Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல் -47

பருந்துகள் மிக தொலைவில் பறக்க.... பறவைகள் முழக்கத்தின் ஓசையில் அரண்டு பறக்க..... அங்கு மாபெரும் சத்தத்துடன் எட்டுத்திக்கிலும் ஒலித்தது வேந்தன்யபுரத்து எட்டு தளபதிகளின் அறிவிப்பு.... எட்டு பேரும் வரிசையாய் நிற்க.... அவர்களின் பின்... வேந்தன்யபுரத்தின் மாபெரும் சிப்பாய் படை ஈட்டி கேடையத்துடன் கம்பீரமாய் நிற்க.... அவர்களின் பின் குதிரைப்படையும் யானைப்படையும் நிற்க.... அங்கு கூடியிருந்த அனைவருமே அப்படையினர் அனைவரையும் கண்டு மிரிட்சியில் நிற்க... மேடையில் அமர்ந்திருந்த அரசி தேவசேனை புன்னகையுடன் எழுந்து நிற்க....

படைத்தளபதிகள் (யாழ் வேல் குரு பத்ரன்) : வீரர்கள் பிரிந்திட... என முழங்க....

ஈட்டி கேடையம் எந்தி நின்ற சிப்பாய்களில்.... பாதி சிப்பாய்கள்.... இடது புறம் நகர்ந்து.... வலப்புறம் பார்த்து திரும்பி நிற்க....

மருத்துவதளபதிகள் (மாரன் சூர்யா வெற்றி மித்ரன்) : மருத்துவவீரர்கள் பிரிந்திட.... என முழங்க....

ஈட்டி கேடையம் ஏந்தி நின்ற மீதி சிப்பாய்கள் வலப்புறம் நகர்ந்து.... இடது புறம் பார்த்து திரும்பி நிற்க....

தளபதிகள் : படைகள் வழி விடட்டும்... என முழங்க.... அடுத்த நொடி.... குதிரை படையினரும்... யானைபடையினரும்.... இடது புறத்திலும் வலது புறத்திலும் ஒதுங்கி நிற்க.... அவர்கள் பின்..... கம்பீரமாய் நின்ற இளவரசர்கள் மூவரும் அவர்களின் வாளின் பிடியில் வலது கரத்தை வைத்தவாறு நிமிர்ந்த நடை போட..... அங்கு கூடியிருந்த அனைவரும் இளவரசர்கள் மூவரையே ஆ வென வாயை பிளந்து பார்க்க.... கரோகோஷம் வேந்தன்யபுரத்தையும் தாண்டி மாபெரும் சத்தத்துடன் ஒலிக்க..... உக்ரதேவன் கிரகதேவன் மற்றும் ரனதேவன் பேரதிர்ச்சியில் வாயை பிளந்து அமர்ந்து இருக்க.....

ஸ்ரீயும் தாரிணியும் யுவனையும் சக்தியையும் இமைக்காது நோக்கினர்....

இளவரசர்கள் மூவரும் வேகமாய் நடந்து வர.... படைத்தளபதிகள் நாழ்வரும் நான்கடி இடது புறம் நகர்ந்து நிமிர்ந்து நிற்க.... மருத்துவதளபதிகள் மூவரும் நான்கடி வலது புறம் நகர்ந்து நிமிர்ந்து நிற்க...... அவர்களின் நடுவில் இருந்த எட்டடி இடைவேளை உள்ள இடத்தில்.... இளவரசர்கள் வந்து நின்றதும்..... ஒதுங்கி நின்ற படையினர் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க..... தளபதிகளும் இளவரசர்களும் நேர்கோட்டில் நடந்து வர.... அவர்களை பின் தொடர்ந்தவாறு சிப்பாய் படையும்... குதிரை படையும் .... யானைபடையும் வர...... இவர்கள் அனைவரின் முன்.... மேளதாலம் அமோகமாய் கொட்டப்பட.... நர்த்தகர்கள் இசை வாக்கியங்கள் இசைந்திட..... முரசுகள் கொட்டிட.... மக்களின் " வாழ்க வேந்தன்யபுரம்.... வாழ்க வேந்தன்யபுரம் " என்னும் கரகோஷம் எட்டுதிக்கிலும் பறவியது....

ஒரு குறிப்பிட்ட எல்லையில்... மூன்று படைகளும் அப்படியே நின்றுவிட..... அடிமாறாமல் ஒரே நேர்கோட்டில் சென்ற இளவரசர்களும் தளபதிகளும் அவர்களின் வேகநடையை தொடர்ந்து.... மேடையின் முன்.... ஒரே நொடியில் நின்று.... அவர்களின் வலது காலை மட்டும் முன் வைத்து.... வாளின் பிடியிலிருந்து கரத்தை நீக்காமல்.... உடலை காலுடன் அழுத்தி.... அரசி தேவசேனைக்கு மரியாதை செழுத்தி பணிந்திவிட்டு..... நேராய் நிற்க... நடுவில் நின்ற இளவரசர்கள் மட்டும் முன்னேறி நடந்து.... மேடையின் மேல் நின்று.... ஒரே நேரத்தில் தளபதிகளும் இளவரசர்களும்.... மக்களை நோக்கி திரும்ப.... அங்கு மீண்டும் பெருகியது ஓர் மிகப்பெரிய கரகோஷம்....

மேடை ஏறிய தேவசேனை.... இளவரசர்கள் மூவர் அருகிலும் சென்று..... கிரிடங்களை எடுக்க.... சிகப்பு.... இரத்தினக்கல் பதித்த கிரிடம் யுவேந்திரனுக்கும்.... நீல நிற இரத்தினக்கல் பதித்த கிரிடம் சக்திவேந்திரனுக்கும்.... வெள்ளை நிற இரத்தினக்கல் பதித்த கிரிடம் விஷ்னுவர்தேஷ்வரனுக்கும் ஒரே நேரத்தில் வேந்தன்யபுரத்தின் ராணி தேவசேனை அவரவர் தலையில் சூட.... மீண்டுமோர் பிரம்மாண்டமான கரகோஷம்...

ராணி தேவசேனை ராஜமாத்தா தேவசேனையாய் கீழிறங்கி செல்ல.... நிமிர்ந்து நின்ற மூவரும்.....

வேந்தன்யபுர பேரரசின் இளவரசர்களாகிய நாங்கள்.... வேந்தன்யபுரத்தின் முக்கோக்களாய் பதவி ஏற்கிறோம்.... வேந்தன்யபுரத்தின் மானம் காப்போம் எனவும்... வேந்தன்யபுரத்து மக்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவோம் எனவும்.... அவர்களின் உயிர் காப்போம் எனவும் உறுதி அளிக்கிறோம்..... இப்புவி ஆளும் இறைன் மேல் ஆணையாய் கூறிகிறோம்..... மக்களின் மனநிம்மதிக்காய் உயிரை மாய்த்துக்கொள்ளவும் தயங்க மாட்டோம்...... என்று கர்ஜிக்க.... அம்மாபெரும் கர்ஜனையை செவி சாய்த்த மக்கள் பெரும் ஓசை எழுப்பினர்.....

ராஜமாத்தா தேவசேனை அவர்கள் தளபதிகளின் அருகில் சென்று..... வேந்தன்யபுரத்தின் சின்னமான இறகு முத்திரையை அவர்களின் கேடையத்தில் பதித்து.... தலைக்கவசத்தை அணிவித்தார்....

அவர் விலகியதும்...... எட்டு தளபதிகளும் நிமிர்ந்து நின்று....

வேந்தன்யபுர பேரரசின் தளபதிகளாகிய நாங்கள்.... வேந்தன்யபுரத்தின் வளத்தை காப்போம் எனவும்.... இப்புவியை ஆளும் இறைவன் மீது ஆணையாய்.... எந்த ஒரு ஆபத்தையும் ராஜ்ஜியத்தை நெருங்க விடாது பாதுகாப்போம்.... வேந்தன்யபுரத்து முக்கோக்களை என்றும் கை விட்டிட மாட்டோம் எனவும் வாக்களிக்கிறோம்...... என கர்ஜிக்க.... எட்டுத்திக்கிலும் ஒலித்த கர்ஜனையுடன்.... மக்களின் பேரொலியும் ராஜ்ஜியத்தை தாண்டி சென்றது....

இன்னும் அதிர்ச்சியிலே இருந்த உக்ரதேவன் கிரகதேன் மற்றும் ரனதேவன் நிமிர்ந்த அவர்களின் பார்வையில் நடுங்கி... உடனடி திட்டம் தீட்டினர்....... அப்போது..... திடீரென கேட்ட ஒரு கோர உறுமலில் அனைவரும் அச்சத்தில் திரும்பி நோக்க.... அங்கோ நீண்ட இறெக்கைகளை கொண்டு... தீயை கக்கி.... கோரமான காயங்களுடய மாபெரும் சிங்கம் பறந்து வர..... அதை கண்டு அனைவரும் நடுங்க..... மக்கள் அங்குமிங்கும் ஓட...... மேலே பறந்த அச்சிங்கம் படுகோரமாய் உறுமி விட்டு.... தீயை மக்கள் மீது கக்கிட..... ஓர் குறிப்பிட்ட எல்லையில் வேகமாய் வாண் நோக்கி சென்ற எதையோ பலமாய் மோதி இரண்டாய் வெடித்தது அந்த நெருப்பு..... அனைவரும் அது என்னவாய் இருக்கும் என்ற ஆர்வத்தில் நோக்க...... சிகப்பு நீலம் மற்றும் வெள்ளை நிற மாபெரும் இரெக்கைகள்..... நெருப்பில் எறிந்தவாறிருக்க.... அதில் மேல் முன்னேறிய சிகப்பு நிற இரெக்கை அச்சிங்கத்தின் முன் நின்று..... அதீத தீயினை செழுத்த..... மிக மோசமாய் அலரியது அச்சிங்கம்.... அப்போதே தெரிந்தது..... அந்த இரெக்கைகள் வேறாரும் அல்ல..... வேந்தன்யபுரத்து முக்கோக்கள் இரெக்களால் பறந்துக் கொண்டு யுத்தத்தில் இருந்தனர்..... அனைவரும் வாயை பிளந்து அதையே நோக்க....

யுவனின் தீயிலிருந்து திமிறிய சிங்கம்.... அதீத வலியில் மாபெரும் தீயை தேக்கி.... மக்களின் புறம் வீச.... ஒரு குறிப்பிட்ட எல்லையில்.... ஒரு கன்னாடி சுவரில் இடித்து வெடித்து சிதறிது அந்த தீ..... அனைவரும் இது யார் செய்ததென நோக்க.... மேடையில் நின்ற யதுகுளத்து இளவரசிகள் மூவரும்.... அவரவர் கரத்திலிருந்து பாய்ந்த கருநீலம் நீலம் மற்றும் வெண்மை நிற மாயையை செழுத்தியவாறே நிற்க.... அம்மாயைகள் மொத்த வேந்தன்யபுரத்தையும் சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிட..... அவ்வளையத்தின் வெளிபுறத்தில்.. முக்கோக்கள் தீவிரமாய் யுத்தத்தில் இருந்தனர்.... சக்தி தன் நீரை அவனது மற்றும் விஷ்னுவின் இரெக்கையில் அடித்து தீயை அனைத்தான்..... தன் கைகளை சுழற்றி... காற்றில் அழுத்தத்தை உருவாக்கிய விஷ்னு... அச்சிங்கத்தின் புறம் அழுத்த.... காற்றின் அழுத்தத்தில் அச்சிங்கம் பறக்க இயலாமல் ஒரு புறம் தள்ளப்பட.... அதே புறத்தில் நின்ற யுவன் அவனின் கரத்தை சுழற்றி.... அதன் மேல் தீயை விடாமல் செழுத்த..... இரண்டிலும் சிக்கிய அச்சிங்கம் எங்கும் நகர முடியாமல் தவிக்க..... அதன் முன் நின்ற சக்தி.... அவனின் கரங்களை நன்கு சுழற்றி..... நீரினை தன் மேல் விடாமல் செழுத்த..... மூவரும் விடாமல் அவரவர் அதிசக்தியை அதன் மேல் செழுத்துவதை கண்டு கீழிருந்த மக்கள் அனைவரும் வாயை பிளந்து பிரம்மிப்பில்... மாரடைப்பு வாராத குறையில் நிற்க..... துணை தேவிகளும்... தளபதிகளும்..... உடனடியே அவ்வளையத்தை விட்டு வெளி சென்று..... அங்கிருந்த சில மக்களை பத்திரமான இடத்திற்கு மாற்றினர்....

அதீத சக்திகளை தாங்க இயலாத அச்சிங்கம்..... தன் இரெக்கை எறிந்து சாம்பலாக..... உடலில் வலு இல்லாது கீழே விழ..... அதை நோக்கி விரைந்து பறந்த மூன்று கோவன்களும் அது கீழே பலமாய் விழும் முன் சரியாய் பிடித்து.... நல்லபடியாய் கீழிறக்கினர்....

மேடையிலே அச்சிங்கத்தை படுக்க வைத்த மூவரும்... மருத்துவதளபதிகளை பார்த்து கண் அசைக்க.... நாழ்வரும் உடனே சிங்கத்தை பரிசோதித்து மருந்தை அளித்தனர்....

யுவன் : அச்சம் கொள்ள அவசியமில்லை.... இப்புவியின் கோவன்களும் நாங்களே.... சஹாத்திய வம்ச சூரர்கள்... நம் வேந்தன்யபுரத்தின் தளபதிகள்.... யாளிவம்சத்து வீராங்கனைகள்.... மற்றும் யதுகுளத்தின் துணை தேவிகளும் நம் நாட்டின் துணை தேவிகளும் ஆவர்... யதுகுளத்தின் இளவரசிகளே நாகனிகள் ...... என யாரும் அறியாத உண்மையை வெளியிட..... பலர் அதிர்ச்சியுற்றனர்.....

உக்ரதேவன் கிரகதேவன் ரனதேவன் மூவரும் தங்களின் திட்டம் தோழ்வியடைந்ததை நினைத்து அச்சிங்கத்தை கண்டு அர்ச்சித்தவாறு இருந்தனர்.....

சக்தி : அனைவருக்கும் தடபுடலாய் விருந்துள்ளது... மறுக்காமல் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்....

அங்கிருந்து நேர்த்தியாய் நகர்ந்தது படைகுழு.... அது நகர்ந்ததும்.... மற்றைய நாட்டவர்களும் அங்கிருந்து நகர்ந்திட... அங்கு மீதம் இருந்ததோ வேந்தன்யபுரத்து நாயகர்களும்... யதுகுளத்து நாயகிகள் மட்டுமே....

அங்கு சில மணி துளிகள் மௌனமே ஆட்சி செய்ய.... அதை கலைத்தாள் ஆதன்யா....

ஆதன்யா : மேலும் நாம் மௌனத்தை கடத்துவது நல்லதல்ல....

அனைவரும் அவளை என்ன என்பதை போல் நோக்க....

ஆதன்யா : புவியை ஆபத்து நெருங்குகிறது.... இச்சிங்கம் வந்ததுவே அதன் முதல் அறிகுறி....

விஷ்னு : நாம் என்ன தான் செய்வது...

ஆதன்யா : விரைவில் தேடலில் இறங்கிட வேண்டும்.... ஏந்நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் மூவரையே ஆபத்து நெருங்கும்... நமக்கான விதி படி.... முதலில் ஆயுத வழி தொடங்கும் யுத்தமானது... இறுதியில் மாயை வழியே முடியும்... இதையே என் கனாவும் கூறிகிறது.... ஆதலால்.... எந்த நாட்வர் விரைவில் இங்கு போர் தொடுக்கின்றனரோ... அவர்களை தான் நாம் அழித்தாக வேண்டும்...

ஸ்ரீ : தீயசக்தியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்....

அனைவரும் : அதற்கு நாம் அனைவரும் இணைந்து இருத்தல் வேண்டும்.....

விஷ்னு : நிச்சயமாக.... அனைவரின் துணையுமே... நமக்கு அவசியம்.... யாவரும் தொலைந்திட கூடாது...

சக்தி : நாகனிகளாகிய யதுகுளத்தின் இளவரசிகளே... மற்றும் துணைதேவிகளே... தங்களுக்கு வேந்தன்யபுரத்தில் தங்க சம்மதமா....

இளவரசிகள் துணைதேவிகள் : நிச்சயமாக சம்மதம் தான்....

மாரன் : வாருங்கள் கோட்டைக்கு செல்வோம்....

அனைவரும் : ம்ம்ம்

உக்ரதேவன் : அனைத்தும் வீணானது....

கிரகதேவன் : இத்துனை வருடங்களாய் கோவன்களை கண்டுபிடிக்க முடியவில்லை... ஆனால் இன்று....

ரனதேவன் : காணுவோம் என எதிர்பார்க்கவில்லை....

உக்ரதேன் : நிச்சயம் வெகு விரைவிலே... யுத்தம் தொடங்கிடும் என எண்ணுகிறேன்... இன்று அச்சிங்கம் மயங்கியதன் பின்... கோவன்களின் பார்வையில் ஒரு வித தீர்க்கம் இருந்தது.... அவர்கள் நிச்சயம் அழிவை யூகித்திருக்க கூடும்....

ரனதேவன் : அது அவர்களின் அழிவாக தான் இருக்க வேண்டும்....

கிரகதேவன் : நிச்சயமாக அதில் சந்தேகமே இல்லை....

உக்ரதேவன் : காணலாம்... தீயசக்தியா.... நற்சக்தியா .... நாமா இல்லை இந்த கோவன்களா என காணலாம்.... என வேந்தன்யபுர கோட்டையை பார்த்தவாறு கூறினான்....

அனைவரும் உண்டு முடித்ததும்.... வேந்தன்யபுரத்தின் அமைச்சர் ஒருவர்..... அனைவரின் மையத்திலும் நின்று.... முக்கிய விஷயம் ஒன்றை அறிவித்தார்....

அமைச்சர் : கூடியிருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.... எங்களின் வறவேற்பை ஏற்று வேந்தன்யபுரத்திற்கு வந்த அனைத்து நாட்டவர்களுக்கும் மிக்க நன்றி.... இப்போது நம் தமிழர் பெருமக்களின் பாரம்பரியம் இளஞர்கள் மற்றும் உழவர்களின் வீரவிளையாட்டான எருது கட்டு தொடங்க உள்ளது... எந்த நாட்டவர் வேண்டுமானாலும் கலந்துக் கொள்லாம்... அடக்கப்போகும் காளைகள் காக்கத்திய தேசத்தின் மாபெரும் வலு கொண்ட காளனிக்காளைகள்.... அக்காளைகளை இதுவரை அடக்கியது சில வீரர்களே.... அதிலும் பலர் ஒன்றுக்கூடியே... ஓர் காளையை அடக்குவர்... இன்று... மூன்று காளைகள் ஒரே சுற்றில் இறக்கப்படும்..... என அறிவிக்க....

காக்கத்திய காளைகள் என கேட்துமே... " எருது கட்டு தானே... கலந்துக் கொள்ளலாமே... " என முன் வந்த இளஞர்களும்... பல நாட்டு இளவரசர்களும் தளபதிகளும்... அரண்டு போய் பின் நகர்ந்தனர்.... வேந்தன்யபுரத்திலும் எவரும் முன் வராதிருக்க.... முக்கோக்கள் குழப்பமடைந்து.... சிம்மாசனத்திலிருந்து இறங்கி கீழ் வந்தனர்.... அனைவரும் அமைதியாகவே இருக்க.....

விஷ்னு : என்னவானது இளஞர்களே... எவருக்கும் நம் பாரம்பரிய விளையாட்டை விளையாட விருப்பம் இல்லையா....

எவரும் பதில் அளிக்காமல் இருக்க....

சக்தி : மற்ற எந்த நாட்டவருக்கும் கூட விருப்பமில்லையா.... வேந்தன்யபுர இளஞர்களே தங்களுக்குமா....

கிரகதேவன் : வீரம் விழைச்சலிட்ட நாடு.... செல்வாக்கு விழைச்சலிட்ட நாடு என்று வெரும் பொய் புகழ் தான்... ஒருவன் கூட முன் வரவில்லையே... என வேந்தன்யபுர ராஜ்ஜிய மக்கள் அனைவரையும் இழிவு படுத்தும் நோக்குடன் பேச.... அதை கேட்ட முக்கோக்களுக்கும் தளபதிகளுக்கும் சினம் தலைக்கேற.... ஒருவாறு அனைவரும் தங்களுக்குள்ளே அதை அடக்கவிட்டு... யுவனை நோக்க... அவனோ... பெரும்பாடு பட்டு... எப்படியோ அடக்கிக் கொண்டான்...

ரனதேவன் : அதை தான் நானும் நினைக்கிறேன்....

" உண்மை அறியாமல் வாயில் வந்ததை உலராதீர்கள் அரசர்களே... " என்ற குரலை கேட்டு அனைவரும் திரும்பி நோக்க... அங்கோ சிரித்துக் கொண்டே மைதானத்தில் நின்றான் சேவன்.... " இவனா சண்ட போட போறான்?? " என்பதை போல் அனைவரும் அவனை விழி விரித்து நோக்க.... அதை புரிந்துக் கொண்டவன் போல....

சேவன் : இல்லை... இல்லை... நீங்கள் நினைப்தைப் போல் நான் காளையை அடக்க போவதில்லை... உண்மையை போதிக்க வந்தேன்... என் இடத்திலிருந்து கூறினால் எவரும் செவி சாய்க்க இயலாது... அதனால் தான்... அனைவருக்கும் மையத்தில் இருக்கும் மைதானத்தில் நின்று கூற வந்தேன்... என சிரித்துக் கொண்டே....

உக்ரதேவன் : நாங்கள் உலருகிரோமா... என்ன கூறுகிறாய்...

சேவன் : சரியாக குறிப்பை எடுத்துத் தந்தமைக்கு நன்றி அரசே.... அதாவது... எங்கள் வேந்தன்யபுர பேரரசில்... பரிசு வாங்குவதாய் இருந்தாலும்... பரிசு வெல்வதாய் இருந்தாலும்... அதற்கு முதலே நாங்கள் கலந்துக் கொள்ள மாட்டோம்.... மாட்டோம் என்பதை விட கூடாது.. அதற்கு காரணம்... தொடக்கத்திலே எங்கள் வீரத்தை காட்டிவிட்டால் எதிர்ப்பவர் முழுதாய் சோர்ந்திடுவார் அல்லவா... அதன் பின் எப்படி அடுத்தவருடன் போட்டியிட இயலும்... ஆதலால் தான்... என " முதல் மோதுவது நாங்களாய் இருந்தால்... வேறு எவருக்கும் நிச்சயம் வெற்றி கிட்டாது " என்பதை சொல்லாமல் சொல்லியவனை கண்டு... முப்பெரும் அரசர்கள் முறைக்க... நம் முக்கோக்களும் தளபதிகளும் இதழோர கர்வப்புன்னகையை வீசினர்....

ரனதேவன் : எப்படி இருந்தாலும்... மற்ற நாட்டவர் எவரும் வராத போது.... நீங்கள் தானே வர வேண்டும்...

விஷ்னு : கூறுபவர் வந்தால் காளை அச்சத்தில் ஓடிவிடுமோ என்னவோ.. ஆதலால் தான் நம்மை இறக்க கூறுகிறார் போலும்.. என கூற...

அதில் ஆத்திரம் அடைந்த முப்பெரும் அரசர்கள் மூவரும் மைதானத்தில் இறங்க.... சேவன் குடுகுடுவென மேலே எறி அமர்ந்துக் கொண்டான்... தளபதிகள் சிப்பாய்களை பார்த்து கண்ணசைக்க..... சிறையிலிருந்து... ஓர் காளையை மட்டும் திறந்து விட்டனர்... வந்தது என்னவோ அத்துனை வலு இல்லாத சாதாரண காளை தான்.... அது காக்கத்திய காளை இல்லையே.. என அனைவரும் சிப்பாய்களை தோக்க.... அவர்கள் தளபதிகளையும் முக்கோக்களையும் நோக்க.... அவர்களோ அமைதியுடன் மைதானத்தில் பக்கவாட்டில் இருந்த சுவர்களால் நின்றுக் கொண்டிருந்தனர்...

தீரா : அங்கேந்து பாக்க வ்யூ நல்லா இருக்கு போல...

ஓடோடி வந்த காளையை கண்டு மூவரும் விழி விரித்து நிற்க... அதன் பின்னே... காளை வருவது புரிந்து... நகர்ந்து நின்றனர்.... நகர்ந்ததுமே காளை அவர்களை தாண்டி ஓட.... அதன் முதுகில் உள்ள திமிலை பிடிக்க முயன்ற ரனதேவனை... ஒரே சுழற்றில்... கீழ் தள்ளிவிட்டு ஓடியது காளை.... அதன் பின்னே ஓடிய கிரகதேவன்... அதன் கொம்பில் கையிறை மாட்டி... இழுக்க.... விடு பட முயன்ற காளை முடியாமல் போனதும்.... தன் பலம் கொண்டே.... ஒரே இழுப்பில்... கிரகதேவனை கையிறுடனே இழுத்து... தூர வீசியது.... அம்மா என கத்திக் கொண்டே கீழே விழுந்த கிரகதேவனின் கழுத்தெழும்பே முறியும் வலி ஏற்பட... உடனே அவனை தூக்கிக் கொண்டு மருத்துவகுழு மருத்துவ அறைக்கு ஓடியது.... மற்றவர்கள் விளையட்டை சுவாரசியமாய் கண்டுக் கொண்டிருந்தனர்....

காக்கத்திய காளை கூட இல்லையே... எப்படி ஓர் அரசனையே.... வீழ்த்திவிட்டது... என அதிர்ச்சியாகவே அனைவரும் இருக்க.... ரனதேவனை துரத்திக் கொண்டு காளை ஓட... காளையை உக்ரதேன் தொரத்தி ஓட.... இறுதியில் அதன் திடலில்... நன்கு தன் கரத்தை வைத்து அழுத்தி பிடித்த உக்ரதேன்... அது திமிற திமிற எப்படியோ சமாளித்து பிடித்து நிற்க.... ஓர் நொடி.. நின்று அமைதியாய் இருந்த காளை... அடுத்த நொடி வேகமாய் துள்ளி... நேரே சென்று ரனதேவனை மோத... அதன் கொம்பு ரனதேவனின் வையிற்றில் கிழித்து... இரத்தம் பீரிட்டு வர... அவனுக்கு சில மருத்துவர்கள் உடனே மருத்துவம் பார்க்க.... உக்ரதேவனோ விழி பிதுங்கி நின்ற நேரம்..... காளை ஒரு சுற்று சுற்றி விட்டு..... நேரே அவனை மோத வர.... அது நெருங்க நெருங்க.... வேர்த்து கொட்டி நின்ற உக்ரதேவன் அப்படியே இருக்க..... அவனை நெருங்கும் ஒரு நொடி முன்..... நேரம் முடிந்து.... மூன்று முறை மணி அடித்தது.... உடனே சிப்பாய்கள் சிலர் கையிறை காளையின் மேல் கட்டி... ஒவ்வொரு மூலையிலிருந்தும் இருக்கி பிடித்து... நிற்க வைத்தனர்..... மனம் திக் திக் என இருந்தது உக்ரதேவனுக்கு...

யுவன் : நன்றாக விளையாடுனீர் கலிங்கதேசத்து அரசே... என கூற.....

அமைச்சர் : விருவிருப்பாய் சென்ற இப்போட்டியில்.... வென்றது காளையே... என அறிவித்ததும்... அச்சுவரிலிருந்து முக்கோக்கள் குதிக்க.... அதை தவறாய் புரிந்துக் கொண்ட அமைச்சர்....

அமைச்சர் : ஆஹா.... பார்த்தீர்களா... இப்போது... களம் இறங்கி உள்ளது நம் வேந்தன்யபுரத்தின் முக்கோக்கள் என அறிவிக்க.... வேந்தன்யபுரம் கரகோஷத்தில் மூழ்கியது....

நம் முக்கோக்களோ பேந்த பேந்த முளிக்க தொடங்க.... உக்ரதேவனோ குரூரமாய் சிரித்து.... சிப்பாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்க.... அவன் கண்களை கண்ட சிப்பாய்கள்... வசியமடைந்நு.... தலையசைக்க... கரகோஷத்தை கேட்ட கிரகதேவனும்... ரனதேவனும் தங்கள் தமையன் வென்றுவிட்டான் என்று நினைத்து கட்டுப்போட்டதோடு வெளி வர.... கிரகதேவன் தலையை சாய்த்தவாறும்.... ரனதேவன் கையை சாய்த்தவாறும் வந்து நின்றதும்... உக்ரதேவன் முளிக்க.... முக்கோக்களை கண்டதும் அவர்களும் அதிர்ச்சியடைய..... அவர்களை இன்னும் அதிர்ச்சியடையவைக்கும் நோக்கத்துடன்..... வாடி வாசல் திறந்திட.... அனைவரின் கவனமும் அதன் புறம் திரும்பிட..... நிழலிருந்து... இரு கால்கள் வெளி தெரிய.... அதன் பின் இரு கால்கள் தெரிய... அனைவரும் கண்களை கூர்மையாக்கி அதையே நோக்க...... அனலென மூச்சை வெளியிட்டவாறே.... கால்களை மண்ணில் தேய்த்து..... அதி வேகமாய் ஓடி வந்தது மூன்று காக்கத்திய இளம் காளைகள்....

காதல் தொடரும்.....

இளம் காளைகளை நம் கோவன்களால் அடக்க இயலுமா...??

நிகழப்போவது என்ன....??

இன்றைய ஆத்யாயம் அனைவருக்கும் பிடித்திருக்குமென எண்ணுகிறேன்.... தங்களின் கருத்தை மறவாமல் தெரிவிக்க வேண்டுகிறேன்....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro