episode 3
ஆர்.கே கன்ஸ்டரக்ஷன்ஸ் சக்கரவர்த்தியின் மிகப்பெரிய கனவு என்று கூட சொல்லலாம். ஆரம்பத்தில் ஒரு சாதாரண மேஸ்திரி வேலை பார்த்தவர் தான் இந்த சக்கரவர்த்தி. அவர் தந்தையும் கட்டிட வேலை செய்தவர் தான். ஆர். ராதாகிருஷ்ணன். நடுத்தர வர்கத்தின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்து பிறகு சிவில் இன்ஜினியரிங் படித்த தனது நண்பனின் உதவியுடன் பில்டிங் கன்ஸ்டரக்ஷன்ஸ் தொழில் ஆரம்பித்தார் சக்கரவர்த்தி.
அவர் தனது அந்தஸ்த்தை எட்டுவதற்கு பலவருடம் ஆயிற்று. மகன் ஆதித்யனுக்கும் மகள் திவ்யாவுக்கும் எந்தவித கஷ்டத்தையும் காட்டாமல் சொகுசு வாழ்க்கையை அளித்தார். பிள்ளைகளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வீட்டில் சகல வசதிகளும் இருந்தன. ஆதித்யனுக்கும் திவ்யாவிற்கும் அவ்வீட்டில் ராஜவாழ்க்கை தான்.
சக்கரவர்த்தியின் மனைவி சவிதா, ஓர் அழகு கலை நிபுணர். இன்றும் பெரியளவில் அவ்வேலையை பார்த்து வருகிறார். அவரிடம் வரும் க்ளைண்ட் எல்லாம் செலப்ரிடிஸ் தான்.
'சவிதா ப்யூட்டி க்ளினிக் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்பகாலத்தில் தன் அழகு கலையை வீட்டில் இருந்தபடியே செய்து வந்த சவிதாவிற்கு ,வசதிகள் வந்தப்பின் தனியே பார்லர் வைத்துக்கொடுத்தார் சக்கிரவர்த்தி.
வீட்டில் சமையலுக்கு, பாத்திரம் கழுவதற்கு, வீடு சுத்தம் செய்வதற்கு என்று வீட்டோடு வேலையாள் ஒருவள் இருக்கிறாள் பெயர் கனகவல்லி வயது 25, திருமணம் ஆகாதவள். பெற்றோர் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. இந்த வீட்டில் ஐந்து வருடமாய் இங்கேயே தங்கி வேலையை பார்த்துக்கொள்கிறாள்.
அன்று ஆதித்யன் அறையில் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான். கனகவல்லி கையில் காபி ட்ரேயுடன்.
"ஐயா, காபி...." என்று நீட்டியதும் அதை எடுத்துக்கொண்டவன்.
"கனகா, இனிமே இந்த ஐயா கொய்யா எல்லாம் வேணாம். உனக்கும் எனக்கும் ஒரே வயசு தான். ஸோ ஆதின்னு கூப்பிடு. இல்லைனா ப்ரோன்னு சொல்லு" என்றதும்
"அச்சோ, அதெல்லாம் வேணாங்கய்யா வீட்டில் உங்கள் அப்பா அம்மா திட்டுவாங்க. நான் உங்கள் அப்பாவை பெரியய்யா சொல்லுவேன். உங்களை சின்ன ஐயா சொல்லுவேன். பேரு சொல்லி கூப்பிட்டா நல்லாருக்காது"என்றதும்.
"இங்கே பாரு இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அடிமையா வச்சிருக்கவன் தான் இந்த ஐயா ,அம்மாங்குற மரியாதை எல்லாம் எதிர்பார்ப்பாங்க. நான் உன்னை அடிமையா வைக்கல ,நீ இந்த வீட்டில் ஒரு தொழிலாளி அவ்வளவு தான். உனக்கு சம்பளம் தருகிறோம். இதுக்கு இடையில் தேவையில்லாத இந்த மரியாதை எல்லாம் எதுக்கு? உன்னை வேலைக்காரின்னு நீயே ஏன் தாழ்த்திக்கிற கனகவல்லி" என்றான் புருவத்தை சுருக்கியபடி.
"அப்போ நான் ப்ரோன்னு சொல்லலாமா"
"ஹாஹா தாராளமாக சொல்லு. அதே போல என் அப்பா அம்மாவை இனிமே அம்மா அப்பானே சொல்லு. ஐயா அம்மா எல்லாம் வேணாம். அப்றம் இயல்பாக ட்ரெஸ் பண்ணு. வேலைக்காரின்னா எப்பவும் பழைய புடவையும் காய்ந்த தலையாவும் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. உனக்கு எதாவது வேணூம்னா திவ்யா கிட்ட இல்லை என்கிட்ட கேளு வாங்கி தரேன் ஓகேவா" என்றான்.
"ஓகே ப்ரோ..." என்றபடி கனகவல்லி அறையை விட்டு வெளியே வந்தாள்.
'இந்த குடும்பத்தில் நானும் ஒருத்தி அப்படினு நினைக்க வச்சுட்டாரு ஆதித்யன்' என்று மன அமைதி பெற்றாள்.
சவிதா ,தனது க்ளினிக் செல்ல தயாராகிவிட்டு இன்று என்னென்ன சமைக்கனும் எல்லாம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது தான் தரகர் வந்தார்.
"சவிதா மா நீங்க கேட்டமாதிரி ஜாதகம் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன். பொண்ணு போட்டோவும் இருக்கு" என்றார் வணக்கம் சொல்லியபடி.
"உக்காருங்க பார்ப்போம்"
"டேய் ஆதி கொஞ்சம் இங்கே ஹாலுக்கு வா" என்றழைக்க தனது அறையிலிருந்து வெளியே வந்தான்.
"இந்த பொண்ணு உனக்கு பிடிச்சிருக்கா பார்த்து சொல்லு" என்று சவிதா கேட்டதும்.
"மா, இதென்ன திடிரென்று. எனக்கு இப்பதானே 25 இன்னும் பிஸினஸ் நான் முழுசாக்கூட கத்துக்கல அதுக்குள் கல்யாணமா? மா, அப்றம் என் லைப்பு போர் அடிச்சிரும் மா"...
என்றான் கெஞ்சியபடி.
"அடேய், உனக்கு என்ன மற்ற பசங்க மாதிரி மாசம் 20,000 சம்பாதிக்கனும் குடும்ப பொறுப்பு பார்க்கனும். அது இதுனு நடுத்தர குடும்பத்தோட கஷ்டமா இருக்கு? நீ சம்பாதிக்காமலே உக்கார்ந்து சாப்பிடலாம் அந்த அளவு இருக்கு நமக்கு. ஸோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு என்ஜாய் பண்ற வழியை பாரு. நானும் ப்யூட்டி க்ளினிக் போயிடுறேன். வீட்டை கவனிக்க கூட முடியிறது இல்லை. மருமகள் வந்தாள்னா அவளே எல்லாம் பார்த்துப்பா நான் தைரியமா நிம்மதியாக என் வொர்க் பார்க்கலாம். என்றார் அவர் தரப்பு நியாயத்தை முன் வைத்தப்படி.
"ஸோ, ஆகமொத்தம். வீட்டை நிர்வாகம் பண்ண ஒருத்தி வேணும் அதானே" என்றான் நக்கலாக.
"அப்படி இல்லை டா"
"மா, இந்த பேச்சு இதோட விடுங்க. மருமகள் அப்படிங்கிறவ வீட்டை நிர்வாகம் பண்ற எம்ப்ளாயி இல்லை. அவளுக்கும் கனவு லட்சியம் எல்லாம் இருக்கும். எனக்கு மனைவியா வரப்போறவள நான் அனு அனுவா காதலிச்சு அவளை பற்றி எல்லாம் புரிஞ்சிக்கிட்டு அதுகப்றம் தான் எல்லாம். இப்படி உங்கள் சுயநலத்திற்காக எல்லாம் என்னால முடிவு பண்ண முடியாது. ப்ளீஸ் மா" என்று சொல்லிவிட்டு மீண்டும் அறையிற்குள் புகுந்தான்.
'இந்த பெரியவர்கள் ஏன் இவ்வளவு சுயநலமா இருக்காங்களோ, வீட்டை பார்த்துக்க ஆளு வேணும் ப்ளஸ் பேர புள்ளைய பெத்து போடுற மிஷினா இருக்கனும் மருமகள். இதுக்கு அவசரம் அவசரமாக பையனுக்கு கல்யாணம் பண்ணணும்' என்று மனதிற்குள் குமுறிக்கொண்டிருந்தான்.
தரகர் விடைபெற்று கொண்டு சென்றுவிட்டார். சவிதாவும் ப்யூட்டி க்ளீனிக் சென்றுவிட்டார். இவனுக்கும் வேலை இருந்ததால் அவனும் லேப்டாப்பில் மூழ்கி போயிருந்தான். மணி 11 ஆகியிருந்தது. மீட்டிங் இருக்கே க்ளைண்ட் கூட என்றபடி தயாராகி கிளம்பினான்.
"குட்மார்னிங் சார்" என்றாள் ரோஜா...
"குட்மார்னிங் ரோஜா." என்று புன்னகைத்துவிட்டு கேபினுள் நுழைந்தான்.
மீட்டிங் சற்று நேரத்தில் ஆரம்பித்தது. இவர் தான் ஸ்டார் ஹோட்டல் ப்ராஜெக்ட் குடுத்தவரா பார்க்க சாதாரணமாக இருக்காரே என்று வியந்தாள் ரோஜா...
"ஆமாம் ரோஜா எப்பவுமே இந்த அர வேக்காடுங்க தான் ஓவர் சீன் போடும். ஆனால் உண்மையான பணக்காரங்க எளிமையான முறையில் தான் இருப்பாங்க" என்றாள் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவள்.
"ஹாஹா...உண்மை தான்" என்று சொல்லிவிட்டு கேபினை நோக்கினாள். அங்கு ஆதித்யன் நீலநிற ஷர்ட்டும் நார்மல் வெள்ளை ஜீன்ஸ் அணிந்தபடி எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையான ஆடையில் இருந்ததை கவனித்தாள்.
'கையில் ஒரே ஒரு வெள்ளி காப்பு, கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய செயின் இதை தவிர ஆதித்யன் சார் எந்த வித பந்தாவும் இல்லைல...க்ரேட் தான். இவருக்கு இல்லாத வசதியா. இவர் நினைச்சா பத்து விரலுக்கு பத்து மோதிரம் மாட்டிக்கலாம் ஆனால் சிம்பிளா தான் இருக்காரு' என்று வியந்தாள்...
இப்படி தானே என்னோட கார்த்திக் இருப்பான். காலேஜ்ல நானும் அவனும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். பாழாப்போன அந்த விபத்து அவனை எடுத்துக்குச்சு என்று நினைக்கும்போதே அழுகை வந்தது அவளுக்கு.
"ஏய் வேலையை கவனி" என்று சுபத்ரா வந்து தோளை உலுக்கியதும் சுயநினைவுக்கு வந்தாள் ரோஜா.
மீட்டிங் முடிந்ததும் ரோஜாவை கேபினுக்கு அழைத்தான் ஆதித்யன்..
"ரோஜா ஆர் யூ ஓகே"
"ஓகே தான் சார் ஏன் இப்படி கேக்குறீங்க"
"இல்லை நீ கண்கலங்கி உக்கார்ந்திருந்த. தற்செயலாக நான் பார்த்தேன் அதான் கேட்டேன்"
"ஒன்னுமில்லை சார்"
"ஒன்னுமில்லையா இல்லை சொல்ல விருப்பம் இல்லையா"
"அப்படி இல்லை சார்... இதை சொல்லி எதுவும் ஆகப்போறது இல்லை அதான்"
"ஓகே எதுவாக இருந்தாலும் சரி ப்ளீஸ் பீ கூல் ...சரி வேலை பாரு" என்று அனுப்பி வைத்தான். இவன் இவள் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறை இவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அழவேண்டும் என்பது போல் இருந்தது. ஆனாலும் அதற்கு இது நேரமில்லை என்று நினைத்து கடந்துச்சென்றாள்.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro