காதல் -17
ஊட்டி...
டாக்டர் கென்னின் உடலை அடக்கம் செய்ய வேண்டி வேலைகள் நடைபெற.... அவரை சுற்றி பலர் நின்றிருக்க.... ஒரு பாதர் பைபிலை வாசித்து.... அடக்கம் செய்ய சொன்னதும்....அங்கு அனைத்தும் ஒவ்வொன்றாய் நடந்தேறியது.... அக்கல்லரையில் டாக்டர் கென்னின் அடையாளங்கள் பொரிக்கப்பட...அதனையே ஒரு கருப்புக் கோட் போட்ட உருவம் பார்த்துக் கொண்டிருந்தது....கருப்புக் கோட்டின் முன் நின்ற ஒரு பெண்மணி...
அப்பெண்மணி : கவலப்படாதீங்க...டாக்டர்... அங்க என்ன இருக்குன்னு நீங்க கண்டுபுடிக்கல ன்னாலும்.... இன்னும் கொஞ்ச நாள்ள நானே கண்டு புடிச்சிடுவேன்.... அத வித்து இன்னும் பணக்காரி ஆவேன்... உங்களோட சாவு... என் புது தொழிலோட ஆரம்பபுள்ளியா இருக்க போது... உங்கள கொன்ன கொலையாளி ய லாம் கண்டுபுடிக்க டைம் இல்ல... இந்த லலித்தா இன்னும் கொஞ்ச நாள்ள ஒட்டு மொத்த இன்டியா லயே நம்பர் ஒன் பிஸ்னெஸ் உமென் ஆக போறா... ஹாஹாஹா...
ஆம் டாக்டர் கென்னிற்கு அதில் (எதில்??) இருப்பதை கண்டு பிடிக்க ஆறு வருடங்கள் முன் வேலை அளித்த பெண்மணி லலித்தா தான்....அது மட்டுமல்ல...அன்று மானிக்கத்திடம் வேறொரு பெண் குழந்தையை கடத்த கூறிய அந்த நிழல் உருவமும் லலித்தா தான்....(பகுதி-6,10 இலும் வரும் பெண்மணி..மற்றும் போனில் பேசிய எதிர்புறம் தான் லலித்தா)
ஊட்டியில் கொடிகட்டி பறக்கும் வரன் க்ரூப் ஆப் கம்பெனீஸ் இன் ஒன் ஆப் தி ஓனர்... டாக்டர் . பரமேஷ்வரன்
இவரது மனைவி லலித்தா....சீரியலில் உள்ள வில்லியை போன்றவள்... வரன் க்ரூப் ஆப் கம்பெனீஸ் ஐ வழிநடத்துபவள்.... கணவன் கிராமத்தில் இருக்கும் அப்பாவி பெண்களை கடத்தி கொண்று அவர்களின் உருப்புகளை விற்பான்....மனைவி கிராமத்தில் வாழும் அனாதை பெண் குழந்தைகளை நாடுகடத்தி எங்கேனும் வித்து காசாக்குவாள்....புதிய வைரஸ்... பக்டீரியா... விஷம் போன்றியவைகளை கண்டுபிடித்து தடைசெய்யப்பட்ட கொடிய விஷங்களை வெவ்வேறு நாடுகளிள் கூவி கூவி விற்கின்றனர்... இருவரும் அவர்களின் வேலைக்கு தேர்ந்தெடுத்த கிராமம் நம் வேதபுரம் தான்.... சில கொடிய மருந்துகளை மனிதர்களின் மேலே உபயோகிக்கின்றனர்.... அதனால் இதுவரை பலபேர் உயிரிழந்திருக்கின்றனர்.....
சில வருடங்களாக பல பெண் குழந்தைகளும் பெண்களும் காணாமல் போயினர்... மானிக்கம் மற்றும் அவரின் தம்பி ஜகன்நாதனை அவர்களின் கைக்குள் போட்டு பணத்தை காட்டி மாதாமாதம் பெண்களை கடத்தி வந்தனர்.... கடத்திய பெண்களை கூறுபோட்டு வெட்டி வெவ்வேறு இடங்களிள் வித்துவிடுவர்...சில பெண்களை கட்டாயப்படுத்தி கற்பளித்து கொலை செய்தனர் அவர்களின் அடியாட்கள்..... இதை அனைத்தையும் பற்றி விசாரித்த போலீஸாரால் அவ்வழக்கு மூடவும் பட்டது.... அவ்விருவரின் பண பலத்தால் கேஸ் அனைத்தையும் தவிடு புடியாக்கினர்... ஆனால் என்று நம் முகிலன் ஐபீஎஸ் ஆய் பதவி ஏற்றானோ அன்றிலிருந்தே அவர்களின் தொழில் ஆட்டம் கண்டது... லஞ்சத்தால் முகிலை அசைக்க முடியாதவர்கள் மேலிடத்தில் பேசி முகிலின் கையில் இருந்த கேஸை பாடுபட்டு மாற்றினர்...ஆனால் அவர்களே எதிர்பார்காத வகையில் அவ்வழக்கு மீண்டும் சரத் மற்றும் ராஜியின் மரணத்தால் அவனிடமே திரும்பியது..... மீண்டும் வழக்கு தொடங்க.... வழக்கு இழுத்து மூடப்படும் என நினைத்த சமையம்... எதிர்மரையாய் அதே வழக்கு நீதி மன்றத்தால் சீபிஐ யிடம் ஒப்படைக்க பட்டது.... மறைவான விசாரணை முகிலனிடம் சேர்ந்தது....சீபிஐகளை பற்றி குழம்பிபோயினர்.... அதுவும் லன்டனில் இருந்து வரப் போகும் ஆபீஸர்ஸ் என தெரிந்ததும் எதாவது திட்டம் தீட்ட காத்திருந்தனர்.... அவர்கள் அறியாதது ஒன்றே... இந்த கேஸ் ஒரு மாதம் முன்பே சீபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று.ரரர ஆனால் கிராமத்திற்கு வந்த ஒரு வாரத்திலே முகிலுடன் சேர்ந்து மானிக்கத்தையும் ஜககன்நாதனையும் கண்டுபுடிப்பார்கள் என எதிர்பார்க்காததால் இருவரும் ஆத்திரத்தில் இருந்த சமயம் தான் டாக்டர் கென் னின் மரண செய்தி வந்தது....
டாக்டர் கென்.... ஊட்டியில் பிரபலமான மருத்துவ விஞ்ஞானி... 5 வருடங்கள் முன் வேதபுரத்தில் கடத்த பட்ட 17 வயது பெண் அதிக டோஸ் மயக்க மருந்து குடுத்தும் தவறுதலாய் ஆற்றில் விழுந்ததும் சிறிது நேரத்திலே மயக்கம் தெளிந்து தப்பித்து ஓடிவிட்டாள்.... அவளை மிகவும் கொடுமை படுத்தியதால் எங்கேனும் நம் தொழிலை பற்றி கூறிவிடுவாள்... என பயந்து.... இரவு முழுவதும் அவளை தேடி காட்டை அலசி ஆராய்ந்து.... இறுதியில் உணவு உண்ணாததால் மயங்கி கிடந்தவளை... அடித்து உதைத்து.... கொடுமையான செயல்களை செய்து பின் விஷம் அருந்த வைத்து கொன்றனர்...... அவளுக்கு மயக்கம் தெளிந்தது எப்படி என தெரியாமல் பரமேஷ்வரனும் லலித்தாவும் மூளையை குடைந்த சமயம் தான் அது அந்த ஆற்றின் தண்ணீரால் இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்களின் வேலையாள் ஒருவனை கன்னாடி குடுவையில் ஆற்றின் நீரை வாரத்திற்கு ஒரு முறை சேகரித்து வர கூறினார்கள்...நீரில் மட்டுமல்லாது.... வேதபுரத்தின் மணலிலும்... சில குறிப்பிட்ட இலைகளிலும் ஒரு வித நாசினி இருப்பதை அறிந்து அதை சேகரிக்கும் பணியிலும் ஈடிப்பட்டிருந்தனர்....
கென்னிற்கு இவ்வேலை கொடுக்கப்பட்டது.... ஆனால் எவ்வளவோ முயன்றும் அவரால் அதில் இருப்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.... 5 வருட தீவிர பரிசோதனைக்கு பின்பே அந்நீரில் ஏதோ ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார்.... ஆனால் என்னவென தெரியாமல் பரமேஷ்வரனிடம் திட்டு வாங்கி அதன் பின்பு அன்று அவர் இறக்கும் முன்பு தான் அந்நீரில் " டெகட்ரான் " என்னும் அர்புத வகை பக்டீரியா இருப்பதை கண்டுபிடித்தார் டாக்டர் கென்....
டெகட்ரான் இயற்கையிலே உருவான ஒரு அர்புதம் மட்டுமல்லாது மிகவும் அரிய வகை. பக்டீரியா.... இதுவரை உலகில் எங்கும் இல்லாத இந்த பக்டீரியா பல நூரு ஆண்டுகளாய் வேதபுரத்தில் இருக்கிறது... இப்படி ஒன்று இருப்பதும் யாரும் அறியா ஒரு விஷயம்...இந்த பக்டீரியா எவ்வகையான கொடிய நோயாய் இருந்தாலும் உடனே குணப்படுத்தும் வல்லமை கொண்டது..... உயிர் போகும் தருவாயிலானாலும் இது மனித உடல்களிள் அதி தீவிரமாய் செயல்பட்டு நிச்சயம் போக இருக்கும் உயிரை இழுத்து பிடித்துக் கொள்ளும்.... இது எதில் கலந்தாலும் அதை எளிதில் கண்டு பிடிக்க முடியாது.... சாதாரண நீரை போலவே காட்சி அளிக்கும்.... இந்த பக்டீரியா பலாயிரம் வருடங்கள் முன் தோன்றிய மனிதர்கள் மழையின் நீரிலும் மலையின் அடிவாரத்தில் இருக்கும் நீரிலும் மற்ற ஏதோ ஒரு பொருள் சேர்ந்து உருவாக்கியது என கருதுகின்றனர்.... அந்த ஏதோ ஒரு பொருள் அரிய வகை மூலிகை சாறுகளிள் ஒன்றாக இருக்களாம் என்ற கருத்தும் உள்ளது.... ஆனால் அந்த அரியவகையும் அழிந்துவிட்டது என்பதே உண்மை.... ஆனால் பலகோடி வருடங்களாய் இந்த பக்டீரியா தன்னை தானே உருவாக்கி அவ்வாற்றில் முழுதாய் கலந்து இருக்கிறது....இது எதையும் அறியாத கிராம மக்கள் அவ்வாற்றை உபயோகிக்காமலே வைத்திருக்கின்றனர்.... இந்த பக்டீரியாவை தேடி பல நாடுகள்... பல இடங்களிள்... வேவ்வேறு மூலிகைக் கொண்டு உருவாக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டு அனைத்தும் நாசமானது.... இந்த பக்டீரியா வை எந்த குறையும் இல்லாத மனிதன் மேல் பட்டால்... இதுவே அவனுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருந்தால்.... விஷமாக மாறி புற்றுநோயாக மாறவும் வாய்ப்புகள் இருக்கிறது...இது ஒன்றோடொன்று கலந்து இன்னோறு பக்டீரியாவை உருவாக்குகிறது... அதன் அணு உருவாகும் செயல் முறையை அறிய வேண்டி கற்பனை செய்து உருவான எந்த ஒரு மருந்துகளும்....நோய்களை முழுதாய் குனப்படுத்தவில்லை.... டெக்ட்ரான் என்ற ஒரு பெயர் கூட தெரியாத காலத்திலே... அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுப்பிடிப்பேன்... என ஒருவர் சென்றதாகவும் ஒரு தகவல் இருக்கிறது....
பக்டீரியா இருப்பதை எப்படியோ கண்டுபிடித்த டாக்டர் கென் அதை விற்க்க முயலும் போதே உருவத்தாலும் பெண் உருவத்தாலும் கொலை செய்யப்பட்டார்...
பரேமேஷ்வரன் கோவமாய் அவரின் பங்கலாவில் நுழைகிறார்... அவரின் மனைவி லலித்தா டீவி பார்த்துக் கொண்டிருந்தவர் இவரை காணவும்....
பரமேஷ்வரன் : எல்லாம் போச்சு....மானிக்கம் போலீஸ் ல மாட்டிக்கிட்டான்.... அந்த ஐபீஎஸ் (முகில்) கூட மூணு சீபிஐ யும் (க்ரிஷ் இந்திரன் சத்தீஷ்) சேந்துட்டாங்க... அவனுங்க மட்டும் இல்லாம இன்னும் அஞ்சு பேர் (அஷ்வன்த் ரவி ரனீஷ் வீர் ரித்விக் )சேந்து மொத்தம் ஒன்பது பேரா ஜகன்நாதன கொன்னுர்க்காங்க...
லலித்தா : என்னங்க சொல்றீங்க? ?
பரமேஷ்வரன் : ஆமா லலித்தா... மானிக்கத்தையும் அரேஸ்ட் பன்னி ஹன்ட் ஓவர் பன்னிட்டாங்க....அவன் தான் அட்வக்கெட் கிட்ட சொல்லீர்க்கான்....
லலித்தா : எவ்ளோ தைரியம் இருந்தா நம்மகிட்டையே மோதீர்ப்பாங்க???? நம்மலால அந்த பசங்கள ஒன்னும் பன்ன முடியாதா???
பரமேஷ்வரன் : முடியாது.... இதுக்குள்ள நாம அவனுங்க தான் கொல பன்னாங்கன்னு உண்மைய சொல்லி நுழைஞ்சா.... நமக்கு எப்டி தெரியும் னு கேஸ் நம்ம பக்கமே திரும்பும்...
லலித்தா : ஒரே வாரத்துல மானிக்கத்த கண்டுபுடிச்சிர்க்காங்கன்னா... நம்மள பத்தியும் எதாவது தெரிஞ்சிர்க்கும்... நாம ரொம்ப ஜாக்கிறதையா இருக்கனும்...
பரமேஷ்வரன் : ம்ம் புரியிது லலித்தா...
லலித்தா : டாக்டர் கென் விஷயம் என்ன ஆச்சு???
பரமேஷ்வரன் : தெரியல...யாரோ கொண்ணுட்டு தப்பிச்சு போய்ர்க்காங்க.... கேமரா ல கொலையாளி பொண்ணா பையனான்னே தெரியல...கடசியா அவரு அந்த தண்ணிய வச்சு என்னமோ பன்னீர்க்காரு.... அப்ரம் தா செத்துப் போய்ர்க்காரு....ஆனா கொலையாளி பொண்ணா தான் இருக்கனும்... ஏனா அங்க இரெண்டு டிப்ரெண்ட்டான டி.என்.ஏ உடைய இரெண்டு பெரிய முடி கிடைச்சிருக்கு... சோ இட் கேன்பி டூ கெர்ள்ஸ்....
லலித்தா : எப்டி வந்தாங்க???? அவரு ரூம்ல கேமரா இல்ல யா??
பரமேஷ்வரன் : இருந்துச்சு....ஆனா நம்ம ஆராய்ச்சி பன்ன சொன்னதுக்கு அப்ரம் கேமரா வ டிஸ்கனெக்ட் பன்னீர்க்காரு...
லலித்தா : எந்த எவிடென்ஸுமே இல்லையா???
பரமேஷ்வரன் : இல்ல...கொலையாளி கேர்புலா ஹன்ட் ப்ரின்ட் கூட படாத மாரி தப்பிச்சு போய்ர்க்கா... கென் னோட போன் கூட கெடைக்கல....
லலித்தா : அந்த கொலையாளி நமக்கும் எதிரியா???
தீரா : ஒன்னு ரெண்டு பேர் இருந்தா தெரியும்....இருக்குர எல்லாரையும் கொடஞ்சா...எப்டி எதிரியா இல்லையா ன்னு தெரியும்...??
பரமேஷ்வரன் : கண்டுபுடிக்கிறேன்....
லலித்தா : அப்போ ஆராய்ச்சிய என்ன தான் பன்றது???
பரமேஷ்வரன் : தண்ணீல உள்ளத தான கடுபுடிக்க முடியல... மணல்லையும் இலைகள்ளையும் இருக்குரத கண்டுபுடிக்க சொல்லுவோம்...
லலித்தா : குட் ஐடியா..... நெக்ஸ்ட் ஆர்டர் வர ஆரம்பமாகிரும்... இனிமே நம்மலால இந்த தொழில பன்ன முடியாது...
பரமேஷ்வரன் : இப்போதிக்கு பன்னாம இருக்குரது தான் நமக்கு நல்லது....
அப்போது ஒரு புதிய எண்ணிலிருந்து பரமேஷ்வரன் க்கு கால் வர...எடுத்து பேசியவர்.... அதை எடுத்து மமிழ்ச்சியாய் பேச தொடங்க.... லலித்தாவும் கலந்துக் கொள்ள....
பரமேஷ்வரன் : வாட் கம்மிங் வெட்னெஸ்டே வா...ரியலி....
லலித்தா : கம் அப் சூன் கய்ஸ்...வீ ஆர் வைட்டிங்.... என்று போனை அனைக்க.... பரமேஷ்வரன் அவசர வேலையால் வெளியேறினார்....
லலித்தா : தேவ இல்லாம எங்க லைன்ல க்ராஸ் ஆகி எனக்கு அந்த பொண்ணால கெடக்க வேண்டிய பணத்த கேன்ஸல் பன்னீட்டீங்க.... இனிமே நீங்களே நெனச்சாலும் தப்பிக்கவே முடியாது....என மனதிலே நம் நாயகன்களிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார்.....
தீரா : பாக்குறேன்...பாக்குறேன்...
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
ஓர் இருட்டான அறை.... மெல்லிய மூச்சு காத்து இழுத்து விடும் சத்தமே சத்தமாய் கேட்டுக் கொண்டிருந்தது..... மடார் என கீழே விழுந்து உடைந்தது ஒரு கன்னாடி ஜஃக்.... அதை உடைந்த வேகத்திற்கு சத்தமாய் வந்தது ஒரு பெண்ணின் குரல்.... (இவள் டாக்டர் கென்னை கொலை செய்த உருவங்களிள் ஒருவள் அதாவது பெண் உருவம்)
அப்பெண் : ஏன் இப்டி பன்ற..?? காம் டௌன்... கூல் யுவசெல்ஃப்.... ஏன் இவ்ளோ கோவப்படுர???
உருவம் : ஐ கான்ட் ஈவன் கன்ட்ரோல் மை அங்கர்... ( I cant even control my anger)என வந்தது ஒரு உக்ரமான குரல்...
அப்பெண் : அந்த பரமேஷ்வரனால நீ எவ்ளோ பாதிக்கப்பற்றுக்க எனக்கு தெரியும் மச்சி...நீ மட்டும் இல்ல நானும் தான்... நா அத நெனச்சு அழுதா...எனக்கு நம்பிக்கை குடுக்குர நீ...இன்னைக்கு ஏன் அழர???
உருவம் : முடியல டி...நானும் எவ்ளோ நாள் தான் தனியா இருக்கும் போது தைரியமா இருக்குர மாரியே நடிக்கிறது... தனியா இருந்தாளே.... " என்ன ஏமாத்தீட்டல்ல... என்ன ஏமாத்தீட்டு அவன் கூட போய்ட்டல்ல... " ன்னு அவன் கத்துன அதே வார்த்தைகள் தான் என் காதுக்குள்ள கேட்டுக்குட்டே இருக்க.... தலைமுடியை பிய்த்துக் கொண்டது..
அப்பெண் : அவன் அப்டிலாம் ஒன்னு சொல்லலடா மா.... நீ அழாத.... கர்பனை பன்னாத.... என அவ்வுருவதிற்கு தாயாய் மாறி அரவனைத்தாள் அப்பெண்....
விருட்டென எழுந்த அவ்வுருவம்....
உருவம் : அவன கூண்டோட அழிப்பேன்...டி.. பொண்ணா இருந்தா என்ன வேணா பன்னலாம்... அவ எதையும் சொல்லமாட்டா... பன்னமாட்டா ங்குர திமிருல தான அவன் இப்டிலாம் செஞ்சான்...அத தப்பு ன்னு நிரூபிப்பேன் .. அந்த பரமேஷ்வரனுக்கும் அவன் பொண்டாட்டி லலித்தா க்கும்... ஒன்னா மரணத்த காட்டுவோம்.... அவனுங்கள சாகடிக்க ஆல் எழுந்துட்டாங்க.... என்றது கரராய்.... அதன் கண்கள் செக்க செவேற் என்று சிவந்து காட்சி அளித்தது ரெட்டி ஐயின் கண்கள்.... ( இதயங்களே... இப்பொதிக்கு..எனக்கு இந்த உருவத்துக்கு ஏத்த பெயர் கிடைக்கல... அது கிடைக்கிர வர அதோட ஐடென்ட்டி ல இருந்து எதப்பத்தியும் என்னாலையும் தெரிஞ்சிக்க முடியாது.... இனிமே அந்த உருவத்தோட பெயர் ரெட்டி ஐ உருவம்.... )
முக்கிய குறிப்பு : லாஸ்ட் டைம் போட்ட இந்த கதை ல இருந்த கரெக்டர் இது இல்ல... குழப்பிக்காதீங்க....
✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈
பறந்து விரிந்திருந்த நீல வாணம்.... பன்க்காங்கில் தீவிரமாய் உழைத்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை திசை திருப்பியது.... அலை அலையாய் புறண்டாடும் கற்றை முடி... அகன்ற நெற்றி.... கட்டுக் கோப்பான தேகம்... கோதுமை நிறம்... ஆறடி இளைஞன்... வதனத்தில் ஆணவத்திற்கு ஏக பொருத்தம்... அவன் வாணை பார்த்தவாறே நிற்க... அவன் உயரம்... உடல்வாகு மற்றும் முக அமைப்பை ஒற்றிருந்த இருவர் அவன் அருகில் வந்து நிற்க.... விகாஷ் என்ற அழைப்பை கேட்டு திரும்பினான் விகாஷ்வரன்....(வில்லன் நம்பர் 1)
திரும்பிய விகாஷ்....தன்னை அழைத்த தன் சகோதரனை ஆகாஷ் என்னும் அழைப்புடன் அனைத்துக் கொண்டான்... தன் மூத்த சகோதரனை கட்டிக் கொண்டான் ஆகாஷ் என்னும் ஆகாஷ்வரன்....(வில்லன் நம்பர் 2)
இருவரும் திரும்ப கதவருகில் நின்ற அவர்களின் இளையவனை அழைத்து கைகளை தட்டி கொண்டனர்.... முன்னே வந்தவன்... தனக்கு மூத்த அண்ணன்கள் புன்னகையுடன் கட்டிக் கொண்டான் நகாஷ் என்னும் நகாஷ்வரன்....(வில்லன் நம்பர் 3)
விகாஷ் : வாட் சப் ப்ரோஸ்.??
ஆகாஷ் : நத்திங் பாய்... எப்போ இன்டியா கெளம்புரோம்...
ஆகாஷ் : பார்மலிட்டீஸ் முடிச்சிட்ட தான பாய்??? என்றான் விகாஷை நோக்கி...
விகாஷ் : யா ஆல்மோஸ்ட் டன்.... டூமாரோ ஈவ்னிங் நகாஷ்... என்றான் ஸ்டைலாக....அன் தென் வாட் அபௌட் த மீட்டிங்??? ( ம்ம் ஏரகுறைய முடிஞ்சிடுச்சு... நாளைக்கு சாய்ந்திரம் நகாஷ்... அப்ரம் மீட்டிங் என்ன ஆச்சு??? )
நகாஷ் : ஸக்ஸஸ் பாய்.... நமக்கு தேவையான லிலௌன் (Liloun) நாளைக்கு மார்னிங் கெடச்சிடும்...
விகாஷ் : எவ்ளோ தேவப்படும்???
ஆகாஷ் : ம்ம் மினிமம் 100.. மக்ஸிமம் 150...
விகாஷ் : அமௌன்ட்????
நகாஷ் : ஜஸ்ட் 12 crores..... 12 கோடி....
விகாஷ் : ஓக்கே தென் ஹன்ட் ஓவர் இட்.... அப்ரம் நம்ம மாம் அன்ட் டட் க்கு இன்டியா ல சில புள்ள பூச்சிங்க ப்ராப்லம் பன்னுதாம்... லைக் கேஸ்... மெரட்டல்... இரிட்டேட்.... லைக் தட் சோ....
தீரா : ஏ சை... இங்கிலிஷ் தமிழ் னு கலந்து கலந்து கேவலமா பேசுரானுங்க.... முடியல....
நகாஷ் : நாம போன உடனே முடிச்சிடலாம் பாய்....
விகாஷ் : ஐ நோ ... ஐ நோ....
ஆகாஷ் : நம்ம பிஸ்னஸ் மொத்தத்தையும் இன்டியா மாத்துரதுனால ப்ராப்லம் வருமா பாய்???
விகாஷ் : நோ ஆகாஷ்... கண்டிப்பா இல்ல.... அதல்லா நம்ம மூணு பேரும் ரொம்ப ஈசியா பினிஷ் பன்னிடலாம்...
நகாஷ் : பாய்.... லாஸ்ட் ஒன் பீஸ் இன்டியா ல இருந்து வந்தது இன்னும் இருக்கு.... முடிச்சிடலாமா??? இல்ல இன்டியா தூக்கிட்டு போய்டலாமா???
விகாஷ் : நோ நோ... இங்கையே முடிக்கலாம்.... என போனை எடுத்தவன்... சில பல உத்தரவிட்டு அவன் சகோதரன்களுடன்... அப்பெரிய அறையை விட்டு வெளியேறினான்....
மாடி படியில் இறங்கியவர்களின் கால்கள் நடந்துக் கொண்டே தான் இருந்தது... சில நிமிடங்களின் பின் ஒரு அறைக்கதவு தென்பட... முதலில் ஆகாஷ் நுழைந்தான்.... அவ்வறை முழுவதும் குளிரூட்ப்பட்டிருந்தது.... நடுவில் ஒரு ஸ்ட்ரெட்சர்.... அதில் துணியால் மூடியிருந்த ஒரு உடல்... அங்கிருந்த மாஸ்க் மற்றும் க்லௌஸை மூவரும் அனிந்துக் கொண்டு அருகிலே இருந்த ஒரு பலுப்பு நிற திரவத்தை ஆலுக்கு ஒன்று எடுத்துக் கொண்டு முன்னேறினர்..... அத்துணியை விழக்க.... ஏறகுரைய நுப்பது அல்லது இருபத்தி ஐந்து வயதுடைய இளைஞன் கண்களை திறந்துக் கொண்டு அசைவற்று கிடந்தான்.... அவன் கண்மணிகள் மட்டும் அங்கங்கு அலைந்துக் கொண்டிருந்தனர்.... மூவரும் மூன்று திசையில் நிற்க... நான்காவது பக்கம் அந்த இளைஞனின் கால் இருந்தது.....
எடுத்து வந்த திரவத்தை திறக்க.... அதிலிருந்து வெளிவந்த வெள்ளையான ஆவியின் மனம்... அவ்விளைஞனின் மூக்கை துளைத்தது.... அடுத்த எரிச்சலில் கத்த தொடங்கினான் அவன்.... கத்தவில்லை.... அவனால் கத்த முடியவில்லை...அவன் கண்களிள் தெரிந்தது அவனது வலி..... விகாஷ் அத்திரவத்தை அவன் தலை முதல் முகம் வரை ஊற்ற... ஆகாஷ் அவனின் இடது புற உடல் முழுவதும் ஊற்ற.... நகாஷ் அவனின் வலது புற
உடல் முழுவதும் ஊற்றினான்.... வலியில் அவன் கண்கள் வெளியே வர துடித்தது... அம்மூவரும் ஒரு மூடி ஊற்றிய இரண்டே நிமிடங்களிள்.... அவன் உடலில் அனைத்து தோலும் குழைய தொடங்கியது..... அந்த குளிரான அறையிலும் வெப்பத்தில் அவன் ஒவ்வொரு செல்லும் உருக.....ஐந்து நிமிடம் முடியும் சமையம் எழும்பு கூடும்... அவனின் பின் புற உடல் மட்டுமே இருந்தது.... அவன் எழும்பை திரும்பி போட்ட மூவரும்.... அதே திரவத்தை முழுதாய் ஊற்ற.... எல்லா எழும்பும் மெல்ல மெல்ல உருக தொடங்க... அவனின் முதுகு எழும்பு மட்டும் வலிமையாய் இருந்தது...இன்னும் சில குடுவைகளிள் இருந்த திரவத்தை ஊற்ற.... லிட்டர் கணக்கில் ஊற்றிய பின்பே மெல்ல உருக தொடங்கியது.... உருகிய எழும்பை எடுத்து சேகரித்து... அதே அறையில் இருந்து ஒரு தொட்டிக்குள் போட்டனர்... போட்ட வேகத்தில்.... எழும்புகளிள் இருந்து நீலம் மற்றும் பலுப்பு நிறம் கலந்த வட்ட வடிவத்தில் இருந்த சிலவைகள் வெளியேறியது.... அதை மட்டும் சேகரித்த மூவரும்.... அதே அறையில் இருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தனர்.... அங்கு மாபெரும் பெட்டிகள் அடுக்கடுக்காய் இருந்தது... அதில் ஒரு சிறிய ட்ராவை திறக்க... அதிலோ இருவதிற்கும் மேற்பட்ட குடுவைகள் இருந்தது... அதில் இவர்கள் சேகரித்த அந்த நீல மற்றும் பலுப்பு நிற மாதிரையை தனிதனியாக அடக்கினர்....
வேலை முடிந்து வெளியே வர.... அவரவர் அறைக்கு குளிக்க சென்றனர்.... அதற்குள் இம்மூவரை பற்றி பார்த்துவிடுவோம்....
உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம்... இவர்கள் மூவரும்.. அவர்களின் பிள்ளைகளோ என்று.... சந்தேகம் இருந்தால்..மகிழ்ச்சி... இல்லையெனினும் மகிழ்ச்சியே...ஆம் இம்மூவரும் பரமேஷ்வரன் மற்றும் லலித்தாவின் மூன்று மகன்கள்... தாய் தந்தை இன்டியா வில் சதி செய்ய...பிள்ளைகள் பன்க்காங்கில் செய்துக் கொண்டிக்கின்றனர்....
விகாஷ்வரன்... 29 வயது ஆடவன்.... பரமேஷ்வரன் லலித்தா தம்பதியரின் முதல் மகன்....ஆகாஷ்வரன் 28 வயது...
பரமேஷ்வரன் லலித்தா தம்பதியரின் இரண்டாவது மகன்... நகாஷ்வரன் 27 வயது....பரமேஷ்வரன் லலித்தா தம்பதியரின் மூன்றாவது மகன்....
மூவருக்கும் ஒரே குணம்...ஒரே பழக்கவழக்கம்.... பெண்ணை மதிக்க வேண்டும் என்ற சுயபுத்தி இல்லை.... பெரியவர்களுக்கு மரியாதை குடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கிடையாது.... அடாவடித்தனம்.... கல்லத்தனம்... பொய்.... என்பதற்கெல்லாம் மறு உருவங்கள்... வளர்ந்ததெல்லாம் மும்பையில் தனியார் ஹாஸ்டலில்....தாய் தந்தை பாசமெல்லாம் தேவையில்லை.... மாதாமாதம் அவர்கள் அனுப்பும் பணமே வேண்டும்.... மும்பையில் படிப்பை முடித்து....பன்க்காங்கில் தொழிலை தொடங்கானர்... நல்ல தொழிலா??? இல்லவே இல்லை.... கொலையை தொடங்கினர்... கொலை கொள்ளை க்கு பேர் போனவர்களாயினர் ...... பன்க்காங் வரும் இந்திய அப்பாவி பெண்கள்... ஆண்களை கடத்தி... கூறுபோட்டு வெட்டி.. தந்தை இன்டியாவில் செய்யும் வேலையை மகன்கள் இங்கு செய்தனர்.... மறைமுகமாய்.... அரசாங்கத்திற்கு தெரியாமல்... உலகிலே இருக்க கூடாதென தடை செய்யப்பட்ட லிலௌன் என்னும் மலரை உற்பத்தி செய்யும் கம்பெனியிலிருந்து அதை வாங்கி அவர்களின் புது தொழிலில் உயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்....
லிலௌன்
உலகில் எங்கும் இல்லாமல்... புவியின் அடிமட்டத்திலே சூரிய ஒளி .... நீர்.... புவியீர்ப்பு எதுவும் இன்றி வளரும் ஒரு வித அபூர்வ மலர்... இதனை லிக்யூடாய் தயாரிக்க தொடங்கியது ஓர் கம்பெணி... இதை (Acid) அசிடாக பயன்படுத்தலாமென்றே அவர்கள் நினைத்திருக்க.... அதன் உபயோகங்களை கண்டுபிடித்தனர் விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரும்.. அம்மலரை கொண்டு எந்த தோலானாலும் உருகிவிடும்... இதை கொண்டு உடலின் மிக வலிமையான எழும்பான முதுகு எழும்பில் நம் பிறப்பிலே இயற்கையாக உருவான க்ரஷான் என்னும் மாதிரியை தனியாய் பிரித்தெடுக்க முடியும்..... லிலௌன் கொண்டு மட்டுமே முடியும்....
க்ரஷான்
மனித உடலின் முதுகு எழும்பில் மறைந்திருக்கும் அபூர்வமிக்க மாதிரியை... இதனை பற்றி இன்னும் நவீன உலகம் கண்டறியவில்லை.... க்ரஷான் சாதாரணமான மாதிரியை என்று நினைப்பது தவறே.... ஒரு மனித உயிர் இறந்தாலும்... அதன் தோல் மட்டுமே அழுகுமே ஒழிய.... அதன் எழும்புகள் சாதாரணமாகவே இருக்கும்... அதற்கு காரணம்... அனைத்திற்கும் சமமாய் அமைந்த முதுகு எழும்பில் மறைந்திருக்கும் இந்த க்ரஷான் மாதிரியையே.... உடலின் உள் இருந்து நல்லதையே செய்யும் இந்த க்ரஷானின் தீமையை யாவரும் அறியார்... உடலை விட்டு வெளியேறும் க்ரஷானை கொண்டு மனிதனின் உடல் எழும்புகளை தகர்க்க முடியும்... அதாவது முழுதாய் அழிக்க முடியும்... அதை வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்கப்போவதாய் முடிவெடுத்திருக்கின்றனர்...ஏனெனில் க்ரஷான் ஏதேனும் சில மனித உடல்களிள் செழுத்த பட்டால் நாம் ஏழாம் அறிவு படத்தில் கண்டதை போல் பையோ வார் (BIO WAR) வெடிக்கும்.... உலகப்போர் போன்றவைகள் நேர்ந்தால்... தங்கள் நாட்டை காத்துக் கொள்ள...எதிரி நாடு மேல் இந்த க்ரஷானை செழுத்த முடிவெடுத்திருக்கிறது அந்த நாடு.... இந்த க்ரஷானை உருவாக்க அந்நாட்டின் விஞ்ஞானிகள் முயற்சி எடுத்த போது.... மனிதர்களை கொன்று இந்த ஆராய்ச்சி நடக்கக்கூடாது என தடை செய்யப்பட்டது....
இந்த க்ரஷானை விற்க போகும் நாட்டிற்கு கோடிக்கணக்கான க்ரஷான்கள் தேவை.... அதையேசெயல் படுத்திக் கொண்டிருக்கின்றனர் மூவரும்.... நான்கு வருடத்தில்... ஒரு லட்சதிற்கும் மேற்பட்ட க்ரஷான்கள் சேகரிக்கப்பட்டுள்ளது... இதற்கு அவர்கள் உபயோகிக்கும் மனிதர்கள்.... பன்க்காங்கிற்கு வேறு நாடுகளிள் இருந்து வேலை பார்க்க வரும் அப்பாவி பெண்கள் மற்றும் ஆண்களை கடத்தி வருகின்றனர்.....
இப்போது அவர்களின் பெற்றோர்கள் பல வருடங்களாய் அழைப்பதால்... இன்று இன்டியா செல்ல முடிவெடுத்து கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்......
காதல் தொடரும்....
H
iii idhayangale.... edhavathu doubt na kelunga... epdiyo villains a introduce paniiten pa....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro