episode 2
சமையலறையில் இருந்த லட்சுமி குளிர்சாதனபெட்டியில் பால்பேக்கட் இல்லாததை உணர்ந்து ரோஜாவை வாங்கிட்டு வர அனுப்பி வைக்க எத்தனித்தார். இவளோ கண்களை கசக்கியபடி எழுந்தவள்...
"அச்சோ என்னமா நீ தூக்ககலக்கத்துல இருக்க என்னை போய் கடைக்கு அனுப்புற அடபோமா"என்று மீண்டும் படுக்கையில் சாய நினைத்தவளை எழுப்பியவர்.
"அடியேய் அப்படினா உனக்கு இன்னைக்கு டீ கிடையாது பார்த்துக்க. பால் இருந்தா தானே டீ எல்லாம். இல்லைனா வயித்தை காயப்போட வேண்டியது தான். போ ஒழுங்கா பால் வாங்கிட்டு வா" என்று அனுப்பி வைக்க இவளும் தலையை ஒதுக்கிக்கொண்டு வெளியே நடக்கலானாள்.
தூக்ககலக்கத்தில் எதிரே வருபவரை தெரியாமல் இடித்தும் விட்டாள்.
"பார்த்து போ மா" என்றது ஒரு முதியவரின் குரல்...
"சாரி அங்கிள்" என்றபடி கடந்துச்சென்றாள். அப்போது அவளை ஒரு சிவப்பு நிற ஹெர்டிகா கார் ஒன்று கடந்து சென்றது ஜன்னல் கண்ணாடியை இறக்கி....
'ஸோ க்யூட் ' என்றபடி ரசித்தான் அந்த இளைஞன் ,அவன் வேறு யாருமில்லை நம் கதாநாயகன் ஆதித்யன். அதை எப்படியோ கவனித்து விட்டு
'ம்ம்க்கும் நானே குளியல் கூட போடாமால் தூங்கு மூஞ்சியோட வந்துட்டு இருக்கேன். இதுல ஸோ க்யூட் னு சொல்லிட்டு போறான் அட கடவுளே இவன் முன்ன பின்ன அழகா இருக்கிறவங்களை பார்த்ததே இல்லை போலருக்கு' என்று மனத்திற்குள் முனவிக்கொண்டு கடைக்கு வந்து நின்று ...
"அண்ணே ஒரு ஆவின் பால் பாக்கேட்" என்றதும்...
"அண்ணன் ஒரு சிகரெட்" என்றது ஆதித்யனின் குரல்..
'காலங்காத்தால சிகரெட்டாம் மூஞ்சியை பாரு' என்று மீண்டும் மனத்திற்குள் முனங்கினாள். சிகரெட் வாங்கிய ஆதித்யன் வாயில் வைத்து பற்றவைத்தப்படி அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு தன் கார் நிற்கும் இடத்திற்கு சென்று நின்றான். இவளோ பால்பேக்கட் கையில் ஏந்தியபடி ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தாள்.
வீட்டிற்குள் வந்து குளியலறைக்குள் புகுந்து தனது குளியலை முடித்துவிட்டு வருவதற்குள் தேநீர் தயாராக இருந்தது.
தேநீர் கோப்பையை கையில் ஏந்தியவள் எதையோ சிந்தித்துக்கொண்டு இருக்க திவ்யாவிடமிருந்து அழைப்பேசி வந்தது
"மச்சி நீ ரெடியாகிட்டு எங்கள் அப்பா ஆபிஸ்க்கு உன் மார்க் ஷீட் எல்லாம் எடுத்துட்டு வந்து சேரு. உன்னை இன்னைக்கு இன்டர்வியூ. அதாவது ஜஸ்ட் பார்மாலிட்டிஸ் அவ்வளவு தான் உனக்கு வேலை கன்பார்ம் தான்" என்றதும்...
"ஏய் என்னடி சொல்ற " நிஜமாவா ?
"அட இதுல பொய் சொல்லி விளையாடி நான் என்னடி பண்ணப்போறேன்.
"ஓகே ஓகே"
இவளும் சுருசுருப்பாக தயாராகி ஒன்றும் பாதியுமாக இட்லியை உண்டுவிட்டு ஒரு ஆட்டோவை பிடித்து ஆர்கே கன்ஸ்டரக்ஷன்ஸ் வந்து சேர்ந்தாள்.
"எக்ஸ்கியூஸ் மி...நான் எம்.டி பார்க்கணும்னு ஜாப் விஷயமா" என்று வரவேற்பாளரிடம் சொன்னதும்.
"அதோ அந்த கேபின்" என்று காட்டிவிட நம் கதாநாயகி ரோஜா உள்ளே நுழைந்தாள். ஆதித்யன் போன் பேசியபடி இருந்தான்.
"ஹலோ மேடம் கேபினுள் நுழையும்போது அனுமதி கேட்டு வரணும் அப்டிங்கிற மேனர்ஸ் கூடவா தெரியாது" என்று அதிகாரமாய் கேட்க...
"சாரி சார்"..என்று சொல்லிவிட்டு 'இவரை காலையில் பார்த்தோமே. என்னை கூட சைட் அடிச்சாரே ' என்று யோசிக்க... அவள் யோசனையை கலைத்தவன்..
"ஹலோ உங்கள் சர்டிபிகேட் கொடுங்கள்" என்று வாங்கி பார்த்துவிட்டு
"குட் நல்ல மார்க்ஸ் யு.ஜி ல" என்று பாராட்டிவிட்டு...
"ஓகே...அங்கே சுபத்ரா இருப்பாங்க நீங்க எந்த சீட்ல உக்காரனும் சொல்லுவாங்க. நீங்க இன்னைக்கே ஜாயின் பண்ணியாச்சு. ஸோ ஜஸ்ட் இங்கே ஸ்டாப்ஸ் கிட்ட இன்ட்ரோ பண்ணிக்கோங்க அப்றம் அங்கே இருக்கிற பைல்ஸ் எல்லாம் பார்த்துட்டு எதாவது டவுட் வந்தால் சுபத்ராவை கேளுங்க சொல்லித்தருவாங்க. ஆக்சுவலி இப்ப இந்த கம்பெனி ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான ஸ்டார் ஹோட்டல் கட்டிட்டு இருக்கோம். அதுக்கான டிஸைன் எல்லாம் பண்ணிட்டு இருக்கோம். அது சம்மந்தப்பட்ட பேமண்ட்ஸ் வொர்க் தான் நீங்க கவனிக்க போறிங்க...என்ன புரிஞ்சிதா?"
"ம்ம்ம் புரிஞ்சிது சார்".
"ஓகே போங்க போய் சீட்ல உக்காருங்க" என்று அவளை அனுப்பிவிட்டு... ஒரு நமட்டு புன்னகையை உதிர்த்தவன்
'டேய் ஆதி ஆயிரம் தான் இந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருந்தாலும் வேலையில் கண்டிப்பா இருடா. இது வேற அது வேற ' என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு வேலையை கவனித்தான்.
ரோஜாவிற்கு இது புது அனுபவமாக இருந்தது. வேலைக்கு வருவதே இது தான் முதல் தடவை . இருக்கும் பைல்ஸ் எல்லாம் புரட்டி பார்த்தாள். சிலவற்றை புரிந்து கொண்டாள்..
"ம்ம்ம் இப்போதைக்கு அந்த க்ளைண்ட் இருபது லட்சம் பே பண்ணிருக்கான். ரைட்டு ஸோ அதுக்கான வவுச்சர் (voucher)தான் இதுவா..சரி சரி இதையெல்லாம் கரெக்டா பைல் பண்ணி வைப்போம்" என்று செய்துவிட்டு.
"சுபத்ரா மேடம் "...என்றாள்.
"என்ன ரோஜா"
"ம்ம்ம் இங்கே ரெஸ்ட்ரூம் எங்கே இருக்கிறது"..
"ஹாஹா ஏதோ டவுட் கேக்குறியோ நினைச்சன். அதோ அங்கே இருக்கு" என்று கைக்காட்டி விட்டு வேலையை கவனிக்க...
"அச்சோ எம்.டி சார் கேபின் தாண்டி தான் போகனுமா" என்று மெல்லிய குரலில் சொல்லியவாறு கடந்தவள் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்தவள் ஒருவித பதற்றத்தில் இருந்தாள்..
'அச்சோ இப்ப போய் டேட் வந்துடுச்சு நான் என்ன பண்ணுவன் சானிட்டரி நேப்கின் கூட எடுத்துட்டு வரலையே' என்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு இருக்க...
"ஹேய் என்ன ரோஜா" என்றாள் சுபத்ரா.
"மேடம் அது வந்து..."
"ஓ...ஓகே ஓகே புரியுது. இங்கே பாரு அந்த கபோர்ட் இருக்குல அது திறந்தினால் அங்கே சானிட்டரி பேட்ஸ் இருக்கிறது. யூஸ் பண்ணிக்க. பொதுவா இங்கே வொர்க் பண்ற லேடிஸ்க்காக வச்சுருக்காங்க.
"அப்படியா ஓ..."
"அட ஆமாம் ரோஜா. வீட்டில் இருக்கிற எல்லாம் கம்பர்ட்ஸ் இங்கே இருக்கும். டோன்ட் வொரி." என்று தெளிவு படுத்திவிட்டு சுபத்ரா நகர்ந்தாள்.
'என்ன ஒரு நல்ல மனசுக்காரங்கயா இந்த கம்பெனி ஆளுங்க' என்று சிரித்துவிட்டு நகர்ந்தாள். வேலை முடிந்ததும் மாலை மறுபடியும் ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
"அடியேய் இன்டர்வியூ போனவள் ஈவ்னிங் வந்து நிக்கிற. " என்று தாய் லட்சுமி கேட்க..
"மா என்னமா பண்ணச்சொல்ற உடனே ஜாயின் பண்ணு சொல்லிட்டாங்க அதான்" என்று முகத்தை அலம்பிவிட்டு வந்தாள்.
மோகனுக்கு அவ்வளவு திருப்தி இல்லை மகள் வேலைக்கு செல்வது...
"ஏதோ படிச்சோமா வீட்ல இருந்தோமானு இல்லாமல் உனக்கு எதுக்கு வேலை எல்லாம்" என்று கடிந்தார்.
"ஐயோ அப்பா நான் என்ன விண்வெளி யா போய்ட்டு வரேன் வேலை தானே பா விடுங்கள்" என்று சொல்ல...
"அட ஆமாங்க போகட்டும். இல்லைனா சோம்பேறி ஆகிடுவா உங்கள் பொண்ணு. இன்னும் ஒரு வருஷம் தான் அப்றம் கல்யாணம் பண்ணி அனுப்பிடப்போறோம்" என்று தன் அம்மா சொன்னதும்.
"என்னது கல்யாணமா ஆ...அதெல்லாம் முடியாது" என்றாள் ரோஜா...
"முடியாதா ...ஏய் இதெல்லாம் காலாகாலத்துல நடக்கணும் டி"
"அட போமா" என்று சொல்லிவிட்டு தங்கை ஹேமாவை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.
"ஹேமா வா விளையாடலாம் " என்று அக்கா தங்கை இருவரும் செஸ் (chess)விளையாட ஆரம்பித்தனர்.
"அக்கா இந்த முறை நான் உனக்கு செக் வைக்க போறேன்"என்று தங்கை சொன்னதும்.
"ம்ம்ம் குடும்பமே சேர்ந்து எனக்கு நல்லா செக் வைங்க என்று முகத்தை சுளித்துவிட்டு விளையாட்டை தொடர்ந்தாள்.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro