காதல் -50
தங்கள் முன் நின்ற மொத்த படையினரையும்.... நிமிர்ந்து நோக்கியவாறு நின்றது நம் வேந்தன்யபுரத்தின் படை....
வாசகர்கள் : எது போரா.... அடியேய் தீரா... என்ன டி இது....
தீரா : ஹிஹி... சாரி பா.... கொஞ்சம் முன்னாடி வன்ட்டோம்... வாங்க பின்னாடி போவோம்...
வாசகர்கள் : ஃப்லஷ்பக் ன்னு சொல்லாம சொல்ற.....
தீரா : கர்ப்பூர புத்தி.... என்னமா கண்டுபுடிக்கிறீங்க....
இரவே அனைவரையும் தயாராக கூறிவிட்டு... வளவனுக்கும் தூதனுப்பினர்... இவை அனைத்தையும் அறியாத கலிங்கதேசத்தவர்களோ... போரை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தனர்.... மறுநாளும் யாவருக்கும் காத்திராமல் விடிய... நம் நாயகர்களும் அதிகாலை சூரியனுடனே எழுந்து... உடற்பயிற்ச்சியில் இருந்தனர்.... தன் அறை ஜன்னல் வழியே... காலையிலே எழுந்து தன்னவனின் முக அழகில் அவனை இரசித்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.... இப்புது வித உணர்வை பற்றி அவள் மனம் மற்றும் மூளையுடன் கலந்துறையாடிக் கொண்டிருந்தவளை தன் தோழன்களுடன் உறையாடியவாறே உடற்பயிற்சியிலும் இருந்தவாறே ஓரக்கண்ணால் இரசித்துக் கொண்டிருந்தான் குரு.... இருவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் முடிவடையும் நேரம்... உலகிலே இருக்க மாட்டோம் என அறிந்திருக்கவில்லை இருவரும்....
சிப்பாய் படையினரும்.... குதிரை படையினரும்.... தயாராயிருக்க... அவர்களை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.... அவள் அருகிலே... எடுத்த செல்ல வேண்டிய உணவு பொருட்களை அருந்ததியும் யாமினியும் சரி பார்த்துக் கொண்டிருந்தனர்... தக்க நேரத்தில் வேண்டிய மூலிகைகளையும்... மருந்துகளையும்... தனி தனியாய் சேகரித்து..... ஒவ்வொரு வீரருக்கும் தனிதனியே நந்தவேணி ரம்யவேணி மற்றும் மித்ரவேணியால் வழங்கக்கட்டுக் கொண்டிருந்தது.... ஸ்ரீ மற்றும் தாரிணி.... அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை பத்திரப்படுத்தினர்.... ஆருத்ரா மற்றும் இந்து நாயகன்கள் எவரையும் காணாது குழப்பத்துடன் தேடிக் கொண்டாருக்க.... ஆதன்யா.... இமை மூடி... நிகழப்போவதை கணிக்க முயன்றுக் கொண்டிருந்தாள்....
தேவசேனை : எம் மைந்தன்கள் எவரையும் காணவில்லையே....
இந்து : அவர்களை தான் ராஜமாத்தா அவர்களே நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம்....
தேவசேனை : அட... இந்து.... அத்தையென அழைத்திடு.... உங்கள் அனைவருக்குமே யான் அத்தை தான்..... ராஜமாத்தாவெல்லாம் மக்களுக்கு தான்.... உறவுகளுக்கு இல்லை.... என கண்டிக்க.....
இந்து ஆருத்ரா : சரி அத்தையவர்களே.....
ஆழ்ந்த நிசப்தத்தில் இருந்த ஆதன்யா.... தான் அமர்ந்திருக்கும் இடம் அதிர்வதை உணர்ந்து... பதறி போய் கண்களை திறக்க.... அனைவரும் அவளை போலே நிலநடுக்கத்தில் சுற்றிமுற்றி பார்க்க.... வெகு தொலைவில் ... வாடி வாசல் திறந்து... புலுதியின் நடுவில் வரும் பெரிய உருவங்களை கண்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க.... புலுதிகள் பறக்க.... மண் அதிர்ந்து காற்றில் கலக்க.... தங்கள் காலை மண் மீது வைத்து.... இறகு சின்னம் கேடையத்தில் மினுமினுக்க.... கரத்தில் வாள் இருகியிருக்க..... கண்களில் வெறி தனித்திருக்க.... நிமிர்ந்த நடையுடன்.... முழுவதும் போர் ஆடையில் நடந்து வந்தனர் வேந்தன்யபுரத்தின் முக்கோக்கள்.... அவர்களின் பின்... புலுதி மெல்ல மறைந்திட.... அக்காட்சியை கண்ட அனைவரும் மலைத்து நின்றனர்.....
80 அடி உயரத்தில்.... புவி அதிர... வேந்தன்யபுரத்து தளபதிகளை தாங்கி நடந்து வந்தது 8 விலங்கு... கால்கள் இரண்டும் சிங்கத்தின் கால்களை போல் இருக்க.... உடல் குதிரையின் உடலை போன்றும் தலை யானையினது தலையினை போலும் இருக்க... அதனை கண்ட அனைவரின் இதழ்களும் அவர்களையும் மறந்து.... "யானை யாளி " என உச்சரித்தது.... யானையாளிகளின் ஒவ்வொரு டியும் இப்புவியை சைத்துப் பார்த்தது....
பலாயிரம் வருடங்கள் முன் பேராபத்தில் மொத்தமாய் அழிந்த யாளி இணத்தின்... இரண்டாம் வகையே யானையாளி.... யானையாளிகள் மொத்தமும் அழிந்து விட... உயிர் தப்பியது இவை எட்டு யாளிகளே...
தாரிணி : இத...து... யானையாளி... தானே... என்று தடுமாறியவாறே வினவ....
தேவசேனை : ஆம்... தாரிணி... இது யானையாளியே தான்.... கடந்த திங்கள் கண்டதை விட இன்று வலுவாய் உள்ளதா தளபியாரே...
வேல் : ஆம் அன்னையே.... நன்கு வலுவுடனே இருக்கிறது...
ஆருத்ரா : அத்தை அவர்களே... இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை.... எப்படி இதெல்லாம்.... அதுவும்
அருந்ததி : பலாயிரம் வருடங்கள் முன் அழிந்த விலங்குகளில் எட்டு இங்கு....????
விஷ்னு : தங்கையாரே... பேராபத்தில் உயிர் தப்பித்த இவ்வெட்டு யாளிகளும்.... நம் வேந்தன்யபுரத்தின் அரசர்களால் மிகவும் பாதுகாப்பாய் காக்கப்படுகிறது.... எந்த மாவீரர்களுக்குமே அடங்க மறுக்கும் இவைகள்... மரியாதையாய் ஏற்றது.... நம் தளபதிகளை தான்....
ஸ்ரீ : அப்படியெனில் மஹரயாளி....
யுவன் : சற்று அங்கே நோக்குங்கள் யுவராணி... என ஓரிடத்தை காட்ட.... நாயகர்கள் அனைவருக்குமே.... அவனின் யுவராணி என்னும் அழைப்பு... யுவனின் ராணி என தெள்ளத் தெளிவாய் புரிய வைத்தது... அங்கு கண்ட அனைவரின் கண்களும் வெளியேவே வந்துவிட்டது...
ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒரே மாரிதியான விலங்குகள்... சிங்கத்தின் கால்களையும்... குதிரையின் உடலையும்... ஆட்டின் தலையினையும் கொண்டு... மஹரயாளி என அழைக்கப்படும் யாளிகளின் வகையில் மூன்றாம் வகையான யாளிகள் சீரிப்பாய்ந்து ஓடி வந்து நின்றது....
ஸ்ரீ : என்ன இது....😲😲
மாரன் : மஹரயளிகள்....நம் நாட்டின் அனைத்து வீதியிலும்... இவை காவல் காக்கும்... சக்தி வாய்ந்த விலங்குகள்....
நாயகிகள் : நம்பவே முடியவில்லை...
கந்தர்வக்கோட்டையில்....
உக்ரதேவன் : போர் தொடுக்க போகிறோம்... வெற்றி பெர போகிறோம்...
ரனதேவன் : ஆம் தமையா.... நம் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காமல் திண்டாடப்போகின்றனர்....
கிரகதேவன் : நாம் தவறாக கணக்கிட கூடாது ரனதேவா....
உக்ரதேன் : என்ன கூறுகிறாய்....
கிரகதேவன் : ஆம் தமையா... நேற்று சென்ற அனைத்து சிப்பாய்களும்... சடலமாய் தான் மீண்டுள்ளனர்.... அவர்களின் பதற்றத்தை நம்மால் சதிக்கு பயன்படுத்த முடியாது... எத்துனை பதற்றம் இருந்தாலும்... அவர்கள் யுத்தத்தில் குறியாய் தான் இருக்கின்றனர்....
ரனதேவன் : ம்ம்ம்ம் சரி பார்த்துக்கொள்வோம்....
கிரகதேவன் : அதுமட்டுமில்லை... அங்கு வேறு ஓர் பெரும் பலம் இருக்கிறது... வீரம் மட்டும் இல்லாமல்.... உலகிலே மிக சக்தி வாய்ந்த விலங்கு... பலாயிரம் வருடங்கள் முன்பு மொத்த இணமுமே அழிந்ததாய் நம்பப்பட்ட யானையாளிகளில்... எட்டு யாளிகள் உயிருடன் அங்கு இருக்கிறதாம்.....
உக்ரதேன் ரனதேவன் : என்ன யானை யாளிகளா... என அதிர்ச்சியடைய....
கிரகதேன் : ஆம்.... அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல....
உக்ரதேவன் : கடினம் என்னும் வார்த்தையே நாம் அறியக்கூடாது... எதுவாயினும் அவர்களை அழிக்க வேண்டும்....
ரனதேவன் : ம்ம்ம்ம் சரி கிளம்பிடுவோம் வாருங்கள்... மேலும் காத்திருக்க வேண்டாம்....
அங்கிருந்து கிளம்பியது கலிங்கதேசத்தின் போர்படை....
வேந்தன்யபுரத்து வீதியில் சென்ற அத்துனை பெரிய போர் படையை அனைத்துமக்களும் வியந்து பார்க்க.... இதுவரை என்றுமே கண்டிராத யானையாளிகளை கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் அரண்டுபோயினர் அனைவரும்.... வேந்தன்யபுர எல்லையை தாண்டியதும்.... அனைத்த படையினரின் முன் நின்ற தாரிணி..... தன் இமை மூடி ஏதோ உச்சிரித்தாள்... மெல்ல காற்றில் மிதக்க தொடங்கியவளின் உடலை நீல ஒளி சூழ்ந்து... அவள் கரம் வழி பாய்ந்த ஒளி படையினர் அனைவரையும் சூழ்ந்துக்கொள்ள.... திடீரென இரெண்டு இலட்சப்படையினரையும் சூழ வலு இல்லாமல் மயங்கி மேலிருந்து கீழ் விழப்போன தாரிணியை நொடி மாறாது தாங்கியது ஒரு நீல ஒளி... அனைவரும் அது யாரென பார்க்க.... உயிர் தீண்டிய ஷிவானி என்னும் அழைப்பில்..... கண் திறந்து தன்னை தாங்கிய சக்தியை பார்த்தாள் தாரிணி.... அவனின் விழியோ.... " என்று உன்னை காதலிக்க தொடங்கினேன் என அறியேன் ... ஆனால் வாழ்வின் இறுதி நொடிவரை என் இதயத்தின் அரசி நீயே.... " என கூற..... வலுவேறி எழுந்தவள்.... மொத்த படையினருடன் அவளும் மறைந்தாள்.....
தங்கள் முன் நின்ற மொத்த படையினரையும்.... நிமிர்ந்து நோக்கியவாறு நின்றது நம் வேந்தன்யபுரத்தின் படை....
திடீரென தோன்றிய படையினரை எதிர்பார்க்காத கலிங்கதேசத்து படை..... அதிர்ச்சியில் அப்படியே நிற்க.....
மாரன் : என்ன கந்தர்வர்களே.... போரின் விதி முறை அனைத்தும் மறந்து விட்டதா....
யாழ் : போரை அறிவிக்காமல் போர் தொடுப்பது குற்றம்....
உக்ரதேவன் : அது எல்லாம் எங்களை போன்ற முப்பெரும் அரசர்களுக்கு அதை பின் பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.....
விஷ்னு : ஆமாம் ஆமாம்.... விதிமுறை எல்லம் மன்னர்களுக்கு தான்... இவர்களை போன்ற முப்பெரும் மூதேவிகளுக்கு இல்லை.... என அசால்ட்டாய் கலாய்க்க.... மொத்த படையுமே அவனை திரும்பி பார்த்தது....
தீரா : கொஞ்சம் சீரியஸ்னெஸ்ஸோட இரு டா....
ரனதேன் : ஏய்ய்ய்
வெற்றி : யான் அறிந்து... அப்படி யாரும் இங்கில்லை....
கிரரதேவன் : என்ன போரை தொடங்கலாமா....
யுவன் : யுவராணியே....
ஸ்ரீ : கூறு யுவா....
யுவன் : போரை தொடங்கலாமா....
ஸ்ரீ : நிச்சயமாக.... என்றாள் தீர்க்கமான பார்வையுடன்.... அவளை முறைத்தவாறு புறவியில் அமர்ந்திருந்தனர் மேகலாயா மற்றும் மதுசூதனா.....
தளதிகள் : போர் முரசு கொட்டட்டும்.... என்ற பலத்த கர்ஜனையின் பின்..... எட்டு திக்கிலும் முழக்கத்தின் ஒலி பாய..... வேந்தன்யபுரத்து வீரர்கள் வேங்கையாய் பாய்ந்தனர்.... கந்தர்வர்கள் மீது.... நொடி தவறாமல் சதக் சதக் என அவ்விடமே குறுதி வெல்லம் ஓடியது....
யானையாளிகளின் கால்களில் நசுங்கி மரணித்தனர் சிலர்... தளபதிகளின் வாளுக்கு பலியாகினர் சிலர்.... யாமினி மற்றும் யாழினியின் தாக்குதலில் சற்றே திண்டாடித்தான் போயினர்.... ஆருத்ரா அருந்ததி மர்ம முறையில்... சில குறிப்பை உபயோகித்து கந்தர்வர்களை எளிதாக வீழ்த்தினர்...
ஸ்ரீ மேகலாயா உடன் அதிதீவிரமான வாள் வீச்சில் இருந்தாள்... அவள் அசந்த சமயம்.... மதுசூதனா தன் வாளை அவனின் முதுகில் இறக்க... போக... ஸ்ரீயின் முதுகின் முன் குருக்கே வந்து தடுத்தது இரு வாள்.... ஆதன்யா இடதிலும்... தாரிணி வலதிலும் வாளை இடையில் விட்டு மதுசூதனாவை தடுத்து அவளுடன் வாள் வீச்சில் இறங்கினர்....
தன் புறவியில் அமர்ந்தவாறே அதிவேமாய் சென்ற சக்தி..... வேந்தன்யபுர வீரர்களை பின் இருந்த தாக்க முயன்ற கந்தர்வர்களை வெட்டி சாய்த்தான்... இந்து மற்றும் விஷ்னு.... ஓரே வளையத்தில் இருந்து.... சுற்றி சுற்றி தாக்கி..... சூழ்ந்திருந்த கும்பலை மொத்தமாய் விழ வைத்தனர்....
தங்களின் ஆயுததிறணை விட.... மூளைதிறணை உபயோகிக்கும் வேந்தன்யபடையினரிடம் யுத்தமிட மிக கடினமாய் போனது கந்தர்வர்களுக்கு.... உக்ரதேவன் கிரகதேவன் ரனதேவன் கிடைக்கும் நேரத்திலெல்லாம் கோவன்களை கொல்ல முயன்றனர்... அனைத்திலிருந்தும் லாவகமாய் தப்பித்து.... அன்று ஒரே நாளில்.... ஏறகுறைய.... இருவது வேந்தன்யபுர வீரர்கள் வீர மரணமடைய..... ஐம்பதிற்கும் மேற்பட்ட கந்தர்வர்களும் வீரமரணம் அடைந்தனர்.....
இரவில் போர் நடவாது என்னும் விதிமுறைப்படி.... இரு நாடுகளும்.... வெவ்வேறு எல்லைக்குள் இளைப்பாறினர்.... சிறு சிறு காயங்களுடனே மீண்டனர் வேந்தன்யபுரத்து படை..... மருத்துவதளபதிகளும்... துணை தேவிகளும்... அழைத்து வந்திருந்த மருத்துவக்குழுக்களும் அனைவரின் காயங்களுக்கும் மருந்திட்டு தக்க ஓய்வை அழித்து வலு ஏற்றியது....
இரவின் ரம்மியத்தை இரசிக்க இயலாது... சினத்தின் உச்சக்கட்டத்தில்... அதை அடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டு... அவ்வமைதியான வேளையில்... மையான அமைதியுடன் அமர்ந்திருந்தான் வேந்தன்யயுரத்து கோ... மற்றும் புவியின் அனல் கோவன் யுவேந்திரன்...
போர் தடைப்பட்டதை விட.... 70 மனிதர்கள் மரணமடைந்ததே அவன் சினத்தை படு பயங்கரமாய் கிளரிக் கொண்டிருந்தது...
அவனை சற்று தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயின் கண்களிளும் அவனின் தவிப்பு இரேகைகள் தெரிய... அதை மேன்மேலும் தாங்க இயலாதவள்.... எழுந்து அவன் அருகில் நெருங்கினாள்... அவன் மனதில் ஓடுவதை அறிந்து.... தன் கண்களை கரு நீல நிறத்தில் ஒளிர விட்டவள் தன் மாயை கொண்டு அவன் மூளையில் உள்ளதை மறக்கடிக்க வேண்டி தீவிர செயலில் இருக்க.....
" என்ன செய்ய முயல்கிறீர்கள் ...." என்ற குரல் கேட்டு.... செயல்பட்டவாறே....
ஸ்ரீ : மூளையில் இருந்து கவலையை அகற்ற முயன்றுக் கொண்டிருக்கிறேன்.... என பதிலளிக்க....
" அது உம்மால் முடியாது யுவராணி... "
ஸ்ரீ : ஏன் எம்மால் முடியாது... என்று வினவியவளுக்கு அப்போதே தான் இவ்வளவு நேரமும்... யாரின் மனதை மாற்ற முயன்றோமோ... அவனிடம் தான் உறையாடிக் கொண்டிருந்திருக்கிறோம் என்று..... இவள் பேந்த பேந்த முளிக்க.... அவனோ ஒற்றை புருவத்தை ஏற்றி.... என்ன என்பதை போலே அமர்ந்திருந்தான்....
தன்னவனை தேடிச் சென்ற ஆதன்யா..... காற்றின் சீற்றம் அத்துனை வேகத்தில் இருந்தபோதும்.... நிமிர்ந்து தனியாய் நின்றவன் அருகினிலே நெருங்கியவள்... தன் தொண்டையை செரும..... அவள் வருகையை முன்பே அறிந்தவன்....
விஷ்னு : கூறு தேவி.... சிந்தை எங்கு உழன்றாலும்... என் கவனம் இங்கு தான் இருக்கும்.... செரும அவசியமில்லை...
ஆதன்யா : அறிவேன்... தாங்கள் ஏன் இப்போது மௌனமாய் இருக்கிறீர்கள்...
விஷ்னு : என்ன தேவி செய்ய கூறுகிறாய்.... வேந்தன்யபுரத்தின் இருவது வீரர்களுடன் சேர்த்து கந்தர்வவீரர்கள் ஐம்பதுபேரை சேர்த்து மொத்தம் 70 வீரர்கள் மரண மடைந்துள்ளனர்.... வீரர்கள் என்பதை விட... 70 மனிதர்கள் உயிரிழந்திருக்கின்றனர்....
ஆதன்யா : தங்களின் ஆதங்கம் சரி தான் ஈஷ்வர்... ஆனால் இது விதி என்கையில்... என்ன செய்திட இயலும் நம்மால்... அது மட்டுமில்லை.... போரில் உயிரிழப்பென்பது நிச்சயம் நிகழும்... எந்த ஓர் உயிரும் இழக்காமலில்லை இவ்வுலகில்... என்றோ வரவிருக்கும் மரணம்.... மக்களனைவரையும் காப்பதால்.... உடனடியே வருவதை நினைத்து எந்த ஓர் வீரனும் அய்யப்படுவதில்லை.....
நதியின் ஓட்டத்தில் தன் கவனத்தை செழுத்திக் கொண்டிருந்த சக்தியின் பின்... அவனை மெல்ல நெருங்கியது இரு வெள்ளை உருவங்கள்.... இருட்டில் அவன் தனித்து அமர்ந்திருக்க.... அது நேரே அவனையே நெருங்கியது...
சக்தி : யான் என்ன செய்கிறேனென கண்காணிக்க ஆல் அனுப்ப அவசியம் இல்லை... நீரே வந்து காணலாம் ஷிவானி... என நதியை பார்த்துக் கொண்டே கூற...
தன்னை கண்டுக்கொண்டானே... எப்படி... என சிந்தித்தவாறே அவள் அனுப்பிய ஆன்மாக்களை செல்ல கூறுவிட்டு அவன் அருகில் வந்தமர்ந்தாள் அவனின் ஷிவானி....
தாரிணி : இது கண்காணிப்பதல்ல.... தாங்கள் என்ன செய்கிறீர்கள் என அறியவே அனுப்பினேன்....
சக்தி : தாங்கள் அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்...
தாரிணி : ஏதோ செய்கிறேன்.... அதை விடுங்கள்... தங்களின் குழப்ப இரேகைகளுக்கு காரணம் என்ன....
சக்தி : குழப்பம் இல்லை ஷிவானி... கவலை...
தாரிணி : கவலையா....
சக்தி : ஆம்... நீ கவனித்தாயா.... இன்று இரு நாட்டவர்களுக்கும் நிகழ்ந்த போரில்... அப்பாவியாய் 70 உயிர் மடிந்துவிட்டது... அம்மனிதர்களுக்கு என்ன செய்ய முடியும் நம்மால்... என இவனும் அவன் சகோதரன்களை போல் அதையே கூற.....
தாரிணி : இதில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டியது சரியான மரியாதை அழிக்க வேண்டும்... போர் என்ற பின்... அதில் நாம் இழப்பை சந்தித்து தான் ஆக வேண்டும்... ஒன்றை இழக்காமல் நமக்கு ஒன்று கிடைக்காது... இன்று நம் 70 உயிரை இழந்ததால்.... எதிர்காலத்தில்... 70 கோடி உயிரை காக்க போகிறோம்.... யாருக்கு தெரியும்... அதற்கு மேல் அல்லது கீழ் கூட இருக்கலாம்.... ஆனால்.... நம் புவி மக்கள் அனைவரும் நிம்மதியாய் வாழ வேண்டுமானால்... அவர்களை வழி நடத்தும் நாம்.... இழந்து தான் ஆக வேண்டும் இந்தர்.... என புரியவைக்க....
யுன் : கூறுங்கள் யுவரணி... தங்களுக்கு இந்த நேரத்தில் இங்கென்ன வேலை...
ஸ்ரீ : அஅது.... தங்களின் கவலை படிந்த வதனத்தை எம்மால் காண இலவில்லை... ஆதலாலே... தங்களின் மனதில் ஓடுவதை மாற்ற வந்தேன்....
யுவன் : ம்ம்ம் சரி... சற்று என் அருகில் அமரு... என இடத்தை காட்ட.... அவளும் அமர்ந்திட... அவள் எதிர்பார்க்காத நேரம் அவளின் மடியில் தலை வைத்துக் கொண்டான் யுவன்... அதிர்ச்சியில் அவள் கண்கள் வெளி வர துடிக்க.... அவனின் முகமே.... அவனுக்கு இப்போது தன் அரவணைப்பு தேவை என்பதை எடுத்துக் கூற.... அவளும் அமைதியடைந்து... அவன் கேசத்தை வருட துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்....
யுவன் : கவலையாய் இருக்கிறது ரது... இன்னும் எத்துனை உயிர்களை இழக்க போகிறோமோ தெரியவில்லை.... ஏறகுறைய... ஒரே நாளிலே... 70 உயிர் மடிந்துவிட்டது... இதில் இன்னும் எத்துனை நாட்களுக்கு இப்போர் தொடருமோ...
ஸ்ரீ : ம்... எமக்கு உம்மிடம் நாளை அடிவாங்க போகும் அப்பாவிகளை நினைத்தே கவலையாக உள்ளது.... என அவன் கேசத்தை வருடிக் கொண்டே கூறினாள்....
யுவன் : நான் என்ன கூறுகிறேன்... நீ என்ன கூறுகிறாய்.... என கண்களை திறந்து அவளை பார்த்தான்....
ஸ்ரீ : பின் என்ன யுவா.... உயிர் இழந்தவர்களை பற்றி யாராலுமே கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை தான்... நாம் இப்போது அவர்களை பற்றியே சிந்தித்து... போரில் கவனத்தை இழக்கிறோம்... இது தோழ்வியை அடைய நேரிடும்.... இப்போரில் வெற்றி பெருவதை விட.... நல்லதை நிலை நாட்ட வேண்டுமென தன் இன்னுயிரை நீத்த அந்த 70 மனிதர்களின் தியாகத்திற்கு என்ன பயன்.... நாம் சிலதை அழிக்க வேண்டுமெனில்... சிலதை பிறப்பெடுக்க வைக்க வேண்டும்... ஆனால் இங்கு சில மாற்றம்... சிலரை அழிக்க வேண்டுமெனில்... நம்மில் சிலரே... காணிக்கை செழுத்த வேண்டும்... அதற்கென.... நகமும் சதையும்.. இரத்தமும் உள்ள மனித உயிரை காணிக்கையென ஒப்பிட மாட்டேன்... ஆனால் பல கோடி உயிர்களை மொத்தமாய் தீயசக்தியின் ஆதிக்கத்திலிருந்து காக்க வேண்டுமெனில்... நாம் நம்மில் சிலரையே... இழந்து தான் ஆக வேண்டும்.... அதில் எதையுமே மாற்ற இயலாது.... என நிதர்சனத்தை புரிய வைத்தாள்....
சகோதரன்கள் மூவருக்கும்... இருந்த கவலை... அவரவரின் துணையால் நீங்கியது....
ஸ்ரீ தாரிணி ஆதன்யா : தங்களின் சகோதரர்கள் கூட... இதே குழப்பத்தில் இருக்க வாய்ப்புண்டு.... அவர்களுக்கு சென்று புரியவையுங்கள்... என அனுப்பி வைத்தனர்.....
மூவரும் அவரவரை தேடி ஒரே இடத்தில் கூட.... மூவரும் சிலதை கலந்துறையாடிய பின்.... தங்களின் துணையை நினைத்து பெரிமிதப்பட்டுக் கொண்டே.... ஓலை ஒன்றை எழுதி.... ஒற்றனிடம் கொடுத்து வேந்தன்யபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்....
அரசவையில்.... அமர்ந்திருந்த ராஜமாத்தா தேவசேனை... முக்கோக்களிடமிருந்து தூது வந்ததை அறிந்து... அதை உடனே வாசிக்க உத்தரவிட்டார்... ஒற்றனும்.... அங்கு இருக்கும் அனைவருக்கும் தெளிவாய் கேட்கும் படி... சத்தமாய் வாசித்தான்....
அதில்....
வேந்தன்யபுரத்து ராஜமாத்தா மற்றும் எங்கள் அன்னை தேவசேனைக்கு... முக்கோக்கள் எழுதிக் கொள்வது....
இன்று ஒரு நாள் நிகழ்ந்த போரில்.... 70 வீரர்கள்.... வீரமரணம் அடைந்தனர்.... அதில் இருவது வீரர்கள் நம் நாட்டவர்கள்..... அவ்வீரர்களுக்கு நடுகல் நடபட உத்தரவிடுகிறோம்..... ராஜியமர்வதன மண்டபத்தில்... இருக்கும் இரகசியங்கள் இரகசியமாகவே இருக்கட்டும்.... அய்யப்படாமல் இருங்கள்... ராஜ்ஜியத்திற்கு.... உயிராய் திரும்பினும்... அல்லது... உடலாய் திரும்பினும்.... நிச்சயம்... வெற்றியுடனே திரும்பிடுவோம்....
இப்படிக்கு
முக்கோக்களான கோவன்கள்.....
(நடுகல்.... போரில் மரணமடைந்த வீரர்களுக்கு... மரியாதை செழுத்தும் விதமாய்... தமிழர் சிற்பக்கலை பண்பாட்டின்.. தொடக்கத்தில்... செதுக்கப்பட தொடங்கிய கல்.... அக்கல்லில்... மரணமடைந்த வீரரின் படம் பொறிக்கப்படும்.... )
இதனை அறிந்த ராஜமாத்தா.... உடனே இருவது வீரர்களுக்கும் நடுகல் நடப்பட கட்டளை இட்டார்....
விரைவாய்.... மக்களிடையே... நுழைந்த குரு தந்திரா.... பஞ்சலோக வம்சத்தினவரை மாத்திரம்... தனியாய் அழைத்து.... ஓர் அறிவிப்பை அறிவித்தார்....
குரு தந்திரா : அனைவருக்கும் வணக்கம் ..... தாங்கள் அனைவரும் அறிந்ததே..... கந்தர்வர்களுக்கும்... நம் சம்ஹித்தவர்களுக்கும் போர் நிகழ்கிறது... அதன் பின்... பேரழிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது... அவையை விட.... சில முக்கிய காரணங்களுக்காய்... தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க போகிறேன்.... அந்நபர்... சாகா வரத்துடன் வாழ்வார்.... என்றுமே மரணம் இல்லை.... ஆனால்... ஒரு நிபந்தனையும் கூட.... அவர்களின் உருவம்.... மிக சிறியதாய் சுருக்கப்படும்.... என்க....
அப்போது மக்கள் அலை அலையாய் மோதினர்... தங்களை தேர்ந்தெடுக்க கூறி... அதற்கு நடுவில்.... தனியாய் அமர்ந்து.... இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல்... மாம்பழத்தை ருசித்துக் கொண்டிருந்த சேவனை கண்டு.... இதற்கு இவன் தான் சரியான தேர்வென.... அவனை பலமாய் அழைத்தார்.... மிக தீவிரமாய் மாம்பழத்தில் மூழ்கியவன்.... குரு தந்திராவின் அழைப்பில்... திருநிருவென முளிக்க..... அவன் அடம் பிடிப்பதை கண்டுக்கொள்ளமல் இழுத்துக் கொண்டு சென்றார்... மக்கள் அவனுக்கு கிடைத்த வாழ்க்கை... என கூறி நகர்ந்தனர்... அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்ணுக்கெட்டாத குள்ளத்திற்கு ஓர் வித மூலிகையால் மாறினான் சேவன்.....
முன் இருந்த கன்னாடி அவனுக்கு மலையை பார்ப்பது போல் இருக்க.... அக்கன்னாடியிலோ நம் சேவன் சிறு புள்ளியாய் தெரிந்தான்... அவன் அருகில் நெருங்கிய குரு தந்திரா அனைத்து உண்மைகளையும் அவனுக்கு கூறி... தான் ஆன்மா தான்... என் உடல் கந்தர்வமலை அடிவாரத்தில் ஓர் குகையில் முப்பெரும் அரசர்களால் அடைந்துகிடப்பதையும் கூறினார்... கர்ந்தர்வக்கோட்டைக்கு சென்று மாயமோகினிக்கு வரும் ஆபத்தை பற்றி எச்சரிக்கை செய்ய உடனே சேவனை அனுப்பி வைத்தார்... சேவனும் கந்தர்வக்கோட்டையை நோக்கி விரைந்தான்....
காதல் தொடரும்....
போரில் வேந்தனயபுரம் வெல்லுமா...
தங்களின் கருத்துக்காய் காத்திருக்கிறேன்....
இதில் ஒரு அத்யாயம் கொடுத்த பின்.... மதி மர்மம் கதையில் ஓர் அத்யாயம் கொடுக்கப்படும்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro