Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்- 33

தன் முன் நின்றவனை முளித்து முளித்து பார்த்துக் கொண்டிருந்தாள் நிரு.... கூட்டம் நொடியில் அங்கு கூடியது... அவர்களை சுற்றி நின்றது அனைத்தும்.... சீனியர்ஸ்.. ஜூனியர்ஸ்.. சூப்பர் சீனியர்ஸ்... சில ஆசிரியர்கள்... ஒருவர் கூட அடிப்பதை நிருத்த கூறி குரல் கொடுக்கவில்லை.... அனைவரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.... சில ஆண்கள் இருந்த ஒரு கூட்டம் மட்டும்.... " அடி அடி... நல்லா அடி.... சூப்பர் சூப்பர் " என கத்திக் கொண்டிருந்தது.... அதே கூட்டத்தில் புன்னகையுடன் நின்றான் நம் அர்ஜுன்....

தீரா : எல்லாரும் அர்ஜுன் அடிச்சான்னு தான நெனச்சீங்க.... ஹிஹி... இல்ல....

அடித்தவன்.... கையை முருக்க .... அடி வாங்கியவன்... பார்ட் பார்ட்டாய் தொங்கிவிடுமோ என நினைத்து  கண்ணங்களை பிடித்தபடி எழுந்தான்..... அப்படிப்பட்ட அறை.... கூடியிருந்த மொத்த கூட்டமுமே பாதி மைதானத்தை நிறப்ப..... அந்த மொத்த கூட்டமும்.... " ஆதித்தன் ஆதித்தன் " என கரகோஷம் போட்டது.....

அவன் : சாரி அண்ணா....

ஆதித்தன் : சாரி யாம் சாரி... அந்த பொண்ணுங்கள்ட்ட சொல்லு டா... என கர்ஜிக்க...

உடனே நிரு தேவர்ஷினியிடம் " சாரி தங்கச்சிங்களா... மன்னிச்சிடுங்க " என கூறிவிட்டு... ஓடாத குறையாக அங்கிருந்து அவன் அடிப்பட்ட கூட்டத்துடன் நகர்ந்தான்.... அவனே அடிவாங்கும் பொழுது அவன் உடன் இருந்த கூட்டம் கையை வீசிக் கொண்டு போலாமா... ஆதித்தனை அடிக்க சொல்லி ஊந்திக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் சிறப்பான பரிசுகளை கொடுத்து வழியனுப்பி இருந்தது....

ஆசிரியர்கள் அங்கிருந்து நகர்ந்து விட.... அவன் நண்பர்கள் கூட்டம் எடுத்து வந்திருந்த மைக்கை கையில் வாங்கினான் ஆதித்தன்...

ஆதித்தன் : லிஸென் ஃப்ரென்ட்ஸ்... நம்ம காலெஜ் ரூல்ஸ் படி... நோ ரகிங்... அந்த ரூல்ஸ தாண்டி ப்ரெண்ட்லியா நடக்குர ரகிங் நடுவுல இந்த மாரி லிமிட் க்ராஸிங் ரகிங் எனக்கு தெரியாம நடக்குது... என கூட்டத்தை பார்க்க... அதில் சிலர் தலை குனிந்தனர்...... நடந்த வர நடந்துடுச்சு.. ஆனா இனி நடந்துச்சு.... அக்ஷன் எடுப்பது நானா தான் இருப்பேன்.... நாட் ஒன்லி திஸ் இயர்.... இனிமே என்னைக்குமே இங்க இந்த மாரி ரகிங் நடக்கக்கூடாது... ஓக்கே....???? என கேட்க..... மொத்த கூட்டமும் சரி என தலையாட்டியது....

ஆதித்தன் : அன்ட் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடென்ட்ஸ்.... உங்களுக்கு இனி எந்த ப்ரெச்சனை யா இருந்தாளும்.... என்ட்ட... இல்லனா சீனியர்ஸ்ட்ட சொல்லுங்க.... சரியா???  என வினவ.... " ஓக்கே அண்ணா " என கூக்குரலிட்டது ஒரு தனி முதலாம் ஆண்டு மாணவர்கள் கூட்டம்.... அங்கிருந்து அனைவரையும் அவன் கலைய கூற.... அவன் பேச்சை தட்டாது அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.... நிருவும் தேவர்ஷினியும் இன்னும் அப்படியே நிற்க... அவர்கள் அருகில் சிரித்தபடி வந்தான் அர்ஜுன்....

நிரு : டேய் என்ன டா நடக்குது இங்க???

அர்ஜுன் : ஏன் பாத்தா தெரியலையா??? எல்லா ஸ்டூடென்ட்ஸ் தான் நடக்குராங்க....

நிரு : டேய்.... என அவனை அடிக்க... இவ்விருவரும் இப்படி பேசியதை கண்ட அந்த அடிவாங்கியவனின் கூட்டம்..... " என்னது அர்ஜுன் அண்ணாக்கு தெரிஞ்சவங்களா???? அய்யையோ..... ஒரு வாரத்துக்கு இந்த காலெஜ் பக்கமே வரக்கூடாது " என கத்திக் கொண்டே ஓடினர்.... அதையும் கண்ட நிரு குழம்பி போய்...

நிரு : டேய் என்ன தான் டா நடக்குது?? சொல்லி தொலையேன்...

அவர்களின் அருகில் புன்னகையுடன் நெருங்கிய ஆதித்தன்... அர்ஜுனின் தோலில் கை போட்டு....

ஆதித்தன் : கூல் தங்கச்சிமா... ஏன் இவ்ளோ டென்ஷன்... அப்போது நிரு முளிக்க.... சிரித்த அர்ஜுன்...

அர்ஜுன் : இரு மச்சான் நான் சொல்றேன்.... இங்க பாரு டி... இவன் ஏன் மச்சான்... ஆதித்தன்... நம்ம காலெஜ்ஜோட ஸ்டூடென்ஸ் சர்மென்... (Students Chairman)

நிரு தேவர்ஷினி : வாட்.... என அதிர்ச்சியடைய....

அர்ஜுன் : ஆமா.... நாங்களாம் இந்த காலெஜ்ஜோட சூப்பர் சீனியர்ஸ்...

நிரு : நீ எப்போடா சூப்பர் சீனியரான??? என அதிர்ச்சியுடன் கேட்க....

ஆதித்தன் : அதல்லாம் அப்டிதாம்மா.... உங்களுக்கு எந்த ப்ராப்லமா இருந்தாளும்... தயங்காம இந்த அண்ணன்ட்ட சொல்லுங்க சரியா... இனிமே எதுக்கும் பயப்புடாதீங்க...

நிரு : அட அண்ணா.. நா பயப்புடவே இல்ல... நா வாய் பேச வாய் பேச தான் அவன் காண்டாகி அடிக்க வன்ட்டான்....

அர்ஜுன் : இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... வாயாடாத டி ன்னு..... இது உன் அக்காக்கு வேற தெரிஞ்சா அவ இன்னும் ஆடுவாளே....

நிரு அவனை பார்த்து சிரிக்க.... என்ன என அவன் கண்ணாலே வினவ... அவளும் கண்ணாலே பின்னாடி பார் என காட்ட... அங்கோ முறைத்தவாறு நின்றாள் நம் மது.... அவளை கண்டு அர்ஜுன் இளிக்க....

ஆதித்தன் : வா தங்கச்சி மா....

மது : என்ன டா நடக்குது இங்க??? ஒரு கூட்டம் அங்க... அர்ஜுன் அண்ணா கண்ல மாற்றதுக்குள்ள எங்கையாவது ஓடனும் னு ப்லன் போடுறானுங்க... அதுல பாதி பேரு... ஆதித்தன் அண்ணாவும் அர்ஜுன் அண்ணாவும் ஒன்னா கோவப்பட்டா... என்ன பன்றது... நம்ம காலெஜ மாத்தீடலாம் னு பேசிக்கிட்டு இருக்கானுங்க.... இப்டி லாம் எப்பையாவதுதான டா பேசுவானுங்க... என்ன பன்னீங்க ரெண்டு பேரும்.....

அர்ஜுன் : நான் இந்த தடவ ஒன்னுமே பன்னல டி.... உன் தங்கச்சிய அவனுங்க ரக் பன்னானுங்க.... இவ வாயாடி அவன அடிக்கவே வச்சிட்டா.... அதுக்குள்ள நம்ம ஆதி ஒரு நாழு அறை விட்டான்... அதுக்கு தான் இப்டி.... அப்ரம் நானும் இவளும் பேசிக்கிட்டு இருக்குரத பாத்து... நான் எப்பவேணா அவன அடிக்க வருவேன்னு பயந்து ஓடுனானுங்க... இப்போ ஆதியும் ஒன்னா சேர்ந்து பேசவும்... எங்க இரெண்டு பேருக்கும் வேண்டப்பட்டவங்க நாங்க திரும்ப சேர்ந்து அடிக்க வருவோம் னு நெனச்சி அப்படி பேசீர்ப்பானுங்க....

மது : என்ன டி பேசுன அவன்ட்ட..?? நிரு அனைத்தையும் கூறி முடிக்க.... அங்கிருந்து தேவர்ஷினி அகல நினைக்க.... அவள் கை பிடித்து நிருத்திய நிரு.....

நிரு : எங்க போற???

தேவர்ஷினி :.ம்ம்ம் அது க்லஸ்க்கு... என தயங்கி தயங்கி கூற....

நிரு : ஏன் இவ்ளோ தயங்குர... ஃபீல் ஃப்ரீ... நீ ஃப்ரெஷர்னு தெரியும்... நான் நிரஞ்சனா... இவ என் அக்கா... மதுரஞ்சனா... அவன் அர்ஜுன்... இது ஆதி அண்ணா... என அனைவரையும் அறிமுகப்படுத்த....

தேவர்ஷினி : ஹாய்... நான் தேவர்ஷினி... ஜர்னல் டிப்பார்ட்மென்ட்... ஃபர்ஸ்ட் இயர்... என கூற...

நிரு : ஹேய் சூப்பர் வர்ஷி... நானும் அதே டிப்பார்ட்மென்ட் தான்..... அவள் வர்ஷி என கூறியதில்... டக்கென தலை நிமிர்ந்து பார்த்த வர்ஷி... ஒரு நொடி கண் கலங்க.... அவள் கண்களை உடனே துடைத்துக் கொண்டவள்.... ஹோ என்றாள்....

ஆதித்தன் : ஓக்கே தங்கச்சீஸ்.. எங்களுக்கு டைம் ஆச்சு... நாங்க கெளம்புறோம்....

அர்ஜுன் : டாட்டா... டி.. எதாவதுன்னா காள் பன்னுங்க....

மது : சரி நானும் கெளம்புறேன்... டாட்டா... என கூறி நகர... நிரு வர்ஷியை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்கு நகர்ந்தாள்....

நிரு : உனக்கு என்ன ப்ராப்லம்னு சொல்லு டி.... என வினவ... அவளை நிமிர்ந்து பார்த்தவள்... அடுத்த நொடி அணைத்துக் கொண்டாள்.....

வர்ஷி : நம்ம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமா???

நிரு : ஹலோ மேடம்... நா உன்ன பாத்தது ல இருந்தே... நீ என் ஃப்ரெண்டு தான்.... தப்பிக்கலாம் னு மட்டும் பாக்காத டி....

வர்ஷி : எங்கையும் தப்பிக்க மாட்டேன் டி..... எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிர்க்கு... என் கிட்ட யாருமே பேச மாட்டாங்க தெரியுமா....

நிரு : வர்ஷிமா.... உலகத்துல உள்ள மனுஷங்கலால வாணத்துல உள்ள தேவதைட்ட பேச முடியாது... அந்த மாரி தான்.... தேவர்ஷினி தேவதை ட்ட யாரும் பேச முடியல... என சிம்பிலாக கூறியவளை...

வர்ஷி : அப்போ நீ பேசுற???

நிரு : ஒரு தேவதை இன்னோறு தேவதை ட்ட பேசலாம் டி...

வர்ஷி : ஓஹோ... சைடு கேப்புல உன்ன நீயே தேவதை ன்னு சொல்லிக்கிற????என கின்டலாய் வினவ....

ஈஈஈ என இழித்தாள் நிரு...

வர்ஷி : ஹாஹா.... நா எப்பவும் தனிமைலையே இருந்துட்டு... இப்போ உன் கூட இருக்கும் போது டிஃப்ரென்ட்டா இருக்கு டி....

நிரு : உன்ன யாரு தனிமைல இருக்க சொன்னது???

வர்ஷி : பொறந்தது ல இருந்தே தனியா தான் டி இருக்கேன்.... பணத்துக்கு பின்னாடி அலையிற அம்மாப்பா... எங்கையோ இருக்க... மூணு அண்ணனுங்க... என் பரென்ட்ஸோட செல்வாக்கால பயந்து போய் யாரும் என்ட்ட பேச மாட்டாங்க... எனக்கு கெடச்ச மொத ஃப்ரெண்டு நீ தான் சனா...

நிரு : அப்போ எனைக்கு ட்ரீட்வை டி வர்ஷி...

வர்ஷி : வச்சிருவோம்.... என்ன இந்த மாரி யாருமே செல்லமா கூப்ட்டதில்ல டி... சொல்லப்போனா... வீட்ல பேரு சொல்லி கூட கூப்டமாட்டாங்க.. என கவலையாய் கூற....

நிரு : அந்த கருமத்த பத்தி ஏன் யோசிக்கிற.... வா நாம என்ஜாய் பன்னலாம்... என பேசி பேசியே அவளின் மொத்த கவலையையும் இறக்கி வைத்தாள்....

ஒரே நாளிள் நெருங்கிய தோழிகள் ஆயினர் இருவரும்.... நிரு வகுப்பில் அனைவரிடமும் வாயாட... வர்ஷியோ இவளிடம் மட்டும் தான் பேசுவாள்.... இப்படியே நாட்காள் நகர.... வர்ஷி மது மற்றும் அர்ஜுனுடனும் நெருங்கி பழக ஆரம்பித்தாள்.... வர்ஷி அவளின் வீட்டில் எத்துனை துயரை சந்திக்கிறாளோ... அவை அனைத்தையும் நொடியில் சுக்கு நூராக்கினாள் நிரு....

வர்ஷியின் பெற்றோரான பரமேஷ்வரன் லலித்தாவிற்கு அவளின் நெருங்கிய தோழி சனாவை பற்றி தெரியவந்தது.... அதை பற்றி சிந்திக்காமல்... அவர்களின் தொழிலில் முன்னேறினர்.....

அர்ஜுன் மற்றும் மதுவின் படிப்பும் மேன்மேலும் முன்னேற.... ஓராண்டு முடிய.... மது மூன்றாம் ஆண்டு செல்ல... நிரு வர்ஷி இரண்டாம் ஆண்டிற்கு செல்ல... அர்ஜுன் மேற்படிப்பை தொடர்ந்தான்.... தினம் தினம்... அனைத்து இடைவேளைகளிலும் அர்ஜுன் மது வர்ஷி நிரு நாழ்வரும்... ஒன்றாக தான் சாப்பிடுவர்... என்றாவது ஆதித்தன் அவர்களுடன் இணைந்துக் கொள்வான்..... அழகான தென்றல் வீசிக் கொண்டிருந்த அவர்களின் வாழ்கையில்..... விதியின் செயலால் புயல் அடிக்க தொடங்கியது....

அன்று ஞாயிறு.... மது நிரு அறியாமல் மெல்ல வெளியே வந்தாள்..... வந்தவள்... அர்ஜுன் வீட்டிற்குள் பூணை நடையிட்டு நுழைந்தாள்..... தன் தலையை தாங்கியவாறு ஒரு அறையில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.... அவன் தோளை பிடித்த மது.... அஜ்ஜு... என அழைக்க.....

தலை நிமிர்த்தினான்....

மது : என்னாச்சு டா....

அர்ஜுன் : முடியல மது.... இந்த கேஸ நா எப்டி வெளிய கொண்டு வரதுன்னே தெரியல....

மது : என்ன தான் அச்சு..??

அர்ஜுன் : நம்ம இன்டியால மட்டும் இல்லாம பல நாட்ல இருந்து வேலைக்காக போற நெறைய பேரு காணாம போறாங்க டி... அதுவும் நம்ம வேதபுரத்துல கூட... சில பொண்ணுங்க காணாம போறாங்க...

மது : ம்ம்ம் அதான் தெரியுமே டா...

அர்ஜுன் : அதுல தான் நான் சிலத கண்டுப்புடிச்சிர்க்கேன்.... நாடு நாடா கடத்தப்படுர ஆண்கள் பெண்கள்.... குறிப்பிட்டு சில நாடுகள்ல தான் கடைசியா இருந்துர்க்காங்க...

மது : எங்க எங்க???

அர்ஜுன் : லண்டன்.... ஆஃப்ரிக்கா.... கெனடா.... கொரியா....

மது : வேற எதுவுமே தெரியலையா???

அர்ஜுன் : இல்ல....

மது : இப்போ என்ன பன்னலாம் னு இருக்க....

அர்ஜுன் : தெளிவா முடிவெடுக்க முடியல... ரொம்ப கொழப்பமா இருக்கு....

மது : அஜ்ஜு.... ரிலாக்ஸ் யுவர் செல்ஃப்.... என்னவா இருந்தாளும்... அதுக்கு ஒரு ஆரம்பம் இருக்கும்... அந்த ஆரம்பம் ஒரு குறிப்பிட்ட புள்ளி ல தான் இருக்கும்.... அது எங்கன்னு யோசி.... உனக்கு ஆறுதல் னு சொல்ல நான் இருக்கேன்... அத நியாபகம் வச்சிக்க.... ஆனா சிலருக்கு அது கூட இல்ல... அவங்க தான் காணாம போயிருக்காங்க.. அவங்களுக்காக நாம கண்டுப்புடிக்கனும்... ந்யூஸ் ல வந்தா தானா எல்லாமே கண்டுபுடிக்கபடுவாங்க...

குழப்பத்தில் இருந்தவனை சரியான ஆறுதல் கூறி தாயாய் அரவணைத்தாள் மது....

இதுவரை கேட்டுக் கொண்டிருந்தவர்ளுக்கு தடையாய் கேட்டது முகிலின் போன் ரிங்டோன்.... அனைவருக்கும் அப்போதே தாங்கள் இருக்கும் இடம் உறைத்தது.... முகில் போனை எடுக்க... அதுவோ தானாக கட்டானது... நம் க்ரிஷ்ஷோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.... அவனின் நினைவு முழுவதும் மது கூறிய "என்னவா இருந்தாளும்... அதுக்கு ஒரு ஆரம்பம் இருக்கும்... அந்த ஆரம்பம் ஒரு குறிப்பிட்ட புள்ளி ல தான் இருக்கும்.... அது எங்கன்னு யோசி.... " இவ்வார்த்தைகளிளே நிலைத்து இருந்தது.... அவனின் மூளை மொத்தத்தையும் கிளரி கொண்டிருக்க.... சட்டென கண்களை திறந்தவன்.... நாயகிகளை இங்கேயே இருக்கும் படி பணித்துவிட்டு.... மற்ற நாயகன்களை இழுத்துக் கொண்டு முகிலின் ஆபீஸிர்க்கு சென்றான்.....

நாயகிகளோ " எங்க போறானுங்க " என யோசித்தவாறு அமர்ந்திருக்க.... நேரம் போகாமல் சலிப்பு காட்ட.... " சரி வாங்க மண்டபத்துக்குள்ள எதாவது பாப்போம் " என மண்டபத்தினுள்ளே சென்றனர்....

ஷ்டேஷனிற்கு வந்த க்ரிஷ்.... இந்த கேஸ் பற்றிய அத்துனை ஃபைல்ஸ்களையும் தேட கூறினான்..... அனைவரையும் அவ்வேலையில் ஏன் என்றே தெரியாமல் மூழ்க..... அரைமணி நேர தேடலின் பின் ஐந்து வருடம் முன்... இவ்வழக்கில் காணாமல் போய்.... பதிவாகியிருந்த முதல் கேஸை தேடி எடுத்தான் க்ரிஷ்.... அதை புரட்ட தொடங்கியவன்.... அந்த முதல் கேஸ்.... பன்க்காங் சென்றதில் தான் காணாமல் போயிருக்கிறதென கண்டுக் கொண்டான்....

க்ரிஷ் : கண்டுபுடிட்சிட்டேன்.... இந்த மாரி கடத்துரவன்... பன்க்காங் ல தான் டா இருக்கான்.....

ரித்விக் : எப்டி டா சொல்ற???

க்ரிஷ் : நம்ம உலகத்துல யாரு.. எது பன்னாலும்... நல்லதோ கெட்டதோ.... எத ஆரம்பிச்சாலும்... அத அவங்க இருக்குர இடத்துல தான் டா ஆரம்பிப்பாங்க... லைக் தட் சோ... இந்த கேஸ் ல... அஞ்சு வர்ஷத்கு முன்னாடி பன்காங் ல தான் முதல் முதல்ல ஒரு ஆண் காணாம போபிருக்கான்... சோ த என்ட்டயர் க்ரைம் வாஸ் ஸ்டார்ட்டட் ஃப்ரம் பன்க்காங்...

சத்தீஷ் : சூப்பர் டா... க்ரிஷ்.... அப்போ ஆரம்ச்சிரலாம்.. என அவனின் லப்பை எடுத்தவன்.... ஏதோ செய்ய தொடங்கினான்.... பல மணித்துளிகள் கடக்க..... மச்சான்ஸ்... என அழைத்தவன் அருகில் அனைவரும் ஓட.... அவனின் லப்பில் நூறிர்க்கும் மேற்பட்ட சிலரின் படங்கள் வந்தது...

சத்தீஷ் : இவங்க எல்லாருமே பன்க்காங் ல பணத்துக்காக தொழில் பன்றவங்க... இதுல இந்த கடத்தல பன்றது எவன்னு எப்டி டா கண்டுபுடிக்கிறது....

சிறிது நேரம் அனைவரும் சிந்திக்க.... சட்டென இந்திரன்...

இந்திரன் : டேய் முகில்... பரமேஷ்வரன் கால் டீட்டெயில்ஸ் வாங்குனோம் ல.... அது எங்க???

முகில் : இரு டா எடுத்துட்டு வரேன்... என அதை தேடி எடுத்து வந்தான்....

அஷ்வன்த் : இது எதுக்கு டா....

இந்திரன் : நம்ம கணிப்புப்படி... இந்த கேஸ்க்கும் பரமேஷ்வரனுக்கும் சம்மந்தம் இருக்கு... சோ அவரு பன்க்காங் ல உள்ள எதாவது நம்பருக்கு பேசியிருந்தா.... டெஃபெனெட்லி... ஹி ஈஸ் தி கல்ப்ரிட்... ( Definitely... he is the culprit)

ரனீஷ் : நல்ல ஐடியா டா....

இந்திரன் : ஆனா கெடைக்குமான்னு தெரிலையே டா...

சத்தீஷ் : பாக்குறேன் இரு டா... என லப்பை நோண்ட தொடங்கியவன்... பத்து நிமிடத்தின் பின்.... ஒரு லண்லைன் நம்பரை கண்டுபிடித்தான்.....

க்ரிஷ் : அது எந்த லண்லைன் னு பாரு டா....

சத்தீஷ் : ஏதோ ஒரு கம்பெனியோட லண்லைன் டா....

வீர் : கம்பெனி பேரு????

சத்தீஷ் : VAN varan group of companies....

ரித்விக் : பரமேஷ்வரன் லலித்தா ஓட கம்பெனி கூட வரன் குரூப் ஆப் கம்பெனி தான் டா....

க்ரிஷ் : இது VAN வரன் டா... அப்போ...

ரவி : பரமேஷ்வரனுக்கு ரொம்ப தெரிஞ்சவங்களா இருக்கனும்.....

ரனீஷ் : அவருக்கு புள்ளைங்க இருக்காங்களா டா....

ரித்விக் : பொண்ணு நம்ம நிரு ப்ரெண்டு தேவர்ஷினி.... வேற தெரியலையே...

முகில் : டேய் வர்ஷிக்கு மூணு அண்ணனுங்க இருக்காங்க ன்னு நிரு சொன்னாளே....

சத்தீஷ் : ஆமா.... பரமேஷ்வரன் லலித்தாக்கு மூணு பசங்க.... விகாஷ்வரன்... ஆகாஷ்வரன் நகாஷ்வரன்.... அன்ட் தெ ஆர் தி ஃபௌண்டர் ஆஃப் VAN VARAN GROUP OF COMPANIES.... என்று முடித்தான்....

அஷ்வன்த் : அவனுங்க போட்டோ இருக்கா டா.???

சத்தீஷ் : இரு டா பாக்குறேன்.... என தேடியவன்... ஒன்றை க்லிக் செய்து காத்திருக்க.... அனைவரும் அவன் பின் நின்று... அவர்களின் முகம் காண ஆவலாய் இருக்க... பாலாப்போன நெட்வொர்க் அப்போது மிக மெதுவாய் சுற்ற.... அவர்களின் பொருமையை சோதிக்காமல் க்லியரானது புகைப்படங்கள்..... ஆறடி இளைஞன்கள்.... ஒரே முக சாயலில்... அதிகார தோரணையுடன் நின்ற அம்மூவரை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைய... க்ரிஷ் இந்திரன் சத்தீஷிற்கு கோவம் தலைக்கேறியது....

முகில் : நமக்கு மூணே வில்லன்ஸ் தான் டா.... இவனுங்க தான் அது.... என காட்ட.....

உடனே லப்பை மூடினான் சத்தீஷ்....

இந்திரன் : கெட் ரெடி பாய்ஸ்.... இந்த மூணு பேரோட சாம்ராஜ்யத்தோட அடிமட்டம் வரை அலசுங்க.... சீக்கிரமே இவனுங்கள தூக்குறோம்.... என்க... அதிவேகமாய் செயல்பட்டு சில நொடிகளிளே லிலௌன் உற்பத்தியாவதை கண்டுபிடித்தனர்....

முகில் : இதுல இவனுங்க வேற ஏதோ பெருசா செய்ரானுங்க டா....

க்ரிஷ் : லிலௌன் னா அது ஒரு பூ டா.... அத ஏன் இவனுங்க வாங்குறானுங்க... வாங்குறதே தப்பு தான்....

ரித்விக் : டேய்... அவனுங்க வேற ஒரு கம்பெனியோட ஒரு சர்வதேச கான்ட்ரக்ட்ல இருக்கானுங்க டா.... எதையோ வாங்குரதுக்காக அந்த கம்பெனி இவனுங்களுக்கு 900 கோடி தந்துருக்கு....

ரவி : 900 கோடியா....???

ரித்விக் : அதுவும்... அது வெரும் அட்வான்ஸ்ஸா தான் வாங்கீருக்கானுங்க....

அஷ்வன்த் : அவ்வளவையும் அட்வான்சா வா???

ரித்விக் : ம்ம்ம் ஆமா... என சேகரித்ததை பார்த்து கூறினான்....

மண்டபத்தில்....

கருங்கல்லால் ஆன சிலையை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒவீ..... பார்க்கவே வித்யாசமாய் இருந்த அச்சிலையை தொட்டு மெல்ல வருடியவளுக்கு ஏதோ தன் பின் இருப்பதாய் தோன்ற..... சட்டென திரும்பியவளின் பின் இருந்ததோ ஒரு பெண்ணின் ஓவியம்....

தன் கருங்கூந்தல் இடை தாண்டிட.... காதுகள் பெரிதாய் இருக்க.... இடையில் சங்கிலி ஒன்று ஆட.... விழிகள் இரண்டும் கத்திரிப்பு திறத்தில் மினுக்க.... இதழ் இரண்டும் இருகி... நெற்றியில் குறுதி வழிய.... நடந்து வரும் பெண்ணவளின் ஓவியத்தை கண்ட ஒவீ.... கீழே ஏதோ எழுதியிருப்பதை கண்டு.... புலுதியையும் தூசியையும் தட்டி.... சுத்தம் செய்தாள்... அதிலோ.... சரிவான தமிழ் வார்த்தைகள்.....

மதி கண்டு சதியறைந்தவள்... தன் மதி இழந்து... கதி கலங்கினாள்... உயிர் நீத்தவளை வெளிக்கொணர... பிரித்தான் அவளை..... பிரிந்தவள்... மதி கெட்டு உருவெடுத்தாள் யோகனா..

இதனை கண்ட ஒவீ... அனைவரையும் அழைத்து அப்படத்தை காட்ட.... பவியோ அதிர்ச்சியடைந்து அதையே நோக்கினாள்.... அங்கிருந்த நகர்ந்த அனுவை ஈர்த்தது ஒரு குறிப்பிட்ட செதுக்கல்.... நட்ட நடு செவுரில் அழகான வேலைபாடுடன் இரத்தினக்கல் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது.... அதை சுற்றி செங்குத்தான பலகையும் அது முக்கோணமாகவும் இருந்தது.... (காதல் - 18 ல்... க்ரிஷ் கண்டதை போன்ற கல்)  அதை மெதுவாய் தொட்டு பார்த்தவளுக்கு ஏதோ நகரும் சத்தம் கேட்டு கையை எடுத்துவிட... அச்சத்தமும் நின்றது....

இரு வேறு நிறம் கலந்த ஒரு வாளை தன் இடக்கையில் பிடித்தபடி.... வலக்கையில் ஒரு ஈட்டியை தாங்கி நின்ற அரசனின் படத்தை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.... ஓர் குறிப்பிட்ட இடத்தில் மட்டும்.... ஒளி மிகவும் மங்கி இருப்பதை கண்டு... அங்கு நகரப்போனவர்களை தடுத்தது நம் நாயகன்களின் வரவு....

குகையில் வீற்றிருந்த யோகனா... குழப்பத்தில் விகாஷ்ஷை சந்திக்க போக... அவனோ பரமேஷ்வரன் மற்றும் லலித்தா இறந்த விஷயத்தை அறிந்து... கடுங்கோபத்தில் இருந்தான்...

நகாஷ் : நாம அவர மதிக்காம வந்த ஆத்திரத்துல.... நம்மள்ட்ட சொல்லாம அவங்கள கடத்தி கொல்ல பாத்துர்க்காரு.... அந்த நேரம் அங்க போனவனுங்க... அவங்க இரெண்டு பேரையும் கொண்ணுட்டானுங்க பாய்...

ஆகாஷ் : அதுக்கூட பரவாயில்ல.... நம்ம தொழில பத்தியும் கண்டுப்புடிச்சாட்டானுங்க... ஆனா நாம தான் பன்னோம்னு கண்டுப்புடிக்கல... வேதபுரத்துல காணாம போற பொண்ணுங்கள கடத்துனதும் டட் மாம் தான்னு கண்டுப்புடிச்சுட்டானுங்க பாய்...

விகாஷ் : இனிமேலும் நம்ம சும்மா இருக்க கூடாது.... அவனுங்க எல்லாரையும் இன்னைக்கே எதாவது பன்னா தான்..... அந்த மூணு பேர.... நாளமறுநாள் பலி கொடுக்க முடியும்....

ஆகாஷ் : சரி பாய்....

மேகலாயா : கண்டாயா... மதுசூதனா... பிறவி கடந்தும்.... அம்மூவரும்... நம் பிரபுக்களுக்கு தொந்தரவு அளிப்பதை நிருத்தியபாடில்லை....

மதுசூதனா : சரிதான்....

மேகலாயா : எந்த பணியாயினும்... சரியாய் வந்து தடுத்துவிடுவர்.... என்றாள் கோவத்துடன்....

மதுசூதனா : சில தினங்கள் மட்டும் தான் இந்த தொல்லை.... அதன் பின்... எந்த தொல்லையும் நமக்கு இல்லை.....

மேகலாயா : ஆமாம்... ஹாஹாஹாஹா....

காதல் தொடரும்....


Hey idhayangale.... namma mtk... ending aa nerunguthunu nemaikiren... ungaluku thonaathu.... bt enaku thaa therium.... so koodiya seekiram nalla badiya mudikknum... pray ppannikonga pa..... tatta
Nxt ud ni8 kulla kuduka mudinja kudukuren.....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro