காதல்-54
தங்களால் முடிந்தவரை அனைத்து குள்ளமானிடர்களையும் அழித்துக் கொண்டிருந்த துணை தேவிகளில்... ஏதோ புது வித வலியை உணர்ந்த யாழினி... தவிப்பாய் திரும்பி நோக்கினாள்... அங்கோ.... உயிரில்லா ஜடங்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சஹாத்தாய வம்ச சூரர்களில்... ஒருவன் மாத்திரம் தள்ளாடிய படி இருந்தான்.... நம் வேல்.... அவனை சுற்றி இருந்த ஜடங்கள் அவனை தாக்க வர... மற்ற நாயகர்கள் அவன் மாறுதல்களை புரிந்துக் கொள்ள முடியாமல் அவனை காத்தவாறே சண்டையிட போராடிக் கொண்டிருக்க.... உடனே வேலின் புறம் ஓடியவள்... சட்டென அவன் பேய் பிடித்ததை போல் கத்துவதை கண்டு... அரண்டு நின்றுவிட்டாள் ..... மற்றவர்களும் அதிர்ச்சியில் அவனை பார்க்க..... மேகலாயாவோ மிக கொடூரமாய் சிரித்தாள்.... அவள் சிரிப்பிலே ஏதோ இருப்பதை யூகித்த ஆதன்யா.... தன் சகோதரிகளுக்கு கண் காட்ட... அதை புரிந்துக் கொண்ட அவள் சகோதரிகள் காத்திருக்க.... தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த மோகினியை திசை திருப்பிய ஆதன்யா... ஏங்கோ மறைந்திட.... அதை எவரும் கவனிக்க விடாமல்... தாரிணியும் ஸ்ரீயும் உடனே மோகினியையும் தங்களுடன் இணைத்து... இருவராய் மூவருடனும் சண்டையிட தொடங்கினர்... ஆனால்.. ஒரு முறை கூட.... தாரிணி மற்றும் ஸ்ரீயின் சக்திகள் மோகினியின் நுனி விரலை கூட தாக்கவில்லை...
தனியாய் சென்ற ஆதன்யா.... பத்து நொடி கண் மூடி அமர்ந்தாள்... அடுத்த நொடி வேகமாய் எழுந்தவள்... உடனே யாழினியின் புறம் ஓடினாள்... தவித்து போய் நின்ற யாழினியின் புறம் சென்றவள்...
ஆதன்யா : யாழினி... யாழி... வேல் தமையனுக்கு... சென்ற பிறவியில்... அந்த மேகலாயா சாபமிட்டிருக்கிறாள்.... அதனால் தான் இப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறார்....
ஆனால் இதில் அவரை மீட்க எந்த வழியுமே இல்லை யாழி... இப்போது என்ன செய்வது... என பதற்றமாய் வினவ... ஏதோ தீர்மானித்தவளாய்.... ஆதன்யாவின் புறம் திரும்பிய யாழினி...
யாழினி : ஆது... நீ தாரிணி மற்றும் ஸ்ரீயிடம் விரைந்து செல்... இதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. என கூற...
அவளின் முகத்திலிருந்து தீர்மானத்திலே ஏதோ தவறானதை யூகித்தை ஆதன்யா...
ஆதன்யா : யாழி... என்ன செய்யப்போகிறாய்... உண்மையை கூறு...
யாழினி : ஒன்றுமில்லை... ஆது... நீ செல்.... ஸ்ரீயும் தாரிணியும் இக்கட்டில் உள்ளனர்.... அவள் மனதிலோ.... " இல்லை ஆது... இப்போரில்... நம் இறந்தால் கூட... மீதமுள்ள சிலரை காக்க... இந்நாட்டின் தளபதிகள் இருக்க வேண்டும்.... அவர்கள் ஒரு மணி நேரத்தில் வீழ்த்தும் படையினரில்... நாம் இரு மணி நேரத்தில் பாதி பேரை கூட வீழ்த்திட மாட்டோம்... ஆதலால் அவர்களனைவருமே இருக்க வேண்டும்... என் காதலனை சரி செய்ய வேண்டும்... அதற்கு காணிக்கையாய் நான் என் உயிரை தான் தரவேண்டும் " என கூறிக் கொள்ள.... அதை யுத்தத்தின் போதே தன் சக்தி கொண்டு புரிந்துக் கொண்ட ஸ்ரீ.... அரண்ட விழியுடன் யாழினியை நோக்க.... அவள் புரிந்துக் கொண்டாள் என்பதை நொடியில் புரிந்துக் கொண்ட யாழினி... உடனே வேல் அருகில் செல்ல.....
ஸ்ரீ : யாழினி.... என அலர.... அனைவரும் அவளையே பார்க்க.....
யாழினி : என்னை மன்னித்துவிடு வேல்.... இதை நான் செய்யாவிடில்... உம்மால் உயிர் வாழ இயலாது... நம்மில் போகும் முதல் உயிர் எனதாய் இருக்கட்டும்.... என்றென்றுமே என் காதல் உனக்கானதடா... என்னை என்றும் விட்டுவிடாதே.... என அலரிக் கொண்டிருந்த வேலை அணைத்து கூறியவள்.... அவனின் வாளை பிடுங்கிட... சட்டென வேல் மயங்கி கீழே விழுந்தான்....
ஸ்ரீ : ஆது..... உடனே யாழியை தடு.... தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள போகிறாள்... என கத்த....
அதிர்ச்சியில் ஆதன்யா உடனே யாழினியின் புறம் ஓட.... அங்கோ தன் வயிற்றில் குத்திக் கொண்ட யாழினி... பீரிட்டு வலிந்த கண்ணீருடன் கீழே விழுந்தாள்..... அவள் மூச்சற்று விழுந்த அடுத்த நொடி..... யாழினி.... என பெருங்குரலெடுத்து அலரிவாறே கீழ் விழுந்திருந்த வேல் திடுக்கிட்டு எழுந்தான்.....
அவன் முன் ஆதன்யா கதறியவாறிருக்க.... அவன் மடியிலோ... உயிரற்ற ஜடமாய் கிடந்தாள் அவன் காதலி... அதை கண்டு நிலையில்லாமல் இருந்தவன்... அவளை அணைத்துக் கொண்டு அழ தொடங்கினான்... ஆதன்யா அவனுக்கு நேர் எதிரே அமர்ந்து அழுதுக் கொண்டிருக்க..... திடீரென தன் வாளை ஆதன்யாவின் புறம் வீசினான் வேல்... அதை கண்டு திடுக்கிட்ட ஆதன்யா.... தமையா.... என கண் மூடி கத்த..... சரக் என்ற சத்தத்தில் அவள் கண் திறந்ததும் அவளின் பக்கவாட்டில் விழுந்தது ஓர் உயிரற்றஜடம்.... அதை கண்டு முளித்தவாறே வேலை நோக்க.... அவனோ கண்ணீர் விடாது தன்னவளை அணைத்து....
வேல் : இன்று என்னை காக்க வேண்டி உயிரை நீத்த உனக்காய்... என்றும் வலி அனுபவிக்க நான் தயாரடி... அடுத்த பிறவி ஒன்று இருப்பின்.... உனக்காய் எவ்வலியையும் தாங்கிட முன் வருவேன்.... இதே வலியை உனக்காய் வாங்கிக் கொள்வேன்... உன் வலி தீரும் வரை... இதே சாபம் நீடிக்குமடி.... இதை உயிராய் நினைக்கும் என் காதலியான உன் மீது ஆணையாய் கூறுகிறேன்.... இதுவே என் வாக்கு...
என கூறி எழுந்தான்..... ஆதன்யாவும் எழ..... அவர்களை தாக்க வந்த ஜடங்கள் வேலின் வாளினால் துண்டு துண்டானது.... தன் சகோதரிகளின் புறம் ஓடியவள்.... மீண்டும் மோகினியுடன் தன் யுத்தத்தை தொடர்ந்தாள்.... தாரிணி மற்றும் மேகலாயாவின் சண்டை நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்க.... தங்களின் எதிரிகளை மாற்றிக் கொள்ள நினைத்த நாகனிகள் மூவரும் ஓர் சுற்று சுற்றி வர.... அம்மூவரோ குழம்பி நோக்க..... தாரிணி மோகினியுடனும்.... ஆதன்யா மேகலாயாவுடனும்... ஸ்ரீ மதுசூதனாவுடனும் இப்போது சண்டையிட துவங்கினர்....
திடீரென சுற்றிய தன் தலையை பிடித்து நின்ற ஆதன்யா.... மேகலாயாவின் தாக்குதலை ஓர் கரத்தால் தடுத்தவாறு... மறு கரத்தால் அவளின் தலையை பிடித்துக் கொண்டாள்.... அவளின் கண்களுல் ஏதோ காட்சி தெரிய தொடங்கியது.... அவள் கண் மூடிக்கொள்வதை கண்ட மேகலாயா மதுசூதனாவுக்கும் மோகினிக்கும் கண் காட்டினாள்... அவர்களும் ஸ்ரீ மற்றும் தாரிணியை அவ்விடத்தை விட்டு சண்டையிட்டவாறே சற்று தள்ளி அழைத்துச் சென்றனர்...
கண் மூடி இருப்பினும்... ஆதன்யாவின் கவனம் சிதறாமல் இருந்தது.... மேகலாயாவின் அத்துனை தாக்குதலும் அவள் முன் சிறு துகளாய் தான் உடைந்துக் கொண்டிருந்தது... கண் மூடிக் கொண்டிருந்தவளுள்..... ரனதேவன் காயத்துடன் எழ..... அவன் கரத்திலிருந்து பறவிய ஏதோ ஓர் தூள் உலகெங்கிலும் பறவிட..... உலக மக்கள் அனைவரும் இருமி இருமி.... இரத்த வாந்தி எடுக்க.... அதன் பின் மூச்சு நின்று மடிந்து விழுந்தனர்.... போர் கலத்திலும் வேந்தன்யபுரத்தவர்கள் பலர் மடிந்து விழ... தீயவர்களோ மிக கொடூரமாய் சிரிக்க தொடங்கினர் அப்போது அனைவருக்கும் திடீரென மூச்சு விட முடியாமல் ஒரு நொடி சிரமப்பட்டு அடுத்த நொடி சீராக... என்னவானது என்று அனைவரும் சுற்றி முற்றி நோக்க... அங்கோ.... வெகு தொலைவில்.... தன் உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறிக் கொண்டிருக்க.... தன் கை வழி உலகிற்றுகு காற்றளித்தவாறு விஷக்காற்றை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தான் விஷ்னு.... அவனது உடல் விஷத்தின் வீரியத்தால் நீல நிறத்தில் மாற.... அத்துனை விஷக்காற்றும் அவனுள் தேங்கியதும்.... கம்பீரமாய் நின்றவன்... இவை அனைத்தும் காண்பவரிடம் திரும்பியவன்..... அடுத்த நொடியே சரிந்து கீழ் விழ.....
ஈஷ்வர்.... என்ற அலரலுடன் கண்களை திறந்தாள் ஆதன்யா.... இவளின் அலரலில்... ரனதேவனுடன் வாள் வீச்சில் இருந்த விஷ்னு திடுக்கிட்டு திரும்பி பார்க்க... அவளோ கண்ணீருடன் அவனையே பார்த்திருக்க.... குழப்பத்தில் இருந்தவனது விழி அதிர்ச்சியில் விரிய... அதை கவனிக்காமல் ஈஷ்வர் என அவனை பார்த்து அழுதுக் கொண்டிருந்தாள் அவள்... சுற்றி இருந்தவர்கள் அவளை கண்டு.... " ஆது " என அலரியதோ... கத்தியதோ எதுவும் அவள் செவியை எட்டவில்லை... இறுதியாய் அவள் செவியயை அடைந்து அவளை நிலைப்பெற செய்தது அவளவனின் "தேவி" என்னும் அலரல் தான்..... விஷ்னுவின் அழைப்பில் நிலையடைந்தவள் அவனை நோக்க.... அவன் ரனதேவனை தள்ளிவிட்டுவிட்டு.... இவளை நோக்கி வெகு தொலைவிலிருந்து ஓடி வர..... அடுத்த நொடி..... அவள் முதுகில் ஏதோ பாரம் ஏற.... திடுக்கிட்டு திரும்பியவள்.... தன் மீது விழுந்த தன் சகோதரி ஸ்ரீயின் உடலை கண்டு அதிர்ந்தாள்.... அவள் முன் மேகலாயா ஸ்ரீயின் குறுதி நனைந்த வாளுடன் நிற்க.... அவளின் இதழோ ஏளனப்புன்னகையை சூடியிருக்க.... அதை கண்டு சினத்தில் ஆதன்யா..... மேகலாயா என கத்திக் கொண்டே எழும் முன்னே..... அவள் செவியை வந்தடைந்தது யுவனின் மிக கோரமான அலரல்.... அனைவரும் அவனை நோக்க... அதே நேரம் ஆதன்யாவின் பின் வந்த மதுசூதனா அவளின் முதுகில் வாளை இறக்க.... அதிர்வில் சட்டென அவளின் இதயம் துடிப்பதை நிறுத்தி மீண்டும் துடிக்க.... அப்படியே கீழே விழுந்தாள் ஆதன்யா.... விழுந்தவளை மீண்டும் தன் வாளால் குத்தினாள் மதுசூதனா.... ஆதன்யா விழுந்த அதிர்விலும் யுவனின் அலரலிலும் பட்டென கண்களை திறந்தாள் ஸ்ரீ.... அவள் சரியாய் எழ... அவளை கண்டு அதிர்ந்த மேகலாயா வாளை எடுக்கும் முன்.... தன் விழியிலே பாய்ந்த மின்னலை கொண்டு அவளை பத்தடி தூரத்தில் தள்ளி விட்டாள் ஸ்ரீ..... மதுசூதனா அகல விரிந்த கண்களுடன் அவளை நோக்க.... ஸ்ரீயின் விழியில் வெடித்த எரிமலையை கண்டு நடுங்கி போனவளை.... சிந்திக்க விடாது சராமரியாய் தாக்க தொடங்கினாள் ... மாற்றி மாற்றி வந்த அவளின் மந்திர பந்துகளை தாங்க இயலா மதுசூதனா பின் நகர்ந்துக் கொண்டே போக.... ஸ்ரீ அவளை விடாமல் தாக்கிக் கொண்டே முன்னேறினாள்.....
கீழே கிடந்த தன்னவளை தூக்கி தன் மடியில் கிடத்திய விஷ்னு.... தேவி தேவி என அழ.... ஆறாய் வலிந்த கண்ணீரை துடைக்காமல் தனக்காய் துடித்து தேவி தேவி என ஜபம் போல் கூறிக் கொண்டிருந்தவனின் வதனத்தை மெல்ல வருடியவள்.... தன் அன்பர்கள் அனைவரின் பிம்பத்தையும் தன் கண்களுள் தேக்கிக் கொண்டு.... ஒரு முறை தன்னவனை கண்டவள்.... மென் புன்னகையுடன்.... கண்களை மூடினாள் ஆதன்யா...
காதல் தொடரும்.....
இது தான் ஆதன்யாவின் இறுதி கட்டமா...
தவறுகள் கண்டால் தயங்காமல் கூறுங்கள்... என் பிழைகளை மாற்றிக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்....
தங்களின் கருத்துக்காய் காத்திருக்கிறேன்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro