Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

episode 5

"அவினாஷ் நீயா"

"ஆமா நானே தான். ஏண்டி உன் இஷ்டத்துக்கு நீ லவ் பண்ணிட்டு விட்டுட்டு போய்டுவ நான் போனால் போகட்டும் போடினு விட்டுடனுமா" என்றான் உரத்த குரலில். அந்த குரல் அவளை சற்று நடுங்க வைத்தது.

"அவினாஷ் இங்கே பாரு நான் உன்னை லவ் பண்ணல. காலேஜ்ல ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து உன்னை கலாய்க்க அப்படி பண்ணாங்க. நான் உன்னை லவ் பண்ற மாதிரி ப்ளே பண்ணாங்க. நான் கார்த்திக்கை தான் உயிருக்கு உயிரா லவ் பண்ணேன் மற்றபடி வேற யாரையும் நான் மனசுல கூட நினைக்கல " என்று அவனுக்கு புரியவைக்க முயற்சி செய்தாலும் அவன் அதை காதில் வாங்குவதாக கூட தெரியவில்லை.

"ஏய் ஏய் ஏய் என்னடி சும்மா கதை விடுற" என்று மிரட்டல் தோனியில் அவளிடம் பேச்சை தொடர்ந்தான் ஒரு கட்டத்தில் இவள் அழைப்பை துண்டித்துவிட்டு அழுதுக்கொண்டு உறங்கிப்போனாள். மறுநாள் காலை விடிந்ததும் முதல் நாள் வந்த அழைப்பு நியாபகம் வந்தது.

'அச்சோ இந்த புது பிரச்சனையை எப்படி சமாளிக்க போறேனு தெரியலையே' என்றபடி எழுந்து அலுவலகத்திற்கு தயாரானாள். அவசரமாக சிற்றுண்டி உண்டு பேருந்தில் ஏறி தன் அலுவலகத்திற்கு வந்தடைந்தாள்.

"குட் மார்னிங்" என்றாள் சுபத்ரா.

"குட்மார்னிங்" என்று வேண்டாவெறுப்பாய் உமிழ்ந்துவிட்டு தன் வேலையை துவங்கினாள்.

"சார் வந்தாச்சு இன்னைக்கு ஸ்டாப்ஸ் மீட்டிங்" என்று ஆபிஸ்பாய் கூவினான். எல்லோரும் எழுந்து அங்கிருக்கும் கான்பரன்ஸ் ஹாலிற்கு வந்து அமர்ந்தனர்.

"குட்மார்னிங் கைஸ்...இன்னைக்கு எதுக்கு மீட்டிங் அப்படினா நம்ப புதுசா கட்டிட்டு இருக்கிற பிரம்மாண்டமான ஸ்டார் ஹோட்டலுக்கு நம்ப பண்ணி தந்த டிசைன் க்ளைண்ட் க்கு பிடிச்சு போச்சு அடுத்து வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். இதுல வித்தியாசமான ஐடியாஸ் என்னலாம் கொண்டு வரலாம் அப்படினு உங்கள் அபிப்பிராயம் கேட்கத்தான் இந்த மீட்டிங். ஸோ சுபத்ரா நீங்க சொல்லுங்கள் முதல்ல...

"சார் பொதுவா ஸ்டார் ஹோட்டல்னா இன்டிரியர் டெக்ரேஷன் ரொம்ப முக்கியம். அதுல நம்ப கான்ஸன்ட்ரேட் பண்ணா நல்லதுனு தோன்றுது".

"வெரி குட்...நானும் அதே தான் யோசிச்சன். புதுசா ஒரு இன்டிரியர் டெக்ரேட்டரை நான் அப்பாய்ண்ட் பண்ணிருக்கேன். தென் வாட் ஹெல்ஸ்? ம்ம்....ரோஜா நீங்க சொல்லுங்கள்"

"சார்...அது வந்து." என்று தடுமாறினாள் அவள் முகத்தில் ஏதோ தெளிவு இல்லை என்பதை நன்கு புரிந்துக்கொண்டான். மீட்டிங் ஒரு வழியாக முடிந்தது. அலுவலகம் மதிய சாப்பாடு நேரம் நெருங்கியது.

"ரோஜா நீ உன்னோட லஞ்ச எடுத்துட்டு என்னோட கேபின் வா" என்று ஆணையிட்டான்.

உள்ளே தயக்கத்துடன் நுழைந்தவள் அவன் சைகையால் அமரும்படி கூறவே எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள்.

"என்னாச்சு ரோஜா ? இன்னைக்கு உங்கள் முகமே வாடியிருக்கு எதாவது பிரச்சனையா?" என்று வினவினான்.

"இல்லை சார் நான் நார்மலா தான் இருக்கேன்".

"இல்லையே உங்கள் முகமே காட்டி தருதே ஏதோ பிரச்சனைனு. நான் மீட்டிங் நடக்கும்போதே பார்த்தேனே"

"சார் அது வந்து"

"ஹாஹா... சார்ன்னு நினைக்காமல் உன் ப்ரண்டா நினைச்சு சொல்லு. என்னதான் ஆச்சு உனக்கு"

"ப்ரண்டா வா?"

"ம்ம்ம் ஏன் இருக்கக்கூடாதா?"

"சார்...நீங்க இவ்வளவு தூரம் கேக்குறதுனால சொல்றேன். அவினாஷ் னு ஒரு பையன் என்னை டிஸ்டர்ப் பண்றான். நேத்து நைட் கூட கால் பண்ணி மிரட்டுறான். அவன் காலேஜ்ல என்னோட படிச்சவன் தான் ஆனால் அவன் சரியில்லை சார். சும்மா ப்ரண்ட்ஸ் ப்ளே பண்ணதை வச்சு லவ் பண்ணதா நினைச்சிட்டு நான் ஏமாத்திட்டு போனேன் அது இதுன்னு ஒருமாதிரி பேசுறான் சார். இதை எப்படி சரி பண்ணப்போறேன் தெரியல...." என்று புலம்பி தள்ளியதும்.

"சரி அவன் நம்பருக்கு கால் பண்ணி தா பேசுறேன்"

"சார்"?

"அட ஆமாம் ரோஜா கால் பண்ணி தா"

அவள் அழைப்பு மணி பார்த்து எடுத்தவன்.
"என்னடி நீயே என் வழிக்கு வந்துட்டியா " என்று ஒருமாதிரி பேசியதும்.

"ஏய் பொறுக்கி ,என்னை தைரியம் இருந்தால் என் மனைவி கிட்ட இப்படி பேசுவ? என்ன கேக்க யாரும் ஆளு இல்லை நினைச்சிட்டியா. இன்னொரு முறை அவளை தொந்தரவு செய்றனு தெரிஞ்சிது இப்படி பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்" என்று அவனை மிரட்டி போனை வைத்துவிட்டு அந்த நம்பரை ப்ளாக் செய்தான்.

"சார்....என்ன நீங்க மனைவினு சொல்லிட்டிங்க திடிரென்று" என்று பயந்தபடி கேட்க...

"ஒரு சின்ன பொய் தானே ரோஜா சொன்னேன். இதுல என்ன இருக்கிறது. இந்த பொய் உனக்கு ஒரு பாதுகாப்பு தரும்போது இந்த பொய் சொல்றதுல தப்பு எதுவும் இல்லை"

"ம்ம்ம்..."

"என்ன ம்ம்ம் ...முதல்ல சாப்பிடு. ஆங் இந்தா நான் கொண்டு வந்த புலாவ் ட்ரை பண்ணு " என்று அவளுக்கு பரிமாறினான். இருவரும் சேர்ந்து அமர்ந்து உண்டதை மற்ற தொழிலாளிகள் கிசுகிசுத்தனர். ஆனால் அதை கொஞ்சம் கூட ஆதித்யன் பொருட்படுத்தவில்லை...

வேலை எல்லாம் முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரம் இன்று நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தாள்.
'ஸோ ஸ்வீட் ஆப் யூ ஆதித்யன்' நீங்கள் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் அந்த ராஸ்கல் என்னை தொல்லை பண்ணிருப்பான்.

'நீங்க சொன்ன அந்த ஒரு பொய் என்னை எவ்வளவு பெரிய பிரச்சனைல இருந்து காப்பாத்திருக்கு தெரியுமா' என்று மனதிற்குள் நினைத்து மகிழ்ந்துக்கொண்டாள். இன்னைக்கு நைட் நான் நிம்மதியாக தூங்கலாம்.

ஆனால் ஒன்று நீங்க ஏன் சார் என் மேல இவ்வளவு கேர் எடுத்துக்கனும். உங்களுக்கு நான் அப்படி எதுவும் பண்ணலையே நான் உண்டு வேலை உண்டுன்னு இருக்கேன். ஒருவேலை நான் திவ்யா ப்ரண்டுன்னு என்மேல அதித கவனம் எடுத்துக்கிறீங்களோ. சரி அப்படியே இருந்தாலும் இதெல்லாம் ஓவர் தான் என்று சிரித்தும் வைத்தாள்.

அவனை பற்றி நினைக்கும்போதே அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
"என்ன ரோஜா மேடம் பஸ்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கீங்களா"

"யா...யா...சொல்லுங்கள்"

"ஆமா மீட்டிங்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் இதுவரையில் சொல்லவே இல்லை" என்க...

"அதுவா...சார் எனக்கு தெரிஞ்சு ஸ்டார் ஹோட்டலில் வருகைத்தரும் பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தைக்கு பாலூட்ட தனியறை அமைத்து தந்தால் நல்லாருக்கும். கொஞ்சம் ப்ரைவேசியான இடமாக இருக்கனும்" என்றதும்.

"இதை நான் யோசிக்கவே இல்லை ரோஜா. நீ சொத்றது உண்மை தான். ஹோட்டல் வெறும் ஹோட்டலா மட்டும் இல்லாமல். வீட்டில் இருக்கும் கம்பர்ட்ஸ் கொஞ்சம் ஆச்சும் இருக்கனும். கரெக்ட்" என்று அவளை பாராட்டிவிட்டு....

பை என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
'ம்ம்ம் நம்ம சொல்ற ஐடியா சூப்பராவா இருக்கு. சரி ஸ்டாப் வந்தாச்சு இறங்குவோம்' என்று இறங்கி வீடு வந்து சேர்ந்தாள்.

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro