காதல் - 11
ஐயா என மருத்துவமனைக்குள் ஓடிவந்தவனை நிறித்தி என்னஆச்சு என கேட்டவரை பதட்டத்துடன் " ஐயா ஐயா... நம்ம நம்ம.." என தமாறினார்... இரமனன் " என்னாச்சு தெளிவா சொல்லுங்க " நீங்களே வந்து பாருங்க ஐயா... என கத்திவிட்டு பெரியவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஓடினார்... நம் நாயகர்கள் அனைவரும் கிராமத்தின் மையத்திலிருக்கும் பெரிய ஆலமரத்தடிக்கு சென்றனர்.... நாயகன்கள் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் செல்ல... நாயகிகளோ குழப்ப இரேகைகளுடன் சென்றுக் கொண்டிருந்தனர்... ஆலமரத்தை சுற்றி ஆட்கள் நிற்க.... ஆலமரத்தின் முதல் கிளையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார் ஜகன்நாதன்.... நிருவின் சித்தப்பா... அதிர்ச்சியுடன் அனைவரும் மேலே பார்க்க...நிருவின் முகத்தில் அதிர்ச்சி மட்டுமே இருந்ததே தவிற வலி இல்லை.... சிறிதே நேரத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தார் மானிக்கம்....
மெல்ல அங்கு போலீஸ் வர... டாக்டரான நம் வீரும் ரனீஷுமே அவரை பரிசோதித்திருந்தனர்... மானிக்கம் கண்களிள் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தார்... ஜகன்நாதன் மட்டுமல்லாமல் அவரின் அடியாட்கள் இருவரும் தொங்கிக் கொண்டிருந்தனர்... முகில் க்ரிஷ் சத்தீஷ் இந்திரன் ஒன்றாய் நிற்க.... அவர்களின் அருகில் வந்த அஷ்வன்த் வீர் ரவி ரனீஷ் தாங்கள் பரிசோதித்ததில் எப்படி இறந்தார் என கூறிக் கொண்டிருந்தனர்... அவர்களின் அருகில் சென்ற மானிக்கம் அதை கேட்டதும்....
" ரொம்ப கொடூரமா கொலை பன்னீர்க்காங்க டா... இது தற்கொலை இல்ல... கொலை தான்.... ஒரு பேஷன்ட்டுக்கு எவ்ளோ மயக்க மருந்து நாங்க குடோப்போமோ அத விட இருவது மடங்கு அதிகமா ஒரு ஒரு முறையும் கொடுத்துர்க்காங்க... மயக்கமருந்து நேரா மூளைய பாதிக்கிற மாறி கழுத்துல உள்ள முக்கியமான நரம்புலையே 25 முறைக்கு மேல குத்தீர்க்காங்க.... அந்த மருந்து மயக்கம் மட்டுமல்லாமல் கேன்ஸர் இந்த மாரி எதாவது நோய பறப்புர மருந்து போல... அதான் உடம்பெல்லாம் வெந்துருக்கு.... உடம்புல எங்க பாத்தாலும் கத்தியா இல்ல என்னன்னு தெரியல ஏதோ ஒரு கூர்மையான பொருள வச்சி கீறி... அதே எடத்துல மாறி மாறி சூடு வச்சிர்க்காங்க... கம்பியால கண்கள குத்தி கிளிச்சி செதச்சிர்க்காங்க.... உள்ளுருப்புகள் எல்லாமே செயல் இழந்து போர மாரி அதுக்குன்னே தனி மருந்த செலுத்தீர்க்காங்க...கை விரல்கள தனி தனியா குத்தி கீறி சீவி வெட்டி போற்றுக்காங்க.... எழும்புகள் முரியிர அளவு இரும்பு ராடால அடிச்சி உடம்புல உள்ள எல்லா உப்புகளையும் செதச்சு எறிச்சிர்க்காங்க... இதுல இன்னும் கொடும என்னன்னா எல்லாமே அவரு உயிரோட இருக்குரப்பவே செஞ்சிர்க்காங்க..." என கூற அதனை கேட்டவரின் செவி செயலிழந்து விட கூடாதா என இருந்தது....
இவர் அவர்களின் அருகில் சென்று செருமவும் கவலையுடன் திரும்பி இவரை எப்டி சமாளிப்பதென தெரியாமல் நிற்க...
அவரோ கோவத்தை வெளிகாட்டிய படி...
" நீங்க எட்டு பேரும் என்ன பன்னுவீங்களோ தெரியாது பா... என் தம்பி குற்றவாளி யா இருக்களாம்... ஆனா அவ ஏன் தம்பி... இவ்ளோ கொடூரமா கொண்ணவனுக்கு தண்டனை கெடச்சே ஆஹனும்... அந்த பொண்ண கண்டு புடிச்ச கொஞ்ச நேரத்துலையே ஏன் தம்பி தான் குற்றவாளி ன்னு கண்டு புடிச்ச நீங்க இப்போ கொல பன்னவன கண்டுபுடிப்பீங்க ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... எங்க வேணா எப்போ வேணா யார்ட்ட வேணா ஏன் பேர சொல்லி என்ன வேணுமோ கேளுங்க..... ஆனா அவன கண்டுபுடிக்கனும்... எவ்ளோ வேணா டைம் எடுத்துக் கோங்க... " என படபட வென பேசினார்...
ரித்விக் : கண்டுப்புடிக்கனுமா... சார்.. சாரி சாரி.. மை வருங்கால மாமா... உங்க தொம்பி... வீஐபி இல்ல... குற்றவாளி....
சத்தீஷ் : மொத்தம் தொண்ணூரு பொண்ணுங்களையும் நாற்பது குழந்தைகளையும் கடத்தி வித்திற்கான்...
முகில் : அதுக்கு தூக்கு தண்டனை குடுத்தாளும் பத்தாது...
க்ரிஷ் : எங்க தங்கச்சி தோ அவனால செத்துட்டா.... வெரும் எட்டு வயசு கொழந்த... இவன கொண்ணவன நாங்க கண்டுபுடிக்கனுமா???
பதில் பேச முடியாமல் திண்டாடினார்...
மானிக்கம் : என்னதா இருந்தாளும்.. கொல கொல தான... குற்றவாளிய கொல பன்னாலும் ஒரு சக மனுஷன கொல்றது சட்டபடி தப்பு தான...
ரனீஷ் : வன்ட்டாரு பா... சாரு சட்டத்த பத்தி பேச....
இந்திரன் : அப்டி வரீங்களோ... சரி கேளுங்க... கொலை பன்னது யாரா வேணா இருக்கலாம்... குட்டி பொண்ணுக்கு தாத்தா இருந்தாங்க... அவங்க கொண்ணுர்க்கலாம்... நம்ம ஊர்லயே எவனாவது கொண்ணுர்க்கலாம்... அந்த பொண்ணோடட அண்ணணுங்க கொண்ணுர்க்கலாம்... அண்ணனுங்க சும்மா இல்லாம போலீஸாவோ.. இல்ல டாக்டராவோ.. இல்ல சீபிஐ யாவோ... இல்ல பெரிய பிஸ்னஸ்மேனா கூட இருக்கலாம்...
ரவி : ஏன் அந்த அண்ணனுங்க நாங்களா கூட இருந்துர்க்கலாம்... ஒருவேல தோஸ் டாக்டர்ஸ்.. சீபிஐஸ் போலீஸ் அன்ட் பிஸ்னஸ்மேன் கூட நாங்களா இருந்துர்க்கலாம்...
மானிக்கத்தின் முகம் அதிர்ச்சியின் பிறகு கோவத்தில் மிளிர்ந்தது...
வீர் : கூல் கூல் சர்... ஒரு வேல... அவரால பாதிக்கப்பட்ட எதவாத ஒரு பொண்ணோ இல்ல குழந்தையோ... உயிர் பொழச்சு வந்து கூட கொண்ணுர்க்கலாம்... என சற்று நகர்ந்து நிற்க... தூரதில் ஒரு மரத்தின் மறைவில்... மதுரஞ்சனா.... ஒரு ஆண்குழந்தையை கையில் ஏந்தி நின்றிருந்தாள்... குழந்தையை சுற்றி இருந்த துணி சிறிது இரத்தம் பட்டு காய்ந்நிருந்தது...
அக்குந்தையை கண்டவரின் இதயம் நின்று துடித்தது... வேர்வை வேர்க்க தொடங்கியது...
அஷ்வன்த் : நாங்க தான் தொங்கவிட்டோம் னு புரிஞ்சிடுச்சு போலருக்கே... என கூறியவுடன்... இதுவரை எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருந்த நம் நாயகன்களின் முகம் வெற்றியில் மிளிர்ந்தது....
இவர்கள் பேசுவதை கொஞ்சம் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நம் நாயகிகள் " அப்போ இவனுங்க தான் போட்டானுங்க ளா??? என்னது சீபிஐ யா??? 😱😱" என வாயை பிளந்து அவர்களையே பார்த்திருந்தனர்...
இந்திரன் : என்ன டா மறச்சு வச்ச தம்பி எப்டி வெளிய வந்தான்??? அவன யாரு போட்டதுன்னு தான யோசிக்கிற.??? இப்போ தெரிஞ்சிடுச்சா யாருன்னு??? "
சத்தீஷ் : சின்ன பொண்ணுங்கள கடத்தி விக்கவா செய்றீங்க??? உன் தம்பி மாட்டுனதும் அவனே உன்ன பத்தி ஒத்துப்பான்னு நெனச்சோம் ஆனா சுத்தம் வாயையே திறக்கல.... கடைசியா அவன தொங்க விடும் போது தான் அண்ணன் சொல்லி தான் செஞ்சேன்னு ஒத்துக்குட்டான்... இருந்தாலும் அவ ஒத்துக்குட்டது வேஸ்ட்தான்... எங்களுக்கு தான் நீ அவ லீடர்னு முன்னாடி யே தெரியுமே " என நக்கலாய் கூற அவரோ எப்படி என்று அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்தார்...
முகில் : ஓ எப்டின்னு தான யோசிக்கிற?? தோ இந்த வீடியோ வ பாப்பீங்களாம்... அது முடியிரதுக்குள்ள நீங்க லாக்கப் ல இருப்பீங்க ளாம் " என போனை நீட்டிக் கொண்டே கூறினான்
அந்த வீடியோவை பார்த்தவரின் முகத்தில் ஈ ஆடவில்லை....அவர் பார்த்து முடிக்கும் போது அங்கு போலீஸ் ரௌண்டப் பன்னிவிட முகில் " யு ஆர் அன்டர் அரெஸ்ட் " என கூறி விலங்கை மாட்டினான்...
அவர் செல்லும் போது பார்த்த பார்வையில் இன்னும் நீங்க சந்திக்க வேண்டியது நிறைய இருக்கு என தெள்ளத் தெளிவாய் தெரிய...உடனே
சத்தீஷ் : அத நாங்க மீட் பன்னிக்கிறோம்... நீ போய் கம்பி எண்ணு... என டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தான்...
நாயகிகள் ஆ என வாயை பிளந்துக் கொண்டு நிற்பதை கண்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்றனர்... மதுரஞ்சனா அக்குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்...
ரனீஷ் : ஏ வாய மூடுங்க டி... எதாவது போய்ட போது...
டப்பென மூடிக் கொண்டனர்...
அனு : டேய் எப்டி டா? ???
வீனா : என்ன டா பன்னீங்க???
திவ்யா : சீபிஐ யாரு டா???
ப்ரியா : மானிக்கம் என்ன டா தப்பு பன்னாரு???
தான்யா : அவர ஏன் அரெஸ்ட் பன்ன???
பவி : ஏன் அவரு அந்த வீடியோ வ அப்டி அதிர்ச்சியோட பாத்தாரு???
நிரு : யாரு குழந்தை இது???
ரக்ஷா : சொல்லி தொலைங்களேன் டா... என அடுத்தடுத்து கேள்விக் கனைகளை பறக்க விட்டனர்...
முகில் : ஏன் இவ்ளோ அவசரம்.??? பொருமையா கேட்டா சொல்ல மாட்டோமா???
நிரு : இப்போ சொல்ல போறியா??? இல்லையா??? அந்த இரெண்டு பொருக்கிங்களும் தான கயலோட நிலமைக்கு காரணம்??? என சரியாய் யூகித்தாள்...
பெண்கள் : அடிப்பாவி பெத்த அப்பா வ பொருக்கிங்குர???
நிரு: அவரல்லா அப்பா ன்னு சொல்லாதீங்க டி... மனுஷனா அவரு??? ஏன் அம்மா அவரு கிட்ட எவ்ளோ கஷ்டப்பற்றுக்காங்க தெரியுமா??? கல்யாணம் பேருக்காக பன்னிக்கிட்டாரே தவிற ஏன் அம்மாக்கு அவரு உண்மையா இல்ல... நா பொறந்த கொஞ்ச நாள்ளையே ஏன் அம்மா படோக்கைக்கு வர மாற்றாங்கன்னு சொல்ல வாய் கூசியது நிருவுக்கு கண்களிள் நீர் வலிய தொடர்ந்தாள்... பச்சஉடம்புக்காரீன்னு பாக்காம அடிச்சே கொண்ணுட்டாரு இதெல்தாம் இரெண்டு நாள் முன்ன அவரு குடிச்சிட்டு ஒலரும் போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன்... மதுவிற்கும் கண்கள் குழமாயின....
அவ சொன்னதுல தப்பே இல்ல என்று தோன்றியது அனைவருக்கும்...
நிரு : சரி சரி சொல்லுங்க...
க்ரிஷ் : நா இந்திரன் சத்தீஷ் Business management மட்டும் படிக்கல சீபிஐ யும் படிச்சி செலக்ட் ஆனோம்... 3 இயர்ஸா அங்க தான் வேலை பாக்குறோம்...
பவி : இந்த விஷயம் எங்களுக்கு யாருமே சொல்லலையே டா...
சத்தீஷ் : அதுக்கு நாங்க சொல்லனும் ல??
ங வென அனைவரும் முளிக்க...
இந்திரன் : நாங்க சீபிஐ ன்னு இவனுங்கள தவிற வேற யாருக்குமே தெரியாதுன்னு சொல்றான்...
பெண்கள் : வாட்...உண்மையா தா சொல்றீங்களா???
ஆண்கள் : யா...
சத்தீஷ் : எப்டி போட்டுத் தள்ளுனோம் னு சொல்லட்டுமா???
ப்ரியா : டேய் டேய் அதா அவனுங்க நாழு பேரும் சும்மா கூட செக் பன்னாம நேத்து எப்டி நீங்க கொல பன்னீங்களோ அத அப்டியே மனப்பாடம் பன்னி சொல்லீட்டானுங்களே திரும்பவேறயா.????
சத்தீஷ் : ஆமா அதுவும் உண்மை தான்...அத தான் சொன்னானுங்க... ஆனாலும் கொஞ்ச பீலிங்கா இருக்கு
திவ்யா : எதுக்கு???
சத்தீஷ் : இன்னும் சித்ரவதை பன்னீர்க்கனும்... ஆனா அதுக்கு முன்னாடியே தூக்கு மாட்டீட்டோம்... அவ உண்மைய ஒலருறேன்னூ அலர ஆட்டமா ஆடி தள்ளி விட்டுட்டான்.. அதுல புடிச்சிருந்த கையிற விட்டுட்டேன்... அவன் போய் சேந்துட்டான்...
நிரு : அது போகட்டும்... தப்பு பன்னது இவங்க தான்னு எப்டி கண்டு புடிச்சீங்க???
அஷ்வன்த் : அதுவா... அந்த கூடாரத்துல எங்களுக்கு சட்டிலைட் போன் ஒன்னு கெடச்சிது...
அனு : அத வச்சி யார்ட்ட பேசுனாங்க ன்னு கூட கண்டு புடிக்க முடியாதே... அத வச்சி என்ன பன்னீங்க???
ரனீஷ் : அது உண்ம தான்... ஆனா அதுல அவனுங்களுக்கே தெரியாம அவனுங்க பேசுனது ரெக்கார்ட் ஆயிருந்தது... ஆனா அத எங்களாள கேக்க முடியல.. அதுக்கு காரணம் அந்த சட்டிலைட் போனோட ஓனர் பிங்கர் ப்ரின்ட் தேவப் பட்டுச்சு... நாங்க நேத்து அவன் கைல அந்த மோதிரம் இருக்குறத பாத்தோம்... பட்..
ரவி : எப்போ நாங்க அவர தேடீட்டு அவரு வீட்டுக்கு போனோமோ... அப்போ மானிக்கத்தோட கைல அவரு மோதிரம் இல்லை... இரெண்டு பேர் கைலையும் ஒரே மாரி மோதிரம் இருக்குறத அங்க தொங்கீக்கிட்டு இருந்த போட்டோலையே தெரிஞ்சிக்குட்டோம்... இவரு தான் எங்கையாவது மறச்சு வச்சிர்ப்பாருன்னு அவரோட நடுக்கமே சொல்லுச்சு...அத உருதிப் படுத்துர மாரி... என்னைக்குமே ஓப்பன் பன்னாத அவரோட பழைய வீட்ல அதாவது அவங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற வீடுல உள்ள உள்ள மடையன் லைட் ட போட்டுவுட்டு உக்காந்துர்க்கான்.... அத பாத்ததும் கண்டுக்காத மாதிரி அவர பாத்து சிரிச்சிட்டு நாங்க கெளம்பீட்டோம்.... நைட் அந்த வீட்டுக்கு போய் அங்கையே தான் அவன கொல பன்ன முயற்சி பன்னோம்... அவன் கை இரேகை வச்ச ஒடனே அதில் இல்லன்னு சொன்னதுலாம் இருக்குன்னு காட்டுச்சு...
க்ரிஷ் : அங்க அவங்ளுக்கே தெரியாம அவங்க யார்க்கூடயோ பேசுரத கயல் வீடியோ எடுத்துர்க்கா... கடைசில அவ முனகல் ல தான் அவ எடுத்துர்க்கான்னு தெரிஞ்சிச்சு... அந்த வீடியோல மானிக்கமும் ஜகன்நாதனும் யார்ட்டையோ பொண்ணுங்கள விக்கிரதப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க... இதுவர கிராமத்துல காணாம போன கொழந்தைங்க பொண்ணுங்க எல்லாரையும் கடத்தினது இவனுங்க தான்... பல பொண்ணுங்கள சீரலிச்சி கொண்ணு அவங்க உருப்புகள திருடீர்க்காங்க...
திவ்யா : ச இப்டிலாமா பன்னுவாங்க???இவங்கள்ளாம் வாழ்ந்து என்ன பன்ன போறாங்க???சாகட்டும்....
பெண்கள்: ஆமா ஆமா....
தான்யா : இந்த பாப்பா யாருதுன்னு கடைசி வர சொல்லலையே...
மது : இவன் நம்ம ஊருல ராஜிங்குர அக்காவோடு ஆறுமாச பையன்.... அவங்க இரெண்டு பேரும் ராஜி அக்காவ கொல பன்னி உருப்புகள வித்திட்டாங்க... இவன் தூக்கத்துல இருந்ததால இருட்டுல சரியா பாக்காம செத்துட்டான்னு நெனச்சி... காட்ல வீசீட்டு போய்ட்டாங்க.... அன்னைக்கு மறுநாள் நானும் ரித்வியும் சும்மா மீட் பன்னி வெளிய போனோம்... அப்போ பார்க் பின்னாடி உள்ள பொதருல அழுக சத்தம் கேட்டு பாத்தப்ப... கொஞ்சொ காயத்தோட குட்டி அழுதுக்குட்டு இருந்தான்... அப்ரம் தான் அங்க தீ பிடிச்சிது... குழந்தைய தூக்கிட்டு நாங்க ஹாஸ்பிட்டல் போனதால தான் அப்போ எங்களாள அங்க வர முடியல... என நீண்ட விளக்கத்தை முடிக்க...
பவி : ஆனா இவன் ராஜி அக்கா கொழந்தை ன்னு எப்டி கா சொல்ற???
மது : நான் தான் பவி அவங்களுக்கு பிரசவம் பாத்தேன்... எனன்னு மெடிக்கல் சம்மந்தமா ஒன்னும் தெரியாது... ஆனா அந்த நேரத்துல நானும் ராஜி அக்கா மட்டும் தான் அங்க இருந்தோம்... சோ நேரத்த கடத்தாம நானே பிரசவம் பாத்தேன்...
முகில் : கடைசியா... ராஜி அக்கா வ தான் இவனுங்க கொண்ணுர்க்கானுங்க... அத வச்சு தா அவங்கள கொண்ணதும் இவனுங்க னு தெரிஞ்சிக்கிட்டோம்....
குழந்தையை தாங்களே வைத்துக் கொள்ள முடியாதென்தை உணர்ந்து.... வேதபுரத்தின் அன்பு இல்லம் என்னும் ஆஷ்ரமத்தில் பத்திரமாய் அவனை ஒப்படைத்தனர்.... அங்கிருந்தே மது வீட்டிற்கு சென்றுவிட்டாள்.... நிரு இவர்களுடன் கிளம்பினாள்.... அடுத்த வேலையாக இவர்கள் அனைவரும் மருத்துவனையை சென்றடை.... அங்கோ படபடவென ஓடிவந்த செவிலியர்.... கயலின் மூச்சு திடீரென வந்ததாகவும்.... தற்போது அவள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து விட்டதாக கூறினார்.... உடனடியே நம் மருத்துவ நாயகர்கள் உள் நுழைய.... அவர்களையும் அறியாமல்.... முன்பே அவள் உடலில் இருந்த நோய் தெரியவந்தது.... கயலின் சிறு வயதில் நடந்த ஏதோ ஒரு சிறு விபத்தால் பின் தலையில் ஓர் சிறிய பகுதி... மூளையின் நரம்பில்... சரியாக அதன் நடுவில் இரத்தம் கட்டியாகியிருப்பதை கண்டனர்.... அது மட்டுமில்லாமல் அந்த கட்டியில் சிறிய துளையில் இரத்தம் கசிய தொடங்கியிருந்தது....
பரபரப்பாயினர் நம் நாயகர்கள்.... தீவிர சிகிச்சை தொடகியது.... 10 மணிநேர அதிதீவிர போராட்டத்தின் பின் கயலின் இரத்தஓட்டமும் சீரானது.... ப்லட் க்லாட்டும் ரீமூவ் ஆனது.... அப்சர்வேஷனில் இருந்தாள் கயல்.....
வீனா : ஓ மை காட்.... கயலுக்கு ப்ரைன்ல ப்லட் க்லாட்டாயிருந்துர்க்கு.... கடைசி நேரத்துல அது தர வலியில தா அவ இதயம் திரும்ப துடிக்க தொடங்கியிருக்க.... நல்லவேள நாங்களும் பாத்தோம்...
மது : இப்போ எப்டி இருக்கா டா????
வீனா : இப்போ சொல்ல முடியாது அண்ணி.... பட் அவ்ட் ஆப் டேன்ஜரஸ் ஸ்டேஜ்....
அஷ்வன்த் : உறுதியா சொல்ல முடியாது வீனா மா... எப்போ வேணா அவளுக்கு வலிப்பு வரலாம்.... வராமலும் போகலாம்....
ப்ரியா : சரி இங்க எல்லா டாக்டர்ஸும் இருக்காங்க தான... நாம உடனே வீட்டுக்கு கிளம்பலாம்... இப்போ கயல் ரெஸ்ட் எடுக்கட்டும்... ரொம்ப நேரமா அம்மா அப்பா மாமா பெரியப்பா தாத்தா ன்னு எல்லாரும் மாத்தி மாத்தி போன் போட்டுட்டே இருக்காங்க...
...........
அதே வெளிச்சம் செவுரில் படற... அதில் ஒரு நிழல் வந்து நின்று... யாருடனோ வாதம் செய்துக் கொண்டிருந்தது...
அவர்: என்ன பன்னுவியோ தெரியாது...ஆனா நடந்தே ஆகனும்... மொதல்ல மானிக்கத்துட்ட போய் பேசனும்... அத செய் என உத்தரவுவிட்டு விட்டு போனை அனைத்தார்....
⭐⭐⭐⭐⭐⭐
வீடு வந்து சேர்ந்த பேரன்களை மறைத்துக் கொண்ட சங்கரன் தாத்தா "எப்போடா சீபிஐ க்கு படிச்சீங்க??? " என வந்தவுடனையே கேட்க.... இது தான் நடக்கும் என முன்பே யோசித்து வைத்ததனால்... தடுமாறாமல் " நாங்க எங்க டிகிரிய வாங்கினதும்... இவனுங்க கூட இருக்க முடியாத நிலை வந்துச்சு... அப்போது இவனுங்க எல்லாரும் வேற எதாவது படிக்க சொன்னாங்க... சோ சீபிஐ அட்டென் பன்னோம்... செலக்ட் ஆனதும் நல்லாவே போச்சு... கொஞ்ச நாள் முன்னாடி தா எங்க மூணு பேருக்கும் ஒரு கேஸ் வந்துச்சு... அது வேற எதுவும் இல்லை... நம்ம முகில் கைலேந்து வேற ஒரு போலீஸ்க்கு மாருன அதே கடத்தல் மற்றும் கொலை கேஸ் மேலிடத்துனால எங்கள்ட்ட வந்துச்சு... அத யாருக்கும் தெரியாம மறைமுகமா விசாசிச்சிக்கிட்டு இருந்தோம்.." என கூறி முடித்தனர்...
காவியா " போங்க டா... நான் முகிலையே ஏன் போலீஸ் ஆக விட்டேன்னு கஷ்டப்பட்டுக்குட்டு இருக்கேன்... நீங்க என்னன்னா அவன மாரியே தான் வேலை பாத்துக்குட்டு இருந்துர்க்கீங்க " என கோவம் கொள்ள...
சத்தீஷ் :அப்டிலாம் இல்ல அத்தமா... இதனால எங்களுக்கு ஒன்னும் ஆகாது... அப்டியே ஆனாலும் என் மச்சான்ஸ் அவங்கல சும்மா விற்றுவாங்களா??? என கெத்தாய் கேட்க..
இலக்கியா : அவன் கேட்ட கேள்வியயே நீயும் கேட்டு எங்கள ஆப் பன்னிடு... என காவியாவையும் அழைத்துக் கொண்டு வனித்தாவின் அறைக்குள் எழுந்து சென்றார்...
காலை முதல் தன் உள்ளுணர்வு ஏதோ கூறுவதை உணர்ந்துக் கொண்டே இருந்த ப்ரியா.... சிறிது அசுவாசமாகவே காணப்பட்டாள்.... எதையோ தீர சிந்தித்து கொண்டிருந்த அனு... க்ரிஷ்ஷின் ஒற்றை கண் சிமிட்டலில் குழப்பம் நீங்கி புன்னகைத்தாள்... தன் மனம் எதையோ உச்சரிப்பதை போல் உணர்ந்த திவ்யா.... அது கூறவதை போல் வாயிற்கதவின் புறம் திரும்ப.... அங்கோ கருப்பு புகை சூழ... தன் முழு உருவத்தையும் அதனுள் மறைத்து மெதுவாய் நடந்து வந்தாள் ஒருவள்..... யாரென தெரியாமல் இவள் கூர்ந்து கவனிக்க... மெல்லிய கை வெளுத்த தோலுடன் இடது கை விரலில் நடுவிரல் முழுதையும் கருப்பு துணியால் கட்டி இருந்தாள்..... மெல்ல அப்புகை நகர.... அப்புகையிலிருந்து கருப்பு நிற உடையில் ஒரு குச்சியை பிடித்தவாறே நடந்து வந்தாள் அவள்.....
அவளை கண்ட திவ்யா முதலில் அவளின் தோற்றத்தில் குழப்பமடைய.... அவளின் வதனத்தை மறைத்திருந்த அந்த நீண்ட கூந்தல் விழக..... நிமிர்தேதவான நடையில் நடந்து வந்தாள்.... அவளை கண்ட திவ்யாவின் நினைவுகள் எங்கெங்கோ சென்று..... இறுதியில் அதிர்ச்சியுடன் எழுந்தாள்.....
எழுந்வள் மகிழ்ச்சியுடுன்.....
திவ்யா : ஹே ஒவீ ..... வா டி... எப்டி இருக்க???
ஒவீயா என அனைவரும் அங்கு பார்க்க... குழப்பயாய் வாயிலில் கருப்பு நிற சுடியில் அழகோவியமாய் நின்றாள் ஒவீ ஆகிய நம் ஒவீனா... வீனாவின் மறு உருவம் ஒவீ தான் என அறிந்து அனைவரும் அவளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க... எங்கோ சென்றிருந்த முகில் அப்போதே ஒவீ யை கண்டான்.... அவளை கண்டதுமே அவனுள் வெருமையான உணர்வொன்று பறவியது..... எதர்ச்சையாய் அவனை கண்ட ஒவீயின் கண்களும் அவன் மேல் சினத்தை வாரி அள்ளி தூவியது....
வீனா ரக்ஷா தான்யா ரவி ரனீஷ் வீர் ஒவீயையே குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்...
உள்ளே வந்தவள் அந்த கூட்டத்துடன் ஐக்கியமாகினாள்... சிறிது நேரம் களித்து அனைவரும் கலைந்து செல்ல... ஒவீயை இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள் வீனா... அவளை தொடர்ந்து மற்ற இருவரும் நுழைந்தனர்...
வீனா : ஒவீ என்ன டி ஆச்சு?? எப்டி எல்லார் கண்ணுக்கும் தெரியுர?? நீயே தெரியனும் னு நெனச்சியா?? இத்தன நாளா நீ வேல விஷயமா போய்ர்க்கன்னு சொல்லீர்க்கோம் டி...
ஒவீ : இல்ல டி... நான் வாசல் கிட்ட வந்ததும் திவ்யா என்ன எப்டி பாத்தான்னு தெரியல... அவளுக்கு நான் தெரியிரேன்... மத்தவங்களுக்கு அங்க நா தெரியாம போய் வேற எதாவது ப்ராப்லம் ஆய்ட போதுன்னு தான் நான் எல்லாருக்கும் தெரியுர மாரி மாத்திக்கிட்டேன்...
ரவி : சரி பராவல்ல டி... நீ இன்னும் ஆத்மா வா சுத்திக்கிட்டு இருக்குறதப்பத்தி எதாவது தெரிஞ்சிக்கிட்டியா???
ஒவீ : ம்ம இல்ல ரவி.... ஒன்னுமே தெரியல ஆனா இங்க வந்தப்ப நான் ஏதோ உணர்ந்தேன்... எனக்கென்மோ நா இங்க வரனும்ங்குரதுக்காக தான் நா இன்னும் ஆத்மாவாவே இருக்கேனோ என்னவோ....
வீர் : நீ மட்டும் இல்ல ஓவீ..... நாம எல்லாரும் தான்..... நாம இங்கே ஏதோ ஒரு காரணத்துக்காக தான் வந்துர்க்கோம்... நமக்கான விதி மறுவாழ்ப்பேட்டைல முடியல...
ரனீஷ் : அங்க தான் ஆரம்ச்சிருக்கு...
தான்யா : அப்ரம் இங்க ஏதோ ஒரு தீய சக்தி இருக்குன்னு நெனக்கிறேன்...
ரக்ஷா : ஆமா நேத்து நைட் எங்களாள உணர முடிஞ்சிது...
ஒவீ : திரும்பவும் ஒரு கலத்துல இறங்க போறோம்... நாம ஜாக்ரதையா இருக்கனும்... எது வித்யாசமா இருந்தாலும் நல்லா கண்கானிங்க...
ரவி : எனக்கென்னமோ இங்க வேர ஏதோ மர்மம் இருக்கு...அத நம்மலால மட்டும் கண்டுபுடிக்க முடியாது...
ஒவீ: என்னால ஒரு மனுஷி போலவே நடமாட முடியும்... அதனால யாருக்கும் தெரியவராது... நான் ஆத்மா ன்னு...
ரக்ஷா : அது வர சந்தோஷம் தான்...
பிறகு அனைவரும் வெளியே வர... மதிய உணவை உண்டு முடித்தனர்.... அதே நேரம் மானிக்கம் சிறையில் இருப்பதால்.... திருமணத்தை நாமே நடத்தலாம் எனும் முடிவில் மது மற்றும் நிருவின் சித்தி... அதாவது ஜகன்நாதனின் மனைவி ராணியிடம் பேச பெரியவர்கள் அனைவரையும் நிருவையும் ரித்விக்கையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர்.....
நம் காதல் ஜோடிகள் இரண்டும் (அஷ்வன்த் பவி, க்ரிஷ் அனு ) பால்கெனியில் நின்று காதல் வசணங்கள் பரிமாரியவாரு இருக்க... முகிலும் சத்தீஷும் அவர்களை வசை பாடியபடி இருந்தனர்...
முகில் : ஏன்டா சிங்கில்ஸ் லாம் கூட வச்சிக்கிட்டு இப்டி கவித ஓட்டுரீங்களே டா....
சத்தீஷ் : சிங்கில்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது டா...
முகில் : டேய் நீ லாம் சிங்கில் ன்னு சொல்ல கூடாது டா... உன் மேல எனக்கு சந்தேகம் வந்துடுச்சு.... நீ அந்த கொரங்க பாக்குர விதமே மாரிடுச்சு.... ப்ரியா உம்முன்னு இருந்தா சாருக்கு அப்டியே நெஞ்சு வலி வர்ரமாரி எக்ஸ்ப்ரஸன் குடுக்குரீங்க..... நானும் பாத்துக்குட்டு தான் டா இருக்கேன்.... என அவன் பார்த்த டிடெக்டிவ் வேலையை பற்றி கூற...
சத்தீஷ் : டேய் டேய் கம்பெனி இரகசியத்த லாம் ஓப்பனா சொல்லாத டா என அவனின் வாயை மூடினான்....
முகில் : அப்போ க்லோஸா சொல்லலாமா??? சண்ட போடுறேன் சண்ட போடுறேன் னு சொல்லி லவ்வா டா பன்னுர???
சத்தீஷ் : நீ என்ன இத புதுசாவா பாக்குர??? பொறந்தது லேந்து அந்த எலி ஏன்கூட சண்ட போட்டுக்குட்டு தான இருக்கா...
முகில் : புதுசு தான் டா... வருஷம் போய்... மாரி இருப்பீங்கன்னு பாத்தா... இரெண்டு கொரங்கும் ஒரே மாரி தான் இருக்கு....
எங்கிருந்தோ வந்த ப்ரியா சத்தீஷின் தலையில் நங்கென கொட்டி
ப்ரியா : நான் எலியா??? நீ தான் டா அது...
முகில் : எங்கேந்து டி மொளச்சு வர???
ப்ரியா : ம்ம்ம் ரூம் வாசல்லேந்து மொளச்சு தான் வரேன்...
சத்தீஷ் : இங்க உனக்கென்ன வேலை??
ப்ரியா : அடப்போடா இவளுங்க இரெண்டு பேரும் அவனுங்க கூட போய்ட்டாளுங்க... அந்த திவ்யா பக்கி என்னன்னா வெரிச்சு வெரிச்சு செவுத்தையே சைட் அடிச்சிக்குட்டு இருக்கா....
இதுவரை அமைதியாக இவர்களின் உறையாடலை கேட்டுக் கொண்டிருந்த இந்திரன் திவ்யா தனியே இருப்பதைக் கேட்டு தற்போது தனிமை அவசியமென அவளை தேடி சென்றான்....
சத்தீஷ் : நீயும் அவக்கூடவே சைட் அடிக்க வேண்டியது தான ஏன் டி இங்க வந்த???
ப்ரியா : ம்ம்ம் உன்ன வெருப்பேத்த லாம்னு தான்...
.
.
.
.
அனு : எப்டி டா ஏன் மேல இருக்குரது காதல்ன்னு பாத்த ஒடனே கண்டு புடிச்ச??? உண்மையாவே காதல் தானா???
க்ரிஷ் : ஏன் ரது இப்டிலாம் கேக்குர??? சரி நீ எப்டி எந்த நம்பிக்கைல என்ன பாத்து நான் தான் உன் யுவான்னு சொன்ன??? என இவன் எதிர் கேள்வி கேட்க...
அனு : எனக்கு தெரியாது டா.... நா உன்ன பஸ் ஸ்டேன்ட் ல பாத்தப்போவே.... ஒரு டிப்ரென்ட் பீல்.... விவரிக்க வார்த்தையே இல்ல..... நீ கோபப்படும் போது.... உன் கோவத்த பாத்து விழுந்துட்டேன்..... பாத்த உடனே லவ்வான்னு நா யோசனைல இருந்தப்ப.... நா உன்ன நெனச்சி தவிக்கிறத என்னால உணர முடிஞ்சிது.... ன்ட் நயிட் உன்ன பாத்தப்போ.... ஏன்னே தெரியாம என் மனசு குத்தாட்டம்போட்டுச்சு..... ஆனா உன்மேல அது விழப்போறத பாத்து என் உயிரே போய்டுச்சு....
க்ரிஷ் : அதே தான் டி... பட் எனக்கு பஸ் ல உன்ன பாத்தப்பவே நா ப்லட் ஆய்ட்டேன்..... நீ யாருன்னு தெரியலன்னாலும் உன் கண்ண என்னால மறக்க முடியில..... இங்க வந்ததும் நீ தா அவ ன்னு தெரிஞ்ச அடுத்த செக்கெண்டு... நா இந்த உலகத்துலையே இல்ல டி..... ஐ லவ் யூ சோ மச் டி.... என் லவ்வ நா உன்ன இங்க பாத்தப்பவே உணர்ந்துட்டேன்..... நீ தான் எனக்கு.... நீ மட்டும் தான் எனக்கு....
அனு : அதுக்கு ஏன் டா லெக்ச்சரர் மாரி இவ்ளோ பெருசா லெசன் நடத்துர... அதல்லா அப்டித்தான் னு இரெண்டு வார்த்தைல முடிக்கிறத விட்டுட்டு...
க்ரிஷ் : உனக்கு போய் வெலக்கம் சொன்னேன் பாரு... என்ன சொல்லனும்... போடி அந்த பக்கம்...
அனு : அங்க லாம் போ முடியாது... நீ போ டா...
.
.
.
.
அஷ்வன்த் : நித்ரா....
பவி : ம்ம்
அஷ்வன்த் : நித்ரா...
பவி : ம்ம்ம்
அஷ்வன்த் : நித்து மா... என இருபதாவது முறையாக தன் மடியில் தலை வைத்து படுத்திருந்த தன்னவளை அழைத்துக் கொண்டிருந்தான்...
பவி : என்ன டா...
அஷ்வன்த் : எவ்ளோ நேரம் டி இப்டியே படுத்திருப்ப?? ஒன்னும் பேசவும் மாற்ற??? என்ன விடவும் மாற்ற??? நான் தூங்கவாவது போறேன் எழுழ்துடு டி...
பவி : முடியாது.... நான் உன் மடியில படுத்து எவ்ளோ வர்ஷமாச்சு... நீ சும்மா இரு டா... கொஞ்ச நேரம்... என முகத்தை சுருக்கிக் கொண்டாள்... அவள் கூறியதைக் கேட்டு மென்மையாய் புன்னகைத்து அவளின் கேசத்தை கோதினான் அஷ்வன்த்.... மெல்ல மெல்ல.. அவனின் செயலில் நித்ராதேவியின் பிடியில் ஆழ்ந்தாள் நம் அஷ்வன்த்தின் நித்ரா என்னும் பவிநித்ரா....
பாலை வனம்.... இரத்த வனமாய் இருந்தது... மரம் செடி கொடி என சுற்றி எதுவும் இல்லை.... சுற்றி எங்கிலும் உயிர் இழந்திருந்த வீரர்கள்.... குருதி படிந்த வாள்... உடைந்த அம்பு......
காற்று வீசும் சத்தத்தை தவிரத்து அவ்விடத்தில் எவ்விதமான சத்தமும் இல்லாமல் நிசப்த்தம் கூடி இருந்தது.... அமைதியும் ஒரு வகை ஆபத்து தானே.... ஒரு மெல்லிய மூச்சு காற்று... உசாலடிய உயிரை பிடித்துக் கொண்டு மூச்சு வெளிவந்துக் கொண்டிருந்தது.... அப்போது கோரமாய் ஒருவனின் சிரிப்பொலி அந்நிசப்த்தத்தை கிளித் தெரிந்தது.... அப்போது ஒரு குரல்.... அம்மூச்சு காற்றை வெளியிட்டவரின் குறல் மிகவும் மெல்லியதாய் கேட்டது.... நிமிர்ந்து பார்க்க...கோரமான தோற்றத்தில் ஒரு உருவம் அந்தரத்தில் பறந்தவாறு சிரித்துக் கொண்டிருந்தது.....அப்போது மெல்லிய குரல் கர்ஜனையாய் வெளிவந்தது... அது ஒரு பெண்.... அவளின் முகம் தெரியவில்லை... அவளின் ஒவ்வொரு சொல்லும் காதை கிளித்தாலும் அதை புரிந்துக் கொள்ள இயலாத ஓர் நிலை.... அப்பெண்ணின் கர்ஜனை முடிய அப்பாலை வனத்தில் உயிரில்லா ஐடமாய் கிடந்த இருவரின் கை மேல் நோக்கி உயர்ந்தது.... அதில் ஒரு கை நடப்பதை காண்பவரின் கை ஆகும்... அப்பெண் உயிர் இழந்து மடிந்து விழ.... திடிக்கிட்டு கணவில் இருந்து எழுந்தாள் திவ்யா....
எங்கோ கண்களை பிளந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த திவ்யா அவளை அறியாமல் சாய்ந்துக் கொண்டு உறங்கி இருந்தாள்.... அவளை காண வந்த இந்திரன் அவள் அமர்ந்த நிலையிலே உறங்குவதை கண்டு முதலில் சிரித்தவன் அமர்ந்தவாரே கீழே விழப் போனவளை ஒரே தாவில் அவனின் தோலில் தாங்கினான்.... அவனின் கையை தலையனைப் போல் கட்டிக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள்... அவனும் சிரித்துக்கொண்டே அவள் அருகிலே அமர்ந்துக் கொண்டான்... அமைதியாய் சென்ற நிலையில் அவள் திடீரென எழுந்து வேகவேகமாக மூச்சு வாங்கி... படபடப்பாய் தெரிந்தாள்....
திவ்யாவோ இந்திரனை கண்டு அவனை கடட்டிக் கொண்டு ஏன் என்றே தெரியாமல் ஓஓ என அழத் தொடங்கினாள் ...... ஏன் அழுகிறாள் என்று குழம்பியவன்... அவளின் கண்ணீர் அவனின் மனதில் வலி உருவாவதை அறிந்து ... அவளின் தலையை கோத தொடங்கி ஆறுதலாய் அவளிள் முதுகில் தட்டிக் கொடுத்தான்...அவனின் அருகாமை ஆறுதலாய் இருந்தாளும் ஏனோ அவனின் மார்பில் புதைந்துக் கொண்டு மீண்டும் அழுகையை தொடர்ந்தாள்.... அதை தாங்கிக் கொள்ள முடியாதவனாய்....
இந்திரன் : ஷிவானி.... அழுகைய நிருத்து... எனக்கு வலிக்கிது டி.... என தன்னையும் மீறி மனதில் என்ன கூற நினைத்தானோ அப்படியோ கூறினான்...
இது வரை பப்லிக் எக்ஸாமில் ஃபெயில் ஆனதைப் போல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவள்... அவனின் ஷிவானி என்னும் அழைப்பிலும் அவனுக்கு வலிப்பதாய் கூறியதைக் கேட்டு நீர் வீழ்ச்சியை உடனே நிருத்தினாள்....
திவ்யா : சாரி...
இந்திரன் : ம்ம்ம்
இருவரும் அதே நிலையில் இருக்க... அவர்களை கலைத்தது ஒரு குரல்...
ப்ரியா : இன்னும் எவ்ளோ நேரம் இப்டியே இருக்குறதா உத்தேசம்???
அப்போதே இருவரும் சுற்றி கவனிக்க... அவளின் அழுகையில் நாயகர்கள் அனைவருமே தாடையை கையில் தாங்கியவாரு அவர்களையே குரு குரு வென பார்த்துக் கொண்டிருந்தனர்....
அடுத்த நொடியே அந்தி வணமாய் சிவந்த தன் முகத்தை மறைக்க... உடனே ரூமை விட்டு ஓடினாள் திவ்யா.... அவளை தொடர்ந்து பெண்களும் ஓட... தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... என்பதைப் போல் எங்கோ பராக்கு பாத்துக்கொண்டிருந்தான்... இந்திரன் என்னும் இந்திரஜித்...
திவ்யா அறைக்குள் நுழைந்து கதவை சாத்தும் முன்பே உட்புகுந்திருந்த நம் தோழிகள்... அவளை பிடித்து அமரவைத்து...
பவி : ஏன் டி சண்டாலி... நா உனக்கு என்ன டி கொர வச்சேன்??? நானே பல வருஷம் களிச்சு உங்க அண்ணன் மடியில படுத்துருந்தா... ஓஓ ன்னு ஒப்பாரி வச்சு கெடுத்துவுட்டியே...
அனு : அழுதத கூட விற்றலாம்... நாங்க வந்து கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஆய்டுச்சு... இரண்டு பேரும் கொஞ்சம் கூட கண்டுக்காம அப்டியே உக்காந்துர்க்கீங்க???
திவ்யா : ஒரு மணி நேரமா வா???
ப்ரியா : பின்ன... இவ்ளோ வர்ஷம் களிச்சு என் சத்தீஷ் கூட இன்னைக்கு தான் வம்பிலுத்து விளையாடிக்கிட்டு இருந்தேன்... அது பொருக்கலையா????
திவ்யா : பொருக்கல டி... நா மட்டும் சிங்கிலா சுத்தும் போது நீங்க மட்டும் எப்டி டி ஆலுக்கு ஒருத்தன புடிச்சிக்கிட்டு சுத்தலாம்???
பவி: உன்ன யாரு அப்டி தனியா சுத்த சொன்னது??? வேணா என் அண்ணண கூட்டிக்கிட்டு சுத்து... யாரு வேணாண்ணது???
வீனா : இன்னைக்கு நடந்தத பாத்தா அது தான் கூடிய சீக்கிரத்துல நடக்கப்போதுன்னு நெனக்கிறேன்...
ரக்ஷா : நானும் அதே தான் நினைக்கிறேன்...
திவ்யா : நீங்க என்ன டி சொல்றது???? நானே சொல்றேன்.... அவனே ஷிவானின்னு கூப்ட்டு மறச்சு வச்ச காதல சொல்லாம சொல்லீட்டான்.... இனி அதான் நடக்கும்....
அனு : இந்திரா பாவம்...
பவி : ஹாஹா அது நடந்தா ஐம் சோ ஹப்பி.... 😝😝
தான்யா : ஒரு நிமிம் அடியேய் ப்ரியா.... திடீர்னு என் சத்தீஷ் னு தான சொன்ன???? என அவள் உலரியதை நினைவு படத்த....
ப்ரியாவோ பேந்த தேந்த முளித்தவள்.... நானா நா இல்லையே... என மலுப்புவிட்டு ஓடிவிட்டாள்.... அவள் தோழிகளோ அதை நன்கு குறித்துக் கொண்டனர்....
இவள்கள் அவளை கலாய்த்தவாரு நேரத்தை ஓட்ட...
ப்ரியாவிற்காய் காத்திருந்த மற்ற நாயகிகள் ஒவீயையும் இழுத்துக் கொண்டு அக்கட்டிடத்திற்கே மீண்டும் சென்றனர்... காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி காற்றில் மறைந்து போனாள் ஒவீ... திடீரென மறைந்தவளை யாரும் காணக் கூடாதென வீனா" நான் வீட்டிற்கு செல்கிறேன் "என ஒவீ போல் கூறி மற்றவர்கள் திரும்புவதற்குள் அவள் சென்றுவிட்டாள் என பொய்யுரைத்தாள்.... கண்டுபுடிக்கக் கூடாது கண்டுபுடிக்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டு நின்ற ரக்ஷாவை எதர்ச்சையாய் பார்த்த அனு " எத டி கண்டுபுடிக்கக் கூடாது " என்க தூக்கி வாரி போட்டது ரக்ஷாக்கு... உடனே சமாளிக்கும் விதமாய் ரக்ஷா "இல்ல டி நம்ம ஆலுங்க பாட்டுக்கு மூணு பேர போட்டுத் தள்ளீட்டானுங்க.. அத யாரும் கண்டுபுடிச்சிர கூடாதுன்னு தான் வேண்டிக்கிட்டு இருந்தேன்.."
"ஓ அப்டியா?? வேண்டுனா மனசுக்குள்ள வேண்டு டி ஏன் எனக்கு கேகக்குர மாரி வேண்டுர?? என கூறிச் சென்றாள்... நாம மனசுக்குள்ள தான சொன்னோம் என யோசித்தவாறே வந்தாள் ரக்ஷா....
அக்கட்டிடத்திற்குள் முன் பிருந்ததை விட மெல்லிய வெளிச்சம் பரவி இருந்தது... திடீரென மறைந்த ஒவீ மீண்டும் தோன்றினாள்... அவளை முதலில் கண்ட நிரு " நீ போல யா டி??? " என கேட்க... அவளும் இல்லையென தலையாட்டி விட்டு நகர்ந்தாள்... ப்ரியா நேற்று கண்ட அதே அரசனின் ஓவியத்தை இன்று கண்ட திவ்யா அவ்வரசன் அருகிலே முகத்தை துணியால் மறைத்து தன் மை விழிகள் மட்டும் தெரியுமாறு வலது கையில் வாள் ஏந்தி நின்றாள் ஒருவள்... அவளின் உடல் திவ்யாவின் கணவில் சவால் விட்ட அப்பெண்ணை ஒத்திருந்தது.... என்னவென தெரியா உணர்வில் அதையே பார்த்திருந்தவளின் தோலை பிடித்து உலுக்கினாள் அனு..... சுயநினைவு பெற்றவள் சுற்றி முற்றி காண அவளையும் அறியாமல் அவளின் கண்கள் ஒன்றில் நிலைத்தது... அதில் ஆழி கடல் மேல் எழும்பி சுனாமி யாய் மாற உயரத்தில் ஒரு வாள் அந்தரத்தில் பறந்துக் கொண்டிருந்தது....
இந்த மாரிலாம் எப்டி தான் கற்பனை பன்னி வரைராங்களோ??? என்று புலம்பிக் கொண்டே முன் நடந்தாள் ப்ரியா...
ஆனால் திவ்யாவுக்கோ இது கற்பனை இல்லை என மனம் மலையளவு நம்பியது... அவ்வோவியத்தை விடுத்து மற்றொன்றுக்கு திரும்பினாள்.... அதைத்தான் பவியும் ரக்ஷாவும் வந்ததிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தனர்... அனுவோ அவ்வோவியத்தின் அருகில் இருந்த ஒரு ஓவியத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்... ஒவீ வீனா ரக்ஷா அக்கதவின் படங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்...
பவியும் ரக்ஷாவும் பார்த்திருந்த ஓவியத்தில் ஒரு இளவரசி போன்ற தோற்றத்தில் இருந்த பெண் தன்னை வாளால் முதுகில் குத்திய ஒரு பெண்ணை ஏளனமாய் பார்த்து சிரிப்பதைப் போல் இருந்தது.... ஆனால் காற்றில் அவள் கூந்தல் பறந்து அவளின் முகத்தை மறைப்பதைப் போல் கனக்கச்சிதமாய் வரயபட்டிருந்தது....
அனு : இதல்லா பலாயிரம் வருஷத்துக்கு முன்ன வரஞ்சிர்க்காங்க.... இந்த ஓவியங்களுக்கு கிட்ட தட்ட நாழாயிரம் இல்ல ஐயாயிரம் வயதிருக்கும் னு நெனக்கிறேன்.... ஏறக்குறைய ஏழாயிரம் வருஷங்கள் முன்னாடி யே இந்த ஆலயம் கட்டப்பற்றுக்கு...
ப்ரியா : அனு சொல்றது உண்மை தான்...இந்த ஆலயத்தோட ஒவ்வொரு கல்லுமே பல ஆயிரம் வர்ஷங்கள் முன்னாடி உள்ளது தான் என தன் கையில் இருந்த டிடக்டரை பார்த்துக் கொண்டே கூறினாள்... அதில் பூஜியத்திலிருந்து ஏறிய முற்கள் 4000 என்னும் கடைசி எண்ணையும் தாண்ட துடித்துக் கொண்டிருந்தது...
அனைவரின் இதழ்களும் இம்பாஸிபில் என முனுமுனுத்தது... ஒவி வாயே திறக்காமல் அமைதியாகவே இருந்தாள்... அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க... ப்ரியாவுக்கு கால் வந்தது.....இலக்கியா தான் வீட்டிற்கு வரக்கூறி இருந்தார்...
வீட்டிற்கு நடையை கட்டும் முன்னே நான் கோவிலுக்கு சென்று வருகிறேன் என பாதியிலே எங்கோ நழுவினாள் ஒவீ... அப்போது ஒரு மெல்லிய குரல்...
குழப்பம் தீர வழியா
அதை உன்னை விட்டு ஒழிய
உன்னவனிடம் இருக்கிறது வழி
புரிந்த நடை... கண் முன் இருக்கும் பாதையில் தடை
சூழ்ச்சியில் சிக்காதே.... மறந்தும் தனியே செல்லாதே
உம்மவர்களை காக்கும் ஆயுதம் தேடி அழய்வது வீண்....
ஆயுதமே ஆயுதம் தேடுவது வீண் என மறவாதே
பல யுகங்கள் கடந்தும் பகை முடியவில்லை...
முடிவென நினைத்தாள் நினைவில் கொள்..
முடிவல்ல... இதுவே ஆரம்பம்
என பிதற்றிக் கொண்டிருந்தார் ஒரு கிழவி...
இவர் கூறுவதைக் கேட்டு பெண்கள் அவர் அருகில் செல்லும் போது தான் மீண்டும் இலக்கியா அழைக்கவும் அக்கிழவியை விட்டு விட்டு வீட்டிற்கு சென்றனர்... முன்பே அவரிடம் பேசியிருந்திருக்கலாம்.....
அவர்கள் சென்றதும்.... மீண்டும் அங்கு வந்த ஒவீ.... அந்த கிழவியின் அருகில் சென்று... பாட்டி என அழைத்தாள்......
அவளை இமை திறந்து கண்ட அக்கிழவி....
கிழவி : வந்துட்டியா மா???நா சொன்னதல்லாம் அந்த கட்டிடத்துக்குள்ள பாத்தியா...??? இப்போ நம்புரியா???
ஒவீ : ஆனா என்னால முழுசா நம்பமுடியல.... நா ஏன் அங்க கால வச்சதும் இங்க வந்தேன்....
கிழவி : விதி..... உனக்கு உண்மை தெரிஞ்சா.... அவங்களுக்கு உதவுவன்னு....
ஒவீ : யாருக்கு...
கிழவி : விரைவில் அறிந்துக் கொள்ளவாய்..... என அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.....
ஊட்டி
கென் ஆராய்ச்சி மையம்... அன்று அப்பெண்மணி மமுன் தலை குனிந்த நின்றே அதே டாக்டர் கென் இன்று
இருட்டான ஒரு அறையில் கண்கள் மின்ன ஒரு ரிபோர்ட்டையே
பார்த்துக் கொண்டிருந்தார்........ " எஸ் கெடச்சிடுச்சு.... என்னால நம்பவே முடியல...இப்டி பட்டது பூமி ல இருக்கா... இதல்லா இருக்குன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க...இத வித்தா நெரய பணம் கிடைக்குமே....மொதல்ல அவருகிட்ட சொல்லி பணத்த இரெண்டா பிரிக்கனும்.... என போனை எடுத்தவருக்கு திடீரென "ஆனா ஏன் இத்தன வர்ஷமா இது இருக்குன்னு என்னால கண்டு புடிக்க முடியல??? அது எப்டி அந்த மரத்துல?? " சந்தேகம் முளைக்க...
அவரின் நெற்றி பொட்டில் துப்பாக்கி முனை பதிய " அத தெரிஞ்சிக்கனும் னு உனக்கு எந்த அவசியமும் இல்ல " என்ற அதட்டலுடன் க்லிக் செய்தது ஒரு உருவம்.... அதே நேரம் குண்டு வெளிபடாமல் இருக்க..... கண்கள் கீழே குதித்துவிடும் நிலையில் இருந்த டாக்டர் கென் முன் இருந்த உருவம் எதுவும் செய்யாமல் இருப்பதை கண்டு...... குழப்பமடைய.... முன்னிருந்த உருவம்..... துப்பாக்கியை எடுத்ததும்....... " சாரி டாக்டர்..... சும்மா பயமுருத்துனேன் " என கூற....... அதற்கு முன்னே அவரின் பின் மண்டையில் துப்பாக்கியை வைத்தது இன்னோறு உருவம்.... மூச்சை விடப் போன கென் அதை இழுத்துப் பிடித்துக் கொள்ள...... முன் இருந்த உருவம்..... பின் நின்ற உருவத்தை கண்டு...... " ஏன் டி பயமுருத்தாம இரேன் " என கூற...... பின் இருந்த உருவம்...... " நீ வேணா பயமுருத்த வந்துர்க்கலாம் டி..... ஆனா நா கொல்ல தான் வந்தேன் " என ட்ரிகரை அழுத்த போக...... முன் இருந்த உருவம் திடீரென ஆண் குரலில்..... " வேணா மச்சான் பாவம் டா " என பரிதாபமாய் கூற..... பின் இருந்த உருவம் " நீ சும்மா இரு மச்சான் " என மாரி மாரி பேசி நடுவில் கென்னின் உயிரை வைத்து விளையாடிக் கொண்டிருக்க...... பின் இருந்த உருவம் திடரென நர்ந்துக் கொள்ள..... எதிர்பாராதவிதமாய் முன் இருந்த உருவம் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி முனையை வைத்து ட்ரிகரை அழத்த முன் இருந்தகுண்டு கென்னின் பின் மண்டையை துளைத்துக் கொண்டு வந்து விழ.... இரத்தம் தெறிக்க...பின் புறமாய் கீழே சரிந்து விழுந்தார் டாக்டர் கென்...
கட்டிடத்தில் மறைந்திருக்கும் இரகசியம் என்ன??? இவ்வுருவங்கள் யார்??? மோகினியின் அடுத்த கட்டம் திட்டம் என்ன??? நாயகிகளின் குழப்பங்கள் தீருமா.???
அடுத்த அத்யாயத்தில் காண்போம்....
காதல் தொடரும்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro