episode 4
ரோஜா வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் தங்கை ஹேமா "அக்கா வரியா பாணிபூரி சாப்பிட போலாம்" என்றழைத்ததும் சரி வருகிறேன் என்று கைகால் அலம்பிவிட்டு அவளுடன் தயாரானாள்.
"அம்மா இன்னைக்கு டின்னர் எனக்கு ரசம் சாதம் போதும்" என்றாள் ரோஜா. வழக்கமாக செல்லும் அந்த பாணிபூரி கடைக்கு நடந்தே சென்றாள்.
"அண்ணே இரண்டு ப்ளேட் பாணி பூரி" என்று ஆர்டர் செய்யும் அதே சமயம்..
"அண்ணே எனக்கொரு ப்ளேட் பாணிபூரி" என்றது ஆதித்யனின் குரல்.
திரும்பி பார்த்த ரோஜாவிற்கு அதிர்ச்சி நிலவியது.
"என்ன சார் இந்த பக்கம்"
"ஏன் ரோஜா நான் இங்கே வரக்கூடாதா"
"அப்படியில்லை ,உங்கள் வீடும் ஆபிஸும் இங்கே இல்லை. இந்த ஏரியாவில் நீங்கள் எப்படினு ஒரு ஆச்சரியம் தான்" என்றாள்
அவளை ஏறிட்டு ஒருமுறை பார்த்துவிட்டு வலப்புறம் திரும்பியவன்.
"ரோஜா இந்த ஏரியா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சின்னவயதில் இங்கே தான் இருந்தோம். எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இங்கே இருக்காங்க. நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் பழைய நட்பை மறுபடியும் வளர்த்துக்கிட்டேன். ப்ரெண்டை பார்க்கத்தான் இப்பக்கூட வந்தேன்" என்று சொல்லிவிட்டு தன் மனதிற்குள்.
'போடி இவளே ! உன்னைய பார்க்கத்தான் வந்தேன்னு எப்படி கூச்சப்படாமல் சொல்றது. அதான் இப்படி ஒரு கதை விடுறேன்.' என்று மனசுக்குள் சிரித்தவன்.
"சரி சரி ஆர்டர் வந்தாச்சு சாப்பிடு" என்றான் ஆதித்யன்.
"மாமா, உங்களுக்கும் பாணிபூரி பேவரிட்டா" என்றாள் ஹேமா.
"என்ன சொன்ன"?
"மாமா ன்னு சொன்னேன்"
"தட்ஸ் ரியலி நைஸ்" என்றான் ஆதித்யன்.
ரோஜாவிற்கு என்னவோ போல் ஆயிற்று. "ஏய் ஹேமா அதென்ன மாமா நீ அங்கிள்னு கூப்பிடு" என்று அதட்டினாள்.
"ஏன் அக்கா...மாமா சொல்றதுல என்ன தப்பு ,எனக்கு அங்கிள் சொல்ல விருப்பம் இல்லை அதான்"
"ஆமா அதானே சின்ன பொண்ணு ஏதோ மாமானு உரிமையா சொல்றா பரவாயில்லை விடுங்கள் ரோஜா ,மாமாவுக்கும் அங்கிள்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை"
மனதுக்குள் ஹேமா தன்னை மாமா என்று அழைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளவில்லை.
"சரி நான் கிளம்புறேன்" என்று விடைப்பெற்றான் ஆதித்யன். காரில் ஏறி கதவை சாத்தியவன் தனது காரை உயிர்ப்பித்தான். வீட்டை நோக்கி அவன் பயணிக்கும் நேரத்தில் அவன் மூளைக்குள் அவளுடைய எண்ண ஓட்டங்கள் ரங்கராட்டினம் போல் சுற்றிக்கொண்டு இருந்தது.
'எனக்கு ஏன் உன்னை பிடிக்கனும் ரோஜா? முதன்முதலில் உன் குரல் கேக்குறப்பவே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருச்சு. ப்ச்ச் இப்படி எல்லாம் எந்த பொண்ணையும் நினைச்சதில்லை. இதெல்லாம் லவ்வானு கூட எனக்கு தெரியவில்லை. உன்னை பார்க்கணும்னு தோன்றுது. ஹாஹா..' என்றபடி காரை செலுத்திக்கொண்டு வந்தான்.
ரோஜாவோ வீட்டுக்கு வந்து அமர்ந்து எதையோ சிந்தித்தாள்.
'எப்படி இந்த கோ இன்ஸிடன்ஸ் , ஆச்சரியமா இருக்கு. நான் வந்த டைம் அவரும் வந்துருக்காரு. ஹாஹா... ஆக்சுவலி எனக்கும் கார்த்திக் நடுவல இப்படி கோ இன்ஸிடன்ஸ் நிறைய நடந்துருக்கு.
அன்று ஒருநாள் அப்படிதான். கார்த்திக் கேண்டினில் அமர்ந்திருக்க நானும் தற்செயலாக தோழிகளுடன் வந்திருந்தேன். எப்பலாம் அவனை பார்க்க நினைக்கிறேனோ அப்போதெல்லாம் என் கண் முன்பு நிப்பான் கார்த்திக்.
என்று நினைக்கும்போதே பழைய நினைவுகள் மீண்டும் பிரதிபலித்தது. சட்டென்று பழைய நினைவலைகளிலிருந்து வெளியே வந்தவள் சமையலறையில் இருக்கும் தாயிற்கு ஏதேனும் உதவலாம் என்று வந்தாள்.
"அம்மா எதாவது செய்யட்டுமா"
"வேண்டாம்டி நீ உக்காரு எதுவும் பெருசா வேலை இல்லை"
"சரி மா" என்றபடி வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தாள் அங்கு ஹேமாவும் தனது தந்தையும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க...
வெடுக்கென்று சேனலை மாற்றினாள் ஹேமா கையில் இருக்கும் ரிமோட் பிடுங்கியபடி.
"அக்கா நல்லா தானே இருக்கிறது அந்த படம் அப்றம் என்ன"
"அடிப்போடி என்ன நல்லாருக்கு. இந்த சேனல்ல மியூசிக் பார்க்கலாம் வா" என்றழைக்க ஹேமாவும் அவளுடன் ஒன்றிப்போனாள்
எப்படியோ அக்கா தங்கை இருவரும் சண்டையின்றி தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்ற திருப்தியில் அவர் தன் மனைவி லட்சுமி இருக்கும் சமைரலறைக்கு சென்றார். அவர் வந்ததை கண்ட லட்சுமி.
"ஏங்க தண்ணீர் எதாவது வேண்டுமா"
"அதெல்லாம் ஒன்றுமில்லை. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதான் கிச்சன் வரைக்கும் வந்தேன்.
"என்ன சொல்லுங்கள்"
"நம்ம ரோஜாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கனும். பெண்பிள்ளை நல்லா வளர்ந்துட்டா. அவளுக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சு தரனும் ஏன்னா இந்த வயசுல தான் அவளுக்கு ஒரு துணை தேவை. அவள் மனசுல இருக்கிற விஷயத்தை பகிர்ந்துக்க, நாலு இடத்துக்கு போய்ட்டு வர, இப்படி தனியா ரூமுக்கும் ஹாலுக்கும் எவ்வளவு நாள் தான் இருப்பாள் சொல்லு.
"கரெக்ட் தான் இதை பற்றி அவள் கிட்ட பேசுறேன்"
"பேசு லட்சுமி. சரி சாப்பாடு ஆச்சா"
"ஆச்சுங்க இதோ எடுத்து வைக்கிறேன் வாங்க"
குடும்பமாக அமர்ந்து நால்வரும் சாப்பிட்டனர். கல்யாண பேச்சை இப்போ எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த லட்சுமி.
"ரோஜா, நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து. நல்லா பூசினாப்ல இருந்தால் தானே மாப்பிள்ளை பார்த்தவுடன் ஓகே சொல்வான்" என்றதும்.
"ம்ம்ம்... என்னமா இது நீ சொல்றதை பார்த்தால் நாளைக்கே என்னை யாரோ பெண் பார்க்க வராங்க போலருக்கு"
"ப்ச்ச் இல்லை டி இனிமேல் தான் ஆரம்பிக்கனும்"
"ம்ம்ம் என்னை பேக் பண்ணி அனுப்பி வைக்க தயார் ஆயிட்ட சரி அப்றம் உன் இஷ்டம். " என்று சொல்லிவிட்டு மனதிற்குள்.
'என்னைக்காவது ஒருநாள் கல்யாணம் பண்ணிதான் ஆகனும் கார்த்திக் நினைச்சு வாழ்ந்திடலாம்னு கூட தோன்றுது ஆனால் இதையெல்லாம் பெரியவங்க ஒத்துப்பாங்களா? சான்ஸே இல்லை. மாப்பிள்ளை பார்க்கட்டும் மற்றது எல்லாம் அப்றம் கவனிச்சிப்போம்.
என்றபடி சாப்பாட்டின் மீது கவனம் திரும்பியபடி உண்டு முடித்துவிட்டு கை அலம்பிவிட்டு படுக்கைக்கு சென்றாள். அவளுடைய அழைப்பேசி மணி அடித்தது.
'ம்ம் தெரியாத நம்பரா இருக்கே எடுத்து பேசலாமா வேணாமா'என்று ஒருகணம் யோசித்து அடுத்த முறை அழைப்பு வந்ததும் எடுத்தாள்.
"ஹாய் டார்லிங்" என்றது ஒரு ஆடவனின் குரல் அது பரிட்சயமான குரல் இல்லை என்றதால் அதிர்ந்து போனாள்.
"ஹலோ யார் நீ" என்று வினவியதும்.
"ஹலோ என்னை தெரியல நான் தான் அவினாஷ்"
"நீயா"?
.......
அடுத்து என்ன தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro