9
"ஹாய் ஆதி என்று கைக்கொடுக்க வந்தாள் ஐஸ்வர்யா. அவனும் பதிலுக்கு கை கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தான் .
"சின்ன வயசுல நீயும் ஐசுவும் விளையாடுவீங்க நியாபகம் இருக்கா ஆதி", என்று ராஜரத்தினம் கேட்டதும்.
"ஆங் நல்லாவே நியாபகம் இருக்கு அங்கிள் " என்று சொல்லியபடி தற்செயலாக ஐஸ்வர்யாவை கண்டான்.
அவள் இவனையே வச்சக்கண் வாங்காமல் பார்ப்பது கண்டு வெட்கமே வந்துவிட்டது அவனுக்கு.
"ஓகே நான் ப்ரஷ் அப் ஆகிட்டு வரேன் " என்று எழுந்து அறையை நோக்கி நடந்தான். ஆனாலும் அவள் பார்வையிலிருந்து அவன் அகலவில்லை...நீண்ட நேர உரையாடலுக்கு பின்பு ராஜரத்தினம் குடும்பம் கிளம்பிச் சென்றது.
'ஏன் இந்த ஐஸ்வர்யா நம்மளையே பார்த்துட்டு இருந்தா என்று யோசித்தான் ஆதி"
ஐஸ்வர்யா வந்துப்போனதிலிருந்து சவிதாவுக்கும் சக்கரவர்த்திக்கும் ஒரு நல்ல யோசனை தோன்றியது...
"நம்ம பையன் ஆதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சம்மந்தம் பேசினால் நல்லாருக்கும் " என்றார் சவிதா...
"அட ஆமாம் சவிதா இந்த யோசனை எனக்கு ஏன் வராமல் போயிடுச்சு. என் ப்ரண்டோட பொண்ணு , அதுமட்டுமல்ல நம்ம அந்தஸ்த்துக்கு ஏத்த மாதிரி நல்ல வரன் தான் ஸோ நீ சொல்றது நல்ல யோசனை தான் சவிதா " என்றதும்...
சவிதாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை... அன்று முழுவதும் அந்த பேச்சிலேயே ஓடியது.
இந்த கல்யாண பேச்சு அவனுக்கு ஒருவகை சங்கடத்தை உருவாக்கியது ஆதிக்கு. ரோஜா கிட்ட மனசுல இருக்கிற காதலை வெளிப்படையா சொல்லியாச்சு அவளோட பதிலுக்காகவும் இப்ப நான் காத்துட்டு இருக்கேன். இந்த நேரத்துல புதுசா இந்த கல்யாண பேச்சு ஆரம்பிக்கிறாங்க என்று வருந்தினான் ஆதி..
"டேய் ஆதி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று சவிதா அழைத்ததும் அருகில் வந்து சோப்பாவில் அமர்ந்தான் ஆதி. அவன் முகத்தில் துளியளவும் மகிழ் ச்சி ஏதும் இல்லை என்பதை புரிந்து கொண்டார் சவிதா..
"ஏன் டா டல்லா இருக்க"
"ஒன்னுமில்லை மா "
"அப்றம் ஏன் மூட் அவுட்டா இருக்க கன்னு "
"இந்த வீட்ல இதுக்கு கூட உரிமை இல்லையா. மூட் அவுட் ஆகுறது மனிஷன் இயல்பு தானே . இதுல உங்க எல்லாருக்கும் என்ன வந்துச்சு " என்றான் ஆதி..
"அண்ணே உன் பேச்சுல ஏதோ திமிர் தெரியுதே " என்று நக்கல் செய்தாள் அவனது தங்கை திவ்யா.
"திவ்யா சும்மா இரு நானே கடுப்புல இருக்கேன் " என்று அவளை அடக்கினான் ஆதி.
"சரி அதெல்லாம் இருக்கட்டும் நாங்க பேசின மாதிரி ஐஸ்வர்யாவை கட்டிக்க உனக்கு விருப்பமா ஆதி. விருப்பம் இல்லைன்னா நேரடியாக பதில் சொல்லு ", என்று சவிதா கேட்டதும் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
'பரவாயில்லையே நம்ம பேச்சுக்கு மதிப்பு எல்லாம் தராங்க . இப்போ விருப்பம் இல்லைன்னு நேரடியாக சொல்லிடலாம் ஆனால் எந்த காரணம் கொண்டும் இப்ப ரோஜா விஷயத்தை லீக் அவுட் பண்ணவே வேணாம் ' என்று நினைத்தவன் .
"அம்மா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் மா" என்றதும்.
"ஏன் டா அப்படி சொல்ற. இங்க பாரு ஐஸ்வர்யா பிடிக்கலையா பரவாயில்லை உனக்கு வேற பொண்ணு பார்க்குறோம். அதுக்காக கல்யாணமே வேணாம்னா என்ன அர்த்தம் டா ஆதி"
"இல்லை மா நான் இப்பதான் கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் உள்ள வந்துருக்கேன். இன்னும் நான் இதுல சாதிக்க கத்துக்க நிறைய இருக்கு. எந்த சூழ்நிலையிலும் கல்யாணம் அதுக்கு தடையா இருக்க கூடாதுன்னு யோசிக்கிறேன் ", என்றான் ஆதி.
'இவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் நம் வீட்டிற்கு விளக்கேற்ற நிச்சயம் ஒருவள் வந்து தானே ஆகனும். சரி இவனுக்கு தெரியாமல் நம்ம பொண்ணு தேடுவோம். செட் ஆச்சுன்னா இவன் கிட்ட பக்குவமா பேசி புரியவச்சுப்போம் ' என்று நினைத்தார் சவிதா .
"சரி மா எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு கிளம்புறேன் ' என்று விடைப்பெற்றான் ஆதி. காரில் ஏறி அமர்ந்தவன்
',யப்பா இந்த வீட்டை சமாளிக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம் டா சாமி' என்று சிரித்துவிட்டு புழுதியை கிளப்பிக்கொண்டு சென்றான். கொஞ்சம் நட்பு வட்டத்தில் பேசிவிட்டு சிரித்துவிட்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவோம் எனக் கிளம்பினான் ஆதி.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro