Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8

வனிதாவி பார்வையில் (தொடர்ச்சி)..

வாரஙகள் சென்று கொண்டே இருக்க, எங்களின் சந்திப்பும் எந்த தடையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு படம் என்று தவறாமல் பார்த்தோம். இடை இடையில் சின்ன சின்ன பேச்சுக்கள். எங்களின் சந்திப்புக்களில் நாங்களில் இருவரும் எதிர்பார்த்தது ஒருவருக்கு ஒருவர் அருகாமையில் இருப்பதையே. இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை எனினும் காதல் மட்டும் குறையவே இல்லை. அது காதால்தானா? ராஜாவை பொறுத்தவரைக்கும் அது காதல்தான். என்னை பொறுத்தவரைக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க கிடைக்கப் போகும் சாசனம்.

மே மாதத்தின் அழகான சனிக்கிழமைகளில் ஒன்று மிகவும் ரம்மியமாக விடிந்தது. காலையிலேயே வெயில் சுல்லென்று அடிக்க, அன்றைய நாள் ராஜாவை சந்திக்க சேலையில் செல்லலாம் முடிவு செய்தேன். இருப்பதிலேயே கொஞ்சம் நல்ல சேலையை உடுத்துக் கொண்டேன். தந்தை கட்டிலில் இருந்து எழுவதற்கு முன் வீட்டை விட்டு கிளம்பிவிட வேண்டும். இல்லை என்றால் எப்பொழுதும் சுடிதாரில் செல்லும் நான், இன்று என்ன புதிதாக சேலையில் என்ற கேள்வி வரும்.

பஸ் ஸ்டான்டில் என்னைக் கண்ட ராஜா அசந்துவிட்டான். நான் இயற்கையிலேயே அழகானவள். என் அழகை நினைத்து நான் என்றுமே பெருமிதம் கொண்டதில்லை. என் வீட்டில் இருக்கும் கெடுபிடிக்கு முன் என் அழகை நினைத்து நானே பெருமிதம் கொள்வதில் எந்த வித நன்மையும் எனக்கு வரப்போவதில்லை. ஆனால் இன்று ராஜாவின் பார்வையில் நான் வெட்கப்பட்டேன். ஒரு ஆணின் காதல் பார்வையில் முதன் முதலில் இன்றுதான் வெட்கப்பட்டேன்.

காதலினால் தோன்றும் வெட்கம் மிகவும் விசித்திரானது. அது வரும் போது மனதுக்குள் ஒரு குறு குறுப்பும் சேர்ந்து வந்துவிடும். இன்று இதை அனுபவிக்கும் போது அதன் உணர்வை நான் புரிந்துகொண்டேன்.

காலையில் நல்ல வெயில் அடித்த வானம் சட்டென்று தனது முகத்தை மாற்றிக்கொண்டது. ராஜா பஸ் ஸ்டான்டை அடையும் போது கருமேகங்கள் தோன்ற ஆரம்பித்தது.  நாங்கள் அங்கிருந்து நகர ஆரம்பித்ததும் மழை சோ வென்று கொட்டத் தொடங்கியது. என்னிடம் குடை இருந்தது. ஆனாலும் அதனால் எங்களை மழையில் இருந்து காக்க முடியவில்லை. இருவரும் பன்னை வீட்டை அடையும் போதும் முழுமையாக நனைந்திருந்தோம். அவசரமாக வீட்டிற்குள் நுழையும் முன் என் முழங்கால் அங்கிருந்த ஒரு தூணில் முட்டிக் கொண்டது. வீட்டிற்குள் நுழையும் அவசரத்தில் அதை நான் கவனிக்கவில்லை.

நல்ல வேலை நான் அணிந்திருந்த சேலை கொஞ்சம் தடிப்பானது. என் சேலை மழையில் முழுவதும் நனைந்திருந்தாலும் என் அங்கங்களை அப்பட்டமாக காட்டவில்லை. ஆனால் இதே ஈர உடையுடன் வெகு நேரம் இருக்கவும் முடியாது. சோபாவும் பாழ் ஆகிவிடும். நான் ராஜாவை பார்க்க அவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

" ஏதும் டிறஸ் இருக்குமா இங்க? ஈரத்துணியோட என்னால இருக்க முடியாது. இப்படியே வீட்டுக்கும் போக முடியாது" என்றேன்.

" என்னோட  டீசேர்ட், சேர்ட், லுங்கி, பாட்டம் இதுதான் இருக்கு. எது வசதியா இருக்கும்னு சொல்லு வனிதா. எடுத்து தரேன்" என்றான்.

" சரி நீங்க எல்லாத்தையும் எடுத்து வாங்க, நான் எது பொருத்தமா இருக்கோ அதையே போட்டுக்கிறேன்" என்றேன்.ஆடைகளை அந்த வீட்டில் இருந்த படுக்கை அறையில் வைத்து விட்டு ராஜா என்னிடம் வந்தான்.

" டிறஸ் எல்லாம் உள்ள இருக்கு. நீ மாத்திக்கோ. அப்படியே உன் ஈர டிறஸ் எல்லாத்தையும் கட்டில்ல விரிச்சி போட்டு பேன போட்டுவிடு. கொஞ்ச நேரத்துல அது காய்ந்துவிடும்" என்றான்.

அது படுக்கை அறையா இல்லை சுவர்க்க மாளிகையா. ஆறு பேர் தாராளமாக படுத்த உருளக் கூடிய சொகுசுக் கட்டில்.  அறையின் ஒரு பக்கம் முழுவதுமாக கப்போர்ட் இருந்தது. அதில் எட்டு அடி உயரத்து கண்ணாடி. இதுதான் ஆள் உயர கண்ணாடி போலும். எங்கள் வீட்டில் இருப்பதெல்லாம் முகம் பார்க்கும் ஒரு கண்ணாடி மட்டுமே.

ராஜா கொடுத்த ஆடைகளில் நான் பெரிதாக இருந்த ஒரு டீசேர்ட்டையும் லுங்கியையும் எடுத்துக் கொண்டேன். அதை அணிந்த பின் ஆள் உயரக் கண்ணாடியில் என்னைப் பார்த்த போது, பாவாடை சட்டை அணிந்த சிறு பெண் போல தெரிந்தேன். தலை முடியை விரித்து நன்றாக உளர்த்திக் கொண்டேன். முடியை கொண்டை போடாமல் லூஸ் ஹெயாராக விட்டு அறையை விட்டு வெளியில் வந்தேன்.

துப்பட்டா இல்லாமல் வெறும் டீ சேர்டுடன் இருக்க எனக்கு சற்று கூச்சமாக இருந்தது. அதை அவன் உடனே புரிந்து கொண்டு ஒரு வேஷ்டியை கொண்டு வந்து கொடுத்தான்.

" வனிதா இதால போர்த்திக்க. மழையில நனைஞ்சிருக்கோம். உனக்கு குளிரா இருக்கும்" என்றான். குறிப்பறிந்து நடக்கும் ராஜாவை எனக்கு நாளுக்கு நாள் அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமா, அடிக்கடி அவன் நல்லவன் என்பதை நிரூபிக்க அவன் செய்யும் செயல்கள் எனக்கு சிரிப்பு மூட்டினாலும் அவன் மேல் உள்ள நம்பிக்கை மலையளவு உயரவும் அதுவே காரணமாகியது.

போன வாரம் நான் ராஜாவிடம் " மின்சார கனவு" படம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ரிலீஸ் ஆகி சில நாட்களிலேயே இந்த படம் பட்டி தொட்டி எங்கும் கலக்கு கலக்கியது. எப்பொழுது ரேடியோவை போட்டாலுமே ஹரிஹரனின் குரலில் வெண்ணிலவே பாடல்தான் ஒலித்தது. ராஜாவும் மின்சார கனவு பட கேசட்டை கொண்டு வந்திருந்தான்

படம் ஓட ஆரம்பித்தது. மிகவும் அழகான படம். படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்கு அர்விந்த்சாமியும், கஜோலும் ஆடிக்கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் கஜோல் ஆடிக்கொண்டிருக்க அர்விந்த்சாமி அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தார். எங்கள் காலேஜில் எல்லா பெண்களுக்கும் அர்விந்த்சாமி என்றால் ஒரு க்ரேஸ் இருக்கும். அது தப்பில்லை என்பது இப்போது எனக்கு புரிந்தது.

மழையின் உக்கிரத்தால் சட்டென்று மின்சாரம் நின்றது. பகல் நேரம்தான் என்றாலும் மழை காரணமாக வீட்டிற்குள் வெளிச்சம் குறைவாக இருந்தது. ராஜா எங்கள் இருவருக்கும் காபி எடுத்து வர கிட்சன் சென்றான். படம் பார்ப்பதில் ஆர்வமாக இருந்ததால் வரும் போது முழங்காலில் பட்ட அடியின் வலி பெரிதாக தெரியவில்லை. ஆனால் இப்போது செய்ய எதுவும் இல்லாமல் இருக்க வலி தெரிய ஆரம்பிதத்து. நான் லுங்கியை முழங்கால் வரை உயர்த்தி அடி பட்ட இடத்தை பார்த்த அதே நேரம் ராஜா ஹாலுக்குள் வந்தான். அவன் இவ்வளவு வேகமாக வருவான் என்று எதிர்பார்க்கவில்லை.

" வரும் போது கால இடிச்சிக்கிட்டேன். அப்போ வலி தெரியல . இப்போ ரொம்ப வலிக்குது" என்றேன். காபியை மேசையில் வைத்தவன் அங்கிருந்த ஏதோ தைலம் ஒன்றை எடுத்து வந்தான்.

" இதை போட்டு நல்ல சூடு பறக்க தேச்சு விடு வனிதா. வலி குறைஞ்சிடும்" என்றான். நான் அவனிடம் இருந்த தைலத்தை வாங்க கையை நீட்டினேன். அவன் அதை என்னிடம் கொடுக்காமல் " நான் தேச்சிவிடட்டுமா" என்று கேட்டான். நான் மறுக்கவில்லை. அதையே அவன் அனுமதியாக எடுத்து என் முழங்காலில் தைலம் தேய்க்க ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. முறுக்கேறிய தின்மை உள்ள ஒரு ஆணுக்கு என்  முழங்காலை காட்டிக்கொண்டு இருக்கின்றேன். அவனும் கருமமே கண்ணாக தைலம் தேய்ப்பதில் மும்முரமாக இருக்கின்றான். தைலம் தேய்த்து முடியும் நேரம் மின்சாரம் வந்தது. படம் விட்ட இடத்தில் இருந்து ஓடத்தொடங்கியது. நான் இருந்தது மூவர் இருக்கும் சோபாவில். இத்தனை நாட்கள் சந்திப்பில் முதன் முறையாக நானும் ராஜாவும் ஒரே சோபாவில் அருகருகில் அமர்ந்தோம்.

" செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே,
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே,
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே,
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே "

காலநிலை, டீவியில் ஓடிய பாடல், சற்று நேரம் முன் நடந்த தைலம் தேய்க்கும் நிகழ்வு இவை எல்லாம் சேர்ந்து எங்கள் உடலில் பல இரசாயன மாற்றங்களை கொண்டு வந்திருந்தது. சும்மாவா சொன்னார்கள் பெரியர்கள், பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் பத்திக்கொள்ளும் என்று. எங்களுக்குள்ளும் தீ ஜுவாலை விட ஆரம்பித்தது. ராஜாதான் முதலில் என் கையை பிடித்தான். அதன் பின்னர் அவனின் கையை நான் விடவே இல்லை.

காதலின் உச்சகட்ட நம்பிக்கைதான் காமத்துக்கு நாம் வழிவிடுவது. இது சரியா தவறா என்றெல்லாம் இங்கு நான் விவாதிக்க போவதில்லை. என்னை பொறுத்த வரை நான் ராஜாவின் மனைவி. என் உடல் முழுவதும் அவனுக்கே சொந்தம். உடலில் காமம் தணிந்ததும் இருவர் உடலிலும் வியர்வை ஆறாக ஓடியது. நான் ராஜாவை பார்த்தேன் அவன் முகம் வாட்டமாக இருந்தது. சொல்லப்போனால் நடந்ததை எண்ணி நாந்தான் கவலைப்பட வேண்டும், இங்கு என்ன என்றால் இவன் கவலையில் இருக்கின்றான். மீண்டும் நல்லவன் என்று நிரூபிக்கின்றாராம். "டேய் ராஜா எத்தனை தடவை டா நீ உன்ன நல்லவன்னு நிரூபிக்க முயற்சி செய்வ".

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro