Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-59

நம் நாயகன்கள் அனைவரும் காலில் பம்பரம் கட்டிவிடாத குறையாக மண்டபத்தையே சுற்றி வந்தனர்... நாயகிகள் மதுவை அலங்கரிக்கும் வேலையில் இருந்தனர்... நேரம் ஆக ஆக... மதுவின் மனதில்... புது வித உணர்வு கூடிக் கொண்டிருந்தது... அளவில்லா மகிழ்ச்சி... பெயரில்லா பயம்... காரணமில்லா பாரம் என பல வகையான உணர்வுகளில் மூழ்கியிருந்தாள்... மற்றவள்களும் அவளை கலாய்த்தவாறு நேரத்தை ஓட்டினர்... நேரம் ஆக ஆக... மதுவின் கண்கள் அவளவனை தேட தொங்கியது...

மேடையில்... ரித்விக்கை அழைத்து வர கூற... நாயகன்கள் மணமகன் அறைக்கு செல்ல... நம் நாயகன்கள் கூட்டமாய் முன் ரித்விக்கை நடக்கவிட்டு அவன் அறையை தாண்டியதும்.... நடந்து வந்த பத்து பேரும் ஆடராய் நின்று... சொடக்கிட... திரும்பி பார்த்தான் ரித்விக்... வேஷ்டியை மடித்து கட்டிய நாயகன்கள் பாட்டை ஓட விட... நடன நிகழ்ச்சி ஒருங்கே தொடங்கியது... ரித்விக் முன் நடக்க.... அவன் பின் அவனை கலாய்த்துக் கொண்டும் பாராட்டிக் கொண்டும்... நடனமாடி வந்தது நாயகன்களின் குழு... மேடையேறியதும்... இவர்கள் மேடையின் கீழ் நின்றே ஆட.... அதே நேரம் பெண்ணை அழைத்து வர கூற... நாயகிகள் புடை சூழ நடந்து வர... தன்னவளை காணாது ரித்விக் எக்கி எக்கி பார்க்க... அவனை பிடித்து அமர வைத்தார் மாதவன்... மேடையை நெருங்கியதும்... சரியாய் நாயகிகள் நகர... அவர்களனைவரின் நடுவிலிருந்தும் நாணம் தலை தூக்க... தங்க பதுமையாய் நடந்து வந்தாள் மது.... அவளை விட்ட நாயகிகள் கீழே ஆடிக் கொண்டிருந்த நாயகன்களுடன் தக்க நேரத்தில் பாட்டுடன் இணைந்துக் கொண்டனர்... பாட்டு சத்தம் மண்டபத்தை விட்டு வெளியே வரை கேட்டது... முதலில் ஆண்கள் ஆடினர்... அவர்களுடனே பெண்களும் இணைந்துக் கொண்டனர்....

malligaiyiloru maalai.
thanga sarigayil
oru selai.
malligaiyiloru maalai.
thanga sarigayil
oru selai.
poovondrai
pootti vaikkathaan.
kalyaanamkandu pidiththaar.
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa

adadaa nee azhagi endru aarparippaan un kanavan.
vetkaththil neeyumketpaai nijamaa endru.
oh...
kadhai konjam maarum podhu vaarthaigal ellaam paalaagum.
vazhve oruporkkala maagum.
hey hey nee modhida vendum.
thaali pon thaali adhu unnai kattum velli
koodai kullae moochu muttum kalyaanak kozhi
.thozha en thozha naan aagaayathin
mele parandhu kondae thaen kudippaen
ninai kuravazhakai ella amni naipadhupo liruppa dhillai.
siraginai adagu vaiththal paravayin vazhvil sugamillai.
anaipadhum adangi nindru thavippadhum orr mayakkam thaane.
ninaiththa dhum ninaippa dhenna oru sorgam.
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu
jeevitham thundha naanenaa.
malligaiyiloru maalai.
thanga sarigayil
oru selai.
ahhh.
malligaiyiloru maalai
thanga sarigayil
oru selai.
poovondrai pootti vaikkathaan.
ohhhh...
kalyaanam kandu pidith thaar.
Thodakkam Mangalyam
thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa.
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa
Thodakkam Mangalyam thandhu naanenaa
pinbu jeevitham thundha naanenaa

பாடல் முடிய... ஒன்றாய் அனைவரும் மேலேறினர்... நாயகன்கள் அவரவர் நாயகியை இரசனையாய் இரசிக்க... நாயகிகளோ ஸ்ட்ராபரியாய் சிவந்து அவர்களை இன்னும் ஏற்றி விட்டனர்.... அதே நேரம் ரெஜிஸ்ட்டரும் வர... இருவரிடமும் சம்மதம் கேட்க பட... இருவரும் புன்னகையுடன் சம்மதம் தெரிவித்திட.... முதலில் ரித்விக் கையொப்பமிட... அவன் பின்னே மதுவும் கைய்யொப்பமிட... இனிதே நிகழ்ந்தேறியது திருமணம்... சாட்சி கையெழுத்தாய்... ரித்விக்கின் உடன் பிறந்தவனாய்.. அஷ்வன்த் அவன் புறத்திலிருந்தும்... மதுவின் உடன் பிறந்தவளாய் நிரு அவள் புறத்திலிருந்தும் போட்டனர்... இவை அனைத்தையும் ஆனந்த கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்தார் மது நிருவின் சித்தி ராணி....

பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றவுடன்.... போட்டோ செக்ஷன் ஆரம்பமாகிட.... நாயகிகள் மட்டும் விதவிதமாய் எடுத்துக் கொள்ள.... நம் நாயகன்கள் மட்டும் சலைத்தவர்களா என்ன... அவர்களும் வித விதமாய் எடுக்க... இரு குழுவினருக்கும் இடையே... திண்டாடிப் போனதென்னவோ கேமரா மேன் தான்... அவரை காப்பாற்றவே அங்கே வந்த காவியா... மதுவையும் ரித்விக்கையும் ஒன்றிணைத்து ஒரு போட்டாவது எடுங்களேன் டா என கூறி... அனைவரையும் விரட்டி அடித்தார்... அன்பளிப்பை அளித்ததும் விருந்தினர்கள் உணவுண்ண சென்றனர்... அங்கே அமோக உபசரிப்பு... அனைவரும் வயிறார உண்டு.. மணமக்களை மனமாற வாழ்த்திவிட்டு சென்றனர்....

நம் நாயகர்களின் அரண்மனையோ கோலாகலமாய் இருந்தது.... இரவும் நெருங்கிட... ரித்விக்கை எவரும் அறைக்குள் விடவில்லை... இல்லாத கதையெல்லாம் அலந்துக் கொண்டிருந்தனர் நம் நாயகன்கள்... மணி 11 தொடும் சமயம்... இன்னும் ரித்விக் அறைக்கு செல்லாமலிருப்பதை அறிந்த தாய்மார்கள்... மாடிக்கு வர... அவர்கள் வரும் முன்னே எஸ்கேப் ஆயிருந்தனர் நம் நாயகன்கள்... நம் ரித்விக்கும் அறைக்குள் நுழைந்தான்...

இருவருக்கும் அளவில்லா ஆனந்தம்... ஒன்பது வருட புனிதமான காதல்... இன்று வெற்றியடைந்துள்ளது... அவர்களின் அவஸ்தையான பிரிவிலும் சுகமான வலியே அனுபவித்தனர்... அவர்களின் பிரிவனைத்தையும் முரியடிக்கும் விதமாய்... காற்றுக்கூட புகாத அளவு அவளை இருக்கி அணைத்துக் கொண்டான் ரித்விக்.... மதுவும் அவனுள் ஒன்றி போக... அடுத்த நொடி.... பலமான சத்தம் கேட்டு... இருவரும் திடுக்கிட்டு அறையை விட்டு வெளிவந்தனர்...

மொட்டை மாடியில்... வெறி பிடித்ததை போல் நரம்பெல்லாம் புடைத்து... கண்களில் கருவிழி மறைந்திட... தாங்கள் செய்வதையே அறியாமல் பெருங்குரலெடுத்து அலரிக் கொண்டிருந்தனர் கோவன்கள் மூவரும்...

அதை கண்டு ரித்விக் மற்றும் மது அதிர்ச்சியடைய.... அனு திவ்யா ப்ரியா... அம்மூவரை சுற்றி அவர்களின் அலரல் கீழே உள்ளவர்களுக்கு கேட்காதவாறு அடைத்து வைத்தனர்... மற்ற நாயகர்களும் அதிர்ச்சியோடும் குழப்பத்தோடும் நிற்க.... ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை...

மது : என்ன டி நடக்குது...

வீனா : அதான் டி எங்களுக்கும் புரியல... நாங்க எல்லாரும் ரூம்ல இருந்தோம்... அப்ப திடீர்னு இவனுங்க கத்துர சௌண்டு கேட்டு தான் மேல வந்தோம்...

ரித்விக் : டேய் என்ன விட்டதுக்கு அப்ரம் என்ன டா ஆச்சு...

முகில் : உன்ன விட்டுட்டு நாங்க மாடிக்கு ஓடி வந்துட்டோம் டா... எங்க எல்லார்க்கும் முன்னாடி இவனுங்க தான் ஓடுனானுங்க... மாடில கால வச்சதுமே... இப்டி கத்த ஆரம்ச்சிட்டானுங்க...

திவ்யா : இங்க இருக்குரது நமக்கும் நல்லதில்ல... கீழ உள்ளவங்களுக்கும் நல்லதில்ல.... உடனே எல்லாரும் கைய கோர்த்து பிடிங்க.... என கத்த.... மதுவும் ரித்விக்கும் சாதாரண உடையிலே இருந்ததால் அவர்களும் சிந்திக்காமல் வந்தனர்... மற்ற நாயகர்கள் அனைவரும் கை கோர்த்திட... திவ்யாவை சூழ்ந்த ஒரு நீல நிற ஒளி... அனைவரையும் சூழ்ந்து.. அங்கிருந்து மறைய வைத்தது....

அனைவரும் காலையில் அந்த ரௌடிகளை வெலுத்து கட்டிய அதே வனத்தில் தோன்றியதில்... அவர்களுக்கும் வசதியாய் போனதை போல்... கோவன்கள் மூவரும்... கண் முன் இருக்கும் திசையெல்லாம் காட்டுமிராண்டியை போல் தாக்கினர்.... நாகனிகளும் செய்வதறியாது முளிக்க... சட்டென அங்கு ஓர் மின்னல் பலத்த சத்தத்துடன் கீழே வந்து விழுந்தது... அவ்வதிர்வில் கோவன்களை தவிர்த்து அனைவரும் தள்ளாடியவாறு கீழே விழ... அம்மின்னலின் அருகில் சென்ற மூவரும்.... கீழே விழுந்திருந்த மின்னலால் தோற்றுவித்திருந்த பள்ளத்தில் அதிவேகமாய் குதிக்க... அனைவரும் கத்திக் கொண்டே அப்பள்ளத்தின் அருகில் ஓடோடி வர.... உள் குதித்த மூவரும்... அவர்களின் சக்திகளை.... நிலத்தில் தாக்கிக் கொண்டிருக்க.... மற்றவர்கள் புரியாது விழிக்க தொடங்கினர்..... என்ன தான் நடக்கிறது என்பதாய் அனைவரும் அப்பள்ளத்தையே உற்று நோக்கியபோது... மூவரும் அவர்கள் எதிர்பார்க்காத சமயம்.... எம்பி அப்பள்ளத்திலிருந்து மேல் வந்து.... ஓரிடத்தில் நிற்காமல்.... அவர்களுக்கு திடீரென தோன்றிய மாபெரும் இறகை விரித்து விண்ணில் பறக்க தொடங்கினர்....

மூவரும் மாற்றி மாற்றி மூளை குழம்பியதை போல் எங்கெங்கோ சுற்றி திரிந்து விட்டு.... அதிவேகத்தில் விண்ணிலிருந்தே எங்கோ கீழே விழுந்தனர்... அதை கண்டு அனைவரும் அதிர்ந்து... அவர்கள் விழுந்த இடத்தை நோக்கி ஓட... ராஜ்ஜியமர்வதன மண்டபத்தின் அருகில் இருந்த சுவரை இடித்து சுக்கு நூராக்கிவிட்டு நின்றனர் மூவரும்... நாயகிகள் அவர்களையே ஆ வென பார்க்க... மற்ற நாயகன்களோ.... " நட்ட நடு காட் ல எவன் டா அவன் இருவதடி ல செவுரு கட்டுனான்.?? " என்று வினாவும் எழுப்பி... " வேற யாரு கொத்தனாரு தான்..." என பதிலும் அளித்துக் கொண்டு நின்றனர்....

மூவரும் கண்களை திறந்திடாமல்.... அமைதியாய்... வதனம் இருகிட... கீழே வெறித்தவாறு நின்றனர்.... நாகனிகள் மூவரும் அவரவர் துணையை பூனை நடையிட்டு நெருங்கி... தோள்களை தொட.... அதிரடியாய் நகர்ந்த மூவரும் அவரவர் துணையை வளைத்து பிடித்து தள்ளி நிறுத்தினர்... " அய்யையோ இவனுங்களுக்கு ஃப்லஷ்பக்லாம் கேட்டு மூளை தான் குழம்பீடுச்சு... எல்லாம் இந்த தீராவால தான்...." என என் மேல் பலி சுமத்த போகும் முன்னே.... இறைவனாய் வாயை திறந்தனர் மூவரும்...

மூவரும் : எங்களுக்கு ஒன்னும் ஆகல...

அனைவரும் அவர்களையே பார்க்க... அவர்களின் அடுத்த பதிலில்... தலையில் கை வைத்துவிட்டனர்....

மூவரும் : ஆனா என்னமோ ஆகுது....

அர்ஜுன் : டேய் என்ன டா ஆச்சு... ஏன் டா இந்த சுத்து சுத்துனீங்க... இப்போ ஏன் கண்ண தொறக்காம இருக்கீங்க...

சத்தீஷ் : தெரியல மச்சான்... எங்களால எங்களையே கன்ட்ரோல் பன்ன முடியல... கண்ண தொறந்திருந்தா... எங்கள ஏதோ ஆட்டி வைக்க பாக்குது.. அது மட்டுமில்லாம... என் கண்ண தொறந்தா.... மூட விடாத மாரி.... ரொம்ப காத்து வருது...

முகில் : கண்ணுல காத்து வருதா??? என முளிக்க...

இந்திரன் : எனக்கு கண்ண தொறந்தாலே.... தண்ணியா கொட்டுது டா...

அனைவரும் : அய்யைய்யோ அப்போ க்ரிஷ்ஷு...

க்ரிஷ் : எனக்கு அப்டி ஒன்னும் இல்ல அதாவது நெருப்புலாம் கண்ணுல வரல.... ஆனா கண்ணு எரியிது....

சரண் : அப்போனா சந்தோஷம்...

க்ரிஷ் : டேய் எரியிதுங்குறேன்... சந்தோஷம்ங்குர???

சரண் : நெருப்பு வராம இருந்துச்சே... அது வர சந்தோஷம் தான்....

பவி : சரி இங்க உள்ள இருவதடி செவுர உடச்சிர்க்கீங்களே.. அதுக்கு என்னடா பன்றது...

மூவரும் : இருவதடி செலையா???

வர்ஷி : கண்ண மூடியிருந்தா எப்டி தெரியும்....

இந்திரன் : கண்ண தொறந்தா எதாவது ஆகும் அம்மு...

தான்யா : சரி நீங்க கண்ண தொறக்காதீங்க... அங்க எதாவது இருக்கான்னு பாக்குறோம்...

இவர்களும் அமைதியை கடைப்பிடிக்க.... அச்சுவர்களின் துகள்களை தட்டி விட்டு... நகர்த்தி விட்டு.... இறுதியில் அங்கிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர் அனைவரும்.... அந்த செவுரின் அடிமட்த்தில்.... ஓர் கதவு அமைக்கப்பட்டிருந்தது... அனைவரும் அதிலே மூழ்கியிருந்த சமயம்... கண்களை மூடியிருந்த மூவரும்.... ஏதோ ஓசை தங்கள் செவியை எட்டுவதை உணர்ந்து அதை கேட்டதும்.... " யோக்யா " என அழைத்திட.... அனைவரும் திரும்பி நோக்கினர்.... அங்கோ ஊர்ந்து வந்திருந்த யோக்யா.... அனைவரையும் கண்டு மரியாதை செழுத்திவிட்டு.....

யோக்யா : அனைத்தையும் நினைவு கொனற்ந்து விட்டீர்களா..... தங்களின் முதல் பிறவியில் சில வருடம் தான் குருகுலத்தில் தங்களுடன் இருக்க முடிந்தது... தங்களின் அடுத்த பிறவியில் கோவன்கள் என்னை மண்டபத்தை விட்டே வெளியேற கூடாதென கட்டளையிட்டுவிட்டனர்...

ப்ரியா : பரவாயில்லை யோக்யா... நடந்து முடிந்ததை பற்றி பேசுவதில் என்ன பயன்...

அஷ்வன்த் : அது இருக்கட்டும்... யோக்யா... இந்த கதவு எந்த பாதையோட கதவு... எங்களுக்கு தெரிஞ்சவர இப்டி ஒரு கதவே கிடையாதே....

யோக்யா : அது தங்கள் அனைவரின் மரணம் பின் அமைக்கப்பட்ட கதவு .... அச்சுவர் அக்கதவை யாரும் அறியாமல் காத்துக் கொண்டிருந்தது...

வர்ஷி : சரி அங்க அப்டி என்ன இருக்கு...

யோக்யா : யாளி வம்சத்து வீராங்கனைகளின் நாக அச்சு பதிந்த அர்ப்புத வாள்கள் பலத்த பாதுகாப்புகளுடன்... இங்கு தான் பாதுகாக்கப்படுகிறது....

ஒவீ : எங்க வாள்களா... இத்தன வர்ஷம் களிச்சுமா....

யோக்யா : அவை சாதாரண வாள்கள் இல்லையே அம்மா.... எத்துனை கோடி ஆண்டுகள் கடப்பினும்... வைகள் அழியாத அர்ப்புதங்கள்...

நாயகிகள் : சரி அப்போ நாங்க அத போய் எடுத்துட்டு வரோம்...

நாயகன்கள் : நாங்க....

யோக்யா : மன்னிக்க வேண்டும்.... அங்கு வாளுக்கு சொந்தமானவர்களும்... நாக வம்சத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் செல்ல இயலும்...

அர்ஜுன் : சரி பாத்து போங்க... நாங்க வெயிட் பன்றோம்..

நாயகிகள் : ம்ம்ம்... என முதலில் அக்கதவை இழுத்து திறந்தனர்.... உள்ளே ஒரே இருட்டாக இருக்க.... ப்ரியாவின் கைகளில் தானாய் ஒரு வெள்ளை பந்து ஒளிக்காய் ஒளிர... அதை தொடர்ந்து.... கீழ் படிக்கட்டுகள் இருப்பதை கண்டு மெல்ல கீழிறங்கினர் நாயகிகள்....

இருட்டான பாதையிலும்.... கல் மண் எல்லாம் இல்லாமல் தரை சாதாரணமாக இருந்ததை உணர்ந்தவாரே சென்ற அனைவரும் ஓர் இடத்தில் அப்பாதை முடிவதை கண்டு சுற்றி முற்றி நோக்க.... ஒன்றுமே எவருக்கும் புலப்படவில்லை... கிழிருந்த கட்டங்களில் நாகனிகள் கால் வைத்ததுமே கீழே  அமுங்க.... அதை கண்டு கண்களை அகல விரித்தவர்கள்.. மற்ற நாயகிகளுக்கு அப்படி இல்லையே... என குழம்பி போயினர்.... என்ன செய்வதென தெரியாமல் முளித்துவிட்டு.... சில கட்டங்களில் மாத்திரம் நாக அச்சு பதிந்திருப்பதை கண்டு அதில் காலடி வைக்க... அது நகராமல் இருந்தது.... நடுவில் ஒரு பெரிய பாம்பின் ஓவியம் இருந்தது.... அவ்வொரு கட்டத்தையும் தேடி தேடி செல்ல நாயகிகளுக்கு மிக கடினமாய் இருந்தது...

ரக்ஷா : இப்போ என்ன டி பன்றது...

வர்ஷி : எதாவது க்லூ இருக்கும் டி.... தேடுங்க.... நாகனிகள் மூவரும் சில அதிகமான ஒளி பந்துகளை உருவாக்கி ஒவ்வொருவரின் கரங்களிலும் தற.... அதை ஏந்திக் கொண்டு அவர்களும் அவ்விடத்தை சுற்றி வர.... நாகனிகள் மூவரும் நடுவில் நின்றே.... வேறெங்கும் அடி எடுக்காமல் இருந்தனர்.... ஏனெனில்.... கீழிருந்த பாதையில்.... நாக அச்சு சில கட்டங்களில் மட்டுமே இருக்க.... மற்றவை வெருமையாய் இருந்தது.... இது ஏதோ சரியாய் படாமல் மூவரும் நடுவிலே நின்றனர்....

அப்பாதையின்.... நாழு மூலைக்கும் சென்ற நாயகிகள்.... நான்கு மூலையிலும்.... செதிளை போல் ஏதோ செதுக்கியிருப்பதை கண்டு.... அதை திருப்ப முயல... அதுவோ மிக தடினமாய் இருக்க.... அச்செதிளிள்.... இரு பக்கத்திலும்.... கை பதிய அச்சுக்கள் விடப்பட்டிருக்க.... ஒரு கையில்..... கேடையம் சிறு அச்சாய் பதிந்திருக்க.... இன்னோறு கையில்.... மூலிகை அச்சு பதிந்திருந்தது.... அதை கண்டுவிட்டு...

நிரு : கெர்ள்ஸ்.... மூலிகை அச்சு இருக்க இடத்துல... மருத்துவ யாளி வீராங்கனைகள் கை வைங்க....

வீனா : கேடையம் அச்சு இருக்க இடத்துல படை யாளி வீராங்கனைகள் கை வைங்க... என கூற... அதே போல் எட்டுப் பேரும் ஒரே நேரத்தில் கரங்களை பதிக்க.... நான்கு செதிளும் ஒரே நேரதில் நகர்ந்திட.... அவரவரின் வாள்... அவர்களின் பெயர் பலகை கீழ் இருக்க..... அழகாய் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.... அதை எடுத்து எட்டு பேரும் தங்களுடன் அணைத்து நாகனிகளின் புறம் திரும்பி.... கட்டை விரலை காட்ட.... படி கட்டை நோக்கி நகர்ந்தனர்....

காதல் தொடரும்....

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் இதயங்களே....

தங்களின் கருத்துக்காய் காத்திருக்கிறேன்.... மறவாமல் தெரிவியுங்கள்....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro