காதல்- 44
தர்மன்ஐயா : அதன் பின் தான்.... தங்கள் மரணத்தை அறிந்துக் கொண்டோம்.... நீங்கள் இறந்த காலத்தில் தான் நான் பிறந்தேன்.... எமக்கு தங்களின் கதையை கூறி கூறி வளர்த்தனர்....
குரு தந்திரா : அன்று மரணமடைந்த யோகனாவை என்னுடன் பூட்டி வைத்தேன்.... அவள் வெளிவராமல் இருக்க....
தர்மன்ஐயா : இறந்தும்... என் தூய ஆன்மா... தங்களுக்காய் தான் இங்கு வளம் வருகிறது....
சத்தீஷ் : ஆனால்.... நீங்க சொன்ன யுத்ரபோர் மாரி லாம் அப்போ ஒன்னுமே நடக்கலையே.....
குரு தந்திரா : அது தங்களின் இரண்டாம் பிறவி.... யுத்ரபோர் நிகழ்ந்தது தங்களின் மூன்றாம் பிறவியில்.... நான்காயிரம் வருடம் முன்பு....
அனைவரும் : என்னது இன்னோரு பிறவியா....
தர்மன்ஐயா : ஆம்...
அவர்கள் கூற கூற அனைத்துமே நாயகர்களின் மூளையில் மெல்ல மெல்ல மேல் எழும்ப தொடங்கியது.... அவை எல்லாம் என்னுகையில்.... உடல் சிலிர்த்து அடங்கியது....
கந்தர்வமலையின் அடிவாரத்தில்.... தன் சிறகுகள் அடைப்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தான் வளவன் பருந்து.... அவன் முன்.... மதுபோதையில் இருந்தனர் விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரும்....
வளவன் பருந்து : என்னை விடுவியுங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்....
விகாஷ் : நீ செய்ததற்கு மாராகவா.... அழகியை உன் புறமல்லவா... இழுக்க பார்த்தாய்....
வளவன் பருந்து : என்ன உலருகிறாய்... என்னை விடுவி...
விகாஷ் : விடுவித்து.... மீண்டும் அவளிடம் உன்னை நெருங்கவிடுவேன் என நினைக்கிறாயா.... மாட்டேன்...
வளவன் பருந்து : மதுபோதையில் உலராதே.... யான் எந்த அழகியையும் மயக்கவில்லை...
நகாஷ் : நீ மயக்கியது தான் உமக்கே தெரியாதே... பின் நீ இப்படித்தான் கூறுவாய்....
வளவன் பருந்து : என்ன கூறுகிரீர்கள் மூவரும்.... உண்மையை கூறுங்கள்...
ஆகாஷ் : கூறிவிட்டால் நீ அவளிடம் உண்மையை கூறிவிடுவாயே....
வளவன் பருந்து : முட்டாள்களே அமைதியாய் இருங்கள்....
விகாஷ் : நீ தான் முட்டாள் முட்டாள்.... உன் மயக்கத்தை பயன்படுத்தி... உன் மனைவியை என் மனைவி என கூறினேன்.... உன் உயிரை என் உயிரென கூறினேன்... அதை எல்லாம் சிந்திக்காமல் உடனே என்னுடன் வந்துவிட்டாள் உன் மனைவி....
வளவன் பருந்து : என்ன கூறுகிறாய்... என் மனைவியா.... என்று எமக்கு மனமானது....
ஆகாஷ் : உன் கோவன்களை கேள்... உன் கோவன்களை கேள்... என கெக்கபக்க வென சிரிக்க தொடங்கினான்.... சீரி எழுந்த பருந்து.... தன் சிறகுகளை விரித்து உடனே அங்கிருந்து பறந்தான்....
திடீரென கோவன்கள் மூவரின் சிந்தையில்.... சில பல காட்சிகள் வந்து மறைந்தது.... விழி மூடி அமர்ந்திருந்த மூவரும் கோவன்களே கோவன்களே என்னும் அழைப்பில் இமை பிரித்து.... பதட்டமாய் அங்குமிங்கும் காண.. வெகு தொலைவிலிருந்து வந்த பருந்து.... அவர்கள் முன் வந்து நின்றது... அனைவரும் அதன் செம்மை நீலம் மற்றும் வெண்மை நிறம் கலந்திருந்த சிறகுகளை கண்டு ஆச்சர்யமாய் காண.... கோவன்களின் இதழ்கள்... அதிர்ச்சியுடன் வளவா என முனுமுனுத்தது.....
அதை கண்ட தர்மன்ஐயா " நினைவுகள் நெருங்குகிறது " என்றார் மகிழ்ச்சியுடன்....
மூவரும் அவரவர் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து உடனே அப்பருந்தின் அருகில் சென்று வளவா வளவா என அழைத்தனர்..... வளவன் பருந்தோ முளித்துக் கொண்டிருந்தது...
குரு தந்திரா :கோவன்களே... தங்களுக்கு அப்பருந்தை நினைவிருக்கிறதா....
க்ரிஷ் : அவன் பருந்து இல்ல.... மனுஷன் தான்....
வளவன் பருந்து : நான் மனிதனா....
சத்தீஷ் : ஆமா...
இந்திரன் : நாங்க தான் உன்ன பருந்தாவே மாத்துனோம்....ஆனா.....
அனைவரும் : என்ன ஆனா...
மூவரும் : ஏன் மாத்துனோம் னு தான் தெரியல....
குரு தந்திரா : நானே கூறுகிறேன்..... நான்காயிரம் வருடம் முன்..... இப்பொழுதிருக்கும் வேதபுரம் தான்.... அன்றைய செல்வசெழிப்பான மாபெரும் ராஜ்ஜியம் வேந்தன்யபுரம்....
வேந்தன்யபுரத்தின் செல்வாக்கு நிறைந்த பகுதிக்கு முக்கிய காரணம்.... விவசாயம்.... அவர்களின் முக்கிய தொழிலும் விவசாயமே.... இயர்கை அன்னை எழில் கொஞ்சும் அழகுடன் படைத்த ஒன்றில் இந்நகரமும் ஒன்று.....
வாருங்கள் காணலாம்.....
தன்ய நதி பாய்ந்தோட.... பலாயிரம் மக்களை ஒன்று கூட்டி... செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் மன நிறைவுடனும்.... மாபெரும் மலைளின் நடுவில்... ஆழி கடல் அருகில் பச்சை பசேல் என்ற அடர்ந்த ஆபத்து மற்றும் அழகு நிறைந்த காட்டின் மத்தியில் இருக்கும் மாநகரம் தான் வேந்தன்யபுரம்....
எந்த ஒரு கள்ளம் கபடமும் இல்லாமல் பழகும் சான்றோர்கள்.... தங்கள் வீட்டினரை மட்டுமல்லாது.... ஊர் மக்கள் அனைவரின் துன்பத்தை பற்றி கவலை படும் பெண்மணிகள்.... பணியிலும் நம்பிக்கையிலும் உயிரை கொடுத்து நிரூபிக்கும் ஆண்கள்.... நல்ல கதை நொல்ல கதை பேசும் பெரியோர்கள்.... கண்டிப்பில்லாமல் சுகந்தரமாக விளையாடும் குழந்தைகள்.... அச்சமில்லாமல் நிம்மதியுடனும்... பாதுகாப்புடனும் வீதியில் நடக்கும் பெண்கள்.... அவர்களை எந்நேரமானாலும்... பாதுகாக்க முன் வரும் ஆண்கள் என பலரும் சூழ்ந்த பெரும் ராஜ்ஜியத்தை ஆண்டு வருகிறார் அரசி தேவசேனை அவர்கள்......
இருவதாண்டுகளாய் தன் ராஜ்ஜியத்தை திறம் பட ஆண்டு வந்த அரசர் இலக்கியவர்மர்.... பத்து ஆண்டுகளின் முன் வனவாசம் சென்றுவிட்டார்.... அதிலிருந்து தன் மக்களை தான் ஒரு பெண்ணாக காத்து ஆண்டு வருகிறார் அரசி தேவசேனை....
தேவர்களும் மந்திரிகளும் அமைச்சர்களும் கூடியிருந்த அரசவையில்.... தனக்கே உரிதான கம்பீரத்துடன்... பணிப்பெண்கள் பின் தொடர.... வந்தார் அரசி.... மரியாதையாய் அனைவரும் எழுந்து நிற்க.... அரியணையில் அமர்ந்தவர்.... அனைவரையும் அமரக்கூறினார்.... நாட்டின் வரி பிரச்சனையை பற்றி வணிகஅமைச்சர் கூறிக் கொண்டிருக்க.... இன்னும் ஏற்றக்கூறி ஆலோசனையை முன் வைத்தார்.....
சிந்தையில் உழன்ற அரசி.... சிப்பாயின் அறிவிப்பில் கலைந்தார்..... அரசவையுள் ஓடி வந்த சிப்பாய்..... " அரசியே... வேந்தன்யபுரத்தின் இளவரசர்கள் ஓய்வு காலம் முடிந்து.... தளபதிகளுடன் ராஜ்ஜியத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.... " என்று கூறிவிட்டு... செல்ல.... ராஜ்ஜியத்தின் அறிவிப்பு மேடையில் தொங்கி கொண்டிருந்த மாபெரும் மணியை நான்கு சிப்பாய்கள் சேர்ந்து ஆட்டி.... மணியோசை எழுப்பி...... " வேந்தன்யபுரத்தின் இளவரசர்கள் ஓய்வு காலம் முடிந்து.... தளபதிகளுடன் ராஜ்ஜியத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.... " என்று முழக்கமிட.... ராஜ்ஜியமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் வீதியில் வந்து நிற்க...... வெகு தொலைவில் தெரிந்த சூரியன் உச்சிக்கு செல்லும் முன்.... அவனை தோற்கடிக்கும் வேகத்துடன்..... அதிவேத்துடன் சீரிப்பாய்ந்து விவேகத்துடன் வந்தது புறவிகள்..... அனைவரும் மலர்களை தூவி அவர்களை வரவேர்க்க.... அதிவேத்தில் வந்த புறவிகள் வீதியில்.... நுழைய.... அனைவரும் சிப்பாய்களால் ஒதுங்கி நிற்க வைக்கப்பட..... வரிசையாய் நுழைந்த புறவிகள்.... ஒரே நேர்கோட்டில் கோட்டைக்குள் நுழைந்து..... கனைத்தவாறே இழுத்து பிடித்து நிறுத்தியதால்.... சீரியவாறே நின்றது...... அனைவரும் ஆவலாய் நோக்க..... புலுதி மறைந்திட..... தங்களின் வசீகரிக்கும் புன்னகையுடன் கட்டுக்கோப்பான உடல்.... சுடர் விடும் கண்களென முன் வந்தனர் மகாவம்சத்தில் பிறந்த வேந்தன்யபுரத்தின் இளவரசர்கள் மட்டுமல்லது.... இப்புவியின் ஆதி கோவன்கள்....
யுவேந்திரன் (க்ரிஷ்)
சக்திவேந்திரன் (இந்திரன்)
விஷ்னுவர்தேஷ்வரன் (சத்தீஷ்)
வெகு காலம் பின் கண்ட புத்திரன்களை ஆசை தீற அணைத்து முத்திமிட்டார் அரசி தேவசேனை...
யுவன் : அன்னையே.... உள் சென்று தங்கள் பாசமழையை பொழியலாம் அல்லவா....
தேவசேனை : அமைதியாய் இரு மகனே.... பல வருடம் களித்து இன்று தான் தங்களை கண்டிருக்கிறேன்.... சற்று அனுபவிக்க விடு....
விஷ்னு : தங்களை விட்டு எங்கு அன்னையே செல்ல போகிறோம்.... தந்தையை காணாத ஏக்கத்தில்... எங்களை கட்டி அணைத்து போலல்லவா இருக்கிறது...
தேவசேனை : படவா.... எங்கே என் மற்ற புத்திரன்கள்....
சக்தி : அதோ வருகிறார்கள் பாருங்கள் உங்கள் மற்றைய புத்திரன்கள்....
அன்னையே... என்ற அழைப்புடன் இரு வேறு நிறத்தில் உடை அணிந்திருந்த இருவர்.... நிமிர்ந்த நடையுடன் வந்தனர்.... சஹாத்திய வம்சத்தில் பிறந்த எட்டு சூரர்கள்...
யாழ்வேந்தன் (அர்ஜுன்)
வேல்வேந்தன் (முகில்)
அவர்களை பின் தொடர்ந்து... எடுத்த சென்ற வாள்களை ஏந்தியவாறு வந்தனர்
குருவேந்தர் (ரித்விக்)
வீரபத்ரன் (சரண்)
நம் வேந்தன்யபுரத்தின் படை தளபதிகள் நாழ்வரும்....
அவர்களுடனே.... மூலிகைகளையும்... மருந்தினையும் சரிபார்த்தவாறே வந்தனர்.... மருத்துவதளபதிகளான....
சூர்யவேலன் (ரவி)
மதிமாரன் (அஷ்வன்த்)
வெற்றிவேலன் (ரனீஷ்)
மித்ரவேலன்(வீர்)
தேவசேனை : தங்களுக்காவது அன்னையை தேடி வந்ததா இல்லையா....
மதிமாரன் : உங்களை தேடாமல் இருக்குமா அன்னையே...
பத்ரன் : தங்களை தான் மிகவும் தேடினோம்....
யாழ்: ஆம் எங்களவள்களை கூட தேடவில்லை என்றால் பார்த்துக்கோங்களேன்....
யுவன் : ஓஹோ அப்படியா.... யாழ் வேல்.....
வேல் : ஆமாம் யுவன்...
குரு : சகோதரன்கள் இருவரும் தர்மடி வாங்குவது நிச்சயம்....
யாழ் வேல் : ஏன்.....
இளவரசர்கள் : சற்று அங்கே நோக்குங்கள் பார்க்கலாம்....
இருவரும் மெதுவாய் அங்கு திரும்ப.... கோட்டையின் உட்புறத்தில்.... பச்சை தாவணி உடுத்தி.... அழகு கருங்கூந்தல் ஆடிட.... வெள்ளிகொலுசு சினுங்க.... மை விழி சினத்தில் சிவக்க...... நின்றனர் யாளி வம்சத்தில் பிறந்த...
யாழினி (ஒவீ)
மற்றும்
யாமினி (நிரு)....
யாழ் யாமினியை பார்த்தும்... வேல் யாழினியை பார்த்தும் இளித்து வைத்தனர்....
தேவசேனை : சரி சரி உள்ளே வாருங்கள்.... என அழைத்துச் சென்றார்.... யாமினி முக்கிய வேலைக்காய் சென்று விட... இன்னும் யாழினி வேலை முறைத்தவாறே தான் நின்றாள்....
மித்ரன் : என்னவானது அன்னையே சரியாக உண்ணவில்லையோ....
தேவசேனை : அப்படி ஒன்றும் இல்லையே... நன்றாகத்தான் உண்ணுகிறேன்....
யுவன் : என்ன சூர்யா வெற்றி மித்ரா... தங்கள் மனைவிமார்களை வந்தது முதல் காணவில்லையே... என சுற்றி கண்களை சுழலவிட்டவாறே கேட்க....
வெற்றி : அடடா.... சூர்யா மித்ரா.... மூலிகையை கொடுக்க மறந்துவிட்டோமடா.... விரைவாக வாருங்கள்... என அவசரபடுத்த.... அவன் தலையை வந்து பதம் பார்த்தது ஒரு தலையணை.... இவன் திரும்பி பார்க்க....
அங்கோ மஞ்சள் புடவையில்... மங்கலகரமாய்.... கருங்கூந்தல் இடை தாண்டிட.... காதணி கண்ணத்தில் முத்தமிட.... கொலுசு சினுங்க.... அழகு விழி அவசரத்தினால் கோவத்தை பிழிய... ரோஜா இதழ் தன்னவனை வசைபாட... நெற்றி வகுட்டில் சிறிது குங்குமத்துடன் நடந்து வந்தாள் யாளி வம்சத்தில் பிறந்த ரம்யவேணி (ரக்ஷா)
ரம்யா : வரவேற்கிறேன் தமையன்களே... சற்று காத்திருங்கள்.. மீண்டும் வந்து விசாரிக்கிறேன்... தற்போது நாழ்வரை கவனித்தாக வேண்டும்... என வெற்றியை நெருங்கினாள் அவனின் தர்மபத்தினி....
வெற்றி : இந்தா மூலிகை... என நீட்ட....
ரம்யா : ஏன் இதை நாளை தாருங்களேன்.... மாரன் தமையா தாங்கள் கூடவா நினைவில் கொள்ளவில்லை.... அத்தான்களே... தங்களை என் சகோதரிகள் பார்த்துக்கொள்வார்கள்... நான் செல்கிறேன்... என பொரிந்துவிட்டு சென்றாள்.... வெற்றியோ தப்பித்தேன் என பெருமூச்சு விட்டான்....
வீரபத்ரன் : காதல் லீலைகள் தான் தாங்கவில்லை என திருமணம் செய்து வைத்தால்... மருத்துவத்தை தற்போது கூட விடமாட்டேன் என்கிறீர்களடா....
சூர்யா : என்ன செய்வது நண்பா... அது தான் எங்கள் உயிர் மூச்சு... மருத்துவத்தை விட மனமில்லை... ஆதலால் தான் மருத்துவமே பயின்று... அவள்கள் அரசவை மருத்துவர்களாகவும்... நாங்கள் மருத்துவதளபதிகளாகவும் பணியாற்றுகிறோம்.....
மாரன் : தங்கள் மூவரை அழைக்க வந்ததில்.... தங்கைகள் கூறிய மூலிகைகளை பற்றி மறந்துவிட்டேனடா....
தேவசேனை : சரி சரி... முடிந்தது முடிந்துவிட்டது.... சற்று அனைவரும் சென்று ஓயய்வெடுங்கள்... இன்று மாலை முக்கிய கூட்டணியில் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும்... என அனுப்பி வைத்தார்....
அனைவரும் ஓய்வெடுக்க செல்ல.... சூர்யா வெற்றி மித்ரன் அவரவர் மனைவிகளை காண மருத்துவ அறைக்கு செல்ல....
அங்கோ முறைத்தவாறே இருந்தனர் சகோதரிகள் மூவரும்.... அவரவர் துணையை தாங்களே சமாதானம் செய்தனர்... பின்பு சிரித்த வதனத்துடனே... சூர்யாவின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் யாளி வம்சத்தில் பிறந்த அழகிய பாவை நந்த வேணி( வீனா )
மித்ரனின் கை வளைவில் இருந்தாள் யாளி வம்சத்தில் பிறந்த அழகி சத்யவேணி (தான்யா)
வெற்றியும் ரம்யாவும் செல்லமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்....
வேலோ தன் காதலியை பின் தொடர..... யாழ் அவன் காதலியை பின் தொடர்ந்தான்....
தன்னை தன்னவன் பின் தொடர்கிறான் என தெரிந்தே தெரியாததை போல் முன்னேறி நடந்தாள் யாழினி.... கோட்டையை விட்டும் வெளியே சென்றவள்... பார்ப்பவர்களிடமெல்லாம் பேசி சென்றாள்... அவனோ எப்போது இவள் தனியாக சிக்குவாள் என்று எரிச்சலில் இருந்தான்... அவன் நினைத்ததை போலவே.... வயல்வெளி புறம் சென்றவள்.... அங்கு எவரும் இல்லாததை கண்டு... முளித்தவாறே செல்ல... இதுதான் நல்ல சமயமென அவளின் கை பிடிக்க... இழுத்த கையை உதறி தள்ளிவிட்டாள்....
வேல் : கண்ணம்மா.... இது தவறு...
யாழினி : எது தவறு....
வேல் : காதலன் கரத்தை காதலி தள்ளி விடுவதை தான் கூறுகிறேன்....
யாழினி : பெண்கள் அகராதியில் காதலி கரத்தை காதலன் பிடித்தால் அது தவறு....
வேல் : என் பெண்ணின் அகராதியில் அல்லவே... என அவள் கரம் பிடித்து இழுக்க.... தடுமாறிய யாழினி அவன் மீதே வந்து மோத.... அவள் சுதாரிக்கும் முன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க.... மெல்ல புன்னகைத்தவள்... அவனை தள்ளி விட்டு ஓடினாள்.... இவனும் சிரித்துக் கொண்டே அவள் பின் ஓட.... போக்குக்காட்டி ஓடியவளின் அலைந்தாடும் கூந்தலின் அழகில் மயங்கியவன்... அதிவேகத்தில் அவள் அருகில் சென்றவன்.... அவளை பின் இருந்து அணைக்க.... அங்கே நடந்ததொரு காதல் விளையாட்டு....
தன் காதலி பின்னே சுற்றி திரிந்த யாழ்... அவள் கண்டும்காணாமல் செல்வதை கண்டு.... ஓரிடத்தில் அங்கேயே அமர்ந்துக்கொண்டான்.... தன் பின் நிழலை காணாமல் திரும்பிய யாமினி.... யாழ் சாமியாரை போல் அமர்ந்திருந்ததை கண்டு சிரித்து விட்டு... மீண்டும் நடையை தொடர்ந்தாள்... அவள் நடையை தொடர்வவை கண்டு ஒரு நொடி பரிதாபமாய் கண்டவன் அடுத்த நொடி சினத்துடன் அமர்ந்துக்கொள்ள.... இழுத்து பிடித்திருந்த சினம் அவிழ்ந்து விட... இரண்டடி நடந்தவள்.... மீண்டும் ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்துக்கொண்டாள்.... இன்னும் அவன் வதனத்தை இஞ்சி திண்ட குரங்கை போலவே வைத்திருக்க....
யாமினி : அதான் வந்து விட்டேனே... இன்னும் என்னவாம்....
யாழ் : நான்கடி நடந்து வர உமக்கு நாற்பதி வினாடி யா....
யாமினி : நான் வந்திருக்கவே மாட்டேன்... ஏதோ பாவம் கெஞ்சுவாயே என்று வந்தேன்... இல்லையேல்.... வந்திருக்கவே மாட்டேன்....
யாழ் : நீ வராமல் தான் இருந்து விடுவாயா... இல்லை நான் தான் விட்டுவிடுவேனா... என்றான் கரங்களை அவளை சுற்றி போட்டவாறு.... தன் கரத்தினை அவன் கழுத்தில் மாலையை போல் போட்டுக் கொண்டவள்....
யாமினி : ஒரு முறை விட்டுத்தான் பாருங்களேன்... அடுத்த முறை விட கரமிருக்காது....
யாழ் : இருந்தாலும் செல்லம்மா.... நாம் இருப்பதோ ராஜகாலத்தில்.... ஆனால் இங்கோ.... பெண்மார்கள் அனைவரும் அடக்கமாய் இருப்பினும்... இப்படி மிரட்டும் வேலையெல்லாம் காதலனிடம் தான் இருக்குமோ...
யாமினி : பின்ன... தந்தையிடமா சென்று வினவ இயலும்... அது மட்டுமா... நாங்கள் சாதாரண பெண்கள் இல்லை அனைத்து ஆண்களுக்கும் அடங்க.... யாளிவம்சத்து இறுதி வீராங்கனைகள்.... தவறு செய்வது ஆணாய் இருந்தாலும் அவர்களை அடக்கிவிட்டு மறுவேலை பார்க்கும் பெண்கள்... என்றாள் தைரியமாக.....
யாழ் : உண்மை தான் உண்மை தான்....
யாழினி : இப்பொழுது புரிந்திருக்கும்....
யாழ் : சரி... இன்னும் எத்துனை மணிநேரம் வீதியிலே அமரலாம் என்ற உத்தேசம்.....
அப்போதே பெண்ணவளுக்கு தாங்கள் வீதியில் இருப்பது நினைவு வந்து.... சுற்றி பார்க்க.... அங்கோ யாரும் இல்லை.... அவன் மடியிலிருந்து பதறி அடித்து எழுந்தவள் கோட்டைக்கு ஓடிவிட்டாள்.... சிரித்துக் கொண்டே எழுந்த யாழும் அவளை பின் தொடர்ந்தான்.....
எழில் கொஞ்சூம் அழகும் தேவையான செல்வாக்கும்... மக்களுக்கு தேவையான நிம்மதியும் அன்பும் நிறைந்த சிற்றரசு தான் யதுகுளம்.... நாகவம்சம் நிலை பெற்ற சில வருடங்கள் பின் தோன்றிய இயற்கை வளம் நிறைந்த அழகான நகரம்....
தளராத நெஞ்சம் படைத்தவர் சூர்யவர்மர்.... யதுகுளத்தின் அரசர்..... யதுகுளத்தை பரம்பரை பரம்பரையாய் ஆண்டு வருகிறார்.... இவரின் மனைவி தாராதேவி.... அன்பான அரசி.... அரசர் மற்றும் அரசி இருவரும் அரசவையில் ஆர்பாட்டமாய் இருக்க.... உள் நுழைந்து விசாரித்ததில்.... ஊருக்குள் கொள்ளை கும்பல் வந்திருப்பதாக மக்கள் புகாரிட... உடனே சிப்பாய்களை அனுப்பினார் அரசர்... இவையை கேட்ட ஒரு குட்டி முயல்... எங்கோ அதி வேகமாய் சென்றது....
யதுகுளத்தின் எல்லையில் இருக்கும் சிறுகிராமத்தில்... கொள்ளை கும்பல் அராஜகம் செய்துக் கொண்டிருக்க.... கூட்டமாய் நின்ற மக்கள் கூட்டத்திடமிருந்து பணம் பரித்துக் கொண்டிருந்தான் ஒருவன்... தொலைவில் புகையின் நடுவில் தெரிந்த கருநீல நிற விழியை கண்டவன்.... எதை செய்கிறோம் எனவே தெரியாமல்... தன் வாளை வைத்து... தன் ஆட்களையே தாக்க தொடங்கினான்.... அக்கூட்டத்தின் தலைவன் முளிக்க.... அதிரடியாய் அவன் அருகில் வந்த ஏதோ ஒன்று.... அவன் கையிலிருந்து பணமூட்டையை பரித்து செல்ல..... தடுமாறியவன் கீழே விழ.... மக்கள் பதறி பார்க்க..... அக்கூட்டத்தின் தலைவன்... எழுந்ததும் சுதாரிக்கும் முன்னே... அவன் கண்களின் ஒரு அடி முன் காற்றில் மிதந்தது ஒரு குறுவாள்.... அதை கண்டு அவன் உறைந்து நிற்க.... தொலைவில் தெரிந்த புகை மெல்ல மெல்ல மறைய.... அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சீரிவந்தது மூன்று சர்ப்பங்கள்.....
சர்ப்பங்களை கண்டு அக்கூட்டத்தின் தலைவன் அச்சத்தில் நடு நடுங்கி போக..... மனித உருவுக்கு மாறியது சர்ப்பங்கள்.... கருநீல விழி.... நீல விழி.... வெள்ளை விழி.... அலைபாயும் கூந்தல்..... ஒயிலான நடை.... அழகோவியங்கள்... காதணிகள் கண்ணத்தில் அனுமதியில்லாமல் முத்தமிட.... பூவிதழ் இருகி.... மலர்பாதம் புவி அதிராது மெல்ல வர... கரங்களில்... கருநீல.. நீல... மற்றும் வெள்ளை பந்துகள் சுழன்றிட.... தங்க பதுமையென நடந்து வந்தனர் நாகதாரிணி வம்சத்தில் பிறந்த யதுகுளத்தின் இளவரசிகள் மட்டுமல்லாது இப்புவியின் நாகனிகள்
தாரா ஸ்ரீ (அனு)
ஷிவதாரிணி (திவ்யா)
ஆதன்யதேவி (ப்ரியா)
அங்கு வந்த சிப்பாய்கள் இளவரசிகளை பார்த்து நின்று விட... ஸ்ரீ அவர்களை கைது செய்யுமாறு கண்ணசைத்தாள்.... அவர்களும் அச்சத்தில் உறைந்து நடப்பதை அறியாது சிறைக்கு பயணத்தை தொடங்கினர்.....
மக்கள் அனைவரும் இளவரசிகளே... நாகனிகளே... என கரகோஷம் போட... அவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு... அரண்மனைக்கு விரைந்தனர்....
அரசவையில் அமர்ந்திருந்த அரசரும் அரசியும்... கொலுசு சினுங்கும் ஓசை கேட்டு நிமிர்ந்து வாயிலை நோக்க.... தன் கூந்தலும் அணிகலன்களும் ஆட.... புவிக்கு வலிக்காதவாறே ஒயிலாய் ஓடி வந்தாள் யாழிவம்சத்தில் பிறந்த அரசவையின் விஞ்ஞானி மட்டுமல்லாது... நாட்டியத்தின் ஆசிரியை.... இந்துமதி....(பவி)
அரசி : என்னவானது இந்து... ஏனிந்த அவசரம்....
இந்து : அத்தையாரே.... தங்களின் மகள்கள்.... கொள்ளை கூட்டத்தை பிடிக்க.... கிராமத்திற்கு சென்றுள்ளனர்....
அரசர் : அதிலென்னமா இருக்கிறது....
இந்து : தனியாக சென்றுள்ளனர் மாமா.... அது மட்டுமல்லாமல் அரைமணி நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை....
அரிசி : அப்படியா...
இந்து : ஆம்....
" அதில் கவலை கொள்ள அவசியம் இல்லை அம்மா அதை பற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் " என்ற குரலை கேட்டு திரும்ப... அங்கோ... தன் அமைதியான வதனத்தில் புன்னகையை தவழவிட்டவாறே நின்றாள் யாளி வம்சத்தில் பிறந்த அவ்வழகிய பேதை ஆருத்ரா (வர்ஷி) அவளுடனே மலர்களை தொடுத்தவாறே நின்றாள் யாளி வம்சத்தில் பிறந்த ஒரு அழகி... அருந்ததி (மது)
காதல் தொடரும்.....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro