காதல் -35
பட்டாம்பூச்சியாய் மகிழ்ச்சியுடன் பறந்த வர்ஷி... இன்று நிம்மதி இழந்து... கல்லூரி தோட்டத்தில்... நிருவின் மடி சாய்ந்து கதறிக் கொண்டிருந்தாள்.... மது அர்ஜுன் நிரு என அனைவரும் அவளை பார்த்து முளித்துக் கொண்டிருந்தனர் அவள் அழுகையின் காரணம் அறியாமல்...
நிரு : வர்ஷி.. என்ன டி ஆச்சு... ஏன் இப்டி அழுகுர... என்ன ஆச்சு...
அர்ஜுன் : அழாம என்ன ஆச்சுன்னு சொல்லு மா...
அவளோ விடாமல் அழுகையை தொடர்ந்தாள்... அவளின் தலையை மென்மையாய் வருடிய மது...
மது : வர்ஷி... உனக்கு நாங்க இருக்கோம்... என்ன பிரச்சனையா இருந்தாலும்... உனக்கு பக்கபலமா நிக்க நாங்க இருக்கோம்... தைரியமா பேஸ் பன்னலாம்... சொல்லு என்ன ப்ராப்லம்... அதற்கேற்றார் போல் நிரு அவளை அணைத்துக் கொள்ள... அர்ஜுன் அவளின் கைகளிள் அழுத்தம் கொடுத்து இருக்கி பிடித்துக் கொண்டான்...
மெல்ல அழுகையை நிருத்திய வர்ஷி.... நிருவின் மடியில் படுத்துக் கொண்டே... அர்ஜுனின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டாள்.... கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை நிலை படுத்துகிறாள் என அர்ஜுனின் கை அசைவுகள் மூலம் உணர்ந்துக் கொண்டனர்....
வர்ஷி : என் பக(bag) எடுத்து பாரு... என்றாள் மெதுவாய்... அதை எடுத்த மது... அதில் வித்யாசமாய் ஏதும் இல்லாமல்... ஒரு போட்டோ மட்டும் இருப்பதை கண்டு... அதை எடுத்து பார்த்தவள்....
மது : ஏ லூசு.. இதுக்காடி இப்டி அழுவுர.... என கேட்க.... வெடுக்கென நிருவின் மடியிலிருந்து எழுந்தாள் வர்ஷி...
நிரு :என்ன டி...
மது : இங்க பாரு டி... என போட்டோவை காட்ட... அதில் ஒரு தாத்தா... இருந்தார்....
நிரு : இதுல என்ன...
மது : லூசு... அவரு எறந்துட்டாரு போல... கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் கூட யாரும் ஒட்டலையேன்னு கஷ்ட்டப்படுரா...
அர்ஜுன் : ச அவ்ளோ தானாடி... இன்னைக்கு நைட்டு குள்ள... மொத்த ஊட்டிலையும் இவரு போட்டோ.. கண்ணீர் அஞ்சலி ன்னு தொங்கும் பாரு... நா போய் அதுக்கான வேலைய பாக்குறேன் என எழுந்திருக்க..... சிரிப்பை மறந்திருந்த வர்ஷி... வாய் விட்டு சிரித்தாள்....
ஏன் இவள் திடீரென சிரிக்கிறாள் என தெரியாமல் மூவரும் முளிக்க... அவளோ....
வர்ஷி : உங்களுக்கு மூளையோ மூள... நா ஒன்னுமே சொல்லல அதுக்குள்ள எப்டி டா...
மது : அதல்லா... என் அறிவு டி... என தன்னை பாராட்டுகிறாள் என நினைத்து கூற....
வர்ஷி : எரும... உசுரோட இருக்குரவருக்கு போய் கண்ணீர் அஞ்சலி ஒட்டலன்னு நா அழுவுவேணா டி...
மது : அப்போ அது இல்லையா....
வர்ஷி : இல்ல டி...
அர்ஜுன் : நா கூட ஸின்ஸியர் சிகாமனியாட்டம் எழுந்தேனே... என மீண்டும் அமர்ந்துக் கொண்டான்.....
நிரு : அப்போ என்ன ஆச்சு இந்த தாத்தாக்கு... ஓ.. இவருக்கு கொடிய நோய் இருக்கு... அவரு இன்னும் கொஞ்ச நாள்ள போய்டுவாரு... அதனால அழுவுரியா....
வர்ஷி : அப்டி மட்டும் இருந்து... இவரு போய்ட்டா... இந்த உலகத்துல என்ன விட சந்தோமானவ யாரும் இருக்க மாட்டா...
அர்ஜுன் : அப்போ என்ன தான் டி பிரச்சனை... ஏன் வந்ததும் வராததுமா ஒப்பாரி வச்ச???
வர்ஷி : அதுவா.. அதுவா... என மீண்டும் அழ ஆரம்பிக்க....
அர்ஜுன் : ஷு.... என அதட்ட...
கப்சிப் என வாயை மூடிக் கொண்டு முளிக்க தொடங்கினாள் வர்ஷி....
அர்ஜுன் : அழாம என்ன பிரச்சனை ன்னு சொல்லு... எதுவா இருந்தாலும்... சமாளிச்சிரலாம்.... இந்த கெழட்டுக்கு என்ன???
வர்ஷி : இந்த கெழட்டுக்கு என்ன கல்யாணம் பன்னி வைக்க போறாங்கலாம் டா.... என அழ தொடங்கினாள்....
மூவரும் : என்ன சொன்ன.... என அதிர்ச்சியில் பெருங்குரலெடுத்து கத்த...
வர்ஷி : ஆமா......
நிரு : யாரு டி சொன்னது...
வர்ஷி : என்னோட...
அர்ஜுன் : அவளோட கேடுக்கெட்ட அப்பாம்மாவா தான் இருக்கும்... என கோவத்துடன் கூற.... அவன் குரலில் இருந்த மாற்றத்தை கண்டு மூவரும் குழம்பினர்....
மது : என்ன டா இப்டிலாம் சொல்ற???
அர்ஜுன் : இந்த கல்யாணத்த கூட எதாவது ப்ராப்பர்ட்டிக்காகவோ... இல்ல... பணத்துக்காகவோ தான் முடிவு பன்னீர்ப்பாங்க... என கூற... மதுவும் நிருவும்.. அப்படியா... என்பதை போல் வர்ஷியை பார்க்க... அவளோ அதே அதிர்ச்சியுடன்...
வர்ஷி : ஐ தின்க் சோ... அந்த கெழட்டுக்கு வந்து எழுவது வயசாகுது.... அவரோட மூணு பொண்டாட்டிங்களும் எறந்துட்டாங்களாம்... சோ என்ன நாழாவதா கட்டிக்கிறேன்ங்குரான்.... ஏதோ கல்யாண சீரா... கொடைக்கானல்ல உள்ள நூரு ஏக்கர் நிலத்தில இருக்க மாலிகைய தரதா சொல்லீர்க்காரு....
அர்ஜுன் : பாத்தீங்களா.... தே ஆர் நாட் ஒன்லி பட் டு அதர்ஸ்... ஈவன் டு தேர் டாட்டர்.... (They are not only bad to others... even to their daughter...) என்றான் கடுங்கோபமாய்....
நிரு : அஜ்ஜு... வாட் ஆர் யு சேயிங் அபௌட்... (What are you saying about)
அர்ஜுன் : அவங்க தான்... அவங்க தான் எல்லாத்துக்கும் காரணம்....
வர்ஷி : அஜ்ஜு... கொஞ்சம் புரியிர மாரி சொல்லு டா...
அர்ஜுன் : அவங்க தப்பான தொழில் பன்னிகிட்டு இருக்காங்க டி... பொண்ணுங்கள கடத்தி ஏதோ செய்றாங்க....
மது : என்ன டா சொல்ற???
அர்ஜுன் : ஆமா மது... நேத்து... முழுக்க நா வர்ஷியோட அம்மாவ ஃபாலோ பன்னேன்.... அவங்க காட்டுக்குள்ள இருக்க பங்கலால இரெண்டு பொண்ணுங்கள கடத்தி வச்சிருந்தாங்க.... நான் தான் காப்பாத்தி வெளிய கொண்டு வந்தேன்....
வர்ஷி : அப்போ சஞ்சு பாப்பாவ கொன்னது... என இழுக்க.....
நிரு : தெரியல....
அர்ஜுன் : பி கேர்ஃபுல் வர்ஷி.... பணத்துக்காக ஒரு வயசானவர்ட்ட உன்ன விக்க பாக்குறாங்க... இனிமே நீ அங்க இருக்க வேணாம்..
நிரு : ஆமா வர்ஷி... உன்ன அங்க விட்டுட்டு... எங்களாள நிம்மதியா இருக்க முடியாது...
வர்ஷி : என்ன தான் இருந்தாளும் அவங்க என் அப்பாம்மாவாச்சே டி....
மது : கரெக்ட் தான் டி... ஆனா ஆபத்து ன்னு தெரிஞ்சே உன்ன அங்க விட முடியாது டி....
அர்ஜுன் : பாரு வர்ஷி... அவங்க உன் அப்பாம்மா தான்... பட் அவங்க கூட இருக்கப்பவே உனக்கு பாதுகாப்பு இல்லங்குமோது.... என்னால உன்ன அங்க விட முடியாது... நைட் நா வீட்டுக்கு வரேன்.... நீ தேவையானத மட்டும் எடுத்துட்டு வா.....
நிரு : எங்க வீட்ல இரு டி... என் பாட்டி மட்டும் தான்....
ஆழ்ந்த யோசனையில் இருந்த வர்ஷி... அரைமனதுடன் ஒப்புக் கொண்டாள்... அவளரியவில்லை... இம்முடிவு கால தாமதமானதால் தான் தன்னை உயிருடன் புதைக்கப்போகிறதென்று....
அவர்களறியாத ஒன்று இன்னும் இருந்தது... அன்றுடன் மது மற்றும் அர்ஜுனின் ஹையர் கோர்ஸும்.... நிரு மற்றும் வர்ஷியின் ஜர்னல் கோர்ஸும் தேர்வுடன் முடிவடைகிறதென்று.... அமைதியாய் அமர்ந்திருந்தவர்களை ஓடி வந்து குருக்கிட்டாள் நிருவின் க்லஸ்மெட்... " இன்னும் நான்கு மணி நேரத்தில் இறுதி தேர்வு இருப்பதாக திடீர் அறிவிப்பு வந்தது " என கூறிவிட்டு ஓடினாள்..
நிரு வர்ஷி : ஏது எக்ஸாமா?????😲😲😲😲😲😲😲
உடனே இருவரும் பகை எடுத்துக் கொண்டு ஓட...
அர்ஜுன் : ஹே அல் த பெஸ்ட் டி... நல்லா எழுதுங்க... என ஓடுபவள்களை பார்த்து கத்த....
நிரு வர்ஷி : ஓக்கே என ஓடிக் கொண்டே கத்தினர்....
மது : சரி டா... நமக்கும் இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் இருக்கு... நா போய் எதாவது படிக்கிறேன்... டாட்டா என கூறிவிட்டு அவளும் சென்று விட்டாள்.... அர்ஜுனும் அங்கிருந்து நகர்ந்தான்....
ஓடிய இருவரும் மூச்சு வாங்க அவர்களின் க்லஸ் இன்சார்ஜ் முன் நின்றனர்.... அவர்களை கண்ட அந்த மேம்...
மேம் : ஹே... வாங்க கேர்ள்ஸ்...
நிரு : என்ன மேம் திடீர்னு எக்ஸாம் னு சொல்ரீங்க...
மேம் : ஆமா கேர்ல்ஸ்... உங்களுக்கு எக்ஸாம் வச்ச அன்னைக்கு நம்ம காலெஜோட சேர்மேன் ஒரு பன்க்ஷன் இருக்குன்னு மாத்தீட்டாங்க.... சோ இன்னைக்கு தா எக்ஸம்...
வர்ஷி : மம் எக்ஸாம் நெக்ஸ்ட் விக் ப்ரைடே ன்னு சொன்னீங்க... ஆனா இப்போ திடீர்னு இன்னைக்குன்னு சொல்றீங்களே...
மேம் : லாஸ்ட் வீக் மண்டேவே உங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சுலாஸ்ட் எக்ஸாம் கு டூ வீக்ஸ் டைம் னு சொன்னோம்.. இப்போ ஒன் வீக் தான மா முடிஞ்சிருக்கு.... அதுக்குள்ள படிச்சிர்ப்பீங்களே.... இன்னைக்கு எக்ஸாம் னா எக்ஸாம் தான்... போங்க போய் ரிவைஸ் பன்னுங்க... என அங்கிருந்து நகர்ந்தாள்....
நிரு : அய்யோ ம்ம நிலம புரியாம பேசீட்டு போறாங்களே.... நாளன்னைக்கு எக்ஸாம் னு சொன்னாலே... நாம நாளைக்கு நைட் தான் படிக்க ஆரம்பிப்போம்.. இவங்க ரெண்டு வாரத்துக்கு அப்ரம் சொன்னா... நாம எப்டி டி படிப்போம்...
வர்ஷி : ஒரு வாரம் இருக்கேன்னு விட்டுட்டோம்... ஆனா இப்டி ஒரு ட்விஸ்ட்டு வரும் னு எதிர்பாக்கலையே டி... ஒரு ஒன்மார்க் கூட படிக்கல டி...
நிரு : சரி நமக்கு தெரியாததா...
வர்ஷி : நமக்கு தான் ஒன்னுமே தெரியாதே...
நிரு : அடியேய்.... ரீடர்ஸ் முன்னாடி மானத்த வாங்காத டி....
வர்ஷி : அவங்க தான் யாருமே இல்லையே டி....
நிரு : ஒன்னு இரெண்டு பேர் இருப்பாங்க டி....
வர்ஷி : அவங்க முன்னாடி போனா... பரவால்ல ப்ப....
நிரு : போடி எரும...
வர்ஷி : நா போய்ட்டா... எக்ஸாம் ல நீ முளிச்சிட்டு தா உக்காந்துர்க்கனும்....
நிரு : ஹய்யோ...எக்ஸாம் டி... அத மறந்துட்டு நாம கத பேசீட்டு இருக்கோம் வா... வா... என இழுத்துக் கொண்டு சென்றாள்.... இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து.... தீவிரமாய் படிக்க தொடங்கினர்...
நேரம் செல்ல செல்ல... இருவரின் மூளையிலும் அன்ஸர்ஸ் பதிய தொடங்கியது.... நான்கு மணி நேரம் முடிய பத்து நிமிடம் இருக்கும் முன்னே ஏதோ ஓரளவு படித்து முடித்தனர்...
நிரு : ஹப்பா... நா ஒரு நாழு 16 மார்க்ஸும்... இருவது 5 மார்க்குஸும் பாத்துர்க்கேன்... பாஸ் ஆய்ர்வேன்னு நெனக்கிறேன்....
வர்ஷி : அதல்லா... ஆய்டலாம்... நாம பாக்காத எக்ஸாமா...
நிரு : அதான....
வர்ஷி : நா எல்லா 16 மார்க்ஸையும் பாத்துட்டேன் அது போதும்....
வர்ஷி : நாம படிச்சு முடிச்சிட்டு ஒரு பெரிய ரிப்போர்ட்டர் ஆகனும் டி...
நிரு : கண்டிப்பா டி... நம்ம பேரு இங்க எல்லாருக்கும் தெரியவரும்.... நிரஞ்சனா... தேவர்ஷினி யா இல்லாம....
வர்ஷி : சனா.... வர்ஷி யா....
நிரு : ஆமா....
வர்ஷி : ஹ்ம்... நா ரிப்போர்ட்டர் ஆகுரேனோ.. இல்லையோ.. ஆனா நீ ரிப்போர்ட்டர் ஆகனும்...
நிரு :பேபிமா... நீயும் ரிப்போர்ட்டர் ஆவ...
வர்ஷி : சரி சரி... ரெண்டு பேருமே... ஓக்கே
நிரு : டபுல் ஓக்கே...
வர்ஷி : சரி வா... டைம் ஆச்சு... ஹால் பாத்துட்டு கெளம்புவோம்... என இருவரும் கிளம்பி.... இருவருக்கும் ஒரே ஹால் என தெரிந்து உள் நுழைய... அங்கோ வர்ஷி முதல் பென்ச்சின் மூலை என்றால்... நம் நிருவோ கடைசி பென்ச்சின் மூலையில் இருந்தாள்.... தங்களை நினைத்து நொநந்தவாறே எழுத தொடங்கினர்.... பெரும் பாலும் இருவரும் படித்த வினாக்களே வந்திருக்க.... இருவரும் திருப்த்தியுடன் எழுதினர்... தெரியாத ஒன்று இரண்டு வினாக்களுக்கு... அதில் சம்மந்தப்பட்ட அன்சருடன் கதையை அடித்து விட்டனர்....
இருவரும் விரைவாகவே தேர்வை முடித்து வெளிவர... அடுத்த அரை மணி நேரத்தில்... அர்ஜுனும் எழுதி முடித்துவிட்டு வந்தான்.... மூவரும் மரத்தின் அருகில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க... மதுவும் தேர்வை முடித்து ஒரு கும்புடு போட்டுவிட்டு இவர்களுடன் வந்து இணைந்துக் கொண்டாள்....
தேர்வு நேரம் முடிய... அனைவரும் வெளியே வந்தனர்... ஹப்பா... இன்றுடன் தொல்லை முடிந்தது... என்று சிலர் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.... இனி நட்பை காண முடியாதே என பலர் அழுகையுடன் பிரிந்து சென்றனர்.... அர்ஜுன் மது நிரு வர்ஷி இனி கல்லூரியில் இருந்ததை போல் இருக்க முடியாதே என நினைத்து கண்ணீருடன் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்..... வர்ஷியோ யோசனையோடே வீட்டிற்குள் நுழைந்தாள்....
வீட்டிற்குள் நுழைந்தவள்.... அவளின் அறைக்கு செல்லும் முன் தன் தந்தையின் அறையில் நடந்த விவாதத்தை கேட்டு அதிர்ச்சியுடன் உறைந்து நின்றாள்.....
இன்று விற்க இருந்த பெண்களை நேற்று நம் அர்ஜுன் தப்பிக்க வைத்ததால்... அவர்களை காணாமல் அங்கிருந்த ரௌடிகள் லலித்தாவிற்கு தெரிவிக்க.... அவரோ அதிர்ச்சியடைந்து... பரமேஷ்வரனிடம் கூற..... அப்போதே சரியாக வந்திருந்தாள் நம் வர்ஷி....
பரமேஷ்வரன் : என்ன சொல்ற லலித்தா.... உனக்கு தெரியாதா... இன்னைக்கு நம்ம எவ்ளோ பெரிய டில் ஸைன் பன்னீர்ந்தோம் னு...
லலித்தா : எனக்கு மட்டும் தெரியாதா.... நா என்ன செய்ய...
பரமேஷ்வரன் : ஓ மை காட்... நாம இன்னைக்கு நைட்டே.... அனுப்பி ஆகனும்... இப்போ என்ன தான் பன்றது....
லலித்தா : வேற பொண்ணுங்கள கடத்த சொல்லுங்க... உடனே.. உடனே... இரெண்டு பொண்ணுங்கள...
பரமேஷ்வரன் : வேற வழியே இல்ல... என போனை எடுக்க...
லலித்தா : என்னங்க... ஒரு நிமிஷம்... மூணா கடத்த சொல்லுங்க....
பரமேஷ்வரன் :என்ன சொல்ற???
லலித்தா : ஆமாங்க.... தேவர்ஷினி ப்ரெண்டு சனாவ கடத்த சொல்லுங்க....
இதெனை கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள் வர்ஷி... இவர்ளையா நாம் இத்துனை நாட்கிளாய் மதித்து வந்தோம் என தானாக அவளின் கண்களிள் கண்ணீர் ஊற்றெடுத்தது.. வாயை கையால் பொத்திக்வொண்டவள்.... செவுருடன் ஒன்றி நின்றவாறு கவனிக்கத் தொடங்கினாள்....
பரமேஷ்வரன் :ஏன் லலித்தா....
லலித்தா : அந்த சனா நம்மள நெருங்கீடுவாளோ ன்னு தான்... அவ கொஞ்ச கொஞ்சமா நம்மள பத்தி டீட்டெயில்ஸ் கலெக்ட் பன்னிக்கிட்டு இருக்கா... டீட்டெயில்ஸ மொத்தத்தையும் கண்டுபுடிச்சிட்டா... நமக்கு தான் டேன்ஜர்...
பரமேஷ்வரன் : அவ எங்க இருக்கான்னு தெரியனுமே....
லலித்தா : அட்ரஸ நா தேவர்ஷினி ட்ட கேட்டு சொல்றேன்.... நா போறேன்... என வெளியே வர...
உடனே வர்ஷி அவள் அறைக்குள் புகுந்து... கதவை தாழிட்டாள்.... அதை அறியாமல் லலித்தா அவள் அறைக்கு சென்று கதவை தட்ட.... மூச்சை இழுத்து வாங்கிய வர்ஷி... முகத்தை அழுந்த துடைத்து... கதவை திறந்தாள்.... என்றும் இல்லாத புன்னகையுடன் நின்றார் லலித்தா....
லலித்தா : என்ன மா... கல்யாணத்துக்கு உன் ப்ரெண்ட்ஸ லாம் அழச்சிட்டியா...
வர்ஷி : இல்ல மாம்....
லலித்தா : அப்டியா... என்ன மா... நீ... சரி...உன் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் சனா மது அர்ஜுன்ட்டையாவது சொன்னியா....
வர்ஷி : இல்லம்மா.... இன்னைக்கு எக்ஸாம் இருந்துச்சு அதனால மறந்துட்டேன்....
லலித்தா : ஓ அப்டியா.... சரி... உன் ப்ரெண்ட்ஸ் அட்ரெஸ் சொல்லு... நானும் டடியும் போய் சொல்லிட்டு வரோம்....
வர்ஷி : அது.. அது..வந்து... எனக்கு தெரியாது மாம்..... நா அவ வீட்டுக்கு லாம் போனது இல்லையா... அதான் தெரியல...
லலித்தா : ச... அட்ரெஸ் கூடவா தெரிஞ்சு வச்சிக்க மாட்ட... சரி அவ போன்க்கு போன் போடு... பேசுவோம்... அப்போ கேட்டுக்களாம்.....
வர்ஷி : சாரி மாம்... பட்ரி டௌன்....
லலித்தா : இட்ஸ் ஓக்கே... நம்பர் சொல்லு... என் போன்ல பேசுறேன்....
வர்ஷி : நம்பர் நியாபகம் இல்ல மாம்.... போன்ல மட்டும் தான் இருக்கு....
லலித்தா : என்ன எதுக்கெடுத்தாலும்... இல்ல இல்ல ங்குர...
வர்ஷி : நீங்க என்னமா புதுசா... என் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க....
லலித்தா : அப்டிலாம் இல்லையே....
வர்ஷி : இல்லையே.... என் ப்ரெண்ட்ஸ ஏரெடுத்தும் பார்க்காத நீங்க என்ன கல்யாணத்துக்கு அவங்கள கூப்டனும் னு நிக்கிறீங்க.... அதிசயமா....
இதுவரை இப்படி தைரியமுடன் பேசிராத வர்ஷியை கண்டிராததால்.... சற்றே பயம் அதிகரித்தது லலித்தாவின் மனதில்... அதிர்ச்சியின் ஊடே... நகப்போனவரை.....
வர்ஷி : தப்பு பன்னீட்டிங்க.... பெரிய தப்பு பன்னீட்டீங்க... அதுக்கு மன்னிப்பே கிடையாது... ஸ்ட்ரைட்டா பரலோகம் தான்.... என என்றுமே இல்லாத புது தைரியத்துடன் பேசினாள்.... அவளின் கண்களிள் அப்படியொரு சினம்..... வர்ஷியின் இப்புது அவதாரத்தை காண முடியாமல்... குழப்பத்துடன் அங்கிருந்து அகன்றார் லலித்தா.... உடனே அர்ஜுனுக்கு போன் செய்தவள்... உடனடியே இங்கு வர கூறினாள்.... அடுத்த பத்தாவது நிமிடம்... தன் பைக்குடன் வெளியே நின்றான்.... உடனே வீட்டிலிருந்து வெளியேறியவள்... அவன் தோலை பிடித்து எறி... அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறாமல்... வண்டியை எடுக்க துரிதப்படுத்தினாள்....
வண்டியை எடுத்தவன்... நெடுஞ்சாலையில் போகும் போது மீண்டும் கேட்க.... மொத்தத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்து முடித்தாள் வர்ஷி... இதனை கேட்டு அதிர்ந்தவன்... அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் முளிக்க.... உடனே நிரு மது வீட்டிற்கு போக சொன்னாள்.... அடுத்த ஐந்தே நிமிடத்தில் நிரு வீட்டின் முன் இருந்தனர்.... அவசரமாக இறங்கிய இருவரும் வீட்டிற்குள் நுழைய... அங்கோ வீட்டின் கதவு... சாவியில்லாத பூட்டு தொங்க... வெறுமையாய் இருந்தது... அப்போதே இருவருக்கும் அம்புஜம் மாட்டி ஏதோ ஊருக்கு போயிருப்பதாய் மது கூறியது நினைவு வந்தது...
வர்ஷி : என்ன டா இரெண்டு பேரையும் காணும்....
அர்ஜுன் :ஏதோ பார்க் போறேன்னு கெளம்புனாலுவோ டி... யாரோ க்லஸ்மெட் கூப்புர்ரான் போறேன்னு சொன்னாளுங்க... நா வேணா வேணா ன்னு சொல்லியுப் கேக்காம போனாளுங்க டி..... பார்க்ல தான் இருப்பாளுங்களோ..
வர்ஷி : இருக்களாம் டா....
காட்டில் இருக்கும் பங்கலாவில்....
பரமேஷ்வரனும் லலித்தாவும் சிரித்துக் கொண்டிருக்க... தலை தொங்கவிடப்பட்ட நிலையில்.... தலையில் ஏதோ பை மூடியிருக்க.... சேரில் கட்டப்பட்டு மயங்கி கிடந்தனர் மூன்று பெண்கள்.... அதில் இரண்டு பெண்கள் நம் நிரு மற்றும் மது... காலெஜ் மூலம் நிரு அட்ரெஸ்ஸை தெரிந்துக் கொண்டு நிருவை கடத்தப்போனவர்கள்.... அவளுடன் இருந்த மது யாரென தெரியாமலே.... மூணு ல இரெண்டு சிக்கீடுச்சு என்னும் நினைப்புடன் அவளையும் கடத்தி வந்திருந்தனர்....
லலித்தா : பெருசா டயலாக்கு பேசுனா... இப்போ நம்ம கஸ்டெடி ல தான இருக்கா....
பரமேஷ்வரன் : அந்த மாஸ்க்க எடுங்க டா... அந்த சனாவ நாங்க பாக்கனும்... என கூற... மூன்று பெண்கள்... முதலில் இருந்த பெண்ணின் முகத்திறையை விழக்கினர்... அவளின் முகமே கூறியது அவள் ஏதோ பெரிய துன்பத்தில் இருக்கிறாளென்று... உடல் மெலிந்து.... கண்களில் கருவளையத்துடன் முடி கொட்டி.... மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்....
லலித்தா : இவ தான் சனா வா டா... நல்லா தெரியுமா....
ரௌடி : தெரியும் மேடம்.... இந்த பாருங்க... இந்த காடுல கூட அது பேரு சனான்னு தான் இருக்கு... என அப்பெண்ணின் கல்லூரி ஐடி கார்டை காட்டினான்.... அதிலும் அப்படியே இருக்க....
பரமேஷ்வரன் : சரி அப்போ வேலைய அரம்ச்சிருங்க... தேவர்ஷினி ய கடத்த சொன்னனே... முடிஞ்சிதா....
லலித்தா : ம்ம் இல்லங்க... அவ எங்கையோ ஓடிப்போய்ட்டா....
" ஓடிப்போறதுக்கு அவ ஒன்னும் உன்ன மாரி கீழ் தரமான வேலைய செய்யல " என்ற குரல் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்ப.... அங்கோ கோவத்துடன் நின்றுக் கொண்டிருந்தான் அர்ஜுன்.... அவன் பின் அதே கோவத்துடன் நின்றாள் நம் வர்ஷி....
அர்ஜுன் : நம்ம இடம் எப்டி இவனுக்கு தெரிஞ்சிதுன்னு பாக்குறீங்களா.... இடம் மட்டும் இல்ல... எல்லாமே தெரியும் எனக்கு... எவ்ளோ தைரியம் இருந்தா... நேத்து இரெண்டு பொண்ணுங்கள விக்க பாத்ததும் இல்லாம... இன்னைக்கு திரும்ப அதே வேலைல எறங்கீர்ப்பீங்க... என கத்த...
பரமேஷ்வரன் : அப்போ... நேத்து அந்த பொண்ணுங்க தப்பிச்சு போனதுக்கு நீ தான் காரணமா....
அர்ஜுன் : ஆமா நான் தான்... உங்க சாம்ராஜ்யம் மொத்தத்தையும் அழிக்க போறேன்.. எல்லா ஆதாரத்தையும் போலீஸ் கிட்ட ஒப்படைப்பேன்....
லலித்தா : அதுக்கு நாங்க விட்டாதான டா... என ரௌடிகளிடம் கத்த.... ஒருவரொவரும் அர்ஜுனிடம் சண்டையிட தொடங்கினர்... அவர்களிடம் சரிக்கு சமமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அர்ஜுன்.... " அஜ்ஜு " என்ற வர்ஷியின் அலரலை கேட்டு பதறி திரும்பினான்.....
அங்கு லலித்தா வர்ஷியை தன் முன் வைத்து.... அவளின் பின்னந்தலையில்.... துப்பாக்கியை வைத்திருந்தார்... இன்னோறு பக்கமோ.... மயங்கியிருந்த மூன்று பெண்களின் தலைகளிளும் துப்பாக்கி இருந்தது.... அதை கண்ட அர்ஜுன் பதற....
லலித்தா : என்ன... என்ன... இவள காப்பாத்தப்போறியா... இல்ல அவளுங்கள காப்பாத்த போறியா.... சொல்லு சொல்லு... என கத்த...
வர்ஷி : அஜ்ஜு.... என்ன விற்று... சனாவையும் மதுவையும் காப்பாத்து... நா செத்தாக்கூட பரவால்ல... ப்லீஸ்...
அர்ஜுன் : எப்டி வர்ஷி... நீங்க மூணு பேருமே எனக்கு முக்கியம்.... என கத்த.... மூடப்பட்டிருந்த மதுவின் முகத்திறையில்... அவளின் கண்கள் அசைவது தெரிந்தது அர்ஜுனிற்கு... அதே போல் அருகிலே இருந்த நிரு... கை விரலை ஆட்டி காட்ட.... ஒருவாறு புரிந்துக் கொண்டவன்... இருவரையும் அமைதி காக்கும் படி கண்ணாலே கூறினான்....
அர்ஜுன் : தப்புக்கு மேல தப்பு பன்றீங்க... அவ உங்க பொண்ணு... அவளையே கொல்ல பாக்குறீங்களே...
லலித்தா : பெத்த பொண்ணா இருந்தாலும் பணத்துக்கு முன்ன எனக்கு அவ தூசி டா...
அர்ஜுன் : ப்லீஸ்... என் ப்ரெண்ட்ஸ விற்றுங்க....
லலித்தா : முடியாது... முடிஞ்சா... நீ இந்த இரெண்டு பேர்ல யாரையாவது ஒருத்தர காப்பாத்திக்க.... உன் வர்ஷியா.... இல்ல உன் சனா வா....
வர்ஷி : ப்லீஸ் அஜ்ஜு... என்னப்பத்தி கவலப்படாத... சனா மதுவ காப்பாத்து....
அர்ஜுன் பதிலளிக்கும் முன்னே.... பரமேஷ்வரனின் துப்பாக்கி குண்டு... அவன் தோளை துளைத்து சென்றது.... ஒரே நேரத்தில் வர்ஷி மது நிரு மூவரும் அஜ்ஜு என அலரினர்.... விடாமல் மொத்த குண்டையும் அர்ஜுன் மேல் இறக்கிவிட்டே அமைதி அடைந்தார் பரரேஷ்வரன்... மூச்சற்ற அர்ஜுன்... அப்படியே கீழே சரிந்தான்.... மெல்ல அவனின் மூச்சும் தானாக நின்றது....
சிரித்துக் கொண்டே லலித்தா வர்ஷியை விட.... கீழே விழுந்த வர்ஷி... எழுந்து அர்ஜுன் அருகில் ஓடிச் சென்றாள்... அவனை தன் மடியில் கிடத்தியவள்... கத்தி அழ தொடங்கினாள்....
லலித்தாவின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு வர்ஷியின் இடது தோளை துளைக்க.... அடுத்த நொடி கீழே விழுந்தாள் வர்ஷி.... மதுவும் நிருவும் ஒரே நேரத்தில் அலர... அதை கண்டு சிரித்த பரமேஷ்வரன்.... " வேலைய முடிச்சிடுங்க டா...." என கூறிவிட்டு லலித்தாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்....
வெடுக்கென எழுந்த மது நிரு... பெரும் பாடு பட்டு... தங்களின் கயிறை அவிழ்த்து விட்டு அர்ஜுன் வர்ஷியின் புறம் ஓடினர்....
திடீரென மூச்சை இழுத்து விட்டான் அர்ஜுன்... கண்களை அகல விரித்தவன்....
அர்ஜுன் : ஏ என...க்கு ஒன்னும்... இல்..லடி... வா.ங்..க... போலாம்.... அருகில் கிடந்த தண்ணியை எடுத்து வர்ஷியின் முகத்தில் தெளித்தாள் மது... மெல்ல மெல்ல கண்களை திறந்தவள்... அவர்களின் கண்ணம் வருடி.... " உங்களுக்கு ஒன்னும் இல்ல..ல..." என தடுமாற்றத்துடன் வினவ....
மது : ஒன்னும் இல்ல டி... நீ எந்திரி... நாம இங்க இருந்து போகலாம்.. என கை தாங்களாய் அவளை தூக்க... நிரு அவளுக்கு இன்னோறு பக்கம் பிடித்துக் கொள்ள.... அர்ஜுன் அவனின் சட்டையை கலட்டி.... குண்டடி பட்ட இடத்தை இருக்கி கட்டிக் கொண்டான்.... வர்ஷியின் ஷாலை அவளின் தோளில் இருந்து இடை வரை இருக்கி கட்டினான்.... வலியில் அலரினாள்.... பரமேஷ்வரன் லலித்தாவை விட சென்ற ரௌடிகள் வெளியிலிருந்து உள்ளே வர....
நிரு : ஷனா... நீயும் வந்துடு ... வா... என அந்த பெண்ணையும் அழைக்க....
ஷனா : இல்ல நரஞ்சனா... நா வந்தா ஒரு பிரயோஜனமும் இல்ல.... நீங்க கெளம்புங்க...
மது : ஹே பேச நேரம் இல்ல வா மா....
ஷனா : புரிஞ்சிக்கோங்க.... ஐ ம் இன் மை லாஸ்ட் ஸ்டேஜ் ஆப் கேன்ஸர்... நான் இன்னைக்கோ நாளைக்கோ செத்துருவேன்.... பிகாஸ் என்ன இவங்க கடத்தும் போதே நா தப்பான டப்லெட் போட்டுட்டேன்.... சோ என்ன காப்பாத்துரது முடியாத காரியம்.... சோ கெளம்புங்க... என அவர்களை தொரத்திவிட்டாள்....
துப்பாக்கி சூட்டின் சத்தம் காதை கிளித்தது.... காட்டிற்குள் நுழைந்து ஓடத் தொடங்கினர் நாழ்வரும்.... அவ்வளவு குண்டுப்பட்டும்.... பாடுப்பட்டு அவர்களுடன் ஓடினான் அர்ஜுன்.... திடீரென அர்ஜுன் ஓரிடத்தில் விழ..... எங்கிருந்தோ வந்த கட்டை நிருவின் காலில் பட்டு... அவளை தடுக்கி விட.... வர்ஷியுடனே கீழே விழுந்தாள் நிரு..... ஆனால் அவர்களின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ.... வர்ஷியை பிடித்திருந்ததால்.... தடுமாறிய நிரு.... அப்போதே அர்ஜுன் விழுந்ததை கவனித்தாள்.... தன் உடலில் அழுத்தம் கொடுத்து நிலை படுத்திக் கொண்டவள்.... எதிர்பாராதவிதமாய் பள்ளம் இருப்பதை அறியாமல் கீழே விழுந்தாள்.... வர்ஷி மதுவின் பாதுகாப்பிற்காய் அவர்களை உதரிவிட்டு விழுந்தாள்.....
அவள் விழுந்த வேகத்திற்கு.... நிலையில்லாமல் மது மற்றும் வர்ஷி.... பக்கத்தில் இருந்த மேடான பாதையில் விழுந்தனர்....
அதை அறியாமல் அங்கே வந்த ரௌடிகள்.... அர்ஜுன் கீழே கிடப்பதை கண்டு.... இருட்டில் சுட்டனர்.... சுடும் சத்தம் கேட்டு.... மூவரும் ஒன்றாக அஜ்ஜு என அலர.... அதை கேட்ட ரௌடிகள் இங்கு வர.... பள்ளத்தில் ஒன்றும் தெரியாமல் இருக்க.... அதன் ஆழத்தை அறிந்ததால் செத்துவிடுவார்கள் என இப்புறம் திரும்ப.... அங்கே மதுவும் வர்ஷியும் ஒரு மரத்தின் வேரை பிடித்துக் கொண்டு இருக்க... அதை இருட்டில் காண முடியாமல்.... எங்கெங்கோ சுட... ஒரு குண்டு... மதுவின் கையில் துளையிட... ஆ என கத்த.... இன்னோறு குண்டோ வர்ஷியின் தோளை உரசி விட்டு சென்றது.... இருவரும் வலியிலே மயக்கத்தில் ஆழ்ந்தனர்.... அந்த மேடான பாதையில் இறங்கிய ஒரு ரௌடி சரியாக ஒருவளை தூக்க.... அவன் காலிற்கும் சற்றே அருகில் ஏதோ உருண்டு விழும் சத்தம் கேட்க... " ச இன்னோன்னு பல்லத்தாக்கு ல விழுந்துடுச்சே " என நொந்தவாறு தூக்கிய பெண்ணை மட்டும் தூக்கிக் கொண்டு மேலேறினான்..... அவளின் நெஞ்சில் ஒரு குண்டு பாய்ந்திருப்பதை கண்டு... அது வர்ஷி தான் என கண்டுக் கொண்டு... கீழே கிடந்த அர்ஜுனின் சடலத்தையும் தூக்கிக் கொண்டு சென்றனர்... இவை அனைத்தையும் அரை மயக்கத்திலே கேட்டு... உணர்ந்துக் கொண்ட... நிரு..... வர்ஷி என கத்தியவாறே மயக்கமடைந்து அப்பள்ளத்தில் பிடித்திருந்த கல்லை விட்டு.... மீண்டும் கீழே விழுந்தாள்....
காலை விடிய..... ஊட்டியில் கனமழை பேயத்தொடங்கியது.... மழையின் தாக்கத்தாலும் வலியாலும் கண் விழித்த மது.... அருகில் வர்ஷி இல்லாததை கண்டு... அங்கங்கு தேடினாள்... ஆனால் அங்கு யாருமே இல்லை.... மிகவும் கடினப்பட்டு... வேரை பிடித்து ஏறியவள்.... கையின் வலி உயிர் போக.... அதை பொருட்படுத்தாது... பெரும் பாடு பட்டு மேலே ஏறினாள்.... அங்கோ எவரையும் காணாது.... அந்த பள்ளம் நினைவு வந்து... உள்ளே எட்டி பார்த்தாள்.... 30 அடியில் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்தாள் நிரு..... அவளும் சிறிது சிறிதாக மயக்கத்திலிருந்து விடு பட.... தான் உயிரோடு தான் இருக்கிறோம் என உணர்ந்து... மேலே நோக்கியவள்... மதுவை கண்டு.... மது என மெதுவாய் அழைத்தாள்..... அதை கண்டு... நிம்மதி மெருமூச்சு விட்ட மது.... அருகில் கிடந்த வேரின் உதவியுடன் நிருவை மேலே வர வைத்தாள்.... இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு அழ தொடங்கினர்....
மது : அஜ்ஜு வர்ஷிய காணும் டி....
நிரு : அவங்கள கொன்னுட்டாங்க டி... என நடந்ததை கூற.... அழ மட்டுமே முடிந்தது மதுவால்.... உடனே இருவரும் அங்கிருந்து கிளம்பினர்..... மருத்துவமனை அடைந்ததும் மதுவிற்கு கட்டிட்டு.... அவளை அழைத்துச் சென்றாள் நிரு..... ஏதோ நினைவு வந்த மது.... அர்ஜுனின் லப்டப்பை அவன் வீட்டிலிந்து எடுத்து வந்தாள்.... அவள் நினைத்ததை போலவே... ஒரு போல்டரில்.... லைவ் என ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருந்தது... ஆவ்வீடியோ அர்ஜுனின் வாட்சில் இருக்கும் மைக்ரோ கேமராவால் ஓடுவது... அது கடந்த இரு நாட்களாய் ஓடிக் கொண்டிருந்தது.... அப்போதே இருவருக்கும் தாங்கள் ஒரு நாள் களித்தே கண் விழித்திருக்கிறோம் என புரிந்தது....
அவ்வீடியோவை ஆன் செய்தனர்.... இதை அர்ஜுன் தேவை பட்ட நேரத்தில் தான் உபயோகிப்பான் என மதுவுக்கு தெரிந்ததால்.... அதையே நம்பி திறந்தாள்.... அங்கே சென்ற ரௌடிகள்.... குண்டடிப்பட்ட ஷனாவையும்... இறந்த வர்ஷியையும் முழுதாய் கூட காணாமல்.... கப்பல் வழி... வேறு தேசத்தில் வித்தனர்.... அர்ஜுனின் உடலை கூர் கூராய் வெட்டி கொன்றனர்.... அவை அனைத்தையும் அவர்கள் பேசியதை வைத்து கண்டுபிடித்தனர்.... இவர்கள் தாங்க முடியாமல் அழத் தொடங்க... அங்கே அர்ஜுனின் வாட்சும் உடைந்து போனது.... ஆதலால்... லைவ்வும் அப்படியே நின்றது.... அன்றிலிருந்து.... கழுகாய்
திரிந்தனர் மது மற்றும் நிரு.... நிரு வர்ஷியின் ஆசை படி ரிப்போர்ட்டரானால்... மெல்ல மெல்ல அனைத்தையும் கண்டறிந்தனர்.... டெக்ட்ரான் ஆராய்ச்சியை கென் செய்கிறார் என அறிந்து.... அவர் பணத்திற்காய் விக்க நினைத்ததால் கொன்றனர்.....
அனைவரின் கண்களிளும் கண்ணீர்.... வர்ஷி மற்றும் அர்ஜுனின் முடிவு இப்படி இருக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.... சிறிதும் இரக்கமில்லாமல் நடந்து கொண்டவர்களை எண்ணுகையிலே.... கோவம் கொப்பளித்தது அனைவருக்கும்.... இதுவரை ஆலமரத்தின் மேல் அமர்ந்து இவை அனைத்தையும் கேட்ட மர்மக்கண் உருவமும் தன்னை அறியாமல் வந்த கண்ணீரை துடைத்தது....
நிரு : அஜ்ஜு தான் எங்களுக்கு மிமிக்ரி க்லஸ் எடுத்தான்... அவன் சின்ன வயசுல இருந்தே.... மிமிக்ரி ஆர்ட்டிஸ்... இதில் ஏதோ இடிப்பதாய் தோன்றியது நாயகன்களுக்கு....
ரித்விக் : என்ன சொல்ற நிரு.... எந்த அர்ஜுன்.... அவன எங்..களுக்கு தெரி..யு..மா... என திக்கி தினரி கேட்க....
மது : தெரியும் டா....
நாயகன்கள் : என்ன மா சொல்ற...
மது : ஆமா டா.... அவன் உங்க கூட படிச்ச அதே அர்ஜுன் தான்....
நம் அர்ஜுனின் தோழர்கள் நம் நாயகன்கள் தான்....
வாயடைத்து போயினர் நாயகன்கள்.... அவர்களின் உயிர் தோழன்... எங்கோ இருக்கிறான்... என நினைத்திருந்தவர்களுக்கு.... இறந்துவிட்டான் என்னும் செய்தி... மனதில் பூகம்பத்தை உண்டாக்கியது....
நிரு : இப்போ சொல்லுங்க டா... நா பன்னது தப்பா... சொல்லுங்க...
பவி : இல்ல நிரு.... நீங்க பன்னது தான் சரி....
நாயகிகள் :நீங்க பன்னது தப்பே இல்ல டி... என அழுதுக் கொண்டே கட்டிக் கொண்டனர்....
நாயகன்கள் : நாங்க செய்ய வேண்டிது நீங்களே செஞ்சிட்டீங்க டி....
திடீரென நம் சத்தீஷின் போன் அடிக்க.... ஏதோ ஆதாரம் கிடைத்ததாய் கான்ஸ்டபில் கூறினார்.... உடனே ரித்விக் முகில் க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் கிளம்ப... அதே நேரம் வீரின் மொபைல் அலர.... அதை எடுத்தவன்.... பேஷன்ட் சீரியசாக இருப்பதாகவும்... உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென ஒரு டாகக்டர் கூற..... அஷ்வன்த் ரவி ரனீஷ் வீரும் கிளம்ப.... நாயகிகள் வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே இருப்பதாய் கூற..... சரி பத்திரமாய் இருங்கள் என கூறிவிட்டு நகர்ந்தனர்..... மண்டபத்தினுள் இருந்த நாயகிகள் ஆலமரத்தின் திடலில் அமர....
அப்போது அவர்களே எதிர்பார்க்காத சமயம்.. காற்று பலமாய் வீச தொடங்கியது.... அனைவரும் சுற்றி முற்றி நோக்க.... நொடியில் அங்கு ஏதோ புகை உருவாக.... அவர்கள் கண்களை திறக்கும் நொடி அனைவரும் அதிர்ச்சியில் தள்ளப்பட்டனர்.... நாயகிகள் அனைவரின் கழுத்திலும் கத்தி கூர்மையாய் காத்திருந்தது.... அவர்கள் பின் நெட்ட நெட்டையாய் விகாஷ் ஆகாஷ் நகாஷ் அனுப்பிய ரௌடிகள் நிற்க.... திமிறியவர்களை இருக்கி பிடித்தனர்....
ப்ரியா : ஏய் விடுங்க டா... யாரு டா நீங்க...
ரௌடி : உங்க யாரையும் உயிரோட விடப்போறதில்ல... எங்க பரமேஷ்வரன் சாரயும்... லலித்தா மேடத்தையும் கொன்னானுங்கல்ல.... உங்கள கொன்னு அவங்களுக்கு சாவே வராம சாவடிக்கிறோம் பாரு... என கத்த....
திவ்யா : அது உங்களால முடியாது டா... என அவன் கரத்தை முருக்கி கீழே தள்ளினாள்...
மற்றவள்களும் அதே போல் செய்ய..... நிருவை பிடித்திருந்தவன் மட்டும் அவள் அசையும் முன்னே அவளின் கழுத்தை நெரிக்க.... மற்ற நாயகிகள் அதை கண்டு பதற..... ஓடப்போன நாயகிகளை அவர்கள் குத்த முயல.... ஓடாதீங்க டி என கத்தினாள் நிரு.... நாயகன்களும் இல்லாமல் என்ன செய்வதென தெரியாமல் நாயகிகள் முளிக்க..... ஒவீயோ அவளை பிடித்திருந்த ரௌடியின் கைகளை திருப்பி.... கழுத்துக்கு மேல் கொண்டு வந்தவள் அவனை கீழே தள்ளினாள்.. அவன் கையை அசைக்க முடியாமல் அலரினான்....
அடுத்தவனை அடிக்க போனவளுள் திடீரென மின்சாரம் பாய.... நகர முடியாமல் அப்படியே நின்றாள்.... இதனை பயன்படுத்திக் கொண்ட கீழே விழுந்த ரௌடி எழுந்து அவள் கழுத்தை நெரிக்க தொடங்கினான்.... அதை கண்டு நாயகிகள் மீண்டும் திமிற... பாடுபட்டனர்... நிருவோ அவள் கழுத்தை நெரித்தவனின் கையை கடித்து விடுபட.... ஆவென அலரியவன்... என்னையே கடிக்கிறியா... என நிருவின் கழுத்தை பிடித்து நெரித்து மேலே தூக்கினான்....
மற்ற நாயகிகள் கதற.... ஒவீயும் நிருவும் ஒரே நேரத்தில் காலை ஆட்ட.... திடீரென ஏதோ சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க.....
அங்கோ ஒவீ நிரு இருவரின் பின்னும்..... ஒரு நிழல் தெரிய.... புலுதி பறக்க... மரத்திலிருந்து யாரோ குதிக்க..... ரௌடிகள் கண்களை விரித்து நோக்க.... நாயகிகள் பயந்துக் கொண்டே நோக்க.... அங்கோ யாரோ ஏதோ ஒரு துணியை அவில்த்து எரிய.... அனைவரும் அங்கேயே நோக்க..... யாரோ நிற்க.... அவர் தோளின் பின்..... நின்றவனை கண்டு மது நிரு இருவரும் பேரதிர்ச்சியில் அஜ்ஜு என கத்த...... பின் நின்றவன்.... அவன் முகத்தில் கை வைத்து ஏதோ செய்ய.... அதை கண்டே குழம்பிய பெண்கள்.... அவன் முகத்திலிருந்த எதையோ தூக்கி எறிந்ததும் அதிர்ச்சியின் உச்சத்தில் மூச்சையே விட முடியாமல் தவித்தனர்....
புலுதியின் நடுவில் காக்கி சட்டையில் கோவம் கொப்பளிக்க.... முகிலர்ஜுனன் என்னும் பெயர் அச்சிடப்பட்ட தங்க செயின் கழுத்தில் தொங்க... நின்றான் முகிலன்.... அவன் தோளின் பின்.... அதே போன்ற தங்கச்செயினில்.... நகுலர்ஜுனன் என்னும் பெயர் அச்சிடப்பட்டிருக்க.... மர்மமான பார்வையுடன் நின்றான்..... முகிலின் மறு உருவம்.....
காதல் தொடரும்...
Hiii guys.... how was the ud.... Kolaverila yasrum enna kolla vandhudaathega pa...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro