Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-6

சிரித்துக் கொண்டே வெளியே வந்த க்ரிஷ்ஷை ஆண்கள் குருகுருவென நோக்க....அவனோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் பராக்கு பார்க்க தொடங்கினான்.... சிறிது நேரத்தில் முகத்தை கழுவி.... தன்னை சமன் செய்துக் கொண்டு வெளியே வந்தாள் அனு... மீண்டும் அவளை நோக்கி திரும்பிய க்ரிஷின் கண்கள் அவள் கைகளை கண்டு அப்படியே நின்றது.... கையில் வைத்திருந்த கத்தியை ஆட்டி...." கிட்ட வந்த சொருகீடுவேன் " என்று செய்து காட்ட.... எம்மாடி என்று மனதுக்குள்ளே நினைத்தவன் ஈஈஈ என இழித்து விட்டு சமத்தாக ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டான்.... அவளை கலாய்க்கவே பெண்கள் பேச்சை தொடங்க.... திடீரென ரித்விக்....

ரித்விக் : ஹே இத விடுங்க.... அப்பா அம்மா...அத்த மாமா... பாட்டி தாத்தாஸ் எல்லாரும் எங்க..????

நாயகிகள் : அய்யையோ இவனுங்க திரும்ப இங்கையே வந்துட்டானுங்களே... எப்டி சமாளிக்கிறது....

சத்தீஷ் : என்ன டி திருட்டு முளி முளிக்கிறீங்க??? எங்க எல்லாரும்???

பவி : அது...அது...அன் தோட்டத்துக்கு போய்ர்க்காங்க....

முகில் : அதுக்கு எதுக்கு மச்சி இவ்ளோ திக்குர???என்றான் புருவத்தை ஏற்றி....

பவி : ஒன்னு இல்ல மச்சான்....

அஷ்வன்த் : உன் மச்சி முளிக்கிர முளிய பாத்தா... நாம ரியல் காரியத்த நெருங்கீட்டோம் னு நெனக்கிறேன்....

பவி : டேய் மனசுல இருர்ருக்குரத வெளிய சொல்லாத டா லூசு பயலே நானே ஒலரீரபோறேன்.... என பட்டென ஒலரவிட....

அனு திவ்யா ப்ரியா : அதா ஒலரீட்டியே டி.... என தலையில் அடித்துக் கொள்ள....

பவியோ அச்சச்சோ என நாயகன்களை நோக்க... அஷ்வன்த் கண்ணாலே குரும்பாய் சிரித்தான்....

க்ரிஷ் : ஏதோ இருக்குன்னு வந்துருச்சு... அப்டியே அந்த விஷயமும் வந்துட்டா எங்களுக்கு வேலை மிச்சம்....

ப்ரியா : ஒரு அதிமுக்கியமான வேலைக்காக சம்மந்தம்பேச போய்ர்க்காங்க.... என உண்மைக்கு பாதி க்லூவையும் குடுத்திருந்தாள்....

அனு : அடியேய் மொத்த காரணத்தையும் புட்டு புட்டு வச்சிராத டி.... என ப்ரியாவின் காதருகில் கிசுகிசுக்க....

சத்தீஷ் : அதிமுக்கிய வேலையா??? அப்டி என்ன வேலை???

அனு : அதல்லா என்னன்னு கேக்க கூடாது....ஒரு வேலைன்னா வேலை தான்....

இந்திரன் : அப்டி என்ன வேலை... ஏன் டி இப்டி ஆர்வத்த தூண்டுரீங்க???

திவ்யா : சொல்ல முடியாது ன்னா சொல்ல முடியாது....

ரித்விக் : க்லூவாவது குடுங்களேன் டி....

ப்ரியா : அதல்லா குடுத்தாச்சு....

முகில் : குடுத்தாச்சா??? என்ன டி குடுத்தீங்க....

பவி : அதல்லா சொல்ல முடியாது டா... க்லூ குடுத்தோம்... க்லூ குடுத்துட்டோம் னும் க்லூ குடுத்துட்டோம்... இனி நீங்க தான் கண்டுபுடிக்கனும்...

ரித்விக் : அடப்போங்க டி நீங்க சொல்லவே வேணாம்.. எப்டியும் எல்லாரும் வீட்டுக்கு வந்துதான ஆகனும்...

அப்போது சரியாக அனைவரும் சிரித்த முகத்துடன் பழங்கள்... புடவைகள்... வேஷ்டி சட்டைகள்... மல்லிகப்புவுடன் நடந்து வந்தனர்....

சத்தீஷ் : என்னடா ஏதோ கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வந்தமாரி வராங்க...

ப்ரியா : கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வர்ல மைடியர் அத்தபையா...

திவ்யா : கல்யாணம் பேசீட்டு வந்துர்க்காங்க.... என கண்ணடித்தாள்...

நாயகன்கள் : என்னது கல்யாணம் பேசீட்டு வந்துர்க்காங்களா??? யாருக்கு????என அதிர்ச்சியில் கத்த....

காவியா : என் மகனுக்கு தான்.... என சிரித்துக் கொண்டே கூற....

பவி : என்னது உங்க பையனுக்கா????

இப்போது நாயகிகளும் அதிர்ச்சியாயினர்.... அஷ்வன்த்தும் பவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.... மற்றவர்கள் அவர்களின் காதலை அறிந்ததால் கண்களை பிளந்து முளித்துக் கொண்டு நின்றிருந்தனர்...

காவியா : ஆமா என் மகனுக்கு தான்...

அஷ்வன்த் : அம்மா... என்னம்மா... ஏன் ட்ட கேக்கவே இல்ல.... நா நித்ராவ 13 வயசுலேந்து உயிருக்குயிரா காதலிக்கிறேன்... நீங்க என்னன்னா ஏன் ட்ட கேக்காமயே கல்யாணம் பேசீட்டு வந்துர்க்கீங்க????

குடும்பத்தினர் முகத்தில் ஈ ஆடவில்லை...

மாதவன் : யார் டா அது நித்ரா.... ????

பவி : அப்பா .... அதுநான் தான்... நானும் அத்தான சின்ன புள்ளைளேந்து விரும்புறேன்... எப்டி நீங்க அவனுக்கு வேற பொண்ண பாக்கலாம்... என கத்த....

பவியும் அஷ்வன்த்தும் ஒருவரை ஒருவர் காதலுடன் நோக்கி கொண்டனர்...

காவியா : டேய் அவசரக்காரா.... உனக்கு பொண்ணு பாத்தேன்னு நா எப்போ டா சொன்னேன்????உனக்கு என் அண்ணன் மக...என் மருமக பவியே மேலு... இதுல இன்னோருத்தி கேக்குதா???

அஷ்வன்த் : ங என முளிக்க...

க்ரிஷ் : அப்போ அவனுக்கு பொண்ணு பாக்கலையா அத்தமா???

இலக்கியா : இல்ல டா...

இந்திரன் : அப்ரம் என் அத்தமா என் மகனுக்கு தான்னு சொன்னீங்க??? அனைவரும் அதே கேள்வியை குழப்பத்தில் கேட்க...

காவியா : டேய் நா ஏன் இரெண்டாவது மகன் ரித்விக் க சொன்னேன்... அவனுக்கு தான் பொண்ணு பாத்துர்க்கோம்... உங்களுக்கு சொல்லீட்டு தான டி போனோம்...

ரித்விக் : வாட்???? எனக்கா??? அம்மா.... நோ... என்றான் பேரதிர்ச்சியுடன்....

பவி : சாரி அத்தமா.... என் மகன்னு சொன்னதும்.... கொஞ்சொ கன்ப்யூஸ் ஆய்ட்டேன்... என் மகன் ரித்விக் ன்னு சொல்லியிருந்தா நா உணர்ச்சி வசப்பட்டுருக்க மாட்டேன்...

மாதவன் : அதுவும் நல்லது தான்... குடும்பத்துக்கே உங்க இரெண்டுப்பேரோட காதல் தெரிஞ்சிடுச்சே.... என்றார் காட்டமாய்...

பவிக்கோ தன் தந்தையின் குரலில் மாருதல் தெரிவதை கண்டு உதர.... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவரும் இடுப்பில் கை வைத்தவாறு மாதவனின் முன் போய் நிற்க... மூவரின் முகமும் " உங்க கோவத்த நம்புர மாரி இல்லையே " என தெள்ளத் தெளிவாய் கூறியது... சற்று தடுமாறிய மாதவன்...

மாதவன் : என்னடா ஏன் என்ன இப்டி பாக்குரீங்க???

சத்தீஷ் : ஒன்னு இல்ல ப்பா... உடன்பிறப்புகளே...

க்ரிஷ் இந்திரன் : எஸ்...

சத்தீஷ் : Lets execute our plan...

க்ரிஷ் : பவிகுட்டி....

பவி : சொல்லு அண்ணா....

க்ரிஷ் : நீ யாரடி கல்யாணம் பன்னிப்ப...??? அதவாது யார லவ் பன்ற??? என கேட்க...

பெண்ணவள் தன் தந்தை முன்பு கூற தயங்க... அதை புரிந்துக் கொண்ட அவளின் சகோதரன்கள்....

சத்திஷ் : அப்பா இருக்காங்கன்னு பாக்காதடி பிசாசே சொல்லு....

பவி : சைட் கேப்ல என்ன பிசாசு ன்னு சொல்றியா????

சத்தீஷ் : கண்டுபுடிச்சிட்டாளே... இல்ல குட்டிமா... சொல்லு பாப்போம்...

இந்திரன் : குட்டிமா...உன் அண்ணனுங்க இருக்கோம் தைரியமா சொல்லு....

மூச்சை இழுத்துவிட்டவள்....
பவி : அஷ்வன்த் அத்தான தான் டா காதலிக்கிறேன்.....

க்ரிஷ் : இது போதும்... மச்சான்....

யார கூப்புர்ரான் என அஷ்வன்த் முளிக்க...

முகில் : உன்னத்தான் டா கூப்புர்ரான்...

அஷ்வன்த் : ஒ என்னயா??? அன் சொல்லு டா...

இந்திரன் : நீ யார மச்சான் லவ் பன்ற???

அஷ்வன்த் : என் நித்ராவ டா.... என யோசிக்காமல் கூற...

இப்போது மூவரும் அவர்களின் தந்தையான மாதவனை நோக்கி...

சத்தீஷ் : அப்பா.. அவங்களுக்கு புடிச்சிர்க்காம் ... நீங்க என்ன நெனக்கிறீங்க???

மாதவன் : நான் கல்யானம் பன்னிவைக்க மாட்டேன்... என் ட்ட கேட்டா லவ் பன்னாங்க???
அவரின் பதிலை கேட்டு பவியின் முகம் வாட... அதனை கண்ட அவளின் சகோதரன்களின் முகமும் சுருங்க...

க்ரிஷ் : ஓஹ் அப்டியா????அப்பா.. எங்க தங்கச்சிக்கும் எங்க மச்சானுக்கும் ஒருத்தர ஒருத்தர புடிச்சிர்க்கு... அவங்களுக்கு கல்யாணம் பன்னிவைக்க... பொண்ணோட அண்ணனுங்க மூணு பேரு இருக்கோம்... இன்னைக்கே கல்யாணம்..

சத்தீஷ் : குட்டி சாத்தானே வா டி...

இந்திரன் : டேய் வாடா ரெஜிஸ்டர் ஆபீஸுக்கு... என அஷ்வன்த்தை பிடித்து இழுக்க.... அவன் யோசிக்காமலே வந்தான்....உடனே மாதவன்....

மாதவன் : அடேய் அடேய்... கொஞ்சொ என்னையும் தான் கோவமா இருக்க விடுகளேன் டா.... நடிக்க கூட விட மாற்றானுங்க...என புலம்ப....

இவரின் புலம்பலை கேட்டு க்ரிஷ் இந்திரன் சத்தீஷை தவிர்த்து அனைவரும் அதிர்ச்சியா குழப்பமா என இரண்டும் கலந்த கலவையான உணர்வுகளுடன் நின்றிருக்க...

இந்திரன் : நடிச்சா ஒரு அளவுக்கு தான் நடிக்கனும் பா...எங்க தங்கச்சி முகம் வாடுர அளவு நடிச்சா அதான் நாங்க கல்யாணம் பன்னி வைக்க கெளம்பீட்டோம்...

இதனை கேட்ட பவி ஓடி வந்து அவள் அண்ணன்கள் மூவரையும் அனைத்துக் கொண்டாள்...

மாதவன் : ரொம்பத்தான் டா... உங்களுக்கு உங்க தங்கச்சி சந்தோஷம் முக்கியம்னா... எனக்கு என் மக சந்தோஷம் முக்கியம் டா...

சத்தீஷ் : ஆமா ஆமா...நீங்க உங்க மகளுக்கு ஒன்னு பன்னா...அண்ணனுங்க நாங்க நாங்க மூணு மடங்கு அதிகமா பன்னுவோம்...

இரமனன் : டேய் என்னத்தான் டா நடக்குது இங்க??? அப்பனும் மகனுங்களும் நீங்களே பேசிக்கிறீங்க???

மாதவன் : சும்மா டா இரமனா... நானும் கோவமா இருந்தா எப்டி இருக்கும் னு பாக்க ஒரு ப்லன் போட்டேன்.... அத நல்லா தெரிஞ்சிக்குட்ட இவனுங்க வேற ப்லன் போட்டுட்டானுங்க...

அஷ்வன்த் : அப்போ எங்க லவ் ல உங்களுக்கு பிரச்சனை இல்லையா மாமா???

மாதவன் : அதல்லா இல்ல டா மருமகனே...நீங்க இரெண்டு பேரும் விரும்புரீங்கன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்... உங்களுக்கு பொறந்தப்பவே பேசி வச்சது தான்... உங்க விருப்பத்துக்கு என்னைக்கு நாங்க தடையா இருந்துர்க்கோம்... அவரை அனைத்துக் கொண்ட பவி...

பவி : தன்க்ஸ் பா....ஐ லவ் யூ...

மாதவன் : லவ் யூ டூ டா மா...

அஷ்வன்த்தின் காதை பிடித்து திருகிய முரளி....

முரளி : அப்டியே உன் மச்சானுங்க கூப்ட்டா ஓடிடுவியே...

அஷ்வன்த் : ஹிஹி அப்பா... ஹிஹி

முகில் : இழிக்காத டா....சகிக்கல...

ப்ரியா : ச என்ன மாமா இப்டி பயமுருத்தீட்டீங்க???

மாதவன் : சும்மா டா...

அனு : சரி ரித்விக்குக்கு பார்த்துருக்க பொண்ண பத்தி சொல்லுங்க.... என மறந்துப்போன டாப்பிக்கை இழுத்துவிட...

ரித்விக் : நா மறந்தே போய்ட்டேன்... நல்லவேளை நியாபகம் படுத்தின.... அம்மாஸ் அப்பாஸ் மாமா தாத்தாஸ் பாட்டி... எனக்கு கல்யாணம் லாம் வேணாம்....

வேலுதாத்தா : அதல்லா இல்ல...கல்யாணம் னா கல்யாணம் தான்.... தாத்தா சொன்னா கேக்கமாட்டியா???

ரித்விக் : தாத்தா இப்டி கேட்லாம் போடாதீங்க தாத்தா...

சங்கரன்தாத்தா : பெரியவங்க சொன்னா கேக்கனும் டா....

ரித்விக் : அய்யோ...தாத்தா என் நெலம புரியாம பேசுரீங்களே....

இரமனன் : அதல்லா தெரிஞ்சு தான் டா பேசுறோம்...

ரித்விக் : அப்பா....

இலக்கியா : அடம்புடிக்காத... பொண்ணு தங்கமான பொண்ணு... நல்லா படிச்சிற்க்கா... வேலைக்கு போல... அன்பான பொண்ணு... குணத்துலையும் தங்கம்... நல்ல உயரம்.. மாநிறம்... மகாலட்சுமி ஆட்டும் இருக்காடா.... குடும்பத்த பத்தியும் நல்லா சொல்றாங்க...அப்பா அரசியல்ல இருக்காரு.... அவருக்காக அவரு பொண்ண ஒதுக்க முடியுமா... ஒரு தங்கச்சி இருக்கு....அம்மா இல்ல... பொண்ணு பேரு...

ரித்விக் : அம்மா அம்மா... ப்லீஸ் மா...

முரளி : டேய் கேழு டா... முழுசா முடிக்கட்டும் அண்ணி....

இலக்கியா : பொண்ணு பேரு.... அவரும் முடிக்கும் முன்னே

சத்தீஷ் : அத்து... அவனுக்கு இஷ்டம் இல்லன்னா விற்றுங்களேன்...

முகில் : ஆமா மா... அப்ரமா கல்யாணம் பன்னிகிட்டுமே அவன்...

காவியா : அப்போ நீ பன்னிக்கிறியா???

முகில் : என்னது நானா??? நான் சிங்கிள் மா...

இலக்கியா : அப்போ சும்மா இருடா....

அஷ்வன்த் : அம்மா... அவன் தான் அவ்ளோ சொல்றானே... கொஞ்சொ லேட்டா வச்சுக்கலாமே...

முரளி : டேய் உனக்கும் அவனுக்கும் ஒரே வயசுடா... உனக்கு பவி ய முடிவு பன்னியாச்சு... அவனுக்கு பொண்ணு பாக்கனும் ல..

இந்திரன் : மாமா அவன் விருப்பம் இல்லாம பன்னிக்கிற கல்யாணம் எப்டி மாமா???

தெய்வானை : டேய் பேராண்டிகளா... என்னடா பெரிய மனுஷங்களாய்ட்டீங்களோ....

க்ரிஷ் : ஹைய்யோ ப்யூட்டி... ஒரு ஆணோட மனசு ஒரு ஆணுக்கு தான் புரியும்... ஒரு ப்ரெண்டோட மனசு... அவனோட ப்ரெண்டுகளான எங்களுக்கு தான் புரியும்...

வேலுதாத்தா : எங்களுக்கும் புரியும்.. அந்த பொண்ணு தான் ரித்விக்குக்கு பாத்துர்க்கோம்... பொண்ணுக்கும் இவன புடிச்சிடுச்சு... இந்த மாச கடைசியில கல்யாணம்.... பொண்ணு பேரு....

ரித்விக் : தாத்தா ப்லீஸ்....

திவ்யா : டேய் பேர தான் சொல்ல விடுங்களேன் டா.... எல்லாரும் பேர் சொல்லும் போது கரெக்டேடா வந்து டிஸ்டர்ப் பன்றானுங்க... தாத்தா நீங்க சொல்லுங்க...

ரித்விக்கின் முகம் வாடி போனது... அவனை கண்ட அவனின் நண்பன்கள் முகமும் வாடியது...

வேலுத்தா : பொண்ணு பேரு.. மதுரஞ்சனா...என்றார் புன்னகையுடன்....

வாடிய ரித்விக்கின் முகம் தானாய் மலர்ந்தது.... 1000 வாட்ஸ் பல்பு போல் ப்ரைட் ஆன அவனின் முகத்தை கண்டு பெரியவர்களும் நாயகிகளும் சிரித்தனர்....

ரித்விக் : தாத்தா உண்மையாவே பொண்ணு பேரு மதுரஞ்சனா வா??? ஆமா எப்போ கல்யாணம் சொன்னீங்க???

காவியா : ஏன் டா??

ரித்விக் : அட சொல்லுங்க...

மாதவன் : இத மாச கடைசில டா....

ரித்விக் : ஏன் அடுத்த வாரமே நல்ல நாள் இல்லையா???

இலக்கியா : அடப்பாவி....

திவ்யா : இவ்ளோ நேரம் கல்யாணமே வேணாம்னு ஒப்பாரி வச்சிட்டு... அடுத்த வாரமே கல்யாணம் வேணுமா உனக்கு???

ரித்விக் : ஹிஹி...

இலக்கியா : ஏன் டி என் மகன கலாய்க்குர??? அவன் அவன் காதலிய பொண்டாட்டி பாக்குர ஆர்வத்துல கேட்டுட்டான்... என கேலியாய் கூற...

சத்தீஷ் : அவன் லவ் உங்களுக்கு எப்டி தெரியும் அத்து???

பவி அனு திவ்யா ப்ரியா : நாங்க எதுக்கு இருக்கோம்... இவன் இன்னும் எத்தன நாள் சிங்கிளா சுத்துவான்... அதா அவங்க இரெண்டு பேரோட லவ்வையும் வீட்ல போட்டு உடச்சிட்டோம்... மதுக்கு கூட இது தெரியும்....

இந்திரன் : லூசுங்களா... அத முன்னாடியே சொல்லலாம் ல...

ப்ரியா : முன்னாடியே சொல்லிட்டா சர்ப்ரைஸ் இருக்காது ல...

அப்போது சரியாக ரித்விக்கின் போன் அலர...

காவியா : உன் வருங்கால மனைவி தான் டா... என கூற... அவன் சிரித்துக் கொண்டே அறைக்குள் ஓடி விட்டான்...

அறைக்குள் நுழைந்தவன் போனை அட்டன் செய்து காதில் வைக்க... எதிர்புறம் இருந்து வந்த மாமா என்ற அழைப்பில் மெய் சிலிர்த்து போனான் ரித்விக்....

ரித்விக் : ரஞ்சு....

மது : மாமா உனக்கு தெரியுமா...இன்னைக்கு உன் வீட்ல இருந்து என்ன பொண்ணு பாத்துட்டு போனாங்க டா....நா எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா.... நீ என் காதல ஏத்துக்குரதுக்கு முன்னாடி சொல்லுவியே... "இதுவே நாம காதலிச்சு நம்ம கல்யாணத்துக்கு உங்க வீட்டுக்கு நா பொண்ணு கேட்டு வந்தா உன் அப்பா உன் குடும்பம் எங்கன்னு கேக்கமாட்டாரா " ன்னு கேப்பியே... பாத்தியா இன்னைக்கு உன் குடும்பத்த...

தன் கண்களிள் எட்டி பார்த்த கண்ணீரை துடைத்தவன்...

ரித்விக் : எனக்கு தெரியும் டி... என் குடும்த்த பத்தி...நா சும்மா உன் கிட்டேந்து தப்பிக்க சாக்கு சொல்லிகிட்டு இருந்தேன்...

மது : சொல்லுவ டா சொல்லுவ... என் கிட்ட இருந்த உன்ன யாராலையும் காப்பாத்த முடியாது....

ரித்விக் : தெரியும் டி பட்டு....

மது : மாமா ஐ லவ் யூ டா...

ரித்விக் : நானும்.... அவர்களின் உறையாடல் இவ்வாறே தொடர்ந்தது...

நேரம் மெல்ல நகர....காதல் ஜோடிகள் விண்ணில் பறக்காத குறையாக விழியாலே காதல் மொழியை பருகிக் கொண்டிருக்க... குடும்பத்தினர் அதை கண்டும் காணாதவாறு சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தனர்... அனைவரும் இரவு உணவை உண்டுவிட்டு உறங்க சென்றுவிட.... அனுவின் கண்கள் திடீரென வலி எடுத்ததால் அவள் உறங்காமல் இருக்க.. மற்றவர்கள் அவள் அழுததால் வலிக்கிறது போல என விட்டுவிட்டனர்....

முகில் அவன் அறையில் தலையணையை கட்டி அனைத்தவாறு உறங்கிக் கொண்டிருக்க.... அவனின் அழைப்பேசியோ அவனை உறங்க விடாது அலரி அவன் உறக்கத்தை கலைத்தது... தூக்க கலக்கதில் எழுந்தவன் போனை எடுத்து காதில் வைக்க...

அங்கோ ஒரு போலீஸ் கான்ஸ்ட்டபில் " சார்.... பக்கத்து ஊரு கட்டிடம் வலு தாங்காம இடுஞ்சிடுச்சு.... அத பத்தி கேஸ் பைல் பன்னீர்க்காங்க... சிலருக்கு சந்தேகமா இருக்கான்.." பதறிய முகில்...

முகில் : உயிர் சேதம் இல்லையே...??? யாருக்கும் ஒன்னும் இல்லல....???

கான்ஸ்டபில் : இல்ல சார்... எல்லாருமே தப்பிச்சிட்டாங்க...

முகில் : சரி ஓக்கே அண்ணே... நீங்க கேஸ் போடுங்க...நாளைக்கே நா விசாரணைய ஆரம்பிக்கிறேன்.... என போனை வைத்தான்....

அதன் பிறகே..சில வேலைகளை மறந்தது நினைவு வர.... வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கதவை திறந்தவன் முன் வந்து தொங்கியது ஒரு காகிதம்... எம்மாடி என திடுக்கிட்டவன்... அதில் ஏதோ எழுதியிருந்ததை கண்டு படித்து பார்த்தான்....

" வெளிய எங்கையாவது போனா... ஒன்னு எவனையாவது கூட கூட்டீட்டு போ... இல்லையா... எங்க இரெண்டு பேர்ல யார்கிட்டயாவது வந்து சொல்லிட்டு போ... இப்படிக்கு உன் அம்மாக்கள்.... " என எழுதியிருந்தது.... அதை கண்டு சிரித்துக் கொண்டவன்...கீழ் சென்று காவியா மற்றும் இலக்கியாவின் அறை கதவில் ஒரு பேப்பரை ஒட்டிவிட்டு சாவியை விரலில் சுழற்றியவாறே வெளியே சென்றான்....

ஊட்டி....

ஆழ்ந்த நடுநிசி இரவில் ஊட்டியின் தென்றல் குளிரில் பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தான் ஒருவன்....அவன் பல ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு சூட்டின் இதத்தின் நின்றிருக்க....
அவன் அருகில் அதிநவீன வசதிகளுடன் வந்து நின்றது ஒர் கார்... அதிலிருந்து இறங்கிய ஒரு பெண்மணி.... அவனை பார்த்து கண் அசைக்க... அப்பெண்மணியை அழைத்துக் கொண்டு அந்த குளிர் காற்றில் தேகம் நடுங்க நடக்கத் தொடங்கினான் அவன்....

சில நிமிடங்கள் நடைக்கு பிறகு.... காட்டுபகுதிக்குள் நுழைந்தது அவர்களின் நடைபயணம்... நட்ராஜா சர்வீஸ் தொடர்ந்துக் கொண்டே இருக்க... அரைமணி நேரம் பின்பு நட்டநடுகாட்டில் தென்பட்டது ஒரு பங்களா.... சுற்றி பல ஆட்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.. கைகளிள் துப்பாக்கிகளுடன்.... நேரே சென்ற அவன் அப்பெண்மணியை பங்களாவின் பின் புறம் அழைத்துச் சென்றான்.... அங்கோ ஒரு சிறிய கட்டிடம்.... யாரும் தங்களை பார்க்கவில்லை என்பதை உறுதிசெய்தவுடன்....அவனின் கட்டைவிரலை பதித்து முதல் செக்யுரிட்டி யை திறந்தான்... இருவரும் உள் சென்றதும் திறந்த கதவு தானாய் மூடிக் கொண்டது... ஒரு நிமிடம் நடைபயணத்திற்கு பிறகு.... அப்பாதை இடதில் வளைய.... அங்கு ஒரு காப்பரால் செய்யபட்ட கதவு தடையாய் நிற்க.... அக்கதவின் பக்கவாட்டில் இருந்த ஒரு பட்டனை அழுத்தியதும் சிவப்பு நிற ஒளி வர... அது அவன் கண்களை ஆய்வு செய்ததும்....ஒரு நொடிக்கு பின் திறந்துக் கொண்டது.... அதில் நுழைந்தவர்களுக்கு இருளே கண் முன் இருக்க...நுழைந்த வன் முன்னோக்கி நடக்க... இருவருக்கும் அப்பாதை பழக்கப்பட்டது என அவர்களின் வேகம் உணர்த்தியது... சற்று தொலைவில்.... சில நவீன பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்க... சிலர் முகத்தில் மாஸ்க்குடன்... கைகளிள் க்லௌஸுடன்... எதையோ செய்துக் கொண்டிருந்தனர்...

வந்தவன் கைகளை கட்டி அமைதியாய் நின்றுவிட....அவர்கள் முன் சென்று நின்ற அப்பெண்மணி....ஸ்வெட்டரை கலட்டி வைத்தார்....

அப்பெண்மணி : வாட் வாஸ் தி ரிஸல்ட்...(What was the result) என ஆணவத்துடன் கேட்க... அவர் முன் பம்மி நின்ற ஒரு டாக்டர்...

டாக்டர் : மம்... ரிஸல்ட்...என தயங்க....

அப்பெண்மணி : இட்ஸ் கெட்டிங் லேட்... சீக்கிரம் சொல்லுங்க....

டாக்டர் : பெயிலியர் மேம்... என்றார் தலைகுனிந்துக் கொண்டே...

அப்பெண்மணி : புல் ஷிட்...இதுக்காக எவ்ளோ கோடி செலவு பன்றேன் தெரியுமா?? சாதாரணமா வந்து பெயிலியர் ங்குரீங்க??? என ஆதங்கப்பட....

டாக்டர் : சாரி மேம்... நீங்க என்னமோ இருக்கு கண்டுபுடிங்க ன்னு சொன்னதால தான் ஆராய்ச்சிய தொடங்குனோம்....அதுல என்ன இருக்கு???இருக்கான்னே தெரியாதப்ப என்ன மேம் பன்றது... நாழு வர்ஷ உழைப்புக்கு அப்ரம் இப்பதா அதுல ஏதோ இருக்குன்னே தெரியவந்துர்க்கு.... என தன் பக்க ஞாய்த்தை கூறி....அங்கிருந்த ஒரு பெரிய ஸ்க்ரீனை காட்டினார்.... அதில் சஸ்பீஷியஸ் என வநௌதுக் கொண்டிருந்தது....

அதை கண்டு பல்லைக் கடித்த அப்பெண்மணி...."சீக்கிரம் முடிச்சு தொலைங்க " என கத்திவிட்டு நகர்ந்தார்...

காதல் தொடரும்....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro