காதல்-39
நேற்று கூட... வெள்ளை உடையில் இருந்த அனைவருரையும் கவனிக்காமல்... நிருவை மட்டும் கண்ட முகில்.... அதே ஒவீயை பார்த்துவிட்டு... அவ்வெள்ளை தேவதையின் அழகில் மூழ்கிக்கொண்டே.... கேள்விக் கேட்க... அதில் பல்பு வாங்கியவன் இன்னும் பல பல்புகள் எரியும் முன் ஓடி விடலாம் என வெளியே ஓடிவிட்டான்.... அவன் சென்ற இரண்டே நிமிடத்தில்... முகிலை போலே உள்ளே நுழைந்த அர்ஜுன்... பெண்கள் அனைவரையும் போட்டோ எடுத்து விட்டு.... அங்கிருந்து நகர்ந்தான்.....
நிரு : அடப்பாவி... அப்போ அது நீயா டா...
அர்ஜுன் : ஹிஹி ஆமா....
பவி : அப்ரம் வேற என்ன என்னலாம் பன்னீங்க... சீமராஜா... அதையும் சொல்லுங்க...
அதன் பின்.... விகாஷ் ஆகாஷ் நகாஷ்ஷை பற்றி தேடிக் கண்டுப்பிடித்தான்.... குரு தந்திரா உயிருடன் தான் இருக்கிறாரென அவர்களை பின் தொடர்ந்து கண்டுப்பிடித்தான்.... மேகலாயா மதுசூதனா விடுதலை பெற்ற அன்று.... மாயா மோகினி மேகலாயா மற்றும் மதுசூதனா காட்டில் உறையாடும் போது அதை எதிர்பாராதவிதமாக பார்த்த... ரெட்டிஐ மற்றும் பெண் உருவத்தை.. ( மது நிரு) மயக்கமடைய வைத்து வீட்டில் கொண்டு சேர்த்தான்....
முகில் : அவன் பன்னது இருக்கட்டும்... நீங்க இரெண்டு பேரும் என்ன என்ன டி பன்னீர்க்கீங்க....
மது : வந்துட்டாருயா... தம்பிக்கு சப்போர்ட்டா....
ரித்விக் : கேக்கும் போதே சொல்லனும்... வாயடிக்கக் கூடாது....
ரெட்டி ஐ ஆகவும்.... பெண் உருவமாகவும்.... முதல் முதலில் டாக்டர் கென்னை தான் போட்டுத் தள்ளினர்.... அதன் பின் இருவரும் மானிக்கத்தை... அர்ஜுனின் வைரஸை கொண்டு அழித்தனர்... அதன் பின்.... பரமேஷ்வரனையும் லலித்தாவையும் பின் தொடர்ந்து...." உன் எமன்களிள் ஒரு எமன் " என அவ்வப்போது போன் போட்டு கடுப்பேத்துவர்....
மது : நா உங்க எல்லார்ட்டையும் சில விஷயத்தை சொல்லனும்....
வீனா : நீ என்ன டி தனியா சொல்லப்போற...
மது : சொல்றேன்... சொல்றேன்.... அதுவா.... இங்க நடக்கப்போகுதுல... யுத்ரபோர்... அப்ரம் முன்னாடியே நடந்து முடிஞ்சது....
இந்திரன் : தங்கச்சி...மா... இழுக்காம நேரா விஷயத்துக்கு வா....
மது :..... எனக்கு எல்லாமே முன்னாடியே தெரியும்....
தான்யா : எல்லாமே ன்னா?? ...
மது : ம்ம்ம்ம் எல்லாமேன்னா எல்லாமே தான்...
சத்தீஷ் : என்ன மா சொல்ல வர....
மது : போன ஜென்மம் எல்லாமே எனக்கு தெரியும்... நியாபகம் வந்துருச்சுன்னு சொல்றேன்..
அனைவரும் : எப்போ டி...
மது : அது எனக்கு எப்பவோ வந்துருச்சு... அப்ரம் தான் நான் தர்மன்ஐயா வ பாத்தேன்.... அவரு தா எனக்கு புரிய வச்சாரு...
தான் சில வருடங்கள் முன்.... அனைத்து நினைவுகளையும் பெற்றதையும்... அதிலிருந்து தான்.... தர்மன் ஐயா.... ஒரு உண்மையை கூறினார்... இரு வாரிசுகள் பிறந்ததாகவும்... அதில் ஒரு வாரிசு தீயவர்களின் சதியால்... சிறு வயதிலே மரணமடைந்ததாய் நம்ப படுகிறதென்று கூறினார்... மோகினி சற்று கலக்கமுற வேண்டி... நான் அவ்வாரிசாக நடிக்க தொடங்கினேன்... என் தோற்றத்தையே மறைத்ததால்... மோகினியாலும் யாரென கண்டறிய முடியவில்லை.... அன்று கூட.... நாயகிகளை தாக்க வந்த குள்ளமானிடர்களை... யோக்யா தாக்கும் முன்... நான் தான் அழித்தேன்... நிரு உங்களுடன் இருப்பதாலும்... நான் என் வீட்டிலே இருந்ததாலும்... என் இரகசியம்... இரகசியமாகவே இருந்தது... ஆனால் அவ்வாரிசுகள்... முகிலும் அர்ஜுனும் தான் என நான் அறியவில்லை..... என கூறி முடித்தாள்....
ரனீஷ் : இப்போதான் நிம்மதியா இருக்கு.... எவ்ளோ அதிர்ச்சி.. எப்பப்பா..... முடியல....
அர்ஜுன் : இன்னும் ஒன்னு இருக்கு டா....
அனைவரும் : என்னது இன்னுமா....😲😲😲
மது : டேய்... நீ உயிரோட வன்ட்டங்குர அதிர்ச்சி அன்ட் சந்தோஷத்துல இருந்தே இன்னும் நாங்க வெளிய வரல... இன்னூன்னா.....
அர்ஜுன் : ஒன்னே ஒன்னு தான் டி.... ப்லீஸ்... என கூறிவிட்டு.... சற்று காட்டு பாதையின் நுழைவாயிலை பார்த்து..... " வாங்க " என குரல் கொடுத்தான்....
அனைவரும் அங்கு நோக்க.... அங்கோ ஆறடி ஆண்மகன்... புன்னகையுன்... தன்னுடன் ஒரு பெண்ணை அழைத்து வந்தான்.... இருவரும் கை கோர்த்து நடந்து வர... நாயகிகள் குழம்ப.... நாயகன்களோ..... அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும்.... " சரண் " என கத்தினர்..... சரண் என பெயர் கொண்ட அவனோ.... " ஹாய் டா மச்சான்ஸ் " என்றவாரே வந்தான்....
ஆம் அவன் சரண்.... நம் நாயகன்களின் சிறு வயது நண்பன்.... அர்ஜுனுக்கு அவன் பிறந்த ஆறு மாதத்திலிருந்தே நண்பன்... அர்ஜுனை வளர்த்த ராஜின் மகன் தான் சரண்....
நாயகன்கள் அனைவரும் அவனை ஆனந்த அதிர்ச்சியில் கட்டிக் கொண்டனர்.... மதுவோ... அவன் யாரென புரிந்து.... " ஹாய் டா அண்ணா " என்று அவனருகில் ஓடினாள்....
புரியாது நின்ற நாயகிகளை பார்த்து... அர்ஜுனே விளக்கமளித்தான்....
அர்ஜுன் : இவன் சரண்.... ராஜப்பா வோட சன்.... அதுமட்டுமில்ல.... எங்களோட பெஸ்ட் ப்ரெண்ட்... நானும் அவனும் ஒன்னா தான் வளந்தோம்... சொல்லப்போனா... பாட்னர் இன் மை க்ரைம்... என கண்ணடித்தான்...
க்ரிஷ் : எப்டி டா... இருக்க....
சரண் : ஐம் ஃபைன் டா... மச்சான்....
முகில் : எங்கடா போன... நடுவுல... எங்கையோ காணாப்போய்ட்ட... ஒரு கான்ட்டெக்ட்டும் இல்ல...
சரண் : எல்லாம் உன் சகோதரன் செஞ்ச வேலை டா.... காலெஜ் முடிக்கிற சமயத்துல... இது உனக்கு சேஃபான இடம் இல்ல... ன்னு சொல்லி... சிங்கப்பூர்... க்கு அனுப்ச்சிவச்சிட்டான்... நேத்து தான் வந்தோம்....
அஷ்வன்த் : அடிங் டா இவனுங்கள... என கத்த.... நாயகன்கள் 9 பேரும் சேர்ந்து அர்ஜுன் சரண் இருவரையும் பொரட்டி எடுத்தனர்... நாயகிகளை அதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க..... சரண் அழைத்து வந்த பெண் மட்டும்... அமைதியாகவே நின்றாள்....
அர்ஜுன் : ஹாஹா டேய் டேய் விடுங்க டா... முடியல டா...
ரவி : ஹு..ஹு... இப்போ எங்களால அடிக்க முடியலையேன்னு இரெண்டு பேரையும் விட்ரோம்.. என்றான் மூச்சு வாங்கிக் கொண்டே....
ரக்ஷா : சரி வாங்க டா.... வீட்டுக்கு போய்... அஜ்ஜு அண்ணா வந்த விஷயத்த எல்லார்ட்டையும் சொல்லனும் ல....
வீர் : வாங்க வாங்க போலாம்...
அர்ஜுன் : ஒன் செக்கென்ட் தங்கச்சி மா..... டேய் இருங்க டா..
ரித்விக் : ஏன் டா...
அர்ஜுன் : இன்னும் அதிர்ச்சி முடியல....
அனைவரும் : என்னது இன்னுமா... இன்னும் என்ன என்ன டா மறச்சி வச்சிர்க்க... என்று கையை முருக்கிக் கொண்டே கேட்க......
சரண் : ஒன்னே ஒன்னு தான் டா..... ஷினி... என அப்பெண்ணை திரும்பி அழைக்க....
அவளோ அர்ஜுனையும் அங்கு நின்றவர்களையும் மாரி மாரி பார்த்தாள்...
அர்ஜுன் : தைரியமா.... வா டி... உனக்காக எல்லாரும் இருக்கோம்... இருப்போம்... என ஊக்கமளிக்க....
ஷினி என பெயர் கொண்ட அப்பெண்.... மெல்ல தன் முகத்திறையை விலக்கினாள்.... சிவந்த நிறம்... பஞ்சு கண்ணம்... கூர் நாசி.... மென்மையான இதழ்... அழகிய கண்களிள்.... நீர் கோர்க்க.... தன் மேலிருந்த துப்பட்டாவை விலக்கினாள் நான்கு வருடம் முன்....கொலை செய்யப்பட்டு வெளி தேசத்தில்.... விற்றதாய் நம்பப்பட்ட.... நம் நிரு மது அர்ஜுனின் வர்ஷி.... தேவர்ஷினி....
நிரு மற்றும் மது இருவரும்... கண்களை அகல விரித்து... பித்து பிடித்ததை போலே நிற்க... மற்றவர்களுக்கு அது வர்ஷி தான் என புரிய.... நாயகிகள் அவளை ஓடிச் சென்று அணைத்தே விட்டனர்..... அவளுக்கும் அவர்களின் அணைப்பு தேவைப்பட்டதோ என்னவோ.... அவர்களை அணைத்துக் கொண்டாள்....
அனு : நீ வர்ஷி தான...
வர்ஷி : ஆமா....
பவி : நல்லா இருக்கியா... டி... உனக்கு ஒன்னும் இல்லையே...
வர்ஷி : இல்ல... எனக்கு ஒன்னும் இல்லங்க...
திவ்யா : லூசு... என்ன டி இப்டி மரியாதைலாம் குடுக்குர... உனக்கு நிரு மது எப்டியோ அப்டி தான் நாங்களும்.... என கண்டிப்பாய் கூற....
வர்ஷி : ஹாஹா... சரி டி சரி டி... நல்லா இருக்கேன்... எனக்கு ஒன்னும் இல்ல....
ப்ரியா : இது எவ்ளோ அழகா இருக்கு... வாங்க போங்க ங்குரா....
வர்ஷி : சாரி டி... சின்னவயசுல இருந்து யாரும் இல்லாம வளந்ததால.... அப்டி பேசியே பழகீடுச்சு....
இவ்வாக்கியத்தில் பொங்கி எழுந்தனர் நம் நாயகன்கள்....
க்ரிஷ் : ஏ தங்கச்சி... எப்டி நீ... உனக்கு யாரும் இல்லன்னு சொல்லலாம்... இத்தன அண்ணனுங்க உனக்கு இருக்கும் போது....
அஷ்வன்த் : அதான....
கண்ணீரே வந்துவிட்டது வர்ஷிக்கு...
அவளை நெருங்கிய நாயகன்கள்....
முகில் : இங்க பாரு வர்ஷி மா.... இவ்ளோ நாளா... நீ மது நிரு அர்ஜுன் க்கு மட்டுமே உறவா இருந்துர்க்களாம்...
ரித்விக் : ஆனா இரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி ல இருந்து... உனக்கு இத்தன உறவுகள் சேர்ந்துருச்சு.....
சத்தீஷ் : சோ என்னைக்குமே எங்க தங்கச்சி அழக்கூடாது....
இந்திரன் : பவி குட்டிமா... எங்களுக்கு முதல் தங்கச்சி... நீ எங்க இரெண்டாவது தங்கச்சி.....
வர்ஷி : என்னால இவ்ளோ உறவ நெனச்சி கூட பாக்க முடியல... தன்க்யூ அண்ணா... சந்தோஷத்துல ஒன்னுமே பேச முடியல....
தான்யா : அவனுங்க உன்ன பேசவே விடமாட்டானுங்க டி....
வீனா : ஆமா... அந்த மொத்த கூட்டமும் சரி வாயி....
வர்ஷி : என்னங்க டி... என் முன்னாடியே... என் அண்ணனுங்களையும்... அத்தான்களையும்... கலாய்க்கிறீங்க....
அர்ஜுன் : வர்ஷி ஃபார்ம்க்கு வந்துட்டா டோய்....
க்ரிஷ் : சூப்பர் டா அம்மு... இந்த மாற்றத்த தான் எதிர்பார்த்தோம்....
வர்ஷி : பாத்துக்கோங்க டா... மூணு பேரும் அண்ணன்னு சொல்லிட்டீங்க... இதுக்கு மேல... தப்பிக்க பாத்தீங்க....
பவி : இரெண்டு பேரும் சேர்ந்து கூண்டுல அடச்சு போற்றலாம்... யு டோன்ட் வரி டி....
வர்ஷி : டன் டி....
வர்ஷியின் அருகில் சென்ற அர்ஜுன்.... " வர்ஷி... இன்னும் அங்க இரெண்டு செல (சிலை)... உயிர் பெராம இருக்கு... அதுங்கள போய் பாரு... " என கூற.... அவளும் அவள்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்... சற்று யோசித்த வர்ஷி.... ஓடிச் சென்று... இருவரையும் அதிரடியாய் அணைத்துக் கொள்ள.... சட்டென நிலைக்கு வந்த இருவரும்.... ஓ என ஒப்பாரி வைக்க தொடங்கினர்.....
வர்ஷி : ஏ எருமைங்களா... நா வந்துருக்குர சந்தோஷமான நேரத்துல போய் இப்டி ஒப்பாரி வைக்கிறீங்களே... சும்மா இருங்க டி.... என கூற....
நிரு : ஏன் டி இத்தன வர்ஷமா.. என்ன பாக்க வரல...
மது : எங்க நியாபகமே வரலல்ல.. உனக்கு....
வர்ஷி : லூசு மாரி பேசாதீங்க டி... நானே ஒரு வர்ஷம் கோமால இருந்துட்டு தான் எந்திருச்சேன்... எழுந்ததும் பாத்தா.... சிங்கப்பூர் ல இருந்தேன்... இந்த லூசு அர்ஜுன்.. என்ன அங்கேந்து அவன் சொல்ற வர வரக்கூடாது ன்னு சத்தியம் வாங்கீட்டான் டி.... என உண்மையை கூற....
இப்போது இருவரும் அவனை முறைக்க....
அர்ஜுன் : எரும மாட்டிவிட்டியா.... அழசிட்டு வரும் போதே சொல்லக்கூடாதுன்னு தானே சொன்னேன்... உனக்கு சாக்லெட் கட்டு டி....
வர்ஷி : எனக்கு என் அண்ணனுங்க வாங்கி குடுப்பாங்க... போடா.....
அர்ஜுன் : அதுக்குள்ள கச்சி மாரீட்டியா நீ...
மது : நீ இவ்ளோ சீக்கிரம் யார்ட்டையும் பழக மாட்டியே டி.... அப்ரம் எப்டி வந்த பத்தே நிமிஷத்துல.... இவ்ளோ க்லோஸ் ஆன.... என்று அதிர்ச்சியாகவே வினவ...
வர்ஷி : சச்ச... இல்ல டா... நா எப்பவவுமே உனக்கு வர்ஷி தான்... ஆனா... நா இவங்க எல்லாரையும் பர்ஸ்ட் டைம் பார்த்தாளும்... ஏதோ முன்னாடியே பாத்த ஒரு பீல்.... ஏதோ சொல்ல முடியாத ஏதோ ஒரு பீல் மது.. ஐ கான்ட் எக்ஸ்ப்லைன் அபௌட் இட்.....
நிரு : நீ அதல்லா அப்ரமா சொல்லு... எப்டி உயிர் பொழச்ச... அத மொதல்ல சொல்லு....
வர்ஷி : எனக்கே தெரியாதே....
அனைவரும் : ங என முளிக்க....
வர்ஷி : அவனுங்க என்ட்ட இன்னும் ஒன்னுமே சொல்லல டி....
அர்ஜுன் : நானே சொல்றேன்... அன்னைக்கு எனக்கு பதிலா... வேற ஒரு பையன தூக்கிட்டு போனாங்கல்ல... அவனோட லவ்வரையும்... அவங்க ரிலேட்டிவ்ஸே கொல பன்னி.... மது வர்ஷி விழுந்த பக்கவாட்டுல தூக்கி போட்டு போய்ட்டாங்க.... அந்த ரௌடிங்க.... இவளுங்கள தூக்க போனப்ப... அந்த பொண்ண தான் வர்ஷின்னு நெனச்சு தூக்கீர்க்கானுங்க.... ஏதோ அந்த நேரத்துல... கீழே உருண்டு... ஆத்துல விழுந்துர்க்கு... அது மதுன்னு நெனச்சு இவனுங்க வன்ட்டானுங்க.... நா காலைல எழும் போது.... அந்த சைட் யாருமே இல்ல.... ரொம்ப வலி அதிகமா இருந்தது... கண்ணக்கூட தொரந்து சரியா பாக்க முடியல... பட் அங்க நிரு மது இருந்துர்க்காங்க.... என்னாலதா பாக்க முடியல.... நிக்கக்கூட சக்தி இல்லாம.... நானும் அதே பக்கவாட்டுல தடுமாறி விழுந்தேன்..... என்னால எதையும் பிடிக்க கூட முடியல.... நேரா போய்... அந்த ஆத்துல விழுந்தேன்.... தண்ணி பட்டு... கொஞ்சம் தெளிஞ்சிது... மேல எதுவும் பாக்க முடியல.... அப்போ தான்... கரை பக்கத்துல.... வர்ஷி விழுந்து கிடந்தத பாத்தேன்.... உடனே அவக்கிட்ட போனேன்.... இறைனோட அருளால.... அவளுக்கு துடிப்பு இருந்தது... உடனே... சரண போன் பன்னி கூப்ட்டேன்.... அதுக்கப்பரம்.... என்னால முடியல.... நா பாதி உசுர... பிடிச்சிக்கிட்டு கிடந்தேன் அவன் வந்த உடனே.... வர்ஷிய தூக்கிட்டு போனான்.... எங்களுக்கு அவன் ப்ரெண்டு தான் ட்ரிட்மென்ட் பாத்தான்.... அதுக்கப்பரம்.... ஒரு வாரம் களிச்சு நா கண் விழிச்சேன்.... வர்ஷி க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தான்டி.... கோமாக்கு போய்ட்டா.... அவள் ட்ட டெய்லி பேச ஆரம்பிச்சேன்.... இங்க இருந்தா.... அவங்களுக்கு ஆபத்துன்னு தான்... சரணோட அவளையும் சேத்து சிங்கப்பூர் அனுப்புனேன்....
அஷ்வன்த் : இன்னும் என்ன என்ன டா பன்னி வச்சிர்க்க....
😲😲
அர்ஜுன் : ஹிஹி அவ்ளோ தான் டா....
நிரு : ஒன்னே ஒன்னு இருக்கு....
அனைவரும் அவளை திரும்பி பார்க்க.... அவனோ அவளையே பேந்த பேந்த முளித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்....
வீனா : இன்னும் என்ன டி இருக்கு....
நிரு : ஒன்னே ஒன்னு இருக்கு டி... என அவனை நெருங்கினாள்....
அர்ஜுன் : வேற எதுவும் இல்ல டி....
நிரு : அப்டியா.... அப்போ ஸர் ஏன் என்ன " நிரா " ன்னு கூப்ட்டீங்க.... என வினவ.... சற்றே அதிர்ந்த அர்ஜுன்... சமாளிக்க வழி தேட....
அர்ஜுன் : அது சும்மா கூப்ட்டேன்....
நிரு : பொய் சொல்லாத..... உன்னோட நாழு வயசுல இருந்தே... நீ என்ன ஒரு தடவ கூட பெயர் சொல்லி கூப்ட்டதில்ல.....
அனைவரும் : என்னது நாழு வயசுல இருந்தேவா??? என முளிக்க....
நிரு : ஆமா....
மது : ஹே ஆமா டா... இவன் எப்போப்பாரு... அவள உன் தங்கச்சிய கூப்டு ன்னு சொல்லுவான்... ஆர்... பிசாசு ன்னு தான் கூப்டுவான்... இதுவர... அவள பேரு சொல்லி கூப்ட்டதே இல்ல... என்று அதே அதிர்வுடன் கூற.....
இப்போது முளிப்பது அர்ஜுனின் முறையானது.... அவன் பின் நின்று சிரித்துக் கொண்டிருந்தான் நம் சரண்.....
அவனை கண்டு... அர்ஜுன் முறைக்க... உடனே சிரிப்பை அடக்கிக் கொண்டான்....
அர்ஜுன் : அது... ஏதோ... முகில் தான்னு காமிக்கிறதுக்காக... அப்டி கூப்ட்டேன்....
நிரு : டோன்ட் லை டுமீ.... எனக்கு உன்ன பதித் தெரியும்.... நீ இந்த வேலையல்லாம் என் கிட்ட இருந்து மறச்சிர்க்கலாம்... ஆனா... உன் மனச மறைக்க முடியாது... முகில் என்ன.... சனா ன்னு தான் கூப்டுவான்....
அர்ஜுன் : அது எனக்கு தெரியாதுல்ல.... அதான் அப்டி கூப்ட்டேன்....
நிரு : கடைசி வர சொல்லமாட்ட..... ம்ம்ம்?? என திரும்பியவள்.... அவன் எதிர்பார்க்காத நேரம் அவனை அணைத்துக் கொள்ள.... மின்சாரம் பாய்ந்தார் போல் உறைந்து நின்றான் அர்ஜுன்....
பையன் முன்னாடியே கௌந்துட்டான்... என உணர்ந்துக் கொண்ட நாயகன்கள்.... அதிர்ச்சியில் இருந்த நாயகிகளை இழுத்து கொண்டு சத்தமில்லாமல் வெளியேறினர்....
இன்னும் அர்ஜுன் அப்படியே நிற்க......
நிருவின் நகு என்ற அழைப்பு.... அவன் இதயத்தை தீண்டி வர.... உடல் சிலிர்த்து அடங்க.... தான் சிக்குண்டதை அறிந்தவன்... இனி மறைத்து பயணில்லை... என அவளை இருக்கி அணைத்துக் கொள்ள..... அவன் அணைப்பில் ஒன்றியவள்... புன்னகையுடன்... அவன் மேலே சாய்ந்துக் கொள்ள.... தன் மேலே சாய்ந்தவளின் காதருகில் குனிந்தவன்... அவளின் காதில் தன் இதழால் வருட.... அவன் மீசை தந்த குருகுருப்பில் நெலிந்தவள்... அவனுள்ளே இன்னும் ஒன்றி போக.... " ஐ லவ் யு " என்றான் மெதுவாக..... அவள் நாணத்தில் புன்னகையுடன்.... அப்படியே இருக்க..... " பதில் சொல்லு டி பொண்டாட்டி... " எ கிசுகிசுக்க....
நிரு : லவ் யு டூ டா... என்றாள் மெதுவாக....
அர்ஜுன் : தெரியும்....
நிரு : எப்டி.... என அதிர்ச்சியில் அவனை விட்டு விலக..
அர்ஜுன் : அதுக்கு ஏன் லூசு பத்தடி பின்னாடி போற... தெரியும் னா தெரியும்....
நிரு : அதான் எப்டி....
அர்ஜுன் : நாங்க யாரு.... மேடம் என்ன பதினஞ்சு வயசுல இருந்தே லவ் பறீங்கன்னு தெரியும்... என்றான் ஷர்ட் காலரை தூக்கி விட்டவாறு....
நிரு : அடப்பாவி.... எப்டி டா...😲😲
அர்ஜுன் : அதுக்குள்ளாம் இஸ்ரோ ல இருந்து விஞ்ஞானியையா கூட்டிட்டு வர முடியும்... நானே கண்டுப்புடிச்சிட்டேன் டி....
நிரு : ஆஹான்.... சாரும் என்ன முன்னாடி ல இருந்து லவ் பன்றீங்கன்னு.... எனக்கும் தெரியும்....
அர்ஜுன் : தெரியுமா.....
நிரு : தெரியும் னா... தெரியும்.... நீ பன்ற தில்லு முல்லு ல நா பாதி கூட பன்னலன்னா எப்டி... 😜
அர்ஜுன் : ஹாஹா....
ரனீஷ் : டேய்.... டைம் ஆச்சு வா டா.... வீட்டுக்கு போய் உன் ரொமன்ஸ வச்சுக்க....
அர்ஜுன் : ஹிஹி வரோம் டா....
என அனைவருடனும்.... பல விதமான மகிழ்ச்சியுடன்.... கிடைத்த உறவுகளுடனும் வீட்டிற்கு சென்றனர்.....
அங்கோ இவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதைப் போலவே.... வீட்டின் நடு கூடத்தில்.... ஏதோ ஒரு அட்டையை வைத்தவாறு.... சிறிது கண்ணீருடன் அமர்ந்திருந்தார் வனித்தா.... அவரை எதிர்பார்க்காத நம் சிறியவர்கள்.... சொல்லாமல் சென்றதால்.... பேந்த பேந்த முளிக்க.... வனித்தாவும்... எதிர்பார்க்காததால்... முதலில்... கையில் வைத்திருந்த... அட்டையை... மறைத்து வைத்துவிட்டு.... அதிர்ச்சியை வெளிகாட்டாமல்.... எங்கே சென்றனர்... என விசாரிக்க தொடங்கினார்.... அப்போது... முகிலின் தோள் பின்னிருந்து.... அவனைப் போலவே ஒருவன் எட்டி பார்த்ததைக் கண்டு.... உண்மையிலே வனித்தாவின் இதயம் நின்று துடித்தது.... இருவரும் அருகருகில் நிற்க...... அதிர்ச்சியில்.... " என்னங்க " என வனித்தாவின் அலரல்.... வீட்டின் ஒவ்வொரு மூலை முடிக்கிலும் ஒலிக்க..... அடுத்த நொடி... அனைத்து அறைகளிளும்... அடுத்தடுத்து... லைட் எறிந்தது.... அனைவரும் பதறி அடித்து வெளிவர.... ஏற்கனவே கண்ணீருடன் இருந்த வனித்தா..... இப்போது ஆறாய் வலிந்த கண்ணீருடன்... அழுதுக் கொண்டே.... முகில் மற்றும் அர்ஜுனை கட்டிக் கொண்டு அழுதார்.....
இரு முகிலை கண்டு அனைவரும் அதிர்சியடை.... பேரதிர்ச்சியில் மூழ்கி இருந்த மாதவன்.... ஓடி வந்து.... முகிலின் முகத்தை தொட்டு பார்த்தார்....
முகில் : மாம்ஸ்.... நான் முகில் தான்.... அவன் தான்.... என அர்ஜுனை காட்ட.... அவன் கன்னத்தில் தட்டிய மாதவன்.... அர்ஜுனை கண்டு கண்ணீர் வடித்தார்.....
இப்போது மொத்த குடும்பத்திற்கும்.... அர்ஜுனை பற்றி விவரிக்க.... அவர்கள் அதிர்ச்சியிலிருந்த சமயமே..... வர்ஷி மற்றும் சரணை அனைவருக்கும் அறிமுகப்படுத்த.... அப்பெயரை கேட்ட.... மாதவன்... அதிர்ச்சிச்யோடு.... பதறி போய் வனித்தாவை காண.... வனித்தாவோ..... எப்போதோ தான் இருந்த நிலை மறந்து கதறி அழ தொடங்கியிருந்தார்.... அவரை உடனே மாதவன் அணைத்து ஆறுதல் படுத்த... மற்ற எவருக்குமே... எதுவும் புரியவில்லை.... வரும் போது வேறு வனித்தா அழுவதை கண்டிருந்த நாயகர்கள் இன்னும் குழம்பிப்போப்பினர்....
மாதவன் : வனி அழாதமா... நடந்தது நடந்துருச்சு... மறந்து தான் ஆகனும்....
வனித்தா :எப்டிங்க... என்னால மறக்க முடியும்..... தமிழ் அண்ணன் பையன்.... அர்ஜுனையே... என்னால மறக்க... நா பெத்தெடுத்த புள்ளைய என்னால எப்டி மறக்க முடியும்..... என அழ...
நம் நாயகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி..... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் பவியை தவிர்த்து... இன்னோறு பிள்ளையா என்று..... அப்போதே பெறியவர்களுக்கும் புரிய அவர்களும்... வனித்தாவிற்கு ஆறுதல் கூற.... சற்றே தன்னை நிலை படுத்திக் கொண்ட வனித்தா.... அந்த அட்டையை மீண்டும் எடுத்து பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்....
க்ரிஷ் : என்ன பா நடக்குது இங்க.... அம்மு என்ன அவங்க புள்ளன்னு சொல்றாங்க.... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பா.....
மாதவன் : ஆமா டா.... எங்க புள்ள தான்.... என்றார் சிறு கண்ணீருடன்....
அர்ஜுன் : என்ன மாமா சொல்றீங்க....
இரமனன் : ஆமா பசங்களா.... 23 வர்ஷம் முன்னாடி.... பவி பொறந்தப்ப... அவ கூடவே இன்னோறு கொழந்த பொறந்துச்சு.... ஆனா.....
காவியா : அந்த கொழந்த எறந்துட்டதா...சொல்லி... அந்த ஹாஸ்பிட்டல்ல எங்களுக்கு காமிக்காமயே.... தூக்கிட்டு போய்ட்டாங்க.... எவ்ளோவோ சொல்லியும்... கெஞ்சியும்... கடசி வர அவங்க கொழந்தைய காமிக்கல.... அத அண்ணிக்கு தெரியாம வச்சிருந்தோம்.... கொஞ்ச நாள் களிச்சு சொல்லலாம் னு....
இலக்கியா : ஆனா... நாங்களே எதிர்பாக்காம... ஒரே வாரத்துல... அண்ணிக்கு விபத்து நடந்துச்சு...
மாதவன் : வனித்தா இல்லன்னாலும்... நா இன்னைக்கு வர அந்த குழந்தைய நெனச்சி அழுதுக்குட்டு தா இருக்கேன்.... இத்தன வருஷமா சொல்லாம இருந்ததே தப்புன்னு தான்... நாங்க இன்னைக்கு சொன்னோம்... அதுல இருந்து ஒன்னுமே சொல்லாம... குழந்தையோட டெத் செர்ட்டிஃபிக்கேட்டையே பாத்துக்குட்டு இருக்கா..... என கண்ணீருடன் கூறி முடிக்க..... வர்ஷியின் அருகில் சென்ற வனித்தா.... அவளின் கையை பிடித்து....
வனித்தா : நீ யாருன்னு தெரியல மா.... ஆனா... உன்ன பாக்கும் போது... ஏதோ என் எறந்து போன குழந்த திரும்ப வந்த மாரியே இருக்கு.... நா இப்டி கேக்குறது தப்பு தான்... ஆனாலும் கேக்குறேன்.... என்ன உன் அம்மாவா ஏத்துக்குரியா டா.... என கேட்க.... அதே கேள்வியை தன் கண்களிள் தேக்கி... மாதவனும் அவளயே பார்க்க.... மொத்த குடும்பமும் அவளையே ஆவலாய் பார்க்க...... கண்களிள் கண்ணீருடன்..... அம்மா என வர்ஷி அழைக்க.....
வனித்தா அளவில்லா மகிழ்ச்சியில் அவளை இருக்கி கட்டிக் கொண்டார்.....
சத்தீஷ் : அம்மு... நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அம்மு எங்களுக்கு எப்பவோ தங்கச்சியாய்ட்டா.... நாங்க எங்க தங்கச்சிய எப்பவோ தத்து எடுத்துட்டோம்....
மாதவன் : சந்தோஷம் பசங்களா....
வேலுதாத்தா : எங்கள உன் குடும்பமா ஏத்துக்குரியா மா.....
வர்ஷி : என்ன தாத்தா இப்டிலம் கேக்குறீங்க.... இது எனக்கு கிடைச்ச வரம்.... எங்கிருந்தோ வந்தவள.... இப்டி நீங்க ஏத்துக்கும் போது..... உண்மையான பாசத்த அனுபவிச்சிராத நான்.... எப்டி வேணான்னு சொல்லுவேன்....
தெய்வானை பாட்டி : ரொம்ப நன்றி மா....
வர்ஷி : நான் தான் தாத்தா நன்றி சொல்லனும்.... இவ்ளோ அன்பான குடும்பம் கெடைக்க.... நான் தான் நன்றி சொல்லனும்.....
க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் : எங்களுக்கு இன்னோறு தங்கச்சி கெடைச்சிட்டா..... என கத்த.....
அளளில்லா மகிழ்ச்சியில் திண்டாடித்தான் போனாள் வர்ஷி...
அப்போது எவரும் எதிர்பார்க்காத நேரம்.... மாதவன் மற்றும் வனித்தாவின் அருகில் சென்ற சரண்......
மாதவன் : சொல்லு தம்பி....
சரண் : வெயிட் அன்க்கிள்.... இத்தன நாளா... எங்க இரெண்டு பேருக்கும் யாரு இல்ல... ஆனா இப்போ வர்ஷி க்கு அப்பாம்மா... குடும்பம் னு இவ்ளோ பெருசா ஒரு கூட்டம் இருக்கும் போது..... சம்மதம் கேட்கனும்....
வனித்தா : என்ன சம்மதம்...
சரண் : உங்க பொண்ண என் பொண்டாட்டி யா எனக்கு குடுக்க உங்க சம்மந்தம் வேணும் அத்த..... என டப்பென அவர்களின் கால்களிள் விழுந்து விட்டான்.... வர்ஷினியும் அவனுடனே காலில் விழ.... அர்ஜுன் அவர்களை பார்த்து சிரிக்க.... மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்....
இலக்கியா : டேய் படவா.... இங்க வா டா.... என சரணை அழைக்க.... அவனும் இழித்துக் கொண்டே எழுந்து அருகில் வர....
சரண் : சொல்லுங்க அன்ட்டி....
இலக்கியா : அன்ட்டி இல்ல.... உன் அம்மா....
சரண் அதிர்ச்சியில் முளிக்க....
மாதவனின் புறம் திரும்பிய இலக்கியா....
இலக்கியா : அண்ணா என் மகனுக்கு.... உன் இளைய மகள கட்டி வை... என உரிமையுடன் கூற.....
மாதவன் வனித்தா : இதுல எங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்ல டா....
மாதவன் : தாத்தா அப்பா அம்மா... இரமனா முரளி என்ன சொல்றீங்க...........
தாத்தாஸ் பாட்டி : எங்க பேரன எங்க பேத்திக்கே கட்டி வைக்கிறதுல... எங்களுக்கு முழு சம்மதம்....
முரளி காவியா : எங்களுக்கும்....
இரமனன் : நாங்க தான் டா... எங்க மகனுக்காக உன் கிட்ட சம்மந்தம் கேற்றுக்கோம்....
ப்ரியா : இங்க என்ன நடக்குது... எங்களுக்கு ஒன்னுமே புரியல.... இன்னும் சரண் அதே அதிர்ச்சியில் தான் நின்றான்....
இலக்கியா : என் மகனுக்கு... என் அண்ணன் மகள பொண்ணு கேக்குறேன்...
அனு : அது இல்ல மா... எங்க அண்ணன்... உங்களுக்கு எப்போ மகனானான்.....
இரமனன் : அவ எங்களுக்கு பையனானதால... தான் உங்களுக்கு அண்ணனானான்...
இந்திரன் : புரியிர மாரி சொல்லு அத்து....
வேலுதாத்தா : பசங்களா... சரண்.... ஊட்டில ஆஷ்ரமம் வச்சிர்க்குர ராஜ்ஜோட பையன் தான....
நாயகர்கள் : ஆமா....
சங்கரன் தாத்தா : அப்போனா... இவன் கன்பார்ம் நம்ம பையன் தான்.....
பவி : தாத்தா கொழப்பாம விஷயத்துக்கு வாங்க....
இலக்கியா : சரண்... நா பெத்தெடுத்த என்னோட மூத்த புள்ள... என்று.... அவனின் கன்னம் வருடி கண்ணீருடன் கூறினார்....
காதல் தொடரும்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro