வீட்டிற்குள் உள்ளே நுழையும் போதே யாருடைய ஸ்லிப்பரோ வெளியே இருப்பதை கண்டவள் வீட்டிற்கு யாரோ வந்துருக்காங்க என்று யூகித்து தலையை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
"ஐ...அத்தை நீங்களா எப்படி இருக்கீங்க" என்று தன் தந்தையின் அக்காவிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
"வாடி என் தங்கமே என்ன வேலைக்கு எல்லாம் போக ஆரம்பிச்சிட்ட பரவாயில்லை ஆம்பள புள்ளை இல்லாத குறையை தீர்த்து வச்சிட்ட உன் அப்பாவுக்கு " என்று வாய் நிறைய அவளை பாராட்டிவிட்டு தான் வாங்கி வந்திருந்த மல்லிப்பூவை அவள் தலையில் சூடினார்.
"என்னடா பாக்குற ? கூடிய சீக்கிரமே என் வீட்டு மருமகள் ஆகப்போற. முறைப்படி பெண் கேக்கத்தான் வந்துருக்கேன் அத்தை ஹாஹா சரி சரி போ,போய் எதாவது சாப்பிடு..அம்மாடி லட்சுமி இவளுக்கு எதாவது சாப்பிட குடு. என் வீட்டுக்கு வரட்டும் என் மருமகளை எப்படி கவனிச்சிக்கப்போறேன் பாரு. இங்கே இருக்கிற வரைக்கும் உங்கள் பொறுப்பு" என்று வாய் நிறைய பாசமாய் பேசுவதில் மோகனும் லட்சுமியும் மயங்கித்தான் போயினர்.
"அம்மா என்ன இதெல்லாம்" என்றாள் ரோஜா சமையலறையில்.
"ரோஜா இங்கே பாரு மா, உன் அத்தை அவங்களே ஆசப்பட்டு அவங்க பையனுக்கு பெண் கேட்டு வந்துருக்காங்க எப்படி மா வேண்டானு எல்லாம் சொல்றது. அத்தை பேசுறதை கேட்டல இவ்வளவு பாசம் உன்மேல் வைக்கிறப்ப நாங்கள் எப்படிமா வேண்டானு சொல்றது. இங்கே பாரு யாரோ ஒருத்தர தெரியாதவனை நீ கட்டிக்கிறதை விட உன் சொந்த அத்தை பையனை கட்டிட்டு நிம்மதியாக இருடி.
"மா, எனக்கு ஆகாஷ் மேல சுத்தமாக ஆசை இல்லை மா, அவன் ஜஸ்ட் என்னோட கஸின் அவ்வளவு தான். முதல்ல நானும் ஆகாஷும் அப்படி பழகவே இல்லையே நட்பாக தானே ஜாலியா பழகினோம். வேற எந்த நினைப்பும் இல்லையே , அப்படியிருக்க நானும் அவனும் புருஷன் பொண்டாட்டியா எப்படி மா வாழ்றது"? என்றாள் தன் திருத்திய புருவத்தை சுருக்கியபடி.
அதற்குள் சமையலறைக்கு ஓடி வந்த ஹேமா "அக்கா அக்கா இந்தா உனக்கு போன். ஆகாஷ் மாமா ஏதோ பேசனுமா"என்று போன் தந்துவிட்டு ஓடிச்சென்றாள். நம் கதாநாயகி தயங்கியவாறு போனை எடுத்து காதில் வைத்தாள்.
"ஹலோ சொல்லு ஆகாஷ் எப்படி இருக்க"
"ஐயோ அதை ஏன் கேக்குற என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கிறது. என் அம்மா என்னடானா திடுதிடுப்புனு உனக்கும் எனக்கும் சம்மதம் பேச கிளம்பி வந்துட்டாங்க. என்னால தடுக்கவே முடியல. உண்மையை சொல்லனும்னா எனக்கு உன் மேல எந்த ஈர்ப்பும் இல்லை ரோஜா . சாரி உன்னை கல்யாணம் எல்லாம் பண்ற ஐடியா இல்லை" என்றதும்... சந்தோஷத்தில் துள்ளியவள்..
"வாட் ?"
"ஆமாம் ரோஜா நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்."
"அடப்பாவி இதெல்லாம் எப்போ நடந்தது" என்றாள் ரோஜா
"ஹாஹா எல்லாம் புதுசா ஜாயின் பண்ண ஆபிஸ்ல தான் . அதை விடு எங்கள் அம்மாவை எப்படியோ சமாளித்து அனுப்பி வச்சிடு மற்றது நான் பாத்துக்குறேன். ஆமாம் நான் இந்த சம்மதம் வேண்டானு சொன்னது உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே என்று கேட்டுவைக்க..
"அடபோ ஆகாஷ் நானே இதை எப்படி தட்டி கழிக்கிறதுனு யோசிச்சன். உன் மனசு கஷ்டமாயிடுமோனு தான் கொஞ்சம் யோசிச்சேன். ஆனால் நீயே வேண்டானு சொல்றப்ப எனக்கு என்ன வருத்தம் இருக்கப்போது" என்று சொல்லி சிரித்து வைத்தாள்.
"ஹாஹா ஆனால் எங்கள் அம்மா தான் ரொம்ப பாவம். சரி கொஞ்சம் நாளாச்சும் இதை நினைச்சு சந்தோஷ பட்டுக்கிட்டும். இங்கே பாரு நீயும் நானும் என்னைக்குமே ஒரு நல்ல கஸின்ஸா இருப்போம். நமக்குள் இந்த கல்யாணம் அப்டிங்கிற பந்தம் எல்லாம் வேண்டாம். அதெல்லாம் நமக்கு செட் ஆகாது. சொல்லப்போனால் ஒருநாள் கூட உன்னை முறைப்பெண்ணா நினைச்சு நான் பழகினது இல்லை. ஸோ உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.
"புரியுது ஆகாஷ். விடு பார்த்துக்கலாம்" என்று ஆறுதலாய் பேசிவிட்டு போனை வைத்தாள்.
"அடியேய் என்னடி பேசின ஆகாஷ் கிட்ட" என்று லட்சுமி கேட்க..
"ஹாஹா ஒன்னுமில்லை சும்மா தான்" என்றபடி நகர்ந்தாள்.
"ஏய் உன்னை தான்டி கேக்குறேன். உன்னைய பார்த்தால் கட்டிக்க போறவன் கிட்ட பேசுற மாதிரி தெரியலையே. நடக்கப்போற சம்மந்தத்தை நிறுத்துற மாதிரி தெரியுதே." என்றதும்.
"மா...சும்மா எதையாவது பேசிட்டு விடு மா" என்று சொல்லிவிட்டு...
"அத்தை அப்றம் வேற என்ன விஷயம்" என்றபடி இயல்பாக பேசிக்கொண்டு இருந்தாள். ஒருபக்கம் தன் மீது இவ்வளவு பிரியம் வைத்திருக்கும் அத்தையை ஏமாற்றுகிறோம் என்று நினைக்கும்போது மனம் சற்று வலித்தது.
அங்கு ஆகாஷ் தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக ரோஜாவிற்கு தெரிவித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தான்.
சின்ன வயதிலிருந்தே ரோஜாவும் ஆகாஷும் நல்ல நட்புடன் பழகினர். பெங்களூர் டேஸ் படத்தில் வருவது போல அவர்களுக்குள் ஓர் புரிதல் இருந்தது. அவர்கள் மனதிற்குள் முறைப்பெண், மாமன் என்ற உணர்வு இம்மியளவும் வந்ததில்லை.
அவர்களின் தொடுதலும் பேச்சுக்களும் ஓர் எல்லையினுள் இருந்தது. கலங்கம் இல்லாமல் தான் இருவரும் பழகினர். தன் வீட்டில் தங்கை இல்லாத குறையை ரோஜா மூலமாக அனுபவித்தான். தன் வீட்டில் அண்ணன் இல்லாத குறையை ஆகாஷ் மூலமாக அனுபவித்தாள். இவ்வளவு தான் இவர்களின் உறவு . இந்த உறவுக்குள் தேவையில்லாமல் திருமணம் என்ற விஷயம் வரவேண்டியதில்லை என்று இருவரும் எண்ணுவதில் தவறென்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக ஆகாஷ் இன்னொரு பெண்ணை காதலிக்கிறான் அல்லவா. அப்படியிருக்க இந்த திருமணம் நடந்தேற துளியளவும் வாய்ப்பில்லை. எது எப்படியோ தன் அம்மாவை எப்படியேனும் சமாளிக்க வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் உடனே இதைப்பற்றி எல்லாம் பேச முடியாது. அதற்கான காலநேரம் வரும்போது பேசிக்கொள்வோம் என்று தீர்மானம் செய்தான். ரோஜாவும் மனதளவில் இதையெல்லாம் சமாளிக்க தயாரானாள். ஆகாஷ் மட்டும் இல்லை. இப்போதைக்கு யாரையும் மணக்க மனமில்லாமல் இருக்கிறாள்.
வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் தான் வேலைக்கு செல்லவே முடிவு எடுத்தாள் அப்படியிருக்க எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் என்னும் பந்தத்தில் எப்படி நுழைவாள் அவள். ஒருபக்கம் கார்த்திக்கின் நினைப்பு வேற வாட்டி வதைக்கிறது . கார்த்திக் இருந்திருந்தால் இந்நேரம் அவள் உலகமே அவன் தான்.
வாழ்க்கை சில நேரங்களில் அப்படித்தான் நமக்கு பிடித்தவருடன் வாழ கொடுத்து வைக்காது. நமக்காக எழுதி வைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளவும் சூழ்நிலை அமையாது. நம் கதாநாயகி ரோஜாவிற்கும் இப்போது அதே நிலை தான்.
ஆசைப்பட்டு காதலித்த கார்த்திக்கும் இல்லை. தனக்கு தேடி வந்த வரன் (அத்தை மகனையும்) ஏற்க முடியாத சூழ்நிலை. விதிப்படி எல்லாம் நடக்கட்டும்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro