Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

episode 7

தன் அத்தை பெண் கேட்டு வந்த விஷயத்தை தோழி திவ்யாவிடம் பகிர்ந்தாள் ரோஜா. இதையெல்லாம் கேட்டுவிட்டு இரவு உணவு உண்ணும் நேரத்தில் தற்செயலாக தன் அண்ணனிடம் சொல்ல ஆரம்பித்தாள்

"அண்ணா! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா"

"என்னது திவி"

"என் ப்ரண்டு ரோஜா இருக்கால அவளை அவள் அத்தை பொண்ணு கேட்டு வந்தாங்களாம் ஒரே புலம்பல் என்கிட்ட போன்ல " என்றதும் ஆதித்யனின் முகம் மாறியது.

"என்ன சொல்ற திவி"

"ஆமாம். அது இருக்கட்டும் உன் முகம் ஏன் டல் ஆயிடுச்சு"

"ஒன்னுமில்லை சும்மா தான்"

"இல்லையே ரோஜாவை பொண்ணு கேட்டு வந்த விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே ஒருமாதிரி ஆயிட்ட அதான் கேட்டேன்"

"இல்லை திவ்யா அதெல்லாம் ஒன்றுமில்லை. சரி ரோஜா என்னதான் முடிவு பண்ணிருக்காங்களாம்"என்று ஆர்வமாக கேட்டவனிடம்.

"அதுவா. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணவே விருப்பம் இல்லையாம்"

"ஓ...சரி சரி"

டைனிங் டேபிளை விட்டு எழுந்து கை அலம்பிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான். படுக்கையில் சாய்ந்தவன்.
'டேய் ஆதி சீக்கிரமே உன் காதலை ரோஜா கிட்ட சொல்லிடு இல்லைனா நீ ரோஜாவை மிஸ் பண்ற சூழ்நிலை வந்திடும். அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போலருக்கு. இப்படியே போச்சுனா அவளை யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி அனுப்பிடுவாங்க. அப்றம் உன் கதை தேவதாஸ் தான்' என்று எண்ணியபடி தன் முகதாடியை சொரிந்தான். அந்த நேரம் அழைப்பேசி மணி அடித்தது. 

"ஹலோ சார்"

"ஹலோ ரோஜா இப்பதான் உன்னை நினைச்சிட்டு இருந்தேன்" என்றதும்.

"என்னது என்னை நீங்க நினைச்சிங்களா"

"அ....அது வந்து ரோஜா சும்மா சாதாரணமாக தான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்றம் என்ன விஷயமாக கால் பண்ணிங்க"

"சார் உங்கள் கிட்ட ஒன்னு சஜஷன் கேக்கனும்"

"கேளுங்க"

"சார் எனக்கு வீடு வாங்கனும்னு ஒரு கனவு இருக்கு. சொல்லப்போனால் அதுக்காக தான் நான் வேலைக்கே வந்தேன். நீங்க கன்ஸ்டரக்ஷன்ஸ் பிஸினஸ் பண்றதுனால இதுவரை நிறைய வீடு ,அப்பார்ட்மென்ட் எல்லாம் கட்டிருப்பீங்க ஸோ எனக்கு எதாவது ஒரு ஐடியா சொல்லுங்கள். எனக்கு லோன் அரேஞ் பண்ணி தந்தாலும் நல்லாருக்கும்" என்று மெல்லிய குரலில் தன் எண்ணத்தை பகிர்ந்தாள்.

"அப்படியா, அதுசரி. மேடம் இன்னும் ஒருமாசம் சம்பளம் கூட வாங்கல அதுக்குள்ள வீடு வாங்கனும் லோன் போடனும் இதையெல்லாம் யோசிக்கிறிங்க ஹாஹா" என்று அவளை கிண்டல் செய்து சிரித்ததும் ரோஜா ஒருமாதிரி ஆகிவிட்டாள்.

"சார் ப்ளீஸ் சிரிக்காதிங்க எதாவது ஹெல்ப் பண்ணுங்க" என்று கெஞ்சும் தோனியில் கேட்க அவனோ

"சரி நான் பார்த்து சொல்றேன். வேற எதாவது என்கிட்ட கேட்கனுமா"என்று வெடுக்கென்று கேட்டதும்.

"இல்லை இல்லை ஒன்றுமில்லை சார்"
என்றாள் பவ்வியமாக.

"அப்போ பை ரோஜா நாளைக்கு ஆபிஸ்ல மீட் பண்ணலாம்"

"ம்ம்ம் ஓகே சார்"

என்றபடி போனை வைத்தவள் 'ஏய் ரோஜா ஆனாலும் நீ ரொம்ப ஓவரா தான் போற. இன்னும் முதல்மாசம் சம்பளம் கூட வாங்கல அதுக்குள்ள வீடு வாங்குற ஆசையா. இதுல சார் கிட்டயே ஐடியா கேக்குற. எதுக்கெடுத்தாலும் அவர் கிட்ட ஹெல்ப் கேக்குறதை முதல்ல நிறுத்து டி லூசு' என்று தன் மனசாட்சியுடன் பேசிவிட்டு உறங்கிப்போனாள்.

மறுநாள் வழக்கம் போல தன் காலை வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் சென்றாள். அன்றாட அவள் பொறுப்புகளை இனிதே செய்யத்துவங்கினாள். மணி ஐந்தளவில் வானம் இருண்டு கொண்டு வந்தது. தன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் வேலையாட்களை எல்லாம் மழை வருவதற்குள் பாதுக்காப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பொதுவாக அவனுடைய குணம் இது தான். ஆறு மணி வரை அலுவலகம் நேரம் என்றாலும் மழைப்பெய்யும் நாட்களிலோ அல்லது ஏதேனும் அவசரக்காலங்களிலோ பெண்களை பாதுகாப்பாக முன்பே அனுப்பி வைத்துவிடுவான்.

ரோஜாவும் கிளம்ப எத்தனிக்கும் போது.
"ரோஜா உன்னை நானே ட்ராப் பண்றேன்" என்க..

"இல்லை பரவாயில்லை சார் நான் ஆட்டோ பிடிச்சு போய்டுவேன்"

"அட என்மேல நம்பிக்கை இல்லையா ரோஜா"

"அப்படியில்லை சார்"

"ப்ச்ச் வா ரோஜா என்ன தயக்கம்." என்றபடி அவளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான். சற்று தூரம் சென்றதும் ஒரு உயர்ரக அடுக்குமாடி கட்டிடம் முன்பு காரை நிறுத்தினான்.

"சார் இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்க"

"உள்ளே வா சொல்றேன்"

இருவரும் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தனர். லிப்டில் இரண்டாவது மாடியிற்கு அழைத்து வந்து தன் பாக்கெட்டில் இருந்த சாவியை துலாவி கதவை திறந்தான்.

நல்ல விஸ்தாரமான வரவேற்பறை ,சிலு சிலுவென்று ஜன்னல் வழியே காற்று பிய்த்தடித்தது. வலது புறம் அழகான மாடுலர் கிச்சன். இடதுபுறம் இரண்டு படுக்கையறை. படுக்கையறையை ஒட்டினாப்ல பால்கனி. பார்க்க லட்சணமான வீடு.

"ரோஜா வீடு உனக்கு பிடிச்சிருக்கா"

"பிடிச்சிருக்கு. பட் என்னை எதுக்கு கேக்குறீங்க"

"இனிமே இது உன் வீடு தானே உன்னை கேக்காமல் வேற யாரை நான் கேக்குறது"

"ச....சார் என்ன சொல்றிங்க"

"இது நம்ப ஆர்கே கன்ஸ்டரக்ஷன்ஸ் கட்டின அடுக்குமாடி குடியிருப்பு தான். இந்த வீட்டோட மதிப்பு 40 லட்சம். நீ வீடு வாங்கனும்னு சொன்னல நேத்து. ஸோ இந்த வீடை உனக்கு தரலாம்னு இருக்கேன்"....என்றதும் புரியாமல் விழித்தவள்

"சார் அப்போ லோன்"

"ஏய் கமான் ரோஜா. காமெடி பண்ணாத. லோன் அப்ளை பண்ணனும்னா குறைந்தது மூன்று மாதம் சம்பளம் பில் சப்மிட் பண்ணனும் பேங்கில். நிறைய ப்ரொஸிஜர் இருக்கு. நீ இன்னும் லோனுக்கு எலிஜிபில் இல்லை. அதனால..." என்று பேச்சை இழுத்தான்.

"அதனால".....?

"இந்த வீடு உனக்கு நான் தருகிற கிப்டா நினைச்சிக்கோ தட்ஸ் இட்" என்று தன் தோள்பட்டை குலுக்கி சொல்ல அவளோ ஒரு நிமிடம் திகைத்து தான் போனாள்.

"சார் இதென்ன விளையாட்டு. எனக்கு நீங்க ஏன் கிப்ட் தரனும்"?

"நமக்கு பிடிச்சவங்களுக்கு கிப்ட் தருவதற்கு காரணம் எதுவும் தேவையில்லை ரோஜா"

"இல்லை சார் இதெல்லாம் சரி வராது எனக்கு வேண்டாம்."

"ப்ச்ச் அடம்பிடிக்காத ரோஜா. ப்ளீஸ் இந்த வீட்டை நீ எடுத்துக்க. இங்கே பாரு இதை நீ உன் ப்ரண்டு தருவதாக நினைச்சிக்க" என்க..

"அடபோங்க சார் இந்த காலத்துல எந்த ப்ரண்டு 40 லட்சம் வீட்டை சும்மா தருவாங்க. நீங்க சரியான ஏமாளி சார்"

"ஹாஹா சரி அப்படியே இருக்கட்டும். இந்தா இந்த சாவியை பிடி." என்று வலுகட்டாயமாக சாவியை அவள் கையில் திணித்தான்.  அதை வாங்கியவள் கண்கலங்கியபடி

"சார் இதற்கெல்லாம் நான் கைமாறு என்ன செய்யப்போறேன் தெரியல. இப்படியெல்லாம் எனக்கு யாரும் செஞ்சதும் இல்லை. பயமாக இருக்கு சார். இதெல்லாம் வேண்டாமே ப்ளீஸ்" என்று கெஞ்சும் மொழியில் கூறியவளை கண்கொட்காமல் பார்த்தவன்.

"ரோஜா நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா நீ வேற நான் வேற இல்லை. ஐ ரியலி லவ் யூ ஸோ மச். உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு டா உனக்கு இது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய செய்யனும் ஆசைப்படுறேன். ப்ளீஸ் டா ரோஜா புரிஞ்சிக்க" என்று தன் காதலை முழுவதுமாக வெளிப்படுத்த அவளோ ஒரு கணம் ஸ்தம்பித்து போனாள்.

அவனுடைய காதலை அவள் ஏற்பாளா? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro