Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-31

அளவில்லா மகிழ்ச்சியில் திண்டாடிப் போயினர் நாயகர்கள்... பரமேஷ்ரன் லலித்தா இறந்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தாலும்... வனித்தாவின் எதிர்பாரா அதிர்ச்சியில் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தனர்....

முகில் : எப்டி... டார்லிங்... எப்டி எந்திருச்சீங்க...

வனித்தா : எல்லாம் கயல் குட்டி பன்ன வேலை டா....

ரனீஷ் : கயல் குட்டியா??? அவ என்ன மா பன்னா..???

இலக்கியா : எங்களுக்கே தெரியல டா... நாங்க வீட்டுக்குள்ள வரோம்... ரூம் ல கயல கட்டிப்புடிச்சிட்டு அண்ணி உக்காந்துருந்தாங்க.... எங்களுக்கு சந்தோஷத்துலையும் அதிர்ச்சிலையும் பேச்சே வரல...

மாதவன் : சரி சரி... இப்போ எல்லாரும் ஒன்னாவே தெரிஞ்சுப்போம்.. சொல்லு வனித்தா....

சில மணி நேரம் முன்பு.... நாயகிகள் கடத்தப்பட்ட சில மணி நேரங்களிளே ஒவீயின் சக்தியால் தன் பட்டாளத்துடன் விளையாடிக் கொண்டிருந்த கயல் தானாக வனித்தாவின் அருகில் வந்து உறங்க ஆரம்பித்தாள்..... வனித்தாவின் உடல் மெல்ல மெல்ல குணமடைந்த காரணத்தால்... அருகில் நடக்கும் காட்சிகளை அவரால் மேலோட்டமாக உணர முடிந்தது... தன் அருகில் உறங்குவது கயல் தான் என முடிவெடுத்து.... அவரும் அவளுடனே உறங்க தொடங்கினார்.... சில நிமிடங்கள் அடுத்து... வனித்தாவின் மூளையில்... ஏதோ ஒரு குரல்.... விடாமல் ஒலித்தது..... ஒரு குழந்தையின் குரல்.... " அம்மா அம்மா...." என்ற அழுகுரல்.... நகர முடியா நிலையில் இருந்த வனித்தாவின் மனதை லேசாய் தட்ட தொடங்கியது.... மேலும் மேலும் அழுகை வீரியமானதை அவரின் மனதால் உணர முடிந்தது... இதயம் துடிப்பினும்.... மூளை வேலை செய்யாது... உடலின் அத்துனை பாகங்களும்... அப்படியே இருக்க.... ஓயாத அழுகை சத்தம்.... சிறிது சிறிதாக நினைவை எழ வைத்தது... ஒரு கட்டத்தில்..... அவரின் மூளையே... இவ்வழுகையை கேட்க வைக்க..... இருபத்தி இரண்டு வருடம் முன்.... இதே போன்ற அழுகை... இதே அம்மா என்ற கதறல்கள்.... முன் நிழற்படமாய் ஓட.... அவரின் கண் முன் வந்து போனது.... மூன்று வயதான க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷின் முகங்கள்..... சட்டென கண்களை திறந்தார் வனித்தா..... பார்வை மங்களாக இருக்க.... இத்துனை ஆண்டுகள் மூடி இருந்ததால்... கண்கள் வலியில் உறுத்த... கைகளும் அசைய மறுத்து வலியை உணர்த்த... மெல்ல மெல்ல பார்வை தெளிவடைந்து... தான் தங்களின் வீட்டில் தான் இருகிறோம் என புரிய வைத்தது.... மீண்டும் அதே அழுகுரல் கேட்க.... அப்போதே அது கயலின் அழுகை என புரிந்தது வனித்தாவிற்கு....

உறக்கத்தில் இருந்த கயல் கெட்ட கனவு கண்டு.... தூக்கமில்லாமல் பயத்தில் அழுக தொடங்கியிருந்தாள்... வீட்டிலும் யாருமில்லாததால்.... அண்ணிகளை தேடுடிடும் அவளின் மனம்... அன்னையை தேட தொடங்கி இருந்தது... தன்னால் முடியாதென்ற போதிலும்... தன்னால் ஈன்ற வரை... அசைய மறுத்த கரங்களை பாடுபட்டு தூக்கி.... கயலை கட்டி அணைத்து தன் பக்கம் இழுத்தார்... தாயின் அருகாமைக்காய் ஏங்கிய கயல்... வனித்தாவின் அணைப்பில்... தாயன்பபை உணர்ந்து... மெல்ல அவருள் ஒன்றினாள்.... அவரின் மெல்லிய வருடலின் பின்.... தன் பயம் நீங்கி... வனி மா என்ற கூவலுடன் நிமிர்ந்து நோக்கினாள் கயல்....

வனித்தாவோ அவளை கண்டு மிக மெல்லிய புன்னகையை வீசினார்... இதழ்கள் பிரிய நினைத்தால் வலி எடுத்தது....
உடனே தண்ணி என செய்கை செய்ய... கயல் குடுகுடுவென ஓடிச் சென்று ஒரு குட்டி டம்லரில் தன்னால் முடிந்த வரை தண்ணீரை நிறப்பி எடுத்து வந்தாள்...

மெல்ல அதை அருந்திய வனித்தா... இருபத்தி இரண்டு வருடங்களின் பின்... பேசினார்.... " கயல் குட்டி " என அழைக்க.... வனிமா என கட்டிக் கொண்டாள் கயல்....

தற்போது....

அனைவருக்கும் தாயின் அன்பு எல்லையற்றதென்பதற்கு அடையாளமாய் அமைந்தனர் இருவரும்....

வனித்தா குணமடைந்தாளும் சிறிது நாள் ஓய்வு வேண்டுமென உறங்க விட்டுவிட்டு வந்தனர்..

மாடிக்கு வந்த நாயகர்கள்.... அமைதியாய் மாடியிலிருக்கும் ஹாலில் அமர்ந்தனர்.... மௌனமே அக்கு ஆட்சி செய்ய.... மௌனத்தை இரு நிமிடங்களுக்கு மேல் தாங்க முடியாத சத்தீஷ்....

சத்தீஷ் : டேய்... ஏன் டா எல்லாரும்... ஏதோ கண்ணீர் அஞ்சலி... செழுத்துர மாரி அமைதியா இருக்கீங்க...

ஒவீ : அதான... எப்டியும்... அந்த பரமேஷ்ரனும் லலித்தாவும் எறந்தது ல நமக்கு கவலை இல்ல.... இல்ல தான.....???

அனைவரும் : இல்லவே இல்ல.....

திவ்யா : அப்ரம் ஏன் மௌன விரதம்???

நிரு : வார்த்தைகள் இல்ல டி...

ரனீஷ் : ஃப்லஷ்பக் சொல்றதுக்கா???

நிரு : ம்ம்ம்.... எல்லாத்துக்கும் தான்....

ரக்ஷா : அப்போ அந்த கிரிக்கி ய கூப்புடுங்க டா.... அடியேய் தீரா....

தீரா : என்ன டி....

ரக்ஷா : ஃபலஷ்பக்கையே கதையா எழுதுவ.... நிரு மது க்கு ஃபஷ்பக் எழுதலையா டி நீ....

நிரு : அடியேய் சொல்ல வார்த்தை வரல ன்னு சொன்னேன் டி.....

அனு : தீரா.... நீ எழுது.... உனக்கு தான் ஈசியாச்சே....

தீரா : உசுரு போற நேரமா இருந்தாளும்.. என்ன வச்சு காமெடி பன்றதே உங்களுக்கு வேலை.... அவளுங்களே சொல்லுவாங்ளுங்க நா போறேன் போங்க டி....

ப்ரியா : அடியேய் உண்மைய தான டி சொன்னோம்.. எழுதி குடுத்துட்டு போ... அவ அத பாத்து படிச்சு சொல்லுவா....

க்ரிஷ் : லொல்லு அதிகமாய்டுச்சு டி... உங்களுக்கு... பட்டு நீ போய் தூங்கு... நாங்க பேசிக்கிறோம்....

தீரா : அதிசயத்தின் அதிசயம்.... டேய்... உனக்கு நோய் எதாவது வந்துருச்சா என்ன????

க்ரிஷ் : உனக்கு சப்போர்ட் பன்னல்லல... எனக்கு தேவை தான்....

நிரு : ஏய்... மொக்க போடாதீங்க... நானே சொல்றேன்....

தீரா : ஷப்பா... இத முன்னாடியே சொல்ல மாட்டியா.... உன்னையே தானா வாய தொறக்க வைக்கிறதுக்குள்ள... விடிஞ்சிடும் போல...

நிரு : இதுவும் ப்லனா டி???

தீரா : ஆமா...

சத்தீஷ் : சரி சரி... நீ போ அங்குட்டு... நாங்க கத கேக்கனும்....

தீரா M.v : என்னையே தொரத்துரியா.... நா சொல்ல விட்டாதான டா.... 👿

நிருவும் மதுவும் ஒருவரை ஒருவர் நோக்கி விட்டு.... மூச்சை இழுத்து விட்டு தொங்கினர்....

ஏழு வருடங்களுக்கு முன்..... என தொடங்கியது.... அப்படியே நின்றது.... எவரும் எதிர்பார்க்காத நேரத்தில்.... இரத்தக்கரைகளுடன்.... மேலிருந்து நடுவிலே விழுந்த ஒரு மனிதனின் பிணத்தால்..... திக் என இருந்தது அனைவருக்கும்.... மனம் அடியாய் அடித்துக் கொண்டது.... நாயகிககள் ஒருவருடன் ஒருவர் ஒன்றி நின்றுக் கொண்டனர்....

நாயகன்கள் முதலில் திடுக்கிட்டு... அதன் பின்.... மெல்ல அதன் அருகில் சென்று... அதை திருப்பி விட..... கண்களை மூடி கிடந்த அப்பிணம்... திடீரென கண்களை அகல விரித்து...." உங்க அழிவு நெருங்கீடுச்சு ஹா....." என கத்திக் கொண்டே மண்ணாய் கரைந்தது....

திடுக்கிட்டு அனைவரையும் அதே இடத்தை வெரித்து நோக்க... அதன் பின்னே சேவன் கூறிய அனைத்தும் சத்திஷிற்கு நினைவு வந்தது.... உடனே யுத்ரபோர் நெருங்கிவிட்டாதாக சேவன் கூறினான் என அனைத்தையும் கூறி முடிக்க... மகிழ்ச்சி போய் குழப்பம் சூழ்ந்துக் கொண்டது... உடனே சத்தீஷ்....

சத்தீஷ் : சேவல்... சேவல்...சேவக்கோழி.... சீக்கிரம் இங்க வா....

ஜன்னல் வழியே டம் டம் என குதித்து வந்த சேவன்... அவன் முன் நின்று....

சேவன் : வந்து விட்டேன்... கூறுங்கள் கோவனே... என குரல் கேட்டு....

முகில் : அச்சோ இப்போ எங்க நிக்கிது அந்த மூட்டப்பூச்சி.... சேவன்... திரும்ப சத்தம் குடு...

சேவன் : கீழே பாருங்கள்... யான் இங்கே தான் இருக்கிறேன்....

சத்தீஷின் ஷு மேல் நின்றவனை தன் கையில் தூக்கினான் அஷ்வன்த்....

இந்திரன் : போர் நடக்கப் போகுதுன்னு சொன்னியா??? எப்போ நடக்கப்போகுது???

சேவன் :ஆம் கோவனே... இன்னும் நாற்பத்தி நான்கு மணி நேரங்களிள்.....

ரித்விக் : போரு போருங்குரியே... யாருக்கூட சண்ட போடனும்....

சேவன் : கோவன்களாகிய தாங்கள் மூவரும்.. இம்மூவருடன் தான் போரிட வேண்டும்.... என தன் மந்திரத்தை செவுரில் ஓதி ஊத... அதிலோ விகாஷ் ஆகாஷ் மற்றும் நகாஷ்ஷின் படங்கள் தென்பட.. அவர்களை கண்ட நாயகன்கள் அனைவருக்கும் கோவம் மேலோங்க.... க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷிற்கு கோவத்தில் கண்களே சிவந்து போனது... ஒரு நொடி க்ரிஷ்ஷை திரும்பி நோக்கிய சேவன்... அடுத்த நொடியே அப்படங்களை மறைய வைத்தான்... க்ரிஷ்ஷை தவிர்த்து அனைவரும் அவனை ஏன் என்பதை போல் நோக்க....

சேவன் : கோவன்களை காணுங்களேன்.... அவர்களின் சினம் அதிகரிக்கிறது.... அதிலும்... அனல்கோவனை நோக்குங்கள்...

அனு : அனல்கோவனா.... அது யாரு....

சேவன் : இவர் தான் அனல்கோவன்.... இவர் திரவக்கோவன்... அவர் காற்கோவன்... என க்ரிஷ் இந்திரன் சத்தீஷை ஆடராய் சுட்டிகாட்டினான்.....

அனைவரும் : ஓஓஓஓ

சேவன் : திரவக்கோவனும் காற்கோவனும் கூட... அவர்களின் சினத்தை அடக்குவர்.... ஆனால் அனல்கோவன் சினத்திற்கு காரணமானவரை அழித்துவிட்டுத்தான் அடக்குவார்.... இப்போது இம்மூவரை கண்டு அவரிற்கு அளவுக்கதிகமாகன சினம் ஏற்பட்டால் யான் எரிந்துவிடுவேனே... என நடுங்கி கொண்டே கூற.....

அங்கு ஒரு நொடி அவன் அச்சத்தை கண்டு சிரிப்பொலி எழும்பியது.....

க்ரிஷ் : கவலப்படாத சேவன்.. உன்ன ஒன்னும் பன்னமாட்டன்...

சேவன் : இறைவா... வேண்டாம் கோவனே.... வேண்டவே வேண்டாம்... இவ்வாக்கியத்தை நம்பி யான் அனுபவித்ததே என் ஏழேழு பிறவிகளுக்கும் தாங்கும்.. என்னை விட்டுவிடுங்கள்... என ஓட... அவனை ஒரே எட்டில் பிடித்த இந்திரன்....

இந்திரன் : சரி சரி ஓடாத... எங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சாதானே... சண்ட போட முடியும்...

சேவன் : அறிய வேண்டிய நேரத்தில் சரியாக அறிந்துக் கொள்வீர்கள்.... காத்திருங்கள்....

திவ்யா : இதத்தான் எப்போ பாரு சொல்ற....

சேவன் : என்னிடம் வேறு பதிலும் இல்லையம்மா....

சத்தீஷ் : இதல்லா..... ஓக்கே... அந்த மூணு பேர் யாரு... எங்க இருக்காங்க.... இப்பவும் அவங்க வருவாங்களா.... யாருனே தெரியாதவங்க கிட்ட எப்டி சண்ட போடுறது....

சேவன் : சரி... சிலதை கூறுகிறேன்.... அம்மூவரும்.... உக்ரதேவன் கிரகதேவன்... மற்றும் ரனதேவன்... தங்களின் பரம எதிரிகள்.... இவர்கள் தீயசக்தியின் வழியில் வந்தவர்கள்... தாங்கள் மூவரும் அதை அழிக்க உருவான வழி.... யுத்ரபோர் நிகழ்ந்து போது... உங்களை அழித்து... உங்கள் சக்திகளை அபகரிக்க நினைத்தனர்... ஆனால்... அதற்கு முன்பே... தங்கள் மூவரால்... மரணமடைந்தனர்... அத்துடன் முடிந்ததென நினைத்ததும் மீண்டும் தொடங்கியது.... மாயமோகினியின் பிரிவின்மையால்... அதன்பிறகே... அவர்களின் ஆன்மா மாத்திரம் வெளிவந்தது... அதை வெற்றிகரமாய் தாங்கள் மூவரும் நாகமலையில் அடைத்தீர்கள்.. ஆனால் எதிர்பாராத ஒரு திருப்பத்தில்.... அனைவரும் உயிரை மாய்த்தீர்கள்... அன்று தான்... தாங்கள் மூவரும் நான்காயிரம் வருடங்கள் பின்... அதே சக்திகளுடன்.... மதிநட்ச்சத்திரத்தில்... மீண்டும் பிறப்பெடுப்பீர்கள் என தெரியவந்தது... அதே போல்... அவர்களும் பிறப்பெடுப்பர் என்றும்... அவர்களின் தீயஆத்மா மட்டும் அடைந்தே கிடக்கும் என தெரிய வந்தது... அவர்களே இப்பிறவியில் கூட தங்களுக்கு எதிரியாக வருவார்கள்....

அனு : அப்போ அந்த மூணு பேரும் மனுஷங்களாவே பொறந்துர்க்காங்க ன்னு சொல்ல வரியா???

சேவன் : ஆம் அம்மா....

பவி : அவங்கள எப்டி நாங்க அடையாளம் கண்டுபுடிக்காறது....

சேவன் : இப்பொழுது தானே அவர்களின் திருமுகங்களை கண்டீர்கள்... இன்னுமா அடையாளம் வேண்டும்....

வீர் : உனக்கு ஸைஸு தான் சின்னதா இருக்கு... ஆனா வாய நல்லா பெரிய ஸைஸு ல தான் செஞ்ர்க்காங்க....

சேவன் : அதையேன் நினைவு படுத்துகிரீர்கள்.. என் சோக கதையை நினைத்து நான் மட்டும் தான்.. கவலை பட முடியும்... உடன் யாரும் இல்லை.... என இந்திரனின் உள்ளங்கையில் சமனமிட்டு அமர்ந்து.... கையை தாடையில் வைத்து தாங்கி அமர்ந்துக் கொண்டான்.....

ரக்ஷா : உனக்கே சோக கதையா சொல்லு கேப்போம்...

சேவன் :எங்களின் வம்சத்தில்.... பலர் இருந்தனர்... யுத்ரபோர் தொடங்கும் சில தினங்கள் முன்பு... யாரேனும் ஒருவர் தங்களின் உருவத்தை சுருக்கி கொண்டு சாகாவரம் பெறலாம்... என சலுகை வந்தது.... எங்கள் வம்சத்தவர்கள்.. என்னைத் தவிர்த்து அனைவரும் அச்சலுகைக்கு முன் வர... அச்சலுகை உருவாக காரணமாய் இருந்த குரு தந்திரா... அனைவரையும் ஒதுக்கி விட்டு... இதற்கு சரியானவன் நீயே தான்... என என்னை தேர்ந்தெடுத்து... இந்த அளவிற்கு சுருக்கிவிட்டார்... என சோகமாக சொல்லி முடித்தான்.....

நாயகிகள் : ரொம்ப பாவம் சேவன் நீ... என சோகமாய் கூற...

சேவன் : தங்களுக்காவது புரிந்ததே... மிக்க மகிழ்ச்சி.... ... என கூறியவனின் முகம் அடுத்த நொடி பதற்றமடைந்து..... இறைவா நான் அனைத்தையும் உலரிக் கொண்டிருக்கிறேனே.... குருவுக்கு தெரிந்தால்.... அவ்வளவே... யான் சென்று வருகிறேன்... என இந்திரனின் கையிலிருந்து குதிக்க....

சத்தீஷ் : பாத்து போ சேவல்..

க்ரிஷ் : குருவா??? எந்த குரு???

சேவன் : குருவெனில் வேறார் கோவனே.... குரு தந்திராவை தான் கூறினேன்....

அனைவரும் : ஓ.... என்னது??? என அதிர்ச்சியடைய....

அப்போதே குரு தந்திரா உயிருடன் இருப்பதை உலரிவிட்டோம் என சேவனுக்கு புரிய... ஸ்லோ மோஷனில் திரும்பி இவர்களை நோக்கினான்.... அவர்களும் அதே போல் நோக்க... அடுத்த நொடி ஓடத் தொடங்கினான் சேவன்.....

ரனீஷ் : புடிங்கடா அந்த மூட்டப்பூச்சிய.... என கத்திக் கொண்டே துரத்த.... அனைவரும் சேவனை பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.... எங்கெங்கோ புகுந்து இவர்களின் கையில் சிக்காமல் ஓடினான் சேவன்.... அவனின் சைஸுக்கு மிக கடினமாய் இருந்தது அவனை பிடிக்க... எப்படியோ ஒரு கட்டத்தில் முகிலின் கையில் சிக்கினான்.... பேந்த பேந்த முளித்தவனை....

சத்தீஷ்: சேவக்கோழி.... மரியாதையா உண்மைய சொல்லிடு.... இல்ல...

சேவன் : கோவனே... எமக்கெந்த உண்மையும் தெரியாது... திடீர் மறதி வந்துவிட்டது... தாங்கள் யாரென கூட தெரியவில்லை....

க்ரிஷ் : ஆமா அவன் யாருன்னு தெரியல... ஆனா அவன் கோவன் னு மட்டும் உனக்கு தெரியும் ல...???

சேவன் : எம்மை விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்.... என கத்த....

இந்திரன் : நீ அழகா உண்மைய சொல்லிட்டா... உன்ன விற்றுவோம்... சொல்லு..... என சுற்றி ரௌண்டு கட்ட...

சேவன் : ஆமாம்.... குரு தந்திரா உயிருடன் தான் இருக்கிறார்... என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற....

தான்யா : அப்ரம் ஏன் தர்மன்ஐயாவும் வளரி பாட்டியும் பொய் சொன்னாங்க....

சேவன் : இல்லை.. இல்லை.... அவர்களை பொருத்தவரை அதுவே உண்மை... அதாவது குரு உயிருடன் இருப்பது அவ்விருவருக்கும் தெரியாது...

ரக்ஷா :ஏன் தெரியாது...

சேவன் : தெரியக்கூடாதென்பது விதி...

இதே டய்லாகௌகை மீண்டும் மீண்டும் கேட்டு கண்டாகிய சத்தீஷ்.... அருகில் இருந்த பூ ஜாடியை சேவன் மேல் ஓங்க.....

சேவன் : காற்கோவனே வேண்டாம்.. கூறிவிடுகிறேன்.... என கத்த...

பூ ஜாடியை கீழிறக்கினான் சத்தீஷ்....

சேவன் : உக்ரதேவன் கிரகதேவன் மற்றும் ரனதேவன் அவரை தனி குகை ஒன்றில் அடைத்து வைத்தனர்.... இன்று வரை அக்குகையில் அடைந்தே கிடக்கிறார்.... இதற்கு மேல் எதுவும் கூற இயலாது...

அஷ்வன்த் : இதுவே போதும்... அவரு எங்க இருக்காருன்னு சொல்லு....

சேவன் : மலையருகில் இருக்கும் ஓர் அடர்ந்த குகையுள் இருக்கிறார்.... சரி யான் சென்றுவருகிறேன்....

க்ரிஷ் : ஏன் அங்க போய்... குருவ உஷாரா இருக்க சொல்லப்போறியா.???

சேவன் : ஈஈஈ இல்லையே... என இழிக்க....

இந்திரன் : இன்னைக்கு பூரா நீ இங்க தான் இருக்க போற.... என அவனை நோக்கி கையை நீட்ட... அவனை சுற்றி நீரால் ஓர் வளையம் உருவாகி அவனை உள்ளே வைத்து பாதுகாத்தது.... சேவனோ இவர்களையே முளித்து முளித்து பார்த்துக் கொண்டிருந்தான்....

பவி : அடுத்து என்ன???

முகில் : நாளைக்கு எல்லாரும் அந்த குருவ பாக்கப் போறோம்....

ப்ரியா : சரி அப்போ நாங்க போய் தூங்குரோம்....

நாயகன்கள் : ம்ம்ம்....

நாயகிகள் அங்கிருந்து அகன்றதுமே...

சத்தீஷ் : டேய் ஃப்லஷ்பக் கேக்கவே இல்ல டா...

ரித்விக் : அட ஆமா டா.... எல்லாம் இந்த தீரா வேல டா...

தீரா M.v : கண்டுப்புடிச்சாட்டானுங்களே.... மீ எஸ்கேப்...

ரனீஷ் : அவ ஈவில் லுக் ஓட போகும் போதே நெனச்சேன்... இத மாரி எதாவது பன்னுவான்னு...

முகில் : சரி வாங்க டா... அவளுங்கள கேப்போம்... இதா சாக்குன்னு... அந்த குட்டச்சி ஓடீட்டா....

தீரா M.v : யார சொல்றான்?? நம்மள தான் சொல்றானோ... சச்ச... இருக்காது...

வீர் : யார டா சொல்ற..

சத்தீஷ் : வேற யாரு தீரா வ தான் சொல்றான்... என சிரித்துக் கொண்டே கூற...

தீரா : டேய்... நா ஷார்ட் லம் இல்ல... கரெக்ட்டா மிடியம் ஹயிட் ல தான் இருக்கேன்.... என கத்த....

நாயகன்கள் அனைவரும் அவளைளே " மாட்னியா " என்பதை போலவே பார்க்க.... அப்போதே புரிந்தது...

தீரா :சரி சரி... நான் தான் நான் தான்... போங்க போயி... கதைய கேளுங்க.... என பொருட்கள் அவளை நோக்கி பறக்கும் முன் ஓடிவிட்டாள்.....

அறைகளுக்குள் நுழைந்த நாயகிகளை தரதரவென இழுத்துக் கொண்டு நட்டநடு இராத்திரியில் வெளியே சென்றனர் நம் நாயகன்கள்....

ரக்ஷா : டேய்... டேய்... எங்க டா இழுத்துட்டு போரீங்க.... தூங்கனும் டா....

ப்ரியா : டேய்.... நட்டநடு ராத்திரில எங்க டா போறோம்... எதாவது சொல்லித் தொலைங்களேன் டா... டேய்.... என அனைவரும் கத்திக் கொண்டே வர.... நாயகன்கள் முகத்தை கூட திருப்பி பார்க்கவில்லை....

அனு : அடேய்... அடேய்... காலு டா... டேய் யுவா.. என கத்த... அவளை இழுத்துச் சென்று கொண்டிருந்த க்ரிஷ்... இழுத்து செல்வதை நிருத்த.... நிற்க வைத்ததும்.... முதலில் நேராக நின்று அவள் தன்னை சரிபார்த்த அடுத்த நொடியே காத்திருந்த க்ரிஷ்... அவளை அலேக்காய் தூக்கி கொண்டு நடக்கத் தொடங்கினான்... அனு அவனையே பேந்த பேந்த முளித்தவாறு நோக்க..... அவனோ இதழோரம் புன்னகை ஒன்றை வீசி பதில் பேசாது நடந்தான்... மற்ற நாயகன்கள் கண்டும் காணாததை போல உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டனர்....

இறுதியாக நாயகன்கள் சென்று நின்றதோ ராஜ்ஜியமர்வதன மண்டத்தின் முன் இருக்கும் ஆலமரத்தின் முன்..... இரவின் அழகு மனதை மயக்கியது.... பௌர்ணமி நிலவு அழகாய் ஜொலிக்க..... நச்சத்திரங்கள் மின்ன.... அவ்வானமே நடுநயமாக மின்ன..... தென்றல் காற்று உடலை தீண்ட.... நாயகன்கள் நாயகிகளை அப்படியே நிற்க வைத்துவிட்டு.... அந்த ரம்மியமான தருணத்தை ஆலமரத்தின் திடலில் அமர்ந்து இரசிக்க தொடங்கினர்....

கேள்வி கேட்க வந்த நாயகிகளும்... அதை மறந்துவிட்டு.... அத்திடலிலே அமர்ந்து.... அவ்வேளையை தங்களின் மனம் கவர்ந்தவர்களுடன் களித்தனர்....

சிறிது நேரங்களித்து.... ஒருவரை ஒருவர் நோக்கி கொண்டனர்.....

தான்யா : எதுக்கு டா... இந்த நேரத்துல இங்க அழச்சிட்டு வந்தீங்க....

ரித்விக் : எல்லாம் காரணமாத்தான்.....

அஷ்வன்த் : வீட்ல பேச வேணாம் னு தான் இங்க அழச்சிட்டு வந்தோம்.....

திவ்யா : என்னது இன்னும் பேசனுமா??? அப்போ... இன்னும் முழுசா பேசி முடிக்கலையா???

முகில் : நம்ம பேசப்போறதில்ல... டி....

பவி : அப்ரம்???

நாயகன்கள் :கவனிக்கப்போறோம்.....

மது : யாரு க்லஸ் நடத்த போறா???

ரித்விக் : நீயும் உன் அரும தங்கச்சியும் தான்....

நிரு : டேய் போங்க டா... நா என் க்லஸ்ஸையே அவ்ளோவா கவனிக்க மாட்டேன்....

மது : அதான.... போங்க டா.....

இந்திரன் : தங்கச்சி மா.... முழுசா கேக்கனும் டி....

சத்தீஷ் : ஃபஷ்பக்க சொல்லுங்க டி.... நீங்க க்லஸு எடுத்து கிழிச்சிருவீங்க...

நிரு : ஹிஹி... புரியிர மாரி சொல்லீர்க்கனும்....

வீனா : ஆரம்பிங்க டி....

ஒவீ : ஏ கொஞ்சொ இன்ட்ரிஸ்ட்டிங்கா சொல்லுங்க டி... அப்ரம் நா தூங்கீருவேன்....

மது நிரு : சரி சரி.... வாங்க....

திடீரென ஏதோ ஒன்று மரத்திலிருந்து விழ.... இப்போ என்ன என விழி விரிய நோக்கியவர்களுக்கு காட்சி அளித்ததோ முரிந்த கிளை... ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு.... "மரம் பா" என கூறிக் கொண்டனர்.....

அதன் பின்... நீண்ட மூச்சை இழுத்துவிட்டு.... தங்களை நிலை படுத்திக் கொண்டு தொடங்கினர் நிரு மற்றும் மது....

காதல் தொடரும்....

Hiii idhayangale....hw was the ud.... nxt ud kandippa flashback thaan dont worry.... aprm... enaku naalayoda holidays mudiyithu guys.... Saturday leave aa kooda irukklaam... therila.... bt nxt Monday la irunthu... regular ud kudukurthu kashttam.. purinjikkonga.... keep supporting guys.....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro