காதல் -40
சரணோ பேரதிர்ச்சியில் நிற்க.... மற்றவர்களோ... ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கி இருந்தனர்....
இலக்கியா : ராஜ் சாரோட மனைவி... சகுந்தலா... என் தோழி.... அவங்க இரெண்டு பேரும் காதல் திருமணம் தான் பன்னிக்கிட்டாங்க.... அதனால.. அவங்க இரெண்டு பேரோட குடும்பமுமே அவங்கள ஊர விட்டு தள்ளி வைச்சிட்டாங்க.... அதனால தான் ஊட்டில குடி புகுந்தாங்க... அப்போ தான்... முகில் அர்ஜுன் பொறந்து 20 நாள் போய்ர்ந்துச்சு.... எனக்கும் சரண் பொறந்து.... இரெண்டு நாள் கடந்திருந்துச்சு... அப்போ தான்... சகுந்தலா குழந்தை பொறந்து... இறந்த விஷயம் எல்லாருக்கும் தெரிய வந்துச்சு... இத கேட்டு ஒடஞ்சி போன சகுந்தலா.... தற்கொலை பன்னிக்க முயற்சி பன்னா... எப்டியோ காப்பாத்தீட்டாங்க... உடனே நாங்க எல்லாரும் அவள பாக்க போனோம்... ரொம்ப அழுது உடம்பு சரியில்லாம கெடந்தா... குழந்தைங்க எல்லாரையும் பாத்து... கொஞ்சொ தேருனா... அப்போ... சரண்... அவ கைய பிடிச்சு ஆட்டி ஆட்டி விளையாடிக்கிட்டு இருந்தான்.... அவ என்ன நெனச்சாளோ... " நா உன் புள்ளைய கொஞ்ச நாள் வளக்கட்டா " ன்னு கேட்டா...
இரமனன் : என்ன பன்றதுன்னு தெரியாம இருந்தப்ப.... சரின்னு நாங்களும்... ஒத்துக்குட்டோம்.... ஆனா... எதிர்பாராத ஒன்னு நடந்துச்சு.... சகுந்தலா... ஒரு மாசத்துல.... உடல் நில சரியில்லாம இறந்துட்டாங்க.... ராஜ் சார பாக்கப்போனோம்... அங்க அவரு இல்ல..... குழந்தையும் இல்ல.... அன்னைல இருந்து தேடுனோம்... தேடுனோம்... தேடிட்டே தான் இருக்கோம்... ஆனா ராஜ் ரொம்ப பாதுகாப்பா எங்கையோ இருந்தாரு.... மூன்ற வாரத்துக்கு முன்ன தான்... அவரு எறந்துட்டாருன்னு தெரிஞ்சிது... சரண தேடி அவங்க வீட்டுக்கு வந்தோம்... ஆனா அங்க யாருமே இல்ல.... ஊரு புல்லா தேடி நேத்து வர எங்களுக்கு கிடைக்கல... இன்னைக்கு அவனாவே நேர்ல வந்துர்க்கான்.... என கூற..... அதையே மொத்த குடும்பமும் அமோதித்தது... இப்போது அனைவரும்... சரணையே நோக்க..... அவனோ.... அமைதியாய்... தரையையே வெரித்திருந்தான்.... அவன் அருகில் சென்ற வர்ஷி.... அவன் கையை தன் கைகளுடன் கோர்த்து... அதில் தட்டி கொடுக்க.... அதில் தெளிவடைந்தவன்... நிலையடைந்து.... தேங்கிய கண்ணீருடன் அவளை பார்க்க.... அங்க என கையை காட்டினாள்.... அங்கு திரும்பியவனோ... கண்ணீருடன் நின்ற... இலக்கியா இரமனனை மனம் நிறைய அம்மா அப்பா என அழைத்தவாறே ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான்.... அனைவரின் கண்ணிலும் ஆனந்த கண்ணீர்....
அனு திவ்யா ப்ரியா : எங்களுக்கு அண்ணன் கெடச்சிட்டான்... யாஹு என கத்தினர்...
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் ஏதோ ஒன்று தான்.... வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்கிறது.....
இலக்கியா : சாரி டா கண்ணா.... அம்மாவால அந்த ஸிச்சுவேஷன் ல அவள்ட்ட விட தான் முடிஞ்சிது.... ஆனா அடுத்த மாசமே நீ எங்க எல்லாரையும் விட்டு ரொம்ப தூரம் போவன்னு தெரிஞ்சிர்ந்தா... கூடவே இருந்துர்ப்பேன்....
சரண் : சாரி லாம் வேணாம் மா.... நா உங்க மடியில படுத்துக்கவா... என சிறுபிள்ளை போல் கேட்க.... அவனை மகிழ்வுடன் தன் மடியில் தாங்கினார் இலக்கியா.... குடும்பமே சரணையும்... அர்ஜுனையும் தூக்கி வைத்து பாசம் காட்டினர்....
இரவு மெஹந்தி பங்ஷன் இருப்பதால்... அனைவரையும் உறங்க அனுப்பினர்... சரண் இரமனன் இலக்கியா அறையில்... இலக்கியா மடியில் தான் படுத்திருந்தான்.... அர்ஜுன் காவியாவின் மடியில் படுத்திருந்தான்....
நேரம் கடக்க.... இருவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு நகர்ந்தனர்...
கந்தர்வமலையின் அடிவாரத்தில்.... யோகனாவின் முன் நடுங்கிய படி இருந்தனர்...
யோகனா : உண்மையை கூறுங்கள்... எம்மிடமிருந்து மறைப்பது என்ன....
மதுசூதனா : அப்படி எல்லாம் ஒன்றுமில்லை யோகனா அவர்களே...
யோகனா : உண்மையை கூறுகிறீர்களா இல்லையா....
மேகலாயா : சினம் வேண்டாம்... அவர்களை நாம் அளிக்க வேண்டுமெனில் ஆத்திரத்தில் முடிவெடுக்க கூடாது...
யோகனா : வீண் விளக்கம்... எம் வினாவிற்கு பதில் அளி.... மாயமோகினி யாரை காதலித்தாள்....
மதுசூதனா : நீங்கள் அறிந்தவை தானே....
யோகனா : அதை நான் அறிவேன்... ஆனால் மாயா மற்றும் மோகினியாக அவள் பிரிக்கப்பட்டதும்.... அவள் நினைவில் காதலித்ததாய் இருந்தது எவர்....என்றாள் சுடர் விடும் பார்வையுடன்...
நெருங்கிவிட்டாளே... என்ற அச்சத்தில் இருவரும் எச்சிலை விழுங்க.... அதே நேரம்.... அங்கு விகாஷ் ஆகாஷ் நகாஷ்... தாங்கள் அனுப்பிய ஆட்கள் ஓடிவிட்டதை அறிந்து... அடுத்த என்ன செய்வதென புரியாமல் நடந்து வர.... அவர்களை கண்ட மேகலாயா மதுசூதனா... பிரபு என கூக்குரலிட்டவாறே ... ஆகாஷ் மற்றும் நகாஷ்ஷின் பின் ஒலிந்துக் கொண்டனர்....
விகாஷ் : என்னவானது... ஏன் இப்படி கூக்குரலிடுகிறீர்கள்....
மதுசூதனா : அது... அது.. அத்தான் அவர்களே... என இழுக்க....
மேகலாயா : யோகனா அவர்கள் உண்மையை நெருங்கிவிட்டார்கள்... என முடித்தாள்....
மூவரும் அதிர்ச்சியோடே யோகனாவை பார்க்க.... அவளும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்...
யோகனா : கூறுங்கள் பிரபு... என்னிடமிருந்து... எதை மறைக்கிறீர்கள்... மாயா மற்றும் மோகினி காதலித்ததாய் நம்பிக் கொண்டிருப்பது எவரை???
விகாஷ் : சினம் கொள்ளாதே யோகனா... பொருமையாய் யான் கூறுவதை கேள்..... என அன்று நடந்ததை கூறி முடிக்க....
யோகனா : எதுவாயினும்... தாங்கள் செய்தது தவறே.... இப்டி செய்ய... உங்கள் மனம் எப்படி முன் வந்தது....
விகாஷ் : வேறு வழி இல்லை யோகனா... மன்னித்து விடு...
யோகனா : இல்லை பிரபு... நீங்கள் செய்தது தவறு தான்...
விகாஷ் : ஆம் தவறு தான்... அதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன்....
யோகனா : ம்ம்ம்ம் இப்போது போர் நெருங்குகிறதால்... அமைதி காக்கிறேன்.... இனி மேலும் இதை போல் எதுவும் செய்துவிடாதீர்கள்... யஜ்னுவர்தம் கிடைத்திட வழி தேடுங்கள்... என கூறிவிட்டு.... விருட்டென சென்றுவிட்டாள்....
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வளவன் பருந்து...
வளவன் பருந்து : என்ன தான் நடக்கிறது... காரசாரமான உரையாடல்... ஆனால் என்ன தான் உரையாடுகின்றனர் என புலப்படவில்லையே.... இந்த உக்ரதேவன் ( விகாஷ் ) யோகனாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்... எம் கண்கள் தான் பாலடைந்து விட்டதோ... இல்லையே... அனைத்தும் நன்றாக தான் தெரிகிறது... பின்பு என்னவாக இருக்கும்... என பலத்த யோசனையில்... இருக்க....
அவன் யோசனையை பொருட்படுத்தாது.... நேரம் பம்பரமாய் சுழன்று... காலை புழர்ந்தது.... நாயகர்கள் அனைவரும் அதிகாலையிலே கண்ணுறங்கியதால்... அவர்களை தொந்தரவு செய்யாமல்.... வேலையில் இறங்கினர் வீட்டுப் பெறியவர்கள்.... தடபுடலாய் தொடங்கியது வேலைகள்... இன்று இரவு மெஹந்தி... நாளை இரவு ரிஸப்ஷன்.... அடுத்த இரண்டாவது நாள் திருமணம்... அதற்கடுத்த நாள் ஊர் திருவிழா... என சரியான காலமும் அமைந்திருந்தது.... காலை பதினோறு மணிப்போல்... ஒரு ஒருவராய் எழுந்து வந்தனர்.... நாயகன்கள் தன்னவள்களை சீண்டிக் கொண்டும்.... வேலையில் கண்ணாகவும் இருந்தனர்.... இரவு குரு தந்திராவை காண செல்லலாம் என முடிவெடுத்திருந்தனர்.... நேரமும் ஓட... இரவும் வந்தது... பெரியவர்கள் நாயகன்கள் அனைவரையும் வெளியே தொரத்திவிட்டனர்... ரித்விக் மதுவை பார்க்க முடியாததால் புலம்பிக் கொண்டு இருக்க.... மற்ற நாயகன்களோ... தீவிரமாய் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்....
தீரா : அந்த விகாஷ் ஆகாஷ் நகாஷ் புடிக்க இல்லப்பா.... இப்போ வீட்டுக்குள்ள எப்டி போலாம் னு ப்லன் பன்னிகிட்டு இருக்கானுங்க.... சரி இவனுங்க ப்லன் போடட்டும்... நாம உள்ள போய்... நாயகிகள் என்ன பன்றாங்கன்னு பத்துட்டு வருவோம்....
அங்கோ... அன்றைய நாளின் தேவதையாக பச்சை நிற லெஹெங்காவில்... மது வெட்கத்துடன் அமர்ந்திருக்க.... அவள் அருகில் தான்யாவும் ரக்ஷாவும் அமர்ந்து அவள் கையில் மெஹந்தி இட்டு கொண்டிருக்க..... மாடி படியிலிருந்து ஓடி வந்து... குதித்தாள் நம் கயல் குட்டி.... கருநீல நிற ப்ராக்கில்... தேவதையாய் மிளிர்ந்தாள்.... அவளை அடுத்து.... நம் அனைத்து நாயகிகளும்.... விதவிதமான ரோஜா பூக்களாய் இறங்கி வர.... அதை இரசிக்க இரு கண்கள் போதாது.... ஜன்னல்களில் தொங்கி கொண்டே தவம் இருந்தனர் நம் நாயகன்கள்....
நாயகிகள் இன்றைக்கான ஆடல் பாடல் நிகழ்ச்சியை தொடங்க போக.... அவர்களின் தலையில் கொட்டு வைத்த அம்மாமார்கள்.... அவர்ளுக்கும் மெஹந்தியிட அமர்த்திவிட்டனர்.... எப்படியோ ஏதேதோ காரணம் கூறி...நாயகன்கள் அனைவரும் உள் நுழைந்து விட... ஒருவரை ஒருவர் கண்களாளே அளந்து பாராட்டு நடத்திக் கொண்டிருந்தனர்.... மெல்ல மெல்ல நேரம் நகர.... நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்து.... வந்தவர்கள் அனைவரும் கிளம்பிட.... அனைவரும் சாதாரண உடைக்கு மாறியதும்.... ஒன்றாய் காட்டிற்குள் நுழைந்தனர்.... அவர்கள் முன் நடந்து சென்றான் சேவன்.... சேவன் தயங்கி தயங்கியே வர... அவனிடம் வழியை கேட்காமல்.... அர்ஜுனே வழி கூறி அனைவரையும் அழைத்து சென்றான்....
இறுதியில்.... மலையின் அடிவாரத்தில்.... ஒரு குகையை கண்டவர்கள்.... அதனுள் நுழைய.... அங்கோ.... ஒரே இருட்டு.... அடுத்த நொடி.... அங்கு ஒளி பரவ... அனைவருக்கும் ஒளி விலக்காய் மாறி போனான் நம் க்ரிஷ்.... முதலில்.... சரண் வர்ஷி இருவரும் அவனை பார்த்து அதிர்ச்சியடைய...... அவர்களுக்கு கூறி புரியவைத்தனர்.... அதன் பின்... அனைவரும் முன்னேறி நடக்க.... அவர்களின் செவியை அடைந்தது குலுங்கும் இரும்பு சங்கிலியின் ஓசை.... அனைவரும் அமைதியாய் உள்ளே பார்த்திருக்க..... அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல்.... கூனிய உடலுடன்.... நடந்து வந்தார் குரு தந்திரா.... அவரை கண்டு அனைவரும் அப்படியே நிற்க.... அவரருகில் ஓடிய சேவன்....
சேவன் : குருவே... என இழுக்க....
குரு தந்திரா : அனைத்தையும் நான் அறிவேன்... இவர்கள் வருவார்கள் என்பதை முன்பே எதிர்பார்த்தேன்..... அமைதி சேவன்.... என தழுதழுக்கும் குரலில் கூறிவிட்டு... அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு..... க்ரிஷ் இந்திரன் சத்தீஷை பார்த்து....
குரு தந்திரா : வாருங்கள் கோவன்களே.... எப்படி இருக்கிரீர்கள்.....
இந்திரன் : உங்களுக்கு எங்கள தெரியுமா....
குரு தந்திரா : உங்களை அறியாத உயிர் இங்கு ஏதும் இல்லை.... உண்மைகளை அறிய ஆவல் வந்துவிட்டதோ....
ரனீஷ் : அது எங்க போச்சு.... வர்ரதுக்கு....
குருதந்திரா : முதலில்.... இங்கிருந்து செல்லலாம்... அதன் பின்.... அனைத்தையும் தானாகவே அறிவீர்கள்.... என நடந்து வர.... அவரை தடுத்தது அந்த இரும்பு சங்கிலி..... நம் கோவன்கள் ஒருவரை ஒருவர் பார்த்விட்டு... அச்சங்கிலியை காண அதுவோ... அடுத்த நொடி.... புட்டுக் கொண்டது.... அதை கண்டு புன்னகைத்த குரு தந்திரா.... நடந்து வந்து.... ஏதோ மந்திரம் ஓதி ஊத.... அவர்களை ஏதோ ஒரு புகை சூழ.... கண்களை திறக்கும் நொடி.... பச்சை பசேல் என இருந்த அந்த மலையில் இருந்தனர் அனைவரும்.... அவர்களின் பார்வை ஷேஷ்வமலையின் அழகிலே நிலைத்து இருந்தது... இப்படி இருந்த அழகிய பூமியை தான் நாம் மாற்றிவிட்டோம்... என கவலையும் பிறந்தது.... அவர்களின் சிந்தனையை கலைத்தது ஒரு குட்டி பெண்ணின் சத்தத்தில்... அது வேறாருமல்ல.... நம் பரிசியே தான்....
பரிசி : யார் நீங்கள் அனைவரும்....
குரு தந்திரா : நாங்கள் தர்மனை சந்திக்க வந்துளோம்... என கூற....
பரிசி : எங்கள் ஐயாவை நாமமிட்டு கூறுகிறீரே... அப்படியெனில்... அவருக்கு தெரிந்தவராய் தான் இருக்கக்கூடும்.... இருங்கள் நான் அழைத்து வருகிறேன்... சற்று அனைவரும் அமருங்கள்... என மண் மேடையில் அமரவைத்துதிட்டு குடிலுக்குள் நுழைந்தாள்....
அவசர அவசரமாக வெளியே வந்த தர்மன்ஐயா அங்கு அனைவரையும் எதிர்பாக்காது.... குரு தந்திராவையும் கண்டு... உடனே அவர்கள் அருகில் விரைந்தார்....
அப்போது.... சில பல குரல்கள்... நம் க்ரிஷ் இந்திரன் சத்தீஷின் செவியை அடைய.... இருவரும் திரும்பி திரும்பி பார்க்க.... யாரும் கண்களுக்கு அகப்படவில்லை... ஆனால்... மீண்டும் மீண்டும்.... " வந்திருப்பது யாரென தெரிகிறதா... " என்றும்.... " நம் கோவன்கள் தானே " என்றும்.... " மீண்டு விட்டனரா...மூவரும் " என்றும்... " அவர்கள் யார்... முக்கோக்களான கோவன்கள் ஆயிற்றே... அவர்களிடம் மரணமே தோற்கத்தான் செய்யும் " என்றும் இன்னும் பல... அவர்களை இம்சித்தது....
தர்மன்ஐயா : குருவே... தாங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீர்களா... ஏன் இங்கு வரவில்லை.... தாங்கள்... என வினவ.....
குரு தந்திரா : சூழ்நிலை தர்மா.... இப்போது தான் வந்துவிட்டேனே.... என்னுடன் வந்திருப்பது யாரென கண்டாயா....
தர்மன்ஐயா : எப்படி காணாமல் இருப்பேன்.... நம் முக்கோக்களான கோவன்களை....
இதை கேட்ட பரிசியும் அங்கு வந்த ஊர் மக்களும்.... கோவன்களா என அதிர்ச்சியடைய..... அனைவருக்கும் மூவரையும் பெருமையுடன் அறிமுகப்படுத்த....
மற்ற நாயகர்கள் அவர்களை ஆ வென பார்த்துக் கொண்டிருக்க...... வாழ்விலே கோவன்களை முதன் முறை கண்ட ஊர் மக்கள் அனைவரும் அவர்களை தலை மேல் வைத்து கொண்டாடினர்.... உண்மையிலே அவர்களை தலை மேல் தூக்கி கொண்டு கொண்டாடியதாலே.... மற்றைய நாயகர்களுக்கு அதிர்ச்சி..... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவரும் அவர்கள் அனைவரின் கரங்களிளும்... அந்தரத்தில் அங்கும் இங்கும் உருண்டுக் கொண்டிருந்தனர்..... நிலையில்லாமல்... மூவருக்கும் தலை சுற்றலே வந்து விட.... மூன்று பெரிய கூட்டம் ஆலுக்கு ஒருவரை தூக்கி கொண்டு... எங்கோ விரைந்தனர்.....
அவர்களை பின் தொடர்ந்த மற்ற நாயகர்களுக்கும் பெரும் வரவேற்பு..... இறுதியில் தூக்கி சென்ற மூவரையும்.... நடுநயமாக அமைக்கப்பட்ட மேடை போன்ற வடிவத்தில் இருந்த ஏதோ ஒன்றின் அருகில் நெருங்கினர்.... அம்மேடை மேல் ஏறிய ஒருவர்..... போர்த்தப்பட்டிருந்த ஒரு துணியை விலக்க.... அங்கே மூன்று பெரிய சிம்மாசனங்கள் அமைக்கப்பட்டிருக்க..... மூவரையும் டொம்மென அதில் அமரவைத்துவிட்டு... அனைவரும் ஒதுங்கி கொள்ள.... மற்ற சிலர்.... ஏனைய நாயகர்களை அந்த சிம்மாசனத்தின் இரு புறத்திலும்... அமைக்கப்பட்டிருந்த பெரிய கதிரைகளிள்.... ஒரு புறம்... நாயகிகளையும் மறு புறம் நாயகன்களையும் அமர வைத்திட.... தனியே ப ப என முளித்துக் கொண்டு இருந்த அனு திவ்யா ப்ரியா கோவன்கள் அருகிலே இருந்த பெரிய சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட..... ஊர் மக்கள்..... அனைவரும் அவர்கள் முன் நின்று.... கோலகாலமாக கொண்டாடி...... " வருக வருக கோவன்களே.... வருக.. வருக.... உலகை காகக் பிறந்த நாகனிகளே வருக வருக.... எங்கைளை காக்க பிறந்த யாளி வம்சம் மற்றும் சஹாத்திய வம்ச சூரர்களே வருக வருக... என வரவேற்கிறோம் " என முடித்தனர்....
இன்னும் நம் நாயகர்கள் முளித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தனர்.... அனைவரும் தர்மன்ஐயாவை இதெல்லாம் தேவையா.... நாங்களும் உங்களுள் சேர்ந்தவர்கள் தானே.... என கூற......
தர்மன்ஐயா : எங்களை சேர்ந்தவர்கள் தான்... ஆனால் நீங்கள்... உலகை காக்க பிறந்தவர்கள்... இம்மரியாதை எங்கள் திருப்திக்காக தான்....
க்ரிஷ் : நாங்களும் மனுஷங்க தானே ஐயா
குரு தந்திரா : ஆம் ஆனால் சாதாரண மானிடர்கள் அல்லவே.... இம்மரியாதை.... ஊர் மக்கள் உங்கள் அனைவரையும் தங்களின் சொந்த பிள்ளைகளாய் நினைப்பதற்கு சான்று.... உங்களை நம்பியவர்களின் மனம் நோகக்கூடாதல்லவா.... ஏற்றுக்கொள்ளுங்கள்.... சரியென தயங்கிவாறே அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.... சிறிது நேரம் களித்து.... தங்களுக்கான கதிரைகளிள் அமர்ந்த தர்மன்ஐயா மற்றும் குரு தந்திரா.... வளரி பாட்டியை வரவைத்தனர்.... அதன் பின்....
அஷ்வன்த் : இன்னும் எவ்ளோ நேரம் ஐயா... அமைதியா இருப்பீங்க.... எங்களுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு... எல்லாமே தெரியனும்.... தயவ செஞ்சு சொல்லுங்க....
குரு தந்திரா. : ம்ம்ம் கூறுகிறேன்.... தாங்கள் அனைவரும் உங்கள் இரண்டாம் பிறவியில் பிறந்தது இங்கு தான்....
அனைவரும் : என்னது எல்லாருமேவா...
குரு தந்திரா : ஆமாம்..... உனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருப்பதால் தானே நீயே கூறாமல் அனைவரையும் இங்கு அழைத்து வந்தாய்... என அர்ஜுனை பார்த்து கேட்க.... அவனும் ஆமென தலை அசைத்தான்.....
தர்மன்ஐயா : சரி கேளுங்கள்..... ஆராயிரம் வருடங்கள் முன்பு.....
காதல் தொடரும்.....
Hiii idhayangale.... ungaluke ithu adanguma... vitta na kola case la ulla poiduven polarukey.... avlo twist a iruku... enaku apdi onnume theriya maatudhey.... sari sari .... namma poha porathu.... 6 maasam 6 varsham illa...6000 Varsham.... athanaala flashback pakurenu mela ppaakatheenga... kluthu sulukikitta na poruppilla.... ok guys... nxt ud la ellarum six thousand yrs pinndi pohlam...
Note : tym machine neenga thaa uruvaakikanum solliten....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro