காதல் -53
தன் முன் புறவியில் அமர்ந்திருந்த கிரகதேவனை நேருக்கு நேர் பார்த்து நின்றான் சக்தி.... இன்றுடன் போர் தொடங்கி 22 நாள் ஆகியிருந்தது.. நேற்று கலிங்கதேசத்திலிருந்து மறைந்தவர்கள்... நேரே வனத்தில் தோன்றினர்.... அதன் பின் நில்லாமல் போர் தொடர.... அவர்களின் கண்ணில் மாயா மோகினி இருவருமே கிடைக்கவில்லை.... அவ்விருவரையும் என்ன செய்தனர் என்றும் தெரியவில்லை... ஒரே நாளில் அவர்களை காண அத்துனை முயற்சி எடுத்தும்.... போர் காலத்தில்... போரிடும் எதிரி நாட்டவர்கள் அடைக்கலமிடும் இடம் செல்ல கூடாது என்னும் விதி முறையில் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தனர்.... இருவரின் வாள்களும் குறுதியிலே நனைந்திருந்தது.... சக்தியின் கேடையத்தில் குறுதியால்.... இறகு சின்னம் பாதி மறைந்தே காணப்பட.... புறவியிலிருந்து இறங்கிய கிரகதேவன்... ஏ என கத்திக் கொண்டே.... வாளை அவன் மேல் ஓங்கினான்... அதை தன் வாளை குருக்கே விட்டு தடுத்த சக்தி.... அவனின் ஒவ்வொரு தாக்குதலையும் சாதாரணமாகவே தடுத்தான்.... இறுதியில்.... அவனின் கையை சுழற்றி... தன் வாள் கொண்டு கிரகதேவனின் வாளை பிடிங்கி எரிய வைத்தவன்... கிரகதேவனின் தோளில் குத்தி வாளை உதற.... அதிர்வில் இரண்டடி பின் போய் விழுந்தான் கிரகதேவன்....
அவனையே பார்த்து நின்ற சக்தி... சட்டென பின் இருந்து எவனோ தாக்கவருவதை உணர்ந்து.... திரும்பி நின்று அவனிடம் சண்டையிட... இத்தருணத்தை உபயோகிக்க நினைத்த கிரகதேவன்... எழுந்து... தன் புறவியில் இருந்த ஈட்டியை எடுத்தவன்.... ஓடி வந்தவாறே அதை வீச.... சரியாய் அதே நேரம் முன் இருந்தவனை வீழ்த்திவிட்டு திரும்பிய சக்தியின் கேடையம் முழுவதிலும் குறுதி தெரித்து அவனை அதிர்ச்சியூட்டியது...
அவன் முன் அவனிற்கு கேடையமாய்.... வீசி எறியப்பட்ட ஈட்டியை தன் மார்பில் தாங்கியவாறு நின்றான் அவன் சகோதரன் விஷ்னுவர்தேஷ்வரன்.... சாய்ந்த விஷ்னுவை தாங்கிய சக்தியின் கரங்கள் நொடியில் குறுதியில் நனைந்திட... பித்து பிடித்ததை போல் நின்றவனுக்கு... எங்கிருந்து அத்துனை கோபம் வந்ததோ.... வெறி கொண்டு அலர... விஷ்னு இடையில் வருவான் என எதிர்பார்த்திராத கிரகதேவன் அவன் பித்து பிடித்தார் போல் நின்றதை கண்டு... மீண்டும் ஓர் ஈட்டியை அவன் புறம் வீச....... தன் நெஞ்சை பிடித்தவாறே கீழே விழுந்தான் கிரகதேவன்.... விசிறி எரியப்பட்ட ஈட்டி... அதே வேகத்தில்... நொடி தாளாது.... விஷ்னுவின் கை திறனால் அவன் புறமே திரும்பி அவன் நெஞ்ஞை பதம் பார்த்தது....
விஷ்னு : என் தமையனையே தாக்க பார்க்கிறாயா.... உன்னை ஒன்றும் செய்யாமல் விடுவேன் என நினைத்தாயா.... என கர்ஜிக்க.....
அதே நேரம் தொலைவில்... உக்ரதேவன்.... சில வீரர்களின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுவது தெரிய வர... இறக்கும் தருவாயிலும்.... தன் சகோதரன் தைரியமாய் எதிர்த்து நிற்பான் என்பதை அறிந்த சக்தி.... கோவத்துடன் உக்ரதேவனை நெருங்கினான்.... அதே நேரம் கிரகதேவனை கண்டு நெருங்கிய ரனதேவன்.... சக்தி செல்வதை கண்டு ஏளனமாய் சிரித்துவிட்டு....
ரனதேவன் : கண்டாயா உன் சகோதரனை..... எவனுக்காய் உன் உயிரையும் மதிக்காது ஈட்டியை தாங்கினாயோ... இப்போது அவனே அஞ்சி ஓடுகிறான்.... சொல்வதை கேள்... அந்த கயவர்களுடன் இருக்காதே... எங்கள் புறம் வந்து விடு.... நாம் இப்புவியை நம் காலடியில் வைத்து ஆளலாம்....
விஷ்னு : 27 வயது ஆண்மகன்... உமக்கு 3 ,வயது குழந்தையை போல் காட்சி அளிக்கிறேனா.... ஆசை காட்டி எமாற.... என் பணி... உம் போன்றவர்களை அழித்து... இப்புவியை காப்பதே ஒழிய.... உம் போன்றவர்களுடன் இணைந்து.... இப்புவியை ஆள நினைப்பதல்ல.... உண்மையான வீரனாய் இருப்பின்... நேருக்கு நேர் என்னுடன் மோது.... சவால் விடாதே... என தான் காயத்தில் இருக்கிறோம் என்பதையும் நினைக்காது... மீண்டும் களத்தில் இறங்கினான்....
இந்து அருந்ததி யாமினி யாழினி மற்றும் ஆருத்ரா ... மருத்துவமளிக்கும் வீரர்களையும்... மருத்துவகுழுவையும்.. பாதுகாத்து நின்று அவர்களை மற்றவர் நெருங்க விடாது அரணாய் நின்று காத்தனர்....
தளபதிகள் எட்டு பேரும்... அவரவர் யானையாளி சோர்ந்திடாத வகையிலும்... அதன் காலடியில் சிக்கி எம்மனிதரும் மரணமடைதிடாத வகையிலும் யுத்தத்தில் மூழ்கினர்.... தன் தலையில் பட்ட அடியை கவனிக்காது சராமரியாய் தாக்கிக் கொண்டிருந்த வேலின் பாவனைகள் திடீர் திடீர் என மாறத் தொடங்கியது...
அதை அவ்வப்போது கண்டுக் கொண்ட மேகலாயா குரூரமாய் சிரித்துக் கொண்டாள்...
தாரிணி மற்றும் ஆதன்யா.... மேகலாயாவையும் மதுசூதனாவையும் ஓரிடத்தில் நிற்கவிடாமல் சண்டையிட....
ஸ்ரீயோ அவ்விருவரின் செல்லப்பிராணியான ஓர் கொடிய விஷமுள்ள பாம்புடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்...
மேகலாயா மற்றும் மதுசூதனாவின் சக்திகள் மெல்ல மெல்ல ஏற.... ஆதன்யா மற்றும் தாரிணியின் சக்திகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது... இதை எதிர்பார்த்திராத இருவரும் முடிந்தளவு தங்களை சோர்வடைய விடாமல் இருக்க..... ஓர் கட்டத்தில் சட்டென மயங்கி கீழ் விழுந்தாள் ஆதன்யா.... அதை உபயோகித்த மதுசூதனா அவள் எழும் முன்னே அவள் கரத்தின் மணிகட்டில் வெட்டினாள்.... அதை கண்ட ஸ்ரீ ருத்ரதாண்டவம் ஆட தொடங்கினாள்....
ஸ்ரீ : ஏ மதுசூதனா.... எத்துனை தைரியம் இருந்தால் என் சகோதரியை இப்படி செய்திருப்பாய் உம்மை கொல்லாமல் விடமாட்டேன டி... என கத்திய அதே நொடி..... அவள் கண்ணிலிருந்து பாய்ந்த கருநீல நிற மின்னல் அந்த பாம்பின் மீது தாக்கி வெடித்து சிதறியது.... அவள் சினம் இத்துனை வேகம் இருக்கும் என்பதை அறியாத மதுசூதனா விழி பிதுங்கி தன்னை சுற்றி ஓர் கருவளையத்தை உருவாக்கிக் கொண்டாள்... அதை கண்டும் அசராத ஸ்ரீ.. அவ்வளையத்தின் மீது... தன் மந்திர பந்துகளை மாற்றி மாற்றி நொடி தாளாமல் செழுத்திக் கொண்டே இருக்க... உள்ளிருந்த மதுசூதனாவின் அச்சம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே இருக்க.... அவளின் வளையத்தின் வலு... அச்சத்தாலே குறைய தொடங்கியது.... வலு குறைய குறைய.... ஸ்ரீயின் சக்தியை தாங்க இயலாத அவ்வளையம் சுக்கு நூராய் வெடித்து சிதற.... அதில் ஓர் பெரிய திடல்... நேரே சென்று மதுசூதனாவின் கழுத்தில் சரக்கென குத்தீட்டு நிற்க.... கண்களை பிலந்து நின்ற மதுசூதனா அப்படியே விழ... கீழ் கிடந்த கூர்மையான கன்னாடி துகள்காள்.... அவளை குத்தி கிழித்து... மொத்தமாய் கொன்றது.... அதை கண்டு எப்படியோ தன் சினத்தை அடக்கிக் கொண்ட ஸ்ரீ மறுபுறம் திரும்ப.... மேன்மேலும் தாங்க இயலாத தாரிணி... ஒரு கட்டத்தில் நகர.... அதை பயன்படுத்தி அவள் மீதே சக்தியை வீச நினைத்த மேகலாயாவை ஸ்ரீயின் சக்திகள் நிலை குழைய வைத்தது.... அவள் சென்றதும் இவள் வருவாள் என்பதை எதிர்பார்க்காதவள்... அவளின் சக்திக்கு ஈடாய் தன் சக்திகளை செழுத்தினாள்... ஸ்ரீக்கு அப்போது சில விஷயங்கள் புரிந்தது... நம் சக்திகள் இவ்வனைவருடையதை விட வலு இல்லாததாய் இருப்பினும்.. சினம் வரும் சமயம்... நம் சக்திகள் பன்மடங்கு உயர்வது தான் சக்திகளின் இரகசியம்.... இதை நன்கு புரிந்துக் கொண்டவள் அதன் படி யுத்தமிட... அவளுடனே இணைந்துக் கொண்டாள் தாரிணி..... மேகலாயா இருவரையும் தள்ளிவிட்டு திரும்ப.... சரியாய் அவள் கழுத்தை அறுத்தது ஆதன்யாவின் உடைவாள்....
வீரர்கள் பலர் மடிந்திருக்க.... இன்னும் சிலர் மூச்சை இழுத்து பிடித்து போரிட்டுக் கொண்டு தான் இருந்தனர்... போரிட்டுக் கொண்டிருந்த வீரர்களை பின் இருந்து தாக்கிக் கொண்டிருந்த உக்ரதேவன் முன் வந்து அதிரடியாய் நின்றான் யுவன்.... அவனை கண்டு திகைத்த உக்ரதேவன்...
உக்ரதேவன் : இடக் கரத்தில் தீ அலையின் அச்சிருப்பதை கண்டால் அனல் கோவன் போலிருக்கிறதே...
யுவன் : தீ அல்ல டா.... எரிமலை... அறியாததை போல் வினவுகிறாயா....
உக்ரதேவன் : அறிந்தால் மட்டும் என்ன பயனாம்...
யுவன் : என் தமக்கை எங்கே... என்ன செய்தாய் அவரை...
உக்ரதேவன் : ஓஹ்.. தமக்கை பாசமோ... அவள் என் மனைவியடா... அவளை என் வேண்டுமானாலும் செய்ய எமக்கிருக்கிறது உரிமை....
யுவன் : ஆணவத்தில் ஆடாதே உக்ரதேவா... என் தமக்கையை ஏதேனும் செய்தால்.... எம் இளவல்களுடன் உன்னை கண்டந்துண்டமாய் வெட்டி சாய்த்துவிடுவேன்...
உக்ரதேவன் : நான் அறிவேன்... நீர் என்னை விட பன்மடங்கு பலசாலி... தைரியசாலி... ஆனால் உமக்கு என்னிடம் இருக்கும் மதி இல்லை....
யுவன் : மதியாம் மதி.... அம்மதியை நீ சதி செய்ய தான் உபயோகிப்பாய் என்பதை இவ்வுலகே அறியும்...
உக்ரதேவன் : வேறென்ன செய்ய கூறுகிறாய்... என் மதியை வைத்து... எங்களை அழிக்க நினைக்கும் தங்களின் நற்சக்திக்கு சேவை அளிக்க வேண்டுமோ...
யுவன் : உம் போன்ற எண்ணமுடையோர்... சேவை செய்ய என்ன... நற்சக்தியின் அருகில் கூட நெருங்க வேண்டாம்..
உக்ரதேவன் : நெருங்கினால்... தங்களையும் மாற்றிவிடுவோம் என்ற அச்சமோ... என கூறிவிட்டு... ஏதோ உலக மகா கேலி கூறியதை போல் சிரித்தான்...
யுவன் : அச்சமா... அது எங்களுக்கு இல்லை... வீண் பேச்சு போதும்.... களத்தில் இறங்கு... என இருவரும் வாள் வீசில் இறங்கினர்...
உக்ரதேவனின் வாள் யுவனின் வாள் சுழற்றில் திண்டாடிக் கொண்டிருந்தது... அவன் சுழற்றுகிறானோ இல்லையோ... யுவனின் வாள் அவனை ஒரு நிலையில் இருக்க விடாது.... தட்டி விட்டுக் கொண்டே இருக்க.... கைகளில் இருந்து காயத்தின் காரணமாய் குறுதி வலிய... அவன் கழுத்தில் மாறி மாறி விழுந்தது சில வெட்டு... ஒரு சுழற்றில்... உக்ரதேவனை கீழ் தள்ளிய யுவன் அவன் கீழ் விழுந்த அடுத்த நொடி.... வாளை அவன் மேல் ஓங்கி இறக்க.... திடீரென உக்ரதேவனின் கழுத்தருகிலே நின்றது வாள்... என்னவானது என்பதை போல் உக்ரதேவன் மெல்ல கண்களை திறந்து நோக்க.... யுவனின் முதுகில் மயக்கம் தெளிந்து எழுந்து வந்த கிரகதேவன் வாளை குத்தியதில்.. அவன் மார்பு வழி வாள் வந்திருக்க.... அடுத்த நொடி அவன் வாளை வெளி இழுத்து மீண்டும் சொருக... அதிர்வில் யுவனின் உடல் தாங்காது கீழ் விழ... அதை கண்டு கிரகதேவன் சிரித்துக் கொண்டே உக்ரதேவனுக்கு எழ கை கொடுக்க..... உக்ரதேவன் எழும் முன்னே அவன் கழுத்தை அறுத்தது சக்தியின் வாள்.... திடீரென தன் முகத்தில் தெறித்த இரத்தத்தை கண்டு கிரகதேவன் அதிர்ந்து போய் நோக்க.... வேங்கையென எழுந்த யுவன்... எம்பி ஏய்.... என கத்தியவாறே கிரகதேவனின் கழுத்தில் வெட்ட..... கண்கள் சொருகி கீழ் விழுந்தான் கிரகதேவன்....
ரனதேவன் விஷ்னுவிடம் வாள் வீச்சில் இருந்தவாறு இதை கண்டு அதிர்ச்சியில் கவனம் சிதறாமலே.... தமையன்களே என கத்த....
விஷ்னு : உன் தமையன்களுடனே நீயும் செல்... என இடையில் இருந்த குறுவாளை உருவி.... ரனதேனின் கழுத்தில் சொருக.... அதிர்ச்சியிலே மூச்சற்று கீழே விழுந்தான் ரனதேவன்....
கந்தர்வக்கோட்டையின் வீரர்கள் சிலரே மிஞ்சியிருக்க... அவர்களும்.... அம்மூவருக்காய் சண்டையிடுவதை விட்டுவிட்டு... அப்படியே கீழ் அமர்ந்தனர்.... முக்கோக்கள் மூவரும்.... வீரர்களை நோக்கி.... சண்டையை நிறுத்த கூறி கையை நீட்ட... அதை புரிந்துக் கொண்ட அனைவரும் நின்றுவிட.... சில காயங்கள்.... பல உயிர் சேதங்கள்.... பல இழப்புகள்... என அவ்விடமே இரத்த வெள்ளத்தில் மூழ்கி கிடக்க...... " நாம் வென்று விட்டோம் " என கர்ஜித்தனர்.... அனைவரும் மகிழ்ச்சியில் கத்தினர்... அனைவருக்கும் மருந்திட பட.... கந்தர்வ வீரர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கப்பைட்டது.... தன் கரத்தை இருக்கி பிடித்தபடி இருந்த ஆதன்யாவின் அருகில் சென்ற விஷ்னு... அவளின் கரத்தை மென்மையாய் பிடிக்க... அவனையே அவள் நோக்க.... காயத்தின் மேல் மூலிகை இட்டு பஞ்சு சுற்றப்பட்டிருக்க.... அதில் மெல்லிய இதழ் முத்தத்தை பதித்தவன்... கண்ணீர் வலிய நின்ற தன்னவளின் கழுத்தில் கரம் கொடுத்து... தன்னோடு சாய்த்து அணைத்துக் கொண்டான்.... கண்ணீர் விட்டு அழுதால் ஆதன்யா....
மற்ற நாயகிகளும் அவரவர் நாயகனுடன் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தனர்... அதில் தனியாய் அமர்ந்து... அழுத அருந்ததியின் அருகில் சென்ற குரு... ஹ்க்கும் என்று தொண்டையை செரும.... அதை கேட்டாளோ கேட்கவில்லையோ... அவளே அறிவாள்.... சிலை போல் அமர்ந்திருந்தவளின் கேசம் கோதி.... " ஒன்றுமில்லை மா.... " என கூற... அவனை கட்டிக் கொண்டு அழுதுத் தீர்த்தாள்.. அவனும் சரி அழட்டும் என அவளின் கேசத்தை தடவியவாறிருக்க.... திடீரென எழுந்தவள்...
அருந்ததி : வேந்திரா... இதற்மேல் எமக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை... தற்போதே என் மனதை வெளிப்படுத்தி விடுகிறேன்.. இது எப்போது நிகழ்ந்ததென தெரியவில்லை... ஆனால்.... விலக்கி வைக்கவும் இயலவில்லை... நான் உம்மை விரும்புகிறேன்... மனதாற விரும்புகிறேன்.. எம் காதல் ஏற்கப்படவில்லை என்றாலும் எமக்கு கவலை இல்லை... தங்களிடம் தெரிவித்த நிம்மதியே என் வாழ்க்கையை தொடர போதும்... என தெளிவாய் கூற.... அவள் தலையில் தட்டியவன்...
குரு : பெரிய மனுஷியை போல் பேசாதே செல்லம்மா... நான் என்றென்றும் உன்னவன் தான்... என அன்பாய் அணைத்துக் கொண்டான்....
சில நிமிடங்களின் பின் அனைவரும் ஓரிடத்தில் கூடி ஆலோசிக்க தொடங்கினர்...
சக்தி : முப்பெரும் அரசர்கள் மரணமடைந்துவிட்டனர்...
விஷ்னு : ஆம்... ஆனால்...
யுவன் : அதில் நிச்சயம் வேறேதேனும் திட்டம் இருக்கும்..
மாரன் : நிச்சயமாக... ஆனால் அதை எப்படி கண்டறிவது..
வேல் : வழியை தேடிட வேண்டும்....
யாழ் : ஆனால் எப்படி....
பத்ரன் : நாம் கண்டிறாத புதிரா...
சூர்யா : நிச்சையம் நான் இதுவரை புதிர்களை கண்டதில்லை...
பத்ரன் : கணக்கு தேர்வில் எதை கண்டடா முழு மதிப்பெண் பெற்றாய்...
சூர்யா : அதற்கும் இதற்கும் என்னடா சம்மந்தம்... எதனோடு எதை முடிச்சிடுகிறாய்...
குரு : அதுவும் புதிர் தானே...
மித்ரன் : இருக்கலாம்.. ஆனால் இது வேறு...
விஷ்னு : அவை எதையும் கண்டிறாதவனா நம் வெற்றி... அவன் தான் இருக்கிறானே..
வெற்றி : நானா விளையாடாதே விஷ்னு... இதெல்லாம் எமக்கு தெரியாது..
விஷ்னு : எந்நேரத்தில் விளையாட வேண்டுமென அறியாத சிறுபிள்ளையா டா நான்...
இந்து : சரி சரி தமையன்களே... போதும் விவாதம் செய்தது... சிந்தியுகள்..
ஆருத்ரா : என்னதான் சிந்திப்பது..
ஆதன்யா : எப்படியும்... ஆயுத வழி முடிந்த போர்... மாயை வழி மீண்டும் தொடங்கும்... ஆதலால் நிச்சயம் இறந்தவர்கள் மீண்டு எழுவர்....
தாரிணி : நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்...
ஸ்ரீ : எந்நேரம் வேண்டுமானாலும்.. எந்த ஆபத்தானாலும் வர வாய்ப்புள்ளது...
அருந்ததி : மாயா மற்றும் மோகினி இருவரின் நிலை கூட தெரிவில்லை....
யுவன் : அவர்களை கொண்டு தான் நம்மை அழிக்க போகின்றனர்...
ரம்யா : என்ன தமையா கூறுகிறீர்கள்...
யுவன் : ஆம்... உக்ரதேவன் கூறியதை பொருத்தவரை... நிச்சயம் மோகினி தமக்கை இந்நேரம் தீயசக்தியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருப்பார்... மாயா தமக்கை மற்றும் துருவனின் நிலை தான் தெரியவில்லை.... திடீரென பின் இருந்து ஓர் கருப்பான பந்து யுவனின் முதுகில் தாக்க தடுமாறி கீழ் விழுந்தான் யுவன்.... " அதை பற்றி நீ கவலை பட அவசியமில்லை " என்ற குரலை கேட்டு அனைவரும் திரும்பி... பார்க்க.....
கோரமான முக பாவத்துடன்... பல வெட்டு காயங்களுடன்.... கரத்தில் ஆலுயர வாளுடன் அகோரமய் சிரித்துக் கொண்ட நின்றனர் மரணமடைந்த மும்பெரும் அரசர்கள்.... அவர்களின் இரு புறத்திலும்... அதே போல் கோரமான முகத்துடன்.... ஏளனப்புன்னகையுடன் மேகலாயா மற்றும் மதுசூதனா நிற்க.... இடியென கேட்ட ஓர் சிரிப்பொலியில் அவரும் அதிர்ந்து மேல் நோக்க.... கூந்தல் பறந்து விரிந்திருக்க... முகத்தில் என்றுமே இருந்திராத ஆணவம்... ஆத்திரம் ஆக்ரோஷம் என பலவகை கலந்திருக்க.... படுகோரமான சாத்தானாய் நின்றாள் மோகினி..... " தீயசக்திக்கும் நற்சக்திக்குமான போரை தொடங்குவோமா " என வினவி... அவளே களத்திலும் இறங்கினாள்.... எங்கிருந்தோ சீரிப்பாய்ந்து ஓடி வந்த குள்ளநரி கூட்டமும்... உயிரில்லா ஜடங்கள் கூட்டமும் படை படையாய் ஓடி வர... அவர்களை ஓர் கை பார்த்தது சஹாத்திய வம்ச சூரர்கள் மற்றும் யாளி வம்சத்து வீராங்கனைகளின் அணி....
முக்கோக்கள் இப்போது கோவன்களாக.... முப்பெரும் அரசர்கள் தற்போது தீயசக்திகளாயினர்.... கோவன்களும் அவர்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள.... அங்கே தொடங்கியது ஓர் பேர் யுத்தம்...
மேகலாயா தாரிணியையும் ஸ்ரீயையும் ஏளனமாய் காண.... மதுசூதனா ஆதன்யாவையும் தாரிணியையும் ஏளனமய் நோக்க... அவர்களின் மேலோ குரோதமாம் சிரித்துக் கொண்டே நின்றாள் மோகினி...
ஆதன்யா : இறந்தும் உம்மிருவரின் ஆட்டம் அடங்கவில்லையா....
மேகலாயா : ஜென்மம் கடந்தும் அடங்காத நாங்கள் ஒரு மரணத்தில் அடங்கிவிடுமா....
ஸ்ரீ : சரி தான்.... அடங்கிவிடுவீர்கள் என தவறாய் கணக்கிட்டு விட்டோம்....
தாரிணி : இப்போதும் ஒன்றும் ஆகவில்லை... இறுதி வாய்ப்பளிக்கிறோம்.... மாயா அண்ணியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு... முக்தி கொள்ளுங்கள்... பாவத்தை ஒத்துக்கொள்வதில் சிறு தண்டனையாவது குறையும்...
மதுசூதனா : அப்படியா.... சரி... நாங்கள் முக்தி கொள்கிறோம்... ஆனால் அதற்கு பதில்... தங்களிடம் இருக்கும் நாகனிகள் சக்தியை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்..
ஸ்ரீ : மரணமடைந்த பின் அச்சக்தியை வைத்து என்னடி செய்யப் போகிறாய்..
மேகலாயா : உம்மை அழிக்க போகிறோம்.. என அவளை நோக்கி கீழே கிடந்த கேடையத்தை வீசினாள்... அதில் சரியாய் மறுபுறம் நகர்ந்தாள்.... ஆனாலும் அக்கேடையம் அவளின் நெற்றியை பதம் பார்த்து சென்றது... மேலும் வாய்ப்பேச்சில்லாமல் சகோதரிகள் மூவரும் மாயை பேச்சில் இறங்கினர்....
காதல் தொடரும்.....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro