னவாய் இருக்கும்...???
நம் கோவன்கள் வெற்றியை ஈட்டுவரா???
பொருத்திருந்து பார்ப்போம்....
இதயங்களே இது சிறு அத்யாயமென்பதால் அடுத்த அத்யாயம் இன்று இரவே பத்து மணியளவில் போடப்படும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro