Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

episode 8

நாட்கள் இப்படியே மெல்ல அடியெடுத்து வைத்தது. ரோஜாவின் மனதில் இன்னும் ஆதியின் காதல் காலுன்றவில்லை. வழக்கம் போல் அலுவலகம் சென்று வருவதும்,எதார்த்தமாக ஆதியிடம் பழகுவதுமாக தான் இருந்தாள்.

ஆனால் இவள் வீட்டிலோ ஆகாஷை திருமணம் செய்யும்படி வற்புறுத்த ஆரம்பித்தனர். ஆகாஷ் இன்னொரு பெண்ணை விரும்புவது பெரியவர்களுக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு தான் ரோஜா ஆகாஷை ஏற்க மறுக்கிறாள் என்று புரிந்தது.

"ரோஜா..."

"என்னம்மா"

"ஆகாஷ் உனக்கு பொருத்தமான பையனா தான் டி இருக்கான் பேசாமல் உன் அத்தை சொல்றபடி அவனையே கட்டிக்க" என்று லட்சுமி ஆரம்பித்ததும்.

"இங்கே பாரு மா நான் சம்மதம் சொல்றது இருக்கட்டும் முதல்ல ஆகாஷ்க்கு இதுல சம்மதமானு யாராச்சும் கேட்டிங்களா" என்க.

"ம்ம்ம் சம்மதம் இல்லாமையா உன் அத்தை இங்கே வந்து பெண் கேட்டாங்க"

"அத்தைக்கு விருப்பம் இருக்கு அப்டிங்கிறது உண்மை தான், ஆனால் இதுல ஆகாஷ்க்கு விருப்பம் இல்லை"என்றவுடன் புரியாமல் பார்த்த லட்சுமி

"என்னடி சொல்ற "

"ஆமாம் மா அவனுக்கும் எனக்கும் சுத்தமா இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை பெரியவர்கள் தான் தேவையில்லாமல் ஒரு குழப்பத்தை கிளரி விடுறீங்க" என்றபடி இடத்தை விட்டு நகர்ந்தாள்.

மணி இரவு 8 ,ரோஜாவின் கைப்பேசி அழைத்தது. எதிர்முனையில் நம் கதாநாயகன் ஆதித்யன்.

"ஹலோ சொல்லுங்கள் ஆதி சார்"

"ஆங்..அது வந்து நாளைக்கு வீடு உங்கள் பேருல ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணனும் ஸோ மறக்காமல் காலையில் 9 மணிக்கு வந்துருங்க" என்றதும்.

"மிஸ்டர் ஆதி நான் தான் அன்னைக்கே சொன்னேனே இதெல்லாம் எதுக்கு. ப்ளீஸ் இதெல்லாம் எதுவும் வேணாம்" என்றாள் புருவத்தை உயர்த்தியபடி.

"இங்கே பாருங்கள் ரோஜா, என் காதலை நீங்க ஏத்துக்கனும்னு கட்டாயம் எதுவும் இல்லை. வீடு விஷயம் உங்களுக்கு தரனும்னு முடிவு எடுத்தாச்சு ஸோ உங்களுக்கு இதை கிப்டா தரனும்னு முடிவு பண்ணிருக்கேன் அவாய்ட் பண்ணாதிங்க" என்றதும்.

"நான் இப்ப வரைக்கும் உங்களை ப்ரெண்டா தான் பாக்குறேன் ஆதித்யன் சார். அதே சமயம் உங்கள் வீட்டை வாங்கிக்றதுக்கும் தயக்கமா இருக்கு" என்று தடுமாறியவளை தடுத்தவன்...

"ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். ப்ரண்டுனு சொல்லிட்டு என் கிப்டை வாங்க என்ன தடுமாற்றம்? இங்கே பாருங்கள் காதல் எல்லாம் வற்புறுத்தி எல்லாம் வராது. அது தானா வரனும். நான் தான் உங்களை கட்டாயபடுத்தவே இல்லையே அப்றம் ஏன் இந்த குழப்பம்"....

"ஓகே நான் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண வரேன்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

'ஏய் ரோஜா அவரு இவ்வளவு தூரம் உன்மேல அன்பு வச்சிருக்காரு ஆனால் அவரை பேசி பேசியே ஹர்ட் பண்ற டி. ஆபிஸ்ல இயல்பாக பேசமுடிஞ்ச உனக்கு வெளியே பேச என்னடி தயக்கம்' என்று அவளின் மனசாட்சி அவளை திட்டி தீர்த்தது.

அவன் சொன்னது போல அன்று பத்தரபதிவு நடந்தது. ஆர்கே கன்ஸ்டரக்ஷன்ஸ் முதன்முதலில் தான் கட்டிய வீட்டை பரிசாக அளித்தது எல்லாம் இதுவே முதன் முறை. அவளும் இந்த சந்தோஷமான விஷயத்தை வீட்டில் வந்து பகிர்ந்தாள்.

"அப்பா...நமக்கு ஒரு விஸ்தாரமான சொந்த வீடு கிடைச்சாச்சு. அதுவும் சார் எனக்கு கிப்டா கொடுத்தது பா" என்று மகிழ்ச்சியோடு வீட்டில் தெரிவிக்க

"என்னது சார் கொடுத்தாரா?, என்னமா சொல்ற ,எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரு மா இந்த காலத்துல செய்றா? இதுல சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் மனசுக்கு நெருடலாக தான் இருக்கு." என்று தந்தை கூறியதும்

"அட என்னப்பா நீங்க ஏதோ அந்த அங்கிள் ஆசையா கிப்டு பண்ணிருக்காங்க இதை போய் இவ்வளவு யோசிக்கிறீங்க" என்று கடைக்குட்டி ஹேமா சொல்லியதும் அத்தோடு அந்த பேச்சும் முடிந்தது.

வர வெள்ளிக்கிழமை பால்காய்த்துவிட்டு குடியேறுவது என முடிவு எடுத்தனர் ரோஜாவின் குடும்பத்தினர். இவர்கள் பெரிய வீட்டுக்கு சென்றவுடன் உறவினர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல பாராட்டும் மரியாதையும் கிடைத்தது.

அன்று அலுவலகம் முடிந்து கதாநாயகன் ஆதித்யன் ரோஜாவின் வீட்டிற்கு வந்தான். அந்த உயர்ரக கார் இவர்கள் வாசலில் நின்றதும் கடைக்குட்டி ஹேமா ஓடிவந்து.

"ஹாய் ஆதி அங்கிள் உள்ள வாங்க உள்ள வாங்க" என்று வரவேற்றாள். உடன் ரோஜாவும் புன்னகைத்தப்படி வரவேற்றாள்.

அப்போது காரை திறந்து சர்ப்ரைஸாக அந்த நாய்க்குட்டியை கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தவன்.
"ஹேமா...இது அங்கிள் உனக்கு தரும் கிப்டு. இந்தா வாங்கிக்கோ" என்று அவள் கையில் தந்ததும் அதை அள்ளி அணைத்துக்கொண்டு

"தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அதனுடன் கொஞ்சி பேசிக்கொண்டு பால்கனியிற்கு சென்றாள் ஹேமா.

"உக்காருங்க மிஸ்டர் ஆதித்யன்" என்று அமரவைத்தாள் ரோஜா.

"என்ன ரோஜா வீட்ல அப்பா அம்மா யாரும் காணோம்"

"ஆமாம் சார் இப்பதான் திங்க்ஸ் வாங்கனும்னு வெளியே போயிருக்காங்க வந்துருவாங்க' என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் தேநீர் தயாரிக்க சென்றாள்.

'ம்ம்ம் நல்லா அம்சமாக இருக்கு வீடு' என்று தனக்கு தானே பிரமித்து போனான். அவள் கையில் தேநீர் கோப்பையுடன் வந்து அமர்ந்தாள்.

"சார் டீ குடிங்க"

"தாங்க்ஸ் ரோஜா"

"என்ன சார் தாங்க்ஸ் எல்லாம் சொல்லப்போனால் நான் தானே தாங்க்ஸ் சொல்லனும் இவ்வளவு பெரிய வீடு அப்றம் என் குட்டி தங்கச்சிக்கு நாய்குட்டினு அசத்துறீங்க" என்று சொன்னவள் அவனையே வெறுத்து நோக்கினாள்.

"என்ன ரோஜா அப்படி பாக்குற"

"இல்லை சார் என்ன சொல்றதுன்னு தெரியல."

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். இங்கே பாரு உண்மைலயே எனக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை இதெல்லாம் செய்றதுக்கு. ஜஸ்ட் செய்றேன் அவ்வளவு தான்."

"ப்ச்ச் விடுங்க சார்...ஓகே நாளைக்கு ஆபிஸ் வந்துடுறேன். இன்னைக்கு வீடு அரேஞ் பண்றதுல பிஸி அதான் லீவு எடுத்துட்டேன்" என்றதும்.

"ஹாஹா டேக் யுவர் டைம் " என்று புன்னகையித்தான். அதற்குள் ஹேமா வைத்திருந்த நாய்க்குட்டி துள்ளி குதித்து ஹாலில் வந்தது...

"ஆ.....அய்யோ" என்று துள்ளியபடி ரோஜா ஜங்கென்று ஆதித்யன் மடியில் அமர்ந்துக்கொண்டாள் பயத்தில்..

விழுந்து விழுந்து சிரித்த ஹேமா..."அக்கா உனக்கு நாய்னா அவ்வளவு பயமா? ஏன் அக்கா இப்படி பயப்படுற" என்று கலாய்க்க ஆதித்யன்  மடியில் இருப்பதை உணர்ந்தவள்..

"அய்யோ சாரி ஆதித்யன் சார் நான்... பயத்தில் உங்கள் மடியில உக்கார்ந்துட்டேன்" என்றாள் வெட்கத்துடன்.

"ஹாஹா இட்ஸ் ஓகே...ஆமாம் நாய்னா ஏன் இவ்வளவு பயம். நீங்க பயப்படுவீங்கனு தெரிஞ்சா வாங்கி கொடுத்துருக்கவே மாட்டேன்" என்க..

"இல்லை பரவாயில்லை ஹேமாவுக்கு ரொம்ப பிடிக்கும் அவளும் ஆசையா கேட்டுட்டே இருந்தாள்.." என்றதும்..

"அதுசரி ....அப்போ நான் கிளம்பவா"

"சார் இருங்கள். அப்பா அம்மா வந்ததும் பார்த்துவிட்டு போவிங்க" என்றாள்..அதற்கு மறுப்பு தெரிவித்தவன்...

"நான் இன்னொரு நாள் வரேன்"என்றபடி கிளம்ப எத்தனித்தான்.

"ஆதி அங்கிள் ஒன்ஸ் அகேன் தாங்க்ஸ்.. நாய்க்குட்டி வாங்கி கொடுத்ததுக்கு" என்றாள் ஹேமா..

"யு..ஆர் வெல்கம்.. பை த வே உங்கள் அக்கா முன்னாடி அதை டேக் கழட்டி விடாத பிகாஸ் உன் அக்காவுக்கு பயம். பால்கனியில் வச்சு அதை பார்த்துக்க..அதுக்கு தேவையான சாப்பாடு நேரத்துக்கு கொடுக்கனும் அப்றம் இரண்டு நாளைக்கு ஒருமுறை அதை குளிக்க வைக்கனும்...ஓகே நான் கிளம்புறேன் பை" என்று நகர்ந்தான்.

காரை கிளப்பிக்கொண்டு சென்றவன் போகும் வழியெல்லாம் ரோஜாவை நினைத்து சிரித்துக்கொண்டான். ரொம்ப சென்ஸ்டிவான பொண்ணா இருக்காளே எல்லாத்துக்கும் ஒரு பயம்,குழப்பம்... ஹாஹா என்று மனதில் நினைத்துக்கொண்டே ஸ்டேரிங்கை பிடித்து ஓட்டிக்கொண்டு சென்றான்.

வீட்டினுள் நுழைந்ததும் அங்கு தன் அப்பாவின் குடும்ப நண்பரான ராஜரத்தினம் மற்றும் அவரது மகளும் மனைவியும் வந்திருந்தனர்.

"ஹாய் அங்கிள்" என்று குரல் தந்தபடியே வீட்டினுள் நுழைந்தான்.

"உனக்காக தான் டா வெயிட்டிங்" என்று அவனுடைய தாய் வரவேற்க ராஜரத்தினத்தின் மகள் ஐஸ்வர்யாவின் பார்வை மட்டும் ஆதித்யனை நோக்கியபடி இருந்தது.

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro