காதல் -61
கீழே விழுந்த வளவனருகில் ஓடிய அனைவரும்.... வளவா வளவா என கத்த.... அவன் உடல் முழுவதும் இரத்தம் படிந்து... இறெக்கைகள் குறுதியிலே நனைந்திருந்தது... மெல்ல மயக்கத்திலே கண்களை திறந்த வளவன்.... " கோவன்..க..ளே... வி..திமு.றைகளை... மீறி... யுத்..தத்தை இப்..போதே தொட...ங்கி விட்..டனர்...." என திக்கி திக்கி கூறி... மயங்கினான்...
க்ரிஷ் : யுத்தமா... வளவனுக்கு என்ன ஆச்சு.. ஏன் திக்கி திக்கி பேசுறான்...
சரண் : வளவனுக்கு ரொம்ப அடிப்பறுக்கு டா.... காயத்துனால தான் மயங்கீட்டான்...
ரவி : நாங்க உடனே அவனுக்கு என்னன்னு பாக்குறோம்... என அவனுடனே ரனீஷ் வீர் மற்றும் அஷ்வன்த் இணைந்து காட்டிலே இருந்த மூலிகைகளை கொண்டு அவனுக்கு மருந்திட்டனர்... திடீரென...
ப்ரியா : டேய் இங்க என்னமோ நடக்க போகுது... என கத்த...
அடுத்த நொடி.... மரத்தின் கிளை ஒன்று முரிந்து... சரியாய் கீழே நின்ற க்ரிஷ்ஷின் மேல் விழுந்தது... தடுமாறி கீழே விழுந்த க்ரிஷ் ஆ என கத்தி... கண்களை திறக்க... அடுத்த நொடியே அவன் கண்களில் இருந்து தீ பாய.. க்ரிஷ் பதறி கண்களை இருக்கி மூட.. அவன் கண்ணிலிருந்து பாய்ந்த தீ அவன் முன் இருந்த ஒரு மரத்தை எரித்து சாம்பலாக்கியிருந்தது... அனைவரும் அதை அதிர்ந்து நோக்க.... இந்திரன் கீழ் விழுந்த க்ரிஷ்ஷை தூக்கினான்....
சத்தீஷ் : அடியேய் ஏன் டி வாய் வச்ச...
ப்ரியா : நா வாய் வக்கலன்னாலும் அது விழுந்துருக்கும் டா...
அம்மா என கத்திக் கொண்டு திடீரென கீழே விழுந்தாள் பவி... அனைவரும் அங்கு நோக்க... அவள் பின் குரோதமாய் முறைத்தவாறு நின்றாள் யோகனா... உடனே சுதாரித்த நாகனிகள் மூவரும் அவளை தாக்க போக.. அதற்கு முன்னே.. மூன்றாய் பிரிந்த அவளின் கூந்தல்.... கோவன்கள் மூவரின் கழுத்தையும் சுற்றி.... இருக்கி பிடித்து அந்தரத்தில் தூக்கியது... மூவரும் அவள் கூந்தலில் கை வைத்ததுமே மின்சாரம் பாய... அடுத்த நொடியே மூவரும் பலமாய் அலரினர்.... நாகனிகள் மூவரும் அதை கண்டு... யோகனாவை நோக்கி தங்களின் சக்திகளை வீச.. அவர்களுக்கு குருக்கே வந்து தடுத்தனர் மேகலாயா மற்றும் மதுசூதனா இருவரும் .....
கோவன்களை சாத்தான்களிடமிருந்து கேடையமாய் காப்பாதற்கே நாகனிகள் பிறப்பெடுத்தனர்... ஏனெனில் கோவன்கள் தீயசக்தியை அழிப்பதற்கே பிறப்பெடுத்திருந்தாலும்.... பெண் சாத்தான்களை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது... அதற்கு முக்கிய காரணம் மாயமோகினி.... யோகனாவின் உதிரம் மோகினியினுள் இருப்பதாலே அவள் சாத்தானாய் உருப்பெற்றாள்... அதிலிருந்தே யோகனாவை அவர்களால் தொட முடியாமல் போனது.... அவளிடம் அவர்களால் அவர்களை காக்க இயலாது... தாக்க மட்டுமே இயலும்....
திமிரிய மூவரின் கண்களும் மெல்ல மெல்ல கருமை நிறத்தை தத்தெடுக்க தொடங்கியது... அதை கண்டு பக்கு பக்கென இருந்தது அனைவருக்கும்... யாராலுமே யோகனாவை நெருங்க இயலவில்லை.... கோவம் தலைக்கேற மதுசூதனா மற்றும் மேகலாயாவை ஒரே சுற்றில் கீழே தள்ளிய ப்ரியா மற்றும் அனு.... திவ்யாவை உடனே யோகனாவை நோக்கி செல்ல கூறினர்... அவளும் உடனே அவளருகில் ஓடினாள்....
திவ்யாவை கண்ட யோகனா.... அவளின் கரத்தை தூக்கி திவ்யாவை தள்ளி விட முயன்றாள்... தன் கைகளை கொண்டு நீல நிறத்தில் கன்னாடியை போல் உருவாக்கிய திவ்யா அதை முன் கேடையமாய் வைத்தவாறு.... யோகனாவை நோக்கி ஓடினாள்... யோகனாவின் சக்திகள் அக்கன்னாடியில் தாக்க தாக்க பலமாய் சத்தம் வந்துக் கொண்டே இருந்தது.... ஒரு கட்டத்தில் மேகலாயா மற்றும் மதுசூதனாவை அனு மற்றும் ப்ரிய ஒரே பந்திற்குள் அடைத்து விட்டு திவ்யாவுடனே இணைந்து ஓடி... எம்பி யோகனாவை தாக்க.... காற்றில் மறைந்து போனாள் அவள்... அதிர்ச்சியில் இவர்கள் திரும்பி நோக்க... அப்பந்திற்குள் மதுசூதனா மற்றும் மேகலாயா மட்டும் வெளிவர பாடுப்பட்டுக் கொண்டிருக்க.... யோகனா உடனே கோவன்களும் காற்றோடு காற்றாய் எங்கோ மறைந்திருந்தனர்...
உடனே அப்பந்தின் அருகில் ஓடி வந்த மூவரும்...
அனு : கோவன்கள் எங்கே... அந்த யோகனா அவர்களை எங்கு கடத்தி சென்றாள்....
மேகலாயா : கூற மாட்டோம்...
திவ்யா : தேவையின்றி எங்களின் சினத்தை கிளரிவிடாதே மேகலாயா... நீ தாங்க மாட்டாய் இறுதியாய் கேட்கிறேன் உண்மையை கூறிவிடு....
மதுசூதனா : நீ எத்துனை முறை வினவினாலும் இது தான் எங்களின் பதில்.... கூற இயலாது...
ப்ரியா : வாய் பேச்சில்லாம் இதுங்களுக்கு சரி வராது... கெர்ள்ஸ் அட்டக் என கத்த... அப்பந்து மறைந்து... மூவரும் விடாது தாக்க... அவர்களின் தாக்குதலில் அரண்டு போன இருவரும் அவர்களின் கைகளை ஒரே நேரத்தில் வீச.... அவர்களை சட்டெனை சூழ்ந்துக் கொண்ட ஒரு கருப்பு புகை அவர்களை அங்கிருந்து மறைத்து அழைத்துச் சென்றது...
திவ்யா : இப்போ என்ன பன்றது... எங்க கூட்டிட்டு போய்ர்க்காளுங்கன்னே தெரியல...
சரண் : டோன்ட் வர்ரி அபௌட்டிட் திவி... மச்சானுங்க... தானா வர வேண்டிய இடத்துக்கு வருவானுங்க....
ரக்ஷா : என்ன அத்தான் அசால்ட்டா சொல்ற....
முகில் : கரெட் தான் ரக்ஷா மா... அவனுங்களால யோகனாவ தான் தொட முடியாது... பட் மத்தவங்கள எதுவேணா பன்ன முடியும்... ஆனா ஒன்னும் பன்ன மாட்டானுங்க....
ரனீஷ் : போர்களத்துல தான் கதைய முடிப்பானுங்க...
யோக்யா : தற்போது கூட அவர்கள் கோவன்களை குறி வைத்து தாக்கியது ஒரு முக்கியமான காரணத்திற்காக தான்... அவர்களின் பிறந்தநாளான இன்று... சில மணி நேரங்களுக்கு நிச்சயம் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது... அதற்கு எடுத்துக்காட்டு தான் மூவரும் அவர்களை மறந்து... காற்றால் மிதந்நு சுவரை இடித்து சுக்கு நூராக்கியது... மற்றும் அவர்களின் கண்களை திறக்க இயலாமல் இருந்தது.... இந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை பலியிட முயற்சிக்க போகின்றனர்...
நாகனிகள் : என்னது பலியா....
அர்ஜுன் : பீதி ஆவாதீங்க... டி... அவனுங்க அதுக்குலாம் அசர மாட்டானுங்க... அத அவனுங்கு பாத்துக்குவானுங்க...
ரவி : இப்போ நமக்கு வேற வேலை இருக்கு... என உடனே காட்டிற்குள் நுழைந்தனர்.... அரைமணி நேர நடை பயணத்தின் பின்... கேள்விகளாய் கேட்டு நச்சரித்துக் கொண்டே வந்த நாயகிகளின் இதழ்காள் தானாகவே உறையாட மறந்து ஆவென பிளந்துக் கொண்டது... அங்கிருந்த ஒரு பச்சை குளத்தை கண்டு அதை ஆச்சர்யத்தில் பார்த்துக் கொண்டிருந்தவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது அங்கு அவர்கள் கண்ட காட்சி....
நட்ட நடு காட்டில்... பல மரங்களின் பின்... பல கொடிகளின் மறைவில்.... தன் பெரிய உருவத்தை மறைக்க இயலாமல் கம்பீரமாய் உயர்ந்து நின்றது ஓர் மாபெரும் அரண்மனை... அதை கண்டு இவர்கள் ஆவென வாயை பிளந்து நிற்கும் போதே நாயகன்கள் அவ்வரண்மனையின் கதவை தொட்டு தள்ளினர்... தானாய் அக்கதவும் ஓசை எழுப்பிக் கொண்டே திறந்தது...
அரண்மனையுள் நுழைந்த நாயகிகள் அதன் கலைநயத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்க.... நாயகன்கள் எட்டு பேரும் உள்ளேயே நோக்கி கொண்டே இருக்க.... அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் நிலம் அதிர தொடங்கியது... இவ்வதிர்வில் கண்களை இன்னும் அகல விரித்த நாயகிகள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அவர்கள் முன் தொலைவில் வந்த ஏதோ ஒரு உருவத்தை நோக்க... ஒரு உருவமில்லாமல் பல உருவம் ஓடோடி வர.... அதனை கண்டு இவர்கள் பார்வையை கூர்மையாக்க... ஓடி வந்த உருவங்களை கண்டு அதிர்ச்சியில் தானாகவே நாயகிகளின் இதழ்கள் " யானையாளிகளா?? " என வினா எழுப்பியது...
ஓடோடி வந்த யானையாளிகள் அவரவர் தலைவனை அணைக்க வர.... நாயகன்கள் அப்படியே சிரிப்புடன் நிற்க.... நாயகிகள் அத்துனை பெரிய உருவம் கட்டியணைக்க முயல்கிறதே என அதிர்ச்சியில் கத்தியவாறு நிற்க... அதுகலோ... தங்களின் தும்பிக்கையை வைத்து... அலேக்காய் அவர்களின் தலைவன்களை தூக்கி மேல் அமர வைத்தது...
முகில் : எப்படி இருக்கிறீர்கள் நண்பர்களே.... என வினவ...
யானையாளிகள் அனைத்தும் தங்களின் தும்பிக்கையை தூக்கி பிளரலை வெளியேற்றியது....
ஒவீ : யானையாளிகள் அழியலையா டா....
சரண் : இல்ல மா... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ்... மூணு பேரும் போர் வர்ரதுக்கு முன்னாடியே... யாளிகளுக்கு உயிர் சேதம் ஏற்படாம இருக்க மந்திரங்கள ஓதிவிட்டாங்க... சோ அழிய வாய்ப்பே இல்ல....
பவி : இத்தனை வர்ஷங்களுமா....
அஷ்வன்த் : ஆமா நித்ரா....
ரித்விக் : சரி நோ டைம் வேஸ்ட்டிங்... வாங்க உடனே கெளம்பலாம்... என யாளிகளின் மேல் அமர வைத்து... செல் என எட்டு பேரும் உத்தரவிட.... தங்களின் இறெக்கைகளை விரித்து விண்ணில் உயர்ந்து பறந்தது யானையாளிகள்... மேலிருந்து கீழே நோக்கும் போது அனைத்தும் சிறு சிறு புள்ளிகளாய் காட்சி அளித்தது... காற்றின் வேகத்தை விட அதிவேகமாய் சென்றது யானையாளிகள்....
தலை சுற்றியெடுக்க கண்களை கடினப்பட்டு பிரித்தனர் கோவன்கள் மூவரும்... அவர்கள் முன் அனைத்தும் கருப்பாய் இருக்க.... " கண்ணு போய்டுச்சோ?? " என மூவரும் கண்களை திறந்து திறந்து பார்க்க... அப்போதே மூவருக்கும் ஏதோ தங்களின் கண்களை மூடியிருப்பது தெரிந்தது...
க்ரிஷ் : டேய் எவன் டா அது... கண்ண மூடி விற்றுக்குரது... தொறந்து விடுங்க டா... இப்போதா எனக்கே கண்ண தொறக்க முடியுது...
சத்தீஷ் : டேய் நீயும் இங்க தான் இருக்கியா....
இந்திரன் : மை டியர் உடன் பிறப்புகளே... இங்க தான் மூணு பேரும் இருக்கோமா...
க்ரிஷ் சத்தீஷ் : எஸ் டா சகோதரா...
இந்திரன் : ஆனா ஏன் டா இப்டி மூஞ்ச மூடி வச்சிர்க்கானுங்க...
க்ரிஷ் : என் கண்ணு வெளிச்சத்த பாத்து எரிய கூடாதுன்னு நல்ல எண்ணத்துல மூடியிருக்கானுங்களோ...
சத்தீஷ் : அப்ரம் ஏன் டா கையையும் சேர்த்து கட்டீர்க்கானுங்க...
இந்திரன் : அப்போனா இது நம்ம ஆளுங்க இல்லன்னு அர்த்தம் டா....
க்ரிஷ் : சரி கடைசில என்ன நடந்துது... நாம எங்க இருக்கோம்...
தீரா : முக்கியமான கேள்விய எவ்ளோ லேட்டா கேக்குறான் பாரு....
இந்திரன் : உன் மேல மரம் விழுந்துச்சு...
சத்தீஷ் : மரமா... அடேய் கிளை டா...
இந்திரன் : ஏதோ ஒன்னு... அப்ரம் யோகனா பிசாசு வந்துச்சு... நம்ம கழுத்த நெருச்சிச்சு.. ஷாக் பாஸாச்சு.. அப்ரம்...
க்ரிஷ் : தூங்கியாச்சு...
இந்திரன் சத்தீஷ் : யா...
க்ரிஷ் : அப்போனா வி ஆர் கிட்னப்ட் டா...
சத்தீஷ் : குட்...
இந்திரன் : இப்டி இருட்ல பேச விட்டுட்டானுங்களே டா... நாம பாட்டுக்கு கேக்க சாப்ட்டு முடிச்சிர்ப்போம்..
சத்தீஷ் : டேய் நியாபகப் படுத்தாத... நானே இப்பதா அத மறந்துட்டு இருக்கேன்...
க்ரிஷ் : நீ ஏன் டா மறக்குற... இந்த பிசாசு மூதேவிகளை எல்லாம் மண்ணுல போட்டு மூடிட்டு நம்ம தீரா ஹைட்டுக்கு ஒரு கேக் வாங்கி செலபிரேட் பன்றோம்... ஓக்கே...
தீரா : செவனேன்னு போய்ற்றுந்த என்ன ஏன் டா இப்போ இழுக்குர....
இந்திரன் : நீ இங்க வருவன்னு தான்...
தீரா : நா வந்து என்ன டா பன்ன போறேன்...
சத்தீஷ் : கண்ண கட்டிவிட்டுட்டானுங்க போர் அடிக்கிது பாப்பா... அதான் உன்கிட்ட கடல போடலாம் னு...
தீரா : டேய்... எனக்கு எவ்ளோ வேலை இருக்கு ... நீங்க கடல போட கூப்புர்ரீங்களா...
க்ரிஷ் : அவ்ளோ வேலை இருந்தும் தான்... பேர சொன்ன உடனே வந்தியா...
தீரா : நா போறேன் போடா....
இந்திரன் : எங்ககையும் முட்டிக்காத பாப்பா.. பாத்து போ...
தீரா : போறேன் போறேன்.... ( டேய் லூசுங்களா... இவனுங்க கண்ண கட்டுனதுக்கு நீங்க அவனுங்களோட வாய தான் டா கட்டீர்க்னும்... பேசியே உயிர வாங்குரானுங்க... ) என்று என்னுள்ளே புலம்பிக் கொண்டேன்....
க்ரிஷ் : இது சரிப்பட்டு வராது.... உடன் பிறப்புகளே... நாமே நம் கட்டை அவிழ்த்திடலாம்.....
இந்திரன் சத்தீஷ் : அப்டியே ஆகட்டும்... என மூவரும் கரங்களை கட்டப்பட்டிருந்த கையிறை இழுக்க முயல... அப்போதே மூவருக்கும் அது கட்டப்பட்ட கயிறல்லை... போடப்பட்ட மந்திர கயிறு என தெரியவந்தது...
சத்தீஷ் : இத எப்டி டா அவுக்குரது...
க்ரிஷ் : வேற வழி இல்ல... அந்த மண்டையனுங்க இங்க வர வரைக்கும் வெயிட் பன்னி தான் ஆஹனும்....
இந்திரன் : இந்த கேனைங்களுக்காகலாம் நாம வெயிட் பன்ன வேண்டியதா இருக்கு டா....
தீரா : ஏன் டா... நீங்க வருவீங்க உங்கள கொல்லலாம் னு 4000 வருஷமா வெயிட் பன்ற அவனுங்களே கவலப்படல... உங்களுக்கென்ன டா....
சத்தீஷ் : போறேன்னு சொன்ன...
தீரா : அன்... நா திரும்ப போறேன்... என திரும்ப... அப்போது சரியாய் தீயவர்கள் அனைவரும் உள் நுழைய.... திடீரென முன் வந்து நின்றாள் யோகனா...
தீரா : அம்மா... பேயி... 😱என அலர....
இந்திரன் : அது மூஞ்ச எல்லாம் பாத்து பயப்புடாத பாப்பா... Conjuring பட நன்(NUN) மாரி தான் இருக்கும்.... என்ன அந்த நன்(NUN) கருப்பு வெள்ள ட்ரெஸ் போற்றுக்கும்... இது கொஞ்சம் கலரா போற்றுக்கும்...
தீரா : அட ஆமா... இத இத்தன நாளா நா எப்டி கவனிக்காமே இருந்தேன்...
யோகனா : ஏய்...
தீரா : என்னா ஏய்... முடிஞ்சா என் அண்ணனுங்கள்ட்ட பேசிக்க...
க்ரிஷ் : அப்டி சொல்லு பாப்பா....
விகாஷ் : மொதல்ல அவனுங்க கண் கட்ட அவிழ்க்க சொல்லு.....
நகாஷ் : பாய் கண்ண தொறந்தே ஆகனுமா....
ஆகாஷ் : ஏன் டா... இப்டி கேக்குற
தீரா : கண்ண தொறக்காமையே இந்த பேச்சு பேசுறானுங்களே... கண்ண தொறந்துவிட்டுட்டா பேசி பேசியே உயிர எடுத்துர மாட்டானுங்களான்னு தான்.... அப்டி கேக்குறான் டா....
சத்தீஷ் : அடியேய் எங்கள கலாய்க்கிறேன்னு அவனுங்கள காண்டாக்காத டி.. ஓடிடு....
தீரா : நீ வார்னிங் குடுத்தும் நா இங்க இருப்பேன்.... எஸ்கேப்....
சட்டென தானாகவே கோவன்களின் கைகளை கட்டியிருந்த மந்திர கயிறுகள் பட்டென வெடித்து அவர்களை விடிவித்தது... அதை கண்டு மற்றவர்கள் திகைக்க.... புன்னகை சூடிய இதழ்களுடன் பட்டென எழுந்த மூவரும் அவர்கள் முன் நிற்க.... க்ரிஷ்ஷின் கண்களை மூடியிருந்த கருப்புத்துணி நொடியில் எரிந்து சாம்பலாக அவனின் சிகப்பு வர்ண இரத்தினக்கல் போன்ற விழி பலபலக்க தெரிய.... அவன் கரத்திலிருந்து பாய்ந்த தீ... மூவரையும் சுற்றி ஓர் தீ வளையத்தை உருவாக்க..... இந்திரன் மற்றும் சத்தீஷும் அவர்களின் கண் கட்டை அவிழ்த்து... அவர்களின் நீலம் மற்றும் வெள்ளை நிற விழியை ஒளிர விட்டனர்....
யோகனா : பிரபு தாமதமாக்க கூடாது... இப்போதே இவர்களை பலியிட்டால் நமக்கு பணி மிச்சம்... அவர்களை தப்பிச்செல்ல விடாதீர்கள்...
உடனே விகாஷ் ஆகாஷ் நகாஷ் அத்தீயினுள் குதிக்க... இதற்காகவே காத்திருந்த நாயகன்கள் மூவரும் ஒரே நேரத்தில் பின் நகர... இந்திரனும் சத்தீஷும் நொடி மாறாமல் ஒரே போல் அவரவர் சக்தியை செழுத்தினர்.... காற்றால் மூவரும் கண்களை திறக்க முடியாமல் தினரி... நீரில் மூழ்கினர்....
இந்திரனும் சத்தீஷும் ஒரே நேரத்தில் அவர்களின் கரங்களை மூடி விட்டு... க்ரிஷ்ஷுடனே இணைந்து.... விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரையும் காலால் உதைத்து கீழே விழ வைத்தனர்.... விழுந்த வேகத்தில் மூவரும் கண்களை திறக்க.... சிகப்பு நீலம் வெண்மை நிற புகைகள் தங்களை சூழ.... " நம் இடத்தில் மீண்டும் சந்திப்போம் " என ஒரே போல் கூறி கண்ணடித்து விட்டு புகையோடு புகையாய் மறைந்தனர் கோவன்கள் மூவரும்.....
காதல் தொடரும்.....
நிகழப்போவதென்ன???
யாருக்கு வெற்றி...???
தீயசக்திக்கா???? இறைசக்திக்கா...???
பொருத்திருந்து பார்ப்போம்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro