காதல்-24
மாயா அழிந்துவிட்டாள் என்று குத்தாட்டம் போட்டவர்களுக்கு இடியாய் வந்து விழுந்தது மாயா இறக்கவில்லை என்னும் விஷயம்.... அவளின் பிம்பத்தை கண்டமையால்..... மாயாவின் முன் அரணாய்... தன் செம்மை நீலம் மற்றும் வெண்மை படர்ந்த இறகை அசைத்து பறந்துக் கொண்டிருந்தது ஒரு பருந்து... மேகலாயா மற்றும் மதுசூதனா விடுதலை பெரும் சமயம்.... வான் நோக்கி பறந்து... மாயை அனுப்பிய அதே பருந்து.... தனக்கு ஒன்றும் ஆகவில்லையே எப்படி என முன்னோக்கியவள்... அப்பருந்தை கண்டு... மற்றவர்களுடன் பேரதர்ச்சிக்கு உள்ளானாள்....
ஆகாஷ் : எப்படி... எப்படி... இது சாத்தியமே இல்லை... கோவன்களின் சேவகன்... இத்துனை காலங்கள் அவர்களுக்கு வினயளித்த மோகினியின் சரிபாதியை காப்பாற்றுகிறானா???
மதுசூதனா : ஏதோ இரகசியம் நடந்திருக்கிறது.... நாம் அறியாத ஒன்று...
மேகலாயா : அதற்கு வாய்ப்பே இல்லை மதுசூதனா... இவளை காப்பாற்ற வளவன் எப்படி முன் வந்தான்....
வளவன் என நாமம் கொண்ட அப்பருந்து.... பறந்துக் கொண்டே பேசியது....
வளவன் பருந்து : என்ன நினைத்தீர்கள் மூடர்களே.... மாயாவை அழிக்க முடியுமென்றா... இல்லை... நிச்சயம் இல்லை.... கோவன்களின் வாக்கை தாங்களும் மறந்துவிட்டீர்களோ... " இம்மண்ணில்... எந்த ஒரு அப்பாவி மற்றும் தூய ஆத்மா கொண்ட உயிரும் பிரியாது..." மாயா தூயவள்.... மாயமோகினி... எங்கள் கோவன்களின் நலன் விரும்பி... உங்களின் சதியால் மாயா மற்றும் மோகினி என இரண்டாய் பிரிந்து மோகினி தீயசக்தியின் கட்டுப்பாட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறாள்.... மாயாவை என்றுமே கோவன்கள் அழிய விடமாட்டார்கள்.... யான் இம்மலையின்... கண்காணிப்பாலன் மட்டுமல்ல... தேவைப்படும் நேரத்தில் மாயமோகினியின் பாதுகாவலன்.... என கம்பீரக்குரலை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைய....
நகாஷ் : அப்படியெனில்.... அன்று குகையில் மூவரும் துருவனை குரோதமாய் தாக்கியதன் காரணம் என்ன?? அவன் கூட சதியால் மாறியவன் தானே.....
வளவன் பருந்து : இதை பற்றி வினவுவீர்கள்... என முன்பே நினைத்தேன்... ஒரு தாய்... தன் குழந்தை செய்த தவறுக்காய் தண்டித்து.... அதன் பின் காயத்திற்கு மருந்திடுவார்.... அதே போல் தான்.... அது அவனுக்க தக்க நேரத்தில் அளித்த தண்டனை.... அதே சமயம்... அன்று.. அவனை தாக்கிய அதே கோவன்களின் சக்தி... அவனுக்கு மருந்திட்டு காத்தது... அந்த தருணத்தில்... துருவன்.... தீயசக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சாதாரணமானவனாய் மயக்கத்தில் இருந்தான்.... காண்கிறீர்களா... என வினவி...
தன் இமைகளை மூடி... தன் இறகை இரு முறை அசைத்து... இடது புறமாய் செலுத்து.... வாணில்... ஒரு சுழல் சுழன்று...
(
அன்று அதில் குகையிலிருந்து மறைந்து தப்பினான்...
ஓர் மரத்தின் அடியில் தோன்றியவன்... மயக்கத்திலும் வலியில் லேசாய் முனகினான்.... அடைமழை பேய... குளிரில்... நடுங்கத் தொடங்கினான்.... காற்று வேறு.... சட்டென.... அம்மரத்தில் தோன்றிய ஓர் ஒளியிலிருந்து.... மூன்று ஆணின் நிழல்கள் வெளிவந்தது.... மூன்றும் நிழலை போல் கருமையாய் இல்லாமல்... ஒன்று சிகப்பு.. மற்றொன்று நீலம்... மற்றொன்று வெள்ளை என்று வெவ்வேறு நிறங்களில் வந்தனர்....
வெளியேறிய மூன்றும் மூன்று திசையில்.. நிற்க... நான்காவது பக்கத்திலே துருவன் படுத்திருக்க.... சிகப்பு நிழல்... அம்மரத்தை சுற்றி... மிதமான நெருப்பை எறிய விட.... நீல நிழல்... அம்மரத்தின் மேல் மழை பேயாமல் நிறுத்தி வைக்க... வெள்ளை நிழல் அம்மரத்தை தாண்டிச் சென்ற குளிர் காற்றை வேறு திசையில் போகுமாறு திருப்பி விட்டு வந்தான்.... மூவரும் துருவனை நெருங்க... அம்மூவரின் கைகளும் ஒன்றிணைந்து இரு நொடிகளிள்... ஒரு ஒளி அவர்களின் மூடிய கரங்களுள் ஒளிர... பிரித்த கரங்களினுள்... வெவ்வேறு மூலிகைகள் இருந்தது.... அம்மூன்றும் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து.... துருவனின் உடல் முழுவதும் தூவப்பட்டது.... சிறிதே நேரத்தில்... துருவனின் மொத்த காயங்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது... மூவரும் மூன்று திசையிலும் அரணாய் நிற்க... அவர்களை தாண்டி மழையோ காற்றோ அவனை தீண்டவில்லை....
அருகில் இருந்து மூவரின் கதகதப்பில் மயக்கத்திலிருந்து... நிம்மதியாய் உறங்கத் தொடங்கினான் துருவன்.... அவனை மிருதுவாய் வருடிய மூவரும்... மழை ஓய்ந்த பின்னரே அங்கிருந்து மறைந்தனர்...
)
வளவன் பருந்து : புரிந்ததா... என்ன நடந்தது என்று???
மாயா "எம் கோவன்கள் பாவத்தை மன்னிக்கமாட்டார்கள்... ஆனால் பாவம் செய்ய... கட்டுபடுத்த பட்டவரை மன்னிப்பர் " என்ற ரீதியில் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.... இவை அனைத்தையும் கண்ட மோகினி.. கோவன்கள் பக்கமே சாய போக... அவளுள் இருந்து அவளை ஆட்டிப்படைக்கும் தீயசக்தி... அவளை பாடு பட்டு கட்டுக்குள்ளே வைத்து கொண்டது...
வளவன் பருந்து : முக்கியமானதை கூற மறந்துவிட்டேனே.... நீங்கள் நினைத்திருப்பதை போல்... மாயாவை தப்பித்தவறி நீங்கள் அழித்துவிட்டாளும்.... உங்களின் பெண் சாத்தான்கள் மூவரிள் இருவரான மேகலாயா மற்றும் மதுசூதனா அடியோடு அழிக்கப்படுவர்....
இதனை கேட்டவர்களுக்கு நா எழவில்லை.... என்ன கூறவுதன்றே தெரியாமல் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்....
மாயா : நன்றி வளவா... எம்மை தக்க தருணத்தில் காத்ததற்கு... யான் அழிந்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திரிப்பேன்...
வளவன் பருந்து : அது நான் இருக்கும் வரை என்றுமே நடவாது... மாயா... என கூற....
எதையோ வினவ வந்த மாயா... பின் ஏதும் கூறாமல்... மோகினியுடன் அங்கிரிந்து மறைந்தாள்.... அவர்கள் மறைந்ததும் மற்றவர்கள் புறம் திரும்பிய பருந்து....
வளவன் பருந்து : அழிவை நெருங்கிவிட்டீர்கள்... விகாஷ்வரா.... செய்யகூடாத தவறை செய்துவிட்டாய்..... ஆகாஷ்வரா..மற்றும் நகாஷ்வரா... இருவரும்... தங்கள் சகோதரனின் மூடத் தனத்தினால் சிந்திக்க தவறிவிட்டீர்கள்... உண்மை தெரியவரப்போகும் தினம் வெகு தொலைவில்... இல்லை.... என கத்திவிட்டு அங்கிருந்து பறந்தது...
..............................................
திருச்சி
மணி இரவு 2.... ( நம் நாயகிகளின் செயலால்.... நேரம் மாரி... தற்போதே இரண்டாகி உள்ளது)
இரவின் பனி கண்களை மறைக்க.... நிலவின் ஒளி பிரகாசிக்க... குருவிகளின் உறக்க ஒலியிலும்... ஆந்தையின் ஓசையிலும் மெல்ல நகர்ந்தது அந்த இரவு....
உயர்ந்த கட்டிடம்... அதன் பின் பக்க ஜன்னலை உடைத்து உள்ளே குதித்தனர் மூவர்.... அதே கட்டிடத்தில் வெவ்வேறு பக்கத்தில் குதித்தனர் இருவர்.....உள்ளே வெரும் இருட்டு.... செவுரில் கைகளை தடவியவாறே சென்று... முழு கட்டிடத்தையும் சுற்றியதும்.... மூவருக்கும் அந்த இருட்டில்... அவ்விடம் பழகி இருந்தது.... நேராக சென்ற மூவரும்.... ஒரு அறையில் நுழைய... அவ்வறையின் கதவிலோ " இரகசிய சாட்சிகள் அறை " என எழுதியிருந்தது....
மற்ற இருவரில் ஒருவர்.... அதே இரகசிய அறையின் எதிரில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தார்... மற்ற ஒருவர்.... அந்த இரு அறைகளுக்கும் வெகு தூரத்தில் அமைந்திருந்த " குற்ற பட்டியல் அறை " என்ற அறைக்குள் நுழைந்தது....
இரகசிய அறைக்குள் இருந்த மூவரில் ஒருவன்... அலமாரிகளை அலசி கொண்டிருந்தவன்... கலைத்து போய் தன் முகத்தை மறைத்திருந்த கருப்பு முக மூடியை கலட்ட.... அவனை கண்ட மற்ற இருவர் இருட்டிலும்... அவன் செய்தது என்ன என புரிந்துக் கொண்டு.... " டேய் " என குரல் கொடுக்க....
அவன் : டேய் சத்தம் போடாதீங்க.... மாட்டிக்க போறோம்.... ரொம்ப வேர்க்குது டா... அதான் மாஸ்க்க கலட்டுனேன்.... காற்றின் சின்னமான எனக்கே இப்டி னா... நீங்களாம் என்ன டா பன்னுவீங்க....
தீரா : இதுலையே தெரிஞ்சிர்க்குமே... இவன் வேற யாரும் இல்ல பா... நம்ம சத்தீஷ் தான்... அவன் கூட வந்தவனுங்க நம்ம க்ரிஷ்ஷும்... இந்திரனும் தான்....
நோட் : மற்ற இருவர் யாரென நான் அறியவில்லை.....
மாடியிலிருந்து கீழே இறங்கிய சத்தீஷ்... தன் சகோதரன்கள் இருவரும் நடுராத்திரியில் எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதை பார்த்து விசாரிக்க.... மூவரும் முன்பே போட்ட திட்டத்தை நியாபகப்படுத்தி அவனையும் இழுத்துக் கொண்டு வந்திருந்தனர்....
இந்திரன் : காத்து உனக்கே இப்டி னா... நம்ம பக்கத்துலையே நெருப்பு இருக்கு டா.... அவனுக்கு எப்டி இருக்கோ... என ஹஸ்க்கி வாய்ஸில் கூற....
க்ரிஷ் : இப்போ ரொம்ப முக்கியம் டா... வந்த வேலய பாருங்க டா... டேய் நீ திரும்ப மாஸ்க்க போடு டா.... என சத்தீஷை நோக்கி கூற...
சத்தீஷ் : டேய் நீ ஃபன போடு... நான் மாஸ்க்க போடுறேன்....
இந்திரன் : நம்ம என்ன இங்க விருந்து சாப்பிடவா டா வந்துர்க்கோம்....
க்ரிஷ் : ஆட்டயாப் போட வந்த இடத்துல கேக்குறதா டா இது?? மூடு டா மொதல்ல.... நா மொகத்த சொன்னேன்....
சத்தீஷ் : இப்ப மறைக்கிலன்னா என்ன டா ஆகப்போகுது???
இந்திரன் : கேமரா இருக்கு டா... எரும.... இருட்டுல தெரியாதுன்னு மட்டும் சொல்லாத...
சத்தீஷ் : அடப்பாவிங்களா.... அத முன்னாடியே சொல்ல மாட்டீங்கலா டா... என உடனே மாஸ்க்கை அனிந்துக் கொண்டான்...
க்ரிஷ் : சரி சரி.... தேடுங்க டா....
மூவரும்... எதையோ அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்க...
அங்கோ மற்ற அறைகளிள் இருந்த இருவரும்.... இவர்களை போலவே எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.... குற்றபட்டியல் அறையில் இருந்த உருவம்... நேராக ஒரு பெரிய பீரோ முன் நின்று.... தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்து இதுவரை யாருமே அறியாத ஒரு லாக்கரை ஓப்பன் செய்தது... அது யூகித்ததை போலவே அதில் ஒரு ஃபைல் மட்டும் இருந்தது... பார்ப்பதற்கே ஒரு ஃபைல்... புரட்டியதும் தான் தெரிந்தது... ஒரே குற்றத்தில் ஏறகுறைய 200 க்கும் மேற்பட்ட ஃபைல் செய்த கேஸ்கள்....
அதை கண்ட அந்த நபர்.... லாக்கரை பூட்டிவிட்டு.... அந்த ஃபைலுடன் வந்த தடையமே இல்லாமல் வந்த வழியாகவே வெளியேறினார்.... அந்நபரை கண்ட இந்திரன்.... ஒரு நொடி சென்ற பின் மீண்டும் வேலையில் மூழ்கினான்....
மரட்டேபிலை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்த க்ரிஷ்.... ஒரு சிறிய பெட்டி அதில் பூட்டி கிடப்பதை கண்டு.... பூட்டை திறக்க முயன்றான்..... மிக தடினமாய் இருந்தது..... இறுதியில் அந்த பூட்டை நோக்கி கையை சுடக்கிட்டான்.... அடுத்த நொடியே பூட்டு திறந்துக் கொண்டது.....
அதை திறந்தவன்.... அவர்கள் தேடி வந்தது அனைத்தும் உள் இருப்பதை கண்டு.... தன் சந்தேகங்கள் அனைத்தும் உண்மை என உறுதி படுத்திக் கொண்டு எழுந்தான்.... அதே நேரம்... இந்திரன்....ஒரு பீரோலில் இருந்து மிஸ்ஸிங் என்ற பைலை எடுத்தான்.... மற்ற மிஸ்ஸிங் பைலை காணுகையில்.... இது முற்றிலும் வித்யாசமாக இருந்தது.... அதில் இருந்தது அனைத்தும் பெண்களின் வழக்குகள்..... சத்தீஷின் கைகளுக்கு அகப்பட்டது ஒரு பழைய டையிரி.... அதை எடுக்க பட்ட பாடு நம் சத்தீஷே அறிவான்.... மிக மறைவான இடத்தில் மறைத்து வைக்கப்பைட்டிருந்தது அது..... மூவரும் தங்களுக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டு வெளியேற... அதே நேரம் எதிரில் இருந்த அறையிலிருந்து அந்த நபரும் வெளியேற.... " இந்த நேரத்தில் நம்மை போன்று வேறு ஒருவரா " என அதிர்ந்து... சில நொடிகளிளே தங்களை மீட்டுக் கொண்டு.... மூவரும்.... கண்களை அசைத்துக் கொள்ள... மந்திரம் இல்லாமலே... தங்கள் மனதில் நினைத்ததை நடத்தினர்.... மூவரும் மற்றவர் கண்களுக்கு அகப்படாமல் கண் பார்வையிலிருந்து மட்டும் மறைந்தனர்....
அந்த அறையிலிருந்து வெளிவந்த அந்நபர்... இவர்களை காணும் முன்னே மூவரும் மறைந்ததால் அவர்களை காணவில்லை...
வெளியேறிய அந்நபர்.... நேரே சென்று ஒரு அறையில் நுழைந்து... எதை பற்றியும் யோசிக்காமல் லைட்டை போட்டார்... அதே அறையிலே தான் நம் நாயகன்களும் தற்போது நிற்கின்றனர்... முகத்தை முழுதும் மறைத்து தன் உடல் முழுவதையும் ஏதோ ஒரு கருப்பு நிற துணியால் மறைத்து இருந்தது.... சத்தீஷ் சும்மா இருக்காமல்... அவர் அருகில் சென்று அந்நபர் என்ன செய்கிறார் என எட்டி பார்க்க.... டேபிலில் சில ஃபைல்களை புரட்டிக் கொண்டிருந்தார்.... கையில் நடுவிரலில் ஒரு ப்லட்டின மோதிரம் அணியப்பட்டிருந்தது....
அந்த பைலில் சில பல தாள்களை புரட்டியதும்.. ஓர் தாளிள் நிலைகுத்தி நின்றது அவரின் பார்வை... அதை சத்தீஷ் காணும் முன்னே.... டப்பென மூடினார் ஃபைலை..... சட்டென திரும்பி சத்தீஷின் பக்கமே கூர்ந்து நோக்கினார்.... நம் சத்தீஷ் அசால்ட்டாய் நிற்க.... க்ரிஷ் அவனை பின் பக்கம் இழுத்தான்.... அந்த அறையை சுற்றி நோட்டமிட்ட அந்நபர்.... ஏதோ ஒரு பௌடரை தூவ... அதை நொடியில் சுதாரித்துக் கொண்ட சத்தீஷ்... அவன் கைகளை முன் நோக்கி அழுத்த... காற்றின் விசையில் கறைந்தது அப்பௌடர்....
இந்திரன் : நம்ம மேல பற்றுந்தா... இந்நேரம் நம்ம மாட்டீர்ப்போம்...
க்ரிஷ் : ஷ்ஷ்ஷ்....
கறைந்த அப்பௌடரை அமைதியாய் கண்ட அந்நபர்.... " யாரா இருந்தாளும்.... சீக்கிரமே சந்திப்போம் " என கூறிவிட்டு... எதையும் கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்து அகன்றார்...... ஒரு பெண்ணுக்கு இந்த நேரதில் இங்கு என்ன வேலை??? நாம் இருப்பதை எப்படி கண்டுபிடித்தாள்??? ஏன் நம்மை பற்றி எதையும் அறிந்துக் கொள்ளாமலே சென்றாள்??? குரலில் ஏதோ கடினம் இருந்ததே... குழப்பிக் கொண்ட நம் நாயகன்கள் அங்கிருந்து சில நிமிடங்களிள் கிளம்பினர்......
.
.
.
தங்களின் ஃபார்ம் ஹவ்ஸை அடைந்த விகாஷ் ஆகாஷ் மற்றும் நகாஷ்.... தலைவலியுடன் கதிரையில் அமர்ந்திருந்தனர்....
நகாஷ் : என்ன நடக்குது பாய் இங்க??? இந்த வளவன் ஏன் திரும்ப வந்தான்???
ஆகாஷ் : அத விடுங்க பாய்... நம்ம இன்னைக்கு தான வரப்போறதா நேத்து சொன்னீங்க... அப்ரம் ஏன் நேத்தே கெளம்ப சொன்னிங்க.???
விகாஷ் : ஒன்னும் புரியல நகாஷ்.... மேகலாயாவும் மதுசூதனாவும் விடுவிக்க இன்னும் இரெண்டே நாள் அவகாசம் தான் இருந்தது.... அத நேத்து நா சரியா கவணிக்கல... அப்ரம் தான் பாத்துட்டு... உங்கள உடனே அழைச்சிட்டு வந்தேன்....
ஆகாஷ் : பாய்.... மாயா வ நம்மளால அழிக்கவே முடியாது... இனி என்ன தான் பன்றது???
நகாஷ் : வழி தேடனும்....
விகாஷ் : வழி இருக்கு... அவளுக்கு பாதுகாவலனா இருக்க வளவனையும்... அவன பாதுகாக்குர கோவன்களையும் அழிச்சிட்டா மாயாவும் அழிஞ்சிடுவா....
தீரா : அது உங்களால முடியும் னு நெனக்கிற???
ஆகாஷ் : யாருமா நீ... எங்கேந்து வர???
தீரா : நீங்க வந்த அதே காட்டுல இருந்து தான் நானும் வரேன்....
நகாஷ் : எங்கள ஃபாலோ பன்றியா???
தீரா : இவனுங்க பெரிய அம்பானி... உங்கள ஃபாலோ பன்றது தான் என் வேல?? போடா டேய்... ஆல்ரெடி டைம் பத்தலையே ன்னு நா காண்டுல இருக்கேன்...
விகாஷ் : பாப்பா... உன் ஏஜ் என்ன இருக்கும்???
தீரா : அது எப்டித்தான் பாத்த உடனே பாப்பா ன்னு முடிவு பன்றானுங்களோ தெரியல.... என் ஏஜ தெரிஞ்சு நீ கணக்கா டா போட போற???
விகாஷ் : இல்ல... ரொம்ப பேசுரியா... அதா எங்கயாவது வச்சு போட்டு தள்ளலாம் னு பாத்தேன்....
தீரா : அடப்பாவிங்களா... என்னையவே வா டா..... ஆனா அதல்லா உன்னால முடியாது... முடிஞ்சா என் அண்ணாஸ் ட்ட உன் கெத்த காமி....
ஆகாஷ் : யாரந்த அண்ணாஸ்???
தீரா : உங்க பரம்பரை எதிரிங்க....
நகாஷ் : அப்போ உன்ன தூக்குனா அவனுங்க வந்துருவானுங்கல்ல....
தீரா : இல்ல.....😲
ஆகாஷ் : அன்???
தீரா m.v : ஆஹா... அப்டி சொன்னா அவனுங்க என்ன... இங்கேயே விற்றுவானுங்களே.... அவ இல்லாம சந்தோஷமா இருக்களாம் னு... அப்டிலாம் நா விட்டுடமாட்டேன்.....
நகாஷ் : என்ன சத்தத்தையே காணும்....
தீரா : த்ரோட் பெயின்....
விகாஷ் : நடிக்காத பாப்பா...
தீரா : நான் ஏன் டா நடிக்க போறேன்??? உங்க வாழ்க்கையே ஒரு நாடகத்தால தான் கௌந்துச்சு ன்னு மறந்துருச்சோ.... செவியை தீட்டி நன்கு செவி சாய்த்துக் கொள்.... இப்பிறவியில்.... தாங்கள் அடையப்போகும் வெற்றி... நாடகத்தினாலே... நாடகத்திலே....
நகாஷ் : என்ன சொன்ன ஒன்னும் புரியல... என மூவரும் அவ்விடத்தை நோக்க.... அங்கோ யாரும் இல்லை...
நடந்ததை பற்றி ஆராயாமல் மூவரும் நாளையே.... நம் நாயகன்களை காண வேண்டும் என திட்டம் தீட்ட தொடங்கினர்...
தீரா : நம்ம பவி மாரி இவனுங்களும் ஆராய்ச்சில எரங்கீர்க்கலாமோ......
.
.
.
இரவென்றும் பாராது.... தன் கண்ணீர் நிலத்தை தொட.... வாண் எங்கும் இருள் படர்ந்திருக்க..... மனம் முழுவதும் பாரத்துடன்.... அமர்ந்திருந்தது நம் ரெட்டி ஐ உருவம்.... அதன் அருகிலே.... கண்களை கைகளாள் மூடிக் கொண்டு.... தன் வேதனையை வெளி காட்டது நின்றது பெண் உருவம்.....
பெண் உருவம் : போதும் டா.... ப்லீஸ் நாம போலாமே....
ரெட்டி ஐ : இல்ல டி... நா வரல... என் உயிரோட சமாதி மா இது... நாழு வருஷத்துக்கு முன்ன.... இதே இடத்துல நா விட்டுட்டு போகாம இருந்துர்ந்தா.... இந்நேரம் என் கூடையே இருந்துர்க்கும்....
பெண் உருவம் : விதிய மாத்த முடியாது கண்ணா... வா போலாம்....
ரெட்டி ஐ : முடியாது.... என் உயிர் சமாதி ஆனதுக்கு காரணமா இருந்தவங்கள.... நா சும்மா விட மாட்டேன்....
பெண் உருவம் : இல்ல .... நீ அத பன்ன கூடாது.... அத பன்ன வேண்டிய ஆலுங்களே வேர.... அது நாம இல்ல....
ரெட்டி ஐ : நா அத பாத்து இரசிப்பேன் மா... அது போதும் எனக்கு...
பெண் உருவம் : சரி... அத விடு... உன் நாடகம் எப்டி போகுது???
ரெட்டி ஐ : ம்ம்ம் நல்லா தான் போது... முன்னாடி சொன்னமாரியே தான் இப்பையும் அனப்பீர்க்கு....
பெண் உருவம் : முன்ன சொன்னமாரியா??? என்ன சொன்னது???
ரெட்டி ஐ : அதுவா.... நாடகத்த... ஆரம்பிச்சப்பவே... தனியா..
என பாதியிலே அவர்களின் உறையாடலை தடுத்தது ஒரு அகோரமான சத்தம்..... அங்கு திரும்பிய இருவருக்கும் பேரதிர்ச்சி...
என்ன சத்தம் அது??? யாரிந்த இரு உருவங்கள்??? இவ்விரு உருவங்களிள் பாதிக்கப்பட்டவர் யார்??? ரெட்டி ஐ உருவம் ஆணா பெண்ணா??? திருச்சி வந்த மற்ற இரு நபர்கள் யார்??? அவர்கள் பெண்களா??? அல்லது ஆண்களா???? நடக்கப் போவது என்ன???
காதல் தொடரும்.....
Hiiiii idhayangale.... ungalauku intha ud la therinjirukkum... mayamohini paathi kettava.... paathi nallava.... kattayathaala kettavala maarunava..... so mayamohini aliyanum nu nenikireengala... illa renda irukuravanga onna aaganum nu nenaikireengala???? Etha irunthalaum solllunga.... i need a clear answer.....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro