காதல்-32
நிரு : நீங்கலாம் நெனைக்கிற மாரி... நா பரமேஷ்வரனையும் லலித்தாவையும் கொல்ரதுக்காக நாங்களா எதுவுமே செய்யல.... நீங்க பாத்தீகளே... அர்ஜுனோட டைரி... அதுல இருந்தானே.. அர்ஜுன்... அவன் ப்லன்.... எல்லாமே.... நாழு வர்ஷத்துக்கு முன்னாடி ரொம்ப சந்தோஷமா நிம்மதியா போன வாழ்க்கைல எதிர்பாராத நேரத்துல தான் என் வர்ஷி வந்தா... தேவர்ஷினி.... பேருக்கு ஏத்தமாரி தேவதை அவ... நாழு வர்ஷத்துக்கு முன்னாடி அன்னைக்கு தான் என் காலெஜ் ஃபர்ஸ்ட் டே....
நான்கு வருடங்கள் முன்பு...
ஜுன் 06 2013
மனம் கவரும் அழகிய மலை பிரதேசம்... ஊட்டி என்கிற உதகைமண்டலம்..... தங்கள் தாயின் வீட்டில் விடுமுறை முடிந்து... உள்ளே நுழைந்தனர் மதுரஞ்சனா மற்றும் நிரஞ்சனா.... விடுமுறைக்கு வேதபுரம் சென்று வந்த இருவரும்... தற்போதே உள் நுழைந்திருக்க.... கல்லூரிக்கு தயாராக விரைந்தனர்....
மது மற்றும் நிருவின் தாய் வேணிக்கு ஊட்டியே சொந்த ஊர்... சிறு வயதிலே தாயை இழந்ததால்... சித்தியிடம் வளர்ந்த இருவரும்... அவருக்கு மகள் சஞ்சனா பிறந்ததும் ஊட்டியில் இருக்கும் தங்கள் பாட்டி வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்... மானிக்கத்தின் வர்புருத்லால்... இருந்தும் மாதம் ஒருமுறை வேதபுரம் சென்று வருவது இவர்களின் வழக்கம்.... மது முதல் ஆண்டு கம்ப்யூட்டர் ஸையின்ஸ் முடித்திருக்க.... நிரு பணிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தாள்... இருவரும் கல்லூரி படிப்பையும் ஊட்டியிலே தொடர்ந்தனர்.... ஊட்டியின் புகழ் பெற்ற காலெஜ் " ASD UNIVERSITY " இல் படித்து வருகின்றனர்....
நிருவும் அதே கல்லூரியில் ஜெர்னல் தேர்வு செய்திருந்தாள்.... மது நிருவின் பாட்டி.... அம்புஜம் இவர்களை புன்னகையுடன் வழி அனுப்ப வாயில் வரை வர... அந்த நேரம் அவர்களை தாண்டி சென்ற ஓர் பையனை கத்தி அழைத்தார் பாட்டி..... அவனோ மெதுவாய் திரும்பியவன்.... தலையில் தன்னைத் தானே கொட்டிவிட்டு.... பாட்டி அருகில் ஓடினான்....
அவன் : ஹாய் ப்யூட்டி... எப்டி இருக்கீங்க....
பாட்டி : டேய் படவா... இப்போ தான் என்ன பத்தி நியாபகம் வந்துதா உனக்கு...
அவன் : சச்ச... இல்ல பாட்டி.... நேத்து தான் ஊர்ல இருந்து வந்தேன்.... பாத்தா... வீடு பூட்டி கெடக்கு... தெருத்தெருவா அலஞ்சிக்கிட்டு இருந்தேனா... அதான் உன்ன பாக்க வரல....
பாட்டி : என் கிட்டையே காரணம் சொல்றியா.... டா படவா... என அவன் காதை பிடித்து திருக.....
அவன் : பாட்டி பாட்டி..... இந்த புள்ளைய பாத்தா பாவமா இல்லையா... ப்லீஸ் பாட்டி... என தன் காதை காத்துக்கொள்ள மன்றாடிக் கொண்டிருந்தான் அர்ஜுன்....
பாட்டி : சரி சரி... எங்க போற...
அர்ஜுன் : வேற எங்க காலெஜ்க்கு தான்....
பாட்டி : ம்ம்ம்... சரி சரி என் பேத்திங்களும் அங்க தான் போராளுங்க ஒன்னாவே போய்ட்டு வாங்க....
அர்ஜுன் : உன் பேத்திகளா?? என நிமிர்ந்து நோக்கியவன் அப்போதே கண்டான்.... நிரு மற்றும் மதுவை....
அர்ஜுன் : இவளுங்க எப்போ பாட்டி வந்தாளுங்க.... என பீதியுடன் கேட்க..
பாட்டி : ஏன் டா பீதியாகுர... காலை ல தான்...
அர்ஜுன் : ஆஹா... மறந்துட்டேனே... என அவன் ஓட்டம் பிடிக்க....
" என் டைரிமில்க் எங்க டா " என கத்தியவாறே அவனை தொரத்திக் கொண்டு ஓடினாள் நிரு...
மது மற்றும் அர்ஜுன் நெங்ருகிய தோழர்கள்.... அவர்களின் நான்காவது வயதிலிருந்தே... மது நிரு அர்ஜுன் மூவருமே வேதபுரத்தில் ஒன்றாக தான் படித்தனர்.... அர்ஜுன் மது நிருவை விட மூத்தவன்.... இவர்களின் நட்பு தொடங்கியதே ஊட்டியால் தான்.... அர்ஜுன் பிறந்து வளர்ந்தது அனைத்தும் ஊட்டி ஆஷ்ரமத்தில்.... அவனுக்கென்று யாரும் அங்கு கிடையாது.... ஊட்டியிலிருந்து வேதபுரத்தின் ஆஷ்ரமத்தில் சேர்க்கப்பட்டான்... அன்றிலாருந்து வேதபுரத்தில் வளர்ந்தவனை ஊட்டி சென்று மீண்டும் வேதபுரம் வந்த மது பிடித்துக் கொண்டாள்... அன்று பிடித்தவள் தான் இன்று வரை விடவில்லை.... நிரு வளர வளர அவளும் அர்ஜுனுடன் ஒட்டிக் கொண்டாள்.... அர்ஜுனுக்கும் சில தோழர்கள் இருக்கின்றனர்.... வேதபுரத்திலிருந்து மது மற்றும் நிரு பள்ளி மாற்றமடைய... அவர்களுடனே தன் டீசியையும் வாங்கி கொண்டு... மீண்டும் ஊட்டிக்கே வந்தான் அர்ஜுன்... அதிலிருந்து இன்னும் வலுவடைந்தது அவர்களின் நட்பு.... இப்போது அர்ஜுன் அதே கல்லூரியில் ஜர்னல் இறுதி ஆண்டில் இருக்கிறான்....
நிரு அர்ஜுனை தொரத்தி தொரத்தி அடிக்க.... மது அவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்....
அர்ஜுன் : அடியேய் மது... வந்தேன்னு வை... மரத்துல கட்டி தொங்கவிற்றுவேன்... உன் தங்கச்சிய புடிச்சு வை டி... கெக்க பெக்க ன்னு இழிச்சிட்டு இருக்க... வந்து தொல டி...
மது : அடப்போடா... என்னா..ஹாஹா ல சிரிப்பயே.. ஹாஹா அடக்க முடியல.. இதுல அவள புடிக்கனுமா... என சிரித்துக் கொண்டே கேட்க...
அர்ஜுன் : அடியேய்.... விற்று டி... ஓட முடியல டி...
நிரு : முடியவே முடியாது.. என அடிக்க....
அர்ஜுன் : அப்ப எவளுக்கும் இன்னைக்கு ஐஸ்க்ரீம் கெடையாது டி... என சட்டென நின்று கண்ணை மூடிக் கொண்டு கத்த....
சிரித்துக் கொண்டிருந்த மதுவும்... துரத்திக் கொண்டிருந்து நிருவும்... ஓரே நேரத்தில் சட்டென நிருத்திவிட்டு... ஒருவரை ஒருவர பார்த்து விட்டு " நோ " என கத்தினர்.....
கண்களை திறந்த அர்ஜுன் சிரித்துக் கொண்டே " வேணுமா வேணாமா " என்று கேட்க... " வேணும் " என இருவரும் ஒரே போல் பாவமாக கூற....
அர்ஜுன் : அப்போனா தொரத்த கூடாது.. என நிருவை பார்த்து கூற... அவள் பலமாய் தலையை ஆட்டி வைத்தாள்....
பாட்டி : ஹப்பா... ஓடிப்புடிச்சு முடிஞ்சிதுல... கெளம்புங்க காலெஜ்ஜுக்கு... என தொரத்திவிட்டு கதவை அடைத்தார்... அம்மூவரும் கதவை பார்த்து சிரித்துவிட்டு... கல்லூரிக்கு விரைந்தனர்... கல்லூரி செல்லும் வழியிலே இருவருக்கும் பிடித்த ஃப்லேவரில் ஆலுக்கு நான்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து கெஞ்சி கூத்தாடி கல்லூரிக்கு இழுத்து வந்தான் அர்ஜுன்....
கல்லூரி முதல் நாள் என ஆவலாய் நுழைந்தாள் நிரு.... மொத்த கல்லூரியின் சுற்றளவை கண்டு பிரமித்துப் போனாள்... பின்ன.... அவ்வளவு பெரிய கல்லூரியாயிற்றே.... மது அவளின் டிப்பார்ட்மென்ட்டிற்கு செல்லும் முன் நிருவை அணைத்து ஆல் தி பெஸ்ட் கூறிவிட்டு சென்றாள்....... அர்ஜுன் நிருவை அவர்களின் டிப்பார்ட்மென்ட்டிற்கு அழைத்து சென்றான்.... அங்கு வந்த பலரும் அர்ஜுனுக்கு காலை வணக்கம் கூறியும் புன்னகை வீசியும் நகர்ந்தனர்.... அனைத்தையுமே பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தாள் நம் நிரு... அப்போது அவள் க்லஸ் முன் அவளை நிற்க வைத்தவன்....
அர்ஜுன் : இங்க பாரு டி... யாராவது வம்பு பன்னா... நீயும் வாயாடிக்கிட்டு இருக்காத... என் பேர சொல்லு சரியா....
நிரு : எப்டி முழு பேரையும் நீட்டி முழங்கி சொல்லனுமா...
அர்ஜுன் : அதல்லா வேணாம்... " எனக்கு அர்ஜுன தெரியும்" னு மட்டும் சொல்லு போதும்....
நிரு : டேய்... ரொம்ப குட்டியா இருக்கு டா... நா வேணா இப்டி சொல்லவா....????
அர்ஜுன் : எப்டி???
நிரு : நா யாருன்னு தெரிஞ்சா எல்லாரும் ஓடிப் போபிடுவீங்க... நா யாரு தெரியுமா...
அர்ஜுன் : சினிமா டையலாக் லாம் பேசாத டி...
நிரு : டேய் நா இன்னும் முடிக்கல முழுசா கேளு...
அர்ஜுன் : இன்னும் வேற இருக்கா... சரி சொல்லி தொல...
நிரு : நா யாரு தெரியுமா... அர்ஜுனோட ப்யூச்சர் வைஃப் நிரஞ்சனா.... என அவனை கேலி செய்ய
அர்ஜுன் : அடி... என அடிக்க வர... துள்ளி குதித்து க்லஸிற்குள் ஓடினாள் அவள்....
வகுப்பில் போய் அமர்ந்தவள்... அமர்ந்த இடத்திலிருந்து அர்ஜுனை நோக்க... அவன் " எல்லாம் ஓக்கே வா?? " என சைகையிலே கேட்க.... " ஓக்கே " என பெருவிரலை காட்டினாள்.... " யாராவது வம்பிலித்தா என் பேர மட்டும் சொல்லு டி.... கிருக்கு தனமா... எங்கள்ட்ட... விளையாடுர மாரி உளரி வைக்காத .... புரியிதா??? " என அங்கிருந்தே கூறிக் கேட்க.... இவளும் " சரி டா சரி டா போய்ட்டு வா " என வாயசைத்து கூற.... அவன் செல்ல திரும்பியவன் மீண்டும் திரும்பி.... " ஓக்கே தான??? " என கேட்க... " ஓக்கே ஆல் பர்ஃபெக்ட் .... நா பாத்துக்குறேன் நீ போய்ட்டு வா டா " என அனுப்பி வைத்தாள்....
அடுத்ததாக அங்கிருந்து கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்டிற்கு சென்றவன்.... மதுவின் அருகில் சென்று அமர்ந்தான்... அவன் வருகைக்காய் காத்துக் கொண்டிருந்தவள்.. அவன் வந்ததும்.... எதுவும் பேசாமல்... எடுத்து வந்த உணவை அவனுக்கு ஊட்ட தொடங்கினாள்.... அவனும் அமைதியாக அவள் ஊட்ட ஊட்ட வாங்கினான்..... இது ஐந்து வயதிலிருந்து நடப்பதே.... அர்ஜுனுக்கு உணவு ஊட்டுவதை நம் மதுவின் மார்னிங் ரொட்டீன் எனவே கூறலாம்.... உணவு உண்டு முடிக்க....
அர்ஜுன் : ம்ம்.. சரி இந்தா... என ஒரு டைரிமில்க்கை நீட்ட....
மது : வாங்க மறந்துட்டேன்னு சொன்ன...??? என விழி விரிய கேட்க....
அர்ஜுன் : எப்டி மறப்பேன்???வாங்கி வீட்ல வச்சிருந்தேன்.... நா எடுத்துட்டு வரேன்னு சொன்னா... நானும் வரேன்னு உன் தங்கச்சி என் வீட்டுக்கு வந்துடுவா... அப்ரம் என் ப்ராஜெக்ட்ட பத்தி தெரிஞ்சிக்கிட்டு... ஊர் முழுக்க டமாரம் அடிச்சிருவா... அதான் சொல்லல....
மது : சரி சரி... நல்லது தான்... என பக்கெட்டை பிரித்தவள்... இரண்டாய் உடைத்து... அதில் ஒரு பங்கை உள்ளேயே வைத்துவிட்டு... இன்னோறு பங்கை இரண்டாய் உடைத்து.. ஒன்று அவனுக்கும் மற்றொன்று அவளுக்கும் என பிரித்தாள்.... அவள் பிரித்ததை கண்ட அர்ஜுன்....
அர்ஜுன் : இன்னுமா டி நீ இத விடல??? என சிரித்துக் கொண்டே கேட்க... அவனுக்கு ஒரு பீசை வாயில் போட்டு... தனக்கும் போட்டுக் கொண்ட மது....
மது : என்ன செய்ய சொல்ற... பழகீடுச்சே..... மாத்திக்க முடியாதுல....
அர்ஜுன் : ம்ம் உண்ம தான்... சரி க்லஸ் எப்டி டி போகுது???
மது : ம்ம் போகுது டா.... ஆனா இவ்ளோ சாஃப்ட்வேர் லாம் சொல்லி குடுக்குர மாரி வேற காலெஜ்ஜே கிடைக்காது டா....
அர்ஜுன் : அதுக்குத்தானே இங்க சேர்ந்தோம்... பாரு எதிர்காலத்துல உதவியா இருக்கும்....
மது : ம்ம்ம் ஆமா... உன் ப்ரெஸென்டேஷன் என்னவாச்சு டா....
அர்ஜுன் : ம்ம்ம் அதுவா.... அது... பெயில்..... என இழுக்க... மது முகம் சுருங்க ... உடனே... பெயில் ஆகாம ஸக்ஸஸ் ஆய்டுச்சு... என்றான் பட்டென்று....
மது : அத ஏன் எரும இப்டி சொல்ற... ஒழுங்கா சொல்ல மாட்ட.... என முதுகிலே இரெண்டு போட்டாள்....
அர்ஜுன் : சும்மா சும்மா...
மது : சரி விடு... நல்ல மூட்ல இருக்குரதுனால விட்ரேன்...
அர்ஜுன் : நல்ல மூடா... காலைல உன் ஆலு கனவுல வந்தாரோ...??? என இழுக்க...... நொடியில் அவளின் இதழ் அழகாய் விரிய...
மது : எரும எரும... கின்டல் பன்னாதன்னு சொல்லீர்க்கேன் ல....
அர்ஜுன் : அப்போ சொல்லு நா கின்டல் பன்னமாட்டேன்...
மது : முடியாது போடா....
அர்ஜுன் : அப்போ நானும் கின்டல் பன்னுவேன் தான்... உங்க ஆலு நல்லா இருக்காரா... என சத்தமாய் பேச... அவன் வாயை மூடியவள்....
மது : சொல்லித் தொலைக்கிறேன்.... கத்தாத டா...
அர்ஜுன் : சொல்லு சொல்லு...
தீரா : அப்டி என்ன டா அவள்ட்ட கேக்குர???
அர்ஜுன் : ஹே ஹாய் குட்டச்சி....
தீரா : அடேய்..... கொன்னுடுவேன் டா உன்ன....
அர்ஜுன் : கொல்லு பாக்களாம்....
மது : சரி சரி சண்ட போடாதீங்க.... என் லவ் ஃப்லஷ்பக்க தான் டி...
தீரா : அட ஆமா... அதப்பத்தி சொல்லவே இல்லல.... சரி சரி சொல்லு... எல்லாரும் கேக்கட்டும்....
( ஃப்லஷ்பக்கிற்குள் ஒரு குட்டி ஃப்லஷ்பக் )
5 வருடங்களுக்கு முன்.....
அப்போது மது 9 வகுப்பின் இறுதியில் இருக்க.... நம் ரித்விக் பதினோறாம் வகுப்பின் இறுதியில் இருந்தான்.... ஸ்கூல் பேக்கை அருகில் வைத்து மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் 16 வயதாகிய ரித்விக்.... அவன் தண்ணீர் குடிப்பதை போல் பாவித்துக் கொண்டிருக்க.... தூரத்தில் கேட்ட.... சைக்கில் பெல்லின் சத்தத்தில் அவன் முகம் தானாய் பிரகாசமானது... அதை வெளிகாட்டாது அமர்ந்திருந்தவனை.... தன் சைக்கிலில்.... பக்கை வைத்தவாறு.... இரெட்டை பின்னலிட்டு.... காதை கடிக்கும் குட்டி காதனியுடன்.... இரு வளையல் கையில் சினுங்க... சைக்கிலை தள்ளிக் கொண்டு அவனை கடந்தாள் பதிமூன்று வயதாகிய மதுரஞ்சனா... அவள் பின் பேக்கை மாட்டியவாறு பராக்கு பார்த்துக் கொண்டே வந்தாள் எட்டாவது படிக்கும் 12 வயதாகிய நிரு.... ஓரக்கண்ணால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள... ரித்விக்கை கண்ட நிரு... அவன் அருகில் ஓடி.... அவனிடம் கதையலக்க தொடங்கினாள்..... மதுவோ அவளுக்காய் காத்துக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தாள்.... அதன் பின் மூவரும் பள்ளிக்கு சென்றனர்....
இருவருக்கும் அலைபாயும் வயதாதலால்... தன் மனதின் உணர்ச்சிகளை இருவருமே வெளியே கூறவில்லை.... இது வயதின் கோலாராக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் அவர்களை சரியான வலையத்தினுள்ளே வைத்திருந்தது.... இருவரும் அவரவர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றனர்.... ரித்விக் பனிரெண்டாம் வகுப்பை முடிக்க.... மது பத்தாம் வகுப்பு முடித்த சில நாட்களிளே ஊட்டிக்கு அனுப்பப்பட்டாள்.... இவர்களின் இந்த திடீர் பிரிவு.... பல மாருதல்களை உருவாக்கியது இருவருக்குள்ளும்.... வாரத்திற்கு மூன்று முறையே இருவரும் எதிர்பாராமல் பார்த்துக்கொள்வர்... இப்போது அதுவும் இல்லாமல் போக..... ஒருவரை ஒருவர் அறியாமலே தவிதவித்து போயினர்.... மற்ற நாயகன்களும்... மது சென்றதும் இவனின் மாறுபட்ட நடவெடிக்கைகளை குறித்து வைத்தனர்.... அவன் இத்துனை வருடமாய் நம்மிடம் கூறவில்லை எனில்.... வேறேதாவது காரணம் இருக்கும்... அவனே கூறுவான் என எதிர்பார்த்தனர்.... ஆனால் ஒன்பது வருடம் கடந்தும் அவன் கூறாமல் இருப்பான் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.... ஒரு வருடம் பொருத்து பொருத்து போன ரித்விக் வயது கோலாரெல்லாம் இல்லை என உறுதிபடுத்தி அவள் வருகைக்காய் காத்திருந்தான்... ஆனால் இருவருக்கும் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை.... இரண்டு வருடமும் ஓடி விட..... மது பனிரெண்டாம் வகுப்பின் இறுதி தேர்வில் இருந்தாள்.... ரித்விக் அவனின் இரண்டாம் வருட கல்லூரி டூரின் வழியாக ஊட்டிக்கே வந்திருந்தான்....
அவள் படிக்கும் பள்ளியை தேடி கண்டுப்பிடித்தவன்.... எதை பற்றியும் சிந்திக்காது உள்ளே நுழைந்தான்... அன்றுதேர்வென்பதால்.... பள்ளிக்கு யாரும் வரவில்லை.... மணி.... மாலை 5 என்பதாலும்... யாரும் அங்கில்லை.. நேரே மைதானத்திற்கு சென்றவன்... அப்படியே நின்றான்..... ரித்விக்கின் நினைவு வந்தாலே ஓர் அமைதியான இடத்தில் தனியாய் அமர்வாள் மது... அப்படியே இன்றும் அமர்ந்திருந்தவள்.... தன் அருகில் நீண்ட நிழல் ஒன்று தெரிவதை கண்டு எதர்ச்சையாய் திரும்பியவள்..... உறைந்து நின்றாள்.... இரண்டு வருடம் களித்து... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..... ஓர் அசைவும் இல்லை... வெயில் கண்ணில் பட்டு.... நிலையடைந்த மது அடுத்த நொடி ரித்விக்கின் அணைப்பில் இருந்தாள்....
கண் முன் தன்னவளை கண்ட ரித்விக் அவள் அணைத்ததுமே நிலைக்கு வந்து... அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்..... அங்கு அவர்களின் காதல் பார்வை பரிமாரியதின் பின்..... தங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து.... காதலையும் தெரிவித்தனர்.... அடுத்ததாக ரித்விக் தான் ஒருநிலைக்கு வரும் வரை காத்திருப்பாய் அல்லவா... என்று கேட்டு உறுதி செய்தான்... அன்றிலிருந்து ஒரு தலை காதல்கள்... இரண்டும் ஒன்றாய் மாறியது.... வேதபுரம் செல்லும் போது மட்டும் இருவரும் சந்தித்து கொள்வர்... மற்றபடி... நான் ஊட்டிக்கு வரமாடேன்... ஃபோனிலும் பேச வேண்டாமென கூறி.... அவளின் படிப்பை கெடுக்காமல் கெடுக்கவும் விடாமல் இருந்தான் ரித்விக்..... இன்று வரை நீடிக்கிறது அவர்களின் புனிதமான காதல்.....
மது : இதான் நடந்துச்சு போதுமா....
அர்ஜுன் : ஸ்வீட் லவ் ஸ்டோரி.... இத சொல்றதுக்கு நீ அவ்ளோ பன்ற
மது : அவன நேர்ல காமிச்சு சொல்லலாம் னு இருந்தேன் டா....
அர்ஜுன் : சரி சரி ஏதோ சமாளிக்கிர... விடு...
மது : அட நம்புடா....
அர்ஜுன் : ஹே லூசு... உன்ன நம்பாம வேற யாரடி நம்ப போறேன்....
மது : ம்ம்ம் சரி டா....
அர்ஜுன் : ஓக்கே டி... எதாவதுன்னா காள் பன்னு... உடனே வரேன்... என அங்கிருந்து சென்றான்....
மது டைரிமில்க்கை போட்டோ எடுத்து நிருவுக்கு அனுப்பினாள்.... அதை பார்த்தவளுக்கு.... அர்ஜுன் தான் தந்தான் என தெரிந்ததும்... சுருக் சுருக் என கோவம் ஏறியது... அவனிடமே சண்டயிட போகலாம் என திரும்பியவள் பக்கை தள்ளிவிட்டு விட.... அதிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது ஒரு பெரிய டைரிமில்க்.... லபக் என அதை எடுத்தவள்... மது அனுப்பிய போட்டோவில் இருப்பதை போலவே இருப்பதை கண்டு.... அவனே வகுப்பறையின் வாசலில் நின்று தன்னிடம் பேசும் பொழுது தனக்கு தெரியாமல் பக்கில் போட்டிருக்கிறான் என்பது புரிந்தது...
அதை கண்டு சிரித்தவள்.... " குட் பாய் " என கூறினாள்... அதை பிரிக்க போக.... ஏதோ ஒரு சத்தம் கேட்டு டைரிமில்க்கை பக்கில் வைத்துவிட்டு வெளியே சென்றாள்....
அங்கோ தூரத்தில் மரபெஞ்சை ஆக்ரமித்திருந்த சில சீனியர் குரங்குகள்.... ஜூனியர்ஸை ரகிங் செய்துக் கொண்டிருந்தனர்... மற்ற சீனியர்களெல்லாம் ரகிங் இல்லாமல் நட்பாய் பழக.... இந்த கூட்டம் மட்டும் கொக்கரித்துக் கொண்டிருந்தது.... அக்கூட்டத்தில்..... ஒரு பெண் திரும்பி நின்றிருந்தாள்.... அவளை ரக் செய்துக் கொண்டிருந்தனர் போலும்.... அவள் தலை குணிந்தே இருக்க... அந்த குரங்குகள் சத்தம் போட்டவாறு இருந்தனர்.... அவர்களை நெருங்கிய நிரு அப்பெண்ணின் அருகில் நின்றுக் கொள்ள.... அவளை கண்ட அவன்கள்... ஃபர்ஸ்ட் இயரா என கேட்க... அவள் ஆமென தலையாட்ட....
அவர்களிள் ஒருவன் : பாருடா.... ஜூனியருக்கு ஜூனியர் சப்போர்ட்டா????
நிரு : ஆமா... என நிமிர்ந்த பாப்வையுடன் கூற.... அவளின் நிமிர்ந்த பார்வையை பிடிக்காதவன்.....
அவன் : சரி... இரெண்டு பேரும் ஷால கைல கட்டி.... மாத்தி மாத்தி அடிச்சிக்கங்க.... என கூற... அப்பெண் அழ ஆரம்பிக்க.... நிரு அப்படியே முடியாதென்ற தோரணையில் நிற்க.... அழுத பெண்ணை அனுப்பி வைத்தவர்கள் அவளை செய்ய சொல்ல... அப்பெண்ணோ அழுதுக் கொண்டே எங்கோ ஓடினாள்... ஓடும் பொழுது யாரையோ இடித்தவள் அழுகையில் அதையும் கவனிக்காது ஓடிவிட்டாள்....
அவன் : பன்னுன்னு சொல்றேன் ல...
நிரு : முடியாது ன்னா முடியாது ன்னு அர்த்தம் அண்ணா...
அவன் : அண்ணாவாம் அண்ணா... சீனியர்னு சொல்லு...
நிரு : சரி சரி.. என அலட்சியமாய் கூற....
அவன் : என்ன சொன்ன....
நிரு : காதுல மிஷின மாட்டுங்க கேக்கும்....
அவன் : என்னையே எதிர்த்து பேசுரியா....
நிரு : அப்ரம் எதுக்கு டா இறைவன் எனக்கு வாய குடுத்துர்க்காரு... உனக்கு திங்க மட்டும் கொடுத்துர்க்கலாம்... எனக்கு பேச தான் குடுத்துர்க்காரு.....
அப்போது யாரையோ பார்த்த அவன்.... அப்படியே நிலைத்து விட்டு.... " ஏய் இங்க வா " என கத்தி அழைத்தான்..... அவன் அருகில் ஒருவன் ஓடி வர.... அவனிடம் ஏதோ கூறி அனுப்பி வைத்தான்.....
அவன் : ம்ம்ம் சரி.... ஆடு...
நிரு : முடியாது....
அவன் : ஏய்... சீனியர் சொன்னா கேக்கனும்.....
நிரு : அது சீனியர் சொன்னா கேக்குறேன்....
அவன் : நான் தான் சீனியர்....
நிரு : நீ மட்டும் இல்ல... உனக்கு மேல சூப்பர் சீனியர்ஸ் இருக்காங்க....
அவன் : ஏன் அவங்க சொன்னா தான் கேப்பியா....
நிரு : ஆமா... என முகத்தை திருப்பிக் கொள்ள... அவளை கத்தப் போனவன்.... முன்பு கண்ட அப்பெண்ணை அழைத்து வந்தவனிடம் போகுமாறு கூறிவிட்டு.... " உன் பேரு என்ன " என கேட்டான்... அதற்கோ அமைதியே பதிலாய் வந்தது....
அவன் : கேக்குறேன் ல சொல்லு பேரு என்ன???
அப்பெண் : ........
அவன் : சரி எந்த டிப்பார்ட்மென்ட்.... அதற்கும் அமைதி.... அவன் அதில் கடுப்பாக.... அதற்கு நிரு திரும்பி நின்றாவாறே.... " அதா பதில் சொல்லல... விடு டுபாக்கூர் சீனியர் " என கேலியாக கூற..... கோவமடைந்த அவன்.... நிருவை திருப்பி.... ஓங்கி அறையப்போக.... அவன் கையை பிடித்தது ஒரு கரம்.... நிரு யாரென பார்க்க.... வெள்ளை நிற சுடிதாரில்.... கூந்தல் விரித்து... அழகு பதுமையென... அமைதி குடியேறிய வதனத்தில்.... ஒப்பனை இல்லாமலே வலது கையில் இரு புத்தகத்துடன்.... இடது கை அவன் கையை பிடித்திருக்க.... அமைதியாய் நின்றாள் தேவர்ஷினி....
அவன் : ஏன் கையையே புடிக்கிறியா... என அவளின் புறம் கையை ஓங்க.... அவன் கையை பிடித்து பின் வளைத்து முறித்தாள் நிரு..... அவன் கத்தவும் அவள் விட்டுவிட.... திரும்பிய அவன் கடுங்கோபத்தில்....
அவன் : இப்போ இந்த க்ரௌண்டுல எல்லாரு முன்னாடியும் என் காலுல விழுந்து மன்னிப்பு கேக்கல....
நிரு : கேக்கலன்னா... என்ன டா பன்னுவ....
அவன் : ரொம்ப வாய் பேசுரியா... உன்ன.... என அடிக்க வர.... தானாக கண்களை மூடிக் கொண்டாள் நிரு... அவள் கைகளை தேவர்ஷினி இருக்கி பிடித்துக் கொள்ள.... அடுத்த நொடி அடி விழாமல் அவன் அலரலுன் கீழ் விழும் சத்தமே கேட்க..... யாரோ அவனை அடிக்கும் சத்தம் தெள்ளத்தெளிவாய் கேட்க.... கண்களை நிரு திறக்க.... அவன் முன் கோவம் கொப்பளிக்க..... கையை முழங்கை வரை மடக்கி.... நின்றான் அவன்.....
காதல் தொடரும்.....
Hiii idhayangale.... romba perusa pothu... nxt Ud la continue pandren pa...ungaluku paduchi paduchi vaai valikitho illayoo... enakku typ panni typ panni kai valikithu..... share ur comments...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro